Showing posts with label ஜிகர்தண்டா - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஜிகர்தண்டா - சினிமா விமர்சனம். Show all posts

Friday, August 01, 2014

ஜிகர்தண்டா - சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு  குறும்பட இயக்குநர் . நாளைய இயக்குநர்  செமி ஃபைனல் ல அவர் படம் ஓடுது. ஜட்ஜ்ங்க 2 பேர் ல ஒருவர் படம் டப்பாங்கறார். இன்னொருவர் டாப் -ங்கறார். 2 ஜட்ஜ்ங்களுக்கும் மேடைலயே ஃபைட். அடிச்சுக்கறது நமீதாவும் , குஷ்பூவும்-னா தமிழன் ஆர்வமாப்பார்ப்பான். ஆம்பளைங்க அடிச்சுக்கிட்டா என்ன  யூஸ்?

நல்லா  இருக்குனு சொன்னவர்  ஹீரோ  கிட்டே உனக்கு நான்  சான்ஸ் தர்றேன். நீ மதுரை போய்  அங்கே   வாழும்  நிஜ ரவுடியை சந்திச்சு அவன் வாழ்க்கையைப்படமா எடு-ங்கறார்.

 ஹீரோ மதுரை போறார். அந்த  ரவுடியை  கண்காணிக்கறார். ஒரு கட்டத்துல  ரவுடி கிட்டே மாட்டிக்கறார். ஹீரோ போலீஸோனு சந்தேகப்பட்ட ரவுடி  பின்  தானே அந்த படத்தில்  ஹீரோவா நடிக்க  விருப்பப்படறார். அருணாச்சலம் படத்துல  ரஜினி  செந்திலை வெச்சு படம் எடுத்த ,மாதிரி  நமீதாவை வரையப்போய் அது  இலியானா ஆன கதையா ஒரு  திருப்பம் . என்ன ஆச்சு ? என்பதே  மிச்ச  மீதிக்கதை 

பீட்சா  எனும்  க்ரைம்  த்ரில்லர் எடுத்த  கார்த்திக் சுப்புராஜ் -ன் அடுத்த படம்  த்ரில்லரா? மாபியா கேங் ஆக்சன் படமா? என எல்லோரும் எதிர்பார்த்த வேளையில் அவர் சாய்ஸ்  காமெடி ஃபிலிமா போச்சு . அதுதான்  ட்விஸ்ட் .

 குறிப்பிட்ட ஏ செண்ட்டர் ரசிகர்களிடம் மட்டுமே  செல்லுபடி ஆகக்கூடிய  ஆனால் மீடியாக்களின் பாராட்டைப்பெறும் படம் எடுத்த அவருக்கு வாழ்த்துகள் . 


ஹீரோவா சித்தார்த். அவரது  அமுல்பேபி முகம் அவருக்கு பிளஸ் . காதல்  காட்சிகள் கம்மி என்பதால்   காமெடிக்காட்சிகளில்  ஸ்கோர் செய்ய வேண்டிய கட்டாயம் . ஆனால் அவரை அசால்ட்டாக   வில்லன்  (காமெடியன் ), நண்பன் கேரக்டர்கள்  2 பேரும்  ஓவர் டேக்  செய்து  விட்டார்கள் . 




ஹீரோயனாக  லட்சுமிகரமான , குடும்பப்பாக்கான,அழகிய  வெட்டுத்தழும்பு நெற்றி அழகி  லட்சுமிமேனன். இவருக்கும்  பெரியதாக வாய்ப்பில்லை . இவரது  ரசிகர்களுக்கு  பெரிய ஏமாற்றம். ஆனால் லட்சு நடித்த படங்கள் எதுவும்  ஃபிளாப் ஆகாது  என்ற  கோடம்பாக்கம் கணிப்பைத்தக்க வைக்கிறார்.  (லட்சு படம் ஃபிளாப் ஆகாதுனு  மக்கள் சி பி  கிட்டே சொன்னாங்களா?
இல்லை , சி பி யே சொன்னான்) 


வில்லன் கம் ரவுடியாக வரும்  பாபி சிம்ஹா தான் கலக்கல் நாயகன் . பின்னிப்பெடல்   எடுக்கும்  நடிப்பு . ரவுடியாக  இவர்  கெத்து காட்டுவது  முதல் பாதியில்  திகிலையும் , ஹீரோ ஆன பின் இவர் செய்யும் அலப்பறைகள்  கல கலப்பையும்  தருது . இவரது  பாடி லேங்குவேஜ் அட்டகாசம் . 2014-ன்  சிறந்த குணச்சித்திர நடிப்புக்கான விருதுக்கு வாய்ப்பு  இருக்கு . தியேட்டரில்  எழும் கை தட்டல்களீல்  75 % இவர் நடிப்புக்கே . 

 அடுத்த  அப்ளாஸ் ஹீரோ நண்பராக வ ரும்  கருணா. குறும்படங்களீல் கலக்கியவர் . யாமிருக்க பயமே  வில் கை தட்டலை அள்ளியவர் . இதிலும் அவருக்கு ஏறுமுகமே! .

அம்பிகா வை  ஹீரோயின் அம்மாவாகப்பார்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் . காக்கிச்சட்டையில் பட்டுக்கன்னம்  தொட்டுக்கொள்ள  ஒட்டிக்கொண்டவரா இவர்? அய்யோ பாவம் . 


 விஜய் சேதுபதி  கெஸ்ட் ரோலில் வர்றார். படம்  முழுக்க இயக்குநர்  ராஜ்யமே! ஒளிப்பதிவு  அழகு . இசை  சராசரி தான்  . பிரமாதம் என சொல்ல  முடியவில்லை . 

 எடிட்டிங்  ஓக்கே . ஆனா படம்  170  நிமிடங்கள்  ஓடுவது  சலிப்பு 





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1. ரவுடி சேது என்றதும்   பம்மும்  காமெடியன்  ஹீரோ அவரை  செகண்ட்  ஹீரோ என்றதும் “ அவன் என்ன  பெரிய  பருப்பா?” என கேட்பது காமெடி கலக்கல் . 


2  பிளேடு பார்ட்டி  பொட்டிக்கடை சங்கிலி  முருகன் கேரக்டர் , அவர் போடும்  ரம்பம்  தாங்காமல்  அனைவரும் படும் அவஸ்தைகள் 


3  பிட்டுப்படம் பார்க்கும்  அடியாளின் காமெடி  காட்சிகள் . அவர்  கில்மாப்பட டிவிடியை  வீட்டில் மறதியாக வைத்து வந்து  விட   குடும்பமே அதைப்பார்க்க நேர்ந்து  அவரை   துப்பும் காட்சி 


4  நடு  வீட்டில்   ரவுடி  கொலை  செய்வதும் ,  பின்  போலீஸ்  வந்ததும்  அசைவச்சாப்பட்டை  கொட்டி சமாளிப்பதும்  இயக்குநர்  முத்திரை 


5  எப்போ பாரு  கத்தியை வெச்சே  மிரட்றியே  ஃபாரீன் படத்துல வர்ற மாதிரி    கன்-னை வெச்சு  மிரட்டு என ஐடியா  கொடுத்து அது சொதப்புவது செம காமெடி


4  குத்தாட்டப்பாட்டு  1  ஆழ்கிணறில்  ( தண்ணீர் இல்லாத) படமாக்கப்பட்டிருக்கு . புதிய  முயற்சி . காமரா ஆங்கிள்  குட் 

5   ரவுடிக்கு நடிப்பு சொல்லித்தரும்  ஆக்டிங்க்  குரு நடிப்பு டாப்



இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. படம்  ரிலீஸ் க்கு    முன்  மெகா  ஓப்பனிங் வேணும் என்பதற்காக   கேங்ஸ்டர்  ஆக்சன்  மாஃபியா  கேங்   ஃபிலிம் என  பில்டப்  கொடுத்தது / அதை நம்பி ஆக்சன் படம் பார்க்க வருகை  தரும்  ஆடியன்சுக்கு  இது  ஒரு வகை ஏமாற்றத்தைத்தரக்கூடும் . காமெடிப்படம்னே  சொல்லி  இருக்கலாம். அதுல என்ன சஸ்பென்ஸ் வேண்டிக்கிடக்கு? 


2 படத்தில்  ஹீரோ - ஹீரோயின் காதல்  அழுத்தமாகச்சொல்லப்படவில்லை .அதுக்கு நேரமும் இல்லை . 


3 வில்லன் கேரக்டர்  தான்  நிஜ  ஹீரோ என்பதால்   ஹீரோவாக வருபவர்   எடுபடாமல்  போவது  பின்னடைவு 
\
4  ஹீரோ  தன்னை  லவ் பண் ணலை  என்றதும்   ஹீரோயின்  வில்லி  அவதாரம் எடுப்பது  பின்  மீண்டும்  லவ்வுவது  என்பது எடுபடலை 
\

5   ரவுடியால் சுடப்பட்டு  இறந்த ஆள்  பின் பாதியில்   ஷூட்டிங்கில்  நடிப்பது எப்படி?


மனம் கவர்ந்த வசனங்கள்


1. சினிமா ல ஜெயிக்கனும்னா ஓடற படத்தை எடுக்கனும் # ஜி த


2 இந்தபடத்துல மக்களுக்கு நல்லதா ஒரு மெசேஜ் சொல்றேன் சொல்லிட்டு கோர்ட் கேஸ் னு அலையப்ப்போறே # ஜி த


3 10 ஆம்ப்பளைங்கள் ல 7 பேரு பன்ற சாதனை பிள்ளை பெத்துக்குவதுதான் # ஜி த



பிட்டுப்படம் பார்க்கும் பெருசு = சட்டு புட்டுனு மேட்டரை முடிக்காம சும்மா தொண தொண னு பேசிட்டே இருக்காங்க # ஜி த


5 பத்திரிக்கைக்காரன் னு அவனுக்கு எப்டி தெரிஞ்சுது? 


நான் தான் போட்டுக்குடுத்தேன். ஈ  # ஜி த 


6 அண்ணே அண்ணே .இந்தக்கொலையை நான் செய்யறேண்ணே.ஒரு வாய்ப்புக்குடுங்க்ணே # ஜி த


7 நம்மைப்பார்த்து பலர் பயந்து ஒதுங்கும்போது நமக்கு ஒரு கிக் வரும் # ஜி த


8 இதுவரை நீங்க எத்தனை கொலை செஞ்சு இருக்கீங்க?


 48,உங்க 2 பேரையும் முடிச்ட்டா 50,ஆப் செஞ்சுரி # ஜித 


9 மக்கள் சிரிக்கறதுக்காக படம் எடுக்கறவன் நிஜ வாழ்வில் அழுதுட்டு இருப்பான்.இது தான் சினிமா உலகம் # ஜி த


10 நீ தோத்தியா?ஜெயிச்சியா?னு அடுத்தவன் சொல்லக்கூடாது.உனக்குள்ளே இருக்கறவன் சொல்லனும்.புத்தி உள்ளவன் ஜெயிப்பான் # ஜி த



11 டேய் நாயே.கருணையாப்பாருன்னா காமமாப்பார்க்கறே.நான் என்ன பொம்பளையா? உனக்கு நடிப்பு வராது # ஜி த



12  படம் பிளாப் ஆகப்போகுதுன்னு தெரிஞ்சும் கிளாப் அடிச்சு ஸ்டார்ட் பண்ணப்போற முத புரொடியூசர் நான் தான் # ஜி த


13  கஷ்டப்பட்டு கொலை பண்றோம்.ஷூட்டிங் னு ஈசியா சொல்லிட்டாங்க்ளே? 


ரவுடியா இருப்பதை விட கஷ்டம் ரவுடி மாதிரி நடிப்பது # ஜி 


14 ஊரே பார்த்து பயப்படும் ஒரு ரவுடி கதையை அவனையே ஹீரோவாப்போட்டு ஊரே.சிரிக்கற மாதிரி படம் ஆக்கிட்டேன் # ஜி த





படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


ஓப்பனிங் ஷாட் ல சினிமா பார்த்துட்டிருகும் எவனோ ஒருத்தனை வேற எவனோ ஒருத்தன் டமால் டுமீல் .அய்யய்யோ. # ஜி த



சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சு! உன்னை சித்தார்த்தன் முன்பே கண்டிருந்தால் ஆகி இருக்க மாட்டான் புத்த பிட்சு! # ஜி த


3 ஓப்பனிங் ஷாட் ல லட்சு கோன் ஐஸ் க்ரீம் சாப்டுது.இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ?


4  லட்சு அழுதுட்டு இருக்கு.அதை அழ வைப்பது விஷாலோ ,சித்தார்த்தோ யாரா இருந்தாலும் வெட்டுவேன் #ஜி த





சி பி கமெண்ட் -

ஜிகிர்தண்டா = ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான வித்தியாசமான காமெடிப்படம்.விகடன் மார்க் =44,ரேட்டிங் =3/5.படம் 170 நிமிடம் ஓடுது. இந்தப்படம்  எல்லாருக்கும்  பிடிச்சிடாது . ஆனா  பிடிச்சா நல்லாருக்கும் . எல்லா செண்ட்டர்லயும்  ஓடிடாது . ஓடுனா நல்லாருக்கும்

 தமிழ்  சினிமா செட்டிமெண்ட் படி  ஹீரோ  சினிமா எடுக்கிறார் / நடிக்கிறார் எனில் அது கமர்ஷியலா  நல்லா போகாது . உதா - தாவணிக்கனவுகள் .,  சினிமா சினிமா , நீங்களும்  ஹீரோ தான் . அந்த செட்டிமெண்ட்டை இது  உடைக்குமானு பார்ப்போம்



எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 44





குமுதம் ரேட்டிங்க் = ok


 ரேட்டிங் = 3   /  5 


சரபம் - சினிமா விமர்சனம்

  
 http://www.adrasaka.com/2014/08/blog-post_98.html