Showing posts with label த்ரில்லர். Show all posts
Showing posts with label த்ரில்லர். Show all posts

Wednesday, July 11, 2012

THE TAKING OF PELHAM 123 - ஹாலிவுட் ஆக்‌ஷன் த்ரில்லர் - - சினிமா விமர்சனம்

http://5wordmoviereviews.files.wordpress.com/2012/01/pelham-123.jpgநியூயார்க்ல Manhattan பகுதில இருக்கற சப்வே ரயில் ஒண்ணை 4 பேர் ஹை ஜாக் பண்ணிடறாங்க.. என்னமோ வீரப்பன் ராஜ்குமாரை கடத்துன மாதிரி எப்படி அவ்வளவு சுலபமா அதை அவனால செய்ய முடிஞ்சது? அதுக்கு எல்லாம் விடை படத்துல இருக்கு.. 4 பேர்ல மெயின் வில்லன் பேரு ரைடர்.. அவன் ரயிலை ஹை ஜாக் பண்ணிட்டு முதல் வேலையா டிபார்ட்மெண்ட்டுக்கு ஃபோனை போட்டு அவனோட டிமான்ட்ஸ் என்ன?ங்கறதை சொல்றான்.. 

100 கோடி ரூபா கேட்கறான்.. அவன் கைல 37 பயணிகள் பணயக்கைதியா இருக்காங்க.. வில்லன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்துபவர் தான் ஹீரோ.. இவர் என்ன போஸ்ட்ல இருக்கார்னா கவர்மெண்ட் யார் கிட்டே ரயிலை வாங்கலாம்னு அப்ரூவல் தர்ற அதிகாரி.. டிசைடிங்க் அத்தாரிட்டியே அண்ணன் தான்.. ஆனா அவர்  ஆல்ரெடி ஆ ராசா மாதிரி சாரி அவர் லெவலை விட கம்மியா 50 லட்சம் ரூபா லஞ்சம் வாங்குன வழக்குல சிக்கி விசாரணை நடந்துட்டு இருக்கு.. ஆனாலும் அண்ணன் டியூட்டில தான் இருக்கார்..


வில்லன் முதல் கட்ட பேச்சு வார்த்தைல அவ்ளவ் பணம் கேட்டதும் அந்த நகரத்தை மேய்க்கற மேயர் அங்கே ஆஜர் ஆகறார்.. இனிமே பேச்சு வார்த்தையை நான் பார்த்துக்கறேன்.. நீ கிளம்புன்னு டகார்னு ஸ்ருதி கமல்  சித்தார்த்தை கழட்டி விட்ட மாதிரி கழட்டி விட்டு அனுப்பிடறார்.. 


மேயர் வில்லன் கிட்டே பேச்சு வார்த்தை நடத்தும்போது வில்லன் எனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணும்கறான்.. அதாவது ஹீரோ கிட்டே தானே ஆல்ரெடி பேசினேன்.. அவர் கிட்டேதான் பேசுவேன்.. குறுக்கால எந்த நாயும் வரக்கூடாதுன்னு மேயரை கேவலமா திட்டிடறான்.. 


 அவசர அவசரமா ஹீரோவை போய் கூட்டிட்டு வந்து அவன் கூட பேச விடறாங்க.. இதுல என்ன பிரச்சனைன்னா வில்லன் முன் கோபக்காரன்.. ஆன்னா ஊன்னா பயணிகள்ல ஒரு ஆளை ஷூட் பண்ணி மிரட்றவன்.. அதனால அவன் சொல்றதை கேட்டுத்தான் ஆகனும், வேற வழி இல்லை.. காங்கிரசை பகைச்சுக்கிட்டா சி பி ஐ நெருக்கும்னு கலைஞர் பயந்துக்கறாரே, அது மாதிரி./.. 
 
 
ஹீரோவும், வில்லனும் பேச்சு வார்த்தை நடத்தறதை  மேயர் டேப் பண்ணி கவனிக்கறார்.. அவருக்கு என்ன டவுட்னா ஊர்ல இத்தனை பேர் இருக்கும்போது வில்லன் ஏன் ஹீரோவை பேச்சு வார்த்தைக்கு கூப்பிடறான்னு.. வில்லனுக்கு தேவை பணம்.. அதை குடுத்தா சரி.. பேச்சு வார்த்தை யார் செஞ்சா என்ன? ஹீரோவும் இந்த கடத்தல்ல பங்கு வகிச்சிருக்காரா? இதான் அவர் டவுட். 
 
 
http://goodfilmguide.co.uk/wp-content/uploads/2010/01/Pelham-123-Denzel-Washington.jpg

 ஹீரோ வீட்டுக்கு ரெயிடுக்கு ஆள் அனுப்பறார்.. ஹீரோ கிட்டே தகவல் சொல்லிடறார் மேயர்.. ஹீரோ அவர் மனைவிக்கு ஃபோன் பண்ணி ரெயிடு வருது, கோ ஆபரேட்  பண்ணுங்கறார்.. 


பேச்சு வார்த்தைல சம்பந்தமே இல்லாம வில்லன் ஹீரோ கிட்டே ஹீரோ லஞ்சம் வாங்குன வழக்கு பற்றி விசாரிக்கறான்,.. லஞ்சம் வாங்குனதை ஒத்துக்கோங்கறான்.. கோடிக்கணக்குல ஊழல் பண்ணுன பெரிய தலைங்க எல்லாம் கமுக்கமா இருக்கும்போது ஊழலே பண்ணாம பண்ணுனேன்னு எப்படி ஒத்துக்க? ஹீரோ தான் எந்த லஞ்சமும் வாங்கலைங்கறார்.. 

 உடனே வில்லன் இப்போ உண்மையை சொல்லலைன்னா பயணி ஒருவரை ஷூட் பண்ணிடுவேன்கறான்.. உடனே ஹீரோ  உண்மையை ஒத்துக்கறதா சொல்லி பொய்யா தான் லஞ்சம் வாங்குனதா சொல்றார்..  மாற்றுத்திறனாளியா இருக்கும் தன் மகனுக்கான ஆபரேஷன் செலவுக்காக அந்த லஞ்சத்தை வாங்குனதா சொல்றாரு.. 


 இப்போ ஆடியன்ஸுக்கும், மேயருக்கும் டவுட்  வந்துடுது.. நிஜமாவே ஹீரோ லஞ்சம் வாங்குனவரா?


ரயில்ல பயணக்கைதில நம்ம கடலை மன்னன் கட்டதுர மாதிரி ஒரு ஆள் அவன் லவ்வர் கிட்டே லேப் டாப்ல கடலை போட்டுட்டு இருக்கான்.. சேட்டிங்க் நடக்கறப்ப இந்த ஹைஜாக் நடக்கறதால ரயில்ல என்ன நடக்குதுன்னு வெப் காமரா மூலம் அரசுக்கு தெரிய அந்த கடலை ராணி ஹெல்ப் பண்றா - நீதி - கடலை வறுப்பதிலும்  நாட்டுக்கு உபயோகம் உண்டு..  
 
 
வில்லனை பற்றி விசாரிக்கறப்ப  தெரிய வரும் உண்மைகள் - வில்லன் ஆல்ரெடி 200 கோடி ஊழல் வழக்குல மாட்டினவன்.. கோர்ட்ல 100 கோடி திருப்பி கொடுத்து மீதி 100 கோடியை பதுக்கிட்டான்.. அதுக்கு ஜெயில் தண்டனை அனுபவிக்கும்போது அதுல இருந்து தப்பினவன்.. இந்த ரயிலை ஹை ஜாக் பண்ணுனதால  ஷேர் மார்க்கெட் எல்லாம் பயங்கரமா டவுன் ஆகிடுது..அவன் பிளான் என்னன்னா விட்ட 100 கோடியை இதுல பிடிக்கலாம்னு.. 


 உதாரணமா ஒரு ஷேர் விலை ரூ 100 அப்டின்னா  இந்த ஹைஜாக்கால அதன் விலை ரூ 50 ஆகும்.. எல்லா பணத்துக்கும் , அதாவது 100 கோடிக்கும் அந்த ஷேரை வாங்கிப்போட்டா மீண்டும் ஷேர் ரேட் ஏறும்போது அவன் விட்ட 100 கோடி கிடைச்சுடும்.. பணயத்தொகை மிச்சம்.. போனஸ் மாதிரி.. 

 இதான்  வில்லன் பிளான்


பணயத்தொகையான ரூ 100 கோடியை நானா இருந்தா டி டியா வாங்கி இருப்பேன், அல்லது என் அக்கவுண்ட் நெம்பர் சொல்லி அதுல பணம் போடச்சொல்லி இருப்பேன் ஹி ஹி .. ஆனா வில்லன் கேஷா வேணும்கறான்..


 அந்த பணத்தை எடுத்துட்டு ஒரு வேன் கிளம்புது.. அதுக்குப்பாதுகாப்பா 6 பைக் , 2 போலிஸ் ஜீப்.. இதைத்தான் எங்க ஊர்ப்பக்கம் தண்டம் வேற முட்டுக்கோல் வேறம்பாங்க.. அதாவது அந்த நாய்க்கு 100 கோடி கொடுக்கறதே  தண்டம் தான்.. இதுல  செக்யூரிட்டி செலவு வேற.. 


 பணம் கொண்டு போற வழில ஆக்சிடெண்ட்.. பட்ட காலிலே படும், கெட்ட ஃபிகரே மேலும் மேலும் கெடுவாள்னு சொல்ற மாதிரி  விபத்து நடந்த வேன் கவிழ்ந்து கிடக்கு.. இந்த வில்லன் அதை புரிஞ்சுக்காம  என்னை ஏமாத்த பார்க்கறீங்க.. எந்த போலீசும் வேணாம்.. பணத்தை ஹீரோ கிட்டே கொடுத்து அனுப்புங்கறான்.. 


 எல்லாருக்கும் டவுட்.. ஹீரோ மேல.. பார்ட்னர்னு நினைக்கறாங்க.. ஆனாலும் வேற வழி இல்லை..  ரிஸ்க் எடுத்து தான் ஆகனும்/./  அதனால பணத்தை ஹீரோ கிட்டே கொடுத்து அனுப்பறாங்க.. என்ன நடக்குது? என்பது க்ளைமாஸ்ல.. படம் மொத்தம் ஒண்ணே முக்கால் மணி நேரம் ஓடுது.. விறு விறுப்புதான்.. ஆனா பெரிய பிரமாதமான படம்னு சொல்லிட முடியாது.. 
 
 
http://mimg.ugo.com/200906/9874/pelham-123-review-2.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. என்னப்பா, ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணூனியே எ, என்னாச்சு?
 
  அவ மேட்டர் முடிஞ்சதும் பணம் கேட்டா.. அப்போதான் அவ ஒரு மேட்டர்னே எனக்கு தெரிஞ்சது
 
 
2. கண்டக்டர் ( டி டி ஆர்?)  கிட்டே ஃபோனைக்குடம்மா.. உன் பேர் என்ன?
 
 ரேஜினா ( நல்ல வேளை.. ஹி ஹி )
 
 
நீ எதா வேணாலும் இருந்துட்டுப்போ .. நான் சொல்றதை  கவனமா கேட்டுக்கோ.. 



3. சரி.. உன் பேர் என்ன?
 
 ம்.. உங்கம்மாவோட புருஷன்.. 
 
 
 
4.  நீ சொல்ற படி பணத்தை அடுத்த வியாழக்கிழமைக்குள்ளே குடுக்கவா?
 
 வாரக்கணக்குல  அவகாசம் கேட்டா எப்படி? மணிக்கணக்குல சொல்லு



5. இருக்கறதுலயே பெரிய சுகம் பதவி சுகம் தான்.. என் பதவி காலாவதி ஆகி புது மேயர் வந்தா அவன்  நல்லவனா இருந்தா என் சாயம் வெளுத்துடும்.. 
 
 ஏன் அவ நம்பிக்கையா பேசறீங்க? நீங்க அடுத்த மேயரா வர மாட்டீங்களா? 
 
 மக்களுக்கு ஏதாவது செஞ்சு இருந்தாத்தானே?


6.  குடும்பம், குட்டி இருக்கறவன் தான் சாவைப்பற்றி கவலைப்படுவான்.. நான் ஏன் கவலைப்படனும்?



7. வில்லன் -இங்கே இருக்கும் பயணிகள் எல்லாரும் இப்போ என் பணயக்கைதிகள்... அவங்களுக்கு நான் தான் ஃபாதர்.


 ஓ! நீ கத்தோலிக் கிறிஸ்டினா?



8. உன் பேரென்னா?


 ரைடர் 

 ஓட்டறவனா? ( RIDER?)


 நோ, RYDER
 
 
9.  சார்.. ஹைஜாக்கர் ரொம்ப பிரில்லியண்ட்டா இருக்கான்.. 
 
 
 அப்படி பிரில்லியண்ட்டா இருந்தா ஏன் முட்டாளான உன் கிட்டே பேசனும்?


10. உங்க மேயர் வேஸ்ட்./. எங்காவது போய் மேய்ஞ்சுட்டு வரச்சொல்லு
 
http://0.tqn.com/d/movies/1/0/L/b/T/pelhampic3.jpg



11. இந்த உலகத்துல தப்பு பண்னாதவன் மனுஷனே இல்லை.. 


12. நான் செத்துடுவேனோன்னு பயமா இருக்கு 


 ஓவர் கற்பனை உடம்புக்கு ஒத்துக்காது



13.  ஒரு வருஷம் மேயரா இருதுட்டு வெறும் ஒரு ரூபாய் தான் சம்பளம் வாங்கிக்கறியாமே?இவ்வளவு காஸ்ட்லி கோட் போட்டிருக்கியே? இதுக்கு பக்கத்து வீட்ல கடன் வாங்குனியா? 


14. நான் என் மனைவி மேல உயிரையே வெச்சிருந்தேன்.. அவளும் உயிரை வெச்சிருந்தா.. ஆனா வேற ஒருத்தன் மேல 


15. என்னைப்பொறுத்த வரை பணம் தான் உலகம்


16. அரசியல்வாதிங்க தப்பு பண்ண காரணமே  அரசாங்கம் தான், தப்பு பண்ணுனவன், ஊழல் பண்ணுனவனை  நிக்க வெச்சு சுடாம விசாரனை,  வழக்கு கோர்ட்னு  இழுத்தா அவன் நெஞ்சு வலின்னு போய் படுத்துக்கறான்


17.  மாமு.. எனக்கே வைக்கனும்னு நினைக்காத பாமு


18. ஒரு தனி மனுஷன் பணத்துக்காக  ஒரு கவர்மெர்ண்ட்டையே ஆட்டிப்படைச்சுட்டு இருக்கான்.. என்னய்யா பண்றீங்க?


19.. டேக் திஸ் கன் ஃபார் யுவர் செக்யூரிட்டி 

 சப்போஸ் அவங்க செக் பண்ணா?

 மேலே போய்ச்சேர வேண்டியதுதான்
 
 
http://carlosdev.files.wordpress.com/2009/11/the_taking_of_pelham_1_2_3_19.jpg?w=500


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. ஹீரோவுக்கும், வில்லனுக்கும் இடையே நடக்கும் டெலிஃபோன் கான்வர்சேஷன் கலக்கல்.. ஹீரோ எகிறும்போது வில்லன் இறங்கி வருவதும், வில்லன் கோபமாக பேசும்போது ஹீரோ பம்முவதும்.. நல்ல காம்பினேஷன்


2. வில்லன் கிட்டே ஹீரோ தான் ஊழல் வாதி என பொய்யா ஒத்துக்கும் சீன்.. அதனால தான் வில்லன் இவன் நம்ம இனம் என நம்பி ஹீரோவை வர சொல்வது,,. அந்த ஐடியா சூப்பர்.. 


3. ஒண்ணே முக்கால் மணி நேரப்படத்துல  விறு விறுப்பு குறையாம படம் ஸ்பீடா போகுது.. வன்முறை, ரத்த தெறிப்பு எல்லாம் இல்லாம.. 


4. படத்துல முக்கியமான கேரக்டர்கள் மொத்தமே 5 பேர் தான்.. ஹீரோ, வில்லன், மேயர், ஹீரோ மனைவி,மகன்.. கனகச்சிதமான பங்களிப்பு..
 
 
http://collider.com/wp-content/image-base/Movies/T/Taking_of_Pelham_1-2-3/Movie_Images/The%20Taking%20of%20Pelham%20123%20movie%20image%20(5).jpg



இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோ டியூட்டி முடிஞ்சு கிளம்பிடறார்.. அடுத்து டியூட்டிக்கு வர்ற ஆள் பேச்சு வார்த்தை யை டீல் பண்றார்.. ஆனா அதுக்கு வில்லன் ஒத்துக்கலை.. ஹீரோட்ட தான் பேசுவேன்னு அடம் பிடிச்சு தன் கருத்தை வலியுறுத்த, மற்றவர்களை பயமுறுத்த பயணிகள்ல ஒரு ஆளை ஷூட்  பண்ணிடறார்.. அதுக்கு என்ன ரீசன்? அதை கடைசி வரை சொல்லவே இல்லையே?


2. வில்லன் எதுக்காக ஹீரோ கிட்டே தேவை இல்லாம கடலை போட்டுட்டு இருக்கான்? ஹீரோ பேசறதுல ஒரு அர்த்தம் இருக்கு.. டைம் பாஸ்.. இன்னும் டைம், கெடு டைம் வாங்க பேசறார்.. வில்லன் அதுக்கு ஈடு கொடுத்து பேச என்ன அவசியம்?


3. லேப்டாப்ல கடலை போடும் பார்ட்டி தன் ஃபிகர் கிட்டே நியூஸ் சேனல்ல கனெக்ட் பண்ணுனு சொல்றான்.. அவ அப்படியே செய்யறா.. லேப் டாப் ஓப்பன் பண்ணுன பொசிஷன்லயே இருக்கு.. அதை கிராஸ் பண்றப்போ 4 தத்திங்கள்ல ஒருத்தனுக்குக்கூட டவுட் வராதா?


4. ஒரு பணயக்கைதி வில்லன் கிட்டே மாட்டறார்.. ஆம்பளையா இருந்தா நீ ஷூட் பண்ணி பாரு என வம்பை விலை கொடுத்து வாங்கறார்.. அது ரொம்ப செயற்கையான சீனா இருக்கு.. இந்த மாதிரி கிரிட்டிக்கல் சிச்சுவேஷன்ல யாரா இருந்தாலும் பம்முவாங்க.. அவன் ஏன் வாயைக்கொடுத்து உயிரை விடனும்?

5. 100 கோடி பணத்தை முதல்ல ஒரு ஜீப்ல கொண்டு வர்றாங்க.. விபத்து நடந்ததும்  அதை ஹீரோ ஒரே ஆளா தூக்கிட்டு வர்றார்.. வில்லனும் அதை வாங்கறான்.. 100 கோடி ரூபாயை ஒரு ஆள் தனியா தூக்க முடியுமா?



 http://images.starpulse.com/pictures/2009/06/06/previews/Aisha%20Tyler-SGG-087809.jpg

Director:

Tony Scott

Writers:

Brian Helgeland (screenplay), John Godey (novel)

Stars:

Denzel Washington, John Travolta and Luis Guzmán
 
 
 
 
 

Box Office

Budget:

$100,000,000 (estimated)

Opening Weekend:

$23,373,102 (USA) (14 June 2009) (3 Screens)

Gross:

$65,247,655 (USA) (16 August 2009) 
 
 
சி.பி கமெண்ட் - ஆக்‌ஷன் த்ரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம் .2009ல ரிலீஸ் ஆச்சு
 
 
http://i.ytimg.com/vi/BuHSJDS07gI/0.jpg

Friday, June 29, 2012

சுஜாதா - சயின்ஸ் ஃபிக்‌ஷன் - சிறுகதை - திமலா


Writer Sujatha - Smiles at Chennai book fair 2006

உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது.



“நான் பார்வையாளர் இல்லை. உன் மனைவி”




“ஒ நித்யா! நீயா?”




“உள்ளே வரலாமில்லையா?”




“தாரளமாக. உனக்கு யார் தடை செய்ய முடியும்?. அருகே வா! முத்தம் தருகிறேன்.




நித்யா அருகே செல்லாமல் தீர்க்கமாக தன் கணவனைப் பார்த்தாள். ஆத்மாவின் மேசையில் டெர்மினல் திரையில் எழுத்துக்கள் அதி விரைந்தன.


சுவற்றில் உயர வரைபடங்கள் சிவப்பிலும் பச்சையிலும் உயிர் பெற்று ‘ஆத்மா & கோ’வின் அந்த நிமிஷ ஆரோக்கியத்தை அடித்துக் காட்டின.


ஆத்மா டச் போனில் “நியூயார்க்” என்று கூப்பிட்டு விட்டு “உட்காரேன் நித்யா” என்றான்.


நித்யா உட்காராமல் கைகளைக் கட்டிக்கொண்டு கணவனைக் கவனித்தாள்.




“நியூயார்க் நியூயார்க்!”




“நியூயார்க் சார்”




“எத்தனை வேண்டுமாம்?”


“இருபது மில்லியன்”


“பத்தொன்பதுக்கு தீர்த்துவிடு”




“நிக்ஸ் சார்”


“வாங்குவது யார்?”


“ராத்சைல்டு”


“அந்தக் கழுகா?. சரியாக ஒரு நிமிஷம் பார். அதன்பின் பத்தொன்பது நாற்பது வரை போ”.




“சரி”


ஆத்மா டச் போனிலிருந்து நிமிர்ந்து நித்யாவை ஒரு மில்லிசெகண்டு புன்னகைத்து விட்டு ””பிஸி பிஸி பிஸி. இந்த சமயத்தில் வந்தாயே?”  என்றான். நித்யா பதில் சொல்லவில்லை ஆத்மா தன் கோட்டின் உட்பறத்தில்கைவிட்டு பேஸ்மேக்கரை அமைத்து இதயத் துடிப்பைஅதிகரித்துக் கொண்டான். மூளைக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவை அதிகரிததுக் கொண்டான்.




துல்லியமாக சிந்திக்க முடிந்தது. அந்த வரைபடங்கள் இன்னும் நடனித்துக் கொண்டிருந்தன.




“க்ரேட் ! ஒரு நிமிஷத்தில் ஒரு லட்சம் செய்துவிட்டேன். நித்யா

நீ நிற்கிறாயே  என்னவேண்டும் சொல்”


“நான் யார் தெரியுமா உனக்கு?”


“என்ன பைத்தியக்காரக் கேள்வி? நீ என் மனைவி. ஹலோ நியுயார்க்
பத்தொன்பது ஐம்பதா? முடியாது இன்னும் நாற்பது செகண்டு தயங்கி நாற்பத்தி ஐந்துக்கு முடித்து விடு”.




“என்ன சொன்னே  நித்யா”




“ஒன்றுமே சொல்லவில்லை. என் கணவன் இயங்குவதைப் பார்ததுக் கொண்டிருக்கிறேன்”.


“என்னவேண்டும? சொல்லவே இல்லையே”


“ஆத்மா,எனக்கு நீ வேண்டும்”




“நானா? அதுதான் எதிரிலேயே இருக்கிறேனே”




“என் எதிரில் இருப்பது ஒரு பணம் பண்ணும் இயந்திரம்”




“பணம் சக்தி நித்யா. வந்த காரியத்தை நாற்பது செகண்டுக்குள் சொல்”




“ஆத்மா நீ ஒரு மணிநேரம் எனக்கே எனககு என்று பிரத்தியேகமாக வேண்டும்”




“ராத்திரிதான் வருகிறேனே”




“வருகிறாய் ,மாத்திரை விழுங்குகிறாய் இதயத் துடிப்பைக் குறைத்துக் கொள்கிறாய்.  தூங்கி விடுகிறாய். காலை எழுந்து நான் காண்பது காலிப் படுக்கை”




“தேவைப் பட்ட போது ஸ்டிவியில் பேசிக் கொள்கிறோமே?”


“அது வெறும் பிம்பம் எனக்கு வேண்டியது நிஜ நீ”




“ஹலோ டோக்கியோ”




நித்யா டச்போனை பட்டென்று நிறுத்தினாள்.




“என்ன நித்யா இது?”


“ஆத்மா நான் சொல்வதை தயவு செய்து கவனி போன வருஷம் திமலா போவதற்கு அனுமதி கேட்டு எழுதினோமே ஞாபகம் இருக்கிறதா?”




“அதற்கென்ன?”


“அனுமதி கிடைததிருக்கிறது” என்று ஆர்வததுடன் ஒரு மஞ்சள் அட்டையை எடுதது  அவனிடம் காட்டினாள்    அதில் கம்பயுட்டர் அச்சில்




திமலா நிர்வாகம்
உங்கள் வேண்டுகோள்-
20-2-2080 அன்று காலை 10-16
உங்களுக்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது
நேரந்தவறாமல் வரவும்
இந்த அட்டையையும் கொண்டு வரவும்
உங்கள் பார்வையாளர் எண் 164396
(இது செயற்கைக் காகிதம்)




ஆத்மா அதை அவளிடம் திருப்பிக் கொடுத்து விட்டு “அப்பாடா கடைசியில் அனுமதி கிடைத்து விட்டது சந்தோஷம் போய்வா” என்றான்


நித்யா கோபத்துடன் தெளிவாகப் பேசினாள் “ஆத்மா நீயும் என்னுடன் வருகிறாய் வந்துதான் ஆகவேண்டும்.   ஒரு மணி நேரம்தான் ஆகும். வரவில்லையென்றால் இந்த அலுவலகத்தை நாசம் பண்ணிவிட்டுத்தான் போவேன் அத்தனையும் உடைத்து..”




“இரு இரு எப்போது போகவேண்டும்”




“நாளை காலை 10-16″




“ஹேய் கம்ப்யுட்டர் நாளை காலை 10-16 க்கு நான் ·ப்ரீயா?”




அறையில் ஓர் அமானுஷ்யக் குரல் ஒலித்தது.




“நாளைக் காலை 10-16க்கு வத்தாநபே வருகிறார் “




“ஓகாட்! வத்தாநபே ஜப்பானியன். மிக முக்கியமான சந்திர காண்ட்ராக்ட்.ஸாரி நித்யா நான் வரமுடியாது”




நித்யா இப்போது அழுந்தி உட்கார்ந்தாள். ”முடியாது நாளை நீ என்னுடன் வந்துதான் ஆக வேண்டும்.டச்போன் கொடு  ஜப்பான்காரனுடன் பேசகிறேன். ஹேய் கம்ப்யுட்டர் வத்தாநபே கொடு”.




“ஸாரி கிடைக்கவில்லை” என்றது குரல்.




“போய் உன் தலையைத் தின்னு”




“ஸாரி தலை கிடையாது”




“இரு நித்யா கோபிக்காதே நான் வந்துதான் ஆகவேண்டும என்று என்ன கட்டாயம்? நீதான் திமலா பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தாய். தனியாகப் போய்ப் பாரேன் மற்றொரு முறை உன்னுடன் வருகிறேன்”




நித்யா பதற்றத்துடன் ” ஆத்மா எப்படி இதைச்சொல்வேன் இரண்டு பேரும் போவதாகத்தானே முதலிலிருந்தே பேச்சு. அட்டையைப் பார் அனுமதி இரணடுபேருக்கு!”




“கூட யாரையாவது அனுப்பட்டுமா?”




நித்யா அழ ஆரமபித்தாள்.




“நித்யா என்ன இது? இந்த நு¡ற்றாண்டில் யாரும் அழுவதில்லை”.




மேலும் அழுதாள்.




“இதோ பார் நித்யா உனக்கு என்ன குறை? கல்யாணம் செய்து கொள்ளும்போது என்னுடன் வாழ்க்கை இப்படிததான் இருக்கும் என்று நான் சொல்லவில்லையா?”




“ஒரே ஒரு மணி நேரம். அப்படி நான் என்ன பெரிசாகக் கேட்கிறேன்?”




“ஒன்று செய்யலாம், திமலா எவ்வளவு தூரம்?”




“நூற்றம்பது கிலோ”




“நீ முதலில் போ நான் சட்டென்று அவனுடன் பேச்சை முடித்துவிட்டு வந்துவிடுகிறேன்”




“முடியாது நீ வரமாடடாய்.எனக்குத் தெரியும். நான் போகிறேன். உனக்கு வாழ்க்கைப்பட்டதற்கு பதில் ஒரு கம்ப்யூட்டரைக் கட்டிக் கொண்டிருக்கலாம். ஹேய் கம்ப்யூட்டர் என்னைக் கல்யாணம் செய்து கொள்வாயா”




“ஸாரி பதில் இல்லை”

http://image1.indiaglitz.com/tamil/news/shankar010308_1.jpg


ஆத்மா சிரித்தான்.




“சிரிக்கிறாய்! எனக்குப் பற்றிக்கொண்டு வருகிறது. ஆத்மா நாம் பிரிந்து விடுவோம் என்று நினைக்கிறேன்.  எனக்காகப் பத்து பேர் மனுப் போட்டிருக்கிறார்கள்”




“அப்படி எல்லாம் பேசாதே நித்யா”




“பின்னே என்ன?”




“அந்த திமலா அப்படி என்ன முக்கியம் உனக்கு”




“முக்கியம் ஆத்மா.அங்கே போக வேண்டியது என் நிம்மதிக்கு முக்கியம், என் மனநிலை ஸ்திரமடைவதற்கு முக்கியம்.. ஒரு வருஷமாக நான் இதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கே நமக்கு கிடைக்கப்போகும் ஆறுதலும் நிம்மதியும் பிரபஞ்சத்தில் எங்கேயும் இல்லை”.






“இந்த நூற்றாண்டில் இதெல்லாம் அபத்தமாக பிற்போக்காகப் படுகிறது  எனக்கு”.




“ஒரு முறை வந்துபார். உன் மனம் மாறிவிடும். கணவன் மனைவியாகப் போவது பெரும்  பாக்கியம் என்கிறார்கள்”.




“இந்த முறை மன்னித்துவிடு நித்யா மற்றொரு மனுப்போடலாம்”.




“ஹலோ  ந்யூ யார்க்  என்ன ஆச்சு?” நித்யா டச்போனைப் பிடுங்கி எரிச்சலுடன் கீழே எறிந்தாள்




ஹை இம்பாக்ட் பாலிமரி‘ல் செய்யப்பட்ட அது சேதமடையவில்லை.


ஆத்மா அதைப் பொறுக்கிக் கொண்டு “கோபம் கூடாது என் மனைவியே”என்றான்.


“நான் அனி உன் மனைவி இல்லை”


கம்ப்யூட்டர் குறுக்கிட்டது “ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது”.




“என்ன?”




“வத்தாநபேக்கு வேறு அவசர வேலைகள் இருப்பதால் நாளை வர முடியாதாம் அதிக மன்னிப்புக்கள் கேட்கிறார்”


நித்யா முகம் மலர்ந்தாள் “வாழ்க வத்தாநபே. கம்ப்யூட்டரே நீயும் வாழ்க” என்று கூவினாள்.


“மிகைப் பட்ட உற்சாகம் எதற்கு என்று தெரியவில்லை எனினும் வாழ்த்துக்களும் அஸ்ட்ரா கம்பெனியின் சார்பாக வந்தனமும்“ என்றது கம்ப்.


ஆத்மா சிரித்து” திருப்திதானே? நாளை வருகிறேன். முத்தம் உண்டா?”.


நித்யா அவன் உதடுகளில் முத்தமிட்டாள்.




மறு நாள் ஒன்பது மணிக்கே தயாராகி விட்டாள். ஸ்டி.வி அலுவலகத்தில் சொல்லி விடுமுறை வாங்கிக்கொண்டாள்.  தன்னை மெலிதாக அலங்கரித்துக் கொண்டள். ஸின்த்ரானில் பாட்டு அமைத்தாள்.பைக்குள் தேவையான சாமான்களை அடைத்துக் கொண்டாள். டச்போனை எடுத்து வான டாக்ஸியை அழைத்தாள். ஒன்பது பதினைந்துக்கு மேல்மாடிக்கு வந்து காத்திருந்தாள். நிறைய சமயமிருக்கிறது.




திமலா!
அவள் எதிர்பார்த்து ஏங்கிய திமலா!


கணவனுடன் சென்று வரவேண்டும் என்ற ஒரு வருஷ வைராக்கியம்  என் விரதம் இன்று பூர்த்தியாகப் போகிறது.


நித்யா மற்ற பெண்களைப் போல் இல்லை


.
கணவன் மனைவி உறவுக்கு இந்த நூற்றாண்டின் புதிய அர்த்தங்கள் அவளுக்குப் பிடிக்கவிலலை. அயற்சேர்க்கை விழாவுக்கு அவள் போவதே இல்லை.
குருட்டுக் கூட்டுக்கள் அவளுக்கு பிடிக்காது. கணவன் மனைவி உறவில் இன்னும் சில கவிதை கலந்த சங்கதிகள் இருப்பதாகவே நம்புகிறவள்.
அவள் ஜீன்களில் கோளாறு என்று ஆத்மா சொல்லியிருக்கிறான்.




இருக்கட்டும் கோளாறு அவளுக்குப் பிடித்திருக்கிறது. எனக்கு ஆத்மா ஒருவன் போதும், அவனுடன் என் சுக துக்கங்கள் அனைத்தும் ஐக்கியமாகட்டும்.
மெலிதாக பெருமூச்சு விட்டுக்கொண்டு வான டாக்ஸி வந்து வரைந்த வட்டததில் இறங்கி சுவாசித்தது.




நித்யா ஏறிக் கொண்டாள் “எங்கே” என்றான் டாக்ஸி ஓட்டி.


“முதலில் அஜாக்ஸ் கட்டிடம். அங்கே கணவனை அழைத்துக்கொண்டு
திமலா போகவேண்டும்  பத்தே காலுக்குள். உன்னிடம் பூஸ்டர் இருக்கிறதா?”.




“இருக்கிறது. நிறைய சமயமும் இருக்கிறது. அஜாக்ஸ் கட்டிடத்தில் எத்தனை நேரம் காத்திருக்க வேண்டும்?”.




“அதிகப் படியாக ஐந்து நிமிஷம்”


“சரி”


டாக்ஸி நழுவியது.




அஜாக்ஸ் கட்டிடத்தில் இறங்கிய போது ஒன்பது நாற்பது முப்பது.”ஒரு நிமிஷம்” என்று சொல்லி அதிவேக லி·ப்ட்டில் இறங்கி ஆத்மாவின் அறைக்குள் சென்றாள். எப்போதும் போல் அவன் பணம் பேசிக்கொண்டிருந்தான்,




“ஹலோ லண்டன்!  மெட்ரோவில் டாக்டர் டாம்லின்ஸன் வேண்டும். ஹலோ நித்யா”




“நேரமாகிறது கிளம்பு கிளம்பு”




“ஒரு நிமிஷம் டாக்டர் டாம்லின்ஸன் ஆத்மா ஹியர் ஐயம் ஹோல்டிங் எங்கே போகிறோம்?”




“நாசமாப் போச்சு. திமலா!”




“ஓ எஸ் திமலா திமலா நமக்கு அனுமதி கிடைத்து விட்டதல்லவா?.
இன்னும அரை மணி இருக்கிறதே, இதோ வந்துவிட்டேன்”.




ஆத்மாவை ஒரு வழியாக பிடுங்கிக்கொண்டு வர பத்தாகி விட்டது.
பத்து பதினாறுக்கு அனுமதி. நித்யாவுக்கு கவலை அதிகரித்தது. கடவுளே!
போக்குவரத்துக் குழப்பமில்லாமல் போய்ச் சேரவேண்டும்.




“டிரைவர் பத்து பதினைந்துக்கு நங்கள் அங்கே இருக்க வேண்டும்”




“கவலைப் படாதீர்கள் ·ப்யூல் செல்கள் எல்லாம் புதிதாக சார்ஜ் வாங்கியிருக்கின்றன  பூஸ்டர் வைத்திருக்கிறேன். திமலாவில் எந்த ப்ளாட்பார்ம்?”




“புரியவில்லை”




“உங்கள் அனுமதி அட்டை என்ன நிறம்?”




“மஞ்சள்”


“பத்தாவது ப்ளாட்பார்ம்”


வான டாக்ஸி அம்பாக விரைந்தது. அதன் வேக ஈர்ப்புடன் நித்யாவின்
வயிற்றில் எதிர்பார்ப்பின் ஈர்ப்பும் கலந்திருக்கிறது.




ஆத்மாவை முழுசாக பககத்தில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.




அவனை உரசிக் கொணடாள்




திமலாவுக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது பத்து பதிநான்கு நாற்பது.


அப்பாடா!


ஒரு வழியாக வந்து சேர்ந்தோம்.




நீண்ட ப்ளாட்பாரத்தில் அதிகம் சந்தடி இல்லை.


‘திமலாவுக்கு வரவேற்கிறோம்’ என்று ஸோடியம் ஒளிர்ந்தது.




நித்யா வேகமாக நடந்தாள்.




நீண்ட சதுர இயந்திரங்கள் ’உங்கள் அனுமதிச் சீட்டை செருகுங்கள்‘ என்றன.




செருகினாள். உள்ளே அதன் காந்த எண்கள் படிக்கப் பட்டு

” நீங்கள் ஒரு நிமிஷம் முன்னதாக வந்திருக்கிறீர்கள் ஒன்பதாம் எண் கன்வேயரில் செல்லவும்”. சற்று தூரம் நடந்தார்கள். ஒன்பதாம் எண் கன்வேயருக்கு.
ஒரு வரிசை காத்திருக்க மேலே ஒரு ஆரஞ்சு வண்ண விளக்கு பளிச் பளிச்சிட்டது.




‘இன்னும் முப்பது செகண்டுகளில் புறப்படும்’ என்றது ஒலிபெருக்கி ஆத்மாவும் நித்யாவும் அதன்மேல் ஏறிக்கொள்ள சற்று நேரத்தில் ஆரஞ்சு சிவப்பாகி டர்ன்ஸ்டைல் பூட்டிக் கொள்ள ஊஷ் என்ற சப்தத்துடன் பெல்ட் நகர ஆரம்பித்தது.




முதலில் ஒரு மண்டபத்தின் ஊடே விரைந்தது. மேலும் வேகம் பிடித்து மிக மெலிதான கட்டத்துடன் சுற்றி வந்து …கோபுரம் தெரிந்தது.




நித்யாவின் துடிப்பு அதிகரிக்க ஆத்மாவை அப்படியே அணைத்துக் கொண்டாள்.




பிரதான வாசல் திறந்திருந்தது. அவர் இங்கிருந்தே தெரிந்தார்.




நித்யா துள்ளினாள். “பார் ஆத்மா, அவர்தான்!”.




வேகம் குறைந்து சரியாக பத்து பதினாறுக்கு ஆத்மாவும் நித்யாவும சன்னிதியில் அனுமதிக்கப் பட்டார்கள்.




மெலிதாக ஏர்கண்டிஷனரின் மூச்சு கேட்டது அருகே அருகே அருகே சென்றார்கள்.




“அப்பா! என்ன ஜாஜ்வல்யம் என்ன கம்பீரம்!”




“உங்களுக்காக சரியாக இருபது செகண்டு அனுமதிக்கப் பட்டிருக்கிறது
ஆசை தீர சேவிக்கலாம்’என்று குரல் மேலே ஒலித்தது.




அர்ச்சகர் பட்டாடை அணிந்து நெற்றியில் நாமம் அணிந்து “அர்ச்சனை உண்டா? என்ன மொழி?” என்றார்.




“தமிழ்” என்றாள் நித்யா.




அர்ச்சகர் அருகே இருந்த பட்டன்களைத் தொட்டார். மெலிதான இசை பரவியது.




துல்லியமான கணீர் என்ற பெண் குரலில் பாட்டுக் கேட்டது-




“குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
என்றுமே தொழ நம் வினை ஓயுமே”





“சேவிங்கோ சேவிங்கோ! நன்னா கண்குளிரச் சேவிங்கோ சீனிவாசப் பெருமாள்! முன்னெல்லம் திருப்பதி திருவேங்கடம் திருமலைன்னு பேரு.இப்பதான் கம்ப்யூட்டருககுத் தோதா திமலான்னு சின்னதாக்கிட்டா… பூலோக தெய்வம்..பிராசீனமான கோயில்.
நின்ற திருஉருவம் திருமுடியும் தாளும் தடக்கையும்..





கற்பூர ஒளியில் ஆத்மா “த்ரில்லிங்!”என்றான்.

நன்றி - அமரர் சுஜாதா, சிறுகதைகள்,உயிர்மை பதிப்பகம்

BTW, here are the pictures of Sujatha which I took in the Chennai book fair 2006.
Writer Sujatha - Chennai book fair 2006

Thursday, June 28, 2012

சுஜாதா - த்ரில்லர் சிறுகதை - ஜோதியும் ரமணியும்

http://chummaaorublog.files.wordpress.com/2010/02/sujata-portrait.jpg

புதிய பெண் லெக்சரர், ரமணியை எப்படி சமாளிக்கப்போகிறாள் என்று கதி கலங்கிப்போனோம். ரமணி என்று பெயர் இருந்தால் ஒருவன் எப்படி இருப்பான்? குழந்தை முகம், பெண்மை மிளிரும் தேக அமைப்புடன்தானே? தப்பு. இவன் மிலிட்டரி மீசையுடன் காட்டாகுஸ்தி பயில்வான் போல இருந்தான். போதாமல் பலத்த குரல். யாரையாவது விளித்தால் ஹாஸ்டலே அதிரும். சிரிக்கும்போது மட்டும் கண்களில் ரமணி தெரிவான். மற்றபடி காட்டான்.


ஒரு மாதம் லேட்டாகத்தான் சேர்ந்தான். முதலில் அவனை சர்வே கிளாசில் வெளியே ஹாஸ்டலைச் சுற்றி அளக்கும் பயிற்சியில் பார்த்தேன். ‘‘என் பேர் ரமணி. ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங்ல புதுசா சேர்ந்திருக்கேன். கை குடு’ என்றான். குடுத்த கை வெல்லப்பாகு போல் பிசுபிசுவென்றிருந்தது. நான் துடைத்துக்கொள்ள, ‘‘கொஞ்சம் பிடிச்சுக்கோ’’ என்று செயின் சர்வேக்கான சங்கிலியை என்னிடம் கொடுத்துவிட்டு நியூ ஆஸ்டலின் மூலையில் திரும்பி அங்கே ரத்தன்லாலிடம் எனக்குத் தெரியாமல் மறுமுனையைக் கொடுத்துவிட்டு வேறுவழியாக காண்டீனுக்கு போய்விட்டான்

. இருவரும் பேந்தா மாதிரி ஒரு மணி நேரமாகசெயினைப் பிடித்துக் கொண்டு நிற்கிறோம். ‘என்னடா’ என்று பட்டூஸ் என்கிற பட்டாபிராமன் விசாரித்ததில் ரமணி அந்தப் பக்கம் இருக்கிறான். அளந்துகொண்டு இருக்கிறான் என்று இருவரும் சொல்ல, விசாரித்ததில் கேண்டீனில் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். ‘‘நானா! நீ வேற யாரையோ சொல்ற! எனக்கு சர்வே கிளாஸே கிடையாதே!’’ என்று சாது முகத்துடன் புளுகினதிலிருந்து அவனைக் கண்டாலே நானும் ரத்தன்லாலும் ஒதுங்கினோம். அந்த சம்பவத்தின் அவமானம் கலைய மூன்று மாதமாயிற்று.


ரமணி எப்போது யாரை எப்படிக் கவிழ்ப்பான் என்பது யாருக்கும் தெரியாது. சிறு நாடகங்களாடுவது அவனது இயற்கை. சின்ன விஷயத்துக்குக்கூட பொய் சொல்வான். மணி என்ன என்றால், அரை மணி கூட்டிச் சொல்வான். திங்கள்கிழமையை வியாழக்கிழமை என்பான். புதிய ஆட்களைச் சந்திக்கும்போது முத்தரையன், ரமணி ஐயர், அல்டாப் உசேன் என்று இஷ்டத்துக்கு பேர் மாற்றிச் சொல்வான். சொந்த ஊர் கேட்டால் ஒரு நாள் ஹைதராபாத், ஒரு நாள் சின்னாளம்பட்டி, ஒரு நாள் மொரிஷியஸ். நிஜப் பெயர் ரமணிதானா என்று எங்களுக்கு ரொம்ப நாள் சந்தேகமாக இருந்தது.


திடீர் என்று மொட்டை போட்டுக்கொள்வான். இட்லி விழுங்கும் போட்டியில் மற்ற பேர் பதினைந்து இட்லியிலேயே தவித்துக்கொண்டு இருக்கையில் ரமணி லேட்டாக மெஸ்ஸக்கு வந்து சேர்ந்துகொள்வான். நாற்பது இட்லி போடச் சொல்லி சாம்பாரில் குளிப்பாட்டி கவளம் கவளமாக ஆக்கிக்கொண்டு கன்னங்களின் இடுக்கிலேயே வைத்துக்கொள்வான். போட்டிக்கான நேரம் தீர்ந்ததும் துப்பிவிட்டு இன்னும் இரண்டு இட்லி சாப்பிட்டுவிட்டு எழுந்து செல்வான். ஹாஸ்டல் தினத்தின்போது மார்க்கருடன் ராயபுரத்திலிருந்து சாராயம் வாங்கி வந்து டென்னிஸ் கோர்ட்டில் நெற்றியில் கர்ச்சீப் கட்டிக்கொண்டு ‘‘மார்க்கர் வருத்தப்படாதே! சரோ வரேன்னு சொல்லிவிட்டு வரலை பாரு. அதான் ரொம்ப துக்கம். எனக்கு ஒரு தேவாங்கு மட்டும் வாங்கிக் கொடுத்துரு’’


மார்க்கர், ‘‘கவலைப்படாதே தம்பி! சரோசா இல்லைன்னா சரசாவை இட்டாரேன்’’


‘‘எங்க இருக்கா சொல்லு’’ இவ்வாறு திரும்பத் திரும்ப உரத்த குரலில் அலம்பிக்கொண்டு இருப்பார்கள். ஒரு பத்தி நாடகம் போல இருக்கும். பிறகு ‘‘மார்க்கர், இப்டியே போ, ரெண்டு லைட்டு தெரியுது பாரு. அதுக்கு மத்தியில் நடந்து போ’’ என்று அனுப்புவான். சற்று நேரத்தில் ‘க்றீச்’ என்று ப்ரேக் சப்தம் கேட்கும்.


‘‘மார்க்கர் போய்ட்டான்டா’’


‘‘அவனா… அவன் ஏன் சாவறான். இன்னும் எவ்வளவு ஜிஞ்சர் அடிக்கணும் அவனுக்கு’’.

‘‘ரமணி தேவாங்கு வளக்கப் போறியா?’’

‘‘ஆமாடா’’

‘‘யார்ரா சரோ?’’

‘‘என் உயிர்க் காதலி. பேங்க்ல வேலைசெய்றா’’

‘‘எந்த பாங்க்?’’

‘‘ப்ளட் பாங்க்’’ என்று சிரித்தான்.

நியூ ஹாஸ்டலில் வடக்கத்தி மாணவர்களிடையே கைகலப்பு நேர்ந்தபோது ரமணி இடையே புகுந்து கையெடுத்துக் கும்பிட்டு சண்டையைச் சரளமாக இந்தி கவிதைகள் பேசி நிறுத்தினான். மற்றொரு சந்தர்ப்பத்தில் ப்ரேம் மல்ஹனை வெட்டக் கத்தியை எடுத்துக்கொண்டு துரத்தினான். வளாகத்தில் ஓடிப்பிடித்து அவன் கழுத்தில் கத்தி வைத்துவிட்டு சற்று யோசித்து, ‘‘கை குடு! வியாழக்கிழமை நான் கொல்றதில்லை’’ என்றான்.


முதல் செமஸ்டருக்குள்ளே அவனைக் கண்டாலே மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் அலறத் தொடங்கி னார்கள். கிளாசுக்கு வரும்போது ஒரு ஜிம்மி நாய் கூட வந்து காத்திருக்கும். சிலவேளை உள்ளே எட்டிப் பார்க்கும். ‘‘வரேண்டா அவசரப்படாதே’’.


யாரைச் சந்தித்தாலும் கையை முதுகுப் பக்கம் முறுக்கி வலிக்கிறாற் போல் செய்துவிட்டுத்தான் விடுவான். ஏதாவது பதில் சொன்னால் நேராக அடிமடி மர்மஸ்தானத்தில் கை செலுத்தித் திருகுவான். நாம் துடிப்பதைக் கண்டு கண்ணீர் வரச் சிரிப்பான். அதீத பலாத்காரன். தொடாமல், அடிக்காமல், முதுகில் குத்தாமல், கன்னத்தில் தட்டாமல், அங்கே பிடிக்காமல் அவனால் பேசவே முடியாது!


பரீட்சை பேப்பர் திருத்துபவரை ஒருமுறை ரயிலிலிருந்து தள்ளுவதாகப் பயமுறுத்தியதில், ரமணி எல்லா சப்ஜெக்டிலும் பாஸ். கெமிஸ்டரி கிருஷ்ணசாமி ஒருமுறை வெற்றுப் பேப்பருக்கு நாற்பத்தைந்து போட்டார். ஓரத்தில் இரண்டு வரிதான் எழுதியிருந்தான்… ‘‘பட்டா, மார்க் போடலை… தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்ல தள்ளிடுவேன்’.’ தண்டவாளத்துக்குப் பக்கத்தில் இருந்ததால் அத்தனை ரெயில்களும் ஹாஸ்டலுக்கு அருகில் அலறிக்கொண்டு செல்லும். ‘‘எதுக்கப்பா பொல்லாப்பு, ரெண்டு பொண்ணு, வயசான அம்மா இருக்கா. கிறுக்குப் பய ஒண்ணு கிடக்க ஒண்ணு செய்துட்டான்னா?’’ என்று மார்க் போட்டு விட்டார்.


திடீர் என்று ராத்திரி ஒன்பதரைக்கு ‘‘வா ஓடியன்ல புதுப் படம் போலாம்’’ என்று எல்லாரையும் திரட்டிக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போவோம். ரமணி, ‘‘டிக்கெட் வாங்கிட்டு வரேன்’’ என்று படியேறிவிடுவான். ட்ரெய்ன் வந்து எல்லோரும் ஏறிக்கொள்ள அது நகர்ந்ததும் ரமணி எங்கள் தேசிய கீதமான ‘‘முண்டபக்கற மாரபக்கற ஓய் ஓய் ஓய்! சைதாப்பேட்டை க்ரோம்பேட்டை ஓய் ஓய் ஓய்!’’ சொல்லியபடி இறங்கி, ‘‘டேய் டிக்கெட் வாங்கலைடா, போய்ட்டு வாங்க’’ என்று டாட்டா காட்டுவான்.


இவன் கொட்டம் தாங்க முடியாமல் அத்தனை பேரும் உள்ளம் கொதித்துக்கொண்டு இருந்தாலும் அவனை நேர்கொள்ளும்போது நேசிக்காமல் இருக்க முடியவில்லை. நம் எல்லோரிடமும் உள்ள கோகுல கிருஷ்ணனின் விஷம இச்சை காரணமாக இருக்கலாம். இந்நிலையில் முதன்முதலாக ஆண்கள் காலேஜில் ஒரு பெண் லெக்சரராக சேரப்போகிறாள் என்று தெரிந்தபோது கதிகலங்கிப் போனோம். எப்போது ராஜினாமா கொடுப்பாள், மூணு நாளா… ஒரு வாரமா? என்று ரமணி இல்லாதபோது பந்தயம் கட்டி னோம்.


‘‘எலக்ட்ரானிக்ஸ் லெக்சரர்றா… ரமணி ஆட்டோ. அதனால ப்ரச்னை வராது’’ என்றேன்.

‘‘ஹாஸ்டல்ல ரூம் கொடுக்கப் போறாங்களாம்.

‘‘போச்சுரா.

’’
அவளை முதலில் ஸ்டேஷனில் வைத்துத்தான் பார்த்தோம். இந்த வருஷம்தான் பாஸ் பண்ணியிருக்க வேண்டும். படிப்பிலேயே கவனமாக, உடம்பை பார்த்துக்கொள்ளாமல் இருந்திருக்கிறாள் போல. மொத்தமே பத்து கேஜிதான் இருந்தாள். அஞ்சடிக்கு ஒரு அங்குலம்தான் மிஞ்சியிருந்தாள். பலமாக ஊதினால் விழுந்துவிடுவாள். ரமணி அவளை ஒற்றைக் கையால் தூக்கிவிடலாம். யாராவது காதலிக்க வேண்டும் என்றால் மிகுந்த கற்பனை வேண்டும் என்று தோன்றியது.


‘‘குழந்தைடா அது’’ என்றான் நித்யானந்தன். ‘இரு’ என்றான் ரமணி. அவள் வந்து சேரும்போதே, ரமணியை சந்திக்கும் துரதிர்ஷ்டமாகிவிட்டது. சபர்பன் ரயில் நிலையத்தில் புது ஜமக்காளம் சுற்றின படுக்கையும் தகரப் பெட்டியும் நடுவயதுத் தந்தையுமாக வந்து இறங்கியபோது, ரமணி ரெயில்வே பெஞ்சில் சிகரெட் கடைக்காரனிடம் கடன் சொல்லிக்கொண்டு இருந்தான். ‘‘குடுக்கலைன்னா என்ன ரமணி? ஒண்ணாம் தேதி குடு. அதுக்கு எதுக்கு கையை முறுக்கறே!’’

‘‘எக்ஸ்க்யூஸ் மி! ஹாஸ்டலுக்கு எப்டி போகணும்?’’

ரமணி சட்டென்று அஜித்குமாரின் கறுப்புக் கண்ணாடியை அணிந்துகொண்டு என் தோளைப் பிடித்துக்கொண்டு அருகே சென்று ‘‘ஐயா எனக்கு அனகாபுத்தூர் போகணும். மெயின் ரோட்டுக்கு போகணும்… கண் தெரியலை. கூட்டிட்டுப் போறீங்களா?’’


‘‘ஸாரி ஸாரி’’ என்றாள்.


‘‘இவன் பேரு மோகன்தாஸ் காந்தி. எனக்காகப் பரீட்சை எழுதுவான். ஸ்பெஷல் பர்மிஷன் கொடுத் திருக்காங்க’’


‘‘மன்னிச்சுக்கங்க. நாங்களே குரோம்பேட்டைக்குப் புதுசு. உங்க பேர்?’’

‘‘அனகாபுத்தூர் அழகேசன்’’.


அனைவரும் சிரிப்பை அடக்கி கொள்வதைப் பார்த்தாள்.

‘‘அனகாபுத்தூரா?’’ என்று நான் வியக்க, ‘‘சும்மாரு’’ என்று அதட்டினான்.


‘‘எதிர்லயே ஹாஸ்டல் தெரியறதே’’ என்றாள்.

‘‘பர்ஸ்ட் இயரா நீங்க?’’ என்றான்.

‘‘இல்லை, லெக்சரரா சேர வந்திருக்கேன்’’.

‘‘லெக்சரரா?’’ என்று அட்டகாசமாகச் சிரித்தான். தந்தை ‘‘ஜோதி! வா, கண்டவாளோட பேசாதே!’’

ரமணி எழுந்து அப்பனின் சட்டையைப் பிடித்தான்.

‘‘என் பேரு கண்டவன் இல்லை. மரியாதையா பேரு கேளு. தி நேம் இஸ் எல்.ரமணி’’

‘‘ஏய் சட்டையை விடு’’.

ரமணி, ‘‘டேக் இட் ஈசி. நீங்க போங்க சார். பாப்பா பயந்துக்கப் போறது. இப்படியே மேம்பாலத்தைக் கடந்தா அந்தப் பக்கம் குறுக்கு வழி இருக்கு’’.


‘‘என் பேர் கண்டவனாடா?’’

‘‘கண்டுக்காதே ரமணி’’.

‘‘வாம்மா, ஸ்டேஷன் மாஸ்டரைக் கேக்கலாம்’’.

‘‘கணபதி ஐயர்! உம்ம பொண்ணு எப்படி சேர்றான்னு பாத்துர்றேன்!’’ என்றபோது ‘‘என்ன நீ மரியாதை இல்லாமப் பேசறே?’’ என்று அந்த பெண் ரமணியை அதட்டினாள். சற்று நேரம் பூமி சுழல்வது நின்றது.


இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். நாங்கள் பயந்துகொண்டு ரமணியை பார்க்க, அவள் யதார்த்தமாக, ‘‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இருக்கு. என்னைத் தடுக்க நீ என்ன டைரக்டரா?’’


ரமணிக்கு இது புதுசு. இது வரை அவனை எதிர்த்தோ, ஏன் சமமாகவோகூட யாரும் பேசியதில்லை.


‘‘வா ஜோதி’’.

‘‘ஜோதியா? கவனிச்சுக்கறேன்.’’


ஜோதி ரிஜிஸ்ட்ராரிடம் பொறுப்பேற்ற கையோடு நடந்ததை ஒரு புகார் கடிதமாக எழுதிக் கொடுத்தாள். அப்போது ஆரம்பித்தது யுத்தம். டைரக்டர், ரமணியைக் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார். ‘‘உன்னைப்பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப ப்ராக்டிக்கல். ஜோக்ஸ் செய்றியாம். மனசுக்குள்ள என்னன்னு நினைச்சுட்டிருக்கே? ஒழுங்கா படிச்சு வெளிய வரணுமா? டிஸ்மிஸ் ஆகணுமா?’’


ரமணி தாசனுதாசனாக ‘‘சார் இனிமே அந்த மாதிரி கம்ப்ளெயிண்ட் வராது. இது உறுதி. எனக்கு எதிரிகள் யாரும் கிடையாது. விசாரிச்சுப் பாருங்க. ஸ்டேஷன்ல என் சாயல்ல ஒரு பிச்சைக்காரன் இருக்கான் சார். அவன் பேரும் ரமணி. அவனைப் பத்திதான் என் மேல குற்றம் சொல்லியிருக்காங்க. புதுசில்லையா? காலைலதான் ஊர்லருந்து வந்தேன்’’


‘‘அந்தக் கதையெல்லாம் வேண்டாம். ஸ்டேஷன்ல மிஸ் ஜோதிகிட்ட நீ நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுது முதல்ல.’’


‘‘எழுதலைன்னா என்ன ஆகும் சார்… தெரிஞ்சுக்கலாமா?’’


‘‘உன்னை சஸ்பெண்ட் பண்ண வேண்டியிருக்கும்.’’.


‘‘வேண்டாம் சார். எங்கம்மா அப்பா உயிரை விட்டுருவாங்க. ரெண்டு பேருக்கும் ஹார்ட் வீக். எந்த பேப்பரைப் வேணா காட்டுங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்.’’


அந்தக் கடிதத்தில் ‘‘சாது ரமணதாஸ், கேம்ப் மெட்ராஸ் 44’’ என்று கையெழுத்துப் போட்டான்.


அந்தப் பெண் இரண்டாம் வருஷத்துக்கு எலக்ட்ரானிக்ஸ் பாடம் எடுத்தபோது வகுப்பில் வந்து ரமணி உட்கார்ந்தான். அவனைப் பயத்துடன் பார்த்தோம்.


‘‘ரமணி இது உன் க்ளாஸ் இல்லை’’

‘‘அட ஜோஜோ… எப்படி சொல்லிக் கொடுக்கறதுன்னு டைரக்டர் ரிப்போர்ட் கேட்டிருக்கார்’’.

ஜோதி, ‘‘தி பீரியட் ஆஃப் தி மல்ட்டி வைப்ரேட்டர் இஸ் ஒன் பை ஸி ஆர்’’ என்றபோது, ‘‘உன் பீரியட் எப்ப?’’ என்றான். அவள் எழுதுவதை பாதியில் நிறுத்தி கரும்பலகையிலிருந்து திரும்பிப் பார்த்தாள். ‘‘ரமணி, இது உன் கிளாஸ் இல்லை. இப்ப வெளிய போ’’ என்றாள்.


‘‘நான் ஃபேகல்ட்டி மாத்திட்டேன். இப்ப எலக்ட்ரானிக்ஸ்’’.
‘‘கிளாஸ் ரிஜிஸ்டர்ல உன் பேர் இல்லை. போ… கெட் அவுட்.’’

‘‘நீயே எழுதிக்க என் பேரை. எல்.ரமணி. டி.நம்பர் 504. இல்ல கொடு, நான் எழுதறேன்’’.

ரிஜிஸ்தரில் தன் பெயரை எழுதினான். ‘‘லேடி லேடி, எங்கிட்ட வாடி. எல்லாம் சொல்லித் தாடி’’

ஒரு கணம் அவனையே கோபமாகப் பார்த்தாள். அந்த எளிய முகத்தில் அத்தனை கோபம்தான் சாத்தியம் என்பதுபோல் சட்டென்று கண்களில் நீர் நிரம்பியது. எத்தனை சபைகளில் எத்தனைப் பெண்கள் அவமானப்பட்டிருக்கிறார்கள். அவர்களது ஒட்டுமொத்தமான பிரதிநிதிபோல சரித்திரம் கடந்து சற்றுநேரம் நின்றாள். பிறகு சாக்பீஸ் கையைத் துடைத்துக்கொண்டாள்.


‘‘தங்கைகளைப் படிக்கவெக்க முதமுதலா வேலைக்கு வந்து சேர்ந்திருக்கேன். ஏன் இப்படிப் படுத்தறீங்க?’’ என்றாள்.

ரமணி ‘‘டேய் படுத்தாதீங்கப்பா. எத்தனை தங்கைங்க?’’ என்றான். சிகரெட் பற்றவைத்தான். பெஞ்சின் மேல் கால் போட்டுக்கொண்டு ஊதினான். எதிர்பாராதவிதமாக ஜோதி என்னைப் பார்த்து, ‘‘576, நீ போய் ரிஜிஸ்ட்ராரைக் கூட்டிட்டு வாப்பா’’ என்றாள்.

ரமணி என்னைப் பார்த்து, ‘‘ரங்குஸ், பலி விழும்’ என்றான்.

நான் மௌனமாக இருக்க, ‘‘கிளாஸ்ல நாப்பது பேர் இருக்கீங்க.. யாருக்கும் தைரியம் இல்லையா?’’ என்றாள். துரியோதனின் சபைபோல மௌனம்,.
‘‘நான் போறேன் மிஸ். எங்கிட்ட லெட்டர் குடுங்க’’ என்றான் ரமணி
அவளே போர்டை அழித்துவிட்டு டைரக்டரைச் சந்திக்கச் சென்றாள்.
மறுநாள் நோட்டீஸ் போர்டில் எல்.ரமணியின் மேல் மூன்று குற்றச்சாட்டுகள் பட்டியலிட்டிருந்தது. ‘தப்பான வகுப்பறையில், தவறான வார்த்தை
கள் பேசினது, வகுப்பில் புகை பிடித்தது. விசாரணை முடியும் வரை ரமணிக்கு வகுப்புகளில் நுழைய அனுமதி இல்லை’ என்று அறிவித்தது.
அதன் பிரதியை ப்யூன் கொண்டு வந்து கொடுக்க ரமணி அவனைத் துரத்தி அடித்தான். ‘‘வக்காளி, எனக்கு நோட்டீஸ் குடுக்க வைஸ் சான்சிலர் தாண்டா வரணும். எல்லாத்தையும் எல்லாரையும் பத்தவைக்கிறேன் பாரு. சிட்டில உள்ள அத்தனை காலேஜ்லயும் ஸ்ட்ரைக்’ என்று ஆபீஸ் வளாகத்தில் சத்தம் போட்டான்.

அப்படி ஏதும் நிகழவில்லை. ஹாஸ்டலிலிருந்து புறப்பட்டுச் சென்றான். நடுராத்திரியில் திரும்பி வந்து ஜோதி தங்கியிருந்த ஹாஸ்டல் அறைக்கு முன் சத்தம் போட்டான். ‘‘வெளிய வாடி ஏய்!’’ என்று கல்லெறிந்தான். புது ஹாஸ்டல் கட்டுவதற்காகக் கட்டியிருந்த தற்காலிக நீர்த் தொட்டியில் குதித்து ஈரமாக வந்து அவள் கதவைத் தட்டினான். ‘‘ஜோதி ஏய் ஜோதி, ரியலி சாரி ஜோதி. எனக்குப் பேதி ஜோதி. நான் ஏன் அப்படின்னு வெளிய வந்தா சொல்றேன். ஐ லவ் யு ஜோதி!’’

அந்த அறை இருட்டாக மௌனமாக இருந்தது. முதல் மாடியிலிருந்து டிசௌஸா, மொரைரா, வெங்கடேசன், நான் எல்லோரும் அவனைச் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றோம். அந்த அறையில் சலனமே இல்லை. பாவம் அந்தப் பெண், கிலியில் நடுங்கிக்கொன்டு சுருண்டு உட்கார்ந்திருக்க வேண்டும்.


ஹாஸ்டலிலிருந்து வகுப்பறைக்குச் செல்லும் பாதையில் சரக்கொன்றை மரங்களும் செம்பருத்தியும் நிழல் தரும் ஃபுட்பால் மைதானத்தில் ஒரு டக்கோட்டா ஏரோப்ளேன் இருக்கும். பேருந்துகளின் பணிமனை ஒன்று இருக்கும். ஜோதி அவ்வழியே தன் வகுப்புக்குப் பாடம் எடுக்கச் சென்ற போது, ஒரு புல்லட்டில் கடகடவென்று புழுதி பறக்க ஓட்டிவந்து அவளருகில் சுற்றி நிறுத்தி, ‘‘வா வா, க்ளாஸ்ல கொண்டுவிடறேன்’’. அவள், ‘‘என்கூட பேசாதே’’ என்று விரைவாக நடக்க, அடிக்கடி த்ராட்டிலை விர்விர் பண்ணிக்கொண்டு பாடிகார்டு போல கூடவே ஓட்டி வந்தான்.


அவள் மேலாடைத் தாவணியைப் பிடித்து இழுத்ததாக ஜோதி தன் புகார் கடிதத்தில், போலீஸ் எழுதச் சொன்னார்கள். பாதுகாப்பு கேட்டிருக்கிறாள். பல்லாவரம் ஸ்டேஷனிலிருந்து இன்ஸ்பெக்டர் வந்தார். டைரக்டரின் அலுவலகத்திலும் அவர் க்வார்ட்டர்ஸிலும் போலீஸ்காரர்கள் நின்றார்கள். டைரக்டருக்கு மகா கோபம். மன்னிப்பே கிடையாது என்று வி.சி. ஆபிஸக்கு எழுதி பர்மிஷன் வாங்கி கேம்பஸைவிட்டு நீக்கி மூணு வருஷம் ரஸ்டிகேட் பண்ணும்படி சிபாரிசு செய்தார். லெக்சரர் டி.எம்.டி. ஜோதியைப் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக அவனை அரெஸ்ட் பண்ண போலீஸ் வாரண்ட்டுடன் வந்திருந்தார்கள்.


ஹாஸ்டலில் ரமணியைத் தேடினால் காணவில்லை. மாணவர்கள் அனைவரும் பரபரப்பாக முடிச்சு முடிச்சாகக் கூடி இருக்க, டைரக்டரிடம் இந்த தடவை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டோம்.


அவர், ‘‘படிக்கிற பையன், ரேங்க் வாங்குற பையனுக்கு மன்னிப்பு கேளுங்கப்பா. இந்தப் பொறுக்கி எல்லாரையும் கொடுமைப்படுத்திருக்கான். இவனை யாராலயும் காப்பாத்த முடியாது.’’.

‘‘இருந்தாலும் இத்தனை கடுமையாத் தண்டிக்கணுமா?’’

‘‘இது குறைந்தபட்சத் தண்டனை. யூனிவர்சிட்டி ரூல்ஸ் அப்படி’’ என்றார்.

‘‘யாராவது ரமணிகிட்ட போய்ச் சொல்லி ஊருக்குப் புறப்பட்டுப் போகச் சொல்லிரலாம்’’ என்று யோசனை சொன்னார்கள். ‘‘இல்லைடா, அவனை ஒருமுறை உள்ள தள்ளினால்தான் புத்தி வரும்’’

‘‘மூணு வருஷம் டீபார் பண்றது தப்புடா. அவன் வாழ்க்கையே பாழாகிடும்’’.

ரமணி லோக்கல் ட்ரெய்னிலிருந்து இறங்கி தூரத்தில் வந்துகொண்டு இருக்க, அவனை நோக்கி ஓடினேன். ‘‘ரமணி இப்படியே ஊருக்குப் போய்டு. உன்னை அரெஸ்ட் பண்ண போலீஸ் வந்திருக்காங்க.’’

‘‘அப்படியா? வெரிகுட் வெரிகுட்… எங்க?’’

‘‘டைரக்டர் ஆபிஸ்ல… போய்டுரா.’’

‘‘தேவையில்லை. யார் அந்த இன்ஸ்பெக்டர்? விசாரிக்கிறேன்.’’

‘‘ரமணி உன்னை மூணு வருஷம் டீபார் பண்ணிருக்காங்க. ஜெயில்ல போடுவாங்க. இது விளையாட்டில்லை புரியுதா?’’

‘‘என்னடா தப்புப் பண்ணிட்டேன்? எதுத்தாப்பல பஸ் வருது. ஒதுங்கிக்கன்னு அந்தப் பொண்ணைத் தொட்டேன், அவ்வளவுதான்’’.

‘‘நம்பச் சொல்றியா? ஏன் இப்படி மரமண்டையா இருக்கே ரமணி?’’

‘‘பாரு, நம்பாட்டிப் போங்க. ஐ டோண்ட் கேர்’’.

‘‘ரமணி சாரிடா’’.

‘‘நானே சாரி இல்லை. நீ ஏண்டா சாரி. ஜோதி அக்கா… எப்படி இருக்காங்க?’’

‘‘பயத்துல இன்னிக்கு பூரா கிளாஸ் வரலை. டைரக்டர் ஆபீஸ்லயே இருக்காங்க.’’

‘‘போய்ப் பார்த்தாகணும்’’.

‘‘வேண்டாம் ரமணி’’.

‘‘போடா!’’
டைரக்டர் ஆபீசில் எதிர்ப்புக் குரல் கொடுத்தோம். ‘‘ரமணி ரமணி’ என்று கோஷமிட்டதும் ரமணி அரசியல் தலைவன்போல வணங்கிவிட்டு ‘உங்களுக்கெல்லாம் நண்பர்களே, ரோஷமுள்ளவர்களே! நாட்டுக் கட்டைகளே! என் மேல இருக்கிற அக்கறைக்காக ஆளுக்கொரு ஏக்கரா நிலம் ஜூலியஸ் சீஸர் உங்களுக்கு கொடுத்தாச்சு பழவந்தாங்கல்ல. தட்டுங்கடா கையை! வாழ்க ஜோதிபாய். மெஸ்ல நெய் ரோஸ்ட் போடச் சொல்லு. இப்ப வந்துர்றேன்’’ என்று உள்ளே சென்றான்.


உள்ளே என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு மணி நேரம் கழித்து முதலில் இன்ஸ்பெக்டர் வெளியே வந்து ஜீப்பில் ஏறிக்கொண்டார். கண்களைத் துடைத்துக் கொண்டு ரமணி மெல்லத்தான் வெளியே வந்தான். அவன் கையில் விலங்கு மாட்டினதுபோல் கர்ச்சீப் கட்டியிருந்தான். அதைச் சடுதியில் பிரித்து அவிழ்த்து, ‘‘த்ரீ சியர்ஸ் டு ஜுலியஸ் சீஸர், ஹிப் ஹிப் ஹ§ர்ரே, முண்ட பக்கற மார பக்கற ஓய் ஓய் ஓய்!’’ சொல்லிவிட்டு இரு கைகளையும் உயர்த்தி ‘‘கை தட்டுங்கடா. எல்லா ஆர்டரையும் வாபஸ் வாங்கிட்டாங்க. போலீஸ் கேஸ§ம் வாபஸ்’’.


நாங்கள் குதூகலத்துடன் ‘‘என்னம்மா…எப்படி?’’


‘‘ஒரே ஒரு பொய் சொன்னேன். சால்வ் ஆயிருச்சு. நமக்குக் கைவந்த கலையாச்சே’’


‘‘என்னடா சொன்னே?’’


‘‘எனக்கு லுக்கிமியா… ஆறு மாசத்தில சாவப்போறேன். அந்த துக்கத்தை மறக்கத்தான் இந்த தமாஷ் எல்லாம் செய்தேன்னேன். டைரக்டர் அப்படியே அழுதுட்டார். அந்தப் பெண்ணும் தேம்பித் தேம்பி அழுதுது. பாரு எம்மேல சாஞ்சுகிட்டு அழுததில சட்டையெல்லாம் ஈரம்! எல்லா புகாரையும் வாபஸ் வாங்கிடுத்து. இன்ஸ்பெக்டர்கூட புறப்படறப்ப ஓரக்கண்ணைத் துடைச்சுகிட்டுத்தான் போனார். பாத்தியா? இந்தா சாப்பிடு’’ என்று வேர்க்கடலை கொடுத்தான்.


அதை உடைத்தபோது உள்ளே எதிலும் பருப்பு இல்லை! ரமணியின் மற்றொரு ஏமாற்று வித்தை.


‘‘டேய் போறுண்டா. இனிமேலாவது பொய் சொல்றதை விட்டுருடா.’’


‘‘பொய்தாண்டா என் உலகத்தை சுவாரஸ்யமாக்கறது. பொய் இல்லைன்னா வாழ்க்கையே … உலகமே இல்லை!’’ என்றான்.


மூன்றாவது செமஸ்டருக்குள் ஜோதி ராஜினாமா கொடுத்து விட்டாள். கல்யாணம் பண்ணிக் கொண்டு அமெரிக்கா போய் விட்டதாகச் சொன்னார்கள்.

ஊருக்குப்போன ரமணி மூன்றாவது செமஸ்டருக்கு வந்து சேரவே இல்லை. அதன்பின் அவனை நாங்கள் பார்க்கவே இல்லை. ஏன் என்று விசாரிக்கப் பயமாக இருந்தது.


நன்றி - அமரர் சுஜாதா, உயிர் மெய்,சிறுகதைகள்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL14wJu9e9O_PLdPtcyr__0Bk2HIaKfgjWPOmr1JYNm_Nfpv3E5faZsQnxaErcOkENBT1dVhOhxIq7OFFpoKG2rT796s7YSeFBM92d9GppyHCM2Y6bfkhh_G_EP4PJZqGNDckF_FdC827k/s320/writer+sujatha+family+2.jpg

Tuesday, April 10, 2012

அஸ்த்தமனம் - டைரக்டருக்கா? புரொடியூசருக்கா? - சினிமா விமர்சனம்


http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/558035_285405198201803_156082301134094_625404_17530697_n.jpg 

வெண்ணிலா கபாடிக்குழு படத்துல கபடி கோச்சா நடிச்ச கிஷோரை ஹீரோவா போட்டு போர்க்களம்னு ஒரு படம் எடுத்த டைரக்டரோட அடுத்த படம்.. அந்தப்படத்துல மேக்கிங்க் ஸ்டைல் நல்லாருந்தது.. படம் பெரிய அளவில் ஹிட் ஆகலைன்னாலும் நாளைய வெற்றி இயக்குநரா வருவார்னு ஒரு நம்பிக்கையை கொடுத்த படம் அது.. அந்த நம்பிக்கையை  தவிடு பொடி ஆக்கும் படம் இது..

3 பசங்க, 2 பொண்ணுங்க ஒரு கார்ல  கிளம்பறாங்க.. ட்ரெக்கிங்க் போறதா பேசிக்கறாங்க.. ஆனா ட்ரெக்கிங்க் குரூப்க்கு சம்பந்தமே இல்லாம ஒரு ஜிகிடி கார்லயே எப்போ பாரு கண்ணாடியை பார்த்து பார்த்து லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டே இருக்கு. ( இட் ஈஸ் எ கடிக்கல் மிராக்கிள் யூ  நோ ..?). மேக்கப் மேனகா?

இன்னொரு  ஜிகிடி என்னமோ நாவல் படிக்கவே பிறந்த மாதிரி இங்கிலீஷ் நாவலை படிச்சுக்கிட்டே வருது..   உடம்பு தடிப்பாளினி ஆன படிப்பாளினி ( படிப்பாளீ நீ? கவித கவித !!)உண்மையிலேயே ட்ரெக்கிங்க்ல ஆர்வம் உள்ள ஆளுங்கன்னா ஜன்னல் ஓரம்  வெளீல வேடிக்கை பார்த்துட்டு தானே வரனும்.. 5 பேர்ல ஒரு ஆள் கூட அப்படி வர்லை.

மத்த 3 பசங்களும் தீவிரவாதி ரேஞ்ச்ல இருக்காங்க.. தலை முடி கட் பண்ற வேலையோ, தாடியை ஷேவிங்க் பண்ற பழக்கமோ இல்லாதவங்க போல. டி ஆர் ஃபேனோ? ஓவர் பில்டப் உலக நாதன்.. ஒரு அழுக்கு மூட்டை.. . அவ்வ்வ்வ்.. நான் கூட ஓப்பனிங்க்ல  ஏதோ டெரரிஸ்ட் படம்.. தேசிய கீதம் படத்துல வர்ற மாதிரி ஒரு தலைவரை கிட் நாப் பண்ணப்போராங்க.. பாலம் படம் மாதிரி  வித்தியாசமான சப்ஜெக்ட்னு நினைச்சேன்.. அடங்கோ.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij8rfHFB9poUQuNap8ut-dueGFcqU2BcqMHz9sNf2pSA10iJW3_1n32_T1WtL4qmOcadiJjcPY1KWFSGdQwDeFH5GAY3y9_fzipq827PWyNNBE-Ux4fDriLcT6f2luByZD2BmjQRIm7EA/s1600/asthamanam200111_4%255B1%255D.jpg


ட்ரெக்கிங்க்னா கொடைக்கானல், அல்லது மூணாறு மாதிரி ஏரியாவுல மலை ஏறுனும் தானே.. ஆனா இவங்க ஆள் அரவம் இல்லாத ஒரு காட்டுக்குள்ள போறாங்க.. அங்கே ஒரு கைடு.. அவனையும் கூட்டிக்கிட்டு  காட்டுக்குள்ள போறாங்க.. செம காமெடி என்னான்னா அந்த கைடு திடீர்னு யாராலோ தாக்கப்பட்டு செத்துடறாரு.. அதுக்குள்ள இடைவேளை..

உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையா 40 நிமிஷத்துல இடைவேளை  விட்ட தமிழ்ப்படம் இது தான்னு நினைக்கேன் ( நினைக்கறேன் என்பதன் சுருக் ஹி ஹி ( ம்க்கும்,.. இதுக்கு நினைக்கறேன்னு முழுசாவே போட்டிருக்கலாம்.. மனசுக்குள்ள சுஜாதான்னு நினப்பு.. )0

ஒரு ஆள் செத்ததும் டக்னு நாம ரிட்டர்ன் போயிடலாம்னு எல்லாரும் பேக் அடிக்கறாங்க.. ஆனா ஒரு காட்டு வாசி குரூப்ல மாட்டிக்கறாங்க .. 5 பேருல 2 ஆளுங்க அவுட்.. மீதி 3 பேரும் எஸ் ஆகிடறாங்க.. அவ்ளவ் தான் கதை.. இடைவேளைக்குப்பிறகு  30 நிமிஷம் தான்..

இவ்லவ் மொக்கைப்படத்துலயும் டைரக்டர் ஒரு சேதி சொல்றார்.. அது இன்னான்னா பொம்பளைங்களுக்கு ஆயுள் ஜாஸ்தி.. எப்படியும் எஸ் ஆகிடுவாங்க.. ஆம்பளைங்க தான் முட்டாப்பசங்க .. ஆபத்துல மாட்டிக்குவாங்க.. இதான் அந்த மெசேஜ்.. அய்யோ பாவம் ( வேற யாரு.. படம் பார்த்த அந்த 19 ஆடியன்ஸும் தான்.. )

படத்துல பாராட்டியே ஆகனும்னா 3 பேரை பாராட்டலாம்.. இவ்ளவ் மொக்கையான படத்தை தைரியமா படம் ஆக்கத்துணிந்த  தயாரிப்பாளர்,  2 வது படத்துலயே சம்பாதிச்சு வெச்ச பேரை கெடுத்துக்கிட்ட ட்டைரக்டர்.. சும்மா ஹேண்டி கேமராவை வெச்சே நல்ல குவாலிட்டி குடுக்க முயற்சித்த ஒளிப்பதிவாளர்.. 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/asthamanam/wmarks/asthamanam01.jpg

மொத்த ஸ்கிரிப்ட்டில் 2 ஏ 4 சீட்டில் தான் மொத்த வசனமே.. அதில் தேறியவை 


1.  இப்போ நீ யாருக்கு கிஸ் தரப்போறே? லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டே இருக்கே? ( லிப்ஸ்டிக் சும்மா அழகுக்கு.. கிஸ் அடிச்சா கசக்கும் யுவர் ஆனர்..  எல்லாம் ஒரு ? ஞானம் ஒன்லி ஹி ஹி )


2.  எதுக்குடா துப்பாக்கியை கையில் எடுக்கறே..?

 அவன் ஓவரா பேசினா போட்றலாம்னு தான்.. 

 ஆல்ரெடி அவன் ஓவராத்தான் பேசிட்டு இருக்கான்.. சும்மா சீனைப்போடாத,.. 


3.  கைடுன்னா ஏதோ காட் ஃபாதர் மாதிரி இருப்பார்னு பார்த்தா ஆள் கஞ்சா கறுப்பு மாதிரி இருக்காரே.. 

4.  கைடு - எதுக்காக காட்டுக்குள்ள போகனும்னு நினைக்கறே?

டிரெக்கிங்க்

 அடடா.. டிரக் எல்லாம் அங்கே போகாதே.. ( இது ஜோக்காம் ஹி ஹி )

5.  எதுக்கும் பயப்படாதீங்க.. நம்ம கிட்டே ( அதாவது அவன் கிட்டே) கன் இருக்கு,. 

 கைடு - லைசன்ஸ் இருக்கா? ( மடக்கிட்டாராம். ஹய்யோ அய்யோ )


6.  பைனாகுலரை குடு.. 

 இந்தா 

 ரொம்ப தூரமாத்தெரியுதே.. 

 பைனாகுலரை திருப்பிப்பிடிடா.. 

இப்போ ரொம்ப பக்கமா தெரியுது... 

7.  கைடு - காசு வேணா முன்னே பின்னே  கொடுங்க.. ஆனா ஒரே ஒரு வாட்டி......

( இந்த டைம்ல அந்த 2 ஜிகிடிங்களும் பம்முது)

24 மணி நேரமும் ஹெல்மட்டோட அலையறானே இவன் முகத்தை ஒருக்கா பார்க்கனும்.. 


8. இந்தப்பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலையே.. 

 அப்போ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.. எல்லாம் புரிஞ்சுடும்

 ம்.. அதான் தேடிட்டு இருக்கேன்.. 

 9.  ஜிகிடி - என்ன? அட்வாண்டேஜ் எடுக்கப்பார்க்கிறியா? 


ஆமா.. இவ பெரிய விண்ட்டேஜ் விமலா ( இந்த டயலாக் நான் எழுதுனது.. ஹி ஹி .. படத்துல இல்லை)

10. அந்த காட்டுவாசிக்கு தமிழே  தெரியாது.. இவ இங்கிலீஷ்ல பேசறா


11. அந்த காட்டுவசிப்பொண்ணு என்னடா பண்றா?,

 உன்னை லவ் பண்றான்னு நினைக்கறேன்.. உன்னையே முறைச்சு முறைச்சு பார்க்கறா.. 

 டேய் டேய் எப்படியாவது அவ கிட்டே பேசி எங்களை இந்த காட்டுல இருந்து எஸ் ஆக வைடா.. 


12.  ஆண்டவன் செஞ்ச ஒரே நல்ல காரியம் எது தெரியுமா?.. கெஞ்சிக்கேட்டா குடுக்கற மனோபாவத்தை பொண்ணுக்கு குடுத்ததுதான்..  பாவம்.. ஆல் லேடீஸ்.. நல்லா ஏமாந்துடறாங்க.. 


http://the70mm.com/wp-content/uploads/2011/08/director-BANDI-SAROJ-KUMAR.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. இந்தப்படத்துக்கு மொத்த செலவே அதிக பட்சம் 5 லட்சம் தான் ஆகி இருக்கும்.. ஆனா புரொடியூசர்ட்ட எவ்ளவ் தேத்துனாரோ..? பாராட்டுக்கள்

2. சமீபத்தில் ரிலீஸ் ஆன ஹிந்தி டப்பிங்க் படமான காட்டுப்புலியில் அர்ஜீன் இருந்தும் அந்தப்படம் டப்பா ஆனது தெரிந்தும் அதே வித கதையை தைரியமாக எடுத்தது.. 

3. ஒரு காடு.. அதுக்குள்ள போற ஒரு குரூப், அதுல 2 லேடீஸ், 3 ஜெண்ட்ஸ் என்ற ஃபார்முலாவில் ஆங்கிலத்தில் ஏகப்பட்ட படங்கள் வந்து அடிவாங்கியும்  தில்லா அந்த சப்ஜெக்டை கையில் எடுத்தது...



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  ஓப்பனிங்க் ஷாட்ல அந்த அழுக்கு மூட்டை கடற்கரை ஓரமா கடல் அலைல கால் வெச்சு ரன்னிங்க்ல வர்றாரே.. எதுக்கு? கொஞ்சம் தள்ளி மணல்ல சாதாரணமா வரக்கூடாதா? ( பில்டப்?)

2. டைட்டில் போடறப்ப ரொம்ப வித்தியாசமா பண்றதா நினைச்சுக்கிட்டு  அந்தந்த கேரக்டர் பேரு, விலாசம் எல்லாம் பிளாக் லெட்டர்ஸ்ல போட்டீங்களே, மனசுக்குள்ள மணி ரத்னம்னு நினைப்பா? ஒண்ணும் புரியல. ஒரு எழுத்தும் தெரியல..


3. அந்த 2 ஃபிகர்கள்ல யாராவது ஒரு ஆள் கூட லவ்வ வெச்சிருக்கலாம். கிளாமராவது தேறி இருக்கும். அதையும் பண்ணலை.. 


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 30


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ம்ஹூம்

 சி.பி கமெண்ட் -   அய்யய்யோ. சல் தா நஹி..  ஹி ஹி 





 இந்த குப்பையை அண்ணா தியேட்டர்ல பார்த்தேன் .. மொத்தம் 14 பேர் படம் பார்த்தோம்

Tuesday, April 03, 2012

BLOOD MONEY - பாலிவுட் சினிமா விமர்சனம்

http://www.bollygraph.com/wp-content/uploads/2012/03/Blood_Money_Is_794.jpgவாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் எம் பி ஏ கேண்டிடேட் தன்னோட சம்சாரத்தை கூட்டிக்கிட்டு  அந்த ஊருக்கு வர்றான். கம்பெனி அவங்களூக்கு குடுத்த பங்களாவை பார்த்தா சசிகலா மயக்கம் போட்டு விழுந்துடுவாங்க.. அவ்ளவ் படோடகம்.. ஆடம்பரம்..  கிட்டத்தட்ட ஃபாரீன் தூதர் தங்கற மாதிரி ஒரு பில்டிங்க்.. 

அப்படி என்ன அப்பாடக்கர் வேலைன்னா அந்த கம்பெனி டைமண்ட் பிஸ்னெஸ் பண்ணுது.. ஹீரோ தன்னோட வாய் சாமார்த்தியத்தால ( இதுக்கு இங்க்லீஷ்ல ஓரல் டேலண்ட்னு சொல்லலாமா? ஹி ஹி ) ஒரு வைரக்கல்லை 7 கோடிக்கு வித்துடறார்.. எந்த கேனயனும் அப்படி வாங்க மாட்டான்.. ஆனாலும் டைரக்டர் சொன்னதுக்காக ஒரு சேட்டு ஜி வாங்கிடுது. 

 அந்த பிஸ்னெஸை டீலை முடிச்சதுக்கு கம்ப்பெனி ஹீரோவுக்கு கமிஷனா 25 லட்சம் கொடுக்குது.. படம் பார்த்துட்டு இருக்கறவங்க, தியேட்டர் ஆபரேட்டர் உட்பட என்ன நினைக்கறாங்கன்னா வருஷம் பூரா  கஷடப்பட்டு வேலை செய்யறதுக்கு இந்த மாதிரி ஒரு நாள் மட்டும் வேலை செஞ்சா போதும்னு நினைக்கறாங்க.. 

 ஹீரோ அந்த 25 லட்சத்தை டெபாசிட் பண்ணி சேமிக்காம சம்சாரத்துக்கு அதுவும் அவனோட சம்சாரத்துக்கு நகை வாங்கித்தர்றான்.. அந்த நெக் லசை பார்த்து ஹீரோ நெக்குருகிடறா.. 


http://www.firstpost.com/wp-content/uploads/2012/03/blood-money.jpg

ஹீரோ ஒர்க் பண்ற கம்பெனில ஒரு வில்லன்.. அவனைப்பற்றி சொல்றதுக்கு  முன்னால ஆஃபீஸ் பற்றி பொதுவா ஒண்ணு சொல்லிக்கறேன்.. சின்ன ஆஃபீசோ, பெரிய ஆஃபீசோ, கவர்மெண்ட் ஆஃபீசோ, பிரைவேட் ஆஃபீசோ எல்லா பக்கமும்  ஓனருக்கோ அல்லது மேனேஜருக்கோ கூட்டிக்கொடுத்து அல்லது சக ஊழியர்களை காட்டிக்கொடுத்து அல்லது போட்டுக்குடுத்து வாழும் ஜென்மங்கள் இருப்பாங்க..


 அந்த மாதிரி இந்த வில்லன்க்கு ஹீரோவை பிடிக்கலை. என்ன காரணம்னா வந்த உடனேயே ஓனரை இம்ப்ரஸ் பண்ணிடறானே?ஹீரோ வில்லன் செய்யற ஒரு தில்லு முல்லு வேலையை கண்டு பிடிச்சு அதை பற்றி ஓனர்ட்ட எச்சரிக்கிறான். 

 ஓனர் ஒரு ஆடம்பரமான ஹோட்டல்க்கு கூட்டிட்டு போய் லஞ்ச் சாப்பிட வைக்கிறார். சாப்பிடறப்போ ஹீரோட்ட கேட்கறாரு.. உன் கிட்டே இப்போ 2 ஆப்ஷன் தான் இருக்கு  1. அட்டகசமான இந்த விருந்தை ரசிச்சு ருசிச்சு சாப்பிடனும் 2. கிச்சன் ரூம்க்கு போய் இந்த சமையல் எப்படி செய்யறாங்கன்னு பார்க்கனும்.. 2ல எதை நீ செலக்ட் பண்ணுவே? சமையல் செய்யறதை பார்த்தா ரசனையோட சாப்பிட முடியாது..

 அந்த மாதிரிதான் நம்ம தொழிலும். சிலதை எல்லாம் கண்டுக்கக்கூடாது.. அப்டிங்கறார்.

ஒரு பார்ட்டி கம்ப்பெனில நடக்குது. அதுல ஓனரோட பி ஏ ஹீரோவுக்கு ரூட் விடறா.. தானா வந்த கில்மா சான்ஸை வீணா போக விடலாமா? என்ற சித்தாந்தப்படி ஹீரோ தப்பு பண்ணிடறார்.. 

அதை வில்லன் செல் ஃபோன்ல படம் எடுத்து  வெச்சு ஹீரோவை மிரட்றான்.. அவன் ஹீரோவின் மனைவி கிட்டே சொல்லிட்டா என்ன பண்றது?ங்கற பயத்துல ஹீரோவே தன் மனைவிட்ட மேட்டரை சொல்லிடறான்.. 

 2 பேருக்கும் ஃபைட்..  அப்புறம் ஹீரோ என்ன பண்றான்? வில்லன் என்ன ஆகறான்கறது தான் மிச்ச சொச்ச கதை.


 ஹீரோ ஆள் ஜம்முன்னுதான் இருக்கார்.. டைட்டானிக் ஹீரோ கணக்கா..அவர் பிஸ்னெஸ் பண்றதுல காட்டுற லாவகத்தை விட கமல் மாதிரி பாடியை எக்ஸ் போஸ் பண்றதுல தான் அதிக கவனம்.. 

 ஹீரோவோட டிரஸிங்க் நீட் . ஹீரோயின் ஒரு அட்டு ஃபிகர் ( @டு ஃபிகர்)
ஆனா பி ஏ வா வர்ற வில்லி செம கட்டை.. கலைஞர் விஜயாந்த்துக்கு குடுத்த எழுச்சிக்கலைஞர் பட்டத்தை இவருக்கு குடுக்கலாம்.. 

 http://www.bollywood-stars.net/wp-content/uploads/2012/02/Mia-Uyeda-kissing-kunal-khemu1.jpg

படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்



1.  நான் கனவு தான் காண்கிறேனா?ன்னு டவுட்டா இருக்கு.. 

ம்ச் ம்ச்

 இப்போ எதுக்கு எனக்கு கிஸ் பண்ணீங்க?


இது கனவு இல்லைன்னு நிரூபிக்க ஹி ஹி 


2. ஏய்.. நீ லேட்டா ஆஃபீஸ் ல இருந்து வர்றதுக்கும், நீ பண்ற தப்பை மறைக்கறதுக்கும் தான் , அல்லது அதுக்கு பரிகாரமாத்தான் அந்த நெக்லஸா? ஃபுல் ஷிட். 


3. சார். எனக்கு ஒரு டவுட். நாம கவர்மெண்ட்டை ஏமாத்தறோமா? 

 நாம பிஸ்னெஸ் பண்றோம்.. அவ்ளவ் தான்.. 


4.  சார்.. அவனைப்பற்றி குறை சொல்றதால என்னை பொறாமை பிடிச்சவன்னு சொல்றிங்களா?

 ச்சே ச்சே. எனக்கு மனித மனம் அத்துபடி . ஐ நோ சைக்காலஜி.. 


5. நான் அதிகமா பேசறதா நீங்க நினைச்சா இத்தோட நிறுத்திக்கறேன்

நோ நோ. யூ கண்ட்டிநியூ


http://i.ytimg.com/vi/F7W1D59JZbo/hqdefault.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் , மற்றும் லாஜிக் மிஸ்டேக்ஸ் சுட்டிக்காட்டல்கள்



1. ஹீரோ ஹீரோயினோட அதாவது அவர் சம்சாரத்தோட ஆஃபீஸ் பார்ட்டிக்கு போறார்.. அங்கே ஹீரோவை மட்டும் தனியா கூட்டிட்டு போயிடறாங்க.. ஹீரோயின் தனியா இருக்கா. அப்போ ஒரு பொண்ணு வந்து அவர் வர லேட் ஆகும் .. நீங்க வீட்டுக்குப்போறதுன்னா கிளம்புங்க அப்டிங்கறாங்க.. எந்த சம்சாரமாவது இதுக்கு ஒத்துக்குவாளா? விடிஞ்சாலும் சரி புருஷன் கூட தான் வந்தேன். புருஷன் வந்த பின் போறேன்னு தானே சொல்வா? தனிக்குடித்தனம் இருக்கற அவங்க தனியாப்போய் என்ன பண்ணப்போறாங்க. யாருக்கு சமைச்சு வைக்கனும்?


2. பார்ட்டிக்கு வந்த ஹீரோ எதுக்கு செல் ஃபோனை பாக்கெட்ல வைக்காம டேபிள்ல வைக்கறார்.. மனைவி கிட்டே இருந்து கால் வருது.. அப்போ ரிங்க் டோன் சத்தம் கேட்கலை.. ஆனா வில்லி மட்டும் கரெக்ட்டா எடுத்துப்பேசறா .. அது எப்படி? சைலண்ட் மோடுல ஹீரோவுக்கும், வைப்ரேஷன் மோடுல வில்லிக்கும் இருக்கா?

3. ராமன் மாதிரி உத்தமனா வாழ்ற ஹீரோ வில்லி ஜால்ஸ்  சாரி ஹால்ஸ் மிட்டாயை வாய்ல போட்டுக்கிட்டு அதை எடுன்னு சொல்றப்ப பளார்னு ஒரு அறை விட்டா விழுது.. எதுக்கு லிப் கிஸ் பண்ணி அதை எடுக்கனும்? அப்புறம் அய்யய்யோ கற்பு போச்சேன்னு புலம்பனும்// ( எல்லாம் ஒரு ஆற்றாமைல தான் ஹி ஹி )

4.  அந்த பார்ட்டில ஹீரோயின் , வில்லி 2 பேரும் ஒரே கலர் டிரஸ் போட்டுட்டு வர்றாங்க.. 2 பேரும் ரெட் கலர் டிரஸ்ல வந்தா ஆடியன்ஸ் குழம்ப மாட்டாங்களா?

5.  ஹீரோயினுக்கு பர்த்டே.. அன்னைக்கு ஆஃபீஸ்ல இருந்து லேட்டா ஹீரோ வர்றார்.. வந்து ஹேப்பி பர்த்டே சொல்றார்.. அப்போ மணி நைட் 10... உடனே ஹீரோயின் கோவிச்சுக்கறா.. என் பர்த்டே அன்னைக்கு கூட நேரத்துலயே வர மாட்டீங்களா?ன்னு கேட்கறா.. என் கேள்வி இன்னான்னா காலைல தானே வழக்கமா ஹேப்பி பர்த்டே சொல்வாங்க? ஏன் காலைல ஹீரோ அதை சொல்லலை?

http://static.ibnlive.in.com/ibnlive/pix/slideshow/03-2012/arth-to-blood/bhat-march27-25.jpg

  கதை ஆப்பிரிக்கா ஆங்களூர்ல நடக்கறதால லொக்கேஷன்ஸ் எல்லாம் செம பிரம்மாண்டம்.. ஆனா கதைல அழுத்தம் இல்லை.. படத்துல ஒரே ஒரு கில்மா சீனுக்கான லீடு இருக்கு.. ஆனா அது யானைப்பசிக்கு சோளப்பொறி தான் .. 


சி.பி கமெண்ட் - இந்தியாவுல எப்படியோ தெரில தமிழ்நாட்ல இந்தப்படம் ஓடாது.. பார்த்தே தீர வேண்டும் என்ற அவசியம் இல்லாத படம்.. 

ஈரோடு ஸ்ரீநிவசாவில் படம் பார்த்தேன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjDf0J4m_ZhxPxrQ3eUlrW9jjiTCFzH-xB1sNyy3Q7OcZ25d5HqIdT65Ybl3JCpieYO4xFXK8jwNwVsJ50DCk8dGlHYVhN221w-5JZh_s2SYpX2FQIi0DO3oZa23AtgXtFZNEW_YHgVPPM/s1600/blood-money+(2).jpg


Wednesday, March 07, 2012

அமராவதி - பூமிகா,சினேகா-வின் தெலுங்கு திகில் பட விமர்சனம்

http://searchandhra.com/english/wp-content/uploads/2009/12/Amaravathi-Review-searchand.jpg 

பொதுவா திகில் படம்னா, சஸ்பென்ஸ் படம்னா  முழுக்கதையையும் சொன்னா நல்லாருக்காது.. ஆனா இந்தப்படத்துக்கு ஒன் லைன்ல சுருக்கமா எல்லாம் கதை சொல்ல முடியாது.. ஏன்னா டைரக்டர் மல்டி லேயர் ஸ்க்ரீன் பிளேல  புகுந்து விளையாடி இருக்கார்.. அதனால விரிவாவே கதை விடறேன்.. சாரி.. கதை சொல்றேன்.

டிராக் 1 - 1996 ல முத்தாறுன்னு ஒரு ஊர்.. அங்கே ஒரு ஜமீன் தார் லெவல் பணக்காரர் இருக்கார்.. அவருக்கு 15 வயசுல ஒரு பொண்ணு ( யாரப்பா அது விசில் அடிக்கறது?ஜமீன் தார் வீட்ல ஒரு வேலைக்காரி அவங்களுக்கு ஒரு பையன்.. அந்தப்பையனும், ஜமீன்  பொண்ணும் சினேகமா இருக்காங்க.. அதாவது சினேகா பிரசன்னாவுக்கு முன்னால நாக் ரவி கூட வெறும் நட்பு மட்டும்தான்னு சொன்னாங்களே அது மாதிரி.. 

ஒரு நாள் அவங்க 2 பேரும் விளையாடிட்டு இருக்கறப்ப  பாப்பா மேல பையன் விழுந்துடறான்.. அந்த நேரம் அங்கே வந்தவர் வேலைக்காரி பையனை ஜீப்ல கூட்டிட்டு போய் கழுத்தை கட் பண்ணி ஆத்துல வீசிடறார்.. அதை நேரில் பார்த்த சாட்சி ஆன வேலைக்காரியை கொலை பண்ணிடறார்


கழுத்துல கட் ஆன பையன் சாகலை.. அவன் தான் ஆண்ட்டி ஹீரோ.. 

http://rajtamil.rajtamil.netdna-cdn.com/wp-content/uploads/2012/03/Yaar-Tamil-Movie-online.jpg


டிராக் 2 -இப்போ கதை நிகழ்காலத்துக்கு வருது.. நகரத்துல அங்கங்கே கர்ப்பிணிப்பெண்கள் கடத்தப்படறாங்க.. 10 நாட்கள்ல 6 கேஸ் இது போல யாரோ கடத்தி குழந்தையை மட்டும் எடுத்துக்கறாங்க.. ஒரு மர்மமான பொண்ணு (பொண்ணுன்னாலே மர்மம் தான்) ஒரு சூட்கேஸ்ல அந்த குழந்தையை கடத்தறாங்க ( அடங்கப்பா.. குழந்தை என்ன கோல்டு பிஸ்கெட்டா?)

டிராக் 3 - இந்த கடத்தல் கேசை டீல் பண்ற போலீஸ் ஆஃபீசர் அவரோட ஆளு சினேகாவோட லவ் டீல் பண்றார்.. சினேகா தன் காதலை காதலனின் பெற்றோர் ஏத்துக்கலைன்னு தற்கொலை முயற்சி எல்லாம் பண்றார்... இந்தக்கதைக்கு இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க் தேவையே இல்லை.. 


http://image.imagesexplore.info/images/1.bp.blogspot.com/_SrOyoFx3fvg/SrbiigqaiKI/AAAAAAAAAGE/iwtnizfaoVA/s400/bhoomika_chawla_hot_exposure.jpg

டிராக் 4 -  டிராக் 1ல வந்ததே ஒரு 15 வயசு ஃபிகரு அது இப்போ பெருசாகி ஐ மீன் பெரிய பொண்ணா ஆகி பூமிகா ஆகிடுச்சு.. அவங்களுக்கு ஒரு புருஷன்.. அந்த புருஷனை நம்ம ஆண்ட்டி ஹீரோ போட்டுத்தள்ளிட்டு பூமிகாவை தன் இடத்துக்கு கூட்டிட்டு வந்துடறார்.. அதெப்பிடி? ஒரு பொண்ணு அப்படி வரும்னு ஒத்துக்கும்? போராடாதா?அப்டின்னு எவனாவது லாஜிக்கலா கேள்வி கேட்டுட்ட்டா என்ன பண்றது? அதனால பூமிகாவுக்கு தலைல அடி பட்டு பழசை எல்லாம் மறந்து லூஸ் ஆகிடற மாதிரி காட்டிட்டாங்க.. 


டிராக் 5  - ஆண்ட்டி ஹீரோ பூமிகா வை கல்யாணம் பண்ணிக்கறார். பூமிகா லூஸ் ஆகறப்ப 3 மாசம் கர்ப்பம்.. ஆனா கரு கலைஞ்சிடுது.. அதனால ஆண்ட்டி ஹீரோ ஒரு லேடி டாக்டரை பார்த்து 10 குழந்தை வேணும், அரேஞ்ச் பண்ணுங்க.. அதாவது இவரோட செமன், பூமிகாவோட கரு முட்டை 2டும் எடுத்து வாடகைத்தாய் வயிற்றில் வளர வைப்பது.. ஏன் இப்படி சுற்றி வளைக்கனும்? டைரக்டா பூமிகாவையே மேட்டர் முடிச்சு கர்ப்பம் ஆக்க வேண்டியதுதானேன்னு டைரக்டர்க்கு ஃபோன் போட்டு கேட்டேன்.. கற்பு முக்கியம்ப்பா.. அப்டிங்கறார்.. அடங்கோ.. சரி அது என்ன கணக்கு? 10 குழந்தை?ன்னு கேட்டா கார்த்திக், செந்தில் நடிச்ச நட்பு படத்துல 10 பைசா பைத்தியமா வர்ற மாதிரி ஹீரோயினுக்கு சின்ன வயசுல இருந்தே 10 பைத்தியம்.. 

அதாவது கோயில் திருவிழாவில எதை எடுத்தாலும் 10 ரூபான்னு விற்பாங்களே அந்த மாதிரி அந்த ஃபிகருக்கு சின்ன வயசுல இருந்தே எதுவா இருந்தாலும் 10 வேணும்.. பொம்மையா இருந்தாலும் சரி பூவா இருந்தாலும் சரி.. அதனால தான் 10 குழந்தைங்க.. அதுக்குதான் 10 கர்ப்பிணிகள் கடத்தல்.. 
உஷ் அப்பா கதை சொல்லி முடிச்சாச்சு.. ( அப்போ  பூமிகா ஏன் தன் ராசி என் 10ஐ புருஷன் மேட்டர்ல அப்ளை பண்ணலை?னு கேட்காதீங்க.. எனக்கு தெரியாது.. ஹி ஹி )


http://www.southdreamz.com/wp-content/uploads/2009/11/Amaravathi-Bhumika-Chawla-Latest-Stills-Pics-Photo-Gallery-Wallpapers-Images-02.jpg

டிராக் 6 - ஏழாவது அறிவுல வில்லன் ஹிப்னாடிசத்துல எல்லாரையும் வீழ்த்துவாரே அந்த மாதிரி இந்தப்படத்துல வர்ற ஆண்ட்டி ஹீரோ வசியக்கலை மூலம் எல்லாரையும் அடிமைப்படுத்தி தான் விரும்பற எல்லாத்தையும் அடையறார்.. ஹீரோ போலீஸ் ஆஃபீசரையும் தன் வசப்படுத்திக்கறார்..  அவர் யார் கிட்டே அதை எல்லாம் கத்துக்கறார்? எப்படி?ன்னு ஒரு தனி டிராக் கதை


ஹீரோ யார்னே தெரியலை.. போலீஸ் ஆஃபீசரா வர்றதால ஜிம் பாடி எல்லாம் ஓக்கே.. ஆனா பாவம் நடிப்புதான் வர்லை..ஆண்ட்டி ஹீரோவா வர்றவர் ஹீரோவுக்கு பெட்டர்.. தேறுவார்.

சினேகா சிரிப்புக்கு பேர் போனவர் படம் பூரா உம்மணாம் மூஞ்சியாவே இருக்கார்.. ( திகில் படத்துல யாரும் சிரிக்கக்கூடாதோ?)

அதுக்கு நேர் மாரா சாரி நேர்  மாறா  பூமிகா கேனம் மாதிரி .. அடடா.. மாதிரி என்ன மாதிரி அவர் கேரக்டரே கேனம் தானே சிரிச்சுக்கிட்டே இருக்கார் .. முடியலை.. 

http://mimg.sulekha.com/telugu/amaravathi/stills/amaravathi-38.jpg

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1. தெலுங்கு டப்பிங்க் படம்னு தெரியாத மாதிரி போஸ்டர்ல யார்?அப்டினு டைட்டில் தமிழ்ல வெச்சு  பூமிகா , சினேகா முகங்கள் மட்டும் தெரியற மாதிரி ரெடி பண்ணது

2.  ஒரு கர்ப்பிணி லேடி லிஃப்ட்டை விட்டு வெளீல வர்றப்ப சடக்னு ஒரு உருவம் வர்ற மாதிரி எடுத்த அட்டாகாசமான திகில் ஷாட்

3. திகில் படங்களூக்கு பாடல்கள், டூயட்ஸ் எல்லாம் மைனஸ்னு தெரிஞ்சு அதை கட் பண்ணது


4. போர் அடிக்காமல் சம்பவங்களை பர பரன்னு நகர்த்துனது..


http://s3.hubimg.com/u/2145902_f496.jpg

இயக்குநரின்  லாஜிக் சொதப்பல்கள்

1. சினேகா 9வது மாசம் நிறை மாச கர்ப்பமா இருக்கறப்ப ஸ்கேன் பண்ணி அது பெண் சிசுன்னு கண்டு பிடிக்கறாங்க.. 4 வது மாசமே அதை கண்டு பிடிக்கலாமே? எதுக்கு 9 வது மாசம் வரை வெயிட் பண்ணனும்? அப்போ கண்டு பிடிச்சாலாவது கலைக்க யூஸ் ஆகும்.. 9வது மாசம் கண்டு பிடிச்சு என்ன யூஸ்?

2. சப் இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் போலீஸ் ஸ்டேஷன் லேண்ட் லைன் ஃபோன்க்கு ஏன் கூப்பிடறார்..? அவர் செல் ஃபோன் நெம்பர்க்கு கூப்பிடலாமே?

3.  சினேகா நிறைமாச கர்ப்பிணியா இருக்கறப்ப வீட்ல காலிங்க் பெல் அடிக்குது.. அப்பா இருங்க வந்துடறேன்னு வேகமா சினேகா ஓடி வர்றாங்க.. எதுக்கு அவ்லவ் அவசரம்? அவ்ங்க என்ன மாமியாரா? லேட்டா வந்தா கோவிச்சுக்குவாங்கங்கறதுக்கு? அம்மா அப்பா தானே மெதுவா போலாமே?

4. ஆண்ட்டி ஹீரோ ஹிப்னாடிசத்துல மன்னன்.. அவன் ஏன் டாக்டர்ட்ட ஆர்க்யூ பண்ணிட்டு இருக்கான்? இன்ஸ்பெக்டர்ட்ட ஏன் சண்டை போடறான்? எல்லாரையும் வசியப்படுத்திட்டே ஜெயிக்கலாமே?

http://4.bp.blogspot.com/_eom9kT338Pk/TOfG0rcsbJI/AAAAAAAAAIs/c1NFdlueZgw/s1600/South-Indian-Smile-Queen-Sneha-Hot-Saree-Pictures-02.jpg

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 38 ( டப்பிங்க் படம் என்பதால் விமர்சனம் விகடனில் வராது)


எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்


 சி.பி கமெண்ட் - திகில் பட ரசிகர்கள் டி வியில் போடும்போது பார்க்கலாம்


 ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் பார்த்தேன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivll1qi2_d_5QA1E5B8OnUmD-L1GCLcJvW5Y-SLElKj5_RSAYA7lXBU5WnUn9v_-1EJcuWzOI5S6OgmhyW56qeWK6AWUeXGOim5O7O-TZjY8GE3EfR410edOa7Q0yp9YPq0BY3QJbAFdM/s400/bhoomika2.jpg

டிஸ்கி - இங்கே இருக்கும் ஸ்டில்கள் எல்லாம் அந்தந்த நடிகைகளின் ஃபேஸ் புக்கில் இருந்து சுட்டவை.. எனவே படம் பார்த்தவர்கள் இந்த சீன் படத்துல இல்லையே என லாஜிக் மிஸ்டேக் கேட்க வேண்டாம் ஹி ஹி ..