Saturday, February 09, 2013

இண்ட்டர்நேஷனல் ஃபிகர் ஜோக்ஸ்

1.உன் தலை முடியை மட்டும் நாவிதர் திருத்தட்டும் , உன் தலை எழுத்தை நீயே திருத்து

-----------------------------

2. நிலவைப் பார்க்கையில் நீ என்னை விட்டு விலகி இருப்பது போலவும் , என்  நிழலை பார்க்கையில் நீ என்னுடனே இருப்பது போலவும் உணர்கிறேன்


-------------------------------

3. மாப்ளையை ஏம்மா உனக்கு பிடிக்கலை?

அவர் பேரே வளையா பதி.. எந்த வேலையையும் வளைஞ்சு செய்ய மாட்டார்.. அப்புறம் யார் சமையலை கவனிக்கறது?

-------------------------------

4. வறுமைக்கோட்டுக்கு மேல் வாழ்பவர்க்கான அடையாளம் தினசரி வருமானம் ரூ 35 # அட போங்க, ஒரு லிட்டர் பாலே ரூ 32!!!

-------------------------------

5. நயன் தாரா குளிக்கற சி டி செம சேல்ஸாமே?

அலையாதே ஸ்ரீராமச்சந்திரா தெலுங்கு படத்துல சீதையா தீக்குளிக்கிற சீன் தான் அது

---------------------------------------

6. நா முத்துக்குமார் ஏன் கடுப்பா இருக்காரு?

அணிலாடும் முன்றில் தொடர்ல கடைசி வரை விஜய் டேன்ஸ் வர்லையே ஏன்?ன்னு கேட்டாங்களாம்

----------------------------------------

7. சார். நீங்க ஒரு சினிமாப்பைத்தியமா?

ச்சே ச்சே பல சினிமா பார்க்கறேன், அதனால பல சினிமாப்பைத்தியம்னு வேணா சொல்லலாம்

------------------------------------------------

8. உனக்குத்தான் பல் பள பள -னு இருக்கே, அப்புறம் ஏன் பல் டாக்டர்கிட்டே போறே?

அவர் க்ளினிக்ல 12 நர்சுங்க தள தளன்னு இருக்கே?

------------------------------------------

9. நீங்க சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்துபவரா?

ஆமா, அதுக்காக என்னை சந்தர்ப்பவாதின்னு சொல்லிடாதீங்க.. ஏதோ அசந்தர்ப்பமா அப்டி ஆகிடுது

-----------------------------------------

10. அதெப்படி படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே, வெற்றி நடை போடுகிறதுன்னு விளம்பரம் போடுறாங்க!

அதுக்காக வெட்டி நடை போடுதுனு சொல்ல முடியுமா?


--------------------------------------------

11. எசமானி அம்மான்னு என்னை கூப்பிடாதே.

..வேலைக்காரி - ஓக்கே அக்கா, உங்க வீட்டுக்காரர் கூட இதையே தான் சொன்னாருங்கோவ்

-------------------------------------------

12. யாரங்கே?

மன்னா! யாருமே இல்லை இங்கே.. சனிக்கிழமை -எல்லாரும் டாஸ்மாக்ல மட்டை ஆகிட்டாங்க

----------------------------------------------

13. தம்பி.. ஏன் என்னையே சுத்திட்டு இருக்கே?

ஹி ஹி மேடம், நான் உங்க விசிறி மேடம்.. ஃபேன்னா சுத்தனும் தானே?அதான்

---------------------------------------

14. மாப்ளையை ஏம்மா உனக்கு பிடிக்கலை?

அவர் பேரே வளையா பதி.. எந்த வேலையையும் வளைஞ்சு செய்ய மாட்டார்.. அப்புறம் யார் சமையலை கவனிக்கறது?

--------------------------------------------

15. மேடம், நீங்க யாரு?

என்னையே யாருன்னு தெரியலையா?

ஹலோ, தெரியாம தானே கேக்கறோம்,எல்லாரும் தெரிஞ்சிவெச்சுக்க நீங்க என்ன இண்ட்டர்நேஷனல் ஃபிகரா?

----------------------------------------

16. மேடம், நடுநிசிக்கீச்சுன்னு சொல்லிட்டு அதை ஏன் பகல்ல போடறீங்க?

  நடு நிசி நாய்கள் படத்தை நீங்க மேட்னி ஷோ பாக்கலையா? அது மாதிரிதான்

-----------------------------------------

17. ஹலோ ஏன் எப்போ பாத்தாலும் மிஸ்டு கால் குடுக்குறீங்க ?

XQS மீ மிஸ்.. நீங்க மிஸ் தானே? மிஸ்டு கால் தான் தர முடியும்? மிசஸ் காலா தருவாங்க?

--------------------------------------

18. ஹலோ, எதுக்கு லோ லோ ன்னு கத்திகிட்டு இருக்கீங்க?

எனக்கு லோ பிரஷர் அதான்.. இதே ஹை பிரஷரா இருந்தா ஹை ஹை னு குதிச்சிருப்பேன்

---------------------------------------

19. மேடம், தமிழ்ப்படம், தெலுங்குப்படம் என்ன வித்தியாசம்?


தமிழ்ப்படம்னா மிதமான கவர்ச்சி காட்டுவேன், தெலுங்குப்படம்னா அபரிதமான கவர்ச்சி காட்டுவேன்

--------------------------------------

20. 52 ரூபாய்க்கு ஒரு ஜோடி ஷூ - அடிடாஸின் புதிய அறிமுகமாமே?

இனி எந்த ஃபிகராவது செருப்பு பிஞ்சுடும்னு வசனம் பேசட்டும், பார்த்துக்கறேன்

---------------------------------------