கடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவிட்டேன் படிப்பார் இல்லை,அப்ப்டியே படித்தாலும் பின்னூட்டம் இடுவார் இல்லை என புலம்புவரா நீங்கள்,அப்போ நீங்க நம்ம ஆளு.பதிவுலகில் நான் ஒரு கத்துக்குட்டி.72 நாட்கள் மட்டுமே ஆகிறது.இதில் நான் கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி எப்படி அவரது குடும்பத்துக்குள் பதவிகள்,பணங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறதோ,அதே போல் இந்த சங்கத்து நண்பர்களும் நமக்குள் உதவிக்கொள்ளலாம்.தலைவர், உப தலைவர் என யாரும் கிடையாது.அனைவரும் உறுப்பினர்களே.
1.நமக்கு யார் கமெண்ட் போட்டாலும் உடனே அவர்து ஃபோட்டோவை க்ளிக்கி அவர்து பதிவில் ஒரு கமெண்ட் போடவும்.ஃபாலோயராக சேரவும்.இந்தத்திட்டத்திற்கு மொய்க்கு மொய் என பெயர்.
2.நீங்கள் கமெண்ட் போட்டு விட்டு வேலைக்கு சென்று விடுகிறீர்கள்,பிறகு வந்து பார்க்கும்போது 4 கமெண்ட் வந்திருக்கிறது என்றால் உடனே 4 பேருக்கும் நன்றி என பொத்தாம்பொதுவாக நன்றி கூற வேண்டாம்.தனித்தனியாக நன்றி கூறவும்.
3.அப்படித்தனித்தனியாக நன்றி கூறுவதில் ஒரு டெக்னிக் உள்ளது.8 கமெண்ட் ஆகி விடும்.தமிழ் மணம் சைடு முகப்பில் 6 கமெண்ட் வாங்கிய பதிவு இடம் பெறும்.அதைப்பார்த்து அதிக பார்வையாளர்கள் வருவார்கள்.
4.உங்கள் பக்கத்து வீட்டு ஃபிகர் பெயரில்,முறைப்பெண்,அல்லது முறைக்காத பெண் பெயரில் 2 அல்லது 3 டூப்ளிகேட் மெயில் ஐ டி கிரியேட் செய்து கொள்ளவும்.நீங்கள் பதிவு போட்ட 2 வது நிமிஷமே அவர்கள் மெயில் ஐ டி யில் போய் மீ த ஃபர்ஸ்ட்,முத வடை எனக்குத்தான் என்று ஏதாவது ஒரு கமெண்ட் போட்டு விட்டு மீண்டும் உங்கள் மெயில் ஐ டி யில் போய் நன்றி சொல்லவும்.இப்போ 6 கமெண்ட் ரெடி.
5. பதிவு போடுவதை ஒரு கடமையாக வைத்துக்கொள்ளுங்கள்.வாரம் மினிமம் 3,அதிகம் 6 பதிவு போடவும்.அதே போல் ரெகுலராக ஒரே டைமில் பதிவு போடுங்கள்.உதாரணமாக காலை 7 மணி என்றால் ரெகுலராக அதே டைமில் போடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
6.உங்கள் பதிவு சினிமா,அரசியல்,சமூகவிழிப்புணர்வு என கலவையாக இருக்கட்டும்.அனைத்துப்பார்வையாளர்களையும் வரவைக்க அது உதவும்.
7.ஜெ கொடநாட்டில் போய் ஓய்வெடுப்பது மாதிரி 7 நாட்கள் திடீர் என காணாமல் போய் விடாதீர்கள்.அப்படியே போக வேண்டிய சூழல் வந்தால் ஒரு நெருங்கிய நண்பர் கம் பதிவரிடம் உங்க பாஸ்வோர்டை குடுத்து பிளாக்கை ஒப்படைத்து கமெண்ட்டுக்கு பதில் கமெண்ட் போட வைய்யுங்கள்.
8.பதிவிட்டால் மட்டும் போதாது,மார்க்கட்டிங்க் வேணும்.சன் டி வி எந்த டப்பா படம் எடுத்தாலும் விடாமல் விளம்பரம் செய்து 5 நாள் படத்தை 30 நாள் படம் ஆக்குவது போல் முக்கிய புது பதிவர்களின் மெயில் ஐ டிக்கு ஒரு லிங்க் அனுப்புங்கள்.100 மெயில் ஐ டிக்கு அனுப்பி (க்ரூப்பாக) விளம்பரம் செய்தால் 25% பேர் வந்தாலும் லாபம்தான்.
9.தமிழ்மணம் முகப்புப்பக்கத்தின் கடைசியில் போய் பாருங்கள்,லேபிள்கள் இருக்கும்.உங்கள் பதிவை வகைப்படுத்துங்கள்.சினிமா,அரசியல்.நகைச்சுவை,நையாண்டி,சமூக விழிப்புணர்வு என.அதில் ஏதாவது ஒரு தலைப்பை இடவும்.
10.தி.மு.க மாதிரி ஓட்டு வாங்க நம்மால் பணம் தர முடியாது.ஆனால் ஓட்டுப்போடலாம்.இண்ட்லி,தமிழ்மணம்,உலவு ஆகியவற்றில் நுழைந்து படப்படவென எல்லாருக்கும் ஓட்டுப்போடவும்.மொய் திரும்ப வருமா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம்.
11.கம்ப்யூட்டர் நிறுவனங்களில் உங்கள் நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் உங்கள் சைட்டை (பிளாக்கை) அறிமுகபடுத்தி ஃபாலோயர் ஆக்கவைக்கவும்.ஒரே சமயத்தில் 10 ஃபாலோயர்ஸ் கிடைக்கும்.
12.பின்னூட்டம் இடும்போது முடிந்தவரை பாசிட்டிவ்வாக எழுதவும்.அது சரி இல்லை,இது சரி இல்லை என குறை சொல்ல வேண்டாம்.அப்படி கூறுவதாக இருந்தால் தனி மெயிலில் கூறவும்.
13.சினிமா விமர்சனம் எழுத முடிவு எடுத்தால் ஏற்கனவே அந்தத்துறையில் ஃபேமஸ் ஆன கேபிள் சங்கர் சார்,உண்மைத்தமிழன் அண்ணன்,ஜாக்கி சேகர் அண்ணன்,ஹாலிவுட் பாலா அவர்கள்,அஜயன் பாலா அவர்கள் பதிவை படித்து அவர்கள் ஸ்டைலை காப்பி அடிக்காமல் உங்களுக்கு என தனி பாணியை அமைத்து எழுதவும்.
14.காமெடி,நகைச்சுவை எழுத முடிவெடுத்தால் காமெடியில் கலக்கி வரும் சேட்டைக்காரன் அண்ணன்,குசும்பன் சார்,பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன்,பரிசல்காரன்,வால்பையன் போன்றவர்கள் பிளாக்கை படித்துவிட்டு,பயிற்சி எடுத்து தனி பாணியில் பதிவு போடவும்.
15.தனிப்பட்ட தாக்குதல்களை,அநாகரீக வார்த்தைகளை தவிருங்கள்.நாம் நண்பர்களை உருவாக்கவே வந்தோம்,எதிரிகளை உருவாக்க அல்ல.
16.தனி நபர் அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களை தாகும் பதிவை படிக்க நேர்ந்தால் பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும்,அல்லது உள்ளே ஐயா,பிரசண்ட் சார் என ஒரு அட்டண்டன்ஸை போட்டு விட்டு எஸ்கேப் ஆகுங்கள்.
17கவிதை எழுதுவதை குறையுங்கள்.இங்கே ஏற்கனவே ஏராளமான கவிஞர்கள் கோலோச்சி இருக்கிறார்கள்.மீறி எழுதினால் பனித்துளி சங்கர்,கவிதைக்காதலன்,கே ஆர் பி செந்தில் சார் போன்றவர்கள் பாணியிலிருந்து விலகி புதுசாக எழுதுங்கள்.
18.அலாஸ்கா ரேங்கிங்க்கை உங்கள் பிளாக்கில் பொருத்தவும்.மினிமம் தினமும் 250 பேர் வந்தால் போதும்.
19.மிட்நைட் 12 மணிக்கு பதிவு போட்டால் பிரமாதமான ரிசல்ட் கிடைக்கும்,காரணம் இங்கே இரவு எனில் ஃபாரீனில் பகல்.அது போக நமது பதிவு அதிக நேரம் ஆன்லைனில் வைத்திருக்க அது ஒரு குறுக்கு வழி.அந்த நேரத்தில் எழ முடியவில்லை எனில் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு போடவும்.
20.ட்விட்டர்,ஃபேஸ்புக்,கூகுள் பஸ் என எல்லாவறிலும் உறுப்பினர் ஆகி உங்கள் பதிவை இணையுங்கள்.இது ஒரு நல்ல மார்க்கெட்டிங்க் டெக்னிக்.
21.பெண் பதிவாளர்களை மரியாதைக்குறைவாக பேசுவது,தேவை இல்லாத மற்றும் எல்லை மீறிய பின்னூட்டம் இடுவது,அவர்கள் பர்சனல் விஷயங்களைப்பற்றி எழுதுவது இவற்றை நிச்சயம் தவிருங்கள்.
22.எழுதப்பட்ட பதிவுகளை நல்லவற்றை செலக்ட் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் ஏதாவது துட்டு கிடைக்கும் .(நெட் கனெக்ஷனுக்கு பணம் கட்டனுமே?)
23.பி எஸ் என் எல் பிராட்பேண்ட் கனெக்ஷன் இருப்பதில் சிறந்தது,அதில் அன்லிமிட்டட் ரூ 750 திட்டத்தில் சேருங்கள்.நான் பணத்தை மிச்சம் பண்றேன் பேர்வழி என ரூ 500 திட்டத்தில் சேர்ந்தேன்.விடிகாலை 2 லிருந்து 8 மணி வரை இலவசம், மற்ற டைமில் காசு என்ற திட்டத்தில்,எனக்கு வந்த பில் ரூ 2400.
24.பழைய மாடல் சிஸ்டம் ஆக இருந்தால் கண் பாதிப்பை தவிர்க்க கண்ணாடி அணியுங்கள் அல்லது அதற்கென விற்கும் கிளாஸ் (ரூ 125) வாங்கி சிஸ்டத்தில் பொறுத்தவும்.
25.எல்லாவற்றையும் விட முக்கியம் பதிவு,நெட் என அதற்கு அடிமை ஆகி விடாமல் குடும்பத்திற்கும்,குழந்தைகளை கொஞ்சுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
பி.கு. இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு பதில் மொய் கமெண்ட்டாகவும்,ஓட்டாகவும் விழும்.மேலும் அவர்கள் ஃபாலோயர் ஆகவும் மாறி விடுவேன்.
