Sunday, July 20, 2025

DETECTIVE UJJWALAN (2025) -டிடெக்டிவ் உஜ்வாலன் ( மலையாளம் ) - சினிமா விமர்சனம் ( க்ரைம் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் )@ நெட் பிளிக்ஸ்

           

              

23/5/2025 அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இந்த லோ பட்ஜெட் படம்  முதலீட்டைப்போல  10 மடங்கு லாபம்  எடுத்தது . 6 கோடி ரூபாய் வசூல் . பெரிய  ஹீரோ  இல்லை .பிரம்மாண்டம் எதுவும் இல்லை . சைக்கோ  சீரியல்  கில்லர்  க்ரைம் இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர்  மூவி தான் என்றாலும்   முதல் பாதி காமெடி  மெலோ டிராமாவாக நகரும் .11/7/2025 முதல் நெட் பிளிக்ஸ்   ஓ  டி டி யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன்  ஒரு பயந்தாங்கொள்ளி . சின்ன வயதில் இருந்தே  அவனுக்கு இருட்டை க்கண்டால் பயம் . ஆனால் துப்பறியும் சாம்பு மாதிரி  திறமை  உள்ளவன் .அந்த ஊரில்  எந்த சில்லறைத்திருட்டு நடந்தாலும்  நாயகனிடம் தான் கேஸ் வரும் . ஈசியாக டீல் செய்து  காணாமல் போன பொருட்களைக்கண்டுபிடிப்பான் 



நாயகனுக்கு  அவனது  அம்மா, அப்பா  அதே  ஊரில்  சொந்தத்தில்  ஒரு பெண் பார்க்கிறார்கள் .பெண்ணுக்கு சம்மதம் ,ஆனால்   பெண்ணின் அப்பா பெண் தர யோசிக்கிறார் . மறுபடி பார்ப்போம் எனத் தட்டிக்கழிக்கிறார் 



 அந்த   ஊரில்  போலீஸ்  ஸ்டேஷன் என  பெயரளவுக்கு தான் இருக்கிறது . போலீசுக்கு எந்த வேலையும் இல்லை .மாநிலத்திலேயே  மிகக்குறைவான கிரைம் ரேட் உள்ள  ஊர் என்ற பெருமையைப்பெற்ற கிராமம் அது 



மேலே   சொன்ன   விஷயங்கள்   எல்லாம் படம்  போட் ட   முதல் 7 நிமிடங்களில்   சுருக்கமாக சொல்லி விடுகிறார்கள் 


இப்போது  ஊரில்  ஒரு கொலை நடக்கிறது . அனைவரும்  திடுக்கிடுகிறார்கள் . நாயகனுக்குப்பெண்  தர  யோசித்தாரே ? அவர் தான்   கொலையான ஆள் .  அதே  போல அடுத்தடுத்து  இரூ கொலைகள்   நடக்கின்றன .


 நாயகன்   துப்பறிந்து  அந்திக்குருடன்  என்ற  கிரிமினலை சந்தேகித்து  கைது  செய்ய வைக்கிறார் . ஆனால் அவன் உள்ளே   ஜெயிலில் /லாக்கப்பில்  இருந்தபோது  இன்னொரு கொலை   ஊரில்  நடக்கிறது 


 இப்போது  இந்த கொலைகளைத்துப்பு துலக்க  ஒரு ஸ்பெஷல்  போலீஸ் ஆபீசர்   வருகிறார் .வந்தவர்  நாயகனையும், நாயகனின் அப்பாவையும் சந்தேகிக்கிறார் 


 நாயகனோ  அந்த  போலீஸ்  ஆபிசரையே  சந்தேகிக்கிறான் . இருவரும்  தனித்தனியே  துப்பு துலக்குகின்றனர் 

இதற்குப்பின் நிகழும்    சம்பவங்கள்  தான் மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக த்யான்  சீனிவாசன்  நன்றாக  நடித்திருக்கிறார் .காமெடி  நன்கு அவருக்கு வருகிறது .உடல் மொழி  , டயலாக் டெ லிவரி  கச்சிதம் .போலீஸ் ஆபீசர் ஆக  ரோனி டேவிட் ராஜ்   கம்பீரமாக  நடித்திருக்கிறார். ஜிம் பாடி பிட்டிங்க் ,க்ளோஸ்  கட்டிங்க்  எல்லாம் அருமை . லோக்கல்  எஸ் ஐ  ஆக  சிஜூ வில்சன் நடித்திருக்கிறார்.  


ஆர்ஜீ ,சிபி மேத்யூ  அலெக்ஸ்  ஆகிற இருவரும்   இணைந்து  பாடல்களுக்கான  இசையை அமைத்திருக்கிறார்கள் . .5 பாடல்களில் இரண்டு ; பாஸ் மார்க் .பின்னணி இசையை சிபி மேத்யூ  அலெக்ஸ்  தனியாக அமைத்திருக்கிறார் . குட்.. சாமன்   சாக்கோ  வின் எடிட்டிங்கில்  படம் 124  நிமிடங்கள்  ஓடுகிறது 


பிரேம    கிருஷ்ண  அகாட் , ஷரயந்தி ஹரிச்சந்திரன்  ஆகிய இருவரும் இணைந்து  ஒலிப்பதிவைக்கவனித்து இருக்கிறார்கள்  . சீரியல் கில்லர் வரும்  சீன்கள் எல்லாம் திகில்  தான்  


   இந்திர நீல்   கோபாலகிருஷ்ணன் , ஜி ராகுல்   இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார்கள் 

சபாஷ்  டைரக்டர்

1  நாயகனின் கேரக்ட்டர்  டிசைன் ,கிராம மக்களி ன்  அப்பாவித்தனம்   அருமை 


2  கதை நடக்கும் கால கட்டமாக  1980  என சொன்னது  கச்சிதம் 


3  கொலைகாரன்   யார் ?என்ற  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட்    அருமை 


 ரசித்த  வசனங்கள் 

1   ,சாப்பிடணும் , வாழனும் ,தூங்கணும்  இதுதான் என் லட் சியம் 


2 சார் , நாங்க  இந்த கேஸை  பார்த்துக்குவோம், எங்க டீம் மேல் நம்பிக்கை இல்லையா? 



இல்லை



3  சார் , லீலா  ,மேடத்தோட  பையன் தானே நீங்க ? 


 இல்லை .. எங்கம்மா பெரு லீலா 


4   இந்த ஊரில்    எங்கே திருட்டு  நடந்தாலும்   போலீஸ் என்னைத்தான் முதலில்  கூப்பிடுவாங்க \



  எதனால்?  நீதான் பிரைம் சஸ்பெக்ட்டா ? 


 ஹலோ ,நான் தான் திருடனையே கண்டு பிடிப்பேன்



5   நோ  க்ரைம்  சீன்    மஸ்ட் பி பர்பெக்ட் 


6   இந்த க்ரைம்  ஓ  சி டி    மாதிரி   தெரியுது 



 அப்டின்னா?


 கொலைகாரன் ஒரு பர்பெக்ட் மேன் . கரெக்ட்  டைம்க்கு     சாப்பிடறவனா  இருப்பான் எல்லாத்துல யும்  டைமிங்க் மெயிண்டயின் செய்வான் , பங்க்சுவாலிட்டியைக்கடைப்பிடிப்பான் 


7  என் பிறப்பே  ஒரு மரணத்தில் இருந்துதான் ஆரம்பித்தது . அம்மா  இறந்துதான் நான் பிறந்தேன் 



7லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  சீரியல்  கில்லரின்  பிளாஸ்பேக் கதை ஓகே , ஆனால்  கொலைக்கான காரணம்  வலுவாக  இல்லை 


2   நாயகன்  பயந்தாங்கொள்ளி . இருட்டு என்றால்   பயம் , ஆனால் 90%  சீன்களில்  அவர் இருட்டில் தான் துப்பறிகிறார் எப்படி ? 


3  சீரியல் கில்லர்  முகத்தை நாயகன்   பார்த்து விடுகிறார் . உடனே  கொலைகாரன்  எதனால் வாய்ப்பிருந்தும்  நாயகனைக்கொல்லவில்லை ? 


4  போலீஸ்  ஆபீசர்  என்ன   தான் கண்டு பிடித்தார்? .எல்லாமே   நாயகன் தான்  கண்டுபிடிக்கிறார் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பிரமாதமான  படம் எல்லாம் இல்லை ,அதே  சமயம்  மோசமும்  இல்லை .பார்க்கலாம் ரேஞ்ச் . ரேட்டிங்க் 2.5 / 5 


Detective Ujjwalan
Theatrical Release Poster
Directed byIndraneel Gopalakrishnan
Rahul G
Written byIndraneel Gopalakrishnan
Rahul G
Produced bySophia Paul
StarringDhyan Sreenivasan
Siju Wilson
Rony David Raj
CinematographyPremkrishna Akkattu
Sraiyanti Harichandran
Edited byChaman Chakko
Music bySongs:
Rzee
Sibi Mathew Alex
Score:
Sibi Mathew Alex
Production
company
Distributed byPhars Film
AP International
Release date
  • 23 May 2025[1]
Running time
124 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office₹5.56 crore[2]