Showing posts with label கமலும் நாயகிகளும் ஓர் பார்வை. Show all posts
Showing posts with label கமலும் நாயகிகளும் ஓர் பார்வை. Show all posts

Monday, November 09, 2015

கமலும் நாயகிகளும் ஓர் பார்வை

நான்கு வயதில் தொடங்கிய கமல்ஹாசனின் கலைப்பயணம் இன்று வரையிலும் தொடர்கிறது. இன்று 62வது அகவைக்குள் அடியெடுத்து வைக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் படத்தில் கதாநாயகியாக நடிக்கமாட்டோமா என்று ஏங்கும் பல நடிகைகள் இன்றும் திரையுலகில் இருக்கின்றனர். ஹீரோவாக அரிதாரம் எடுத்த நாளிலிருந்து இன்று வரை கமலுக்கும் அவரின் நாயகிகளுக்குமான வேதியல் தொடர்பு இன்று வரையிலும் நம்மால் மறக்கமுடியாது.
முத்தக் கட்சியில் தொடங்கி காதல் ரசனையை ரசிகனுக்கு நடிப்பால் உணரவைக்கும் காதல் வித்தகன் தான் கமல்ஹாசன். அவருடன் நடித்த கதாநாயகிகளில் இன்றும் நம் நினைவுகளில் முதலில் நிற்கும் கமலின் ஜோடிகள் யார் யாரென்று ஒரு ரிவைண்ட் செய்துவிட்டு வருவோம்.


கமலின் நெஞ்சை விட்டு நீங்காத் தோழி ஸ்ரீ வித்யா;

கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் “ சொல்லத்தான் நினைக்கிறேன்”. 1973ல் இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான செல்லுலாய்டில் பூத்த க்ளாசிக் காதல். அதன் பின் 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படம் கமல்- ஸ்ரீவித்யாவின் நட்பை உறுதிசெய்த திரைப்படம். இருவருக்குமான ஜோடி திரைப்படத்தில் பெரும் எதிர்பார்ப்பையும் வெற்றியையும் தந்தது. 
இப்படத்தின் அதிசய ராகம் என்ற பாடல் காட்சி இன்று வரையிலும் பேசப்படுகிறது. தொடர்ந்து 1976ல் சமஸ்யா என்ற மலையாளப் படத்திலும் பின்னர் ஸ்ரீவித்யாவுடன் உணர்ச்சிகள், அன்னை வேளாங்கண்ணி படத்திலும் இணைகிறார்.

வாணியுடன் கமலுக்கு திருமணம் நடைபெறுகிறது. அதன்பின் எட்டு வருடங்கள் கழித்து 1986ல் புன்னகை மன்னன் படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தில் பத்மினியாக வரும் ஸ்ரீவித்யா, சாப்ளின் செல்லப்பாவாக வரும் கமல்ஹாசனுடன் நட்பையும் நடிப்பையும் மீண்டும் உறுதிசெய்கிறார். தொடர்ந்து 1989ல் அபூர்வ சகோதரர்கள்,  இந்திரன் சந்திரன், நம்மவர், கடைசியாக காதலா காதலா என்று அவருக்கும் கமலுக்குமான படங்கள் இருக்கின்றன. தொடர்ந்து சில படங்கள், மீண்டும் கேரளாவிற்கே திரும்புகிறார் ஸ்ரீவித்யா.  நோயால் அவதிப்படும் ஸ்ரீவித்யாவின் கடைசி நாட்களில் அவரை மருத்துவமனையிலேயே சென்று சந்தித்து பாசத்தையும், நட்பையும் பரஸ்பரம் பரிமாறிக்கொண்டனர் கமல்ஹாசன்.   


ஸ்ரீவித்யாவின் அந்திமக் காலத்தில் உங்களைச் சந்திக்கவேண்டும் என்று அவர் விரும்பியதாகவும், நீங்கள் சந்தித்ததாகவும் கேள்விப்பட்டேன். அந்த நட்பு பற்றிக் கூறுங்கள் என்று கமலிடம் கேட்டபோது, “ அவள் இறந்தாலும் இறவா நட்பு” என்று கூறினார். கமலின் மறக்கமுடியாத ஒரே தோழி ஸ்ரீவித்யாவாகத்தான் இருக்கும்.



காதலில் கரையும் ஸ்ரீதேவி:

தமிழ்த்திரையுலகில் சில ஜோடிகள் மட்டும் இன்னும் மனதில் நிற்கும். சிவாஜி-பத்மினி, ஜெமினி-சாவித்ரி அந்த வரிசையில் மிகச்சரியான நாயக நாயகி தான் கமல்- ஸ்ரீதேவி. எத்தனை படங்கள் எத்தனை காதல்கள் எத்தனை சிரிப்புகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இருவரின் படங்களும் ஓவ்வொரு ரகத்தில் நம்மை ரசிக்க வைக்கும். கமலைப்போலவே நான்கு வயதில் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் ஸ்ரீதேவி. கருப்பு வெள்ளைக் காலத்திலேயே மூன்று முடிச்சு படத்தில் கமலுடன் அறிமுகமானவர். தொடர்ந்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், தாயில்லாமல் நானில்லை, சங்கர்லால், மீண்டும் கோகிலா, கல்யாணராமன், குரு, மூன்றாம்பிறை, வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிவப்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவர்கள் ஜோடிப்பொருத்தம் காதல் காட்சிகளில் மட்டுமல்லாமல் படத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக அமைந்தது. குறைந்தது 25 படங்கள் இருவரும் இணைந்து நடித்துவிட்டனர். 


உன்னோடு காதல் சிம்ரன்:

“உன்னோடு காதல் என்று பேசவைத்தது நீயா இல்லை நானா? 

ஊர் எங்கும் வதந்திக் காற்று வீசவைத்தது நானா? இல்லை நீயா?”

கமலுடன்  நெருக்கமான நாயகிகள் பட்டியலில் இடம்பெறுபவர்களில் சிம்ரனும் ஒருவர். கமலுக்கும் சிம்ரனுக்குமான ஜோடியில் வெளியானது இரண்டு படங்கள் மட்டும் தான். பம்மல் கே.சம்பந்தம், பஞ்சதந்திரம். இவ்விரு படங்களிலும் காமெடியிலும் ரொமான்ஸிலும் கலக்கியெடுத்திருப்பார்கள். இவருக்கு இணையாக காதல் காமெடி ஜோடி இல்லையென்றே சொல்லலாம். இருப்பினும் படப்பிடிப்பின் போது பல வதந்திகள் இருவரைப் பற்றியும் பரவியது குறிப்பிடத்தக்கது. 


வாழ்நாள் தோழி கெளதமி:

ஸ்ரீதேவிக்குப் பிறகு கமல்- கெளதமி ஜோடி தான் பெஸ்ட் என்றே சொல்லலாம்.  கமலுடன் இணைந்து நடித்த நாயகிகளில் முக்கியமானவர் கௌதமி. ' தேவர் மகன்', ' நம்மவர்' படங்களில் இவர்களின் காதல் காட்சிகள் அதிகமாக இல்லாவிட்டாலும், சிந்தனை முதிர்ச்சியான கருத்து பரிமாற்ற உரையாடல்கள் நிறைந்த காட்சிகள் இந்த ஜோடியை நம் நினைவில் கொண்டுவருகிறது. குருதிப்புனல் படத்தில் இந்த ஜோடி பெரிதும் பேசப்பட்டது.


ஆரம்பத்தில் கமலின் மனைவி வாணி இருந்தபோது அவர் தான் காஸ்ட்யூம் டிசைனர். அடுத்ததாக சரிகா இருந்த காலக்கட்டத்தில் சரிகா தான் கமல் படங்களுக்கான காஸ்ட்யூம் டிசைனராக இருந்தார். இப்போ கெளதமி காஸ்ட்யூம் டிசைனர் என்பது கூடுதல் ஸ்பெஷல். கடைசியாக கமல்- கெளதமி ஜோடியில் கலக்கிய படம் பாபநாசம். கமல் கெளதமி இருவரும் நட்பாக அன்பாக இன்றும் பழகிவருவதற்கு இப்படமே சான்று. சரிகாவுடனான விவாகரத்தைத் தொடர்ந்து இன்று வரையிலும் கல்யாணத்தின் மீது நம்பிக்கை இல்லையென்று அவரே கூறியிருக்கிறார். 



கமலுக்கு கிடைத்த வைரம் ஷோபனா: 




கலையும், வர்த்தகமும் எண்ணெய்யும் தண்ணியும்போல. இது ஒன்று சேர்வது கடினம். சமையலில் மட்டுமே இது சாத்தியம். ஷோபனாவை பொறுத்தவரை நல்ல சமையல்காரர். மண்ணில் புதைந்திருக்கும் வைரம் மாதிரிதான், ஷோபனா நமக்கு கிடைத்திருக்கும் ஒரு வைரம் என்றும் ஷோபனாவை புகழ்வார் கமல். இருவருக்கும் உண்டான  பொருத்தம் இருவரும் சிறந்த நடனக்கலைஞர்கள். ஷோபனாவின் நடன நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் செல்வார் கமல். கலை எங்கிருந்தாலும் அதை ஊக்கப்படுத்துவது கமலின் குணம். ஷோபனாவும் அப்படியே. இதுவே இவர்களின் ஆகச்சிறந்த பொருத்தம். 



இன்னும் சில நாயகிகள்!

கமலுடன் அதிகப்படங்களில் நடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரீதேவிக்கு அடுத்து ஸ்ரீபிரியா இருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் நடித்திருக்கிறார்கள்.


அதிகப் படங்களில் நடிக்காவிட்டாலும் கமல் மற்றும் அமலா ஜோடி என்றுமே நினைவில் நிற்கும் ஜோடிதான். கண்களாலே காதல் செய்யும் ஜோடி.' சத்யா' திரைப்படத்தில் இடம்பெற்ற ' வளையோசை' பாடல் இன்றுவரை காதல் பயணத்தில் இடம்பெரும் தேசிய கீதமே. 



கமலுடன் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இரண்டு படங்களான வேட்டையாடு விளையாடு, தெனாலி படங்களில் அவருடன் ஜோடி சேர்ந்தார் ஜோதிகா. வசூல்ராஜா படத்தில் சினேகா என்று என்றும் நெஞ்சில் நீங்கத படங்கள் இவை.

-விகடன்