Monday, November 10, 2025

ஆரோமலே (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ட்ராமா )

             

      இந்தப்படத்தை  விரும்பிப்பார்க்க இரண்டு  காரணங்கள் .

 1 வெட்டு , குத்து , ரத்தம் ,வன்முறை இல்லாமல் ஒரு படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிடுச்சு  .

2  இதுதாண்டா போலீஸ்  ராஜசேகர் - உறவைக்காத்த கிளி    ஜீவிதா  தம்பதியினரின் மகள்  தான் படத்தின் நாயகி 


விண்ணைத்தாண்டி  வருவாயா? ராஜாராணி   சாயல்  இருந்தாலும்  பார்த்து விடலாம்  என முடிவு செய்தேன்     . காமெடி  நடிகர்  தியாகுவின்  மகன் சாரங்க் தியாகு அறிமுக இயக்குனர் ஆகி  இருக்கும் படம் . 


 ஆராமலே  என்றால்  என் அன்பெ  என்று பொருள் விண்ணைத்தாண்டி  வருவாயா?   படத்தில்   வரும்  பாடல்  வரியில்  வரும்  சொல்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்ன வயதில்  ஸ்கூலில்  படிக்கும்போது  , காலேஜில் படிக்கும்போது  தலா  ஒரு   ஒரு தலைக்காதல் . இரண்டுமே  தோல்வி .இப்போது  வேலைக்குப்போகலாம் என ஒரு கம்பெனியில் வேலைக்குச்செல்கிறான் 


 நாயகி தான் அந்தக்கம்பெனியில்   நாயகனுக்கு  உயர் அதிகாரி . ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் ஆன நாயகிக்கும், நாயகனுக்கும் ஒத்துப்போவதில்லை .ஒரு கட்டத்தில்  கம்பெனி வேலையில் ஒரு  தோல்வியை சந்தித்த  அவமானத்தில் நாயகி  2 நாட்கள்  கம்பெனிக்கு வராமல் இருக்க   நாயகன் ஆறுதல் சொல்ல நாயகி வீட்டுக்குப்போகிறான் . 


  அவனது  பரிவான சொல்லால் நாயகி  மனம் மகிழ்கிறாள். அது காதல்  ஆக மலர்கிற்து . நாயகன் ஒரு நாள் நாயகியிடம், வெளிப்படையாக ஐ லவ் யூ சொல்ல  நாயகிக்கு ஏதோ ஒரு  விஷயம்  தடங்கல் ஆக  இருக்கிறது. நாயகி  வேலையை ரிசைன் செய்து விட்டு வெளிநாடு போய் விடுகிறாள் 


 இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை. இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக  கிஷன் தாஸ் பக்குவமான நடிப்பு . ஸ்கூல்  மாணவன் ஆக  அவரது  கெட்டப் அருமை . இரு காதல்  தோல்விகளை சொன்ன விதத்தில் அவரது கேரக்டர்  மனசுக்கு  நெருக்கம் ஆகி விடுவது பிளஸ் 


நாயகி ஆக   சிவாம்பிகா  அம்மா ஜீவிதா  சாயல்  அதிகம் இல்லை என்றாலும்  அழகான முகம், பாந்தமான நடிப்பு என கொள்ளை கொள்கிறார் . ஜீவிதாவுக்குக்கண்கள்  உயிர்ப்பானவை . ஹலோ  யார் பேசறது படத்தில் அவர் காட்டிய பய உணர்வு  செமயாக இருக்கும் . அந்தக்கண்களோடு அப்பீடு செய்கையில்   சிவாம்பிகா  கண்கள்  சுமார் ரகம் தான் , ஆனால்  கூந்தல் அடர்த்தியில் அம்மாவை மிஞ்சுகிறார்


 வி டி வி கணேஷ்  கல கலப்பான நடிப்பு . நாயகனின் நண்பன் ஆக வரும் ஹர்சத் கான் பேசும்  ஒன் லைனர்கள்  தியேட்டரில் கை தட்டல்களை அள்ளுகின்றன / முயன்றால் சந்தனம் இடத்துக்கு  வரலாம் , நாயகனின் அம்மாவாக வரும் துளசி , நாயகியின் தாத்தாவக வரும் காத்தாடி ராமமூர்த்தி  நடிப்பு கச்சிதம் 


சித்து  குமாரின்  இசையில் பாடல்கள்  ஓக்கே ரகம் , பின்னணி இசை குட் கவுதம் ராஜேந்திரனின்  ஒளிப்பதிவு  அருமை . ப்ரவீன் ஆண்ட்டனியின்    எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது 


நாயகன்  ஆக  நடித்த  கிஷன் தாஸ் , அறிமுக இயக்குனர் சாரங்க் தியாகு  ஆகிய இருவருடன் இணைந்து இன்னமும் மூவர்   ஆக மொத்தம் ஐவர் திரைக்கதை  அமைத்து  இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1   ஜாதிகள்  இல்லையடி   பாப்பா  என்ற  வாசக பனியன்    அணிந்த சுசீலாவின் அப்பா  எங்க ஆளு தான் மாப்பிள்ளையா வரனும் என்பது டைரக்சன் டச் 


2  நாயகியின்  அம்மா  காதல்  என்றால் என்ன  என்பதை  தன் மகனிட ம்  விளக்கும் சீன் அருமை . என் முன்னால்  காதல்  பற்றி  ஒரு நாள்  கூட அவர் என்னிடம் பேசியதில்லை, அதுதான்  எங்களுக்குள் இருக்கும் லவ் என்றி அவர் சொல்லும்போது நெகிழ்ச்சி 


3   நாயகியின் பெயர் அஞ்சலி  என வைத்து விட்டு  டூயட் படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி  பாட்டையும் , மணிரத்னம் இயக்கிய  அஞ்சலி படத்தில் வரும் டைட்டில்  ஸாங்கையும்  சாமார்த்தியமான இடங்களில் புகுத்திய விதம் 

4 நாயகியை  கண்ணியமான  உடையில் காட்டியதும்  அவரது  ஃபிளாஸ்பேக் என்ன? என்பதை சொல்லாமல் வலியைக்கடத்தியதும் அருமை 



  ரசித்த  வசனங்கள் 


1   முதல்  காதல் புட்டுக்கிச்சாம், சார் ஃபீல்  பண்றார், என்னதான்  ஊரே சிரிச்சாலும் வலி வலி தானே? 


2   மிஸ், நீ காலேஜ்ல முதல் வருசமா?


 நீ?

நான்  2 வது வருசம் 


 நான்   3 வது வருசம்  


3   அம்மா  அடிச்சதுக்கா  இவ்ளோ ஃபீல்  பண்றே? எங்கம்மா எல்லாம் தோசைக்கரண்டியை தோசைக்கல்லில் வைத்ஹதை விட என் தொடையில் சூடு வெச்சதுதான் அதிகம் 


4    என்னது ? மேட்டருக்கு மணியா? 

  அய்யோ  ராமா,  மேட்ரிமோனியல்  டா 


5     வேலை  பிடிக்கலைன்னு  வந்துட்டேன் 


 வெரிகுட். நமக்கு  வேலை  பிடிக்கலைன்னா அப்படித்தான் வந்துடனும் 

 ஐ  மீன்  என்  வேலை  அவங்களுக்குப்பிடிக்கலைன்னு என்னை அனுப்பிட்டாங்க 

6  முதல் தடவையா  ஒரு பெண்ணைப்பார்த்து லவ் வராம பயம் வந்திருக்குங்கற  எவ்ளவ் பெரிய முன்னேற்றம்  தெரியுமா?  


7  இங்கே  யாருமே  அவங்களுக்குப்பிடிச்ச வேலையைப்பார்க்கறது இல்லை, கிடைச்ச வேலையைப்பிடிச்ச மாதிரி  பார்த்துக்கறாங்க 


8   எனக்கு  தோல்வி புதுசு இல்லை , சின்ன   வயசில இருந்து  பல தோல்விகளைப்பார்த்து இருக்கேன் 


9   என்   வாழ்க்கைல நடந்த ஒரு விஷயத்தை உன் கிட்டே  சொல்லலைன்னா அதைப்பற்றிப்பேச எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம் 


10    மேலே  தெரியுது நிலா , நாம் இருவரும்   போலாம்  இன்ப உலா  என ரைமிங்கா எதுனா பேசு 


 இன்னைக்கு அமாவாசை 


11   இது  லவ்வா? இல்லையா?ன்னு தெரியலை , முதல்ல  எனக்கு  லவ்வுன்னா என்ன?ன்னே தெரியலை 


12   புரியாதபோது வர்றதும் , புரிஞ்ச பின் நம்மை விட்டுப்போவதும்தான் லவ் 


13   அவங்க  ரெண்டு  பேரும்  ஒருவரை ஒருவர் பார்த்துக்கிட்டாப்போதும் , மத்ததை  லவ் பார்த்துக்கும் 


14  நல்ல  காம்பினேஷன் , கெட்ட காம்பினேஷன்   என எதுவும் இல்லை , எல்லாம் நம்ம மனசு தான் காரணம் 


15  காதலைத்தேடிட்டுப்போக முடியாது , கொடுக்கத்தான் முடியும், எப்போ நீ கொடுக்கத்தயாரா  இருக்கியோ  அப்போ  காதலே உன்னைத்தேடி வரும், 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    முதல்  பாதியில்  கம்பெனியில்   ஒரு கேஸ்  விஷயம் , பின் பாதியில் இன்னொரு கேஸ்  விஷயம்  ஆகியவையே  திரைக்கதையை ஆக்ரமிக்க நாயகன் நாயகி நெருக்கத்துக்கு இடம் இல்லை . அது  ஆடியன்சுக்கு  கனெக்ட் ஆகுமா? 


2   ஒரு   அம்மா  தன் மகனிடமே  தன்னுடைய  மோசமான பக்கத்தை சொல்வாரா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   காதலர்களுக்கும் , தம்பதிகளுக்கும் பிடிக்கும் ஒரு ஃபீல் குட் மூவி  தான் . பார்க்கலம் . விகடன் மார்க் யூகம் 42 , குமுதம் ரேங்க்கிங்க்   நன்று  . ரேட்டிங்க் 2.75 / 5 


Aaromaley
Theatrical Release Poster
Directed bySarang Thiagu
Written bySarang Thiagu
Screenplay bySarang Thiagu
Kishen Das
Kaushik Sampath
Ashameera Aiyappan (additional)
Bipin R. (additional)
Produced byS. Vinod Kumar
Starring
CinematographyGowtham Rajendran
Edited byPraveen Antony
Music bySiddhu Kumar
Production
company
Mini Studio LLP
Release date
  • 7 November 2025
Running time
127 minutes[citation needed]
CountryIndia
LanguageTamil