Wednesday, November 05, 2025

BAD GIRL(2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலொ ட்ராமா) @ஜியோ ஹாட் ஸ்டார்

       

        5/9/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் சில சர்ச்சைகளால் தடை விதிக்கப்பட்டது.இப்போது        4/11/2025 முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓ டி டி யில் வெளியாகி உள்ளது.


வெற்றிமாறன் தயாரிப்பு என்பதாலும்,7/2/2025 ல் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு  சில விருதுகளை வென்ற படம் என்பதாலும் இது முக்கியத்துவம் பெறுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி 15 வயது டீன் ஏஜ்  மாணவிம்+1 படிக்கிறார்.அம்மா ஸ்கூல் டீச்சர்.அதே ஸ்கூலில் நாயகி படிப்பதால் அம்மாவின் கண்டிப்பும்,கண்காணிப்பும் அதிகம்.அம்மா,அப்பா,பாட்டி உடன் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தாலும் நாயகி  சுதந்திரமாக இருக்க விரும்புபவர்.


நாயகி சக மாணவன் ஒருவனைக்காதலிப்பது அம்மாவுக்குத்தெரிந்து விட காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.அவனை அவனது பெற்றோர் சிங்கப்பூர் அனுப்பி விடுகின்றனர்.


பின் ஒரு நாளில் நாயகி காலேஜ் போகிறார்.ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறார்.அருகில் பெற்றோர் இல்லாததால் லிவ்விங் டுகெதர் ஆக  ஒரு புதுக்காதலனுடன் வாழ்கிறார்.


அவனுடன் ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆக நாயகி வேறு ஒருவனைக்காதலித்தாரா? என்ன செய்தார்? என்பது மீதித்திரைக்கதை


நாயகி ஆக அஞ்சலி சிவராமன் இதில் அறிமுகம்.ஆல்ரெடி இவர் சில ஓடிடி படைப்புகளில் நடித்திருந்தாலும் சினிமாவுக்கு புதுமுகம்.


பிரமாதமான முக வெட்டு ,அழகிய கண்கள் , வசீகரிக்கும் ஹேர் ஸ்டைல், அபாரமான நடிப்பு இவரது பிளஸ்.இப்படி எல்லாம் ஒரு கேரக்டரா? என வெறுக்க வைக்கும் கேரக்டர் டிசைனில் கூட பாவம் எனப்பரிதாபத்தைப்பெறும் லாவகமான நடிப்பு.


நாயகியின் அம்மாவாக சாந்திப்ரியா கலக்கி இருக்கிறார்.சரண்யா பொன் வண்ணனுக்கு இணையான பாந்தமான நடிப்பு.

நாயகியின் முதல் காதலன் ஆக ஹிருது ஹாரூன் ( ட்யூட் படத்தில் நாயகியின் காதலன்) கச்சிதமான நடிப்பு.


நாயகியின் தோழி ஆக சரண்யா ரவிச்சந்திரன் அருமையான நடிப்பு.


நான்கு பேர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.அபாரம்.பல காட்சிகளில் நாயகி,அம்மா இருவருக்குமான க்ளோசப் ஷாட்கள் செம.


அமித் திரிவேதி தான் இசை.பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை கச்சிதம்.


எடிட்டிங் ராதா ஸ்ரீதர்.மாறுபட்ட கட்..டைம் ட்யூரேசன் 112 நிமிடங்கள்


மாறுபட்ட இந்தக்கதையை எழுதி இயக்கி இருப்பவர் பெண் இயக்குனர் வர்சா பரத்

சபாஷ்  டைரக்டர்


1 ஒளிப்பதிவும் ,நாயகியின் அழகும்,நடிப்பும் படத்தின் பெரிய பிளஸ்

2 நாயகியின் அம்மாவாக வரும் டீச்சரின் கேரக்டர் டிசைன்,வெவ்வேறு கட்டங்களில் அவர் நடிப்பு,மகளை டீல் செய்யும் விதம் அருமை

3 தமிழில் வந்த ஆட்டோகிராப்,அட்டக்கத்தி ,மலையாளத்தில் வந்த பிரேமம் ,ஜூன் ஆர் படங்களின் திரைக்கதை சாயல் இருந்தாலும் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் பெண்ணின் பல காதல்கள் படம் ஆக இது புதுசு.( பூ படத்தில் ஒரே ஒரு காதல் தான்.பின் கணவன் வேறு ஆள்)

4 இயக்குனரின் திரை மொழி புதுசு.


  ரசித்த  வசனங்கள் 


1 சில காயஙகள் பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் பட்டுட்டே இருக்கும்

2 கலர் பிரா எதுக்கு? உள்ளேதானே இருக்கு?யார் பார்க்கப்போறாங்க? 

3  ஒருவேளை நம்ம விஷயம் கண்டு பிடிச்சு இருப்பாஙகளோ?

அப்போ இனி பயப்பட வேண்டி இருக்காதுல்ல?

4 பைனான்சியல் ஸ்டெபிலிட்டிதான் நமக்கு முக்கியம்

5 உனக்காக எல்லாம் வாங்குனேன்,ஆல் யுவர் பேவரைட் திங்க்ஸ்

நீ தான் என் பேவரைட்

6  நீ செஞ்ச துரோகத்துக்கு உன் லைப் ல நிச்சயம் ஒரு நாள் அனுபவிப்பே

7 நீங்க உங்க அம்மா அப்பா பேச்சைக்கேட்கலைன்னா உங்க வாரிசுகள் மட்டும் உங்க பேச்சைக்கேட்கவா போகுதுங்க?


8 பாட்டியோ,அம்மாவோ அவஙகளுக்குப்போட்டு விட்ட சங்கிலியை அவஙகளால உடைக்க முடியாட்டியும் அதை நமக்குப்போட்டு விட்டு டுவாங்க

9 வயசுலயும் ,அனுபவத்துலயும் மூத்தவஙகளா இருக்கறதால அவஙக சொல்றது எல்லாம் உண்மை ஆகிடாது

10 நமக்காகத்தான் இந்த மழையே பெய்யுது.


11 ஒருத்தர் கொடுத்த வலியையும் ,வேதனையையும் இன்னொருவர் வந்து சரி பண்ணிட முடியாது.நம்மை நாம் தான் சரி பண்ணனும

12  உண்மையாவே எனக்கு போதை பிடிக்குதா? அல்லது சகவாசம் சரியில்லையா? தெரில.அதான் விட்டுப்பார்க்கலாம்னு தோணுச்சு

13. டேய்,உன் குழந்தைக்கு என் பேரு தானே வெச்சிருக்கனும்?

14  நீ போய்ட்டே ,நானும் விட்டுட்டேன்

15 ஒரு பொண்ணு எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கான மோசமான முன்னுதாரணம் நான் தான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகியின் முதல் காதலனைப்பல வருடங்களுக்குப்பின் சந்திக்கும் நாயகி வேறு ஒருத்தியைத்திருமணம் செய்த அவனுடன் கூடலுக்குத்தயார் ஆக இருக்கிறாள்.ஆனால் அவன் மறுக்கிறான்.இந்தக்காலத்தில் இந்த மாதிரி ஆண்கள் இருக்காங்களா? என்ன?


2 அம்மா,அப்பா,பாட்டி என எந்த உறவுகளையும் மதிக்காத நாயகி காணாமல் போன பூனைக்குட்டிக்காக உருகுவது நம்ப முடியவில்லை

3 இயக்குனர் ஒரு பெண் என்பதால் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை எளிதில் கடத்த முடிகிறது.அவரது திரை மொழி அபாரம்.ஆனால் மணிரத்னம் படஙகளில் வரும் கொண்டாட்ட மனநிலை மிஸ்சிங்.ஜாலியான மொமெண்ட்ஸ் குறைவு.

4 படம் பார்க்கும் டீன் ஏஜ் பெண்கள் இது போல் வாழக்கூடாது என முடிவெடுப்பதை விட இப்படி வாழ்ந்து தான் பார்ப்போமே? என நினைக்க வாய்ப்பு அதிகம்.அது பின்னடைவு


5 நாயகி முற்போக்கானவள் என்பதைக்காட்ட அவர் தம் அடிப்பது ,தண்ணி அடிப்பது  எனக்காட்டத்தேவை இல்லை.


6  நாயகி ஒரு பிராமணக்குடும்பத்தில் இருந்து வந்தவர் என ஜாதி அடையாளம் தேவையற்றது

7 நாயகியின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் அவரது நோக்கம் ,லட்சியம் தான் என்ன? என்பதில் தெளிவில்லை.


8 நாயகியின் காதலர்களாக வருபவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை.தாடி வைத்து கஞ்சா கேஸ்கள் போல ,பிச்சைக்காரர்கள் போல இருக்கிறார்கள்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குழந்தைகளை எப்படிக்கண்டிப்புடன்,கண்காணிப்புடன் வளர்த்த வேண்டும் என பெற்றோர்களுக்குப்படிப்பினை ஊட்டும் படம்.ரேட்டிங்க் 3 /5.விகடன் மார்க் யூகம் 43

Bad Girl
Theatrical release poster
Directed byVarsha Bharath
Written byVarsha Bharath
Produced by
Starring
Cinematography
Edited byRadha Sridhar
Music byAmit Trivedi
Production
company
Release dates
Running time
112 minutes[1]
CountryIndia
LanguageTamil