Showing posts with label கடாவர் (2022) - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label கடாவர் (2022) - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Saturday, August 20, 2022

கடாவர் (2022) - சினிமா விமர்சனம் ( மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் ) @ டிஸ்னி ஹாட் ஸ்டார்


கடாவர்னா  உயிர்  அற்ற  உடல்னு  அர்த்தம்.  2016ல்  ரிலீஸ்  ஆன த  அதர் மீ கிரேக்கப்படம் ,  2018ல் ரிலீஸ்  ஆன  ஜோசஃப் எனும்  மலையாளப்படம்  அதன்  ரீமேக்  ஆன  விசித்திரன்  தமிழ்ப்படம்  இந்த  மூன்றும்  சேர்ந்த  கலவை தான்  கடாவர் . அமலா  பால்  சொந்தப்படம்.  மாறுபட்ட  கெட்டப் புதிய  உடல்மொழில  ட்ரை  பண்ணி  இருக்கும்  படம்  எப்படி  வந்திருக்கு?னு  பார்ப்போம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - ஹீரோயின்  ஒரு   அனாதை  ஹீரோ  அவளை  லவ்  பண்றார்.  மேரேஜூம்  ஆகுது. அனாதை  எனும்  குறையே  தெரியாத  மாதிரி  எல்லா  வசதிகளும்  செஞ்சு  குடுக்கனும்னு  ஹீரோ  ட்ரை  பண்றார். நிறை  மாத  கர்ப்பிணியா  இருக்கும்  ஹீரோயின்  ஹீரோ  கூட   பைகல்  போகும் போது  ஒரு  சாலை  விபத்துல  மாட்டிக்கிறார்    உயிருக்கு  ஆபத்தில்லை   ஹாஸ்பிடலில்  சேர்க்கப்படுகிறார்


 சம்பவம் 2  -  குறிப்பிட்ட  அரிய வகை  ரத்த  க்ரூப்  இருக்கற  ஒரு  நபரின்  இதயம்  தேவைப்படுது  ஒரு  பணக்காரருக்கு அதுக்காக  2 கோடி  ரூபா  தரத்தயாரா  இருக்கார் , கிட்னி  தானம்  ரத்த  தானம்னா  ஆள்  உயிரோட  இருக்கும்போதே  தர  முடியும், ஆனா  இருக்கறதே  ஒரு  இதயம்  அதை  எப்படி  தர   முடியும் ? 


 சம்பவம்  3   பிரபலமான  தனியார்  ஹாஸ்பிடலில்   சீஃப்   டாக்டரா  இருக்கும்  ஒருவர்  மர்மமான  முறையில்  கொலை  செய்யப்படுகிறார். கொலைன்னா  சாதாக்கொலை  இல்லை  நாடி  நரம்பு  ரத்தம்  சதை  எல்லாம்  பழி  வாங்கும்  உணர்வு  கொண்ட    ஒருவன்  தான் அந்தக்கொலையை  கடும்  சித்திரவதைக்கு  உட்படுத்தி  பின்  பண்ணி  இருக்கான் 


சமபவம் 4  -  ஜெயிலில்  இருக்கும்  தண்டனை  பெற்ற  கைதி  போலீஸ்க்கு  சவால்  விடறான்  இன்ன    தேதில  இன்னாரை  நான்  கொலை  பண்ணபோறேன்   , முடிஞ்சா  தடுத்துக்கோ  என  சவால்  விடறான்.  அது  எப்படி  சாத்தியம்? போலீஸ்க்கு  புரியல 


சம்பவம் 5  =   மேலே  சொன்ன  சம்பவங்கள் 3 அண்ட்  4   இரண்டைப்பற்றியும்  விசாரிக்க  ஒரு  போலிஸ்  டீம்  அமைக்கப்படுது  அதுல  இன்னொரு  நாயகியான  டாக்டர்  கம்  போலீஸ்  ஆஃபீசர்  கம்  போஸ்ட் மார்ட்டம்   செய்பவர்  கம்  கிரிமினாலஜி  படிச்சவர்  , பேத்தாலஜிஸ்ட் இடம்   பெறுகிறார் 


  இதுக்குப்பின்  கதையில்  என்ன  நடந்தது  என்பதை  டிஸ்னி  ஹாட்  ஸ்டாரில்  கண்டு  மகிழ்க 



 சம்பவம் 1 ல்  வரும்   நாயகியா  கர்ப்பிணியா  அதுல்யா  ரவி  அழகிய  முகம்  ஆனா  இவரது  நடிப்பில்  ஒரு  முக்கியமான  குறை   கொஞ்சம்  செயற்கையான  சிரிப்பு   டைரக்டர்  சொல்லிக்குடுத்ததை  ஸ்விட்ச்  போட்ட  பொம்மை  மாதிரி  செய்வது  லைட்டா  நிரடுது 


 மெயின்  ஹீரோயினா  அமலாபால்  மாறுபட்ட   நடிப்பு ., இவரது  ஓப்பனிங்  சீன்  கமர்ஷியல்  ஹீரோக்களின்  ஓப்பனிங்  சீன்  மாதிரி  ரசிக்க  வைக்கும்படி  இருக்கு . அவரது  பாய்ஸ்  கட்டிங்  கேரடக்ருக்காக  என்றாலும்  எனக்கு  தனிப்பட்ட  முறையில்  பெண்ணின்  அழகு  மயில்  தோகை  மாதிரி  கூந்தலில்தான்  அதை  பாய்ஸ்  கட்  பண்ணுவது  எனப்து  ஆண்  மயிலின்  தோகையை  வெட்டி  விட்டு  அழகு  நிலையம்    அனுப்புவது  போலத்தான்  தோணுது 


 ஹரீஷ்  உத்தமன்  டம்மி  போலீஸ்  ஆஃபீசராக  முனீஷ்  காந்த்  இன்னொரு  போலிசாக    வர்றாங்க . அது  போக  ஏகபப்ட்ட  துணைக்கதாபாத்திரங்கள்



சபாஷ்  டைரக்டர் 

 

1  தயாரிப்பாளர்  தான்  ஹீரோயின்  என்பதால்  அவரது  கேரக்டரை  டிசைன்  பண்ணிய  விதம்  அருமை . பக்காவா  எழுதி  இருக்காரு. 


2  பல  காட்சிகள்  தமிழ்  சினிமா  வுக்குப்புதுசு  குறிப்பா ஓப்பனிங்  சீனில்  போஸ்ட்மார்ட்டம்  நடக்கும்  ரூமில்  அமலாபால்  இயல்பாக  சாப்பிடுவது  அதற்கான  காரணத்தை  முனீஷ்  இடம்  சொல்வது   அவர்  க்ண்டு  பிடிக்கும்  மெடிக்கல்  உண்மைகள்  தரும்  தர்வுகள்  எல்லாம்  சபாஷ்  போட  வைக்குது 


3  மொக்கை  காமெடி  டிராக்  தேவை இல்லாத  பாடல்  காட்சிகள்   இல்லாமல் க்ரிஷா   கட்  பண்ணிய  எடிட்டிங்  சாமார்த்தியம் 


4  ஆசிட்  வீசப்பட்ட  நர்ஸ்  இடம்  இருந்து  வாக்குமூலம்  வாங்க   அமலாபால்  பயன்படுத்தும்  டெக்னிக்  சபாஷ்  ஏன்னா  அவர்  உடலை  கை காலை  அசைக்கவே  முடியாது  கண்  இமையை  மட்டுமே  சிமிட்ட  முடியும் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ்  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1    அமலாபால்  தான்  எல்லாத்தையும்  கண்டுபிடிக்கிறார்  கூட  இருக்கும்  போலீஸ்  ஆஃபீசர்கள்  எல்லாம்  டம்மியா  வந்துதான்  போறாங்க . ட்லிஸ்ட்  10 க்கு  ஒரு  சீனாவது  அவங்களும்  ஏதாவது  கண்டுபிடிசிருக்கலாம் 


2   அதுல்யா  ரவியின்  கணவர்  என்ன  காரணத்துக்காக  ஜெயிலுக்குப்போனார்  எத்தனை  வருசம்  தண்டனை  என்பதெல்லாம்  கடைசி  வரை  தெரியலை , அவ்ளோ  சஸ்பென்ஸா? 


3  ஒரு  ஹாஸ்பிடலில்  ஒரு  நர்ஸ்  லேப்  டாப்  டூ  லேப்டாப்  காபி  பண்ற  சீன் எல்லாம்  பாசிபிலிட்டி இல்லை  சிசிடிவி காமிரா  காட்டிக்குடுக்காதா? 


சிபிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரியான  ஒரு  க்ரைம்  மெலோ  ட்ராமா  கொஞ்சம்  ஸ்லோவாதான்  போகுது  .  பார்க்கறவங்க  பார்க்கலாம் . அமலா பால்  ரசிகர்கள்  கொஞ்சம்  மனசை  திடப்படுத்திட்டுப்பார்க்கவும்   ரேட்டிங் 2 / 5  ஆனந்த  விகடன்  யூக  மார்க்  40   ஓடி டி லதானே  பார்க்கிறோம்  வீட்ல  ஹாயா  சாப்பிட்டுட்டே  பார்க்கலாம்னு  யாரும்  நினைச்சுடாதீங்க. சாப்பிட்ட  பின்  பார்க்கவும்