Showing posts with label ம்ர்ம யோகி (1951) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ச்ஸ்பென்ஸ் த்ரில்லர்). Show all posts
Showing posts with label ம்ர்ம யோகி (1951) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( ச்ஸ்பென்ஸ் த்ரில்லர்). Show all posts

Monday, September 26, 2022

மர்ம யோகி (1951) (தமிழ்) - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர்)


திகில்  காட்சிகளுக்காக  ஏ  சர்ட்டிஃபிகேட்  வாங்கிய  முதல்  தமிழ்ப்படம்  இதுதான்.நிறையப்பேரு  நினைப்பு  என்னான்னா  பாட்ஷா  படம்தான்  பஞ்ச்  டயலாக் ஹிட்  ஆன  முதல்பட்ம்.. ஆனா  குறி வைத்தால்  தவற  விட  மாட்டேன், தவறுமானால்  குறி  வைக்க  மாட்டேன்  என  பஞ்ச்  டயலாக்   அன்றே  ஹீரோ  பேசிய  படம்.  ஆக்சுவலா  படத்தின்  வசனகர்த்தா  கலைஞர்  தான், ஆனா  டைட்டில்ல  அவர்  பேரு  வராது . அது  என்ன  பாலிடிக்ஸ்னு  தெரியல

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு  நாட்டின்  மன்னன்.  சாமான்யனுக்கும்  செல்வந்தன், ஜமீந்தார் , மன்னன்  இவங்களுக்கும்  என்ன  வித்தியாசம்னா  சாமான்யன்  ஒரே  ஒரு  சம்சாரம்  கட்டிட்டு  அதுக்கு  எடுபுடி  வேலை  செய்யறது , புடவை  நகை  வாங்கித்தர்றது  இதுக்காகவே  காலம்  பூரா  உழைப்பவன், ஆனா   மன்னர்  பரம்பரை  ஜமீன்  பரம்பரைல  இருக்கறவங்க   ஏகப்பட்ட  சம்சாரம்  வெச்சிருப்பாங்க. தசரத  சக்ரவர்த்திக்கு  60,000  சம்சாரமாம், அடேங்கப்பா   டெய்லி  ஒரு  சம்சாரம்னாக்கூட  167    வருசம்  ஆகும்  அடுத்த  ஷிஃப்ட்  வர 


மன்னர்  அரண்மனைல  நாட்டு  மக்களுக்காக  ஏதாவது  நல்லது  பண்ணுவார்னு  பார்த்தா  அவர்  பாட்டுக்கு  நாட்டிய  நிகழ்ச்சி  பார்த்துட்டு  இருக்காரு. எங்க  ஊர்ல  தேர்த்திருவிழா  அப்போ  ஒரு  கூட்டம்  கரகாட்டம்  பார்க்கறேன் , ஒயிலாட்டம்  பார்க்கறேனு  கோயிலுக்குக்கிளம்பிடுவாங்க, ஆனா  ஆவங்க ஆட்டத்தை  ரசிக்கற  மாதிரி  தெரியல. ஆட்டக்காரியை  ரசிக்கத்தான்  வந்ததா  தோணும் ( ஆக்சுவலா நான்  போறது  ஆட்டத்தையோ  ஆட்டக்காரியையோ  பார்க்க  அல்ல. ஊர்ல  இருக்கற  எந்த  எந்த  பெரிய  மனுசன்  எல்லாம்  முக்காடு  போட்டுட்டு  வர்றான்னு  பார்க்க ) 


ஒரு  நாட்டியக்காரியின்  ஆடலில்  மயங்கி  மன்னர்  உன்னை இந்த  அந்தப்புரத்துலயே  வெச்சுக்கறேன்கறார்.  அந்த  பொண்ணுக்கு  ஒரு  அண்ணன்  இருக்கான். அவனை  என்ன  பண்ண?னு  கேட்டா  இனிமே  அவன் தான்  எனக்கு  பாடி  கார்டு  அப்டிங்கறார். பாடிக்கு  மசாஜ்  பண்ண   தங்கச்சி . பாடிகார்டா  மச்சின்ன். வடிவேலு  ஒரு  படத்துல   அக்கா  உனக்கு  பேக்கரி  எனக்கு  டீலிங்  பேசுவாரே  அப்டி ஆகிப்போச்சு 


கொஞ்ச  நாள்  போனதும்  ஆட்டக்காரி  மகாராணி  ஆகிடறா.
 மகாராணி  ஆனதும்  சொந்த  அண்ணனையே  விஷம்  வெச்சு  கொன்னுடறா.மன்னரை  ஏரில  பரிசல்ல  போகும்போது  தள்ளி விட்டுடறா.  ஆட்களை  வெச்சு  மன்னன்  வாரிசுகள்  இருக்கும்  மாளிகையை   தீக்கு  இரையாக்கிடறா

  என்ன  இது ? ஹீரோவுக்கு  என்னதான்  வேலை ?னு  கேட்கறிங்களா?

  20  வருடங்கள் போகுது 

  ஊரில்  ஒரு  புரட்சி இளைஞர்  தோன்றுகிறார். நாட்டு  மக்களுக்கு  விதிக்கப்படும்  அநியாய  வரியை  எதிர்க்கிறார். தீவிரவாதி  என  முத்திரை  குத்தப்பட்டு   அரசாங்கத்தால்  தேடப்டும்   நபர்  ஆகறார்


 இப்போ  மகாராணி  கூட  ஒரு  யோகி  இருக்கார் . தளபதி  இருக்கார் . தளபதிக்கு  ஒரு  தங்கை .  மகாராணி (  முன்னாள்  ஆட்டக்காரி )  அந்த  தங்கயை  காட்டுக்கு  அனுப்பி  புர்ட்சி  இளைஞனை  மயக்கி  அழிக்க  கட்ட்ளை  இடுகிறார்


 இது  ஒரு  பக்கம்  போய்க்கிட்டு இருக்கும்போது  அர்ண்மனை  ல  அப்பப்ப  ஒரு  பேய்  மாதிரி  உருவம்  மகாராணியை  மிரட்டிட்டு  இருக்கு . வேற  யார்  கண்ணுக்கும்  அது  தெரியல . மகாராணி  கிட்டே  நீ  செஞ்ச  தப்பை  எல்லாம்  ஒத்துக்க , இல்லை  உன்னை  விட  மாட்டேன்னு  மிரட்டுது 

 புரட்சி  இளைஞன்  பிடிபட்டாரா?  மகாராணி  அனுப்பிய  பெண்  என்ன  செய்தார் ? அந்த  மர்ம  யோகி  யார் ?  அந்தப்பேய்  யார்?  இவை  எல்லாம்  யூ  ட்யூப்ல  காண்க 


 கிட்டத்தட்ட 71  வருடங்களுக்கு  முன்  வந்த  படத்தை  இப்பவும்  பார்க்க  முடிகிறது  போர்  அடிக்கல  என்பது  ஆச்சரியம்  தான் 


புரட்சி  இளைஞராக  எம்  ஜி ஆர்  வழக்கம்  போல் அனாயசமான  நடிப்பு  வாள்  சண்டை  உண்டு .    ஒரு  ஆச்சரியமான  விஷயம்  நம்பியார்  எம் ஜிஆர்ன்  நண்பராக  வர்றார்

நாயகியின்  பேரு  மாதுரியாம்  நல்ல  தமிழ்  உச்சரிப்பு. அஞ்சலி  தேவி  நடிப்பு  அருமை 

 ஜாவர்  சீதாராமன்  எம்  ஜி ஆருடன்  இணைந்து  நடித்த  ஒரே   படம்  இதுதான்

 இந்தப்படத்தின்  கதை   வில்லியம்  ஷேக்ஸ்பியர்   எழுதிய  வெஞ்ச்ன்ஸ் , மெகாபத் , ராபின்  ஹூட்  நாவலின்  தழுவல்  இது 

 பாடலக்ள் 

1  அழகான பெண்மானைப் பார்
அலைபாயும் கண்வீச்சு பார்

2  இரவின் அமைதியிலே
தென்றல் இனிமையிலே

3  கண்ணின் கருமணியே கலாவதி
இசைசேர் காவியம் நீ,
கவிஞனும் நானே
\


 சபாஷ்  டைரக்டர்

1  அந்தப்பேய்  வரும்  காட்சிகள்  அந்தக்காலத்தில்  செம  திகிலா  இருந்துச்சாம்,  குழந்தைகள்  பார்த்தா  பயந்துக்குவாங்கனு  ஏ சர்ட்டிஃபிகேட்  குடுத்திருக்காங்க 

2   க்ளைமாக்ஸ்    ட்விஸ்ட்    நல்லாருந்தது 

3  பிளான்  பண்ணி  கேரக்டர்  டிசைன்  பண்ணாங்களா? எதேச்சையா  அமைஞ்சுதா  தெரில  அதுலயே  எம்  ஜி ஆர்  ஏழைகளுக்கு  உதவுபராக   மக்களை  வசீகரிப்பவராக  காட்டிக்கொண்டது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ்

1    அந்தக்காலத்தில்  இளவரசர்கள்  குருகுலத்தில்  வாள்  பயிற்சி  வில்    பயிற்சி  பெறுவது  போல  நீச்சல்  பயிற்சி  இருக்காதா? ஒரு  மன்னருக்கு  நீச்சல்  தெரியாதா?  அகழி  யில் எல்லாம்  நீந்த  வேண்டி  இருக்குமே?  எதை  வைத்து    மன்னர்  ஏரியில்  மூழ்கினார்னு  சொல்றாங்க ?   (  ட்விஸ்ட்ல  ஒரு  சமாளிப்பு  இருக்கும் ஆனா  என்  கேள்வி  மன்னர்  நீரில்  மூழ்கினார்  என்ப்தை  எப்படி  நம்பறாங்க ? ) 

2  அந்தப்புரத்தில்  , சமையல்  அறையில்  அதிகாரம்  உள்ள  மகாராணி  உணவில்  விஷம்  வைத்து  மன்னரைக்கொல்வதுதானே  சேஃப்டி ?  பல்லி விழுந்தது  டைனோசர்  விழுந்ததுனு  கதை  விட்டுக்கலாம்.  அவுட்டோர்  கூட்டிட்டுப்போய்  கொல்வது  ரிஸ்க்  ஆச்சே? 

3   இறந்ததாக  கருதப்படும்  மன்னர்  20  வ்ருடங்களாக  அந்த  அரணமனைல  மாறு  வேஷத்துல  இருக்கார்னு  காட்றாங்க / அந்தாளு  லூசா?   எதுக்கு  தண்டமா  20  வருடங்கள்  வேஸ்ட்  பண்ணாரு ? ஆட்டக்காரி  என்ற  தனி  நபரை  எதிர்க்க  முடியாதா?  அதுக்கு  விளக்கம்  பட்த்தில்  இல்லை 


4   புரட்சி  இளைஞர்  படம்  போட்ட  45  வது  நிமிசத்தில்  அரண்மனைக்கே  வந்து  மகாராணியை  பணயமா  பிடிச்சுக்கறார் . அப்பவே  போட்டுத்தள்ளி  இருந்தா  படம்  அப்பவே  முடிஞ்சிருக்கும் . 10  பக்கத்துக்கு  வசனம்  பேசிட்டு  சரி  நான் போய்ட்டு  வரேன்  பாய்  பாய்  சொல்றாரு 


5  ஆட்டக்காரி  ஆகிய  மகாராணி  சொந்த்  அண்னனை யும் புருசனையும் கொன்னுட்டு யாருக்காக  வாழனும் ??  அதுல  என்ன  யூஸ்? அதிகார  போதை  தவிர ... 


  சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  ப்ழைய  படம்தானேனு  அசால்ட்டா  விட்றாதீங்க , இண்ட்ரெஸ்ட்டா   போகுது , பார்க்கலாம்  ரேட்டிங்  3 /.5 

மர்மயோகி திரைப்பட விளம்பரம்
இயக்கம்கே. ராம்நாத்
தயாரிப்புஜூபிடர் பிக்சர்ஸ் எம். சோமசுந்தரம்
திரைக்கதைஏ. எஸ். ஏ. சாமி
இசைசி. ஆர். சுப்பராமன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
நடிப்புஎம். ஜி. ஆர்
செருகளத்தூர் சாமா
நம்பியார்
எஸ். ஏ. நடராஜன்
ஜாவர் சீதாராமன்
அஞ்சலி தேவி
மாதுரி தேவி
பண்டரிபாய்
எம். எஸ். எஸ். பாக்கியம்
ஒளிப்பதிவுஎம்.மஸ்தான் \ டபிள்யூ.ஆர்.சுப்பாராவ்[ தந்திரக்காட்சிகள் மட்டும்].
படத்தொகுப்புஎம். ஏ. திருமுகம்
வெளியீடுபெப்ரவரி 21951
ஓட்டம்.
நீளம்15760 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்