Showing posts with label EK MINI KATHA - 2021 (TELUGU ) -சினிமா விமர்சனம் ( கில்மா காமெடி ரொமாண்டிக் டிராமா). Show all posts
Showing posts with label EK MINI KATHA - 2021 (TELUGU ) -சினிமா விமர்சனம் ( கில்மா காமெடி ரொமாண்டிக் டிராமா). Show all posts

Monday, May 31, 2021

EK MINI KATHA - 2021 (TELUGU ) -சினிமா விமர்சனம் ( கில்மா காமெடி ரொமாண்டிக் டிராமா)

 இந்தப்படத்துக்கு  நான்  டைரக்டரா இருந்திருந்தா   படத்துக்கு  டைட்டிலா  “ சின்னத்தம்பி  , அல்லது  சின்ன  தம்பி   பெரிய  தம்பி   ,  சின்ன  சின்ன  ஆசை  ,  சின்னவர் ,  சின்னவரு  மன்னவரு ,   இந்த  மாதிரி  டைட்டில்   வெச்சிருப்பேன். இதுல இருந்தே  படத்தோட  கான்செப்ட்  உங்களுக்குப்புரிஞ்சிருக்கும், கொஞ்சம்  கவனம்  பிசகி இருந்தாக்கூட  இது  இருட்டு  அறையில்  முரட்டுக்குத்து  மாதிரி தர  லோக்கல்    கில்மாப்படமா  ஆகி  இருக்கும், ஆனா  இயக்குநர்  பேசிக்காவே  விக்ரமன் , ராதா மோகன்  மாதிரி  டீசண்ட்டான  ஆள்  என்பதால்  ஏ  செண்ட்டர்  ஆடியன்சுக்கான  கண்ணியமான  கில்மா  ரொமாண்டிக்  ஃபிலிமா  எடுத்திருக்கார்


ஹீரோவுக்கு   அது  ரொம்ப  சின்னதா  இருக்கு. சின்ன  வயசுல  இருந்தே  சக  நண்பர்களால்  அவன்  கேலி  செய்யப்பட்டு  மைக்ரோ பெனிஸ்  சிண்ட்ரோம்     மன நோயால  பாதிக்கப்படறான்.  சேலம்  சித்த  வைத்தியர்  மாதிரி  ஆளுங்க  டார்கெட்டே  இந்த  மாதிரி  பாலியல்  அறிவு கம்மியா   இருக்கும்  இளைஞர்களை  ஏமாத்தி  பணம்  சம்பாதிக்கறதுதான்.


முதல்  அரை  மணி  நேரம்  ஃபிளாஸ் பேக்ல  ஹீரோ வோட  பிரச்சனைகளை  காமெடியா  காட்டுறாங்க . அதுக்குப்பின்  ஹீரோ  சேலம்  சித்த  வைத்தியர்  மாதிரி  ஒரு  டுபாக்கூர்  டாக்டர்  கிட்டே  போறான்


 15 லட்சம்  ரூபா   ஃபீஸ்  தந்தா   பெருசாக்கி  ஆபரேஷன்  பண்றேன், அல்லது  ஆபரேஷன் பண்ணி  பெருசாக்கறேன்னு  பீலா  விடறார்  டுபாக்கூர்  டாக்டர் .  ஆபரேஷன்  தியேட்டர்ல  ஹீரோ . இங்கே  ஒரு  ட்விஸ்ட்  ..  இடை  வேளை 


ஹீரோவுக்கு  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகுது. அரேஞ்ஜ்டு  மேரேஜ்தான். ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  தன்  குறை  பற்றி  ஓப்பனா பேசிடலாம்னு  நினைக்கறான், ஆனா  சொல்லலை . லேடி  நித்யானந்தி  மாதிரி  ஒரு கில்மா  டுபாக்கூர்  சாமியாரினி  இருக்கு  . அதை  அப்பாயிண்ட்  பண்றாங்க .  டெய்லி  காலைல  பிரம்ம  முகூர்த்தத்துல  அவர்  ஒரு  ட்ரீட்மெண்ட்  தருவார்.  யாரும்  கண்டபடி  கற்பனை  பண்ண   வேணாம், ஒரு  கசாயம்  மாதிரி   தருவார்  , அதை ஹீரோ  குடிக்கனும் 


வீட்லயே  அந்த  கில்மா  சாமியாரினி  தங்க  வைக்கப்படறார்..  சுந்தர்  சி  பட  பாணில  அந்த  சாமியாரினி ,  ஹீரோ ,  ஹீரோயின்,  ஃபிரண்ட்  இவங்களை  வெச்சு  கொஞ்சம்  காமெடி  டிராக்  ஓடுது


இதுக்குப்பின்  இவங்க  வாழ்வில்  நடக்கும் சில  திருப்பங்கள் , சம்பவங்கள்  தான்  மிச்ச  மீதி  திரைக்கதை 


ஹீரோவா  யாரோ  சந்தோஷ்  சோபனாம், ஓக்கே    ரகம்,  ஆம்பளைங்களைப்பற்றி  நமக்கு  என்ன   பேச்சு . ஹீரோயின்  கிட்டே  வருவோம்


 நாயகி  பேரு  காவ்யா  தப்பார் .  காவ்யா  மாதவன்  மாதிரி  கொழுக்  மொழுக்  ஃபிகர்  இல்லைன்னாலும்  பார்ட்டி  ஒரு   எபவ்  ஆவரெஜ்  ஃபிகர்  தான். ஒரு  முக்கியமான  க்ளூ  தர்றேன்  படம்  போட்டு  48 வது  நிமிசத்துல  அப்புறம்  1.57  வது  நிமிசத்துல  அப்டினு   படத்துல  நாயகிக்கான    சீன்கள்  2  இடத்துல இருக்கு  (  இந்த  சமுக  சேவைக்காக  யாராவது  ஏதாவது  விருது  கொடுக்கற  மாதிரி  இருந்தா  அதை  திருப்பித்தர  தயாரா  இருக்கேன் . யாருமே  தராத  ஒரு  விருதை  திருப்பித்தர்றது  ரிஜக்ட்  பண்றதுதான்  இப்போ ஃபேஷன் ) 


ஹீரோவுக்கு  ஃபிரண்டா  வர்றவர்  நல்ல  காமெடி  சென்ஸ் .


 கில்மா சாமியாரிணியா  ஸ்ரெத்தா  தாஸ். அநியாயத்துக்கு  டீசண்ட்டான  ஆடை  வடிவமைப்பு  இவருக்கு .  நான்  ரொமப  எதிர்பார்த்தேன்


இத்தனை  வர்ணனைகள்  , விபரங்கள்  படிச்ட்டு இது  லேடீஸ்  பார்க்கத் தகுதி  அற்ற படம்னு  நினைக்க  வெணாம்.  டீசண்ட்  மேக்கிங்  தான்


ஒளிப்பதிவு  , இசை   நல்ல  தரம் 


நச்  டயலாக்ஸ்  


1   சார்  , உங்க  பையனோட  பிராப்ளம்,ஸ்   என்ன?னு  சொல்றதா  சொன்னீங்க   ஆனா  50  வருசம்  முன்னாடி  அப்டினு  உங்க  ஃபிளாஸ்பேக்  சொல்லிட்டு  இருக்கீங்க ?


 டாக்டர்  சார் , நீங்க  தானே  சொன்னீங்க ?  ஃப்ரீயாதான்  இருக்கேன்  அப்டினு  அதான்  விலாவாரியா  சொல்லலாம்னு... 


2    சூரியனை  சுற்றும்  கிரகங்களில்  ரொம்ப  சின்னது  எது ?


 டீச்சர் , சந்தோஷ்  கிட்டே  கேட்கலாம்  டீச்சர் 


 ஏன்? 


 அவனுக்குதான் சின்னது  பற்றி  கரெக்டா  தெரியும்  ,  ஸ்மால்  ,  ஸ்மாலெர்  , ஸ்மாலெஸ்ட்  எல்லாம்  தெரியும் 


3  மிஸ் , எதுக்காக  என்னை  உங்க  வீட்டுக்கு  வரச்சொன்னீங்க ?


 எங்க  வீட்ல  அம்மா, அப்பா  எல்லாரும்  வெளில  போய்  இருக்காங்க , வர  இன்னும்  2  மணி  நேரம்  ஆகும்


 அப்போ  நான்  போய்ட்டு  2  மணி    நேரம்  கழிச்சு  வரவா?


4  நான்  ஒரு  முக்கியமான  க்ரூப்ல  இருக்கேன்  SDG


அப்டின்ன?

    SMALL  DIG   GROUP


5     டோண்ட்  கால்  மீ  “  சின்னா”


6  இஞ்சினியர்  சார் , சைஸ்  பற்றி  கவலைப்படாதீங்க ,..


7   சார் ,  இந்தக்கல்லை  3  இஞ்ச்   4  இஞ்ச்  ஆக  சின்ன சின்னதா  கட்  பண்ணனும்   எப்படி  கட்  பண்ண ?


8   பொதுவா  சின்னதா  இருந்தா  பிரச்சனை  பெருசா  இருக்கும் 


9    சாரி   மிஸ் .. இது  எல்லாம்  பெரிய  மேட்டரே  இல்லை . யார் மேல  தப்பு ,  யார்  செஞ்சது  சரி  அது எல்லாம்  ஒரு  விஷயமே  இல்லை , பொது  இடத்துல  பொண்ணுங்களை தரக்குறைவா  யாரும் பேசிடக்கூடாது ,  மரியாதைக்குறைவா  நடத்திடக்கூடாது 


10   சார் , நம்மைப்பற்றி  தெரியாம  பேசறீங்க , பொதுவா  எல்லாரும்  அனக்கோண்டாவை  அமேசான்  காட்டுல  தானே  பார்த்திருப்பாங்க ?ஆனா  நீங்க  இப்போ


 இப்போ


 ஹைதராபாத்    நேரு  பார்க்லயே  பார்க்கலாம்னு  சொல்ல  வந்தேன்.. பயந்துட்டீங்களா?


11   நான்  இதுவரை   வெட்டிங்  ஆல்பம்,   பர்த் டே  பார்ட்டி  ஆல்பம்  தான்  பார்த்திருக்கேன் ,இந்த  டாக்டர்  என்ன     டெட்  பாடி  ஆல்பம்  எல்லாம்  காட்றாரு ?  ஆபரெஷன்ல  இவ்ளோ  ஃபெய்லியரா?


12  இந்த  போலீஸ் க்கு  பிளம்ப்பர்க்கும், பாத்ரூம்  க்ளீனருக்கும்  வித்யாசமே   தெரியாதா?  என்னை  105  டாய்லட்சை  க்ளீன்  பண்ண  வெச்ட்டாங்க 


13   எந்த  ஓ டி  டி  ல  மெம்பர்  ஆனாலும்   உன்  தாய்மொழி  என்ன?னு  தான்  கேட்கறாங்க , தந்தை  மொழி  பற்றி  கேட்கறதே  இல்லை 


14   யோவ்,  எத்தனை  தடவை  தேய்ப்பே? அது  என்ன  டெபிட்  கார்டா?  அலாவுதீன்  விளக்கா?


15    மிஸ் !  உங்களுக்கும்  எனக்கும்  செட்  ஆகாதுனு  நினைக்கறேன்


 ஏன்?


 உங்களுக்குப்பிடிச்ச  டி வி  ப்ரோக்ராம்  பிக்  பாஸ் ,   பிடிச்ச  நடிகர்  பிக்  மேன் அமிதாப்.... எல்லாமே  பெருசாவே  இருக்கே ?


16    உங்க  லக்கி  நெம்பர்  என்ன?


 2  


 அதுலயும் சின்ன  நெம்பர் தானா?   உனக்கு  சின்னதா இருக்கு  ஓக்கே  உன்  லக்கி  நெம்பரும்  சின்னதாதான்   இருக்கனுமா?      உனக்கு  ?


 ஜீரோ 


 ஏன்?


 ஜீரோல இருந்து  தொடங்குனாதான்  ஹீரோ  ஆக  முடியும்  


17    ப்ராப்பர்  பேப்பர்ஸ்  இருந்தாதான்  லோன்  தருவோம்


 தினத்தந்தி  ,    தினமலர் ?


  யோவ் .. பாண்ட்  பேப்பர்  , சொத்து   டாக்குமெண்ட்ஸ்



18    அய்யரே. இந்தாங்க  5000  ரூபா.. ஃபர்ஸ்ட்  நைட்டை...


  முன்  கூட்டியே  வைக்க  டைம்  குறிக்கனுமா?


  நோ . தள்ளிப்போடனும்


19     சின்ன  பொருள்கள்  எல்லாம்  நல்லதுதான்  , முருங்கைக்காயையே  எடுத்துக்குங்க , சின்னதாதான்    இருக்கு  ஆனா  அது  பண்ற  வேலைகள்  பெருசு...



  சபாஷ்  டைரக்டர் 


1   ஹீரோவின்  அப்பா  ,  சைக்யாட்ரிக்  டாக்டர்  சம்பந்தப்பட்ட  காட்சிகள் 


2    ஹீரோ  ,  போலி  டாக்டர்  இருவருக்குமான   காட்சி  அமைப்பு  மற்றும்  இடைவேளை  ட்விஸ்ட் 


3    ஹீரோ -  சாமியாரினி ,  நாயகி  காம்ப்போ  காட்சிகள் , அதில்  வரும் டீசெண்ட்  காமெடி


4  க்ளைமாக்ஸ்    காட்சி  ,  மற்றும்   நாயகிக்கான  2   பாடல்  காட்சிகள் 

5    ஒளிப்பதிவு   ,  வசனம் , எடிட்டிங் ,  பின்னணி  இசை 



 திரைக்கதையில்  சில  நெருடல்கள்  ,  லாஜிக்  மிஸ்டே க்ஸ் 


1   ஹீரோ  ஹீரோயின்  ஓப்பனிங்  சந்திப்பு  சீனில்  ஹீரோயின்  ஸ்கூட்டி  ஓட்டிட்டு  வருது ,  ஆனா  அவ்ளோ  பெரிய  பங்களா வாசியான  நாயகி  பின்  வரும்  எந்தக்காட்சியிலுமே  ஸ்கூட்டில  வர்லை  .  கார் தான்


2   ஆபரேஷன்  பண்றதுக்கு  முன்  ஒரு  பேப்பர்ல  சைன் வாங்குபவர்கள்  இவ்ளோ  டீட்டெய்லா  மிரட்டுவாங்களா?  எப்படி  சைன்  பண்ணுவான்  பேஷண்ட்?


3   லீகலாக  நடக்கும்  ஹாஸ்பிடலில்  ஆபரேசன்  ஃபீஸ்  15  லட்சம்  ரூபாயை  கேஷாக  கட்டச்சொல்வது  ஏன்?  டிடி அல்லது  நெஃப்ட்   , ஆர்டிஜிஎஸ்  தானே  சேஃப்டி ?


4   ஹீரோ  கூச்ச சுபாவி  , நாயகியிடம்  நண்பனிடம்  தன்  பிரச்சனைனை  தனிமையில்  சொல்வதற்கே  குரல்  கம்முது , க்ளைமாக்ஸில்  லவுடு  ஸ்பீக்கர்  வெச்சு  பேசுவது  , தன்  குறையை  ஓப்பனாக    சத்தம் போட்டு பேசுவது  நாடகத்தனம்




  சி. பி  ஃபைனல்  கமெண்ட் -    ஏ செண்ட்டர்  ரசிகர்களுக்கான  கண்ணியமான  கில்மா  காமெடி  ஃபேமிலி  மெலோ  ட்ராமா.   அடல்ட்  கண்ட்டெண்ட்  இருக்கு  , ஃபேமிலியோட  பார்க்க  முடியாது  ( அபுறம்  எப்படி  அது  ஃபேமிலி மெலோ டிராம?)   ரேட்டிங்   2.75 / 5  அமேசான்  பிரைம்ல  கிடைக்குது