ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி ஒரு நைட் க்ளப் பாரில் பணிப்பெண்ணாகப்பணி புரிகிறார் . இவருக்கு அம்மா, ஒரு அண்ணன் . இவர்கள் ஒரு வாடகை வீட்டில் குடி இருக்கிறார்கள் . , ஹவுஸ் ஓனர் ஒரு நாள் இவர்களிடம் வந்து இந்த வீட் டை விற்கப்போகிறேன் . காலி பண்ணிடுங்க என்கிறார் . இன்னொரு சாய்ஸும் தருகிறார் . நீங்களே வாங்கிக்கொள்வதாக இருந்தாலும் ஓகே , 25,000 டாலர் ரெடி கேஷ் தந்துடுங்க என்கிறார் . நாயகிக்கு இந்த வீட் டை வாங்க ஆசை .
நாயகியின் அம்மா விடம் உதவி கேட்கிறார். அம்மா தருவதாக சொல்லி காலை வாரி விடுகிறார் .அக்ரிமெண்ட் தேதி நாளை காலை 10 மணிக்கு .இன்று இரவில் பணம் ரெடி பண்ண வேண்டும் . நாயகி தனக்கு பணம் தர வேண்டிய தோழியிடம் பணம் கேட்கிறார்.. ஆனால் அவர் தரவில்லை . ரொம்பவும் நெருக்கவே போனாப்போகுது என தனது பாய் பிரண்டின் லாக்கரில் இருந்து கொஞ்சம் பணம் தருகிறார் . அது போதாது
தோழி வெளியே போனதும் தோழியின் பாய் பிரண்டின் லாக்கரை அபேஸ் பண்ணி நாயகி ஒரு இடத்துக்குப்போகிறார் . அந்த லாக்கரில் இருக்கும் பணத்தை அவர் எடுத்தாரா? என்ன என்ன பிரச்சனைகளை சந்தித்தார் என்பது மீதித்திரைக்கதை
நாயகி ஆக வெனிஷா கிர்பை பிரமாதமாக நடித்திருக்கிறார் . அழகுப்பதுமை , அம்மா , அண்ணன் , பாய் பிரெண்ட் , வில்லன் எல்லோருக்கும் அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓகே தான்
சபாஷ் டைரக்டர்
1 ஒரு சீன் கூட போர் அடிக்காத பரபரப்பான திரைக்கதை
2 டெக்கினிக்கல் அம்சங்கள் கச்சிதம்
3 நாயகியின் பிரமாதமான நடிப்பு
4 ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் குழப்பம் இல்லாத தெளிவான திரைக்கதை
ரசித்த வசனங்கள்
1 நான் சந்தோஷமா இருக்கத்தான் உனக்குப்பணம் தர்றேன் , உன் குடும்பப்பிரச்சனைகள் எல்லாம் எனக்குத்தேவை இல்லை
2 நண்பர்களுக்குள் நடக்கும் பிரச்சனைகளை பின்னாளில் சொல்லிக்காண்பிக்க மாட் டார்கள்
3 ட்ரில் மிஷின்ல தான் இந்த லாக்கரை உடைக்கணும், சைலன்சரா போட முடியும் ? சத்தம் வரத்தான் செய்யும்
4 வாழ்க்கைல யாரை எல்லாம் நேசித்தேனோ அவங்களை எல்லாம் காயப்படுத்தி இருக்கேன்
5 நீ ஒரு குப்பைத்தொட்டி . எல்லாக்குப்பைகளையும் உனக்குள்ளே சேர்த்து வைத்திருக்கறே
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகியின் பணத்தேவை தெரிந்தும் தோழி நாயகியை தன வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியே செல்வது எப்படி ? லாக்கரை அபேஸ் செய்வாள் என யூகிக்க முடியாதா?
2 தோழி நாயகி மேல் போலீஸ் புகார் தரவில்லையா?
3 காரை இழந்த நாயகியின் பாய் பிரண்ட் அதை மீட்க எந்த முயற்சியும் எடுக்க மாட் டாரா?
4 சொந்த அம்மா பொறுப்பில்லாமல் இருப்பாரா ?
5 மெயின் கதைக்கும் நாயகியின் அண்ணன் கேரக்ட்டருக்கும் சம்பந்தம் இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பரபரப்பான க்ரைம் த்ரில்லர் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம் , ரேட்டிங்க் 3 / 5
Night Always Comes | |
---|---|
![]() Release poster | |
Directed by | Benjamin Caron |
Screenplay by | Sarah Conradt |
Based on | The Night Always Comes by Willy Vlautin |
Produced by |
|
Starring | |
Cinematography | Damián García |
Edited by | Yan Miles |
Music by | Adam Janota Bzowski |
Production companies |
|
Distributed by | Netflix |
Release date |
|
Running time | 108 minutes[1] |
Country | United States |
Language | English |