Showing posts with label நக்மா/ஒரே மேடையில் பேச மாட்டோம் - குஷ்பு /தடாலடி. Show all posts
Showing posts with label நக்மா/ஒரே மேடையில் பேச மாட்டோம் - குஷ்பு /தடாலடி. Show all posts

Sunday, November 08, 2015

நானும், நக்மாவும் ஒரே மேடையில் பேச மாட்டோம் - குஷ்பு தடாலடி

நானும், நக்மாவும் ஒரே மேடையில் பேச மாட்டோம் - குஷ்பு தடாலடி
மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனுக்கும், தங்கபாலுவுக்கும், ப.சிதம்பரத்துக்கும் இடையே குடுமிப்பிடிச் சண்டை நடக்கும் நெருக்கடியான சூழலில், ஒரு வாரமாக டெல்லியில் தங்கி சோனியா, ராகுலுடன் ஆலோசனைகளில் ஈடுபட்டிருக்கிறார் காங்கிரஸின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு. தொலைபேசியில் அவரைப் பிடித்தோம்.
‘‘டெல்லியில் சோனியா, ராகுலை சந்தித்து என்ன பேசினீர்கள்?’’
‘‘இந்திய அளவில் காங்கிரஸை வளர்க்க வேண்டும் என்றுதான் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பதவியை சோனியாஜியும், ராகுல்ஜியும் எனக்குக் கொடுத்து இருக்காங்க. டெல்லியில்தான் எனக்கு வேலைகள் அதிகமா இருக்கு. தமிழ்நாடு என்னோட கட்டுப்பாட்டுக்குள் வராத மாநிலம்.  தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பதை இப்போதே சொல்ல முடியாது. தேர்தல் நேரத்துலதான் அதைச் சொல்ல முடியும்.’’
‘‘நீங்களும், நக்மாவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வீர்களா?’’
‘‘நாங்கள் பிரசாரம் செய்வோம் என்று நக்மா சொல்லியிருப்பது சரிதான். நாங்க ரெண்டு பேரும் காங்கிரஸ் கட்சிக்காகப் பிரசாரம் செய்வோம். அதேசமயம் நானும் அவங்களும் சேர்ந்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா நக்மா தமிழ்நாட்டில் பாப்புலர். அவங்களுக்கு என்று தனியாக கூட்டம்வரும், அதில் பேசுவார். அதுபோல நானும் காங்கிரஸை ஆதரித்து தனியாகப் பிரசாரம் செய்வேன். நானும், நக்மாவும் ஒரே மேடையில் பேச மாட்டோம்.’’
‘‘உடல்நலக் குறைவு காரணமாகப் போராடும் காங்கிரஸ் எம்.எல்.ஏ பொன்னம்மாளை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லையே?’’
‘‘ராகுல்ஜி தனிப்பட்ட அக்கறை கொண்டு பொன்னம்மா அம்மாவைப் பற்றி விசாரித்து, செய்ய வேண்டிய உதவிகளை எல்லாம் செய்து முடித்துவிட்டார். மற்ற கட்சிகள் இதன்மூலம் பப்ளிசிட்டி தேடப் பார்க்கிறாங்க. அப்படி விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. ராகுல் காந்தியே பொன்னம்மா அம்மாவுக்கு போன் செய்து பேசிவிட்டார். அப்புறம் என்ன? நான் டெல்லியில் இருந்ததால் ராகுல்ஜி பொன்னம்மாவிடம் பேசி, நடவடிக்கையில் இறங்கினதை அப்பவே தெரிஞ்சுக்கிட்டேன்.’’
‘‘தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை, ‘நேர்மையற்றவர், ஒழுக்கமானவர் இல்லை’ என்று தங்கபாலு விமர்சித்து இருக்கிறாரே? அதுபோல, ‘புறம்போக்கு நிலத்தில் கல்லூரி கட்டியவர் தங்கபாலு’ என்று இளங்கோவன் தாக்கி இருக்கிறாரே?’’
‘‘நான் ஒரு வாரமாக டெல்லியில் இருக்கிறேன். தமிழ்நாட்டில் தலைவர் இளங்கோவனும், தங்கபாலுவும் என்ன பேசிக்கிட்டாங்க என்பது முழுமையாகத் தெரியாது. அங்கே என்ன நடந்தது என்பது தெரிந்த பிறகே பதில் சொல்ல முடியும். தெரியாத விஷயத்தைப் பேசி, தேவையில்லாத விஷயத்துக்குத் தீனிபோட விரும்பலை.’’
‘‘தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால் உங்கள் நிலைப்பாடு என்ன?’’
‘‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி சேர்ந்தால்... நடந்தால்... என்று நீங்க நினைக்கும் யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது.’’
- எம்.குணா
படங்கள்: சு.குமரேசன்

-விகடன்