Saturday, August 16, 2025

SEA OF LOVE (2025)-KADALOLAM SNEHAM-மலையாளம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா )

                         



ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  சிங்கப்பூரில் பணி  புரிபவன் . அவனது அம்மா கிராமத்தில் இருக்கிறார் . நாயகனுக்கு சொந்த ஊரில் வந்து  செட்டில் ஆக வேண்டும் என்ற கனவு உண்டு . நாயகன் வீட்டுக்கு எதிர் வீட்டில் நாயகி குடி இருக்கிறாள் . அவளிடம் தன விருப்பத்தை  சொன்னபோது அவள் அதை ஏற்கவில்லை .


நாயகி நாயகனின் அம்மாவுடன்  பிரியம் வைத்திருக்கிறாள் . இவர்கள் இருவரின்  காதல் பற்றி  நாயகனுக்குத்தெரிய வருகிறது . இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை 


 நாயகன் ஆக ஜிப்னு  சாக்கோ ஜோசப்   நடித்திருக்கிறார் . இவருக்கு அதிக வாய்ப்பில்லை . வந்தவரை ஓகே .நாயகி ஆக ஓ  சிண்ட்ரெல்லா (2023) அமிகோ (2024) படங்களின் நாயகி தில்ஷா  பிரசன்னன்  நடித்திருக்கிறார் . அழகான முகம், அமைதியான நடிப்பு . கண்ணியமான ஆடை வடிவமைப்பு . நாயகனின்  அம்மாவாக ஜீனத்  நடித்திருக்கிறார் , மங்களகரமான முகம் . கச்சிதமான  நடிப்பு 


கோட் டயம்  ரமேஷ்  முக்கியமான  ரோலில்  வருகிறார் .


தேவகிருஷ்ணன் , சாய் கிருஷ்ணா   ஆகிய இருவரும் இணைந்து திரைக்கதை எழுதி  இருக்கிறார்கள் ,தேவகிருஷ்ணன் , ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார் .சாய் கிருஷ்ணா  இயக்கி இருக்கிறார் 



சபாஷ்  டைரக்டர்


1 பிரமாதமான  ஒளிப்பதிவு . ஆர்ட் பிலிம்க்கே  உரித்தான  மெதுவான திரைக்கதை 


2  மீராநாயரின்  பயர் படம் போல் இல்லாமல்  கலைநேர்த்தியான கண்ணியமான காட் சி அமைப்புகள் 


3   76 நிமிடங்களில்  ஷார் ப் ஆக ட்ரிம் செய்யப்பட் ட எடிட்டிங்க் 


  ரசித்த  வசனங்கள் 

1   யாருக்காகவும் உன் விருப்பத்தை நிறைவேற் றாம இருந்துடாத 


2  பொண்ணுக்கு  குறிப்பிட்ட வயசு  வந்ததும் திருமணம் பண்ணி வைத்து விட வேண்டும் 


3 நம்ம உடம்பில் இருக்கும் அக்கினியை காலாகாலத்தில் அணைக்கணும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகனின்  அம்மாவின் கேரக்ட்டர்  டிசைனில் குழப்பம் . நாயகியைத்தன் மகள் போல என ஒரு சீனில் சொல்கிறார் , இன்னொரு சீனில்  அவளைப்பிரிந்து இருக்க முடியாது என்கிறார் 


2 நாயகியின்  கேரக்ட்டர்  பேசிக்கலாவே  அவர் லெஸ்பியன் தான்  என்பதை க்ளியர்   கட்  ஆக சொன்ன மாதிரி  நாயகனின் அம்மா  நீண்ட கால தனிமை காரணமாகவா ? வேறு  என்ன காரணத்தால்      அப்படி  ஆனார்   என்பதில் தெளிவு  இல்லை 


3  நாயகன்  தன அம்மாவிட ம்  நீங்க  பை  செக்ஸுவலா?  என போல்டாக கேட்பது உறுத்துகிறது 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - CLEAN U 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெண்களுக்குப்பிடிக்கும், பெண்களைப்போல பொறுமைசாலிகளுக்குப்பிடிக்கும் . ரேட்டிங்க்  2.25 / 5