Thursday, October 14, 2010

விஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி

அட



1.வேலாயுதம் படத்துக்கு நோபல் பரிசு கன்ஃபர்ம்னு எப்படி சொல்றே?

வேல் ஒரு ஆயுதம்னு கருத்து சொல்லி இருக்காங்களே?


2.விஜய் படம்னா டான்ஸ் களை கட்டுதே?

  டான்ஸ் களை கட்டுது,வசூல் கல்லா கட்டுது,எல்லாம் ஓக்கே,ஆனா படம் பாக்க முடியாம கண்ணைக்கட்டுதே?


3. விஜய் -     டைரக்டர் சார்,இது ஒரு ஃபேமிலி ஸ்டோரியா?

                               நோ,பேமானி ஸ்டோரி. 


4. இந்தப்படத்துல விஜய்க்கு 2 ஜோடியாம்.இடைவேளை வரை ஒரு ஜோடி,அதுக்கு அப்புறம் ஒரு ஜோடி.

சரி ,இடைவேளை வரை ஜோடியா வர்றவர் இடைவேளைக்கு பிறகு யாருக்கு ஜோடி?


5.இந்தப்படத்துல டைட்டில் சாங்கிற்கு செம ஆட்டம் போட்டிருக்காராம் விஜய்.

ஆடாத ஆட்டமெல்லம் ஆடியவன் (படம்) மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா? 



 
 6.இந்த ஸ்டில்லைப்பார்த்ததும் உனக்கு என்ன தோணுது?தாய்க்குலத்தோட ஆதரவு அவருக்கு அதிகம்னு தெரியுதா?

நோ நோ,வயசுப்பசங்க யாரும் அவர் படம் பாக்க மாட்டாங்க,வயசான கிழங்கட்டைங்கதான் அவர் படம் பாக்க வருவாங்கனு தோணுது.


7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.

ஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா?



8.வேலாயுதம் படம் ரிலீஸ்ல சிக்கலா? ஏன்?

ஈரோடு வேலா புக் ஸ்டால் ஓனர் கேஸ் போட்டிருக்காராம்,அவர் கடை பேரை டைட்டிலா வெச்சு கேவலப்படுத்தீட்டாராம் விஜய் . 



9.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான்.


10. க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ?

வில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா?நேச்சுரலா இருக்கும்.


11. விஜய் படம் பார்த்தா நேரம் போறதே தெரியாதா,எப்படி?


படம் போட்ட 2வது ரீல்லயே தூக்கம் வந்துடுமே?



12. த்ரிஷா  -  தூள் திவ்யா இப்போ டல் திவ்யா ஆகிட்டாளா,ஏன்? 

விஜய் படம் பார்த்தாளாம்.


13. மலையாள சீன் படத்துக்கும்,விஜய் படத்துக்கும் என்ன வித்தியாசம்?

அதுல ஷகிலா இருக்கற சீன் இருக்கும்,இதுல விஜய் வந்தாலே திகிலா இருக்கும். 

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....

   

      இந்தியா முழுவதும் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம்.அப்போது அலகாபாத்தில் முக்கியமான் காங்கிரஸ் மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு முக்கிய்மான் பொறுப்பாளர், வல்லபாய் பட்டேல் ஆவார். மாநாடு தொடங்கும் நேரமாகியும் வல்லபாய் பட்டேல் வந்து சேரவில்லை.மேடையிலிருந்த காந்தியடிகள், “ வல்லபாய் பட்டேல் என்ன ஆனார்? ஏன் இன்னும்
வரவில்லை?” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

            மாநாடு தொடங்கி அரை மணி நேரம் ஆன பிறகு வல்லபாய் பட்டேல்பரபரப்புடன் வேகமாக ஓடி வந்தார். அவரைக் கண்ட காந்திஜி, “நமது நாட்டிற்குச்சுதந்திரம் வருவதற்கு அரை மணி நேரம் தாமதமானால் அதற்கு வல்லபாய் பட்டேல்தான்
காரணம்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.  பட்டேல் காந்தியடிகளுக்கு வணக்கம் தெரிவித்து, “மாநாடுகளுக்கு
நான் வரும் நேரத்தைப் பொறுத்துதான் நமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்குமென்றால் அடுத்த மாநாட்டின்போது பல மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுகிறேன்” என்று கூறினார். அதைக் கேட்டு மேடையிலிருந்த காந்திஜி உட்பட அனைவரும் மகிழ்ச்சியோடு
சிரித்துக் கொண்டார்கள்.

Wednesday, October 13, 2010

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் வாழ்வில் நகைச்சுவை


 ஒருமுறை, சோவியத் யூனியனில் இருந்து சோவியத் திரைபடக் கலைஞர்கள்
வந்திருந்தார்கள். அவர்களுக்குத் தமிழ்நாட்டுத் திரைப்பட ஸ்டுடியோக்களைச் சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் தரப்பட்டிருந்தது.

            கலைவாணர், சோவியத் கலைஞர்களுக்கு ஸ்டுடியோக்களிலிருந்த
படத்தயாரிப்பிற்கான சாதனங்களையெல்லாம் காண்பித்துக்கொண்டு வந்தார். சோவியத் கலைஞர்கள் அங்கிருக்கும் தொழில் நுணுக்கப் பொருள்களையெல்லாம் பார்த்து, அவையெல்லாம் எங்குச்
செய்யப்பட்டவை என்று கேட்டார்கள்.

            கலைவாணர் அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில்,”இது இங்கிலாந்தில் செய்தது.அது ஜப்பானிலிருந்து வந்தது. இது அமெரிக்க தயாரிப்பு”என்றெல்லாம் தொடர்ச்சியாக்சொல்லிக்கொண்டே வந்தார். ஒரு சோவியத் கலைஞர்,”உங்கள் சொந்த நாட்டில் தயாரான
பொருள் ஒன்றும் இல்லையா?”என்று கேட்டார்.

            அந்தக் கேள்வி கலைவாணருக்கு வெட்கத்தையும் வேதனையையும் அளித்ததுஎன்றாலும், அவர் சிரித்துக் கொண்டே சோவியத் கலைஞர்களை நோக்கி,”ஏன் இல்லை? இந்தஸ்டுடியோவில் உள்ள சுவர்களையெல்லாம் நாங்கள்தாம் கட்டினோம். இங்கே இருக்கும்     மரங்களையெல்லாம் நாங்கள்தாம் வளர்த்தோம். அதோ, கார் நிற்கிறதல்லவா, அதன் டயர்
டியூபுக்கு நாங்கள்தாம் காற்றடைத்தோம்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

Tuesday, October 12, 2010

இளைய தளபதியா? இளைச்ச தளபதியா? (காமெடி கும்மி)


 
1. விஜய்+சித்திக் காம்பினேஷன்ல ஃப்ரண்ட்ஸ் ஹிட் ஆச்சு. காவலன் ஏன் ஹிட்  ஆகாது?

விளையாடறியா? அதுல சூர்யா இருந்தாரு. படத்தை காப்பாத்துனாரு.



2. ரொம்ப வருஷத்துக்குப் பிறகு லவ் சப்ஜெக்ட் பண்றாரு.க்ளிக் ஆகாதா?


30 வயசுல நடிச்ச சச்சினே டக் அவுட் ஆகிடுச்சு. 35 வயசு காவலன்   டூ லேட்.



3. ஹீரோ சார்,ஏன் ஜிம்முக்கு போறீங்க?

டைரக்டர் சார்,படத்தோட பேரே பாடிகார்டு ஆச்சே,பாடியை டெவெலப் பண்ண வேணாமா?

பாடியை காட்டத்தேவை இல்லை,நடிப்பைக்காட்டுனா போதும்.



4.ஒரிஜினல் மலையாள பாடிகார்டுல நயன்தாரா தானே ஹீரோயின்?ஏன் தமிழ்ப்படத்துல அவர் இல்லை?

ஏற்கனவே அவர் கூட நடிச்ச வில்லு முறிஞ்சு போச்சே,அதான் அவரப்பத்தி பேசுனாலே டைரக்டர் எரிஞ்சு விழறாராம்.


5. ராமராஜன் விஜய் மேல வழக்கு போட்டிருக்காராமே?

எங்க ஊரு காவக்காரன் டைட்டிலை உல்டா பண்ணி காவலன் பட டைட்டில் ரெடி பண்ணிட்டாங்களாம்.



6. அசினோட அப்பா ராஜ்கிரன் இதுல தாதாவா வர்றார்.

ஓஹோ... விஜய் சோதாவா  வர்றாராமா??




 


7. இந்தப்படத்துல இடைவேளை வரை சிரிப்பா இருக்குமாம். பிறகு ஆக்‌ஷனாம்.

ஓஹோ... 1st half comedy; 2nd half trajedy? (முதல் பாதி காமெடி,பின் பாதி டிராஜடி?)



8. விஜய் ஏன் கடுப்பா இருக்காரு?

காவலன் பட போஸ்டர்ல விஜய் படம் பார்ப்பது வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்கு கேடு-னு எழுதி வெச்சுட்டாங்களாம்.



9. காவலன் படத்துல வடிவேல் காமெடியாம்.

அவரு காமெடி பண்றாரு ஓ.கே.; விஜய் என்ன பண்ணுவாரு?



10. சிலப்பதிகார கோவலனுக்கும், விஜய் நடிக்கற காவலனுக்கும் என்ன வித்தியாசம்?

அதுல கோவலன், கண்ணகியை ஏமாத்துனாரு. இதுல காவலன் ஆடியன்ஸை ஏமாத்துவாரு.



11. விஜய் படத்துக்கு உண்மைத்தமிழன் விமர்சனம் எழுத மாட்டாரா? ஏன்?


அவரு   எப்பவும் படத்தோட கதையையே  200 லைன்ல எழுதுவாரு. விஜய் படத்துல கதை ஒன் லைன்ல முடிஞ்சிடுதே? (ஒரு வரி)



12. கேபிள் சங்கருக்கும், விஜய்க்கும் என்ன வித்தியாசம்?

கேபிள் சங்கர் கொத்து புரோட்டாவால ஹிட் ஆனாரு. விஜய் ரசிகர்களை கொத்து புரோட்டா போட்டே அப்பீட்டு ஆனவரு.




13. கிளைமாக்ஸ்ல வில்லனை விஜய் கொன்னுடறாரு.

ஆனா படம் போட்டதுல இருந்து ஆடியன்ஸை கொன்னெடுத்துடறாரே?



டிஸ்கி 1     -13 என்பது ராசி இல்லாத எண்,ஏன் அப்படி 13 ஜோக் எழுதுனீங்க?னு கேக்காதீங்க?படமே ராசி இல்லாத படம்தான்,சோ நோ செண்ட்டிமெண்ட்ஸ்.

டிஸ்கி 2       - கேபிள் சங்கர் சார்,உண்மைத்தமிழன் அண்ணன் இருவரும் ஆலமரம் போல் வேரூன்றியவர்கள்நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கள் எல்லாம் அவர் பெயரை யூஸ் செய்யலாமா என சிண்டு முடிபவர்களுக்கு ஒரு நியூஸ்,இதற்கு 2 பேரிடமும் அனுமதி வாங்கிட்டேன்


டிஸ்கி 3 -   விஜய் ரசிகர்கள் என்னைதாக்கும் ஐடியா இருந்தால் கை விடவும்.ஏனெனில் நான் வி வி எஸ் அமைப்பில் உறுப்பினர்,அதாவது விஜய்க்கு வெடி வைப்போர் சங்கம் .எனக்கு ஏதாவது ஒன்று என்றால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவண்டா? எனக்கேட்டு ஆட்கள் வருவார்கள்.(நினப்புதான் பொழப்பை கெடுத்துச்சாம்)



டிஸ்கி 4 -   விஜய்யை நக்கல் அடிப்பதை காண்ட்ராக்ட் எடுத்துள்ள அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமி எனக்கு இந்த முறை சப் - காண்ட்ராக்ட் விட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Monday, October 11, 2010

தலைவா! இதுதான் எங்க தலையெழுத்தா? (ஜோக்ஸ்)




1.எனக்கு நாலு முறை மாமன்கள் இருக்காங்கடி. நாலு பேர்ல யார் பெரிய
பணக்காரரோ அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

ஓஹோ...காமன் வெல்த் மாதிரி  மாமன் வெல்த் போட்டியா?... நடத்து நடத்து...



2.. காமன் வெல்த் போட்டி பற்றி கருத்து கூறுங்க-னு தலைவர்கிட்ட
கேட்டது தப்பா போச்சு.

ஏன்?

காமன் என்பவர் மன்மதன். அவரிடம் பெரிய அளவில் செல்வம் இருப்பது
மாதிரி தெரியலை-னு பேசி சொதப்பிட்டார்.



3.     அவர் போலி ஜோசியர்-னு எப்படி சொல்றே?

   கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட்ல ஹார்டு வேர்-ல ஒர்க் பண்ற மாப்ளைன்னா
  ஹார்டா  (HARD)  இருப்பாரு. சாஃப்ட் வேர்-ல ஒர்க் பண்ற ஆள்-னா     சாஃப்டா        (SOFT)   இருப்பாரு-னுசொல்றாரே?




4.   தலைவர் தன்னோட வீட்டை தனுஷ்கோடிக்கு மாத்திடாரா, ஏன்?

      கோடியில் புரள்வர்-னு பேரெடுக்கவாம்.




5 . இந்த லைப்ரரில டெரரிஸ்ட்ஸ் இருக்காங்கனு எப்படி சொல்றே?

சைலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதுன இடத்துல வயலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதி இருக்கே?




6. . நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அமைதிப் பூங்கா ஆக்குவோம்-னு
தலைவர் சொறாரே?

ஆமா, ஊருக்கு நூறு லைப்ரரி திறப்பாராம்.







7. . நாட்டுல ஜனநாயகம் செத்துடுச்சு-னு எப்படி தலைவரே சொல்றீங்க?

ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?



8   லைப்ரரில டெட்டனேட்டர் வெச்சுட்டாங்களாமே?

ஆமா. கெட்ட மேட்டர்தான்.



9. ’ரம்’ லத்தை பிரபுதேவா ஏன் கண்டுக்கறதே இல்லை?

’கிக்’ குறைஞ்சிடுச்சாம்.

 


10. ஃபிரண்டு-னு கூட பார்க்காம ஏன் அவனை கொலை செஞ்சே?

பார்க்காம கொலை பண்ணலையே? அவன்தானா?-னு நல்லா பார்த்துத்தான்
கொன்னேன்.



11. . தலைவரே! ஊழலின் ஊற்றுக் கண்-அப்டினு உங்களை எல்லாரும்
சொல்றாங்களே?

பாராட்டுக்கு நன்றி! இந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா ரூ.500
அன்பளிப்பா தரனும்.



12. . கிரிக்கெட் சூதாட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க தலைவரே!

கிரிக்கெட் ஸ்டேடியத்துல கிரிக்கெட்தான் ஆடனும், சீட்டு ஆடக்கூடாது. தப்பு.


டிஸ்கி 1 - முத ஸ்டில் கங்கனாரனாவத்(இவங்களைப்பாக்கனும்னுதான் கங்கணம் கட்டீட்டு நிறைய பேரு தாம்தூம் படம் பாத்தாங்க.ஒரு விழ்ழாவுல எடுத்த ஸ்டில்லாம் ,தலை சீவ மறந்துட்டாங்களாம்.ஏதோ திறப்[பு விழாவுக்கு வந்ததால மேட்ச்சுக்கு மேட்சா திறந்த மேனியா வந்துட்டாங்க.


டிஸ்கி 2 - ஜோக் 7 இல்  ;’ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
என்ற வரி தற்செயலாக அமைந்தது,அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.