Showing posts with label மொசக்குட்டி - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label மொசக்குட்டி - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, December 03, 2014

மொசக்குட்டி - சினிமா விமர்சனம்

மொசக்குட்டின்னா  என்ன அர்த்தமா  இருக்கும்னு யாரும் மண்டையைப்போட்டுக்குழப்பிக்க வேண்டாம்.கதிரேசன் எப்படி  செல்லமா கத்தி ஆனாரோ அப்படி  மொசக்க  செல்லமா  மொசக்குட்டி.நம்ம  சவுகரியத்துக்கு  ஒரு டைட்டில்  வெச்சுக்கிட்டு அதை எப்டியாவது  நியாயம்  கற்பிப்பதுதான் இப்பத்த  ட்ரெண்ட்.

சரி , படத்தோட  கதைக்கு  வருவோம்.

ஊர்ல  ஒரு  பெரிய  மனுஷன்.அவன்   கடத்தல் வேலை;ல  பணம்  சேர்த்து பணக்காரன் ஆகறான்.அதுக்கு  உதவியா  இருக்கறது  நம்ம  ஹீரோ.முதலாளி  மகளையே  லவ்வறாரு. பாப்பாவும்  தான்.

 எனக்கு  ஒரு விஷயம்   தான்  புரிய  மாட்டேங்குது. நிஜ வாழ்வில்  நம்ம  டேமேஜர் / எம் டி / ஓனர்  பொண்னுங்க  எல்லாம்  நம்மை  நாயை விடக்கேவலமா  ஒரு பார்வை  பார்க்குங்க. கண்டுக்கவே மாட்டாங்க . ஆனா  சினிமா ல  மட்டும்  தலைக்கு எண்ணெயே  விடாம   , ஹேர் கட்டே  பண்ணாத பரதேசிப்பன்னாடைங்களைத்தான்  ஹீரோயின்  லவ்  பண்ணுங்க .


2  பேரும்  லவ்  பண்றது   வீட்டுக்குத்தெரிஞ்சு  ஹீரோயினை அவங்கப்பா கேரளாக்கு அனுப்பிடறார். ஹீரோவை  ஜெயிலுக்கு அனுப்பிடறார்.


 இதுவரை  ஜாலி  கேலி  கிண்டல்னு வழக்கமான   மொக்கை தமிழ் சினிமா  ரூட்ல  திரைக்கதை  பயணிக்குது.


இடைவேளைக்குப்பின்  ஹீரோயின்  சித்தப்பா வீட்டில்  தங்கி  இருக்கு. அதே  வீட்டில்  ஹீரோ  வேலைக்கு  சேர்ந்து  ஹீரோயினை  எப்படி  கைப்பிடிக்கறார் என்பதே  கதை .



ஹீரோ  புது முகம் போல  . க்ளோசப் ல  காட்டும்போது  லைட்டா  வாமிட்  வர்ற  மாதிரி   இருக்கு . உருவு கண்டு  எள்ளாமை வேண்டும் -னு  சொல்லி  இருக்காங்க  தான் . அதுக்காக இப்படியா? பரட்டைத்தலை ,  ஷேவ் பண்ணாத  முகம் . சகிக்கலை. என்ன   கெட்டப்போ ?நமக்கு  ஏதாவது  ஒரு விஷயம்  வர்லைன்னா   விட்டுடனும் .    ரொம்ப  பம்மக்கூடாது . டான்சே  வராத  ஆள்  கிட்டே பிரபு  தேவா   மாதிரி   , விஜய்  மாதிரி  மூவ்மெண்ட்ஸ்  குடுத்தா   அவர்  என்ன  பண்ணுவாரு?


 சென்றாயன்  தான்  காமெடி . சுமார்  தான். அவர்  அடிக்கும் கூத்துகள்  பல  இடங்களில்  எரிச்சல்  தான் வர வைக்குது.


பின்  பாதியில்  வந்தாலும்  பசுபதி  நல்ல  குணச்சித்திர நடிப்பு . எதிரிக்கு  தன் கையால்   வில்லன்  சாப்பாடு  பரிமாறுவதும்  , பின் அவனைக்கொலை  செய்வதும் இன்னும் எத்தனை படத்தில்  பார்க்க  வேண்டி  வருமோ? 


 ஹீரோயின்  ஒரு சுமார்  முக  குமாரி. ஃபைனான்சியர்  பொண்ணுனு நினைக்கறேன்.  குண்டு முகம், ஒல்லி தேகம்.40  மார்க் தான்  தேறும் . டூயட் காட்சிகளில்  எல்லாம்  ஜோதிகா  மாதிரி  சேஷ்டைக:ள்   எல்லாம்  பண்ணி கடுப்பைக்கிளப்புது,

பாடல்கள்  2   சுமார்  ரகம். ஒளிப்பதிவு  பக்கா .


மனதைக் கவர்ந்த  வசனங்கள்


மாடர்ன் யுகத்துல ,FB,SMSனு 1000,வழி முறைகள்  காதலை வெளிப்படுத்த வந்திருக்கலாம்.ஆனா காதல் கடிதம் தான் ரத்தத்தால எழுத முடியும்

இந்தாங்க ரோஸ்.
மிஸ்!,எனக்கு?என் பேரு சென்று!
இந்தாங்க உங்களுக்கும் ஒன்று!

ஐ.நன்று



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


 1  ஹீரோயின்  ஹீரோவை  லாட்ஜ்க்கு வரச்சொல்லி கலாய்ப்பது , சரக்கு பாட்டில் எடுத்துட்டு  தனிமை இடத்துக்கு வர வைப்பது , கல்யாண மண்டபத்துக்கு  தாலியுடன்  வர வைத்து  விளையாட்டுக்காட்டுவது என  காதல்  போர்சன்  சுவராஸ்யம் 


2  அடியே  நீ என்னைத்திட்டுவது  புடிக்குது , துப்புவது ருசிக்குது   பாடல் வரிகள்  எல்லாம்  ப்ல  இடங்களில்  ரசிக்க வைக்குது


3   ஆசைப்படு பாடல்  காட்சியில்  புல்வெளியில்  இயற்கையாகவே  இதய  வடிவம்  அமைத்த  ஆர்ட்  டைரக்சன்  அழகு


4   வாடா  என்  புருஷா   பாடல் காட்சியில்  விறகு , மரக்கட்டைகளுடன்  ஆர்ட்  டைரக்சன்  ஒர்க்  அழகு

5  முன்  பாதி  ஜாலி காமெடி  கலாட்டா  , பின் பாதி பதைபதைப்பு  என   பிரிச்சு  திரைக்கதை  அமைத்த  விதம்  கன கச்சிதம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  ஹீரோ  , அவர்  ஃபிரண்ட்  2  பேருக்கும்  செல்  ஃபோனில்  இங்க்லீஷில்  எஸ் எம் எஸ் டைப்  பண்ணத்தெரியாது. ஆனா  மெசேஜை படிக்க  மட்டும்  முடியும் . அது  எப்படி ?  படிப்பறிவே   இல்லாதவங்க  இங்க்லீஷ்  படிக்கறாங்க ?


2 தப்பு  செஞ்ச அப்பா  வீட்டில் இல்லை. அவரை கைது பண்ண வந்த  இன்ஸ்பெக்டர்   வீட்டில்  இருக்கும்  நாயகியை   தலைமுடியை பிடிச்சு  இழுத்துட்டு வர்றாரு . இதுக்கு சட்டத்தில்  இடமே  இல்லையே? ஒரு லேடியை  அரெஸ்ட் பண்ணியோ  விசாரணைக்கோ  கூட்டி வரனும்னா  கூட லெடி கான்ஸ்டபிள்  வேணும் . அவங்க தான்  தொட்டு கூட்டிட்டு வர முடியும் 


3  வில்லனோட  மனைவி  ஒரு காட்சியில்  தட்டில்  சூடம் பத்த  வெச்சு  வில்லனை சத்தியம்  பண்ணச்சொல்றார். அவர்  யோசிக்கும்போது  தன்  மீது  மண்ணெண்ணெய்  ஊத்திக்கிட்டு   தீப்பெட்டி  எடுத்து   பத்திக்குவேன்னு  மிரட்றார். ஆல்ரெடி  சூடம்  எரிஞ்சுக்கிட்டு  தானே  இருக்கு ? அதை எடுத்துக்கலாமே?  ஏன்  தீக்குச்சியை  வேஸ்ட்டிங்?


4  கார் டிரைவரா  வரும் ஹீரோ  பசுபதி  கிட்டே  ரேடியேட்டர்  ரிப்பேர்னு  பொய்  சொல்லும்போது   பசுபதி  “  2 நாள்  முன்னால  தானே சர்வீஸுக்கு  விட்டு ரேடியேட்டர் புதுசு  போட்டுச்சு?”-னு  கேட்கறார்.அதே  சீன்ல   இன்னொரு ஆள்  போன வா ரம்  தான் ரேடியேட்டர்  மாத்தினோம்கறாரு




சி  பி  கமெண்ட்  -  பி  செண்ட்டர் ரசிகர்களுக்கான சராசரி  காதல்  கதை . ரொம்ப  மோசம்  இல்லை . சுமார்

ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40


குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - சுமார்


 ரேட்டிங்  = 2.25  / 5


சிதம்பரம்  லேனா.  தியேட்டர்ல  பத்தோட  பதினொண்ணா இந்தப்படம் பார்த்தேன் டோட்ட ல்   ஆடியன்சே  11  பேர்  தான்