Showing posts with label HEY SINAMIKA ( 2022) ஹே சினாமிகா - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா). Show all posts
Showing posts with label HEY SINAMIKA ( 2022) ஹே சினாமிகா - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா). Show all posts

Saturday, July 30, 2022

HEY SINAMIKA ( 2022) ஹே சினாமிகா - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் மெலோ டிராமா)


நான்  11 வது  படிக்கும்போது  பக்கத்து  வீட்டுல  ஒரு  பொண்ணைப்பார்த்தேன். அது  நம்மைப்பார்க்குதா? இல்லையா?னு  12  வருசமா  செக்  பண்றேன்  ,12* 365* 3 வேளை = 13,140    தடவை நான்  பார்த்தென், ஆனா  அது  பாக்கல  நம்மை  எல்லாம்   மனுசனாவே  மதிக்கலைனுஅப்றம் தான்  தெரிஞ்சுது . ஆனா  இந்த  சினிமாவில்  மட்டும்  தான்  ஒரே  ஒரு  டைம்  தான்  பார்க்கறாங்க, உடனே   லவ்  ஆகிடுது 


Spoiler alert


ஹீரோ  ஹீரோயின் ரெண்டு  பேரும்   நேர்ல  சந்திக்கறாங்க . முதல்  பார்வைலயே  காதல்  அடுத்த  சீன்ல யே  கல்யாணம். எனக்குத்தெரிஞ்சு  லவ்  ஸ்டோரில  ஓப்பனிங்க்லயே   இவ்ளோ க்யுக்கா  மேரேஜ்  ஆவது  மணிரத்னம்  இயக்கிய  பம்பாய்  படத்துக்குப்பின்  இதுதான்னு  நினைக்கிறேன் 


ஹீரோயினுக்கு   திறமை  இருக்கு . லட்சக்கணக்கில்  சம்பளம்  வாங்கும்  வேலை. ஹீரோ  வீட்டோட  புருசனா  இருக்கார். லொட  லொடனு பேசிக்கிட்டே  இருப்பார் .  வீட்டை  க்ளீன்  பணணுவார்   ச,மைப்பார் . ஒரு  சம்சாரத்துக்கு  இதை  விட  சிறந்த  அடிமை  சாரி  புருசன்  கிடைக்க  குடுத்து  வெச்சிருக்கனும்


ஆனா  ஒரு  கட்டத்துல  அவருக்கு  ஹீரோ  போர்  அடிச்சுடுது. பொதுவாவே  பொண்ணுங்க  புருசனைப்பிடிக்கலை  டைவர்ஸ்  வேணும்னு  கேட்க  நான்  கேள்விப்பட்டவரை  1  துரோகம்  செய்து  எக்ஸ்ட்ரா  மேரிட்டல்  லைஃப்  அல்லது  சின்ன  வீடு  வெச்சிருப்பது  2   ஓவர்  சரக்கு  தம்  3    சந்தேகப்பிராணி 

4  சைக்கோ  5  தண்டச்சோறு


 மேலே  சொன்ன  காரணங்கள்  எல்லாம்  இல்லாம   ரொம்ப  நல்லவனா  இருந்தும்  அவன்  தொணதொண  கேரக்டர்  என்பதாலாயே  பிடிக்காம  போய்டுது பிரேக்கப்  பண்ணிக்கலாம்னு  ஹீரோயின்  முடிவெடுப்பது  ஆச்சரியமா  இருக்கு  நம்பகத்தன்மை  இல்லாமலும்  இருக்கு 


ஹீரோயின் குடி  இருக்கற  அபார்ட்மெண்ட்க்கு  பக்கத்துல  ஒரு  லேடி  சைக்யாட்ரிஸ்ட்  இருக்காங்க. அவரு   பர்சனல்  லைஃப்ல  ஆணால்  பாதிக்கப்பட்டவர் . ஆண்கள்  எல்லாருமே  கேப்மாரிங்கதான்  என்ற  எண்ணத்தில்  அசையா  நம்பிக்கை  உள்ளவர். டைவர்ஸ்  க்கு  கவுன்சிலிங்க் கு  யார்  வந்தாலும்  பிரிச்சு  விட்டுட்டுதான்  அடுத்த  வேலை


அந்த  லேடி  கிட்டே  ஹீரோயின்  ஒரு  உதவி  கேட்கறாங்க .  என்  புருசனை  லவ்  பண்ற  மாதிரி  நடி ., அதை  சாக்கா  வெச்சு  நான்  டைவர்ஸ்  பண்ணிடறேன்கறா


இந்த  டிராமா ல  நிஜமாவே  அவங்க  2  பேரும்  லவ்   பண்ண  ஆரம்பிச்சிடறாங்க  இதைக்கண்டு  காண்டு  ஆகும்  ஹீரோயின்  தூ  தூ  மாறாட்டம்  தொட்ட  கை  நட்டம்  எல்லாம் வாபஸ்  அப்டிங்கறா  இதுக்குப்பின்  என்ன  ஆச்சு  ? என்பதுதான்  க்ளைமாக்ஸ் 


ஹீரோவா  துல்கர்  சல்மான்.  மம்முட்டி  மகன்  என்பதால்  அவரது  ரசிகர்கள்  எல்லாம் இவருக்கு  ஷிஃப்ட்  ஆவது  பிளஸ்.  மலையாளத்தில்  சார்லி   தமிழில்  வாயை  மூடிப்பேசவும்  இவரது  அடையாளம்,  இவருக்கு  ஏராளமான  ரசிகைகள் . நம்ம  ஊர்ல  கமல்  ,மோகன்,  சுரேஷ் ,கார்த்திக் , விஜய் , அஜித்   மாதிரி  கேரளாவில் அதிக  ரசிகைகள்  டோவினோதாமஸ், துல்கர்  இருவருக்கும்தான்.  ஹேர்ஸ்டைல்  பாடி லேங்க்வேஜ்  எல்லாம்  அழகு . ஆர்  ஜே ஜே  வாகப்பணி  ஆற்றும்ப்போது  அசத்துகிறார்


 ஹீரோயினா  அதிதி ராவ் ஹைத்ரி  செம  ஹைட்  ஜி. இவரோட  டிரஸிங்   ஸ்டெட்ஸ்  வளையல்  எல்லாம்  பிரமாதமான  கலெக்சன்ஸ் . வேகமா  நடக்கும்போது  குதிரை  மாதிரி இருக்கிறார்  நடிப்பும்  அருமை .கண்ணியமான  கிளாமர் ஒரு  பிளஸ்


 இன்னொரு  ஹீரோயினாக  காஜல் ஜில்  ஜில்  அகர்வால் . . குளிர்ச்சியாக  இருக்கிறார். நிஜவாழ்வில்  மேரேஜ்  ஆனவர்  மேலும்  முதல்  ஹீரோயின்  அதிதியை விட  சீனியர்  என்றாலும்  அவரை  இவர்  அக்கா  அக்கா  என  அழைப்பது  செம  காமெடி . க்ளைமாக்ஸில்  நல்ல  நடிப்பு  காட்டும்  வாய்ப்பு  அது  போக   படம்  முழுக்க  கிளாமர்  காட்டும்  வாய்ப்பு 


பிருந்தா  மாஸ்டர்  டான்ஸ்  மாஸ்டராக  இருந்து  டைரக்டராக  பிரமோஷன் . நல்ல  முயற்சி 


 பாடல்கள்  சுமார்  தான்  இசையும்  டிட்டோ  இதுமாதிரி  லவ்  சப்ஜெக்டில்  பாட்டு  ஹிட்  ஆனால்  கூடுதல்  பலம் 


 ஒளிப்பதிவு  எடிட்டிங்  லொக்கேஷன்ஸ்  ஆர்ட்  டைரக்சன்  எல்லாம்  அழகு 



சபாஷ்  டைரக்டர் (  பிருந்தா  மாஸ்டர்) 


1    சேரன்  எடுத்த  ஆட்டோகிராஃப் ( ஒரு  ஆணுக்கு  ஏற்படும்  பல  காதல்கள்)   செம  ஹிட்  ஆனா   இயக்குநர்  சசி  இயக்கிய  பூ (  ஒரு  பெண்ணுக்கு  ஏற்படும்  ஒரு  காதல்  ஒரு  குடும்ப  வாழ்க்கை ) சரியாப்போகலை . காரணம்  ஒரு  பெண்   இரு ஆண்களை  பேலன்ஸ்  பண்ணுவதை  தமிழ்  ஆடியன்ஸ்  ஏத்துக்கறதில்லை. இதை  உணர்ந்து   எ  பாய்  ஃபிரண்ட்  ஃபார்  மை  ஒயிஃப்   படத்தை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  ஹீரோ  இடத்தில்  ஹீரோயினை  போட்டு  எடுத்த  ஐடியா  குட் 


2   முக்கிய  கேரக்டர்களுக்கு  தூய  தமிழ்ப்பெயர்  வைத்தது  பாரதியார் கவிதைகளை  கேப்  கிடைக்கும்  இடங்களில்  பயன்படுத்துவது 


3   மதன்  கார்க்கியின்  வசனங்கள்  பலம்  , ஹீரோ  லொட  லொட  கேரக்டர்  என்பதால்  ஏகப்பட்ட  தத்துவங்கள்  சொல்ல  வேண்டிய  கட்டாயம்  ( இதுக்கு  முன்  இதே  மாதிரி  ஹீரோ  ஓவர் தத்துவம்  சொன்ன  படம்  யூத்   ஷாஜகான்


 4  ஒளிப்பதிவு  ப்ரீத்தா ஜெயராமன்   எடிட்டிங்  ராதா ஸ்ரீராம் என  தொழில்  நுட்பக்கலைஞர்கள்   பலர்  பெண்கள்  வெரிகுட்  அட்டெம்ப்ட் 

 ரசித்த  வசனங்கள்  ( மதன்  கார்க்கி )


1 எல்லாராலயு,ம்  எல்லா  நேரமும்  ஏமாத்திட்டு  இருக்க  முடியாது  , உண்மை  எப்படியும்  தேடி  வரும்


2  கோபத்தை  அடக்காதே  வெளிப்படுத்திடு


3 ஆம்பளைங்கள்ல  நல்லவன்  இருக்க  வாய்ப்பே  இல்லை , நீங்க  இன்னும்  கண்டுபிடிக்கலைன்னு  வேணா  சொல்லுங்க


4 நமக்குப்பிடிக்காத  எதையும்  வீட்டுல  வெச்சுக்கக்கூடாது


5   அறிவின்  உச்சம்  தொட்டு  விட்டோம்  என  எண்ணும்போது  எறும்பளவு  ஏமாற்றம்  கூட  யானையைப்போல்  நம்மை  மிதித்து  நசுக்கும்


6  மழையை  யாராவது  உள்ளே  இருந்துட்டே  ரசிப்[பாங்களா?  நனைஞ்சுட்டே  ரசிக்கனும்


7  பிரியறதுக்கு  1000  காரணங்கள்  கிடைக்கலாம்  ஆனா  சேர்வதற்கு ஒரே  காரணம்  போதும்  காதல் 


8  தப்பு  யார்  வேணா  செய்யலாம் , ஆண்  என்ன ? பெண்  என்ன?


9  இந்த  உலகத்துல  எந்த  ஆணும்  நல்லவன்  இல்லை  என்பதை  நிரூபிக்க  விரும்பறேன்


10   நீ  நீயா  இரு  நான்  நானா  இருக்கேன்  எனக்காக  நீ  உன்னை  மாத்திக்க  வேணாம் , நீயாவே  இருப்பியா?


11   ஆண்கள்  போடும்  டிரசை  பெண்கள்  போடலாம், ஆனா பெண்கள்  போடும்  டிஎரசை  ஆண்கள்  போட்டா  கேவலமா?


12  ஒயிஃப்னா  எனக்கு  பயம்  இல்லை  அவ்ளோ  பிடிக்கும் 


13  குழந்தையா  இருக்கும்போதுதான்  கேள்வி  கேட்கறோம்  பெரியவங்க  ஆனதும்  கேட்கறோமா? 


14  பேச்சு  எனக்கு  ரத்த  ஓட்டம்  மாதிரி 


லாஜிக்  மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் ஆலோசனை


1    காஜர்  அகர்வால்  ஒரு  சீன்ல  தன்  கழுத்துல  இருக்கற  6  பவுன்  டாலர்  செயினை  கழட்டி  ரோட்ல  தூக்கிப்போடறாங்க . எந்தப்பொண்ணாவது  அப்டி  செய்வாங்களா? டிசைன்  பிடிக்கலைன்னா  அழிச்ட்டு  புது  மாடல்  ரெடி  பண்ணிக்கலாமே?  ரெண்டரை  லட்சம்  அசால்ட்டா   போகுது 


2  எந்த  முடிவையும்  நாம தான்  எடுக்கனும் அடுத்தவங்க  கைப்பாவையா  இருக்கக்கூடாதுனு  கொள்கை  உள்ள  ஹீரோ  க்ளைமாக்ஸ் ல  மனைவியை  டைவர்ஸ்  பண்ணலாமா?? மன்னிக்கலாமா? என  பொதுமக்கள்  கிட்டே  கருத்து  கேட்பது பின்னடைவு 


3  காஜர்  அகர்வால்   ஹீரோ  கிட்டே  காதலிக்கற  மாதிரி  நடிக்கத்தான்  வந்தேன்  ஆனா  நிஜமாவே  லவ்  ஆகிடுச்சு  என்பதை  டயலாக்கா  மட்டும்  தான்  சொல்றார்  அதை  விஷூவலாக  காட்டனும் 


4 அதே  போல  ஹீரோ  ஹீரோய்னிடம்  ஒரு  கட்டத்தில்  அவளை  லவ்  பண்ணலாமா? என  யோசித்தேன்  என்கிறார்    இன்னொரு  இடத்தில் உன்னைத்தவிர  வேறு  யாருக்கும்  இடம்  இல்லை  என்கிறார்  குழப்பம்  அவருக்கு 


5  ஒரு  பெண்ணைக்கவர  ஆண்  1008  முயற்சிகள்  , ஐடியாக்கள்  ட்ரை  பண்ணனும்  ஆனா  ஒரு ஆணைக்கவர  ஒரு  பெண்  எந்த  முயற்சியும்  எடுக்கத்தேவை  இல்லை   பெண்  தயார்  என்றாலே  போதும்  ஒரு  பெண்  இயக்குநருக்கு  இந்த  உண்மை  புரியாமல்  என்னென்னமோ  தகிடுதித்தம்    எல்லாம்  பண்ணனுமா? 


6  படத்தில்  பெரிய  ட்விஸ்ட்  ஏதும்  இல்லை  நான்  இயக்குநராக  இருந்தால்  அல்லது  திரைக்கதை  எழுதி  இருந்தால்  அந்த  சக  ரேடியோ  ஜாக்கி  ஹீரோவை  லவ்வுவது  போல  ஒரு  ட்விஸ்ட்  கொடுத்திருப்பேன் ( அதான்  தம்பி  நீ  இல்லை) 


7  ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  தான்  லொட  லொடனு பேசறார்  ஆனா  காஜல் கிட்டே  கம்மியாதான்  பேசறார் ஒரு  கேரக்டர்னா  எல்லார்  கிட்டேயும்  ஒரே  மாதிரிதானே  பேசனும் ?

சி பி எஸ்  ஃபைனல்க் கமெண்ட் -     நம்பகத்தன்மை  இல்லாத  ஆனா  அழகான  காதல்  கதை  பெண்கள்  துல்கரை  சைட்  அடிக்க  ஆண்கள்  அதிதி  , காஜல்,  திவ்யா  என  பலரை  சைட்  அடிக்க  ஆண்கள்  பார்க்கலாம் . ஃப்ரேம்  பை  ஃப்ரேம்  அழகியல்  கொஞ்சும்  ஒளிப்பதிவு    ரேட்டிங் 2. 5/5   இது  நெட்  ஃபிளிக்ச்டிலும்  ஜியோ  விலும்  கிடைக்குது  ஒரே ஒரு  டவுட்  அனாமிகான்னா  பேர்  இல்லாதவர்  சினாமிகான்னா  என்ன  அர்த்தம் ? ஏன்னா  படத்துல  வர்ற  எந்த  பெண்  கேரக்டருக்கும்  அந்தப்பேரு  இல்லை  ஒரு  வேளை  குத்துமதிப்பா  சினேகிதினு  அர்த்தமா  இருக்குமோ?