ஒரு படத்துக்கு திரைக்கதை எப்படி இருக்கனும்னு பார்க்க ஆசையா?ஒரு பஸ் பயணம் நம் மனசில் நீங்கா இடம் பெற நினைக்கறீங்களா.?ஒரே படத்தில் அழகிய 2 காதல் கதைகளை வேறு வேறு கோணத்தில் ரசிக்க எண்ணமா.? சாலை விதிகளை மதிக்காம வேகமா போகும் ஆட்களை திட்டும் நீங்கள் இனி என்றென்றும் அவர்கள் மேல் அனுதாபம் கொள்ள நினைப்பு இருக்கா? இறக்கப்போகும் மனிதர்களின் கடைசி கட்ட ஆசைகளை கண்ணீரோடு பார்க்க துடிப்பா? நீங்கள் அவசியம் காண வேண்டிய படம்தான் எங்கேயும் எப்போதும்.
ஏ ஆர் முருகதாஸ்ட்ட இயக்குநர் ஒன் லைன் கதை சொல்லும்பொதே இது செம ஹிட் ஆகற சப்ஜெக்ட்னு அவர் புரிஞ்சிருப்பார் போல.. அதான் துணிச்சலா தயாரிச்சுட்டார்...
படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே 2 பஸ் மோதறதை , அதன் பயணிகள் 80% பேர் இறப்பதை , பலர் படுகாயம் அடைவதை காட்டி விட்டு 4 மணீ நேரம் முன் என சப் டைட்டிலுடன் கதை சொல்லும் யுக்தியை தொடங்கும் போதே டெம்போ ஏறுது. இயக்குநர் சரக்குள்ள ஆள்னு தெரிஞ்சுடுது.
சென்னைக்கு முதல் முதலா இண்ட்டர்வியூவுக்கு வரும் அனன்யா - புது முகம் சர்வா ஒரு ஜோடி. அனன்யாவின் அநியாய அப்பாவித்தனமும்,ஓவர் முன் ஜாக்கிரதையும் ஹீரோவுக்கு எரிச்சலை கொடுத்தாலும் ஆடியன்ஸூக்கு
புன்னகையையே தருகின்றன...அனன்யா சென்னை வந்து ஒரு இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணி அக்கா வீட்டுக்கு போவதை மட்டும் போர் அடிக்காமல் 48 நிமிடம் சுவராஸ்யமான சம்பவங்களுடன் சொன்னதற்காகவே இயக்குநரை பாராட்டலாம்..

அதிலும் இருவரும் நடந்து போகும்போது அனன்யா தன் ஒரு கையை மட்டும் முதுகுப்பக்கம் மடக்கி போவது செம .. ( கை அவர் மேல் பட்டுடக்கூடாதாம்.. )மெல்ல மெல்ல அவர் மேல் காதல் கொள்வது அழகு... இவர்களது காதல் கதை நாம் பக்கத்தில் இருந்து பார்ப்பது போலவே பிரமதமாய் செட் ஆகி விடுகிறது..
அடுத்து ஜெய் - அஞ்சலி.. காதல்.. அஞ்சலி தெனாவெட்டான பொண்ணு, ஜெய் கொஞ்சம் அப்பாவி, பயந்தாங்கொள்ளி...தன்னை விட 4 மாதம் மூத்த ஃபிகரான எதிர் வீட்டு அஞ்சலியை அவர் வாங்க போங்க என்று அழைக்கும் அழகும், அஞ்சலி அவரை வா போ என அசால்ட்டாக அழைப்பதும் அசத்தல்.
அஞ்சலி ஜெய்யை ஹாஸ்பிடல் அழைத்துப்போய் எய்ட்ஸ் டெஸ்ட் எடுப்பது, ஜெய்யின் சம்பளப்பணத்திலேயே ஜெய்க்கே டிரஸ் எடுத்துக்கொடுப்பது,காபி ஷாப் போவது, அவர் வேலை செய்யும் இடத்துக்கே போய் அலப்பறை செய்வது என அஞ்சலியின் ராஜாங்கம் படம் நெடுக.. அங்காடித்தெருவில் ஃபோர் அடிச்சவர் இதில் சிக்சர்!!!!!!!!!!!!!
எல்லோரையும் விட படத்துல எல்லார் மனதையும் பாதிக்கும் இரு கேரக்டர்கள் பற்றி சொல்லியே ஆகனும்.. மனைவி கர்ப்பம் ஆனதும் ஃபாரீன் வேலைக்குப்போகும் கணவன் 5 வருஷம் கழிச்சு திரும்பி வர்றான்.. அவர் அதுவரை நேரில் பார்க்காத தன் மழலையை ஃபோன் மூலம் மட்டும் பேசி கொஞ்சி மகிழ்பவர்...அடிக்கடி எப்போப்பா வருவே? என தன் குழந்தை கேட்கும்போது சமாளிப்பவர்.. அவர் விபத்தில் இறந்த பின் அந்த குழந்தை ஃபோன் செய்கிறது.. கல் நெஞ்சையும் கரைக்கும் காட்சி...
மணமான தம்பதி- தன் மனைவியை பஸ் ஏற்ற வரும் கணவன் அவளைப்பிரிய மனம் இன்றி கொஞ்ச தூரம் வந்துட்டு பின் இறங்கிக்கொள்வதாய் சொன்னவன் பின் இறப்பது பயங்கரம்.!
எங்கேயும் எப்போதும் நம் காதில் ஒலிக்கும் வசனங்கள்
1. XQS மீ, உங்க பொண்ணுக்கு சாக்லெட் தரலாமா?
அவ புது ஆளுங்க யார் குடுத்தாலும் வாங்க மாட்டா!!!!
இல்லம்மா, வாங்கிப்பேன்!!!!!!!!!
2. மேடம், உங்களை சீட் மாறி உட்கார வைக்கறேன்.. வெயிட் ப்ளீஸ்!!!!
யோவ் கண்டக்டர்! அவ உன்னை கேட்டாளா? சரியான பி ஜே பி ய்யா!!
3. நீங்க தம் அடிப்பீங்களா? ம்
தண்ணி அடிப்பீங்களா? ம்
அப்போ அந்த 3 வது தப்பு?
கொள்ளையா? கொலையா?
4. இங்கே பாரம்மா, சென்னைல எல்லாரும் பார்க்க டீசண்டா தான் இருப்பாங்க.. பழைய படத்துல வர்ற மாதிரி கன்னத்துல மருவும்,கழுத்துல கர்ச்சீப்பும் கட்டி இருக்க மாட்டாங்க..
5. ஆமா, நீ ஏன் சிவப்பு கலர் டிரஸ்?
என் ஆள் சிவப்பு கலர் டிரஸ்... அதான்.. ஆமா நீ ஏன் மறுபடி ஒரு கலர் மாத்தறே?
எனக்கு 2 லவ்வர்..
நீ ஏன் காக்கி யூனிஃபார்ம்லயே வேலைக்கு வந்துட்டே?
ம், என் ஆள் பாலிடெக்னிக்ல படிக்கரா, அவளுக்கு இதான் யூனிஃபார்ம்..
6. ஏண்டா? அம்மாவுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாம சிக்னல் காட்டுவியா? லூஸா? நீ?
7. இங்கே பாரு.. இது வரை எப்படியோ? லவ் பண்ண ஆரம்பிச்சுட்டே இல்ல? இனி பர்மிஷன் லீவ் எல்லாம் இருக்கனும். எடுக்கனும்.. புரியுதா?
8. ஆஃபீஸ்ல இருந்து வர்றப்ப சம்பள கவரை கொண்டாந்துடு..
எதுக்குங்க?
அதான் என்னை லவ் பண்றதா சொல்லிட்டியே?எதுக்கு கேள்வி எல்லாம்/
9. ஆமா.. என்ன உன் உதடு சிவப்பா இருக்கு? லிப்ஸ்டிக்கா போடறே? ஆம்பள அதை போடலாமா?
இல்லீங்க. குச்சி ஐஸ் சாப்பிட்டேன்..
10. என்னங்க.. இந்த பேண்ட் கிழிஞ்சிருக்கு.. வேணாம்.. வேற எடுங்க..
டேய் லூசு.. அதுதான் ஃபேசனே!!!
11. என்னங்க? காஃபி சூடா இல்லாம ஜில்னு இருக்கு?
டேய் கேனை.. கோல்ட் (COLD) காபி அப்படித்தான் இருக்கும்..
12. என்னது? ஒரு காபி 80 ரூபாவா/ அய்யோ..!!!பீரே 80 ரூபாதான்..
அப்போ நீ பீர் அடிப்பியா?
சத்தியமா இல்லீங்க!!!!
நான் மட்டும் ஆம்பளையா இருந்தா உலகத்துல இருக்கற எல்லா சரக்கும் டேஸ்ட் பார்த்திருப்பேன்..
13. இப்போ பார்த்துட்டு வந்தியே? அவர் யார்னு தெரியுமா? உனக்கு?
ஏட்டு?
அது உனக்கு.. எனக்கு?
ஏங்க.. எனக்கு ஏட்டுன்னா உங்களூக்கும் ஏட்டாத்தானே இருக்க முடியும்?உங்களூக்கு மட்டும் டி ஐ ஜியாவா இருக்கப்போறார்?
ஜோக்கு?
இல்ல, உங்களூக்குப்பிடிக்குமேன்னு......
அவர் தான் எங்கப்பா!!!!!!!!
14. உங்க ஊர்ல எல்லாம் பொம்பளைங்க சமைக்க மாட்டாங்களா?
ஏன் கேட்கறே?
ஹோட்டல்ஸ்ல இத்தனை பொம்பளைங்க?
அவங்க எல்லாம் வேலைக்குப்பொறவங்க..
எங்க ஊர்லயும் வேலைக்குப்போற பொண்ணுங்க சமைச்சு , புருஷனுக்கு சாப்பாடும் குடுத்து விடுவாங்க..
15. முதல்ல உங்களை நம்பல்.. அதனால பயமா இருந்தது.. இப்போ உங்களை நம்பறேன் ஆனா என்னை நம்பலை.. எனக்கே என்னைக்கண்டு பயமா இருக்கு.. அதான் உங்களோட ஆட்டோல ஒண்ணா வர்லை..
16. இங்கே பாருங்க.. இப்போ நீங்க சிரிக்காதீங்க.. என் ஆஃபீஸ் கொலீக்ஸ் கேட்டா என்னை தப்பா நினைப்பாங்க..
டேய் நாயே.. அவங்க சிரிக்கலைன்னாலும் தப்பா தான் நினைப்போம்..
17. உங்க ஆள் ரொம்ப நல்லவன்.. எனக்குத்தெரிஞ்ச எல்லா மொழிலயும் அப்ரோச் பண்ணிட்டேன். ஆள் கண்டுக்கவே இல்லை.. அப்புறம் என்னைப்பற்றி நல்லாத்தெரிஞ்ச ஒரு கேனையை கட்டிக்கிட்டேன்.. அது அதோ அவன் தான்..
18. நான் செம அழகு இல்லைதான். தனியாப்பார்த்தா.. ஆனா அவன் கூட வெச்சு கம்ப்பேர் பண்ணிப்பாருங்க.. நான் ஓரளவு அழகுதான்,,
19. ம்.. சரி சரி.. என்னை கட்டிக்கோ!!!
இல்லைங்க , கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கறேன்.
சரி.. நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ. நான் இப்பவே கட்டிக்கறேன்..
20. சரி என் மேல கோபப்படு பார்க்கலாம்?
சாரிங்க.. முடியாது..
1.உன் பேரே தெரியாது. 2. சொட்ட சொட்ட நினைந்துவிட்டாய்3. கோவிந்தா என 3 பாடல்கள் ஆல்ரெடி ஹிட் லிஸ்ட்டில்.
ஒளிப்பதிவு கலக்கல்.. பெரும்பாலான காட்சிகள் பஸ்ஸுக்குள் தான் என்றாலும் நீட் ஃபோட்டோகிராஃபி.. 2 பஸ்களும் மோதும் காட்சிகள், விபத்து நடக்கும் சந்தர்ப்பம் 2ம் அசத்தல்..
படத்துக்கு பின்னணி இசை பக்க பலம்..
கே பாலச்சந்தர் படம் போல் ஒவ்வொரு கேரக்டரையும் மனசில் தங்க வைக்கும் டெக்னிக் ஓக்கே!
இயக்குநரிடம் சில சந்தேகங்கள்
1. ஓப்பனிங்க்லயே பஸ் ஆக்சிடெண்ட் ஆகப்போகுதுன்னு சொல்லிட்டதால நிதானமா வர்ற காதல் காட்சிகள் கொஞ்சம் பட படப்பை ஏற்படுத்துது.. அதாவது அழகான காதல் காட்சிகள் வந்தாலும் மனம் அதுல ஒன்றிட முடியல்.. அதுக்குப்பதிலா விபத்து நடக்கப்போவதை முன் கூட்டியே சொல்லாம விட்டிருந்தா சஸ்பென்ஸுக்கு சஸ்பென்ஸூம் ஆச்சு.. காதல் காட்சிகளில் ஆடியன்ஸ் இன்னும் நிதானமா மனம் லயிச்சு பார்த்திருக்கலாம்..
2. உடல் தானம் பற்றிய விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட காட்சி தான் என்ராலும் ஒரு பெண் அவள் என்னதான் நர்ஸா இருந்தாலும் லவ் புரொப்போஸ் பண்ண அடுத்த நிமிஷமே அவனை உடல் தானம் பண்ண ஹாஸ்பிடல் அழைத்துச்செல்வாளா?
3. ஜெய் அஞ்சலிக்கு சிக்னல் காட்டிட்டு பல் துலக்கும் காட்சியில் சுவர்க்கடிகாரம் 6.30 என காட்டுது.. அடுத்த ஷாட்ல 7.40 என காட்டுது.. அதுக்கு அடுத்த காட்சில மறுபடி 6.35 காட்டுது.. எடிட்டிங்க் ஃபா;ல்ட்டா?
4. க்ளைமாக்ஸில் ஜெய்க்கு தலையில் அடிப்பட்டு காதில் ரத்தம் வந்து சீரியஸ் என தெரிந்தும் அஞ்சலி அவருடன் செல்லாமல் இங்க்ர்ர்யே தங்கி மற்ரவர்களுக்கு உதவி செய்வது செயற்கையா இருக்கே? தனக்கு மிஞ்சித்தானே தான தர்மம்?
5. க்ளைமாக்ஸில 2 செட் லவ் ஜோடிகள்ல அந்த சைடுல ஒரு ஆண், இந்த சைடுல ஒரு பெண்ணை உயிர் இழக்க வைத்து விட்டு ஆல்ட்டர்நேடிவ் ஜோடியை ஜோடி சேர்க்கலாமா? என திரைக்கதையில் தடுமாறியிருக்கத்தேவை இல்லை..
6.அனன்யாவுக்கு அவர் லவ்வர் பற்றி எந்த விபரமும் தெரியாது.. ஊர்ப்பெயர் மட்டும் தான் தெரியும்.. ஆனா அவரைப்பார்க்க எப்படி கிளம்பறார்? ஆனா அவர் ஏன் அனன்யாவைப்பார்க்க அவரோட ஊர்க்கு வர்லை?
சாலை வாகனங்களின் வேகத்தைப்பற்றிய நல்ல விழிப்புணர்வுப்படம் ,கமர்ஷியலாய்!!!!!!!
ஏ செண்ட்டர்களில் 60 நாட்கள் பி செண்ட்டர்களில் 50 நாட்கள். சி செண்ட்டர்களில் 20 நாட்கள் ஓடும்...
எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 44
எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று
சி.பி கமெண்ட் - மென்மையான மனம் கொண்ட காதலர்கள் பார்க்க வேண்டிய அசத்தலான திரைக்கதை . மார்க் - 50
ஈரோடு தேவி அபிராமியில் படம் பார்த்தேன்
Aடிஸ்கி - பட விமர்சனத்துக்கு சம்பந்தம் இல்லாத ஒரு மேட்டர்.. அனன்யா பார்க்க நெக்ஸ்ட் டோர் கேர்ள் போல இருந்தாலும் அவரை ரசிக்க முடியவில்லை.,. ஏதோ சித்தி பொண்ணு, பெரியப்பா பொண்ணு போல இருக்கார்.. ஃபிகர்னா பார்த்ததும் மாமா பொண்ணு எஃப்க்ட் வேணும். பை சமந்தமில்லாம டிஸ்கி போடுவோர் சங்கம்
டிஸ்கி 2 -