Thursday, November 06, 2025

ஆண் பாவம் பொல்லாதது (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா)

                        


    தலைவன் தலைவி படத்தின் கான்செப்ட் தான்,ஆனால் அதை விட ரசிக்கும் விதத்தில் திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள். அனைத்துத்தம்பதியினரும் பார்க்க வேண்டிய இப்படம் 31/10/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப்பெற்று  இருக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ,நாயகி இருவரும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.


நாயகன் அம்மா ,அப்பா போல பழமையான ,பாரம்பரியமான வாழ்க்கையைப்பார்த்து வளர்ந்தவன்,நாயகி முற்போக்கு எண்ணம் கொண்ட பெண்.இருவருக்கும் கருத்து மோதல் எழுகிறது.


டைவர்ஸ் வரை போகிறது.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை


நாயகி ஆக மாளவிகா மனோஜ் குடும்பப்பாங்கான கண்ணியமான தோற்றத்தில் அழகாக வருவதுடன் பிரமாதமாக நடித்திருக்கிறார்.படத்தில் வரும் 5 முக்கியக்கேரக்டர்களில் இவர் தான் நெ 1.

ரீல்ஸ் போடுவது ,தம் அடிப்பது ,புருசனை  எதிர்த்துப்பேசுவது  என இக்காலப்பெண்களைக்கண் முன் நிறுத்துகிறார்ம்


நாயகன் ஆக ரியோ ராஜ்.இதற்கு முன் சில படஙகளில் நடித்திருந்தாலும் இதில் மெச்சூர்டான நடிப்பு. 


நாயகனுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல் ஆக விக்னேஷ் காந்த் ,நாயகிக்கு ஆதரவாக வாதாடும்  லேடி வக்கீல் ஆக ஷீலா இருவரும்ப்கதைப்படி டைவர்ஸ் ஆன ஜோடி என்பது மெயின் கதைக்கு வலு  சேர்க்கிறது


நாயகனின் வக்கீலுக்கு அசிஸ்டெண்ட் ஆக வரும் ஜென்சன் திவாகர் நல்ல காமெடி கவுண்ட்டர்ஸ் தருகிறார்.நாயகியின் வக்கீலுக்கும் ஒரு லேடி ஜூனியர் வக்கில் இருந்திருந்தால் இன்னமும் ஜாலியாக இருந்திருக்கும்


இசை சிந்து குமார்.ஒரே ஒரு பாடல் அருமை.ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம்.நாயகி ,லேடி வக்கீல், லேடி ஜட்ஜ் என பெண்களை கண்ணியமாக ,அழகாகக்காட்டி இருக்கிறது கேமரா.


சிவகுமார் முருகேசன் வசனங்களில் தியேட்டரில் ஆண்களின் கை தட்டல்களை அள்ளுகிறது


எடிட்டிங் கச்சிதம்.2 மணி நேரம் ஓடுகிறது

அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கி இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1 நாயகனின் வக்கீல் ,நாயகியின் வக்கீல் இருவரும் டைவர்ஸ் ஆன தம்பதிகள் என்பது சுவராஸ்யமான முடிச்சு.

2 நாயகியை நாயகனின் வக்கீல் தூண்டி விட்டு போலீஸ் ஸ்டேசன் ல நோஸ் கட் கொடுக்கும் இடம் செம

3 நாயகனின் வக்கீல்,வக்கீலின் அசிஸ்டெண்ட் இருவரது கேரக்டர் டிசைன் சுஜாதா கதைகளில் வரும் கணேஷ வசந்த் மாதிரி இருப்பது சுவராஸ்யம்

4 படம் முழுக்க நகைச்சுவை இழையோடக்காட்சிகளை தொகுத்த விதம் அருமை

5 போலி பெண்ணியவாதிகளை வாரிய விதம்


  ரசித்த  வசனங்கள் 


1 இந்த ஆம்பளைப்பசங்க தான் எந்த போட்டோவில் அழகா இருக்கறதா நினைக்கறாங்களோ அதே போட்டோவைத்தான் பேஸ்புக் ,இன்ஸ்டா ,வாட்சப் டி பி யா வைப்பானுங்க


2 உடை என்பது நம் வசதிக்குத்தான் ( சவுகர்யத்துக்குத்தான்).கிளாமராப்போடனும்னு அவசியம் இல்லை 


3  நான் தம் அடிப்பேன்,உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?


எனக்கும் ஒரு சிகரெட் கொடுத்தாப்பிரச்சனை இல்லை


4 என்ன? உன் பொண்டாட்டி அரைகுறை டிரஸ்ல வந்திருக்கா?


பாட்டி,எனக்கு விபரம் தெரிஞ்ச நாளில் இருந்து நீ ஜாக்கெட்டே போட்டதில்லை.அவ ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் தானே போட்டிருக்கா?

5 என்னை ராணி மாதிரி பார்த்துக்குவேன்னு சொன்னே?வேலை எல்லாம் செய்ய சொல்றே?


ராணின்னா  ராஜாவோட பொண்டாட்டின்னு அர்த்தம்


ராணின்னா ராணி தான்


6. மத்ததுக்கெல்லாம் மை சாய்ஸ் ,ஆனா காசு வேணும்னா மட்டும் புருசன் வேணும்?

7 பொண்ணுங்களைப்புரிந்துகொள்வதற்குள் ஆண்களோட ஆயுசே முடிஞ்சிடும்


8 வீட்டுக்குள்ளே  சிசி டி வி கேமரா வெச்சுக்கிட்டா ஒரு பொண்ணு குடித்தனம் பண்ண முடியும்?

9 புருசன் சிரிச்சுப்பேசுனா செக்ஸ் டார்ச்சர்,சிரிக்காம பேசுனா ஆம்பளையே இல்ல என போலீஸ்ல புகார் கொடுக்கறவஙகதான் இந்தக்காலப்பொண்ணுஙக


10  காதலிலும் ,போரிலும் எல்லாமே சரி தான்.நாம ஜெயிக்கனும்னா என்ன வேணா செய்யலாம்

11 உங்க பொண்டாட்டியாவது புத்திசாலியா இருப்பாஙகனு நினைச்சேன்

ம்ஹூம்

12 இவன் நம்மைக்கண்காணிக்க நியமிக்கப்பட்ட டிடெக்டிவ் என எப்படிக்கண்டுபிடிச்சீஙக?


அவன் தான் இன்ஸ்டா ல  டேக் பண்ணி டீட்டெய்ல் சொல்லி போஸ்ட் போட்டிருந்தான்


13 இந்த லஞ்சம்

என்ன? ரிப்போர்ட் ல பொய் சொல்லனுமா?

நோ,உண்மை சொல்லனும்

அப்போ அதுக்கு இன்னமும் செலவு ஆகும்


14 பாஸ்,எப்பவாவது குடிச்சா அது பழக்கம்,டெய்லி பழக்கம்னா அது கெட்ட பழக்கம்.உங்களுக்கு இருப்பது பழக்கமா? கெட்ட பழக்கமா?

தோணும்போதெல்லாம் குடிப்பேன்

அப்போ இவரை ஒரு குடிகார நாய் தான்


15 சட்டம் பொண்ணுங்க சொல்றதைத்தான் நம்பும்

16  ஜீவனாம்சம் வாங்கவே இப்போ எல்லாம் நிறைய போலி டைவர்ஸ் கேஸ் வருது

17 காபி வேணுமா?ந்னு உங்க கிட்டே கேட்டது விருந்தோம்பல்.என் புருசன் கிட்டேக்கேட்டது லவ்.புருசன் பணத்துல தானே எல்லா செலவும் பண்றோம்?காபி போட்டுக்கொடுத்தா தப்பா?


18. இந்தக்காலத்துல அம்மிக்கல்,ஆட்டாஙகல் எதுவும் இல்லை.மிக்சி ,கிரைண்டர் தான்.ஸ்விட்ச் போட்டாப்போதும்


அந்த சுவிட்சைக்கூட பொண்ணுங்க தானே போட வேண்டி இருக்கு ?

19 பெமினிசம் என்பது புருசன் கூட சந்தோசமா வாழக்கூடாது என்பது அல்ல

20 வீட்டில் இருக்கும் ஆண்கள் என்ன சொல்வாங்கன்னு தெரியாம பிரஷர் இல்லாத  வாழ்க்கை வேண்டும்

21  இங்கே எல்லாருமே நான் ஏன் விட்டுக்கொடுக்கனும்? என நினைக்கறாங்க.கல்யாண வாழ்க்கைல அழகே விட்டுக்கொடுத்தல் தான்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஹனிமூன்க்கு எங்கே போகலாம் என நாயகன் கேட்டபோதே நாயகி அம்பேத்கார் பிறந்த ஊருக்குப்போலாம் என்கிறார்.அப்போதே பார்ட்டி பா ரஞ்சித் ரசிகை போல என நாயகன்  உஷார் ஆகி இருக்க வேண்டாமா?

2 இந்தக்காலத்தில் 75% பெண்கள் தாலியை மதிப்பதில்லை.நாயகி தாலியை கழட்டி நகைப்பெட்டியில் வைத்திருக்கிறார் என்பதற்கு நாயகன் ஏன் அவ்ளோ ஜெர்க் ஆகிறார்?

3 மாடர்ன் கேர்ள் என்றால் தம் அடித்தே ஆக வேண்டுமா?ஆணோ ,பெண்ணோ கேன்சர் பேஷண்ட் தானே?

4 இந்தக்காலப்பெண்கள் புருசனை வாடா,போடா என வேலைக்காரனைப்போல் அழைப்பது சகஜம் தான்,அதற்காக வீட்டில் பணிப்பெண் முன்னால் கூட அப்படித்தான் அழைக்கனுமா?அதைப்பற்றி நாயகன் கேட்கவே இல்லையே?

5 க்ளைமாக்சில் நாயகனின் வக்கீல் வாதத்தை முன் வைக்கும்போது ஜட்ஜைப்பார்த்துப்பேசாமல் கோர்ட்டில் இருக்கும் மக்களைப்பார்த்துப்பேசுவது ஓவர் டிராமா

6 முதல் பாதியில் புரட்சிப்பெண்ணாக வரும் நாயகி கேரக்டரை பின் பாதியில் டம்மி ஆக்கி விட்டது ஏனோ?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அனைவரும் காண வேண்டிய கல கலப்பான குடும்பப்படம்.விகடன் மார்க் யூகம் 44 ( ஆனால் ரியலா 40 தான்.ஏன் குறைத்தார்கள் எனத்தெரியவில்லை.அனைத்து மீடியாக்களும் கொண்டாடுகின்றன.ஒரு வேளை ரெட்  ஜெயண்ட்ஸ் ரிலீஸ் ஆக இருந்திருந்தால் தந்திருக்குமோ?)


குமுதம் ரேன்க்கிங்க் நன்று


ரேட்டிங்க் 3/5