Showing posts with label பதிவர்கள். Show all posts
Showing posts with label பதிவர்கள். Show all posts

Wednesday, May 02, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 8 ( நெல்லை ஃபோட்டோக்கள் உடன்)

3
 கூடல் பாலா, சி.பி -கவிதை வீதி ரவுடி சவுந்தர்

. எதாவது பத்திரிகையிலோ அல்லது வார இதழிலோ வேலை பார்த்திருக்கிறீரா ?


 இல்லை.. ஆரம்பத்துல ஆனந்த விகடன்ல பணி ஆற்ற அடங்காத ஆர்வமும், தணியாத தாகமும் இருந்துச்சு.. அப்புறம் ஒரு தடவை ஹாய் மதன் எழுதுன கட்டுரைல பத்திரிக்கையில் பணி ஆற்ற நினைப்பவர்கள் தங்கள் சுதந்திரத்தை படைப்புத்திறனை அடகு வைக்க வேண்டி இருக்கும், ஒரு குறுகலான பாதையில் தான் பயணிக்க வேண்டும் என்றார்.. அப்போ இருந்து அந்த ஆர்வம் குறைஞ்சுடுச்சு.. ஹாய் மதன் ஆனந்த விகடனை விட்டு விலகும்போதும், குமுதத்தில் ஒரு வருடம் தீவிரமா பணி ஆற்றிய போதும் இந்த கருத்தை சொன்னார்..



37. வெறும் எழுத்து மட்டுமே படைப்பாளிக்கு சோறு போடுமா ?                    
                     

தமிழ் நாட்டு எழுத்தாளர்கள்க்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.. ஆனானப்பட்ட ராஜேஷ்குமாரே மாலை மதி நாவலுக்கு ரூ 5000 தான் வாங்கினார்.. சுபா சூப்பர் நாவல்-ல் ரூ 2000 மட்டுமே வாங்கினார்.. சுபா வசனம் எழுதிய நாம் இருவர் நமக்கு இருவர் படத்துக்கு சம்பளமாக ரூ 1 லட்சம் தான் வாங்கினார்.. ஆனாலும் இதையும் தாண்டி சுஜாதா, பாலகுமாரன் என சம்பாதிச்சவங்களும் இருக்காங்க .. காமெடி ஸ்கிரிப்ட் மட்டுமே எழுதி எஸ் வி சேகர், கிரெசி மோகன், விவேக் என நல்லா சம்பாதிச்சவங்க இருக்காங்க.. மைன்ஸ் பிளஸ் எல்லாம் இருக்கு. கூட்டி கழிச்சு பார்த்தா எழுத்து சோறு போடாது, சாம்பார், ரசம் எதுவும் ஊத்தாது.. சும்மா ஒரு புகழ் போதையை, பரவலான அறிமுகத்தை தரும்.. அதனால நாம பொழப்பை பார்க்க ஏதாவது
வேலைக்கு போறதுதான்  நல்லது



கோவை சம்பத், நாய் நக்ஸ் நக்கீரன், ஆல்வேஸ் பிஸி(!!) சி.பி ,சின்ன வீடு பல வைத்திருக்கும் சுரேஷ்


38. படைப்புலக பிரபலங்களுடனான சுவையான நினைவுகள் எதாவது இருந்தால் பகிருங்களேன் ?    by @iyyanars                                        

சுவையான சந்திப்புகள் பல உண்டு.. அவற்றை எனது பத்திரிக்கை உலக அனுபவங்கள் தொடரில் சொல்றேன். மனதை காயப்படுத்திய ஒரு சம்பவம் சொல்றேன்.. குமுதத்தில் ஒரு கட்டுரைப்போட்டி வெச்சிருந்தாங்க.. அதில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு பெற்ற சமயம்.. அந்த செக்கை வாங்க சென்னை சென்றேன்.. போனது தான் போறோம்.. பாக்யராஜ், சுபா, பி கே பி ஆகிய பிரபலங்களை சந்திக்கலாம் என கிளம்பினேன்..

 இந்த இடத்துல தான் ஒரு தப்பு பண்ணுனேன்.. அதாவது எந்த வித அப்பாயிண்ட்மெண்ட்டோ முன் தகவலோ இல்லாமல் போனேன்.. இருந்தாலும் மற்ரவர்களை சந்தித்து விட்டேன், ஆனால் பி கே பி தூக்கக்கலக்கத்தில் கதவை திறந்தார்.. என்ன மேட்டர்? நீங்க யாரு>?  என்றார்.. அட்வான்ஸா அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி ட்டு இன்னொரு நாள் வாங்க  என அனுப்பி விட்டார்.. 

 அது 2 வகையான பாடங்களை எனக்கு கற்றிக்கொடுத்தது

1. யாராக இருந்தாலும் சந்திக்க வரும் முன்பே தகவல் தருவது

2. பிரபலங்களை சந்திக்க ஆர்வம் கொள்வதை கட்டுப்படுத்துவது



39. .உங்கள் இளமையின் ரகசியம் ?           


 எனக்கென்னமோ 35 வயசு ஆன மாதிரியும், ஆனா ஆள் பார்க்க 25 வயசுப்பையனா இருக்கற மாதிரியும் என்ன ஒரு விதண்டாவாதமான கேள்வி ராஸ்கல்ஸ்.... ( கேட்டது சீனியர் என்றால் கூட ஒரு அண்ணே போட்டுக்கொள்க) 

தினமும் காலை 5 மணீக்கு எழுந்து வாக்கிங்க், ஜாகிங்க் 4 கிமீ , பின் யோகா கொஞ்ச நேரம், பிராண யாமம் கொஞ்ச நேரம், இதெல்லாம் உடம்புக்கு. பின் மனசுக்கு புத்துணர்ச்சி அளிக்க ஈரோடு வ உ சி பார்க் மைதானத்தில் பிளஸ் டூ கேர்ள்ஸ் எக்சசைஸ், ஜாக்கிங்க் வேடிக்கை பார்த்தல் ( அதுல என்ன புத்துணர்வு ர்ன கேல்வி கேட்பவர்கள் லாலி பாப் சாப்பிடவும் )

வெறும் வயிற்றில்  1 லிட்டர்  தண்ணீர் குடிப்பேன்.. அரை வயிறு சாப்பிட்டு கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக வெச்சிருப்பேன்

 சைவம் தான்.. நோ டீ நோ காபி.. நோ டிரிங்க்ஸ் இன்க்லூடிங்க் டொரினோ, கொக்கோ கோலா லைக் 

 பாட்டில்களீல் அடைக்கப்பட பானங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை.. 

இரவில் 7.30 டூ 8 மணீக்கு டின்னர் முடிச்சுட்டு 9 மணீக்கு அல்லது 10 ,மணீக்கு தூங்கிடுவேன்.. நல்ல தூக்கம் ஆரோக்யம்


ரத்னவேல் அய்யா,நக்கீரன்,சம்பத், பிரகாஷ், கருண், சவுந்தர், லேப் டாப் மனோ

40. .மற்றவர்களின் ஆதரவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள் , உங்கள் மனைவியின் ஆதரவு எப்படி ? பதிவுலக வாழ்க்கைக்குத்தான் சார் ?   by  @arivukkarasu 


ஹி ஹி ஹி ஒரு ரகசியம் சொல்றேன்.. பதிவுலகம், ட்விட்டர் எதுவும் ஹோம் மினிஸ்டருக்கு தெரியாது.. தெரிஞ்சா டின் கட்ட்டிடுவாங்க.. போய் பொழப்பைப்பாருய்யா அப்டிம்பாங்க.. இந்த மேட்டர் வெளில தெரிய வேணாம். ஹி ஹி 

41.  எதிர்மறையான விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் ?  by @iammano    

நாம பலரை நெகடிவ்வா திங்க் பண்றப்ப நம்மை அப்படி யாரும் விமர்சனம் பண்ணக்கூடாதா? அதெல்லாம் டேக் இட் பாலிசி தான்.. கழுகு எனும் வலைத்தளம் தான் என்னை முதன் முதலாக தாக்கி பதிவிட்ட தளம்.. அதன் பின் சாம் ஆண்டர்சன், ஃபிலாசபி பிரபாகரன்,ரஹீம் கஸாலி,,புரட்சிக்காரன், உட்பட என்னை பதிவுலகில் தாக்கி பதிவு போட்டவர்கள் மட்டும் 34 பேர்.. பதிவுகளின் எண்ணிக்கை 67.. அது போக மற்ற தளங்களீல், கூகுள் பஸ்ஸீல், ஃபேஸ் புக்கில் தாக்கியவர்கள் 87 பேர்..  எல்லாம் டேக் இட் ஈசி தான்.. 

கூடல் பாலாவுடன்
42. சினிமா விமர்சகர் ஆகக் காரணம் என்ன ?  

 நான் பேசிக்கலா ஒரு சினிமா பைத்தியம்.. (பொதுவாவே பைத்தியமோ?) அதனால என்னை மாதிரி தண்டமா யாரும் காசு செலவு ப்[அண்ணிடக்கூடாதுன்னு ஒரு வார்னிங்க் தர்றதுக்காக வ்மர்சனம் எழுதறேன்.. அதுக்காக யாராவது மக்களின் பணத்தை மிச்சம் பண்ணிய மாமணி என்ற பட்டமோ, விருதோ வழங்கினா அதை கலைஞர் போல் எந்த விதமான கூச்சமோ நாச்சமோ இல்லாமல் வாங்கிக்க தயாரா இருக்கேன்.. 

43. நீங்க எப்போ அரசியலுக்கு வருவீங்க தலைவரே:-). by @arattaigirl 

ட்விட்டர்க்கு வரவேணாம்னு நேரடியா சொன்னா லாங்க் லீவ் எடுத்துக்கறேன்.. ஒய் திஸ் கொலை வெறி?அரசியல்வாதி ஆகனும்னா காக்கா பிடிக்கனும், கால்ல விழனும்.. இது நமக்கு ஆகாது.. ஆஃபீஸ்ல பிரமோஷனுக்காகவோ, இன்கிரீமெண்ட்டுக்காகவோ பல் இளிச்சே பழக்கம் இல்லாதவன் நான்.. எனக்கும் அரசியலுக்கும் உள்ள தூரம் நயன் தாராவுக்கும் தூய்மையான காதலுக்கும் உள்ல தூரம்

44. பத்திரிக்கைகளுக்கு படைப்புகளை எழுதி அனுப்புவதற்கு இன்லாந்து  லெட்டர் யூஸ் பண்றீங்களா? இல்லை போஸ்ட் கார்டா ?  by @rajanleaks  

இது நக்கலுக்காக கேட்கப்பட்ட கேள்வியா இருந்தாலும் சிரியசாவே பதில் சொல்லிடறேன்.. எந்த  ஜோக்ஸ் எழுதுனாலும் ஒன்லி கார்டுதான்.. அதுதான் சீப் அண்ட் பெஸ்ட். கதை எழுதும்போது. ஏ 4 ஒயிட் சீட்ல ஒன் சைடு மட்டும் எழுதி  ஒரு கவர்ல வெச்சு 5 ரூபா ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவேன்.. 4 பேப்பர் = 20 கிராம் = 5 ரூபா ஸ்டாம்ப்..  பல்க்கா 200 ஜோக்ஸ் அனுப்ப வேண்டி வந்தா கூரியர் பெஸ்ட்.. 10 ரூபா தான் ஆகும்.. 

 ராஜபேட்டை ராஜா, கூடல் பாலா, சி.பி , லேப் டாப் மனோ
\
45. லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா?       by @NattAnu   


ஜஸ்ட் டைம் பாஸ்க்கு தான் வந்தேன்.. நான் உள்ளே வந்து ஒரு வருஷம் தான் ஆகுது.. அதனால 4 வருடங்கள்க்கும் அதிகமாக இங்கே உள்ள சீனியர்களோட கம்ப்பேர் பண்ண முடியாது.. ஆனாலும் சராசரிக்கும் கொஞ்சம் மேலே அப்டினு ஒரு இடம் பிடிச்சதா உணர்றேன்.. அதுவே போதும்./. என் நோக்கம் சிரிக்க வைப்பது.. எண்ட்டர்டெயின் மெண்ட்.. அவ்ளவ் தான் 


diski -http://www.hotlinksin.com
தமிழ் திரட்டியில் தொடர்ந்து பதிவுகளை இணைத்து வருகிறீர்களா...? உங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் பதிவர் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது. பதிவர்களே உடனே இணைந்து பதிவுகளை தொடர்ந்து இணைத்து பரிசினை வெல்லத் தயாராகுங்கள்.

லேப் டாப் மனோ வித் வாரிசுகள், உலக சாதனை படைத்த நெல்லை பெண் ( ரோஸ் கலர்) ஃபேஸ்புக் ஸ்பெஷலிஸ்ட் கே ஆர் விஜயன், அவர் மனைவி



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  6 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html


டிஸ்கி 9.  இதன்  7 ம் பாகம் படிக்காதவங்களூக்காகhttp://www.adrasaka.com/2012/04/7.html

Thursday, April 26, 2012

நெல்லை பதிவர் சந்திப்பு + ஆஃபீசர் மகள் திருமண விழா

 

24.4.2012 அன்னைக்கு நைட் 10 மணிக்கு ட்ரெயின்.. வீடு சுரேஷ், கோவை சம்பத் 2 பேரும் ஆல்ரெடி கோவைல, திருப்பூர்ல ஏறிட்டாங்க.. நாகர் கோயில் எக்ஸ்பிரஸ்.. ஆல்ரெடி டிக்கெட் ரிசர்வ்.. நான் பிளாட் ஃபார்ம்  டிக்கெட்டும் எடுத்துட்டேன்.. அவ்ளவ் நேர்மை ஹி ஹி .என்னா ஒரு ஆச்சரியம்னா ட்ரெயின் கரெக்ட் டைம்க்கு வந்துடுச்சு..


சுரேஷ்க்கு ஃபோன் அடிச்சு எந்த கோச்னு கேட்டா “ மாப்ஸ்,.. நீ அங்கேயே இரு , நாங்க வர்றோம்”னு சொன்னாரு.. அவ்ளவ் மரியாதையா? நம்ம மேலன்னு பார்த்தா அவங்க கோச்ல 2 ஃபிகர்ஸாம்.. நான் அங்கே வந்தா பார்த்திடுவேனாம். யாம் பெற்ற இன்பம் பெறக்கூடாது இவ்வையகம்னு நினைக்கறாங்க தமிழருங்க.. அடங்கோ..

2 பேரும் பேண்ட் சர்ட் போட்டுட்டு இன் பண்ணி வருவாங்கன்னு பார்த்தா என்னமோ காலைல பீச்ல வாக்கிங்க் போற யூத்ஸ் மாதிரியே வந்தாங்க.. வந்து நான் இருந்த S6 கோச்சை ஒரு பார்வை பார்த்தாங்க.. அங்கே எதுவும் தேறலை.. ( நம்ம ராசி அப்படி. எங்கே போனாலும் ஒரு வெற்றிடம்)அப்டினு தெரிஞ்சதும் S1 TO S 12 வாக்கிங்க் கிளம்பிட்டாங்க.. டேய் டேய் வைகோ மாதிரி நடைப்பயணம் நைட் 11 மணிக்கா?ன்னு கேட்டா நம்ம பேச்சை எவன் கேட்கறான்.. ( தாலி கட்ன சம்சாரமே சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது)


 அப்புரம் டி டி ஆர் வந்து அவங்களை பேக் பண்ணி அவங்க கோச்சுக்கே அனுப்பின பின் தான் 2 பேரும் அடங்குனாங்க.. அவங்க கோச்ல இருந்த 2 ஃபிகர்ஸ் கூட இவங்க என்ன கடலை போட்டாங்கன்னு தனியா ஒரு 10 பக்ககட்டுரை போடலாம்.. ஆனா இப்போ டைம் இல்லை.. 

 காலைல 5.30 மணிக்கு  நெல்லை போய்ச்சேர்ந்தோம்..  நான் என்னமோ பெரிய அப்டேட் ஆறுமுகம் மாதிரி ட்விட்டர்ல  ஸ்டேட்டஸ் அப்டேட் பண்றேன்..  

dear nellai twitters ,i am in nellai.bharani hotel .morning 6 to 9 @room no-109. 9 to10 selvi mahaal .if u interest contact 9842713441. 


. அது எதுக்குன்னா நெல்லைல ஆண் நண்பர்கள் யாராவது இருந்தா சந்திக்கலாம்னு .. ஆனா ஒரு பய கண்டுக்கலை.. ரொம்ப கேவலமாப்போச்சு.. நெல்லையில் இருக்கும் 4 பெண் பதிவர்கள், 2 பெண் ட்வீட்டர்கள், 6 பெண் ட்வீட்டர்கள் மொத்தம் 12 பேரு ( 4 + 2 + 6 = 12 பார்த்தீங்களா? பி எஸ் சி மேத்ஸ் ஹி ஹி ) வந்து நெல்லை ரயில்வேஸ்டேஷன்ல ஆரத்தி எடுப்பாங்கன்னு பார்த்தா யாரும் வர்லை.. அவ்வ்வ் 

i dreamed all female twitters will stand in q and take aarathi to me .but nobody honour me .avvv


நெல்லை ஹோட்டல்ஸ் எல்லாம் வேஸ்ட்.. எல்லாமே ஆண் ரிசப்ஷனிஸ்ட்தான்.. நோ கேர்ள்ஸ்.. 

i dislike nellai hotel .all hotel receptionists r males .how can i time pass ?cm j u have to answer to it .

மனசை தேத்திக்கிட்டு குளிச்சு ரெடி ஆனோம்.. 


 லேப் டாப் மனோ ஃபோன் பண்ணான்.. அவன் ஃபேமிலியோட வர்றானாம்.. ங்க்கொய்யால நாங்க மட்டும் பேமானிங்க கூடவா வர்றோம்? 

இன்னொரு ரூம்ல செம மப்புல நாய் நக்ஸ் பிளாக் ஓனர் நக்கீரன் வந்தார். போலீஸ் வேலை செஞ்சேன்.. ஊர்க்காவல் படைல அப்டினு சொன்ன கவிதை வீதி பிரகாஷ் வந்தார்.. ஆள் அசல் ரவுடி மாதிரியே இருக்காரு.. இந்தாளை பார்த்தா பயம் தான் வரும்,. ஆனா பாருங்க கவிதை எழுதியே 12 ஃபிகர்ஸை கரெக்ட் பண்ணிட்டாரு/ ( நான் சொன்ன நிலவரம்  அவர் பிளஸ் டூ - டூ காலேஜ் படிச்ச டைம் மட்டும் , அதுக்குப்பிறகு எத்தனைன்னு இன்னும் கண்டு பிடிக்கலை.. ஒரு தனிக்குழு அமைச்சு தான் கவுண்ட் பண்னச்சொல்லனும். )


வேடந்தாங்கல் கருண் நடிகர் கரண் மாதிரி இருந்தார்.. டீ குடிச்சுட்டு இருந்தார். கேட்டா காபி பேஸ்ட் பதிவர்னு பேர் வந்துடக்கூடாதுன்னு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாம்.. அடங்கோ.. அப்புறம் தாதா தமிழ்வாசி பிரகாஷ் வந்தார்.. அவர் திருப்பூர்  பனியன் 2 போட்டு ஒரு டி சர்ட் போட்டு அதுக்கு மேல ஒரு சர்ட் போட்டு வந்தார்.. யோவ் என்னய்யா இதுன்னா அதுதான் ஃபேஷனாம்.. அடப்பாவி.. 



 ராஜபேட்டை ராஜா  பிளாக் ஃபோட்டோவுல பார்த்தா ஆள் ஜம்முனு மாப்ளை மாதிரி பெரிய ஆள் மாதிரி இருந்தாரு , நேர்ல பார்த்தா குணால்க்கு மீசை வெச்ச மாதிரி சின்னப்பையனா இருந்தாரு.. 


எல்லாரும் கோயிலுக்கு போனோம்.. சாமி கும்பிட அல்ல.. எல்லாரையும் பார்த்தா திருடனுங்க மாதிரியே ஒரு லுக்.. திருநீறு, குங்குமம், சந்தனம் வெச்சா கொஞ்சம் கவுரமான தோற்றம் வரும் பாருங்க.. அதான்.. போற வழில மெடிக்கல்ஷாப்ல கேமராவுக்கு  செல் 2 வாங்கி போட்டாச்சு.. கோயில்ல அர்ச்சகர் எங்க கூட்டத்தை பார்த்து எப்படியும் 50 ரூபா தேத்திடலாம்னு நினச்சிருப்பார்.. ஒரு பய 10 பைசா போடலை. ராஸ்கல்ஸ் ஹி ஹி 

எல்லாரும் மண்டபத்துக்கு போனோம்.. அங்கே மண்டப வாசல்ல மனதோடு மட்டும் கவுசல்யா பச்சைக்கலர் புடவை, பச்சைக்கலர் ஜாக்கெட்டு,  எல்லாம் பச்சை பச்சையா டிரஸ்சிங்க்ல சந்தனம் குடுத்துட்டு இருந்தாரு.. விசாரிச்சா ( நான் விசாரிக்கலை. மனோவை விட்டு விசாரிக்கச்சொன்னேன்.. மீ கூச்ச சுபாவம்,.,. நோ டாக்கிங்க் வித் லேடீஸ் ஹி ஹி மை ஓன் சம்சாரம் கூடவே ஆஃப்டர் மேரேஜ்  30 நாள்கழிச்சு தான் டாக் ஹி ஹி )

பசுமை விடியல்னு ஒரு அமைப்பாம்.. அதை இவங்க நடத்தறாங்க போல .. மரம் அதாவது மரக்கன்று நடும் அமைப்பு போல .. அதை பிரபலப்படுத்த அப்படி டிரஸ்சிங்க்காம்// ஆனா புதுமையான விஷயம் ஒண்ணு பார்த்தேன்.. அதாவது மேரேஜ்க்கு வந்தவங்க எல்லாத்துக்கும் தலா ஒரு மரக்கன்று பரிசா தர்றாங்க.. நல்ல முயற்சி.. ஆரோக்யமான விஷயம் ( ஆனா தாம்பூலப்பைல  தேங்காய் வாங்கிட்டுப்போய் வீட்ல சட்னி செய்யற மாதிரி வருமா? ஹி ஹி )



ஆஃபீசரை பார்த்தோம்.. என்னமோ அவருக்கே கல்யாணம் மாதிரி பட்டு வேட்டி பட்டு சட்டை எல்லாம் போட்டு கலக்கிட்டு இருந்தார்.. பியூட்டி பார்லர் போய் மேக்கப் வேற.. தலைக்கு டை அடிச்சு, முகத்துக்கு ஃபேரன் லவ்லி, ரோஸ் பவுடர் போட்டு ஜம்முன்னு இருந்தார்.. ( நல்ல வேளை லிப்ஸ்டிக் போடலை) 

எங்களை எல்லாம் வரவேற்று போய் டிஃபன் சாப்பிட்டு வாங்கன்னார்.. இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரா, சாப்பாட்டு ராமான்னு மனசுல  சொல்லிக்கிட்டு  போய் டிஃபன் சாப்ப்பிட்டு வந்தோம்.. 

 மனோ ஃபோன் பண்ணுனான்.. ஹோட்டல்ல இருக்கானாம்.. அடப்பாவி.. நாங்க இங்கே மண்டபத்துல கடமை ஆற்றிட்டு இருக்கோம்னேன்.. திட்டிட்டே ஃபோனை கட் பண்ணிட்டு பஸ் ஏறி மண்டபம் வந்தான்.. கடைசி வரை கண்ல கூலிங்க் கிளாஸ், கைல  லேப் டாப் விட்டு பிரியவே இல்லையே அவன்.. 

கல்யாண முகூர்த்தம் காலை 9 டூ 10.30.. மாப்ளை ஜம்முனு சேட் பையன் கணக்கா இருந்தார்.. பொண்ணு ஆஃபீசர் ஜாடை.. நானும், பிரகாஷூம் மனசுக்குள்ள ஸ்ரீராம்னு நினச்சுக்குட்டு வளைச்சு வளைச்சு ஃபோட்டோ எடுத்தோம்.. 



ரத்னவேல் அய்யா , அவங்க ஃபேமிலியோட வந்திருந்தார்.. அவர் கிளி பொம்மஒ மாதிரி ஒண்ணு நல்ல கைவினைப்பொருள் மாதிரி வெச்சிருந்தாரு.. குட் கிரியேட்டிவ்,..

 நாய்க்குட்டி மனசு ரூபினா மேடம் வந்தாங்க..


கூடல் பாலா வந்தார்.. கூடங்குளம் அணு உலை பிரச்சனையில் மக்களூக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் மிக முக்கிய பதிவர்.. அவர் கூட கொஞ்ச நேரம் பேசிட்டு 11 மணிக்கு மறுபடி ரூம்க்கு போய் ரெஸ்ட் எடுத்தோம். 

 நான், ராஜா, மனோ,கருண் 4 பேரும்  ஒரு ரூம்ல டி வி பார்த்துட்டு இருந்தோம் ( சிரிப்புச்சேனல்).. நாய் நக்ஸ் நக்கீரன்,பிரகாஷ்,வீடு சுரேஷ், கோவை சம்பத், சவுந்தர் 5 பேரும்  வேற ஒரு ரூம்ல சரக்கு அடிச்சு மட்டை ஆகிட்டாங்க........... 

 இந்த டைம்ல ஒரு கூத்து.. சவுந்தர் மட்டும் நைஸா எங்க ரூம்க்கு வந்து இண்டர்காம்ல நக்கீரனை கூப்பிட்டு ஆஃபீசர் மாதிரி மிரட்னாரு.. “ ஹலோ ரூம் நெம்பர் 107?  3 பேர்தாந்தங்கனும் நு சொன்னோம்.. 5 பேர் இருக்கீங்க.. இங்கே சரக்கு அடிக்கக்கூடாதுன்னோம், ஆனா அந்த ரூல்ஸையும் மீறிட்டீங்கன்னாரு.. நக்கீரன் அரண்டுட்டாரு... சார் சார் அப்படின்னு பம்பிக்கிட்டு இருந்தாரு.. 

 மணீ 1 மணீக்கு நாங்க கிளம்பி மறுபடி மண்டபம் போனோம்..லஞ்ச் ஒரு கட்டு கட்டிட்டு மறுபடி ரூம்.. ரெஸ்ட் .. 6 மணிக்கு கிளம்பி மறுபடி மண்டபம்.. 

 இப்போ ஃபேஸ் புக் புகழ் கே ஆர் விஜயன் வந்திருந்தார்.. ஆள் சினிமா ஹீரோ மாதிரி ஜம்முன்னு இருந்தார்.. அவர் போட்டிருந்த சுடிதாரே சாரி பைஜாமா மாதிரி ஏதோ ராமராஜன் டிசைன் சர்ட்டே ரூ 8000 இருக்கும்..  ( மீ ஒன்லி 250 ரூபா சர்ட் ஹி ஹி )செண்ட் எல்லாம் அடிச்சிருந்தாரு.. 

 யானைக்குட்டி ஞானேந்திரன் வந்தார்.. 2 பேரும் ஃபேமிலியோட தான் வந்தாங்க.. ஆனா ஃபேமிலியை எங்களூக்கு அறிமுகப்படுத்தவே இல்லை.. ட்விட்டர்ல ஜாலியா ட்வீட்ஸ் போடறதை பார்த்து பொறுக்கி பசங்கனு நினச்சிருப்பாங்க.. போல.. நாங்க அப்படி இல்லீங்கோவ்.. 

 எறும்பு ராஜகோபால், வந்தார் பேசிட்டு இருந்தோம்.. ஜோசஃபின் கதைக்கிறேன் பிளாக் ஓனர் அவர் கணவர், குழந்தையுடன் வந்தாங்க.. 






ஆர்க்கெஸ்ட்ரா அரெஞ்ச் பண்ணி இருந்தாங்க..  கிரண் டி வில ஒர்க் பண்ற ஃபிகரு ( 28  வயசு, 55 மார்க் )  செமயா டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் குடுத்து பாடுனாங்க.. அது போக கறுப்புக்கலர் சர்ட் போட்டுட்டு ஒரு ஆள் ஜாலிவாலா பட்டசா வெடிச்சுட்டு இருந்தார்.. சிவப்புக்கலர் சட்டை போட்ட மாற்றுத்திறனாளி பாடகர் கலக்கலா பாடுனார்.. 

 க்ளைமாக்ஸ் குத்தாட்ட பாட்டுக்கு சலா சலா சல சல பாட்டுக்கு ஆடியன்ஸ், கவிதை வீதி சவுந்தர் எல்லாம் ஆடுனாங்க.. 

எல்லாம் முடிஞ்சதும் ஆஃபீசரிடம் விடை பெற்றுக்கிளம்பினோம்..  மண மக்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்


 ரிட்டர்ன் ட்ரெயின்ல வர்றப்ப டைம் வேஸ்ட் பண்னக்கூடாதுன்னு ட்விட்டர்ல போட்ட ட்வீட்ஸ்

 1.when compare with erode and kovai ,nellai is seemed to be a dry area agriculture wise and figure culture wise


2. railway department must be malesavonist ,because all of the ttr r men .i recommend railway minister to appoint ladies as ttr

3. ttr sir ,i get only upper berth ,but i want lower berth,pls change . sorry sir i can't .because high class figure like u always u b 


4. the trains and youths are the same ,both are waiting for signals 




Monday, April 23, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 7

ஃபிலாசபி பிரபாகரன் 2011 ஆம் ஆண்டில் அவரது தளத்தில் பகிர்ந்த பதிவு.
பதிவுலகில்  சக பதிவராக அவரிடம் சில கேள்விகள் கேட்க விரும்பி அவரை தொடர்பு கொண்டேன். அப்போது நான் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் இங்கே:-
(பி.கு: இது நேர்காணல் அல்ல தொலைபேசி உரையாடல்)

1.ஒரேயடியாக பொங்கல் படங்கள் நான்கையும் பார்த்திருக்கிறீர்களே...? ஏன் இந்த கொலவெறி...?
பொதுவாகவே எனக்கு சினிமாத்துறையில் இயக்குனராக வேண்டும் என்று விருப்பம். அதனால் என்னால் முடிந்த வரைக்கும் எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன்.

2. நான்கு படங்களையும் பார்ப்பதற்கு உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது...?
(பலத்த சிரிப்புடன்) பீல்ட் வொர்க் என்ற பெயரில் அலுவலகத்தை கட் அடித்துவிட்டு சினிமா பார்க்கவும் பிரவுசிங் செண்டர் போவதற்கும் பயன்படுத்திக் கொள்வேன்.

3. மொக்கை படங்களை எல்லாம் எப்படி உங்களால் பார்க்க முடிகிறது...?
ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடம் இருக்கிறது. நல்ல படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்க வேண்டுமென்று கற்றுக்கொள்கிறேன். அதேபோல மொக்கைப் படங்களைப் பார்த்து ஒரு படத்தை எப்படி எடுக்கக் கூடாதென்று கற்றுக்கொள்கிறேன்.

4. ஒரு படத்தை மொக்கை என்று விமர்சனம் எழுதும் போது எதிர்க்குரல்கள் கிளம்புமே...?
கிளம்பத்தான் செய்கிறது. அவ்வப்போது படத்தின் துணை, இணை இயக்குனர்கள் போன் செய்தும் மெயில் அனுப்பியும் திட்டுகிறார்கள். இருப்பினும் நான் என்னுடைய பார்வையில் தானே படங்களைப் பற்றி எழுதுகிறேன். நான் மொக்கை என்று எழுதிய காரணத்தினால் எந்தப்படமும் தோல்வி அடையப்போவதில்லை.

5. சமீபத்தில் சிரிப்பு போலீஸ் ரமேஷை சந்தித்தபோது அவர் சொன்ன ஒரு சீரியசான விஷயம், நீங்கள் நீண்ட காலமாக வார இதழ்களில் ஜோக்ஸ், கதைகள் என்று படைப்புகள் எழுதி வருகிறீர்களாமே...?
உண்மைதான். இதுப்பற்றி ஏற்கனவே எனது பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தேனே. கடந்த 18 வருடங்களில் நான் எழுதி பிரசுரம் ஆனவை 9867 ஜோக்ஸ், 64 கவிதைகள், 8 சிறுகதைகள்,19 ஒரு பக்கக் கதைகள், 87 சினிமா விமர்சனங்கள், 145 கட்டுரைகள். பாக்யா இதழின் மூலமாக இயக்குனர் பாக்யராஜுடன் நெருங்கிய பழக்கம் உண்டு.

நான் பதிவெழுத ஆரம்பித்த சமயத்தில் என்னை பெரிதும் ஊக்குவித்தவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ். அவர் என்னைப்பற்றி உயர்வாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது.

6. அப்படி என்றால் சித்து +2 பட விமர்சனத்தில் சொம்படித்திருப்பீர்களே...?
அதுதான் இல்லை. எப்போதும் போல எனது நடையிலேயே எழுதினேன். ஆனால் அதைப் படித்தபின்பு இயக்குனர் பாக்யராஜ் வருத்தப்பட்டார். பின்னர் என்னுடைய விமர்சனம் சரிதான் என்று நேர்மையாக ஏற்றுக்கொண்டார்.

7. விமர்சனம் எழுதி சர்ச்சையானது போல ஜோக்ஸ் எழுதி ஏதாவது சர்ச்சை ஏற்பட்டது உண்டா...?
சமீபத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தலைவிரித்து ஆடியபோது கனிமொழி ஆ.ராசா பற்றி ஜோக் ஒன்றை எழுதி தி.மு.க தரப்பில் இருந்து அந்த ஜோக்கை நீக்கும்படி மிரட்டல் வந்தது. அலுவலகத்தில் இருப்பதால் வீட்டுக்கு போனதும் டெலீட் செய்துவிடுவதாக கூறினேன். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவசரப்படுத்த உடனடியாக பிரவுசிங் செண்டருக்குப் போய் அந்த ஜோக்கை நீக்கினேன்.

8. சரி, இது ஒரு ஜாலி பேட்டி என்பதால் அரசியல் பக்கம் போக வேண்டாம். பொங்கலில் வெளிவந்த நான்கு படங்களில் எது பெஸ்ட் என்பது பற்றி உங்கள் கருத்து...?
கமர்ஷியலாக பார்த்தால் சிறுத்தைக்குத் தான் முதலிடம். அடுத்ததாக ஒரு குடும்பப் படம் என்ற முறையில் காவலன் படத்தை சொல்லலாம். ஆடுகளம் அனைத்து தரப்பினருக்கும் பிடிக்காது என்பது எனது கருத்து. இளைஞன் டப்பா.

9. ஆடுகளம் தான் பொங்கல் படங்களில் டாப் என்று சொல்கிறார்களே...?
ஆடுகளம் நல்ல படம்தான். ஆனால் B,C சென்டர்களில் பெறும் வரவேற்ப்பை A செண்டரில் பெறாது என்பதே எனது கணிப்பு.

10. எதிர்ப்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க்....?
காவலன் 45, சிறுத்தை 44, ஆடுகளம் 43

11. அப்படின்னா கலைஞரின் இளைஞன்....?
இளைஞன் விமர்சனத்தை ஆனந்த விகடனில் போட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

12. கேபிள் சங்கரின் விமர்சனமும் உங்கள் விமர்சனமும் முரண்படுகிறதே...? குறிப்பாக காவலன் படம் பற்றிய கருத்து....? (இதுவும் ஒரு ஜாலி கேள்வியே)
சினிமாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கலாம். கேபிள் சங்கர் அனுபவஸ்தர். அதைவிட முக்கியமானது, அவர் திரையுலகில் இருப்பவர். காவலன் படம் பற்றி சொல்லும்போது, கேபிள் மலையாள பாடிகார்ட் படத்தை பார்த்து அதையும் இதையும் கம்பேர் செய்திருக்கக் கூடும். 
மேலும் அவர் மேல்தட்டு மக்கள் பார்க்கும் திரையரங்கில் படம் பார்த்திருக்கலாம். திரையுலகத்திற்கு உள்ளே இருந்து பார்த்ததால் அவர் கண்களுக்கு அதிக குறைகள் தெரிந்திருக்கலாம். நான் ரசிகர்களோடு அமார்ந்து ரசிகனாகவே படம் பார்த்தேன். நான் பார்த்தவரைக்கும் பொதுமக்கள் படத்தை ரசித்தார்கள், கேட்டவர்கள் நன்றாக இருப்பதாக கூறினார்கள்.

கேபிளின் அரிய புகைப்படம்... உங்கள் பார்வைக்காக...

13. மில்லியன் டாலர் கேள்வி: ஒவ்வொரு பட விமர்சனத்திலும் இருபது முப்பது வசனங்களை தொகுத்து வெளியிடுகிறீர்கள்...? அது எப்படி சாத்தியமாகிறது...?
சில பேர் நான் படத்தின் ஆடியோவை பதிவு செய்வதாகவும், பேப்பர் பேனா வைத்து குறித்துக்கொள்வதாகவும் கருதுகின்றனர். ஆனால் அவை உண்மையல்ல. வசனங்களை முடிந்த வரைக்கும் மனதில் பதியவைத்தே எழுதுகிறேன்.

இதை சோதனை செய்வதற்காக ஒருமுறை பதிவர் நண்டு@நொரண்டு என்னோடு திரையரங்கம் வந்திருந்தார். மேலும் சந்தேகம் இருந்தால் அவரிடம் கேட்டுப் பாருங்கள்.

சூப்பர்ப் சிபி, உங்களுடைய மொக்கைப் படங்கள் பார்க்கும் பிஸி ஷெட்யூலில் எனக்காக நேரம் ஒதுக்கி இந்த பேட்டியை கொடுத்ததற்கு மிக்க நன்றி. உங்கள் பதிவுலக, திரையுலக எதிர்காலம் வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

சிபியுடன் வகுப்பறைத்தோழனை போல நெருங்கிப் பழகிவரும் நான் அவரைப் பற்றி சில வரிகள் சொல்ல விரும்புகிறேன். சிலர் அவர் ஹிட்சுக்காக எழுதுவதாகவும் பதிவெழுதுவதில் addict ஆகிவிட்டதாகவும் குறிப்பிடுகின்றனர். ஹிட்சுக்காக எழுதுவது தவறா என்ன...?
 ஒவ்வொருவரும் ஏதோவொரு அங்கீகாரத்திற்காகவே எழுதுகிறோம். அப்படி இருக்கும்போது உங்களுக்கு அற்பமாக தெரியும் ஹிட்ஸ் அவருக்கு அற்புதமாக தெரிந்திருக்கலாம். அதிலென்ன தவறு இருக்கிறது...? மேலும், addiction, dedication இவை இரண்டிற்கும் உள்ள வேறுப்பாட்டினை புரிந்துக்கொள்ள வேண்டும். அவர் எழுத்துலகிற்கு அடிமையாகி விட்டார் என்று சொல்வதைக் காட்டிலும் அவர் எழுத்துலகிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டார் என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.
நன்றி - ஃபிலாசபி பிரபாகரன் 





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html


டிஸ்கி 8.  இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/6.html

Tuesday, April 17, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 6

கவிதை வீதி சௌந்தர்:

1.வலைப்பூவில் தாங்கள் அடைய விரும்பும் எல்லை எது?

  அப்படி எந்த விதமான துரத்தல்களும் எனக்கு இல்லை.. வலை உலகைப் பொறுத்தவரை ஜாக்கிசேகரும், கேபிள் சங்கரும் கமல் ரஜினி போல களத்தில் இருக்கிறார்கள்.. இருவருக்கும் 4 வருடங்களூக்கும் அதிகமான அனுபவம்.. 3 வது இடத்தில் உண்மைத்தமிழன் உள்ளார்.. தமிழ்மண ரேங்க்கை வைத்து சிலர் நான் தான் நெம்பர் ஒன் என தவறாக நினைக்கிறார்கள்.. நான் நெம்பர் 4 தான்.. போதும்.. இதே நிலைமை..


2. காபி டூ பேஸ்ட் பதிவர் என்பதில் தங்களுக்கு ஏதாவது சங்கடம் உண்டா?

     ஹா ஹா ஹா உண்மையை, ஆமா உண்மைன்னு ஒத்துக்க எதுக்கு சங்கடம்?


3. தங்களை அதிகம் கலாய்க்கும் மனோவை என்ன செய்யலாம்?

    கலாய்ப்பதால் தான் அவர் நெருங்கிய நண்பர்.. ஆமாம் சாமி ஜால்ரா அடிச்சா 10 ஓடு 11..


4. பதிவுலகில் ஏதவாது ஒரு பிளாக்கில் பதிவிடச் சொன்னால் யாருடைய பிளாக்கை தேர்ந்தெடுப்பீர்?

      என்னால் யாருக்கும் கெட்ட பெயர் வர வேணாம்னு நானே இன்னொரு பிளாக் ஓப்பன் பண்ணி அதுல பதிவு போடுவேன்.. ஹி ஹி 


5. குடும்பம்-பதிவுலகம்-அலுவலகம்-சென்னிமலை-உறவினர்-பள்ளி நண்பர்கள்-பிள்ளைகள்-சினிமா-விளையாட்டு: இவைகளை வரிசைப்படுத்துங்கள்...

1. அலுவலகம்
2. பதிவுலகம்
3. குடும்பம்

4. சினிமா
5. சென்னிமலை
6. பிள்ளைகள்
7. பள்ளி நண்பர்கள்
8. உறவினர்
9. விளையாட்டு


 ட்வீட் உலகின் கமல்ஹாசன் ரவியுடன் (மன்மதன் அம்பு கமல் ஸ்டில் போல் இருப்பாரே அவர் தான் )


உணவுலகம் - சங்கரலிங்கம்:

அய்யா சின்ன பிள்ள, ஆப்பரேசன் முடிஞ்சு இத்தனை நாள் ஆச்சே, இன்னும் ஏன் கறுப்பு கண்ணாடியைக் கழட்டல?

 அண்ணே. கண்ணாடியை கழட்டிட்டா கூட்டத்துல யாரைப் பார்க்கறோம், எங்கே பார்க்கறோம்னு கரெக்ட்டா தெரிஞ்சிடுது ஹி ஹி - சின்ன வயசுப்புள்ள.


செங்கோவி:

1. போஸ்டரை வைத்தே பிட்டுப் படத்தில் சீன் உண்டா, இல்லையா என்று கண்டுபிடிக்க முடியுமா? அல்லது அதற்கு வேறு ஏதேனும் நல்ல வழிகள் உள்ளனவா?

    அது ரொம்ப சிரமம்னே, ஆனா ஒண்ணு செய்யலாம், தியேட்டர் பைக் பாஸ் போடறவன் கிட்டே கேட்டா தெரிஞ்சுடும், அல்லது படம் விட்டு வெளில வர்ற ரசிகர்கள் கிட்டே ரிசல்ட் கேட்டா தெரிஞ்சிடும். உங்களூக்குத் தெரியாததில்லை.


2. ஷகீலா படப் போஸ்டரை மாடுகள் தின்பதனால் சமூகத்திற்கு விளையும் நன்மை-தீமைகள் என்ன?

   சாரி.. அண்ணே. நாங்க எப்பாவோ ஹன்சிகா மோத்வானி ரசிகர் ஆகிட்டோம். யூத்துய்யா .. நீங்க இன்னும் ஷ்கீலா ஆண்ட்டியையே கட்டிட்டு அழுதா..?


3. விகடனை மட்டும் பதிவிடும் நீங்கள், உங்களது படைப்புகளாக விருந்து/மருதம்/பாக்யாவில் வெளிவந்தவற்றை பதிவிட மறுப்பது ஏன்?

    விகடன்ல தான் ஆன்லைன் ல மேட்டர் வருது. டைப் பண்ற வேலை இல்லை. மற்ற புக் மேட்டர்னா டைப் பண்ணனும்.. - பை நோகாம நோம்பி கும்பிடும் தமிழன்.


4. அருமையாக அரசியல் பதிவுகள் எழுதும் ஆற்றல் இருந்தும் பதிவுலக பாக்கியராஜாக மட்டுமே இருக்க நீங்கள் ஆசைப்படுவது ஏன்?

    முருங்கைக்காய் சாம்பார் வாரம் ஒரு தடவை சாப்பிடுவேன்கறதுக்காக ஏன் அண்ணே அவர் பேரை கெடுக்கறீங்க? அரசியல் பதிவு எழுத தான் 1000 பேர் இருக்காங்களே.. என் நோக்கம் சிரிக்க வைப்பது சிந்திக்க வைப்பது அல்ல. ஹி ஹி.

கோவை ஷேக்கு - கோவை ட்விட்டப்பில் ஃபிகர்கள் இல்லா ஒரு நாயர் ஷாப்பில்

வம்பை வெலைக்கு வாங்குவோம்ல - நா. மணிவண்ணன்


1 . செருப்படி அல்லது வெளக்கமாத்து பூசை வாங்கிய அனுபவம் பற்றி விளக்குக ?( இல்லை அப்படியெல்லாம் இதுவரைக்கும் நடந்ததில்லை என்று பூசி மொளுகினால் அது போன்ற சம்பவம் பல முறை நடந்ததாகவே எடுத்து கொள்ளப்படும் ) 

    யோவ் மணி, உனக்கு ரொம்ப லொள்ளுய்யா.. நெல்லைல கூட பார்த்தே இல்லை.. 37 பேர் கும்முனாங்க.. யாராவது செருப்பால அடிச்சாங்களா? டீசண்ட்டா இருக்கறவன் டீசண்ட்டாத்தான் உதை வாங்குவான். ஹி ஹி 



2 . முதலிரவில் முதலில் என்ன செய்ய வேண்டும் ?( விளக்கை அணைக்க வேண்டுமென்று சினிமா முதலிரவில் காட்சியில் காட்டுவதை கூறக்கூடாது )


      முதல்ல கொஞ்ச நேரம் பேசனும். வேற எதுவும் "செய்யக் கூடாது"


M. காதர்அலி:

1.அண்ணே, நீங்க ஏன்? உயிர் வாழ்றிங்க? 

       இயற்கை படைப்பினில் நான் ஒரு மனிதனாகப் பிறந்ததால்.. வாழும் வரை இந்த சமூகத்திற்கு என்னால் ஏதாவது பயன் தர முடியும் என்ற நம்பிக்கையால்.. 


2 .கில்மா விமர்சனம் எழுத ஷகிலா அக்காட்ட எவ்வளவு வாங்குவிங்க?

     சாரி. 19 வயசு தாண்டுனா அந்த ஃபிகர் அத்தை மகளே ஆனாலும் நான் கண்டுக்கறதில்லை.. அதுக்காக எனக்கு என்ன வயசுன்னு கேட்கக்கூடாது,, விதி விலக்குகள் எனக்கு மட்டும் ஹி ஹி 


3 .ஒரு வாரத்துக்கு எத்தனை copy -paste பண்ணுவீங்க?

     சனி, ஞாயிறு தலா 3 வீதம் 6 போஸ்ட் , அது போக சூடான அரசியல் நியூஸ் வாரம் 1 அல்லது 2 .. 

 பரிசல், ராஜன் உடன் ( ராஜன் நோக்கும் ஃபிகர் மாடி வீட்டு மாளவிகா)



கவி அழகன்:

எனது கேள்வி என்ன்னவென்றால் சி.பி தனியே வலை தளம் எழுதுகிறாரா அல்லது அவரது குடும்ம்பமே எழுதுகின்றதா ( ஆன்மிகம் சமையல் எண்டேல்லாம் படைப்புகள் வரும் போது இவரது பாட்டி மனைவி எல்லாரும் வலைபதிவில் எழுதுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது ) 


       ஹா ஹா .. ஹா நான் என்ன கலைஞரா? குடும்ப அரசியலோ, குடும்ப பதிவோ நடத்த? ஒன் மேன் ஆர்மி தான், ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான மேட்டர்ஸை ஒரு தேனி போல சேகரித்து கொடுக்கும் கமர்ஷியல் கலைஞன்.


நேசன்:

1. அதிகமாகவும் அசத்தலாகவும் பதிவு போடுவது உங்களின் தனித்தன்மை எப்படி உங்களால் பதிவு எழுதும் போது இப்படித்தான் வார்த்தைகளை கையாளனும் என்று தீர்மானிக்கிறீர்கள்?


     ஹா ஹா வார்த்தைகளை நான் கையாளுவதில்லை.. அவை தான் என்னை கையாளுகிறது.. ஒரு சினிமா பார்க்கும்போதே என்னால் முழுமையாக படத்தை ரசிக்க முடிவதில்லை.. படம் திரையில் ஓடும்போதே விமர்சனம் என் மனத்திரையில் ஓடுகிறது எல்லாம் பயிற்சி தான் காரணம்.. 


2. என் போன்றவர்களின் (புதியவர்களின்) பதிவுகளை எப்படி முயன்றும் ஒரு குறிப்பிட்ட நண்பர்களைத் தாண்டி பலரிடம் சேர்க்க முடியாமல் இருக்கிறது இதனை எவ்வாறு தீர்க்கலாம்?

        நல்ல படைப்புகள் கண்டிப்பாக அனைவரையும் சென்றடையும்.. காலம் தீர்மானிக்கும். ஆனால் குறுக்கு வழி ஒன்று உள்ளது.. நீங்கள் 50 பேர் பிளாக் போய் கமெண்ட், ஓட்டு போட்டால் பாதிப்பேராவது வருவாங்க, உங்க பதிவு ஹிட் ஆகிடும்.. ஆனால் இது நிலைக்காது. 


"கற்றது தமிழ்" துஷ்யந்தன்-பிரான்ஸ் :

கொஞ்சம் கஸ்டமான கேள்விதான், இருந்தாலும் பதில் சொல்லுங்களேன்
உங்களுக்கு பிடித்த மிக சிறப்பாக எழுதுகிறார் என்று நினைக்கும் சக பதிவர் யார் ???

       கேள்வி கஷ்டம் தான், ஆனா பதில் ஈசி. இலங்கை அலப்பரை மன்னன் நிரூபன். 




டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 -  இதன் 4 ம் பாகம் படிக்காதவங்களூக்காக http://www.adrasaka.com/2012/04/4.html



டிஸ்கி 7 - இதன்  5 ம் பாகம் படிக்காதவங்களூக்காக  -http://www.adrasaka.com/2012/04/5.html

Sunday, April 15, 2012

ஹிலாரி கிளிண்ட்டனை நக்கல் அடித்து மாட்டிக்கொண்ட பதிவர்கள்



'குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள்' என்ற திருவிளையாடல்
தருமியின் புலம்பலைப் போல, கிண்டல் அடித்தே புகழ் பெற்று விடும் நபர்களும்இருக்கவே செய்கின்றனர். அமெரிக்காவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இப்படி தான் கிண்டல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றனர். இணைய உலகில் பரவலாக தங்களைப் பற்றி பேச வைத்து இணைய நட்சத்திரங்களாகி இருக்கிறார்கள்.

ஆடம் ஸ்மித், ஸ்டேசி லேம்ப் என்னும் அந்த இரண்டு இளைஞர்களும் அமெரிக்க
வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை கிண்டல் செய்து இணையநட்சத்திரங்களாக உருவாகி இருக்கின்றனர். ஆனால் அவர்களின் கிண்டல் நாகரீகமாகவும் அதைவிட நேர்த்தியாக அமைந்திருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.


ஹிலாரியோ உலகறிந்த பெண்மணி! திருமதி கிளின்டனாக அறிமுகமான அவர், ஓபாமாஅமைச்சர‌வையில் இடம் பெற்று இன்று நட்சத்திர அந்தஸ்து பெற்ற அமைச்சராக புகழ் பெற்றிருக்கிறார்.

ஹிலாரி பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் சளைக்காமல் பேட்டி
கொடுக்கிறார். எந்த பிரச்னையானாலும் க‌ருத்து தெரிவிக்கிறார். ஹிலாரி சொல்வதை அமெரிக்கா மட்டும் அல்ல உலகமே உற்று கவனிக்கிறது.

இத்தகைய ஹிலாரி தலைவர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்திகளை படிக்கமுடிந்தால் எப்படி இருக்கும்?

அதைத் தான் ஸ்மித்தும் லேம்பும் செய்தனர். டம்ப‌லர் (www.tumblr.com) இணையத்தில் ஒரு தளத்தை துவக்கி அதல் ஹிலாரி அனுப்பும் எஸ்.எம்.எஸ் செய்திகளை இடம் பெற வைத்தனர். அதாவது ஹிலாரி அனுப்புவது போல செய்திகளை இவர்களே உருவாக்கி  தளத்தில் இடம் பெற வைத்தனர். அதுவும் ஹிலாரி கறுப்பு நிறக் கண்ணாடியோடு காட்சி தரும் (கையில் செல்போனோடும் தான்) அசத்தலான புகைப்படத்தை போட்டு அதில் புகைப்பட குறிப்பு போல ஹிலாரியின் செய்திகளை இடம் பெற வைத்தனர்.


உதாரணத்திற்கு ஒரு பதிவில் ஹிலாரியிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா, "ஹே ஹில்.. என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்க, ஹிலாரியோ கூலாக "உலகை இயக்கி கொண்டிருக்கிறேன்" என பதில் சொல்வது போல அமைந்திருந்தது.

இதே போல இன்னும் பல தலைவர்களுடனும் பிரபல‌ங்களுடனும் ஹிலாரி குறுஞ்செய்தி வடிவில் உரையாடுவது போல படங்களை உருவாக்கி புதுப்புது பதிவாக வெளியிட்டு வந்தனர்.

கற்பனை தான் என்றாலும் இதில் இருந்த நகைச்சுவை உணர்வும் நேர்த்தியும் படித்தவர்களை கவர்ந்தது. இதனை ரசித்தவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டனர். அவர்கள் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டவர். அவ்வளவு தான்.. இணைய உலகம் முழுவதும் 'textsfromhillaryclinton' என்னும் இந்த தளம் பற்றி தான் பேச்சானது.

நண்பர்கள் அந்த பதிவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டனர்; டிவிட்டரில் பகிர்ந்து கொண்டனர். நாளிதழ்களும் பத்திரிகைகளும் இந்த பரபரப்பு பற்றி செய்தி வெளியிட்டு மேலும் பரப‌ரப்பை உண்டாக்கின.

நண்பர்கள் ஸ்மித்தும், லேம்பும் தங்கள் ஐடியா இந்த அளவுக்கு ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்களைப் பொருத்தவரை ஜாலியாக பேசிக்கொண்டிருந்த போது விளையாட்டாக உருவான எண்ணம் இது.

இருவருமே வாஷிங்டன் நகரை சேர்ந்த‌வர்கள். சமீபத்தில் ஒரு நாள் இருவரும் பார் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்மித்,தனது நண்பரிடம் ஹிலாரியின் கருப்பு கண்ணாடி அணிந்த அசத்தலான புகைப்படத்தை காண்பித்து, இந்த புகைப்படத்தை பார்த்திருக்கிறாயா, கண்ணாடியும் செல்போனுமாக எவ்வளவு கம்பீரமாக கச்சிதமாக இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். நண்பர் லேம்பும்அதனை ஆமோதிக்க, அந்த நொடியில் ஹிலாரியை எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்ப வைத்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது.

உடனே 'டெக்ஸ்ட் ஃப்ரம் ஹிலாரி க்ளின்டன்' என்னும் பெயரில் வலைப்பதிவு செய்யத் துவங்கி விட்ட‌னர். அடுத்த ஒரு வார்த்தில் அந்த தளம் சூப்ப‌ர் ஹிட்டாகிவிட்டது. கற்பனையான செய்திகள் தான் என்றாலும் அவற்றை கண்ணியத்தோடே வெளியிட்டனர். நகைச்சுவயில் எல்லை தாண்டாமலும் பார்த்து கொண்டனர். எனவே அந்த பதிவுகள் ரசிக்கும்படியே இருந்தன.

இதனால் இருவரும் இணைய உலகில் புகழ் பெற்றது ஒரு ஆச்சர்யம் என்றால் அதைவிட ஆச்சர்யம் ஒன்று அவர்களுக்கு காத்திருந்தது. அவர்கள் தளத்தின் நாயகி ஹிலாரியிடம் இருந்தே இருவருக்கும் அழைப்பு வந்தது. ஆம்.. யாரை கிண்டல் செய்து குறுஞ்செய்தி வெளியிட்டு கொண்டிருந்தன‌ரே அவரே நண்ப‌ர்களை சந்திக்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது.

நேரில் ஹிலாரியை சந்தித்த போது ஹிலாரி தானும் அந்த தளத்தின் ரசிகர் என்று கூறி, நண்பர்களை பிரம்மிப்பில் ஆழத்தி விட்டார். சில நிமிடங்களே அந்த சந்திப்பு நீடித்தாலும் நண்பர்கள் இருவரும் ஹிலாரியுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை பெருமையோடு தங்கள் தளத்தில் வெளியிடவும்
செய்தன‌ர்.

ஹிலாரியை நையாண்டி செய்து ஹிலாரியையே ரசிகையாக்கிக் கொண்ட இந்த இருவரும் இணைய கில்லாடிகள் தான். ஆனால் ஒரு சின்ன வருத்தம். இருவரும் புதிய பதிவுகள் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு விட்ட‌னர்.

இந்த புகழே போடும் என நினைத்து விட்டனர் போலும். ஆனால் இதுவும் கூட புத்திசாலித்தனம் தான். இனி எப்படி தொடர்வது என தடுமாற்றம் வந்து தரம் குறையும் முன்னே குட்பை சொல்லிவிட்டனர்.

அந்த தளம் அப்படியே இருக்கிறது. இப்போதும் பழைய படங்களையும் குறுஞ்செய்திகளையும் பார்க்கலாம். ரசிக்கலாம்!

இணையதள முகவரி : http://textsfromhillaryclinton.tumblr.com/

Monday, April 09, 2012

அட்ரா சக்க சி பி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி பாகம் 5


பண்ணிக்குட்டி ராமசாமி:
1. உங்க பாசுக்கு (ஆபீஸ்) நீங்க பண்ணிட்டு இருக்கறது தெரியுமா? தெரிஞ்சா என்ன செய்வீங்க?

ஹி ஹி யோவ் ராஸ்கல் ராம்சாமி.. நான் என்ன கொள்ளை கொலையா பண்றேன்.. ரவுசு..?!கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போறதுதானே?ஃபீல்டு ஒர்க்கர்ஸ் செய்யாததையா நான் செஞ்சுட்டேன்?ஆனாலும் தெரிஞ்சா சங்குதான் ஹி ஹி ஆஃபீஸ் மேனேஜர் ஃபோன் நெம்பர் கேட்ட்ராதேயும் அடுத்த கேள்வியா.. ஹி ஹி 





2. உங்க ஸ்கூல் டைம் கேர்ள்பிரண்டை [அதான் முன்னாள் (இப்பவும் முன்னாள்தானே?) காதலி] இப்போ திடீர்னு பார்க்கும் போது, ஏன்டா சிபி இன்னும் நீ திருந்தலியான்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?


ஹி ஹி ஹி ஹி அப்டீம்பேன்.....(இதான் சாக்குன்னு டேய்!!! ம் ம் )  


3. பிட்டுப்படம் பார்த்துட்டு இருக்கும் போது பார்க்கக் கூடாத ஆளை எதிரும் புதிருமா சந்திச்சு வழிஞ்ச அனுபவம் இருக்கா? அப்போ எப்படி சமாளிச்சீங்க?

10ஆம் கிளாஸ் படிக்கறப்ப எங்க கிளாஸ் கணக்கு வாத்தியார் அந்த படத்துக்கு வந்துட்டார்.. அவர் பால்கனில நான் பெஞ்ச்ல... என்னை பார்த்துட்டார்னு தான் நினைக்கறேன் ஹி ஹி சமாளீக்க தெரியலை.. 


4. நீங்க இப்படி வாராவாரம் வெள்ளிக்கெழமைன்னா பிட்டுப்படம் பார்க்கறது வீட்ல தெரியுமா?


ஹி ஹி ஹி தெரியாது.. (யோவ்,.. நானும் பொறுமையா பதில் சொல்லிட்டே இருக்கேன், எகனை மொகனை கேள்வியா கேட்டா எப்படி?)


5. திடீர்னு நமீதாவை சந்திக்க நேர்ந்தால் என்ன பேசுவீங்க?

எதுக்கு பேசனும்? ஹி ஹி (அதாவது நடிகைங்க கூட எல்லாம் பேச்சு எதுக்கு? ந்னு அர்த்தம்)


6. நீங்க கிழி கிழின்னு விமர்சனத்துல கிழிச்ச படத்தோட டைரக்டரை சந்திக்க நேர்ந்தால் உங்கள் ரியாக்சன்?

சித்து + 2 பட விமர்சனத்துல கே பாக்யராஜ் சாரை நக்கல் அடிச்சிருந்தேன்.. 18 வருஷமா அவர் பத்திரிக்கைல ஜோக் எழுதிட்டு இப்படி கவுத்துட்டானே என உதவி ஆசிரியரிடம் வருத்தப்பட்டதா எனக்கு தகவல் வந்தது.. ஆனா நேரடியா என் கிட்டே எதுவும் கேட்கல.. 


7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது.  இருக்கும்..


8. என்னைப் போன்றவர்கள் உங்களை கலாய்க்கும் போது சமய்ங்களில் ஓவராகவும் போய்விடுகின்றது. எப்பொழுதாவது வருத்தப்படும்படி நேர்ந்ததுண்டா?

ஹா ஹா குட் கேள்வி.. நான் செம ஜாலி டைப்.. எதையும் ஜாலியா எடுத்துக்குவேன்.. இருந்தாலும் சில சமயங்களில் நண்பர்களே இப்படி கலாய்க்கறாங்களேன்னு மனம் வருத்தப்படுவேன்.. அவங்களூக்கு பதிலடி குடுக்கலாம்னு நினைப்பேன்.. அப்போ என் மனசாட்சி வந்து தடுத்துடும்.. உன் சுயநலம் முக்கியமா? நட்பு முக்கியமா?ன்னு கேட்கும்.. அதனால நம்ம மனசு புண்பட்டாலும் அடுத்தவங்க மனசு புண்படக்கூடாதுன்னு நினைச்சுக்குவேன்.. 

9. நெல்லை பதிவர் சந்திப்புக்கப்புறம் ஏன் திருந்திட்டீங்க.. இல்ல இல்ல திருந்திட்டேன்னு சொல்றீங்க? இதுக்கு முன்னாடி யாருமே இதுவரை உங்களை திருந்தச் சொல்லலியா?

யோவ்.. விளையாடறீங்களா/ மொத்தம் 37 பேரு.. ஹாலை சாத்திட்டாங்க.. மாத்தி மாத்தி.. 4 மணி நேரம்.. திணறத்த்திணற.. ஹி ஹி அந்த எஃபக்ட் கொஞ்ச நாளாவது இருக்காதா?


10. பதிவு எழுதி அதுனால அடிவாங்கி இருக்கீங்களா? இல்ல வேற தொந்தரவுகள் ஏதாவது வந்திருக்கா?

கனிமொழி - ராசா கிண்டல் அடிச்சு ஒரு ஜோக் போட்டிருந்தேன்.. ஈரோடு தாதா என் கே கே பி ராஜா வோட அடிப்பொடி ஒருவர் ஃபோன் பண்ணி அந்த ஜோக்கை எடுத்துடுன்னாரு,... சரிங்க.. நான் ஆஃபீஸ்ல இருக்கேன்,.. மாலைல வந்து எடுத்துடறேன்னேன்.. ஆனா அவங்க 10 அடியாளுங்களை வீட்டுக்கு அனுப்பி அதை எரேஸ் பண்னாத்தான் போவோம்னாங்க.. அப்புறம் வேற வழி இல்லாம நெட் செண்ட்டர் போய் அந்த ஜோக்கை எரேஸ் பண்ணேன்.. 

11. திரைத்துறையில் நுழைவதற்கு முயற்சி செஞ்சிருக்கீங்களா? இல்ல இனிமே செய்வீங்களா? என்ன பண்ண போறீங்க?

சினிமாத்துறை லட்சியம்.. சின்னத்திரை நிச்சயம்./.... நாளைய இயக்குநர் நிகழ்ச்சில கலந்துக்க ஆசை.. ஆனா அதுல கலந்துக்க 10 படம் எடுக்கனும்.. ஒரு படம் எடுக்க 30,000 செலவு ஆகும், மொத்தம் 3 லட்சம் ஆகும்.. அதுக்கு ஸ்பான்சர் கிடைக்காது கைக்காசு தான் போடனும்.. அதான் திங்க்கிங்க்.. அது போக.. ஏற்கனவே காமெடி ஸ்கிரிப்ட் 3 புது இயக்குநர்களுக்கு எழுதிக்கொடுத்து இருக்கேன்.. ஏமாந்தும் இருக்கேன்.. லெட் சீ.. நாளைய தினம் நமக்காக விடியும் என்று ஏங்கிக்கிடப்பதுதானே படைப்பாளனின் கடமை?



நாற்று - நிரூபன்: 

சிபி அவர்களிடம் இரு வேறுபட்ட கேள்விகளை முன் வைக்கலாம் என நினைக்கிறேன். 



1. நாடறிந்த, சிறந்த ஒரு நகைச்சுவைப் படைப்பாளியாக பத்திரிகை, சஞ்சிகைகள் வாயிலாக இந்தியாவில் மட்டு மன்றி, ஈழத்தின் தமிழக சஞ்சிகை வாசிப்பு வட்ட்டாரத்திற்கும் அறிமுகமான நீங்கள், அப் பத்திரிக்கைத் துறையினை விட்டு, வலைப் பதிவிற்குள் நுழைந்தமைக்கான காரணம் என்ன? ஏன் வலைப் பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் கருக் கொண்டது? இதனைப் பகிர முடியுமா?


       அடுத்த கட்டம் என்ற ஒரு சுவராஸ்யம் தான்.. இதற்கு அடுத்த கட்டம் என்று ஒன்று இருந்தே தீரும்.. காலத்தின் கைகளில் அந்த மாற்றம் நடந்தே தீரும்.. 





2. முது பெரும் நகைச்சுவைப் படைப்பாளி என்ற அடிப்படையிலும், உங்களின் அனுபவத்தினை அடிப்படையாக வைத்தும் நான் உங்களிடன் எழுப்பும் வினா,
வலைப் பதிவினூடாக ஆக்க இலக்கியங்கள் அல்லது படைப்பிலக்கியங்களின் வளர்ச்சி இன்னும் சில ஆண்டுகளில் எப்படி இருக்கும்? தமிழக இலக்கிய சஞ்சிகைகளுக்கு நிகரான வளர்ச்சியினை இவ் வலைப் பதிவுகளும் எட்டக் கூடிய அல்லது பரந்து பட்ட அளவில் வாசகர்களிடம் சென்று சேரக் கூடிய வழி முறைகள் உருவாகுவது எதிர்காலத்தில் சாத்தியமாகுமா?


     இப்போதே அதன் தாக்கம் அதிகமே.. ஃபிஷர்மேன் ட்வீட் ஏற்படுத்திய தாக்கம் பிரமாதம்.. முன்பெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதன் ரிசல்ட் தெரிய 7 நாட்கள் ஆகும், ஆனால் இப்போது நெட்டில் வரும் விமர்சனங்களால் படம் ரிலீஸ் ஆகி 4 மணி நேரத்தில் ரிசல்ட் தெரிகிரது. பட தயாரிப்பாளர்கள் இணைய எழுத்தாளர்கலை மதிக்கிறார்கள்..
இணைய வாசகர்கள் இப்போது சராசரியாக 10000 பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.. இது பல மடங்கு உயரும்,உயரனும்.. 


ஜோஸ்பின் பாபா:

நண்பா, உங்கள் நகைச்சுவை உணர்வின் பின் புலன் என்ன?

   ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் சோக சம்பவங்கள் இருக்கும். சிலர் அந்த சோகங்களை மனசுக்குள் வைத்துப்பூட்டிக்கொண்டு மறுகுகிறார்கள்.. சிலர் அதை மறக்க நகைச்சுவை எனும் ஆயுதத்தை கையில் எடுக்கிறார்கள்.. தானும் சிரிக்க மற்ரவர்களை சிரிக்க வைப்பது ஒரு கலை.. அந்த கலையை நான் 12 வது படிக்கும் நிலையிலிருந்து ஆரம்பித்து விட்டேன்..

சார்லி சாப்ளின் கவிதை ஒன்று நினைவு வருது..
"நான் மழையில் நனைய விரும்ப காரணம்
என் கண்ணீர் யாருக்கும் தெரியாமலே போகட்டும் என்று தான்"
நான் நகைச்சுவை மழையில் நனைவதும் மற்றவர்களை நனைய வைப்பதற்கும் அதுவே காரணம். 



மதிசுதா 

1.வணக்கம் சீபி நேரே கேட்பதற்கு மன்னிக்கவும். 
போட்டிகள் பொறாமைகள் நிறைந்த இந்தப் பதிவுலகத்தில் தலைக்கனம் இல்லாத ஒரு மனிதனாக வலம் வரகிறீர்கள். இப்படியான நிலையில் தங்களைச் சுற்றி போடப்பட்ட சதிவலை தங்களை எந்தளவு பாதித்தது ?



ஹா ஹா நேரே கேட்காமல் சைட்ல நின்னா கேக்க முடியும் ( SIDE   NOT SIGHT) 
ஹெட் வெயிட் எனக்கு இல்லாததற்குக் காரணம் நிஜமாகவே என் வீடு சுடுகாட்டின் அருகே தினம் தினம் பிணங்கள் போகும் பாதையில் வீடு அமையப் பெற்ற ஒருவன் வாழ்க்கையின் நிலையில்லாத் தன்மையை எளிதில் புரிந்து கொள்வான். 

அதுவும் இல்லாம நான் ஹேர் கட் மாதம் ஒரு முறை பண்ணிக்குவேன் சோ நோ சான்ஸ் டூ தலைக்கனம். சதி வலைன்னு சொல்ல முடியாது ஆற்றாமை, பொறாமை காரணமாக எழுந்த எதிர்ப்புகள்னு சொல்லலாம். அவற்றை பொறுமை, சகிப்புத்தன்மை என்ற 2 ஆயுதங்கள் மூலம் சமாளீத்தேன். 


2.தங்கள் கருத்துப்படி ஒரு பதிவர் என்பவர் எப்படி இருக்க வேண்டும் ?


     மனிதனாக இருக்க வேண்டும். தன்னால் யாருக்கும் கெடுதல் வரக்கூடாது. ஏதாவது செய்தால் அது மக்களுக்கு யூஸ் ஆகற மாதிரி இருக்கனும்.நமக்குள்ள அடிச்சுக்க கூடாது. சிரிக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் சிரிக்க வைக்கலாம், சிந்திக்க வைக்கும் திறமை இருப்பவர்கள் விழிப்புணர்வு பதிவுகள் போடலாம்


சூ. மஞ்சு - யாழ் கணினி நூலகம்

1. உங்களை பதிவுலகத்திற்கு வர தூண்டியது எது? அதாவது என்ன நோக்கத்திற்காக காலடி வைத்தீர்கள்? 

 அப்படி  ஒரு நோக்கம் எல்லாம் ஒண்ணூம் இல்லை. நல்ல நேரம் சதீஷ் தான் என்னை இங்கே இட்டாந்தார்.. ஏதாவது திட்டனும்னா அவரை திட்டுங்க ஹி ஹி





   ஆனந்த விகடன் இல் ட்விட்டர் அக்கவுண்ட்டில் போடும் ட்வீட்கள் வலை பாயுதே என வர ஆரம்பித்தது.. பலத்த வரவேற்பை பெற்றது.. அதிலும் புகுந்து பார்த்துடலாம்னு நினைச்சேன். அதே போல் கேபிள் சங்கரின் பிளாக் பற்றிய விமர்சனம் விகடனில் வந்தது.. நாமும் அது போல் வர வைக்கனும் என்ற எண்ணம் மனதில் பிறந்தது..


2. அந்த நோக்கத்தை அடையும் திசையில் உங்கள் பயணம் தொடர்கிறதா? 


ம் .. அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் காலம் தான் நல்ல பதில் சொல்லும், கூடவே வாசகர்களும் நண்பர்களூம் தான் சொல்ல வேண்டும்.



டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..முதல் 3 பாகங்கள் தக்‌ஷினாமூர்த்தி வலைப்பதிவிலும், 4, 5 ம் பாகம் தமிழ் வாசி தளத்திலும் வந்தவை

டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 

டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html


டிஸ்கி 4 -  இதன் 2ம் பாகம் படிக்காதவங்களுக்காக http://adrasaka.blogspot.in/2012/02/2.html


டிஸ்கி 5 - இதன் 3 ம் பாகம் படிக்காதவங்களூக்காக -http://www.adrasaka.com/2012/02/3_29.html


 டிஸ்கி 6 - இதன் 4 ஆம் பாகம் படிக்காதவங்க  http://www.adrasaka.com/2012/04/4.html