Monday, December 16, 2019

காளிதாஸ் - சினிமா விமர்சனம் #kalidas

kalidas movie 2019 के लिए इमेज परिणामபுதுசா வர்றவங்க கிட்டே ஒரு ஃபையர் இருக்கும்பாங்க, அந்த வகைல அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில் என்கிற செந்தில்நாதன் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையா போலீஸ் ஆஃபீசர் கேரக்டரை ரொம்ப இயல்பா காட்டி நல்லா கதை சொல்லி இருக்கார், 


இதுக்கு முன்னால போலீஸ் சப்ஜெக்ட் படங்களில் லேண்ட் மார்க் ஆக  அமைந்த  தங்கப்பதக்கம் ( சிவாஜி கணேசன்)    என் கடமை , ரக்சிய போலீஸ் 115 ( எம் ஜி ஆர்) , மூன்று முகம் ( ரஜினி) வேட்டையாடு விளையாடு , குருதிப்புனல் ( கமல் )  சத்ரியன், ஊமை விழிகள், மாநகரக்காவல் , ஆன்ஸ்ட் ராஜ் ( விஜய காந்த் ) கடமை கண்ணியம் கட்டுப்பாடு ( சத்யராஜ்)  இதுதாண்டா போலீஸ் ( டாக்டர் ராஜசேகர் )  வைஜெயந்தி ஐபிஎஸ் ( விஜயசாந்தி )  சாமி ( விக்ரம்)  காக்க காக்க ( சூர்யா) இந்தப்படங்கள் எல்லாம் ரசிகர்கள் அமோக வரவேற்பைப்பெற்று பாக்ஸ் ஆஃபீசில் கலெக்சனை அள்ளிய படங்கள். இவைகள்ல  அங்கங்கே  ஓவர் ஆக்டிங் , சினிமாத்தனம் லைட்டாவாவது இருக்கும் 


 ஆனா  ஒரு சீன்ல கூட ஓவர் டோஸ் ,  பஞ்ச் டயலாக், உதார் விடறது , ஹீரோ இண்ட்ரோ பில்டப்  இப்படி எதுவுமே இல்லாம வந்து ஹிட் ஆகி இருக்கும் போலீஸ் சப்ஜெக்ட் படம் தான் இந்த காளி தாஸ்

 படத்தோட கதை என்ன? ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் . ஒரு கேஸ் . அடுக்கு மாடில இருந்து  பொண்ணுங்க   கீழே விழுந்து இரந்துடறாங்க , இது தற்கொலையா? கொலையா?னு என்கொயரி பண்றாரு. முதல் கட்ட விசாரணைல  2 பொண்ணுங்க ப்ளூ வேல் கேம்  விளையாடறவங்கனு தெரியுது. அதுல கடைசி கட்டமா தற்கொலை பண்ணிக்க சொல்லி டாஸ்ட் வரும் , அதுவோனு சந்தேகப்படும்போது அடுத்து நடக்கும் மரணங்களில் அந்த ப்ளூவேல் கேம் இல்லை. இப்ப மரணம் அடைந்த 4 பெண்களுக்கும் உள்ல ஒற்றுமை என்னன்னு பார்த்தா இவங்க எல்லாருமே  கணவனுக்கு துரோகம் செய்யும் பெண்கள்,. இந்தக்கொலைகளை செய்த கொலைகாரனை கண்டு பிடிக்கனும். இது ஒரு டிராக்


ஹீரோவான இன்ஸ்பெக்டரோட மனைவி க்கு ஒரு குறை, லவ் பண்ண புதுசுல மேரேஜ் ஆன புதுசுல தன் கணவன் தன் கிட்டே காட்டின அன்பு அக்கறை அரவணைப்பு  எதையும் இப்போ காட்டலை,அப்டி அன்புக்காக ஏங்கிட்டு இருக்கும்போது மாடி வீட்ல ஒருத்தன் குடி வர்றான் அவன் ஹீரோவோட மனைவி கிட்டே கொஞ்சம் கொஞ்சமா நெருக்கம் ஆகறான் ( கில்மா நடக்கலை ) இது ஒரு டிராக் 

 இந்த 2 டிராக்கையும் ஒரு புள்ளி ல இணைப்பதும் கொலைகாரனை கண்டு பிடிப்பதும் எந்த அளவு சுவராஸ்யமா சொல்லமுடியுமோ அந்த அளவு பிரமாதப்படுத்தி  இருக்கார் இயக்குநர்


 ஹீரோவா பரத் , பாய்ஸ் படத்துல அறிமுகமான பரத் ,  காதல் படத்துல மெக்கானிக்காக கலக்கின பரத் , சிக்ஸ் பேக் வைச்ச 555 பரத் என  பல பரிமாணங்கள் காட்டினாலும் பரத்க்கு இன்னும் தமிழ் சினி ஃபீல்டுல ஒரு பிரமாதமான அங்கீகாரம் கிடைக்கலை, அவருக்கு இது பெஞ்ச் மார்க் கேரக்டர். மிக அமைதியான முகம் கொண்ட போலீஸ் ஆஃபீசர் முகத்தை தமிழ் சினிமா காட்னதே இல்லை. இதுல அவ்ளோ சாஃப்ட் கேரக்டர் , ஓப்பனிங் சீன் கூட ஃபைட்டோ பஞ்ச் டயலாக்கோ இல்லை   நல்லா பண்ணி இருக்கார் 


 மெச்சூர்டான முகம் , பாடி பில்டிங் எல்லாம் கன கச்சிதம். 


ஹீரோயினா ஆன்ஷீத்தல் , பிரமாதமான ஃபிகர்னும் சொல்லிட முடியாது, மொக்க ஃபிகருனு தள்ளிடவும் முடியாது , டூயட் சீன்ல ,  ரொமாண்டிக் சீன்ல சோபிக்கற அளவு க்ளைமாக்ஸ்  சேசிங் சீன்ல , பயம் காட்ற சீன்ல சோபிக்கலை , இவருக்கு இயக்குநர்  நளினி, ஜீவிதா நடித்த க்ரைம் த்ரில்லர் படங்களைப்போட்டுக்காட்டி வேலை வாங்கி இருக்கலாம் .

sheetal hot के लिए इमेज परिणाम


போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனரா இயக்குநர் சுரேஷ் மேனன் ( புதிய முகம் ஹீரோ கம்  நடிகை ரேவதியின் கணவர் ) நல்ல கம்பீரமான நடிப்பு 


பொண்ணுங்களை கரெக்ட் பண்றவரா வரும் அந்த லாக்கப் கைதி கலக்கலான வசனங்கள் , கலகலப்பான பேச்சுகளால் அபளாஸ் அள்ளறார் 

 ஹீரோயினை கரெக்ட் பண்ற கில்மா லவ்வரா வரும் ஆதவ் கண்ணதாசன் ஆர்ஜே பாலாஜி சாயல், நடிப்பு ஓக்கேரகம்

 ஒளிப்பதிவு சுரேஷ்பாலா  எடிட்டிங்  புவன் சீனிவாசன். இசை விஷால் சந்திர சேகர் , ஒரு க்ரைம் த்ரில்லர் படத்துக்கு இந்த 3 தொழில் நுட்பமும் எந்த அளவுக்கு முக்கியம்   என்பதை உணர்ந்து பண்ணி இருக்கார் . குறிப்பா  ஃபோட்டோ கிராஃபர் ஓப்பனிங் சீன் கொலையை ஏரியல் வியூவாகக்காட்டியது  சொல்லலாம்., பிஜி எம் பல இடங்களில் பக்கா 


நச் வசனங்கள்


1   சாகறதும் , சாகடிக்கப்படறதும்தான் இந்த உலகத்துல இருக்கற பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வுன்னா இந்த உலகத்துல உயிரினமே மிஞ்சி இருக்காது #kalidas


2   கத்தி கத்தி சொன்னா யார் சார் கேட்கறாங்க ? நம்ம கருத்தை? கத்தியைக்கையில் எடுத்தாத்தான் கவனிக்கப்படறோம் #kalidas


3 நாம எல்லாம் கூட்டமாத்தான் இருக்கோம், ஆனா தனித்தனியா வாழ்ந்துட்டு இருக்கோம் #kalidas

4   சாப்பிடற சாப்பாடு மட்டும்  நமக்கு ஆர்கானிக் ஃபுட் வேணும், ஆனா வாழ்ற வாழ்க்கை  அப்டி எதிர்பார்க்கறதில்லை  #kalidas


5 வீட்டுப்பிரச்சனைகளுக்காக தற்கொலை பண்ணிக்கறவங்கள்ல பெண்களை விட ஆண்கள் தான் அதிகம்னு ஒரு புள்ளி விபரம் சொல்லுது, ஏன்னா ஆண் எப்போதும் தன் குடும்பத்தைப்பத்திதான் கவலைப்படறான் #kalidas


6  இலையை அறுத்துட்டு வான்னா குலையை அறுக்கறவன் நீ  #kalidas


7   திண்ணைல உட்கார்ந்து எல்லாத்தையும் கவனிச்ட்டு வர்ற பெருசுங்க தான் அந்தக்கால சிசிடிவி கேமரா . எப்போ விசாரணை பண்ணாலும் அவங்களை மறந்துடக்கூடாது , இன்ஃபர்மேசன் அங்கே தான் கிடைக்கும் #kalidas


8  பொண்டாட்டியைக்குழந்தை மாதிரி பாத்துக்குவேன்னு வசனம் பேசறான், ஆனா பொண்டாட்டிக்கு பிள்ளை கொடுக்கற வேலையை மட்டும் கவனிக்காம விட்டுடறான்  #kalidas


9 பல்லிக்கு டி பி  வந்தவன் மாதிரி இருந்துட்டு  இவன் பண்ற வேலைங்களைப்பார்த்தீங்களா? அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டையைப்போடறான்  #kalidas

10  வேலை கொடுத்தவன் கிட்டே , ஹையர் ஆஃபீசர் கிட்டே பம்மி பம்மி பேசறோம், ஆனா வாழ்க்கையே கொடுத்த மனைவி கிட்டே மனம் விட்டுப்பேசரதில்லை நாம   #kalidas


11   என்ன வேலை பாக்குறே?

 ராப்பிச்சைக்காரனா இருக்கனுங்க 

 அப்ப வாடகையை சில்லறையாத்தான் தருவியா?  #kalidas


12  ஒரு பொண்ணோட மனசு அவ தன் வீட்டை வெச்சிருக்கற விதத்துல ( இண்ட்டீரியர் டெக்ரேஷன் ) இருந்து தெரியும்   #kalidas


13   சாப்பிடற வாய்க்கே இவ்ளோ வெரைட்டி தேவைப்படுதே , வாழற வாழ்க்கைல வெரைட்டி தேடக்கூடாதா?   #kalidas


14  போலீசும் நாயும் ஒண்ணுதான், கவனமா இல்லாட்டி மேல விழுந்து பிறாண்டிடுவாங்க  #kalidas


15  எக்ஸ்ட்ரா  மேரிட்டல் லைஃப்னா இன்னா? 

 கட்டுன கணவன் கரெக்டா இல்லைனா நாம் அந்த;ப்பொண்டாட்டிங்களை கரெக்ட் பண்றது  #kalidas


16   உங்க கடைல  இந்த காண்டம் பாக்கெட் விற்கறீங்களா?

 அய்யோ இல்லைங்கய்யா , நம்முது ஃபேன்சி ஸ்டோர்


 உனக்கு எத்தனை பசங்க?  


 4 பேரு 

  சொந்த உலயோகத்துக்காகவாவது  காண்டம் வான்ப்க்கி வெச்சுக்கய்யா   #kalidas


17   பேனாக்கடைல இருக்கறவர் கிட்டே  எத்தனை பேனா இருந்தாலும் கிறுக்கிப்பார்க்கத்தான் செய்வாரு , எழுதிப்பார்க்க மாட்டாரு  #kalidas


18   செத்துப்போன் டெட் பாடில இருந்து தெறிச்சு விழற ரத்தம் இப்படி ரவுண்ட் ஷேப் ல விழாது சார்   #kalidas
சபாஷ் டைரக்டர்

1   திரைக்கதை  பக்கா நீட் . ஒரு இடத்துல கூட பிசிறு தட்டலை  இடைவேளை வரை நமக்குத்தோன்றும் சில சந்தேகங்களை க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் சரி பண்ணிடறார்


2  ஹீரோவான பரத்தை அண்டர் ப்ளே ஆக்ட் பண்ண வைத்தது


3 அசிஸ்டெண்ட் கமிஷனர்  சுரெஷ் மேனன் கேரக்டர் , அந்த கில்மா பார்ட்டி கேரக்டர் எல்லாம் அற்புதம்4  வாய்ப்பிருந்தும்  வல்காரிட்டி , ஆபாசம், கிளாமர் எல்லாத்தையும் தவிர்த்தது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1    மாடில இருந்து கீழே விழற  4 பேரையும் லாங்க் ஷாட்ல ( 4 தனித்தனி  மரணங்க்ள் வெவ்வேறு காலகட்டம் )  காட்றாங்க , ஆனா  ஒண்ணு கூட கடைசி நிமிட உயிர்ப்போராட்டம் அல்லது துடிப்பு காட்டலை , காரணம் பொம்மையை தூக்கிப்போட்டுத்தான் அப்டி லாங் ஷாட் எடுக்க முடியும், இதைத்தவிர்க்க  மேலே இருந்து கீழே வரும் வரை ஒரு ஷாட் , கீழே விழறது தனி ஷாட், துடித்து அடங்குவது ஒரு ஷாட்னு 3 ஷாட்டா பிரிச்சு எடுத்திருக்கலாம்,. அட்லீஸ்ட் 4 ல ஒண்ணாவது அப்படி பண்ணி இருக்கலாம். 


2  மாடில இருந்து விழற பெண்ணோட டெட் பாடியோட  அது மேல அந்தப்பொண்ணு போட்டிருந்த ஷாலும் 2 நிமிஷம் கழிச்சு கீழே விழுது. அது கரெக்டா பொண்ணோட முகத்துல வந்து விழுது , இதுக்கு வாய்ப்பில்லை, ஏன்னா 3 அடுக்கு மாடி உயரத்துல இருந்து  கீழே விழற பொண்ணோட எடை சுமாரா 45 கிலோனு வெச்சுட்டா அந்த பொண்ணு விழுந்த அதே இடத்துல வெறும் 200 கிராம் இருக்கற ஷால்  விழ வாய்ப்பில்லை. காற்றுக்கு கொஞ்சம் தள்ளிதான் விழும் . ஒரு வேளை ஷாலை தண்ணில முக்கி நனைச்சு சுருட்டி வீசுனா வேணா கரெக்டா அப்டி அதே இடத்துல விழுமே தவிர  காத்துக்குப்பறந்து அப்டி விழாது 


3   ஒரு சீன்ல போலீஸ் கிட்டே செக்யூரிட்டி  “ சம்பளம் கொடுத்து பல மாசம் ஆச்சு சார், இவங்க எங்கே சிசிடிவி கேமரா வைக்கப்போறாங்க அப்டிங்கறாரு, இதுல  2 பிழைகள். சாமான்யன் சராசரி குடும்பஸ்தனே அதிக பட்சம் 2 மாசம் சம்பளம் தர்லைன்னா வேற இடம் பார்க்க கிளம்பிடுவான், அடித்தட்டு மக்கள் எல்லாம் பல மாசம் சம்பளம் வாங்காம ஒரே இடத்துல வேலை பார்ப்பாங்களா? இப்போ சிட்டில மெயின் பஜார்ல ஷாப்பிங் மால்கள்ல அபார்மெண்ட்ஸ் ல சிசிடிவி வைக்கறது கட்டாயமாக்கப்பட்டிருக்கு. ஏன் இல்லை? 


4  டெட் பாடி  குப்புற விழுமா? மல்லாக்க விழுமா? என்ற விவாதத்துல   போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனர் ஒரு கான்ஸ்டபிளை 2 அடி உயரம் கூட இல்லாத இடத்துல இருந்து குதிக்க சொல்றாரு , சிரிப்பா இருக்கு . அதுல எப்படி தெரியும் , இதே சிபிஐ டைரி குறிப்புல மம்முட்டி ஒரு பொம்மையை  ரெடி பண்ணி மாடில இருந்து கீழே போடுவாரு 


5  மிடில் கிளாஸ் வீட்ல கூட யாராவது  திடீர் விருந்தினர் வர்றப்ப பால் இருக்கும் டீ போட்டுத்தருவாங்க , ஆனா ஒரு இன்ஸ் பெக்டர் வீட்ல ஃபிரிட்ஜ் இருக்கு , ஆனா கெஸ்ட்டா வந்த ஏ சி  க்கு டீ போட்டுத்தர பால் இல்லைனு  மனைவி சொல்றாரு 


6   செல்ஃபோனை  ( செக்யூரிட்டி லாக் ) அன் லாக் பண்ண முடியலைனு எந்த செல் ஃபோன் கடைக்காரரும் சொல்ல மாட்டார், ஓரளவு சூட்சுமம் தெரிஞ்ச சராசரி மனிதனே அன் லாக்  பண்ண முடிய்றப்ப செல் ஃபோன் கடைல வேலை பண்றவரால செல் ஃபோன்  லாக் எடுக்கத்தெரியாம போகுமா? 


7  ஒரு இன்ஸ்பெக்டரோட மனைவி  அவர் வீட்டுக்கு வந்த அசிஸ்டெண்ட் கமிஷனர் , போலீஸ் காண்ஸ்டபிள் 3 பேரு எல்லாருக்கும் பிளாக் டீ போட்டுத்தர்றாரு. பேசிக்கலா அவருக்கு தன் கணவர் பார்க்கும் வேலைல ஆர்வம் இல்ல. அப்டி இருக்கறவர்  வேண்டா வெறுப்பாதான் டீ போடறார். அந்த டீ கப்களை  பிளேட்ல போட்டு டேபிள் மேல தான் வைக்கஞும், ஆனா ஆங்காங்கே தள்ளி தள்ளி நிக்கற போலீஸ் கான்ஸ்டபிளுக்கு இவர்  நேரடியா கொண்டு போய் தர்றாரு 

8  ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர்  தன் எதிரே நிற்கும் அசிஸ்டெண்ட் கமிஷன்ர்ட்ட  பேசும்போது கூலிங்க் கிளாஸ் போட்டுட்டே தான் பேசறாரு , பைக்ல போறப்பன்னா பரவாயில்லை . சும்மா நிற்கும்போது ஒரு மரியாதைக்காகவாவது கண்னாடியைக்கழட்டி இருக்கலாம் 


9  போலீஸா வர்ற ஹீரோ 4 வெவ்வேற காட்சிகள் ல பைகல போற மாதிரி காட்றாங்க , ஒரு சீன்ல கூட ஹெல்மெட் போடலை , அட்லீஸ்ட் திரைல ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவது தவறு எச்சரிக்கை ஸ்லோகன் கூட போடலை ,  மலையாள , ஹிந்திப்படங்கள்ல குடி குடியை கெடுக்கும், புகைப்பழக்கம் கேடு அப்டினு போடற மாதிரி ஹெல்மெட் சீனுக்கும் போடுவாங்க 

10   போலீஸ் என்கொயரி பண்ணிட்டு வரும்போது அவங்க எதிர்ல வரும் ஒரு ஆள் பைக்கை திருப்பி ட்டு எஸ் ஆகறான், அப்போ ஒரு டயலாக் “அங்கே ஒருத்தன் வண்டியைத்திருப்பிட்டு ஓடறான் பாருங்க

 ஆக்சுவலா போறான் அப்டினுதானே வரனும்?

11  க்ளைமாக்ஸ் ல ஹீரோயின் வில்லன் கிட்டே மாட்டி இருக்கா, அப்போ ஹீரோவான போலீஸ் மனைவிக்கு ஃபோன் பண்றார் , லைன் கிடைக்கலை. திருப்பி திருப்பி அதே நெம்பருக்கு ட்ரை பண்றார், அவருக்கு அடுத்த கொலை டார்கெட் தன் மனைவினு தெரிஞ்சிடுது,  எச்சரிக்க ஃபோன் பண்றாரு . லேண்ட் லைன் ஃபோன் இல்லையா? அல்லது அக்கம் பக்கம் வீடுகள் ல  ஃபோன் பண்ணி எச்சரிக்கலாம்விகடன் மார்க் ( யூகம்) 45 

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   4/ 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 3.5 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-காளிதாஸ் − திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜையே வியக்க வைக்கும் திரைக்கதை. க்ரைம் நாவல் ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரால் கூட யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்,கடைசி 20 நிமிடங்கள் அடிபொலி. த்ரில்லர் மூவி ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத படம் ,விகடன் − 45 , ரேட்டிங் 3.5 / 5 , ஏ சென்ட்டர் பிலிம். பரத் கேரியரில் பெஸ்ட் 1 , அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்திலின் நெறியாள்கை செம #Kalidas


0 comments: