அந்தக்காலத்துல சீத்தலைச்சாத்தனார்னு ஒரு புலவர் இருந்தாரு. அவர் ஏதாவது தப்பா எழுதிட்டா தன் தலைல தானே எழுத்தாணியால குத்திக்குவாரு. அப்படி குத்தி குத்தி மண்டை செப்டிக் ஆகி சீழ்த்தலை சாத்தனார் ஆகிட்டாரு, பேச்சு வழக்கில் பின் சீத்தலைச்சாத்தனார்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க . அதே மாதிரி ஒரு ஃபிகரு தான் என்ன தப்பா சொன்னாலும் அழகா தன் மண்டைல கொட்டிக்கறாரு ( நல்ல வேளை ... மண்டைல கொட்னாரு )
ஹீரோயின் மண்டைல கொட்டிக்கற அழகைப்பார்த்து ஹீரோவுக்கு லவ் வந்து தொலைச்சுடுது. 2 கேனங்களும் லவ் பண்ணுது . இதுல என்ன புதுமைன்னா அவங்க 2 வீட்டு பெற்றோர்களும் மாமா வேலை பார்க்காத குறையா அவங்க லவ்வுக்கு சப்போர்ட் பண்றாங்க . ( ஒரு சீன்ல மாடில இருக்கும் பெட்ரூம்க்கு 2 பேரையும் அனுப்பிட்டு 2 பெற்றோர்களும் கெக்கே பிக்கே னு இளிக்குதுங்க )
படத்துல வில்லனே இல்லைன்னு தெரிஞ்சதுமே நமக்கு சிச்சுவேஷன் தான் வில்லன்னு தெரிஞ்சுடுது. ஹீரோவுக்கு +2 படிக்கும்போது ஒரு லவ் இருந்த மேட்டர் ஹீரோயினுக்கு தெரிஞ்சுடுது , ரொம்ப சென்சிட்டிவ் கேரக்டரான ஹீரோயின் டூ விட்டுட்டு போய்டுது .
ஹீரோ அந்த + 2 படிக்கறப்ப லவ்வுன ஃபிகரை இப்போ மீட் பண்றாரு. 2 பேரும் லவ்வைப்புதுப்பிச்சாங்களா? இல்லையா? யார் கூட ஹீரோ ஜோடி சேர்றார்? என்பதே கதை
களவாணி படம் ஹிட் ஆனது இயக்குநர் சற்குணத்தால. விமல் தன்னால தான் அப்டினு நினைச்சுட்டு இருக்கார் போல. ரொம்ப அசால்ட்டு . என்னமோ புருஷனை மதிக்காத பொண்டாட்டி மாதிரி படம் முழுக்க ஏனோ தானோன்னு நடிச்சிருக்காரு . வசனம் பேசும்போது வாய்ஸ் மாடுலேஷன் சுத்தமா வர்லை . கவனம் செலுத்துனா நல்லது . மற்றபடி ஆள் பர்சனாலிட்டி ...
ஹீரோயின் தீபா ஷா , ஃபிகருக்கு கண் உதடு 2ம் ரொம்பச்சின்னது . ( இனி ஒண்ணும் பண்ண முடியாது , சும்மா சொல்லி வைப்போம் ) அடிக்கடி தலைல கொட்டிக்கும் சீன், வெட்கப்படுவது என ஸ்கோர் பண்றார். க்யூட்டான நடிப்பு , ஆனா பாப்பாவுக்கு கோபம் சரியா வர்லை . இன்னும் வளரனும் ( ஃபீலிங்க்ஸை சொன்னேன் )
போஸ்டர்ல மார்க்கெட் வேல்யூ ஏத்திக்க இன்னொரு ஹீரோயின் ஓவியா. நேர் கொண்ட பார்வை , நிமிர்ந்த நன்னடை வேணும்னு பாரதியார் சொன்னாலும் சொன்னாரு . ஓவியா டைட் டி சர்ட் போட்டுக்கிட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு படம் பூரா வருது . என்னமோ ஜிம்ல பெஞ்ச் பிரஸ் எக்சசைஸ் டூ செஸ்ட் பண்ணிட்டு அப்போதான் வெளில வர்ற மாதிரி ஒரு பில்டப் . செம கிளு கிளுப்பு . இவர் +2 கேர்ளா வர்றது கூட ஓக்கே , ஆனா விமல் கூட + 2 பாய்னு சொல்றது எல்லாம் ஓவரோ ஓவர்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. போஸ்டர் டிசைனும் , டைட்டிலும் செமயான லவ் ஸ்டோரி போல என எண்ண வைக்கும் யுக்தி , நல்லா ஒர்க் அவுட் ஆகி ஓப்பனிங்க்ல தியேட்டருக்கு காலேஜ் ஸ்டூடண்ட்சை வர வெச்சிருக்கு
2. சின்னத்தம்பி பெரிய தம்பி பிரபு சத்யராஜ் மாதிரி சின்ன தங்கச்சி பெரிய தங்கச்சி மாதிரி தீபா ஷா , ஓவியா வை முறையே ஹீரோயின் நெம்பர் 1 , நெம்பர் 2 வா புக் பண்ணது
3. இதே ஹீரோ விமல் நடிச்ச இஷ்டம் படக்கதையை கொஞ்சம் உல்டா பண்ணி இவர் கிட்டேயே கால்ஷீட் வாங்குனது
4. மனோபாலா காமெடி டிராக்கை டபுள் மீனிங்கில் எழுதி சி செண்ட்டர் ரசிகர்களை கவர முயன்றது
5. ராஜேஷ் யாதவின் ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்ஷன் 2ம் குட்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. ஓப்பனிங்க் சீன்ல ஹீரோ ஹீரோயின் 2 பேரும் பிளஸ் டூ ஸ்டூடண்ட்ஸா டவுன் பஸ்ல டிக்கேட் எடுக்காம பொய் செக்கிங்க்ல மாட்டிக்கறாங்க . ஓக்கே , ஆனா அதுக்காக 2 பேரையும் போலீஸ் ஜீப்ல ஏத்திட்டு போகுமா? வார்ன் பண்ணி விட்டுடுவாங்க . அதுவும் மாணவியை ஜீப்ல ஏத்திட்டு போக சட்டத்துல இடம் இல்லை
2. ஹீரோ கூட சைக்கிள் ல போக ஹீரோயின் தன்னோட சைக்கிளை ஹேர் பின்னால டயரை குத்தி பஞ்சர் பண்ணிக்குது. அது ஏன் காலம் காலமா அப்படியே பண்றாங்க? வால்ட்யூப்பை ஓப்பன் பண்ணி விட்டா காத்து இறங்கிட்டுப்போகுது . அவன் என்ன செக் பண்ணவா போறான்?
3. ஹீரோ ஃபோன்ல “ அங்கே தான் வந்துட்டு இருக்கோம் “னு பன்மைல தான் சொல்றாரு , எதுக்கு “ அவளையும் கூட்டிட்டு வா அப்டினு அம்மா சொல்வதா ஒரு வசனம் ?
4. லவ்வர்ஸ் ஹோட்டல்ல சாப்பிடுவதும் , காதலி லவ் பண்ணலைன்னு சொன்னதும் காதலன் தனித்தனி பில் என்பதும் உடனே காதலி கிஸ் கொடுப்பதும் பல படங்களில் பார்த்து சலித்த சீன். அந்த காமெடியை அவ்வளவு நீளமா மொக்கையா கொண்டு போகனுமா?
5. இந்த அபார்ட்மெண்ட்ல இருக்கும் எல்லா பசங்களுக்கும் நான் தான் டாக்டர் அப்டினு ஓவியா சொல்லும் டபுள் மீனிங்க் காமெடி சகிக்கலை
6. அமெரிக்கா போறவர் தன் சொந்தக்கார்ல போய் பார்க்கிங்க் பண்ணிட்டு ஃபிளைட்ல போய் அமெரிக்கால செட்டில் ஆவது செம காமெடி , சொப்பன சுந்தரி கார் மாதிரி ஸ்டேண்டில் விட்ட காரை யார் வெச்சுப்பாங்க? அதுக்கு டாக்சில போய் இறங்குவதா காட்டி இருக்கலாம்
7. க்ளைமாக்ஸ்;ல ஹீரோயின் ஹீரோவுக்கு ஃபோன் பண்றார், அவர் எடுக்கலை , பர பரப்பான சூழல்ல ஒரு எஸ் எம் எஸ் அனுப்ப மாட்டாரா/ ?
8. கதைக்களம் ஊட்டி, ஆனா ஒரு சீன்ல ஜெமினிகணேஷன் பங்களா வருது , அது கொடைக்கானல் ஆச்சே?
9. ஹீரோ ஃபாரீன்ல இருந்து ஒரு நாய் பொம்மை வாங்கிட்டு வர்றார். அதுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்? கதைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? எடிட்டிங்க்ல கட் ஆகிடுச்சா?
10 . ஸ்கூல் லவ்வை ஹீரோவே கேவலமா பேசுவதும் , இந்தக்காதலி இல்லைன்னா அந்தக்கதலி என்னும் விதமாய் ஹீரோ பல்டி அடிப்பதும் காதலை கொச்சைப்படுத்தும் உத்திகள்
11. ஸ்கூல் கலாட்டா என்ற பெயரில் நடக்கும் டீச்சர் - வாத்தியார் லவ் கூத்துகள் , காபி சாப்டியா? என்றால் மேட்டரை முடிச்சுட்டியா? என்ற டபுள் மீனிங்க் காமெடியை ஒரு லேடியே சொல்வது எல்லாம் மலிவான வியாபார உத்தி
மனம் கவர்ந்த வசனங்கள்
1. டியர் ஸ்டூடண்ட்ஸ் , லிசன் ( கவனிங்க )
அடேய்.. எங்கேடா பார்க்கறீங்க? போர்டை பார்க்கச்சொன்னா பொண்ணுங்களைப்பார்க்கறீங்க?
2. செக்கிங்க் ஆஃபீசர் - டிக்கெட் எங்கே?
போன ஸ்டாப்பிங்க்லயே இறங்கிப்போய்ட்டா..
3. என்னை மட்டும் இல்லை , என் பேப்பரைக்கூட உன்னால திருத்த முடியாது
4. உலகத்தில் 32% பிகருங்க மேரேஜ்க்கு முன்னமே கில்மா கோர்ஸ் கம்ப்ளீட்டட்.
அடடா.அதுல கூட 33%,கிடைக்கலையா?
5. எந்த ஒரு உறவும் அப்டேட் ஆகாம இருந்தா அந்த உறவே முறிய வாய்ப்பு இருக்கு
6. வயசுக்கு வராத பிகரும் வயாக்ரா யூஸ் பண்ணாத ஆணும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை
7. மரணதண்டனையை விடக்கொடுமையான தண்டனை - நம்மை உண்மையா நேசிச்சவங்களை நாம பிரிஞ்சு வாழ நேர்வதே
8. நீ பேசிட்டே இருக்கணும். நான் கேட்டுட்டே இருக்கணும். அதுக்குத்தான் நான் எதையும் சொல்லலை
9.நீ இவுங்க மகளோட குடும்பமே நடத்தினாலும், கண்டுக்காத குடும்பம் இது
10. உலகத்துலயே பெரிய அருவியான நயாகரா அருவியை தெரியாதவங்க கூட இருக்கலாம் , ஆனா வயாக்ரா தெரியாத ஆளே கிடையாது
11. என்னம்மா நோட்டு(ம்) கசங்கி இருக்கு> ?
`12. கண்டக்டர் கிட்டே பேசுனே ஓக்கே , டிரைவர் கிட்டேய்யும் பேசுறியே , அவர் நம்ம எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துடப்போறார்
13. அம்மா , அடிக்கடி அந்த மேஜர் அங்கிள் துப்பாக்கியை காட்டி பயப்படுத்தறார்
14. ஃபாரீன்ல கில்மா எல்லாம் ஒரு மேட்டரே இல்லைங்க . ஜஸ்ட் காஃபி சாப்பிடற மாதிரி
லேடி - தம்பி , அப்போ எத்தனை காபி சாப்டிருக்கீங்க?
15. எனக்கு காபி சாப்பிடற பழக்கமே இல்லைங்க
கல்யாணத்துக்கு அப்புறமாவாவது சாப்டுறு, வேற யாராவது உன் காபியை குடிச்சுடப்போறான்
16. நீ எனக்கு தெரிஞ்சதைப்பேசுனாலும் , தெரியாததைப்பேசுனாலும் எனக்கு அது புதுசாத்தான் இருக்கும்
17. பொண்ணுங்க ஏன் ஆபத்துல இருந்து அவங்க காதலனை க்காப்பாத்தறாங்க?
மேரேஜ்க்குப்பிறகு தான் சாகடிக்க வேண்டிய ஆளை வேற யாரும் சாகடிக்கக்கூடாதுன்னுதான்
18. வீட்டுக்கு ஒரு மேரேஜ் புரோக்கர் ஓக்கே, ஆனா உங்க வீட்ல வீடே புரோக்கர் மயமா இருக்கே?
19. வெட்கமா இருக்கு
ஏன்? வெட்கம்னா உனக்குப்பிடிக்காதா?
வெட்கத்தைப்பிடிக்காத பொண்ணு உலகத்துலயே இல்லை
20 . கல்யாணம் ஆகும் வரை ஒரு செகண்ட் கூட சலனப்படாத , சலனப்படமாட்டேன்கற நேர்மையோட நான் இருப்பேன்
21 இந்த உலகத்துல எத்தனை லவ் ஃபெயிலியர் ஆனாலும் மீண்டும் மீண்டும் லவ் தோன்றக்காரனம் சரக்கு இருக்கும் தைரியம் தான்
22. உன்னைப்பார்த்தா லவ் ஃபெயிலருக்காக குடிக்கற மாதிரி தெரியல , குடிக்கறதுக்காகவே லவ் ஃபெயிலியர் ஆன மாதிரி தோணுது
23. பசங்க சைக்காலஜி என்னன்னா மிஸ்டு கால் வந்தா உடனே கூப்பிட்டு பேசிடனும் , அது ஒரு ஃபிகரா இருக்கக்கூட சான்ஸ் இருக்கே..?
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 38
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்
சி பி கமெண்ட் - ஓவியாவின் தீவிர ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம், மற்றபடி படத்துல ஒண்ணும் கிடையாது . அரியலூர் நடராஜா தியேட்டர்ல இந்த டப்பா படத்தை பார்த்தேன் . தியேட்டரும் டப்பா . தமிழ் நாட்லயே கேண்ட்டீன் கூட இல்லாத ஒரே தியேட்டர் இதுதானாம், டெண்ட் கொட்டாய்ல கூட கேண்ட்டீன் இருக்கும் . ஹூம்.. படம் பிப்ரவரி 14 க்கே ரிலீஸ் ஆகிடுச்சு, இப்போதான் நான் பார்த்தேன்