Showing posts with label LAW-2020-KANNADA MOVIIE - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் கோர்ட் ட்ராமா ). Show all posts
Showing posts with label LAW-2020-KANNADA MOVIIE - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் கோர்ட் ட்ராமா ). Show all posts

Friday, July 17, 2020

LAW-2020-KANNADA MOVIIE - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் கோர்ட் ட்ராமா )



ஓ.டி.டி யில்  வெளியாகும்  முதல்  கன்னடப்படம்  என்னும் லேபிளுடன்  வந்த  இந்தபப்டம்  இதற்கு முன் இதே அமேசான்  பிரைமில்  வெளீயான  பொன் மகள்  வந்தாள்  படத்தின் கதையோடு கேரக்டர்  ஸ்கெட்சோடு ஒத்துப்போவது  பெரிய  பலஹீனம் , எப்படி  அமேசான்  பிரைம்  ஏமாந்து அதே  கதை  அம்சம் உள்ள  படத்தை  வாங்குச்சுனு  யாரும்  யோசிக்காதீங்க ., ஆனானப்பட்ட  மணிரத்னம் எடுத்த  மவுன  ராகம்  கதையையே பட்டி டிங்கரிங்  பண்ணி  ராஜா  ராணி  என கதை  சொல்லி  அட்லீ எடுத்த  படம்  ஹிட் ஆன வரலாறு நினைவில் கொள்க 

ஒரு விஷயம்  நல்லா தெரியுது . பொன் மகள்  வந்தாள்  , லா  இந்த  2 பட  டைரக்டரும்  ஏதோ  ஒரு  ஃபாரீன்  டிவிடியை  ஒரே  சமயத்தில்  பார்த்திருக்கனும்  
நாம் இருவர் நமக்கு இருவர்  ( சுந்தர் சி -14/1/1998 ) 
 உதவிக்கு வரலாமா  (கோகுல கிருஷ்ணந் 16/1/1998)
 காதலா காதலா  (சிங்கீதம் சீனிவாசராவ் - 14/4/1998)  

 மேலே  சொன்ன  3  தமிழ்ப்படங்களும்  ஒரே  டிவிடி யிலிருந்து  அட்லீ  ஒர்க் பண்ணப்பட்ட  படங்களே 

லா படம்  நல்ல   கதை  , சொல்ல வந்த  கருத்து எல்லாம் நன்றாக இருந்தாலும்  நடிக நடிகைகளின் கேர்க்டர்  ஸ்கெட்ச்  சரியாக  கட்டமைக்கப்படாததால்  , திரைக்கதை  வலுவாக இல்லாததால்  பெரிய  அளவில் எடுப்டவில்லை 

நாயகி ஒரு லா ஸ்டூடண்ட், இவர் 3  பெரிய  இடத்துப்பசங்களால்  கேங்  ரேப் செய்யப்பட்டதா  போலீசில்  புகார்  தர்றார், ஆனா போலீஸ் அதை சீரியசா  எடுத்துக்கலை, அதனால நாயகி சமூக வலைத்தளங்களின் உதவியால்  இந்த  கேசை பரபரப்பான கேசா  நாட்டில் பரப்பி விடுகிறார். சிபிஐ கைக்கு கேஸ்  போகுது  . சிபிஐ  ஆஃபீசர்  மேலிட  பிரஷர்க்கு பயப்படாம  நல்லா ஒர்க் பண்ணி அந்த  3 பேரையும்  கைது  பண்றார், கோர்ர்ட்டில்  நிறுத்தறார். கோர்ட்டில்  கேஸ்  நடக்குது , என்ன ஆச்சு என்பதே  மிச்ச மீதி திரைக்கதை





படத்தின்  முதல்  30 நிமிடங்கள்  அந்த  இன்ஸ்பெக்டர்  ரோல் ரொம்பவே இரிடேட்டிங். மதன்  பாப்  மாதிரி  கெக்கே பிக்கேனு எப்போ சிரிச்ட்டே  இருக்கார், ஒரு பொன்ணு காயங்களோட வந்து  போலீஸ் ஸ்டேஷன்ல  புகார் தருது , இவரு  ஈரோடு மகேஷ்  மாதிரி  கேவலமான  பழைய  மொக்கை  ஜோக்கை சொல்லி இவரே  சிரிச்சுக்கறார்

 சிபிஐ  ஆஃபீசர்   வந்த  பின் கதை  சூடு  பிடிக்குது ஆனா  அந்த  வில்லன்  கேர்க்டர்கள்  பணக்காரப்பசங்க  3 பேர் க்ளப்  டான்ஸ்  சரக்கு  என  காட்டுவது  கடுப்படிக்குது    

 அவங்க  பெற்றோர்  கேரக்டர்களும் சரி இல்லை 

 இதை எல்லாவற்றையும் விட  முக்கியம்  கோர்ட்  சீன்களில்  ஜட்ஜ்  கிட்டே   டவாலி  காமெடி  பண்ணும் இடம். டைரக்டர்  சார்  , இது கோர்ட்டா? விஜய் டி வி  கலக்கப்போவது யாரு  ஸ்டேஜா?  ஆளாளுக்கு மொக்கை  ஜோக் அடிக்கறாங்க

 நாயகியின் அப்பா   கேரக்டர்  ஸ்கெட்ச்  எடுபடலை  எந்த  அப்பாவும் தன் பெண்ணை  அப்படி  பேரைக்கெடுத்துக்க  அனுமதி தரவே மாட்டார்  , இவர்  என்னடான்னா  உதவியே பண்றார்


 நச்  டயலாக்ஸ்


1   நீதிக்காக  போராடலாம், ஆனா அதுக்கு நாம உயிரோட இருக்கனும் இல்ல? 

2  ரத்ததானம்  தரவே யோசிக்கற ,  தயங்கற  இந்த  சமூகத்துல  தன் பேரை  , கற்பை   தானம் செய்ய  முன் வந்த   உன் தியாகம்.....    


  சி.பி   ஃபைனல் கமெண்ட்    அமேசான்  பிரைம்க்கு சப்ஸ்க்ரைப் பண்ணி  இருக்கறவங்க  வேணா  பார்க்கலாம், இதுக்காக  பணம்  கட்டி பார்க்கற  அளவுக்கு  ஒர்த்  இல்லை  . ரேட்டிங்  1.75  /.  5 


Director: Raghu Samarth

Cast: Ragini Prajwal, Mukhyamantri Chandru, Achyuth Kumar, Sudha Rani and Avinash