Tuesday, February 10, 2026

DURANDHAR (2025) -துரந்தர் ( உறுதியானவர்) ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஸ்பை ஆக்சன் த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்

                     


       ரூ 300  கொடி பட்ஜெட்டில் உருவாகி , ரிலீஸ் ஆன ,முதல்  15 நாட்களில் உலகம் முழுக்க  905 கோடி ரூபாய்  வசூல் சாதனை செய்த இந்தப்படம்    இன்று வரை   ரூ  1350  கோடி வசூல்  செய்து  இருக்கிறது/5/12/2025 முதல்  திரை  அரங்குகளில்  வெளியான  இந்தப்படம்   இப்போது நெட் பிளிக்ஸ் ஓடிடி யில்  தமிழ் டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது 


இந்திய நாடாளூமன்றத்தாக்குதல் (2001) , மும்பை தாக்குதல்கள்  (2008) , இந்தியன் ஏர்லைன்ஸ்  விமானக்கடத்தல்  ஆகிய உண்மை சம்பவங்களை ஒட்டி திரைக்கதை  அமைக்கப்பட்டிருக்கும் .சென்சாரில்  பிரச்சனை ஏற்படாமல் இருக்க  இது ஒரு புனைவுக்கதை என சொல்லப்பட்டாலும் ஒரு மேஜர் ஆபீசரின்  வாழ்வில் நடந்த  உண்மைக்கதை என சொல்லப்படுகிறது 


  இந்திய   உளவுபப்டை  அதிகாரி  பாகிஸ்தானில் நிகழ்த்தும் சாகசம் தான்  கதை என்பதால்  பாகிஸ்தானில் இப்படம் தடை செய்யப்பட்டு உள்ளது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


1999ல்  இந்திய  விமானம் கடத்தப்படுகிறது . பின் நாடாளூமன்றம் தாக்கப்படுகிறது . இதுக்கெல்லாம் காரணம்  பாகிஸ்தான்  தீவிரவாதிகள்  தான்  என்பதை உணர்ந்த  இந்திய  அரசு  ஒரு இந்திய உளவாளியை  பாகிஸ்தான் அனுப்புகிறது . அந்த உளவாளிதான்  கதையின் நாயகன் . அவர் 10 வருடங்களாக பாகிஸ்தானில்  ஊடுருவி  என்ன என்ன சம்பவங்களை  எல்லாம் செய்தார்  என்பதுதான் இந்தப்படத்தின் கதை 

நாயகன்  ஆக  ரன்வீர்  சிங்க்  அருமையாக நடித்து இருக்கிறார் . ஆக்சன்  காட்சிகள் , ரொமாண்டிக் காட்சிகளில் நன்கு ஸ்கோர் செய்கிறார் 


 வில்லன்  ஆக  வரும்  அக்சய்  கன்னா  அசத்தி  இருக்கிறார். நாயகனை  விட  வலிமையாக எழுதப்பட்ட  கேரக்டர். தன் மகனை  இழந்த  செய்தி  கேட்டு  அழுது  கொண்டே  வரும்  சீன்  உடல் மொழி அருமை 


எஸ்  பி சவுத்ரி  என்னும்   போலீஸ் ஆபீசர்  ஆக வரும் சஞ்சய் தத்  ஆரவாரமான  நடிப்பு . மாதவனின்  நடிப்பு  கலக்கல்  ரகம் . 


 நாயகி  ஆக  சாரா  அர்ஜூன்  அழகு  நடிப்பு  இரண்டும்  அருமை . தெய்வத்திருமகள்  படத்தில்  விக்ரமின்  மகள்  ஆக  வரும்  பேபி  தான்  இப்போது  குமரி  ஆகி  விட்டார்.


சரஸ்வதி  சச்தேவின் இசையில்  பாடல்கள்  அருமை . பின்னணி இசையும்  தெறிக்கிறது  விகாஷ்  நல்வாகாவின் ஒளிப்பதிவு  பிரம்மாண்டம்


சிவக்குமார் வி பணிக்கரின்   எடிட்டிங்க்  பின் பாதியில்  இழுவை 


கதை , திரைக்கதை , இயக்கம்  அனைத்தும்  ஆதித்ய  தார் இவர்  தயாரிப்பாளர்களீல் ஒருவரும் கூட 



சபாஷ்  டைரக்டர்


1    உண்மையில்  நடந்த சம்பவங்களான இந்திய நாடாளூமன்றத்தாக்குதல் (2001) , மும்பை தாக்குதல்கள்  (2008) , இந்தியன் ஏர்லைன்ஸ்  விமானக்கடத்தல்  ஆகிய உண்மை சம்பவங்களை  , அதன்  க்ளிப்பிங்க்சை  ஆங்காங்கே  புகுத்தியது  அருமை 


2   படத்தில்  ஏகப்பட்ட டீட்டெய்லிங்க் பிரமாதமாக வடிவமைக்கப்பட்டிருக்கு 


3   ஹவா   ஹவா  ஏ  ஹவா , தம் ஆரே  தம்  ஆகிய  சூப்பர்  ஹிட்  சாங்க்சை அதன் பிஜிஎம் மை  பிளேஸ்  செய்த  விதம்  கூஸ்பம்ப் மொமெண்ட் 


4  நாயகன் - நாயகி  இருவருக்கு இடையே  மலரும்  காதல்  காட்சிகள்  பாலைவனத்தில்  சோலை . ஆக்சன்  அதிரடிகளூக்கு  நடுவே  தென்றல்; போல்  தாலாட்டுகிறது 

5   அலை  பாயுதே  மாதவனின் கெட்டப் அருமை . அடையாளமே  தெரியவில்லை .


6 படம்  ஆரம்பித்து 25 நிமிடங்கள்  கழித்துத்தான்  ஹீரோ  எண்ட்ரி. ஆனாலும் பெரிய  ஹீரோயிசம்  இல்லாமல்  காட்டியது  அருமை 

7  க்ளைமாக்சில்  வரும்  சேசிங்க்  சீன் , ஆக்சன்  சீக்வன்ஸ்  இரண்டும்  அருமை 


8  அதிகம்  பேசாத  கேரக்டர்  ஆக  நாயகனை  டிசைன்  செய்த விதமும்  மற்ற  கேரக்டர்களின்  வலிமையான  ஆக்ரமிப்பும் கச்சிதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   நான்  ஏழை தான் , ஆனா தோத்துப்போறவன் கிடையாது 


2  இந்தியவின்  முதல்  எதிரிகள் இந்தியர்கள் தான் , பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம் தான் 


3  பொண்ணுங்களை மதிக்கறவங்களுக்கு சொர்க்கத்தில் நிச்சயம் ஒரு இடம் இருக்குமாம் 


4  நம்   தொழிலில்  முக்கியத்தேவை  பொறுமையும் விழிப்புணர்வும் 

5  இங்கே  எனக்கு வெலை கிடைக்குமா? 


 ஜூஸ்  வேணா  கிடைக்கும் 


6  அது   வெறும்   நாற்காலி   இல்லை , சிம்மாசனம் . அந்த சிம்மாசனத்தை அடைய  எத்தனை  கொலை பண் ணி இருப்பார்னு கணக்கே  இல்லை 

7  சொர்க்கத்தில்  எனக்குன்னு ஒரு இடம் இருக்கும், ஆனா நீங்க அதைப்பறிச்சுடாம இருக்கனும்   மிஸ் 


8  என்  கையால  யாருக்காவது சாவு வந்தா அது மிகக்கொடூரமானதா இருக்கும் 


9 விஸ்வாசத்தையும் , அரசியலையும்  ஒரே தட்டில் வைக்க முடியாது 


10 விதியின் அழகிய  விளையாட்டு என்ன? தெரியுமா? நேரம் வரும்போதுஅது நம் வாழ்க்கையைப்புரட்டிப்போட்டுடும் 


11     நீ   உன் பக்கத்து வீட்டை எரிச்சா அந்த நெருப்பு உன் வீட்டை நோக்கியும் வரும்  


12  இந்த  விளையாட்டை  நாம ஜெயிக்கறதுக்காக விளையாடனும், அதுக்கு ஒரே வழி நாம் உயிட்ரோடு இருக்கனும் 


13   உன் வீட்டுக்குப்போகும் எண்ணம் இல்லையா? 


 நான்   திரும்பிப்போக  இங்கே வர்லை 


14   நாம்  ஒவ்வொரு  முறை  சரியா திட்டம்  இட்டாலும்  எதிரிகள்  ஒரே  ஒரு முறை  நன்கு  திட்டம்  இட்டாலே  ஜெயித்து  விடுகிறார்கள் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    படத்தின்   நீளம்  ரொம்பவே அதிகம், கிட்டத்தட்ட  மூன்றரை மணி  நேரம்  ஓடுகிறது . இன்னமும்  ட்ரிம்  பண்ணி இருக்கலாம் 


2  நாயகியின்  அப்பா  நாயகனிடம் கேட்கும் நியாயமான கேள்விக்கு  நாயகன் பதிலே  சொல்லவில்லை . அது - 32 வயதான   நீ  19 வயதான என் பெண்ணை மயக்கிக்காதலித்துக்கூட்டிட்டு வந்துட்டே இது நியாயமா? 


3   குருதிப்புனல் , விஸ்வரூபம் , மீகாமன் ஆகிய படங்களில்  வரும்  பல  காட்சிகள் இதில் வருகிறது 

4  படத்தில்  ஏகப்பட்ட  கேரக்டர்கள்  இருப்பதால்  அவர்களை அறிமுகப்படுத்தவே  அதிக  நேரம்  ஆகிறது 

5  நாயகனை  யாரும்  சந்தேகப்படவே  இல்லை அவருக்கு எந்த தடையும் வரலை எப்படி ? 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+   வன்முறைக்காட்சிகளுக்காகவும் , ரத்தம்  தெறிக்கும் காட்சிகளுக்காகவும்   ஏ  சர்ட்டிபிகெட்   பெற்ற  படம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - கர்ப்பிணிப் பெண்கள் , குழந்தைகள்  இந்தப்படம் பார்ப்பதைத்தவிர்க்கவும், ஆக்சன்  பிரியர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங்க்  3 / 5 


Dhurandhar
Theatrical release poster
Directed byAditya Dhar
Written byAditya Dhar
Produced by
Starring
CinematographyVikash Nowlakha
Edited byShivkumar V. Panicker
Music byShashwat Sachdev
Production
companies
Distributed byJio Studios
Release date
  • 5 December 2025
Running time
214 minutes[1]
CountryIndia
LanguageHindi
Budgetest. ₹250–475 crore (shared with part 2)[2]
Box officeest. ₹1,347.40 crore[3]

0 comments: