Showing posts with label அங்கதம்.அனுபவம். Show all posts
Showing posts with label அங்கதம்.அனுபவம். Show all posts

Friday, April 15, 2011

செல்வராகவனுக்கு நான் செட்டப்பா? ரீமா சென் தில் பேட்டி - காமெடி கும்மி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZ7ls61HFeC-dnv-F_guSsvQk2IlkuOpeCjyBrQr7pLO6n8WvtJxmcz_6EBhCaJxMXapbBHomYEuxuEc6KKq-XHbRUo7OIqArMa27HyLeZd_DP895st9QnB05CO6Jx2wWFzBBpEAvhFryT/s1600/r2.jpg 

1.' 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு என்ன ஆளையே காணோம்?''
 
''தமிழில் என் நடிப்பு பார்த்து நானே ஆச்சர்யப்பட்டது, திருப்தி அடைஞ்சது 'ஆயிரத்தில் ஒருவன்’ படம்தான். (ஆர் பார்த்திபனை மயக்கற சீன்ல யார்?இந்த ஃபிகரு?ன்னு கேட்க வெச்சுட்டீங்க...)

ஆனால், அதற்குப் பிறகு சொல்லும்படி வாய்ப்பு எதுவும் அமையலை. நான் நடிக்கும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யமா இருக்கணும்னு தேடித் தேடி நடிச்சதால்தான், 'செல்லமே’, 'வல்லவன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’னு அழகான கேரியர் அமைஞ்சது.

வல்லவன்ல நான் ஏமாற்றப்பட்டேன்னு இதே வாய் தானே அன்னைக்கு சொல்லுச்சு?

ஆனா, இதைத் தாண்டி, தமிழில் சரியான கதைகள் இப்போ இல்லை. இந்தியில் பிஸி ஆகிட்டேன்!''  ( ஹி ஹி பார்த்தோம்.. கில்மா படங்கள் தானே..?)


2.''தமிழ்ல உங்களுக்கு மரியாதை இல்லைன்னு நினைக்கிறீங்களா?''

''ம்ம்ம்... 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகும் தமிழில் நல்ல வாய்ப்பு வரலைன்னு நினைக்கும்போது, வருத்தமா இருக்கு. இந்தியில் என் ரசனைக்கு ஏத்தபடி கதைகள் அமையுது. ( ஹா ஹா உங்க ரசனை ஏன் இவ்வளவு சீப்பா போயிடுச்சு?)


அதுக்காக, 'தமிழில் நடிக்க மாட்டேன் - ரீமா அதிரடி’ன்னு ஏதாவது எழுதிடாதீங்க. எனக்குப் பிடிச்ச மாதிரி கதைகள் அமைஞ்சா, நிச்சயம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுப்பேன்!''

(வேணாம் மேடம்.. உங்களுக்கு நோ எண்ட்ரிதான்..வாரத்துக்கு 4 ஃபிகருங்க ஃபிரஸ் ஃபேஸா வந்துட்டு இருக்கும் போது தமிழன் செகண்ட்ஸை அதாவது ரீ எண்ட்ரியை விரும்ப மாட்டான்.)

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifFYfgnC1z3fkT8Zzug4S2rw2ZekddE-wUZQSrLEyWA3xNihdKS1FbIuOG7ONZDEVWKmK46k9Nhf3h5Vp0oI4VJ-jcLJU09MTOifrDZlXT3Y7fxU9qm2zCkNWt5Q2lmk3MdMmzsMk-jx8/s1600/reema-sen-hot-hq-pics(7).jpg
3. ''உங்கள் நண்பர் செல்வராகவனின் இரண்டாவது திருமணம்பற்றி?''

''ஹலோ, அவர் எனக்கு பெர்சனல் நண்பர் கிடையாது. நான் நடிச்ச படத்தோட இயக்குநர்... அவ்வளவுதான். 'நிச்சயதார்த்தம்’னு கூப்பிட்டப்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். செல்வாவுக்கு இந்த மாறுதல் அவசியம். அவ்வளவுதான் இங்கே நான் சொல்வேன்!''

(வேற எங்கே வந்தா ஃபுல் டீட்டெயில்ஸூம் சொல்வீங்க?)


4. ''அப்போ உங்க திருமணம்பத்தி சொல்லுங்க... மும்பை தொழிலதிபருடன் உங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சுன்னு நியூஸ் வந்துச்சே..?''

''கடவுளே... எனக்கே தெரியாம எப்படி என் கல்யாணத்தை ஃபிக்ஸ் பண்றாங்கன்னு தெரியலையே.

எங்களுக்கே தெரியாம நீங்க அதை எல்லாம் ஃபிக்ஸ் பண்றப்போ உங்களுக்கே தெரியாம அதை கண்டு பிடிக்கறது எங்களுக்கு கஷ்டமா என்ன?

ஊருக்கே சொல்லி சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிற விஷயம் கல்யாணம். அப்படி எனக்குக் கல்யாணம் நடந்தா, அதை நானே ஊர் முழுக்கச்சொல்லு வேன்.

எப்படி? வம்சம் படத்துல வர்ற மாதிரி... “ ஏய்.. மாமோய்... ரீமாவுக்கு இன்னைக்கு கைமா.. எல்லாரும் வந்துடுங்கோ..ஓஓஓஓ,ன்னா......

 http://2.bp.blogspot.com/_yFCQLldPqmk/TMz6hpkKasI/AAAAAAAAJgE/lUyOHbIHQmQ/s1600/Reema+Sen+in+Saree+(6).jpg

(நடந்தாத்தானே.. அப்போ பார்ப்போம்.. அதுக்குள்ள என்ன அவசரம்? மார்க்கெட் இருக்கும் வரை கல்யாணம் கூடாது என்பதுதானே நடிகைகளின் பாலிஸி?)

அது வரை உண்மை சொல்லலைன் னாலும்... பொய்யான தகவல்களை யாரும் பரப்பாம இருங்கப்பா... ப்ளீஸ்!''

(ச்சே ச்சே.. நாங்க அப்படி எல்லாம் பரப்ப மாட்டோம்.. இப்போக்கூட பாருங்க.. டைட்டில்ல கேள்விக்குறில தான் தொக்கி நிக்குது  டவுட்ல.. ஆச்சரியக்குறி போடலை.. ஹி ஹி )

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள் பாகம் 2 - 18 பிளஸ்

 http://img.dinamalar.com/data/more_pic_gallery/hfmalarnews_27741640807.jpg

1. நாஞ்சில் மனோ - கட்டில்,மெத்தை, பூ, பழம், பால்... தலகாணி,ஆப்பிள், ஆரஞ்சு,ஜிலேபி,திராட்சை........லட்டு.. மைசூர் பாக்...

பொண்ணு - யோவ்.. வந்த வேலையை பார்க்காம இங்கே இருக்கற பொருளை எல்லாம் லிஸ்ட் போட்டுட்டு இருக்கே..? இதுக்குத்தான் தாலி கட்டுனியா?இப்போ நான் இருக்கவா? போகவா?

. நாஞ்சில் மனோ- இப்படித்தான் பஹ்ரைன்ல ஒரு நாளு என் மேனேஜரு..... 

பொண்ணு - நீ விடற கதையை பிளாக் படிக்கறவங்க வேணா நம்பலாம்.. நான் நம்பலை.. இதென்னய்யா இது மிலிட்ரி டிரஸ்ல கூலிங்க் கிளாஸ் போட்டு வந்திருக்கே?முதலிரவுக்கு வர்ற லட்சணத்தை பாரு.. பெரிய கேப்டன்னு நினைப்பா..?

. நாஞ்சில் மனோ - அவ் அவ் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
http://3.bp.blogspot.com/_K4Wj-LHVGL4/TP9Q-Y_jSBI/AAAAAAAAAkg/-RTVANyvPaQ/s1600/love_is_in_the_air.jpg

2. விக்கி உலகம் - டியர்... இந்த பதிவுலகத்துல 1789 பேர் இருக்காங்க.. அதுல நான் மட்டும் தான் யோக்கியன்.. சொன்னா நம்ப மாட்டே.... ( அப்போ சொல்லாதே..)நான் இதுவரை யாரையுமே தொட்டதில்லை..

பொண்ணு - ஏன்? நீங்க குஷ்ட ரோகியா?

விக்கி உலகம் - சரியான  டியூப்லைட் நீ... நான் கலியுக ராமன்.. ஒரு இல், ஒரு சொல் ஒரு செல் என வாழ்பவன்.. ஆனா தக்காளிங்க யாரும் நம்ப மாட்டேங்கறாங்க... 

பொண்ணு - அத்தான்.. நீங்க ஆஃபீஸ் போனா 19 மணி நேரம் வேலை செய்வீங்களாமே? அங்கே 23 ஃபிகர்ங்க இருக்காங்களாமே? உண்மையா?

விக்கி உலகம் - இந்த மேட்டர் எல்லாம் உனக்கு யார் சொன்னது? சரி சரி.. அதை காலைல பேசிக்கலாம்.. இப்போ லைட்டை ஆஃப் பண்ணிட்டு தூங்கு.. நான் பதிவு ரெடி பண்னனும்.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilRtPIvFSLdq9GdwP3hlEcBE7dY6OeXUF0rIvC6nVL_Q_XbigBESP3RnZfMoqFKppPuswmRkydvG1YKsJVAVNQA4o5AXlMAjWInI52UNWOd_DkQ1_Yo_nbTT7W8bS-hAk5Vx14pg5vx1BL/s1600/black-love-art-intimacy1.jpg

3. சக்தி ஸ்டடி செண்ட்டர் கருண் - ஸ்.. அப்பாடா.. வந்தாச்சு.. நறுக்குன்னு நாலு கிஸ் குடுத்தாச்சு.. கிளம்பியாச்சு.. 

பொண்ணு  - அடப்பாவி.. இதுதான் உங்க ஊர்ல முதல் இரவு கொண்டாடற லட்சணமா?

சக்தி ஸ்டடி செண்ட்டர் கருண் - நான் இன்னும் 30 இடங்களுக்கு போக வேண்டி இருக்கு.. சாரி... ஒரு இடத்துல 40 செகண்ட்ஸ்க்கு மேல நான் ஸ்பெண்ட் பண்றதில்லை.. பை பை.. வரட்டா..
http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-60/mar1.jpg
 4. கவிதை வீதி சவுந்தர் - டியர்.. என் பேரு சவுந்தர்.. எனக்கு இன்னோரு பேரு இருக்கு... 

பொண்ணு  - என்னாது அது?

கவிதை வீதி சவுந்தர் - பாட்டி ரசிகன்

பொண்ணு  - அடப்பாவி.. கிழவியைக்கூட ரசிப்பியா? நீ? 

கவிதை வீதி சவுந்தர் - சாரி.. டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு.. பாட்டு ரசிகன்... 

இப்போத்தானே அவர் வந்துட்டுப்போனாரு.. 

கவிதை வீதி சவுந்தர் - குழப்பாதே... நான் என்ன டபுள் ரோலா?

 பொண்ணு  - விளையாடாதீங்க.. மணி இப்போ என்ன? மிட் நைட் 12 மணி.. அவர் நைட் 8 மணிக்கே வந்துட்டுப்போய்ட்டாரு... 

கவிதை வீதி சவுந்தர் - அடிப்பாவி... தாலி கட்றது நான்... ஜாலி கட்றது அவனா? அவ்வ்வ்வ்வ்வ்.. ஏண்டி? அப்படி பண்ணுனே..?

பொண்ணு  - சாரிங்க.. ஸ்பெக்ட்ரம் அலை வரிசை மாதிரி முதலில் வருபவருக்கே முன்னுரிமை.. ஹி ஹி

http://img.webme.com/pic/y/yaalakathiyan/52045779be7.jpg
5. நிரூபன் - வணக்கம் சகோதரம்

 பொண்ணு  -நாசமாப்போச்சு.. யோவ்.. நான் உன் பொண்டாட்டி...

 நிரூபன் - சாரி.. எல்லார்ட்ட்யும் அப்படி பேசி பழகிடுச்சு....

பொண்ணு  -மணி விடிகாலை 5 மணி ஆகுது.. இதான் ஃபர்ஸ்ட் நைட்க்கு நீங்க வர்ற லட்சணமா?

 நிரூபன் -  மண்டபத்துல சொந்தக்காரர்கிட்ட நலம் விசாரிச்சுட்டு இருந்தேன்... 

பொண்ணு  -சுத்தம்.. நலம் விசாரிக்கறது 4 லைன்ல முடிக்கனும்.. நீங்க சும்மா ஊர்க்கதை எல்லாம் பேசிட்டு இருந்திருப்பீங்க.. சரி சரி.. வாங்க.. 

நிரூபன் - எங்கே வர்றது.. நான் வழக்கமா இப்போ நெட்ல நலம் விசாரிக்கற நேரம்.. மீதியை நாளைக்கு பார்க்கலாம்....

பொண்ணு  - கிழிஞ்சுது கிருஷ்ணகிரி.... என்னமோ 58% டை இப்போ பார்த்த மாதிரியும் மீதி 42%ட்டை நாளைக்குப்பார்க்கலாம்கற மாதிரி சொல்றீங்களே.. 

 http://www.internetphotos.net/wp-content/uploads/2008/04/romantical-love-painting-photo.jpg
6. ஃபிலாசஃபி  பிரபாகரன் - வா நாம ஒயின் ஷாப் போகலாம்..

பொண்ணு  -யார் கிட்டே வந்து என்ன பேச்சு பேசறீங்க.. லேடிஸ் அங்கே வருவாங்களா?

 ஃபிலாசஃபி  பிரபாகரன் - அதுக்கில்லை.. எனக்கு ஒயின் ஷாப் தான் ராசி.. எந்த வேலை செய்யறதா இருந்தாலும் ராசியான அந்த இடத்துக்குப்போய்தான் ஆரம்பிப்பேன்..

பொண்ணு  -அது சரி.. ஸ்டார்ட்டிங்க் அங்கே.. அப்போ ஃபினிஷிங்க் எங்கே?பார்லயா?

 ஃபிலாசஃபி  பிரபாகரன் - என்னை எதிர்த்து யார் பேசினாலும் எனக்குப்பிடிக்காது...ஆள் பார்க்கத்தான் தனுஷ் மாதிரி இருக்கேன்.. பளார்னு ஒரு அறை விட்டேன்னு வெச்சுக்க.. அப்புறம் 20 நாள் நீ எந்திரிக்க மாட்டே.....

பொண்ணு  -ஹா ஹா ஹா 

ஃபிலாசஃபி  பிரபாகரன்- நான் கோபமா பேசிட்டு இருக்கேன் சிரிக்கறே..

பொண்ணு  - அதில்லை.. என்னை எந்திரிக்க விடாம 20 நாள் படுக்க வெச்சுட்டா... நீங்க என்ன பாடுபடுவீங்கன்னு நினைச்சேன்..

-------------------------------------------

 டிஸ்கி 1 - இதன் முதல் பாகம் படிக்காதவர்களுக்காக 

பிரபல பதிவர்களின் முதல் இரவில் நடந்த சொதப்பல்கள்

 

டிஸ்கி 2 -  இன்னைக்கு தமிழ்ப்படம் எதுவும் ரிலீஸ் ஆனமாதிரி தெரில.. ஜீன் கிளாடு வேண்டம் நடிச்ச யுனிவர்சல் சோல்ஜர் பார்ட்3, இலியானா நடிச்ச ஒரு கில்மா படம், அது போக லோக்கல் கில்மா படங்கள் 3 ( அப்போ மற்ற படங்கள் எஸ் டி டி யா? ) மொத்தம் 5 படங்கள் ரிலீஸ் ஆகுது.. இன்று காலை 11 டூ 4 நெட்டுக்கு லீவ் .. ஹி ஹி ..

Wednesday, April 13, 2011

பிரமாதமான வாக்குப்பதிவு... புதிய சாதனை... தேர்தல் கமிஷன் அசத்தல்...

தமிழகத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 75 சதவீத வாக்குகள் பதிவாகின.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில், 1967-க்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த சாதனை எனச் சொல்லலாம்.

மதுரையில் திமுக - அதிமுக தொண்டர்கள் இடையே நடந்த மோதலில் இருவர் காயமடைந்தனர். எனினும், மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க, பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்ததற்கு மட்டுமின்றி, அரசியல் கட்சிகளை முறைகேடுகள் செய்ய விடாமல் வெகுவாக தடுத்த வகையில், தேர்தல் ஆணையத்தை தமிழக இதுவரை வாக்கு சதவீதம்...வாக்காளர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, தேர்தலில் பணபலத்தை இயன்ற வரையில் இம்முறை தேர்தல் ஆணையம் தடுத்திருப்பது கவனத்துக்குரியது.

விறுவிறு வாக்குப்பதிவு...

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

மின்னணு வாக்கு எந்திரங்கள் கோளாறு ஏற்பட்ட வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கின. இதனால், அந்த இடங்களில் வாக்களிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். முற்பகலில் மட்டுமின்றி பிற்பகலிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

முந்தையத் தேர்தல்களைப் போலவே 49 ஓ போடவிருந்த வாக்காளர்கள் சிலர் சிரமத்துக்கு ஆளானது. தேர்தல் பணியாளர்களுக்கே இதுபற்றிய விழிப்பு உணர்வு இன்னும் முழுமையாக இல்லை. வாக்கு எந்திரத்திலேயே இதற்கான பொத்தான் வேண்டும் என்பது அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

தீவிர பாதுகாப்பு...

வன்முறையை தடுக்கவும், முறைகேடுகள் நடைபெறாமல் நேர்மையாக தேர்தல் நடைபெறவும் வரலாறு காணாத அளவில் பாதுகாப்பு போடப்பட்டன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர்.

2011 தேர்தல்...
தொகுதிகள் - 234
வேட்பாளர்கள் - 2,748
வாக்காளர்கள் - 4,71,16,687
வாக்குச்சாவடிகள் - 54,314
பாதுகாப்புப் பணிகளில் துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையினர் உள்பட ஏறத்தாழ 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்தல் பணியில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

வெப் கேமரா கண்காணிப்பு...

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக இந்த தேர்தலில் முதன்முறையாக போலீஸ் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பதற்றமானது என கண்டறியப்பட்ட 9,500 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு தேர்தல் ஆணையரால் நேரடியாக கண்காணிக்கப்பட்டது. 

வாக்கு எண்ணிக்கை... 

வாக்குப் பதிவு மாலை முடிந்ததும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. அவை அனைத்தும் வாக்குகள் எண்ணப்படும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சென்னையில் 3 இடங்கள் உள்பட தமிழகத்தில் 91 இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு, மே 13-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.

மேலும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக அதிகமாக  படித்தவர்கள் வாக்கு அதிகம் பதிவாகுது என அர்த்தம்.. அது தி மு க விற்கு அனர்த்தம்.


60 % வாக்குப்பதிவு நடந்திருந்தால் இழுபறியாக இருந்திருக்கும்.. இப்போ தி மு கவிற்கு ....????????????

ஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு.......ரெடி ஆகிக்கோ மாப்பு...

http://www.tamiluk.net/wp-content/uploads/2011/01/AVN_RAJATAKE_118406f.jpg

2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனங்கள் ட்ராய்க்கு விண்​ணப்​பித்தன. இவர்கள் ஏற்கெனவே சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தின்படி மொ​பைல் கனெக்ஷன் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்று இருந்தனர்.

ஆனால், டிராய் செய்த சிபாரிசு தொலைத் தொடர்புத் துறைக்கு வருவதற்கு முன்பே ரிலையன்ஸ் நிறுவனம் (18 சர்க்கிள்கள்), ஷியாம் டெலி லிங்க்ஸ், ஹெச்.எஃப்.சி.எல். இன்ஃபோடெல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி கிடைத்தது. டாடா நிறுவனத்துக்கு கிடைக்கவில்லை. 'டாடா நிறுவனத்தைப் படாத பாடுபடுத்தினர்’ என்று சி.பி.ஐ. குற்றம் சாட்டுகிறது.

'தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் அவரது கூட்டாளி சந்தோலியாவும்... ஸ்வான் டெலிகாமையும், யுனிடெக் டெலிகாமையும் முன்னுக்குக் கொண்டுவரவே, டாடா டெலி சர்வீஸைப் பின்னுக்குத் தள்ளினார்கள்’ என்கிறது சி.பி.ஐ.

டாடா கொடுத்த விண்ணப்பப் படிவங்கள்​கூட தொலைத் தொடர்புத் துறையில் காணாமல்போய்​விட்டதாக சி.பி.ஐ. தெரிவித்து இருக்கிறது. 'டாடாவுக்கு உரிமங்கள் கொடுக்கப்பட்டால், டெல்லி, மும்பையில் ஷாகித் பால்வாவின் ஸ்வான் டெலிகாமும், சஞ்சய் சந்திராவின் யுனிடெக் நிறுவனமும் பயன் அடைய முடியாமல் போகும் என்று ஆ.ராசா கருதினார். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjMYmrObnygz4N5ODvWCro3lQQO5N89Y5lQZG9vQiXgUETIm4M1d6_lURAG4rDawh82dQbLAvgwQ1GKO7bmXLlouXV5JPS3j4fy9rblfMnFLc0mML4alLovarh3t1kvQC62EgqkJDbMDTM/s1600/photo007.jpg
அதனால், டாடா​வின் விண்ணப்பங்கள் மூடி மறைக்கப்​பட்டுவிட்டன. அவர்கள் 10.1.2008 அன்று கட்டணம் செலுத்தி, அதற்கான ரசீது கொடுக்கப்பட்டு, சீனியாரிட்டி பட்டியலில் பெயர் இருந்தாலும், டாடா கொடுத்த விண்ணப்பத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாயமாக மறைந்துவிட்டது’ என்று சி.பி.ஐ. சொல்கிறது. ஆ.ராசா இந்த அளவுக்கு டாடாவை இழுத்தடித்த பிறகும், அவரை சீராட்டி, பாராட்டி கருணாநிதிக்கு டாடா கடிதம் எழுதியது ஏன் என்ற மர்மம் பற்றி சி.பி.ஐ. ஏனோ குறிப்பிடவில்லை.

ஸ்வான் நிறுவனத்துக்குச் சொந்த​மான டிபி ரியாலிட்டியின் சகோதர நிறுவனத்துக்கு ஆர்.கே. சந்தோலியா, அவரது வீட்டை வாடகைக்குக் கொடுத்து இருக்கிறார். அதன் மூலம், மாதம்தோறும் 63,000 சந்தோலியாவுக்கு ரியாலிட்டி கொடுக்கிறது. 2008 டிசம்பரில் ஸ்வானின் பங்குகள் வாங்கப்பட்டது குறித்து நீளமான பட்டியலை குற்றப் பத்திரிகையில் வைத்துள்ளது சி.பி.ஐ. ஐக்கிய அரேபிய நிறுவனமான எடிஸாலட் நிறுவனம், ஸ்வான் டெலிகாமின் பங்குகளை 3,200 கோடிக்கு வாங்கியது. சென்னையைச் சேர்ந்த ஜினெக்ஸ் எக்ஸ்ம் வென்சர் நிறுவனம் 380 கோடிக்கு ஸ்வானின் பங்குகளை வாங்கியது. இந்த பணம் வந்த வழியையும் சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில் வைத்து இருக்கிறது.
http://www.envazhi.com/wp-content/uploads/2009/11/cart-Din.JPG
தகுதியில்லாத நிறுவனங்கள்!

ஸ்வான் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனத்தைத் தொடங்கி, இதன் மூலம் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற அரசியல் செல்வாக்கோடு ரிலையன்ஸ் இறங்கியது. இதற்கு ரிலையன்ஸின் மற்ற நிறுவனங்கள் பணம் முதலீடு செய்துள்ளன. இந்த விவரங்களை முழுமையாக சி.பி.ஐ. பட்டியல் போட்டு, 45 பக்கங்களுக்குப் படம் போட்டு விளக்கி இருக்கிறது. 

இதில், ரிலையன்ஸின் நிர்வாகிகள் கௌதம் டோஸி, சுரேந்திர பைப்பாரா, ஹரி நாராயணன் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள். அதனால், இவர்கள் மூன்று பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். அனில் அம்பானியை விசாரித்த சி.பி.ஐ., அவரிடம் பணிபுரிபவர்களை மட்டுமே குற்றவாளிகளாகச் சிக்கவைத்துள்ளது.

இதே மாதிரி, ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்த யுனிடெக் நிறு​வனத்தின் சில துணை நிறுவனங்கள், டெலிகாம் உரிமத்துக்கான தகுதியைப் பெறுவதற்காக, சில மோசடியான தகவல்​களைக் கொடுத்து இருப்பதாகவும் சி.பி.ஐ. கண்டுபிடித்து உள்ளது. 

அந்தத் தகவல்களை ஆராயாமல், தொலைத் தொடர்புத் துறை அனுமதி கொடுத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் உரிமங்களுக்கான விண்ணப்பம் செய்த​போது, ஸ்வானுக்கும் யுனிடெக் நிறுவனத்துக்கும் முறையான தகுதிகள் இல்லை. இவர்களது விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும். 

ஆனால், இவர்களுக்கு உரிமங்கள் கொடுக்கவே கட்-ஆஃப் தேதி முதல் ஸ்பெக்ட்ரம் விலை மதிப்பு வரை அனைத்திலும் தில்லுமுல்லுகள் நடந்து உள்ளதாக சி.பி.ஐ. தனது குற்றப் பத்திரிகையில் குறிப்பிடுகிறது.
http://lh4.ggpht.com/_IEYubfMaOJM/TOC0zTmSYZI/AAAAAAAACao/YPUUgLvpYNk/hindu%20cartoon%5B4%5D.jpg

நுழைவுக் கட்டணத்தில் தில்லுமுல்லு!

அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு குறித்து சி.பி.ஐ. ஒரு கணக்கைச் சொல்கிறது! செல்லுலார் சேவை நிறுவனங்களிடம் இருந்து ஒரு மெகா ஹெட் வீதம் ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை 2002-03 முதல் 2007 வரை கணக்கிடும்போது, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. 

இதைவைத்துக் கணக்கிடும்போது, 2008-ம் ஆண்டு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டதில், 22,535 கோடி நுழைவுக் கட்டணத்தில் நஷ்டம். இதே மாதிரி, இரட்டைத் தொழில்நுட்பத்துக்கான நுழைவுக் கட்டணத்தை உயர்த்தாத காரணத்தால், 8,448 கோடி அரசுக்கு இழப்பு. ஒட்டுமொத்தமாக, அரசுக்கு 30,983 கோடி நஷ்டம் என்கிறது சி.பி.ஐ.


தொலைத் தொடர்புத் துறை, ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான நுழைவுக் கட்டணத்தை 1,650 கோடி என நிர்ணயித்தது. இது 2001-ல் நான்காவது செல்லுலார் மொபைல் டெலிபோன் சர்வீஸுக்கு (சி.எம்.டி.எஸ்.) விடப்பட்ட ஏலத் தொகை. இந்த ஏலத் தொகையை உயர்த்தாமல், 2008-ல் கொடுக்கப்பட்ட உரிமங்களுக்கு நுழைவுக் கட்டணம் நிர்ணயித்தது தவறு என்கிறது சி.பி.ஐ..

http://www.tamilhindu.com/wp-content/uploads/niira_radia.jpg
'தொலைத் தொடர்புத் துறை எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதனால், 2001-க்குப் பிறகு ஏற்பட்டுள்ள தொலைபேசிகளின் அடர்த்தி, வளர்ச்சி, ஆண்டுதோறும் வசூல் செய்யப்படும் வருவாய்ப் பங்குத் தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டு, இந்த ஏலத் தொகையை அரசு உயர்த்தி இருக்க வேண்டும்.

2003-ல் பீகார், ஒரிஸ்ஸா, வட கிழக்கு மாநிலங்களில் யாருமே ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனால், 2001-ம் ஆண்டு முறையே பின்பற்றப்பட்டது. ஆனால், கடுமையான போட்டி உருவான பிறகும் அதையே எப்படிப் பின்பற்ற முடியும்?’ என்று சி.பி.ஐ. கேள்வி எழுப்புகிறது.


'நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம், அதற்கும் மேலாக பிரதமர் கூறிய ஆலோசனைகளைஎல்லாம் ஆ.ராசா புறக்கணித்தார். எல்லோருடைய கருத்துகளையும் மீறி தன்னிச்சையாக ஆ.ராசா முடிவு எடுத்தார். தனக்கு வேண்டியவர்களான ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா, வினோத் கோயங்காவோடு, யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்திராவும் பயனடையவே, அரசுக்கு ஆ.ராசா நஷ்டம் ஏற்படுத்தினார்!’ என்கிறது சி.பி.ஐ.


இந்த விவகாரத்தில் கட்டுக்கட்டான ஆவணங்களை மட்டுமின்றி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் தவிர, குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரையும் சாட்சிகளாக நிறுத்துகிறது. தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், டிராய் தலைவர்கள், சொலிசிட்டர் ஜெனரல் வாஹன்வதி, முன்னாள் தொலைத் தொடர்புச் செயலாளர் மாத்தூர், சட்டத் துறை செயலாளராக இருந்த டி.கே. விஸ்வநாதன், முன்னாள் நிதிச் செயலாளர் டி.சுப்பா ராவ் என்று பெரிய படையே சிறப்பு நீதிமன்றத்துக்கு வர இருக்கிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLEjb2_MLmJGmpzp_IdrxuLOF7DZUJIDeg1Z2G3VADwMKBMeG2pUzOSeB6Lx-4_a7YXq-D2zETFlgN-QeoGhwOPTZjEljmwXYOu4NlL15C5SIiOk97guqn6dTtQcaXYZ94dRCtN6L67sS2/s1600/spectrum_cartoon_kalki2.jpg
இதில் முக்கியமான ஏழு பேர் ஆ.ராசாவுக்கு எதிராக மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலங்களும் கொடுத்து இருக்கிறார்கள்.

இதில் சி.பி.ஐ. ரெய்டுக்கு உள்ளான ஏ.கே.ஸ்ரீவத்சவா மற்றும் சுமார் ஒன்பது வருடங்களாக, கூடுதல் பிரைவேட் செக்ரெட்டரி அந்தஸ்தில் ஆ.ராசாவுடன் பணியாற்றிய ஆசிர்வாதம் ஆச்சாரி என்பவரும் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். (இதில் ஆசிர்வாதம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. அல்லது காங்கிரஸ் சார்பில் போட்டியிடவும் முயற்சி செய்தவர் என்பது தனி விவகாரம்) இந்த இருவரது வாக்குமூலங்களைவைத்து ஆ.ராசாவுக்கு எதிராக வழக்கை சி.பி.ஐ. வலிமைப்படுத்தி உள்ளது.

மோசடி, கூட்டுச் சதி, தில்லுமுல்லு, திட்டமிட்டு ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் கொடுத்தது, லஞ்ச ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு வருடத்தில் இருந்து அதிகபட்சம் ஏழு வருடங்கள் வரை தண்டனை கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgjzL9CAXqf9Ob7eYv2m8tbypgThdDyS3EjV_2nwUR8Ex3khGlZlwI-xrtRaiTTOgFvPYK8CInHvIuK3PZRlt5iBMSq8NXxqnGLPCe1kJjovPobfiocbpWEyONMhPgObfvJqoWLb0Hnwj0a/s400/TM_15-10-08_E1_01-02%2520CNI.jpg
ஆனால், சாட்சிகளில் எத்தனை பேர் பல்டி அடிப்பார்கள், யார் பிறழ் சாட்சிகளாக மாறுவார்கள் என்பதைப் பொறுத்தும்... இனி தாக்கல் செய்யப்பட இருக்கும் கூடுதல் குற்றப் பத்திரிகையைப் பொறுத்தும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதித் தீர்ப்பு அமையும். இது வரை கலைஞர் டி.வி. பெற்ற 200 கோடியைத் தவிர, வேறு எந்த ஆதாயங்களையும் சி.பி.ஐ. இந்தக் குற்றப் பத்திரிகையில் முன்வைக்கவில்லை. இந்த வழக்கைப் புலன் விசாரணை செய்த விவேக் ப்ரியதர்சினியிடம் இது குறித்துக் கேட்டபோது, ''பொறுத்திருங்கள்... அடுத்தடுத்த குற்றப் பத்திரிகைகளில் ஒவ்வொன்றாக வெளிவரும்!'' என்கிறார்.



 சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத் துறை!

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நடந்த முறைகேடுகளை சி.பி.ஐ-யும், பணப் பரிமாற்றம் தொடர்பான மோசடிகளை அமலாக்கப் பிரிவினரும் விசாரித்து வருகின்றனர். சி.பி.ஐ. கடந்த 2-ம் தேதி முதல் கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

இதைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், வெளிநாட்டு நிதி மேலாண்மை சட்டத்தின் கீழ் 4,300 கோடி முதலீடு பற்றிய மோசடிகள்பற்றி குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். '2ஜி முறைகேடு பற்றி சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு அடுத்த நாள், அதாவது கடந்த 9-4-11 அன்று அமலாக்கத் துறையினர் தாக்கல் செய்துள்ளனர். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidk8qE9xTdFRoaXu83O5Y57PPoImGwzia4EQgiwE2-EaJm4CmGYQgKL0tFAxLRrKBocBPeWarbtCo9z-P4EvmwP6OZECO_muYvk0vNEMbMSzgeiF07LbmpCl-AC8QBYlWTPNDUhW4FAd8/s320/1234.jpg
இந்த குற்றப் பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம், லூப் மொபைல், லூப் டெலிகாம் மற்றும் எஸ்.டெல் பற்றி கூறப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், ஆ.ராசா அண்ட் கோவுக்கு அமலாக்கத் துறையில் இருந்து சம்மன்கள் வழங்கப்பட்டனவாம். மேலும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள யுனிடெக், ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் சம்மன்கள் வழங்கப்பட்டன. 

இதில் ஆ.ராசா, சித்தார்த் பெஹுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோர் சிறையில் உள்ளதால், அவர்களிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்படும். மற்றவர்களிடம் அடுத்த வாரம் விசாரணை தொடங்குமாம்!

இந்த ஒரு மாசத்துல அதாவது மே 13 வரை இது காபந்து அரசு என்பதால் ராசாவுக்கு ஆபத்து காத்து இருக்கு...

பணம் தாராளமாக விளையாடிய டாப் 50 தொகுதிகள்.. ஒரு பார்வை

Hilarious political cartoon images
 தேர்தல் கமிஷனின் பார்வைக்கும்  ஒரு பட்டியல் போய் இருக்கிறது.   பணத்தினால் வெற்றி முடிவு செய்யப்படும் தொகுதிகளின் நிலவரம் இங்கே...

1. மதுரை மேற்கு: மாவட்டத்திலேயே மிக
அதிகமாகப் பணம் விளையாடும் தொகுதி.  கவர்களைக் கொடுப்பதற்காக தொகுதிக்காரர் ஒருவரையும், பக்கத்துத் தொகுதிக்காரர் ஒருவரையும் சேர்த்து அனுப்புகிறார்கள். இரவில் பட்டுவாடா முடிந்ததும் காலையில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு போன் செய்து, 'கவர் வந்துச்சா?’ என்று கேட்டு உறுதி செய்கிறார்கள். யாராவது கவர் வாங்க மறுத்தாலும், 'ஓட்டு போடுறதும் போடாததும் உங்க விருப்பம்ணே. நாங்க எங்க வேலையைச் சரியா செய்யணும்ல. சும்மா வெச்சுக்கோங்கண்ணே...’ என்று பாசமாய் பேசி பணக் கவரைத் திணித்துவிட்டே போகிறார்கள்! 

2. மதுரை மத்தி:  மேற்கு தொகுதியைப்போலவே இங்கும் பட்டுவாடா டீம் பக்கா. அபார்ட்மென்ட்கள், வசதியான குடியிருப்புகளைக்  கவனிப்பதற்காக வக்கீல்கள் தலைமையில் 'கவர் டீம்’ போட்டு இருக்கிறார்கள். மற்ற இடங்களில் பெரியம்மாக்கள், பாட்டிகள் மூலம் சப்ளை நடக்கிறது. வாங்க மறுக்கும் வீடுகளிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது!

3. மதுரை வடக்கு:  இந்தத் தொகுதியில் இடத்துக்கு ஏற்ப ஓட்டுக்கு 100 முதல் 1,000 வரை அனல் பறக்கிறது. நிலைமை இழுபறியாகலாம் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, இங்கு பணம் இப்போது தாறுமாறாய்ப் பாய்கிறது!


4. மேலூர்: இங்கே நிலைமை உல்டா.  வேட்பாளர் வேகமாக முன்னேறுகிறார் என்றதுமே, ஓட்டுக்குக் கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகிகள் பலரும் பதுக்கிவிட்டார்கள். கடைசி நேரம் என்பதால், இப்போது கட்சிப் பாகுபாடு இல்லாமல் 200 முதல் 500 வரை சப்ளை ஆகிறது!

5. திருப்பத்தூர்: எல்லா தரப்பும் பணம் கொடுக்கிறது. ஓட்டுக்கு 500 வீதம் ஊர் முக்கியஸ்தர்கள் மூலமாகப் பணம் போய்ச் சேர்ந்துவிட்டது. இது தவிர, கிராமப்புறங்களில் கோயில் கட்டுவது உள்ளிட்ட காரியங்களுக்காகக் கணிசமான தொகையும் இறங்கி உள்ளது.

6. மானாமதுரை:  ஓட்டுக்கு 200 என்ற கணக்கில் 80 ஆயிரம்  பேருக்கு கவர்கள் போய்விட்டதாகப் பேச்சு.  இதில் இடையில் சில ஆட்கள் சுருட்டியதும் நடந்து இருக்​கிறது.

7. சங்ககிரி: சுற்றி உள்ள கிராமங்களில் 500 வரை கைகளில் திணிக்கப்பட்டு இருக்கிறது. கட்சி நிர்வாகிகளும் பசையோடு நடமாடுகிறார்கள்.

8. மேட்டூர்:  ஓட்டுக்கு 500 என்று பட்டுவாடாவைத் தொடங்கிவிட்டனர்.


9. வேலூர்:  எப்போதும்போல இல்லாமல் இந்த முறை வைட்டமின் 'ப’-வுடன் பலரும் திரிகிறார்கள்.   வேண்டியவர்கள் மூலம் நபருக்கு 300 வீதம்  வழங்கப்படுகிறது. பணத்தைக் கொடுத்து விட்டு ஒருவர் எந்த சின்னத்துக்கு வாக்களிக்கணும் என்று சொல்ல உடன் வந்தவர்கள் அந்த ஆளை அடித்து திருத்தி இருக்கிறார்கள்.

10. காட்பாடி:  கடுமையான போட்டி காரணமாக திடுமெனப் பணம் இறைக்கத் தொடங்கிவிட்டார்கள். நபருக்கு 300 முதல் 700 வரை போணி ஆகிறதாம். அடுத்த  தரப்பிலும் இறங்கிவிட்டார்கள்.   300 முதல் 500 வரை பட்டுவாடா ஆகிறதாம்!

11. கீழ்வைத்தியணான் குப்பம்:   300 தாராளமாகக் கையில் விளையாடுகிறது!

12. சோளிங்கர்: கட்சி வேட்பாளரை விட சுயேச்சை ஒருவர்தான் பணத்தை வாரி இறைத்து வருகிறார்.

13. திருச்சி மேற்கு:  பவர் கட்டாகும் சமயத்தில் படபடவெனப் பண விநியோகம் நடக்கிறதாம். சில நேரத்தில், 'இந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்... அந்த இடத்தில் பணம் கொடுக்கிறார்கள்’ என்று அதிகாரிகளுக்குத் தகவல் பறக்கிறது. அதிகாரிகள் அங்கு சோதனைக்கு செல்லும் நேரத்தில், வேறு ஒரு இடத்தில் கமுக்கமாக விநியோகம் நடக்கிறதாம். கொடுக்கப்படும் பணம் 500!

14. ஸ்ரீரங்கம் : 'பணம் கொடுத்தாலும், பணம் பெற்றாலும் கைது செய்யப்படுவார்கள்’ என்ற தேர்தல் கமிஷனின் விதி இங்குதான் அமலானது. பணம் கொடுத்தவர்களில் பிரதானமானவர் தி.மு.க. வேட்பாளர் ஆனந்தின் மாமனார் ஆண்டிமணி. இவர் கைதுக்குப் பிறகு, தீப்பெட்டியில் உள்ள குச்சிகளை எடுத்துவிட்டு, அதில் 500 வைத்துக் கொடுக்கிறார்களாம். இன்னும் சில இடங்களில் பால் பாயின்ட் பேனாவில் பணத்தை சுருட்டிவைத்துத் தருகிறார்களாம்!

15. லால்குடி:  அதிகாலையில் நியூஸ் பேப்பரைப்போல சரசரவென வேஷ்டி, சேலைகள் சப்ளை ஆகின்றன. அந்தத் துணியைப் பிரித்துப் பார்த்ததும், கூடுதல் உற்சாகம் அடைகிறார்கள். காரணம் செல்லோ டேப் வைத்து துணிக்குள் ஒட்டிருக்கும் 500 நோட்டு!

16. நாகப்பட்டினம்:  பண விநியோகப் பொறுப்பு தெருவில் ஒருவருக்கு என்று பிரித்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. சில நோட்டுகளை மட்டுமே பாக்கெட்டில் வைத்திருப்பார். தெருவில் இருப்பவர்கள் வெளியே கிளம்பினால், அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே பாக்கெட்டுக்குப் பணத்தை மாற்றிவிடுவார்!

17. பாப்பிரெட்டிப்பட்டி:   200 முதல் 500 வரை பரவலாக பட்டுவாடா நடக்கிறது!

18. தளி: பலமான கூட்டணி என்றாலும்  நூலிழையில் சறுக்கிவிடக் கூடாது என்று பயம். அதனால், கையில் எடுத்திருக்கும் ஆயுதம், பணம்!

19. திருவாரூர்: 500 விநியோகம் அமோகமாய் நடக்கிறது. கட்சியின் அடிமட்டக் கிளை செயலாளர்கள் வரை பணம் கொடுக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையம் கெடுபிடி செய்தாலும், காவல் துறை கண்டுகொள்ளவே இல்லை!

20. நன்னிலம்:  ஆளும் கட்சிக்காரர்களுக்கு 500. எதிர்க் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு 1000 அள்ளித் தருகின்றனர். அதனால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட, தங்களை எதிர்க் கட்சி என்றே சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்!

21. கும்பகோணம்:  இங்கே முதல் கட்ட  விநியோகமே 1,000 என்று தொடங்கிவிட்டார்கள். 'ப’ தவிர வேறு எதுவும் கை கொடுக்காது என்பதில் தெளிவாக இருப்பதால், குடும்பம் ஒன்றுக்கு 5,000 கடைசிக் கட்டத்தில் கொடுக்கிறார்கள்!

22. பேராவூரணி:  கிளை ஒன்றுக்கு 10,000 மட்டுமே கொடுக்கப்படது. இதை எப்படி வாக்காளர்களுக்குக் கொண்டுபோய் சேர்ப்பது என விழிக்கிறார்கள்!

23. அரவக்குறிச்சி:  தொகுதி முழுக்க பணம் விளையாடுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது.

24. விழுப்புரம்:   500 தொடங்கி 1,000 வரை அள்ளிவிடப்படுகிறது!

25. திருவண்ணாமலை:  முதல் ரவுண்டிலேயே 500 கொடுத்து குளிப்பாட்டிவிட்டனர். இரண்டாவது சுற்று ஆரம்பம்!

26. அந்தியூர் :  கூடுதல் வாக்குகள் வைத்திருக்கும் ரேஷன் கார்டுகளைத் தேர்ந்தெடுத்து, வீட்டுக்கு ஒரு கூப்பன் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த கூப்பனைக் கொடுத்து ஒரு டி.வி.எஸ். சூப்பர் எக்ஸ்.எல். வண்டி வாங்கிக்கொள்ளலாமாம். 'இதுக்குப் பிறகும் ஓட்டை மாத்தியா போடப் போறாங்க..?!’ என்பது  நினைப்பு!

27. மடத்துக்குளம்:   500 தொடங்கி 1,000 வரை கொடுப்பதுடன,  சில பல வீடுகளுக்கு மிக்ஸியும். 

28. கன்னியாகுமரி:  படு வேகத்தில் பணப்பட்டுவாடா முடிக்கப்பட்டது. தினமும் இரவு நேரத்தில் அரை மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி, அந்தந்தப் பகுதி முக்கியஸ்தர்களிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டார்கள். மறுநாள் காலையில் செவ்வனே சேரவேண்டிய இடங்களுக்கு சென்று சேர்கிறது!

29. ஆத்தூர் : தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தொகுதிக்குள் இருக்கும் நம்பிக்கையானவர்கள் வீடுகளில்  பணத்தைப் பதுக்கிவிட்டனர்.  வீடு வீடாக 500 முதல் 3,000 வரை கொடுத்து முடித்துவிட்டனர். கரை வேட்டி கட்டாத நபர் நிதானமாக வீடு வீடாகப் போய்ப் பட்டுவாடா செய்கிறார்!

30. தூத்துக்குடி:  பணத்தை வெளியில் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதால், டோக்கன் முறையைக் கையாளுகிறார்கள். 

31.  திருச்செந்தூர்:  தொகுதியில் கட்சி நிர்வாகிகள் மூலம் சில்லரை சில்லரையாக ஆனால், சரியாக பணம் வாக்காளர்களை சென்றடைகிறது!

32. ஸ்ரீவைகுண்டம்:  'பணம் கொடுக்கிறாங்க’ என்று திடீர் திடீரென வதந்திகள் பரவி மக்கள் ஆளாய் பறக்கிறார்கள்.

33. ஓட்டப்பிடாரம்:  பணம் இறைப்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, ஆங்காங்கே கோயில் பிரசாதம்போல குறைந்த அளவாக மட்டும் பட்டுவாடா நடக்​கிறது!

34. அருப்புக்கோட்டை:  தேர்தல் அறிவிப்பதற்கு சில மாதம் முன்பே, பிள்ளையார் சுழி போடப்பட்டது. அடுத்த கட்டமாக, டோக்கன் மூலம் 500 விநியோகம் நடைபெற்றது. வீட்டுக்கு ஒரு கூப்பன் வழங்குகிறார்கள். அந்த கூப்பனுக்கு 3,000 மதிப்புள்ள அன்பளிப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் வழங்கப்படுகிறது!

35. திருச்சுழி:  ஓட்டுக்கு 500 என்று கட்சி வித்தியாசம் பார்க்காமல் தொகுதி முழுவதும் செலவழிக்கிறார்கள். யாரா இருந்தாலும்... காசு!

36. விருதுநகர்:  கூட்டணி பலத்தை நம்பாமல், ஓட்டுக்கு 200 முதல் 500 வரை கொடுத்து மக்களை அமுக்குகிறார்கள்!

37. பெரம்பலூர் : வாக்காளர்களின் செல்போனுக்கு டாப்- அப் பண்ணிக் கொடுப்பது, இலவசமாக சிலிண்டர் சப்ளை செய்வது என பெண்களைக் கவர்கிறார்கள்!

38. ஜெயங்கொண்டம்:   வார்டு பொறுப்பாளர்கள் மூலமாக இரவோடு இரவாக ஓட்டுக்கு 200 வீதம் அள்ளி வீசி அனைவரையும் கவர் செய்துவிட்டார்கள்! 

39. போடி:  சிட்டிங் எம்.எல்.ஏ லட்சுமணனின் அண்ணி பரிமளாவைப் பணம் கொடுத்ததாக போலீஸார் கைது செய்த பின்னரும் பட்டுவாடா நடக்கத்தான் செய்கிறது. அந்தப் பக்கம், ஓட்டுக்கு 1,000 என விநியோகம் நடக்கத் தொடங்க, அசந்து நிற்கிறார்கள் மக்கள்!   

40. ராதாகிருஷ்ணன் நகர்:  சுய உதவிக் குழுக்களுக்கு ஆளும் கட்சிப் பணம் விநியோகம் செய்வதாக செய்திகள் கிளம்ப... பறக்கும் படை காரை வளைத்துப் பிடித்தது. காரில் இருந்த 50,000 பணமும், எந்தெந்த சுய உதவிக் குழுக்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது என்கிற விவரம் எழுதப்பட்ட காகிதக் கட்டும் கைப்பற்றப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடக்கிறது பண விநியோகம்!

41. கொளத்தூர்:  கடந்த ஒரு வாரமாகவே வார்டு வாரியாக இரவு 9 மணிக்கு மேல் கரன்ட் கட் ஆகிப் பண விநியோகம் வெள்ளமாகப் பாய்ந்தது. ''நம்ம ஏரியாவுக்கு எப்ப கரன்ட் கட் பண்ணுவீங்க?'' என்று கேட்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்தி இருந்தனர். ஏரியாவில் பேப்பர் போடும் ஆட்களை எல்லாம் ஒரு இடத்தில் அழைத்து மீட்டிங் போட்டு இருக்கிறார்கள். பேப்பரில் பணம் விழவும் வாய்ப்பு இருக்கிறது!

42. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: முஸ்லிம்கள் ஓட்டுகள் அதிகம் என்பதால், அவர்களைக் குறிவைத்து பணம் விநியோகம் நடக்க ஆரம்பித்தது. கவுன்சிலர் தலைமையிலான குழுதான் பணத்தை விநியோகம் செய்கிறது!

43. மயிலாப்பூர் :  எப்படியும் வெல்ல வேண்டும் என்று... பண விநியோகம் ஏரியாவில் பாய்கிறது. காங்கிரஸின் போட்டி வேட்பாளர் மட்டும் இதைக் கண்டு பிடித்துச் சொல்கிறார்!

44. விருகம்பாக்கம்.:  குடிசை வாழ் மக்களில் யாராவது 2,000 ரூபாய்க்குள் தாலி, தோடு, மூக்குத்தி, வளையல் என்று எதையாவது மார்வாடிக் கடையில் அடகு வைத்திருந்தால், வீடுகளுக்கு வந்து அந்த ரசீதை கேட்டு வாங்கிப் போகிறார்கள். மார்வாடிக் கடையில் பணத்தை செட்டில் செய்துவிட்டு, 'இன்னார் வருவார்... அவரிடம் நகையை கொடுத்துவிடவும்' என்று சொல்லிப்போகிறார்கள்!

45. திருவள்ளூர்:  கூரியர் கம்பெனி மூலம் தபால் வரும் பாணியில் பணம் பட்டுவாடா நடக்கிறது. சென்னையில் இருந்து மின்சார ரயிலில் பணம் திருவள்ளூர் ரயில் நிலையத்துக்கு பார்சல் வருகிறது. அதை எடுத்துச் செல்லும் பைக் ஆசாமிகள், கூரியர் தபால் பைகளை அள்ளிக்கொண்டு பறக்கிறார்கள். 1,000 வீதம் வீடுகளுக்கு கவர் விநியோகம் நடக்கிறது!

46. அம்பத்தூர்:   நள்ளிரவில் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்தால், குறிப்பிட்ட மத ஸ்தலத்துக்கு பெண்களை அழைக்கிறார்கள். ஆண்கள் போகலாம். ஆனால், வாசலில் நிற்க வேண்டும். பெண்களிடம் கவர்கள் தரப்படுகின்றன. தலைக்கு 1,000 வீதம் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த மாதிரி பணம் கவரில் இருக்கிறது. பெண்கள் இல்லாத வீடுகளில், ஆண்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாறுகிறது! 

47. திருவொற்றியூர்': டோல்கேட் அருகே மீனவக் குப்பத்து மக்களிடம் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் பணம் விநியோகம் செய்ய... தகவல் போய் தேர்தல் கமிஷனின் பறக்கும் படை வந்தது. உடனே அந்த இளைஞர் 21,000 மட்டும் தெருவோரம் வீசிவிட்டு, பைக்கில் தப்பினார். ஹவாலா ஸ்டைலிலும் பணம் கை மாறுகிறது. சிறு துண்டு பேப்பரில் அம்புக் குறி வரையப்பட்டு இருக்கும். அந்த பேப்பரை குறிப்பிட்ட வீட்டில் போய்க் கொடுத்தால், 1,000 தருகிறார்கள்!

48. கும்மிடிப்பூண்டி : வினோதமான முறையில் இங்கு பணப் பட்டுவாடா நடக்கிறது.   கார்கோ ஜீன்ஸில் இடுப்பில் இருந்து கால் வரை உள்ள பகுதிகளில் நிறைய பாக்கெட்டுகள் இருக்கும். அந்த பாக்கெட்டுகள் முழுவதும் கரன்ஸிகள். எங்கே பணம் தேவை என்று செல்போன் அடிக்கிறார்களோ, உடனே அந்த படை ஸ்பாட்டில் ஆஜராக... பணம் கைமாறுகிறது.

49. ஆலந்தூர்: இங்கே   500 நோட்டுகளை அமர்க்களமாக விநியோகம் செய்கிறார்கள். கையும் களவுமாக சிலர் பிடிபட்டு இருந்தாலும், பணப்பட்​டுவாடா தொடர்கிறது.

50. மதுரவாயல்:   ஒரு ஓட்டுக்கு 200, இரண்டு ஓட்டுக்கு 500 மூன்று ஓட்டுக்கு 1,000 நான்கு ஓட்டுகளுக்கு மேல் போனால் 2,000 என கொடுக்கிறார்கள். சினிமா தியேட்டர் போன்ற பொது இடங்களில் விநியோகம் அமோக​மாக நடக்கிறது.


டிஸ்கி - நேற்று நிறைய பேருக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்தது.. அதில் தினகரன் நாளிதழ் இன்று (13.4.2011) வாங்குவோருக்கு ரூ 1000 இலவசம் என... ஆனால் டுபாக்கூர்..