Showing posts with label பாரு பாரு பட்டணம் பாரு 1986 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ). Show all posts
Showing posts with label பாரு பாரு பட்டணம் பாரு 1986 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி ). Show all posts

Friday, August 05, 2022

பாரு பாரு பட்டணம் பாரு 1986 - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி )


 சில பாட்டுக்களை  கேட்டுட்டு  படம்  பார்த்தா  அட  இந்தப்பாட்டா  இந்தப்படத்துல  என்னும்  ஆச்சரியம்  வரும்,  குறிப்பா  சாதாரண  காமெடிபபடத்துல  பிரமாதமான  மெலோடி  சாங்ஸ்  எல்லாம்  அபூர்வம்,  யார்  தூரிகை  தந்த  ஓவியம்   செமயான  மெலோடி  இதுலதான் .  தென்றல்  வரும்  என்னை  அழைக்கும்  பாட்டு  கூட இதுலதான் . இது  ரிலீஸ்  ஆகும்போது  பிரமாதமான  விளம்பரம்  பிரம்மாண்டமான  போஸ்டர்  டிசைன்ல  ரிலீஸ்  ஆச்சு  நல்ல  காமெடி  கண்ட்டெண்ட் தான்  ஆனா பிரமாதமா  போகலை  மீடியமாதான்  ஓடுச்சு , 


 ஸ்பாய்லர்  அலெர்ட் 


ஹீரோ  ஜோசியத்துல  அதிக  நம்பிக்கை  உள்ளவர்  அவர்  ஜாதகப்படி  ஏழரை  நாட்டு  சனி  முடிய இன்னும்  2  வருசம்  தான்  இருக்கு  அது  முடிஞ்சுட்டா  அவர்  டாப்பா  வந்துடுவாராம், ஆடி  போய்  ஆவணி  வந்தா  டாப்பா  வந்துடுவான்  மொமெண்ட்ல  சுத்திட்டு  இருக்கார் .  சாதா  மிடில்  கிளாஸ்  ஃபேமிலி


ஹீரோயின்  பணக்கார  வீட்டுப்பொண்ணு  ஹீரோ கிட்டே  ஜோசியர்  உன்  அதிர்ஷடம்  சீக்கிரம்  வர  ஒரு  ஐடியா இருக்கு  ஒரு  கன்னிப்பெண்ணுக்கு  பட்டுபுடவை  குங்குமம்    ஃபேமிலி  பேக்கை  குடுத்துட்டு  வா  அப்டிங்கறார் 


 ஹீரோ  ஹீரோயின்  கிட்டே  அதை  யதார்த்தமா  தர  ஹீரோ   தடக்னு  ஹீரோவை  லவ்வறார்.   சிங்கிள்  டீக்குக்கூட வழி  இல்லாத  ஆள்   சிண்ட்ரெல்லா  மாதிரி    பணக்காரப்பெண்  கிடைச்சா  லவ்விட்டுப்போக  வேண்டியதுதானே?


எனக்கு  ராயல்  ட்ரீட்மெண்ட்  கிடைக்கும்  ஐ  ஆம்  வெயிட்டிங்க்னு  பஞ்ச் டயலாக்  பேசிட்டு  இருக்காரு 


 ஹீரோயினோட  அப்பா  ஹீரோயினுக்கு  மாமாவா  மாறி  ஐடியா  குடுக்கறாரு. அதாவது  பேப்பர்ல  ஒரு  விளம்பரம் , ஹீரோயின்  ஃபோட்டோ  போட்டு   இந்தப்பெண்ணைகட்டிக்கப்போறவர்   இளவரச்ர்  ஆகப்போறார்  அதிர்ஷ்ட  ஜாதகம்  அப்டினு  ப்ரூடா  விட்டு     விளம்பரம்  தர்றார்


  அடுத்த  நாளே  வீட்ல  கூட்டம்  கூடிடுது  நம்ம  ஹீரோவும்  அங்கே  ஆஜர் . ஹீரோ  ஹீரோயினைக்கட்டிக்க  ரெடி . இப்ப  படம்  முடியப்போகுதா? ஒரு  மணி  நேரம்  கூட  ஆகலையே?னு  நினைச்சா  ஹீரோயினோட  அப்பா  ஒரு  க்ண்டிஷன்  போடறார்


 வேலைக்கு  சேரும்போது  டெபசிட்  கட்ற  மாதிரி  ஹீரோயினைக்கட்டிக்க  ஒரு  குறிப்பிட்ட  தொகை  கட்டனும்  இது  எதுக்குன்னா  ஹீரோ   உழைச்சு  சம்பாதிச்சா  தான்  பணத்தோட  அருமை  தெரியும்கறதுக்காக 


ஹீரோக்கு  ஒரு  வீணாப்போனவன் ஐடியா   தர்றார்ன் . எப்படியும்  மேரேஜ்ல  மொய்ப்பணம்  வருமில்ல  அதில  கலக்கிடலாம்கறான்   ஹீரோ  மேரேஜ்  அன்னைக்கு  தர்றதா  சொல்லி  பத்திரிக்கை  எல்லாம்  அடிச்சுடறான் 


 டும்டும்டும்  கொட்டுன  பின்   ஹீரோவால  பணம்  தர  முடியலை . பணம்  தந்தாதான்  மேற்படி  விஷயம்  நடக்கும்னு   மாமனார்  க்ண்டிஷன்  போட  அதுக்குப்பின்  நடக்கும்  காமெடிக்கூத்துக்கள்  தான்  படம்  


ஹீரோவா  மோகன் . சகாதேவன்  மகாதேவன்   மாதிரி  காமெடி  சப்ஜெக்ட்ஸ்  இவருக்கு  அப்பப்ப  கை  கொடுத்தாலும்  லவ்  சப்ஜெக்ட்ஸ் தான்   இவரைத்தூக்கி  நிறுத்துச்சு . பேராசைப்படும்  சோம்பேறி  கேரக்டர் ல  நல்லாவே  நடிச்சிருந்தாரு 


 ஹீரோயினா  ரஞ்சனி . நல்லா  படிச்சுக்குங்க . ரஞ்சிதா  வேற  ரஞ்சனி  வேற . இவரு  கிராமத்துப்பெண்  வேடம்  அளவுக்கு  நகரத்துப்பெண்  ரோல்  செட்  ஆகல /  அலல்து  பாரதிராஜா  வில்லேஜ்கேர்ளா  இவரை  மோல்டு  பண்ணுனது  மாதிரி  மனோபாலா  சிட்டி  கேர்ளா  மோல்டு  பண்ணலைனும்  சொல்லலாம் .


ஜோசியராக  நிஜ  ஜோசியரான  வெண்ணிற  அடை  மூர்த்தி  வழக்கமா  டபுள்  மீனிங்  பேசும்  இவர்  இதுல  அடக்கி   வாசிச்சு  இருக்கர் 


ஹீரோவின்  தங்கையா குயிலி  வாயாடியா  நல்லா  நடிச்சிருந்தாரு  கன்யாஸ்த்ரியா மாறுவது  உருக்கம்


கல்யாண  மோசடி  புரோக்கராக  தேங்காய்  சீனிவாசன்  வில்லதனம்  மிக்க  கேரக்ட்ர்  பல கெட்டப்  சேஞ்ச்  வேற 


  ஆச்சி  மனோரமா  ஒரு  கனமான  ரோல் . நல்லா  பண்ணி  இருந்தாங்க


காமெடிபடத்துல  லாஜிக்  பார்க்கக்கூடாதுனு  சொல்வாங்க  இருந்தாலும்  எனக்கு  மன்சு  ஆறலை  


 வில்லன்  தேங்காய்  சீனிவாசன்  பெண்  பார்க்க  மோகனைக்கூட்டிட்டுப்போய்  பஜ்ஜி  சொஜ்ஜி  எல்லாம்  சாப்டுட்டு  பிடிச்சிருக்குனு  மட்டும்  நீ  சொல்  மீதியை  நான்  பார்த்துக்கறேன்  என  சொல்லி  மோகனை  ஏமாற்றுவது  அல்லது  மோகன்  ஏமாறுவது  நம்பும்படி  இல்லை 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  காமெடிப்படத்தில்  சோக  செண்ட்டிமென்ட்ஸ்  வைக்காமல்  இருப்பது  நலம்  என்பது என்  தனிப்பட்ட  கருத்து  பின்  பாதியில்  ஓவர்  செண்ட்டிமெண்ட்  சீன்கள்  உண்டு  மீதி  முக்கால்வாசி  காமெடி  தான்  பார்க்கலாம்  ரேட்டிங்  2/5 / 5  யூ ட்யூப்ல  கிடைக்குது