Showing posts with label அவன் அவள் அது 1980 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா). Show all posts
Showing posts with label அவன் அவள் அது 1980 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா). Show all posts

Friday, July 15, 2022

அவன் அவள் அது 1980 - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)


சிவசங்கரி  எழுதிய ஒரு  சிங்கம்  முயலாகிறது  நாவலின்  திரை  வடிவம்தான்  இது/ நான்  நாவல் படிக்கலை  அதனால  எந்த  அள்வு  திரைக்கதை  நாவலுக்கு  நெருக்கமா  இருக்குனு  தெரியாது. இந்த  முன்  ஜாமீன்  எதுக்குன்னா  சிவசங்கரி  ரசிகைகள்  பொங்க  வேண்டாம் 


 வழக்கமா எழுத்தாளர்கள்  நாவல்  படமாக்கப்படும்போது  டைட்டில்ல  படைப்பாளி  பேரைப்போட  ரொம்ப  சலிச்சுக்குவாங்க. போனாப்போகுதுனு  ஒரு  ஓரமா  பேரு  வரும். ஆனா  படம்  போட்டதும்  ரைட்டர்  பேரு  பெருசா  வருது . அந்த  அளவில்  பரவால்ல 

ஸ்பாய்லர்  அலெர்ட் 

ஹீரோ ஹீரோயின்  இருவரும்  தம்பதிகள் கூட்டுக்குடும்பம். மாமனார்  மட்டும்  கூட . இருவருக்கும்  குழந்தை  இல்லை. அடிக்கடி  அதை  மாமனார்  ஞாபகபப்படுத்திட்டே  இருக்கார் அந்தக்காலத்துல  எல்லாம்  மேரேஜ்  ஆகி  அடுத்த  வாரமே  என்னப்பா  வீட்ல  விசேஷம்  ஏதும்  இல்லையா? என  விசாரிக்க  ஆரம்பிப்பாங்க 


ஹாஸ்பிடல்  போய்  செக்  பண்ணினா  ஹீரோயினுக்கு  குழந்தை  பெறும்  பாக்கியமே இல்லை.  அதனால  குடும்பத்துக்கு  வாரிசா  ஒரு  வாடகைத்தாய்   ரெடி  பண்ண  ஹீரோயின்  முடிவு  பண்றா.  ஹீரோவுக்கு  அதுல  பெரிய  அளவில்  ஆர்வம்  இல்லை , ஆனா  மனைவி  ஆசைக்கு  தடை  போடலை 


வாடகைத்தாய்  கான்செப்ட்  என்னனு  பார்ப்போம் .ஆணின்  உயிர்  அணுக்களை  எடுத்து   வாடகைத்தாயின்  உடலில்  செலுத்தி  கர்ப்பம்  ஆக்கி  குழந்தை  பெற  வைப்பது 


ஹீரோயின்  எடுத்த  அந்த  முயற்சி  வெற்றி  பெற்றதா? அதனால  அவள்  வாழ்க்கைல  சிக்கல்  ஏற்பட்டதா? அதிலிருந்து  அவள்  மீண்டு  வந்தாளா? என்பதே  மீதிக்கதை 


ஹீரோவா   சிவக்குமார். இவருக்கு  கிடைக்கும்  பெரும்பாலான  ரோல்கள்  ரெண்டு  பொண்டாட்டி கதை  தான் . தமிழ்  சினிமாவில்  கமலுக்கு  அடுத்து  அதிக  நடிகைகளுடன்  ஜோடி  சேர்ந்த  ஹீரோ  இவர்  தான்  ( பொறாமை  எல்லாம்  இல்லை. ஒரு  தகவல் தான் )  ஒரு  சராசரிக்கணவனின்  நடவடிக்கைகளை  கச்சிதமா  வெளிப்படுத்தி  இருக்கார் 


ஹீரோயினா  லட்சுமி . தாய்  ஆக  முடியாது  எனும்போது  காட்டும்  ஏமாற்றம்  விரகதி   எல்லாம்  ரசிகைகளை  ஈர்க்கும்  அளவு  நல்லா  பண்ணி  இருக்காங்க  இவரோட  நடிப்பைப்பற்றி  புதுசா  சிலாகிக்க  என்ன  இருக்கு . தரமான  நடிகை 


 வாடகைத்தாயா  ஸ்ரீப்ரியா / இந்த  மாதிரி  கேரக்டரில்    நடிக்க  ஒப்புக்கொள்ள  ஒரு  கட்ஸ்  வேணும்  அது  இவர்  கிட்டே  நிறையவே  இருக்கு  ருத்ரய்யா  இயக்கிய  அவள்  அப்படித்தான்  உட்பட  பல  படங்கள்  இவரது  ,மாறுபட்ட  கதைத்தேர்வுக்கு  உதாரணங்கள் . க்ளைமாக்ஸ்  காட்சியில்  அசத்தி  இருக்கிறார்


\மனோரமா  காமெடிக்கு . கொஞ்சம்  ஆவர்  ஆக்டிங்கோ  என  நினைக்க  வைக்கும்  பாத்திரப்படைப்பு/ தேங்காய்  சீனிவாசன்  . ஒய்  ஜி  மகேந்திரன்  இருவருக்கும்  அதிக  வேலை  இல்லை ,  ஏனோ  ஒய்  ஜி  மகேந்திரனைப்பார்க்கும்போது  கடுப்பாகவே  இருக்கு   அவர்  அந்தக்காலத்துல  காமெடியனா  வலம்  வந்ததுக்கு  ரஜினியின்  உறவினர்  என்பதைத்தவிர  பெரிய  தகுதி  என்ன  இருந்திருக்கும்?னு  தெரியல 


பாடல்கள்  சுமார்  தான் 



சபாஷ் டைரக்டர்  (  முக்தா  சீனிவாசன்) 


1  அந்தக்காலகட்டத்தில்  யாரும்  சொல்லத்தயங்கும் ஒரு  கதைக்கருதான் , துணிச்சலாகபடமாக்கியதற்கு  ஒரு  ஷொட்டு ,  இவர்  இயக்கிய  65  படங்களில்  டாப் 5  லிஸ்ட்  எடுத்தா  அவன் அவள் அது  படத்துக்கு ஒரு  இடம்  உண்டு 


2 படத்தின்  துவக்கத்திலேயே  நேரடியா  கதைக்குள்  சென்று  விடுவது  குட்  நாயகன்  நாயகி  காதல்  காட்சிகள்  என்றெல்லாம்  இழுக்க வில்லை 


ரசித்த  வசனங்கள்


1  பகையாளியா  இருந்தாலும்  வீட்டுக்கு  விருந்தாளியா  வந்தா  அடிக்கடி  வீட்டுக்கு  வாங்க  என்று  சொல்வதுதான்  தமிழ்  மரபு 


2  பார்த்தா  படிச்சவர்  மாதிரி  இருக்காரு  ஆனா  இந்த  மாதிரி  பண்றாரே?


 இப்போ எல்;லாம்  படிச்சவங்க தான்  ஃபிராடு  வேலை  எல்லாம்  நல்லாப்பண்றாங்க 


லாஜிக் மிஸ்டேக்ஸ்  திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1  கண்  தாணம்  விஷயத்துல  யாரோட  கண்  யாருக்கு  பொருத்தப்பட்டது  என்ற  விஷயம்  டாக்டரைத்தவிர  வேறு  யாருக்கும்  தெரியாது  தெரியப்படுத்தக்கூடாது  என்பதுதான்  சட்டம்  அதே  தான்  வாடகைத்தாய்  விஷயத்துலயும், ஹீரோயின்  வேறு  யார்  மூலமாகவோ  இதை  இயக்கி  இருக்கலாம்  தானே  நேரடியாக  வாடகைத்தாயை  தொடர்பு  கொள்வதால்  பின்னாளில்  தன்னை  ஃபாலோ  பண்ணி  கணவன்  யார்  என்பதைத்தெரிந்து  கொள்ளும்  வாய்ப்பு  அந்த  வாடகைத்தாய்க்கு  உண்டு  என்ற  ரிஸ்க்   இருக்கே ? 


2  பொதுவாக  வாடகைத்தாய்க்கு  ஆள்  செலக்ட்  பண்ணும்போது  ஏழைப்பெண்ணா  நல்ல  குடும்பப்பெண்ணா  ஆல்ரெடி  ஒரு  குழந்தை  பெற்ற  பெண்ணாதான்  செல்க்ட்  பண்ணுவாங்க ( இதுதான்  முதல்  பிரசவம்னா  ரிஸ்க்  அதிகம். பயந்துக்குவா )ஆனா  இந்தக்கதையில்  வாடகைத்தாய்  பல  ஆண்களுடன்  ஏற்கனவே  தொடர்பில்  இருந்த சினிமா  துணை  நடிகை  கேரக்டர்)


3  கனவனுக்கு  வாடகைத்தாய்  அட்ரஸ்  தெரியக்கூடாது  என  கவனமாக  இருக்கும்  லட்சுமி   கணவன்  ஆஃபீசிலிருந்து  வீடு  திரும்பும்  மாலை  நேரத்தில்  ஸ்ரீப்ரியாவுக்கு  ஃபோன்  பேசிட்டு  இருக்கிறார் . காலை  10  டூ 4  சேஃப்டி  டைம் தானே?


4   லேண்ட்  லைன  ஃபோனை  லாக்  பண்ணி  வைக்கும்  லட்சுமி  ஒரு  முறை  ஸ்ரீப்ரியா  லாக்கை  உடைத்து  பேசியதை  அப்படியே  விட்டு   இருப்பதைக்கவனிக்கவே  இல்லையே? 


5  கணவன்  ஆஃபீஸ்  விஷயமாக ஒரு  வாரம்  பாம்பே  போறான். வீட்ல  லட்சுமி  சும்மாதானே  இருக்கும் ? ஸ்ரீப்ரியா  விட்டுக்கு  போய்  செக்  பண்ணி  இருக்காதா? அவரும்  ஆள்  வீட்டில்  இல்லை  என்பதை  எப்படி  கண்டு  பிடிக்க முடியாமல்  போனது ? 


6   சிவக்குமார் - ஸ்ரீப்ரியா  அந்த  பங்களாவில்  சந்திப்பதுதான்  பாதுகாப்பு  ரிஸ்க்  இல்லை  செலவும்  இல்லை  அலைச்சல்  இல்லை  அதை  விட்டுட்டு  தண்டமா   வெளியூர்  போய்  மீட்  பண்ணுவது  எதுக்கு ? மாட்டிக்குவோம்னு  தெரியாதா?


7  சென்னையில்  இருக்கும்  ஹீரோ  கேரளா  திருவனந்தபுரத்தில்  இருந்து  தந்தி  வந்ததாக  பொய்யான  செட்டப்  ரெடி  பண்றார்  தந்தியை   படிக்கும்  லட்சுமி  விலாவாரியா  அட்ரசை  எல்லாம்  படிக்கிறார்  அப்போது  அது  டுபாக்கூர்  தந்தி  என்பது  தெரியாதா? 


8  குழந்தை  பிறந்ததும்  அதிக  சந்தோஷம்  சிவக்குமாருக்கும்  ஸ்ரீப்ரியாவுக்கும்தான்  வரனும்  ஆனா  அந்தக்கால  ஜோதிகா  மாதிரி  லட்சுமி  ஓவரோ  ஓவர்  ஆக்டிங்  பண்ணி  துள்ளிக்குதிப்பது  ஏன்? ஆக்சுவலா  அந்த  சீன்ல  அவருக்கு  இயலாமை  கழிவிரக்கம்   உணர்வுக்ள்  தான்  வரும்.தானே  தாய்  ஆனது போல  கொண்டாடுவது  நெருடுது


9  ஏற்கனவே  ஸ்ரீப்ரியா  வயிற்றில்  கரு  உருவாகி  விட்டது . அதுக்கு 2  மாசம்  கழிச்சுதான்  சிவக்குமார்  ஸ்ரீப்ரியா  சந்திப்பே  நடக்குது  ஆனா  செக்  பண்ணின  டாக்டர்  இது இய்ற்கையான  முறையில்  உருவான  கருனு  எப்படி  சொல்றார்?  முறைப்படி  அவர்  என்ன  சொல்லனும் ? கரு  உருவான  பிறகு    வாடகைத்தாய்  யாருடனோ  உடல்  ரீதியா  உறவு  வெச்சிருக்கார்னு  தானே  சொல்லனும்? ஆல்ரெடி  செயர்கை  முறையில்  உருவான  கரு  2  மாதங்களுக்குப்பின் எப்படி  இயற்கை  முறையில்  உருவான  கருவாக  ஆகும் ? 

10  வாடகைத்தாய்க்கு  ஒரு  தனி  பங்களாவை  பத்து  மாசத்துக்கு  வாடகைக்கு எடுத்து  தரும்  அளவுக்கு  வசதி  உள்ள  குடும்பம்  ஒரு  டிவி  தனியா  வாங்க  முடியாதா?  இவங்க  வீட்டில்  இருக்கும்  டி வி  உட்பட்  பல  பொருள்களை  ஷிஃப்ட்  பண்ணுவது  எதுக்கு ? 


 சி பிஎஸ்  ஃபைனல்  கமெண்ட் =  இது  சிவ்சங்க்ரி  ரசிகைகளுக்கும்,  பெண்களுக்கும்  பிடிக்கும்  செண்ட்டிமெண்ட்  ப்டமாக  இருக்கு ,  பார்க்கலாம். அந்தக்காலத்துல்  இது  ஹிட்டா? இல்லையா? என்ற  தகவல்  இல்லை . ரேட்டிங்  2.5 / 5