Showing posts with label MUMBAI POLICE ( MALAYALAM) – சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label MUMBAI POLICE ( MALAYALAM) – சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Sunday, October 11, 2020

MUMBAI POLICE ( MALAYALAM)2013 – சினிமா விமர்சனம் ( சைக்கோ க்ரைம் த்ரில்லர் )

 


MUMBAI POLICE ( MALAYALAM) – சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

 

ப்ரித்விராஜ்  ரசிகர்களை  க்ளைமாக்சில்  அதிர்ச்சியில் ஆழ்த்திய படம். இந்தப்படத்தைப்பற்றி முதல்லயே கேள்விப்பட்டிடிருந்தாலும்  டைட்டில் , போஸ்டர்  டிசைன்  எல்லாம் பார்த்து  இதுவும் வழக்கம்  போல  சிங்கம்  போலவோ , சாமி போலவோ  ஒரு போலீஸ்  ஆக்சன்  ஸ்டோரியாத்தான் இருக்கும்னு அசால்ட்டா பெண்டிங்க்ல வெச்சிருந்த  படம் . இது  சைக்கோ  க்ரைம் த்ரில்லர்னு  அப்போ  தெரியாது

 

ஹீரோ பிருத்விராஜ் , ஜெயசூர்யா  இருவரும்  செம  க்ளோஸ்  ஃபிரண்ட்ஸ் . இருவருமே  அசிஸ்டெண்ட்  கமிஷனர்   கேட்டகிரி  தான். ரகுமான்  கமிஷனர் . இவங்க  3  பேருமே  பதவியைத்தாண்டிய ஒரு நட்பு வட்டத்தில் இருக்காங்க

 

ஒரு தருணத்துல  கப்பல்  படையைச்சேர்ந்த  ஒரு  உயர்  அதிகாரியை  ட்ரங்க்கன்  டிரைவிங் கேஸ்ல  ஜெயசூர்யா  பிடிச்சுடறார். அவர்  தன்னோட  செல்வாக்கைப்பயன்படுத்தி  என்ன என்னமோ செஞ்சு  பார்க்கறார். ஆனா  மீடியாவில்  அவர்  பேர்  ரிப்பேர் ஆகிடுது . இதனால  அந்த  ஆஃபீசருக்கு  ஜெயசூர்யா மேல செம காண்டு

 

 ஜெயசூர்யா வால் பாதிக்கப்பட்ட  இன்னொரு  ரவுடி  ஒருத்தன் இருக்கான். போலீஸ்  ஆஃபீசருக்குப்பகையாதான் ஏகப்பட்ட  பேர்  இருப்பாங்களே? இது மாதிரி  அவருக்குப்பைகையான  சில நபர்களின் சம்பவக்கோர்வைகளா  திரைக்கதை  நகருது

 

 ஒரு கட்டத்துல  ஜெயசூர்யாவுக்கு  ஒரு விருது  தரப்படும் விழாவில்  அவர்  மேடைல பேசிட்டுபிருக்கும்போது  யாரோ  துப்பாக்கியால்  ஷூட்  பண்ணி  கொலை பண்ணிடறாங்க / ஸ்பாட்ல  இருந்த  பிரித்விராஜூம் , ரகுமானும்  எவ்வளவோ  முயற்சித்தும்  கொலையாளியைப்பிடிக்க  முடியல

 

 மீடியாக்கள்  இதைப்பெரிய  இஷ்யூ ஆக்குது . கேசை  க்ளோஸ்  பண்ணவேண்டிய  நெருக்கடி . பிரித்விராஜ்  ஒரு கட்டத்துல  ரகுமான்க்கு  ஃபோன்  பண்ணி  கொலையாளியை  கண்டு பிடிச்ட்டேன்னு  சொல்லும்போது எதிர்பாராத விதமா  ஒரு கார் ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கறார்

 

 ஆஸ்பத்திரில  அவருக்கு  பழைய  நினைவுகள்  எல்லாம்  அழிஞ்சிடுது . அதாவது  அவர் போலீஸ்  ஆஃபீசர்  என்பதும்  மற்ற  சில  விபரங்கள்  எல்லாம் நினைவு   இருக்கு , ஆனா  இந்த  கொலைக்கேஸ்  விபரங்கள்  மற்றும் இவரது  நண்பர்கள்  பற்றிய  விபரங்கள்  மறந்துடுது

 

 

 இந்த  கேசை  மீண்டும்  நீயே டீல்  பண்ணுனு  ரகுமான் பிருத்விராஜ் கிட்டே   ஒப்படைக்கறார்.அதுக்குப்பின்  அவர்  கொலையாளீயை  கண்டுபிடிச்சாரா? என்பதுதான் கதை 


பிருத்விராஜ்  நடிப்பை  நான்  முதன் முதலாக கே விஆனந்த்தின் கனா  கண்டேன் (2005)ல  கண்டேன். தமிழ்  சினிமா அதுவரை  பார்க்காத  ஒரு கண்ணியமான  வில்லன்  கேரக்டர் , பிரமாதமான  திரைக்கதையால்  அவரது  நடிப்பும்  அட்டகாசமாக  பேசப்பட்டது . இதிலும்  அவரது   நடிப்பு பக்கா . குறிப்பாக  க்ளைமாக்ஸ்  காட்சியில் பின்னிப்பெடல்  எடுத்துட்டார்


ஹிந்தியில்  வந்த  தல்வார்  படத்தில் வருவ்து  போல  ஹீரோவான  போலீஸ்  ஆஃபீசரை  குறை  சொல்லும்  காட்சிகள்  உண்டு. அதில் தயங்காமல்  நடித்தது  சபாஷ் . குறிப்பாக  அவருக்குக்கீழே  வேலை  செய்யும்  3  போலீஸ்  ஆஃபீசர்களும்  டீம் லீடரை  மாத்தனும்  என அவர்  முன்னாலயே  கமிஷனரிடம்  முறையிடும்  இடத்தில்  பிருத்வி நடிப்பு  கலக்கல் 


ஜெய  சூர்யா  நடிப்பில்  குறை  வைக்கவில்லை . மேடையில்  என்ன  பேசப்போறோம்  என்பதை  மனைவியிடம்  ஒத்திகை  பார்க்கும்  சீன்  ஒரு உதா . நண்பனை  விட்டுக்கொடுக்காத  நடிப்பும்   அருமை 


ரகுமான்   ஹையர்  ஆஃபீசராக  இருந்தாலும்  அலட்டிக்கொள்ளாத நடிப்பு 


சபாஷ்  டைரக்டர் 


1   முறைப்படி  படத்தின்  கதை  மொத்தமே  40 நிமிடங்கள்  தான். அதை  2 மணி நேரப்படமாக  இழுக்க  இயக்குநர்  கண்டு  பிடித்த  வெற்றி விழா  கமல்  ஞாபக மறதி உத்தி  அருமை 


2  கொலை  நடக்கும்  ஸ்டேடியம்   அருகில்  இருக்கும்  பில்டிங்  டீட்டெய்லிங்  எல்லாம் பக்கா 



3  திரைக்கதையின்  திருப்புமுனைக்காட்சியாக  வரும் GAY  காட்சி  கையளப்பட்ட   விதம்  குட் 


நச்   டயலாக்


 சில  கேஸ்களில்  சிலர்  பேசற  சாதாரண  விஷயங்கள்  கூட  க்ளூவாக  மாறும் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1   ஒரு  கமிஷனர்  தன் செல் ஃபோனில்  வந்த  வாய்ஸ்  மெசேஜைக்கூட  கவனிக்காமல்  இருப்பாரா?


2  முக்கியமான  கொலைக்கேஸ்  பற்றிய  விபரத்தை  அவருக்குக்கீழ்  பணி ஆற்றும்  போலீஸ்  ஆஃபீசர்  அனுப்பிய  மெசேஜை  அவர்  கவனிக்காமல்  இருப்பது  நம்பும்படி  இல்லை . அதை  சில  மாதஙக்ள்  கழித்து  அவர்  சொன்னதும்  டக்னு  ஃபோனில்  எடுத்து  உடனே  ஓப்பன்  பண்ணுவதும்  நம்பற  மாதிரி  இல்லை 


சி.பி ஃபைனல்  கமெண்ட்  -   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  பிரமாதம்  ,அந்த  ஒரு  ப்ளஸ்  பாய்ண்ட்டை  வைத்தே  குறும்படமாக  எடுக்க வேண்டிய  படத்தை  முழு நீளப்படமாக  எடுத்த  இயக்குநரின் திறமைக்கு  ஒரு ஷொட்டு . ரேட்டிங்  3 / 5