Showing posts with label JEWEL THIEF ; THE HEIST BEGIN (2025) -(ஹிந்தி ) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label JEWEL THIEF ; THE HEIST BEGIN (2025) -(ஹிந்தி ) - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, May 08, 2025

JEWEL THIEF ; THE HEIST BEGIN (2025) -(ஹிந்தி ) - சினிமா விமர்சனம் ( ஹெயிஸ்ட் ஆக்சன் த்ரில்லர் ) @நெட் பிளிக்ஸ்

 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு நகைத்திருடன் .ஒரு நகை  மட்டுமல்ல , கிடைத்தால் பல நகைகளை ஆட் டையைப்போடுபவன்  .இந்தியாவில் உள்ள  பல போலீஸ் ஸ்டேஷன்களில் இவனைத்தேடுகிறார்கள் . மோஸ்ட்  வாண்ட் டட்  கிரிமினல் .நாயகனின் அப்பா  ஒரு நேர்மையான டாக்டர்.  .வெறு ம்   10  ரூபா  மட்டும் பீஸ்  வாங்கிக்கொண்டு   மக்களுக்கு வைத்தியம் செய்யக்கூடியவர் . அப்பா,மகன்  இருவருக்கும் ஆகாது . ஆனால்  அப்பாவுக்கு மகன் மீது  வெறுப்பு உண்டு , ஆனால் மகனுக்கு அப்பா மீது அளவு கடந்த பாசம் . நாயகனுக்கு ஒரு தம்பியும் உண்டு 



வில்லன்  ஒரு பெரிய பிஸ்னஸ்மேன் , மோசமான ஆள் . ரெட் சன்   என்னும்  உலகப்புகழ்  பெற்ற  வைரத்தைக்கொள்ளை அடிக்கத் திட் டம் போடுகிறான் வில்லன்  . அதை  அடிக்கத்தகுதியான ஆள் உலகிலேயே நாயகன் ஒருவன் தான் என வில்லன் நினைக்கிறான் . எனவே   நாயகனை  மிரட்டிப்பணிய வைக்க   நாயகனின் அப்பாவின் கணக்கில் ஒரு பெரிய தொகையை அனுப்பி  டொனேஷன்  என சொல்லி சமாளித்து  மாட் ட வைக்கிறான் .அது   கருப்புப்பணம் . இன்கம்டாக்ஸ்க்குத்தக்கவல்   சொன்னால்   அப்பா ஜெயிலில் என வில்லன் நாயகனை மிரட்டி  பணிய வைக்கிறான் . 

500  கோடி ரூபாய்  மதிப்புள்ள   ஆப்பிரிக்கன் வைரம்  அதைக்கொள்ளை  அடித்து   வில்லன் கையில் கொடுக்க வேண்டும் என்பதுதான் நாயகனுக்குத்தரப்படும் டாஸ்க் அதை   நாயகன் சரியாக செய்தாரா? இல்லையா?   என்பது   மீதி திரைக்கதை 

நாயகன் ஆக சயிப் அலி கான் அசால்ட்   ஆக நடித்திருக்கிறார் . வழக்கமான  கமர்ஷியல் ஹீரோவுக்கான பில்டப் சீன்கள் இதிலும் உண்டு .வில்லன் ஆக  ஜெய்தீப் அஹ லாவத் கொடூரமான  ஆளாக  நடித்துள்ளார் . வில்லனின் மனைவியாக   அதாவது   நாயகி ஆக  நிகிதா தத்தா  அழகாக   வந்து போகிறார் . வில்லனின்   மனைவி எனில் அவள்   வில்லி தானே? என  யாரும்  லாஜிக்  மிஸ்டேக்  சொல்லக்கூடாது .வில்லனின் மனைவியை நாயகன் காதலிப்பார் .அப்போ  அவர்   நாயகி தானே ? 


குணால்  கபூர் ஒரு முக்கியமான ரோலில் வருகிறார் .நாயகன் , வில்லன் ,நாயகி  ஆகிய மூவரை சுற்றி தான் கதைக்களம் நகர்கிறது 


குணால்  கபூர் ஒரு முக்கியமான ரோலில் வருகிறார் .நாயகன் , வில்லன் ,நாயகி  ஆகிய மூவரை சுற்றி தான் கதைக்களம் நகர்கிறது 


படத்தில் நான்கு பாடல்கள் .பாடல்களுக்கான  இசையை சச்சின்  ஜிஹார்  கவனிக்கிறார் . பின்னணி இசை அமைத்தவர்  ஷேகான் ஷேக் . இருவருமே  அவரவர்   வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள் ஆரீப்  ஷேக்கின்   எடிட்டிங்கில்  படம் 118  நிமிடங்கள்   ஓடுகிறது ஜிஷ்ணு , பட் டாச்சரி ஆகிய இருவரும் தான் ஒளிப்பதிவு .இந்த மாதிரி  ஹெயிஸ்ட்  த்ரில்லர்   கதைக்கான பிரம்மாண்டம்  இதிலும் உண்டு 


திரைக்கதை  எழுதி   இருப்பவர்  டேவிட்  லோகன் . வசனம் எழுதி   இருப்பவர் சுமித்  அரோரா 

கூகி குலாட்டி , ராபி குருவால்  ஆகிய இருவரும் இணைந்து இயக்கி இருக்கிறார்கள் 

சபாஷ்  டைரக்டர்


1 வைரத்தை  நாயகன்   எப்படிக்கொள்ளை  அடிக்கப்போகிறான் ? என்ற   எதிர்பார்ப்பை விட  வில்லனுக்குத்தெரியாமல் வில்லனின் மனைவியை நாயகன் எப்படிக்கரெக்ட் பண்ணப்போகிறான்  என்ற  த்ரில்லிங்கை கொடுத்த விதம் 


2  வைரத்தை  நாயகன் கொள்ளை   அடிக்கும் விதம் 


3 வழக்கமாக  இந்த மாதிரி கதைகளில்   என்ன பிளான் ?  நாயகனின் எக்சிக்யூஸன்  என்ன ?  என்பதை விளக்குவார்கள் . அவை  எதுவும் இல்லாமல்  நேரடியாக நாயகன் கொள்ளை அடிப்பதைக்காட் டிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 

1. ஒண்ணு தானா வந்தா தானாப்போக வாய்ப்பிருக்கு

2. ஒரு மனிதனோட ஏக்கம் ,தூக்கம் இரண்டையும் பேலன்ஸ். பண்ணனும்

3. இரண்டே விஷயங்களில் தான் என் விருப்பம் 1 காதல். 2 குடும்பம்

4. அழகான பொருள் ஆபத்தானதாக்கூட. இருக்கலாம்

5 எல்லாரிடமும் அவங்க தரப்புக்காரணம். இருக்கும்.அவங்க காரணம் நமக்குத்தெரியாது.நம்ம காரணம் அவங்களுக்குத்தெரியாது.


6. உங்களுக்கு நீங்களே ஒரு தடையா இருக்காதீங்க

7. உங்க சம்சாரத்தை நீங்க. நம்பறீங்களா?

உன்னை.  விட அதிகமா



8 நல்லவங்களை. நான்    தூரச்த்தில் இருந்தே கண்டுபிடிச்சுடுவேன்.ஆனா கெட்டஜ்அத்த்ட்த்த்த்த்ட்ந்ன்யவன் பக்கத்தில். இருந்தும் ப் கண்டுபிடிக்க. முடியலை

8 குடும்பத்துக்காக  அப்பப்ப. கெட்ட. விஷ்யங்களையும் செய்ய வேண்டி இருக்குது


9. உன் புருசன் மேல பயம் அதிகமா? என். மேல் நம்பிக்கை அதிகமா?

10.நீங்க. ராஜாவா. இருந்தீங்க.ஆனா இப்ப. இல்ல

11. உங்களால இந்த உலகததையே. ஏமாத்த. முடியும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 போலீஸ் கேரக்டர்கள்  அனைத்தும் டம்மி என்பதால் சுவராஸ்யம் இல்லை 


2  நாயகன் , நாயகனின் அப்பா   இருவருக்குமிடையே  ஆனா பாண்டிங்க்  செட் ஆகவில்லை . அப்பாவுக்கு மகனைப்பிடிக்காது ,  ஆனால் அப்பா மீது மகன் பாசமாக இருக்கிறார் என்ற  கான்செப்ட்  மனதைத்தொடும் விதத்தில் சொல்லப்படவில்லை 


3  வில்லனின் மனைவியைக்கரெக்ட் பண்ணுவதுதான் நாயகனின் காதல் கதை என்பதால்  அது எடுபடவில்லை .கள்ளக்காதல்  கதை என்றாலும்  அதில்   சுவராஸ்யம்  வேண்டாமா ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+   இரண்டு  லிப் லாக்  சீன்கள்  உண்டு . வில்லன் , நாயகன்  இருவரும் தலா ஒரு முறை நாயகியை லிப் கிஸ் அடிப்பது 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்- போர்  அடிக்காமல் செல்லும் கமர்ஷியல் மசாலாப்படம் . பொழுது போகாதவர்கள் பார்க்கலாம் .

 ரேட்டிங் 2.25 /5