Tuesday, March 03, 2026

BABY GIRL (2026) -பேபி கேர்ள் - மலையாளம் / தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ ஜியோ ஹாட் ஸ்டார்

                              




23/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்த லோ பட்ஜெட் படம் வெளியான முதல் 15 நாட்களில் ஒரு கோடியே 70 லட்சம்  ரூபாய் வசூல்  செய்துள்ளது.இப்போது 13/2/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் தமிழ் டப்பிஙகில் காணக்கிடைக்கிறது.


தொடர்ந்து நான்கு தோல்விப்படஙகள் தந்த நிவின் பாலிக்கு இது ஒரு எதிர் பாராத வெற்றிப்படம்.சர்வம் மாயா ஹிட்டைத்தொடர்ந்து இதுவும் ஹிட் படமே.


சுரேஷ் கோபி+ பிஜூ மேனன்  நடித்த கருடன்(2023) என்ற வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தைக்கொடுத்த இயக்குநர் அருண் வர்மாவின்   அடுத்த படம் இது.தமிழில் சூரி+எம் சசிகுமார்  நடிப்பில் வந்த கருடன்(2024) தமிழ்ப்படத்துக்கும் ,கருடன்(2023)  எந்த சம்பந்தமும் இல்லை.



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் கேரளாவின் தலைநகர்  திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவனனையில் அட்டெண்டர்.ஒரு நாள் அவருடன் பணி புரியும் ஊழியர் அடுத்த நாள் பணிக்குத்தாமதமாக வர இருப்பதாக சொல்கிறார்.


அந்த நாளில் நாயகன் தாமதமாகவே பணிக்கு வருகிறான்.பிறந்து 3 நாட்களே ஆன ஒரு குழந்தை காணாமல் போகிறது.தாமதமாக ட்யூட்டிக்கு வந்ததால் போலீஸ் நாயகனை சந்தேகிக்கிறது ,விசாரிக்கிறது

இதனால் நாயகன் தானாக முன் வந்து காணாமல் போன குழந்தையைக்கண்டுபிடிக்கும் படலம் தான் மொத்தத்திரைக்கதை.


நாயகன் ஆக  நிவின் பாலி அடக்கி வாசித்து இருக்கிறார்.ஹீரோ பில்டப் இல்லாத அவரது அண்டர் ப்ளே ஆக்டிஙக் குட்.

நாயகி ஆக வரும் லிஜோ மோல் ஜோஸ் நாயகனுக்கு ஜோடி இல்லை.ஆனாலும் அவரது நடிப்புக்கு இணை படத்தில் வேறு யாரும் இல்லை.குழந்தை பாசத்தில் தவிப்பது,புகுந்த வீட்டில் சிரமஙகளை எதிர்கொள்வது.,கணவனை துணிச்சலாக எதிர்ப்பது என விருதுக்குத்தகுதியான நடிப்பு .


சங்கீத் பிரதாப் க்கு அருமையான ரோல்.படம் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கிறார்.நாயகனை விட அதிகக்காட்சிகள் வருகிறார்.நடிப்பும் கச்சிதம்.


போலீஸ் ஆபீசர் ஆக வரும் அபிமன் யு நடிப்பு அருமை.ஜாபர் இடுக்கி ஒரு கெஸ்ட் ரோலில் வருகிறார்

சாம் சி எஸ் இசையில் ஒரே ஒரு பாட்டு ஓக்கே ரகம்.பின்னணி இசை சிறப்பு.

பைஸ் சித்திக்கின் ஒளிப்பதிவு அருமை.சையித் குமரனின்  எடிட்டிஙகில் படம் 124 நிமிடஙகள் ஓடுகிறது

சபாஷ்  டைரக்டர்

1 பாபி-சஞசய் இருவரின் திரைக்கதை அருமை.ஒரு சாதாரண கதைக்கருவை சீட் எட்ஜிஙக் திரில்லராக மாற்றும் வித்தை அவர்களுக்குத்தெரிந்திருக்கிறது(2013ல் வெளியான  மும்பை போலீஸ் என்ற மெகாஹிட் க்ரைம் திரில்லர் படத்தின் திரைக்கதை இவர்கள் தான்)

2  காணாமல் போனது ஒரு குழந்தை தானே?அதைக்கண்டுபிடிக்க நாம் ஏன் இவ்வளவு மெனக்கெடனும் என ஒரு போலீஸ் கேட்கும்போது அதற்கு உயர் அதிகாரி சொல்லும் பதில் டச்சிஙக் ( நாளை அதே குழந்தை சிக்னலில் பிச்சை எடுக்கும் நிலைக்கு வரலாம்.அதைத்தடுக்கும் பொறுப்பு நமக்கு உண்டு.)

3 நாயகி ஆக வரும் லியோ மோல் ஜோசின் பிரமாதமான நடிப்பு பெண்களை மிகவும் கவரும்

4 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 குழந்தையைக்கட்டைப்பையில் வைத்துக்கடத்தும் காட்சி ஏற்கனவே அதிசா வின் திரைக்கதையில் வெளி வந்த டி என் ஏ (2025) என்ற தமிழ்ப்படத்தில் வந்திருக்கிறது.

2 பின் பாதி திரைக்கதை கொஞ்சம் இழுவை தான் .படமே முடிந்த பின் மீண்டும் 30 நிமிடம் கதையை இழுக்கிறார்கள்.

3 படத்தின் டைட்டில் டிராக் இசை  ஸ்கேம் 1992 எ ஹர்சத் மேத்தா படத்தின் டைட்டில் டிராக்கிலிருந்து சுட்டு இருக்கிறார்கள்.

4 கதை ஒரே நேர் கோட்டில் செல்லாமல் அக்கா-தம்பி, ஒரு தம்பதி,நாயகன் என 3 ட்ராக்குகளில் திரைக்கதை அமைவதால் நாம் யாருடன் பயணிப்பது என்ற குழப்பம் வருகிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-13+ குடும்பத்துடன் பார்க்கலாம்


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   குழந்தைக்கடத்தல் ,அம்மா செண்ட்டிமெண்ட்ஸ் இருப்பதால் பெண்களைக்கவரும் படம் இது.ரேட்டிங் 3/5



Baby Girl
Theatrical release poster
Directed byArun Varma
Written byBobby-Sanjay
Produced byListin Stephen
Starring
CinematographyFaiz Siddik
Edited byShyjith Kumaran
Music bySam C. S.
Production
company
Distributed byMagic Frames
Release date
  • 23 January 2026
Running time
124 minutes[1]
CountryIndia
LanguageMalayalam
Box office₹1.70 crore[2]

Monday, March 02, 2026

EVEN IF THIS LOVE Disappears FROM THE WORLD TO NIGHT (2025) -கொரியன் மூவி-சினிமா விமர்சனம்(ரொமாண்டிக் ட்ராமா)@நெட் பிளிக்ஸ்-

       

                       

டைட்டிலைப்பார்த்ததுமே இவ்வளவு நீளமா இருக்கே?என்று மலைக்க வேண்டாம்.மயிலின் தோகை நீளமாக இருப்பதால் நாம் அதன் அழகை ரசிக்காமலா இருக்கிறோம்?.


24/12/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது நெட் பிளிக்ஸ் தளத்தில் 6/2/2026 முதல் தமிழ் டப்பிங் கில் காணக்கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த கண்ணியமான காட்சிகள் கொண்ட படம் இது.


இதே டைட்டிலில் கிம் யே யங் என்பவர் எழுதிய நாவலைத்தழுவித்திரைக்கதை அமைக்கப்பட்ட படம்.பொதுவாக ஒரு சிறுகதையையோ,நாவலையோ தழுவி திரைக்கதை அமைந்தால் அதில் செய் நேர்த்தி,கவித்துவும் கூடுதலாக இருக்கும் என்பதை இந்தப்படமும் நிரூபிக்கிறது

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ,நாயகி இருவரும் ஒரே பள்ளியில் ,ஒரே வகுப்பில் படிக்கும் 11 வது படிக்கும் பள்ளி மாணவர்கள்.

சக மாணவர்கள் நாயகனை ரேகிங்க் செய்து நாயகியிடம் நீ என்னுடைய கேர்ள் பிரண்ட் ஆக இருக்கிறாயா?எனக்கேட்க சொல்கிறார்கள்.நாயகனும் அதே போல் கேட்க இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள்.


ஆனால் நாயகி 3  நிபந்தனைகள் விதிக்கிறாள்.அடிக்கடி பேசி தொந்தரவு செய்யக்கூடாது.பள்ளி வளாகத்தில் ,வகுப்பில் பேச முயற்சிக்கக்கூடாது,காதலிக்கக்கூடாது.

நாயகனுக்குப்புரியவில்லை என்றாலும் அந்த விதிகளுக்குக்கட்டுப்பட்டு நட்பைத்தொடர்கிறான்.

நாயகி எட்டாம் வகுப்புப்படிக்கும்போது ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு ஆண்ட் ரோ கிரேடு அம்னீசியா என்ற பிரச்சனை ஏற்படுகிறது.அதாவது நாயகி தூங்கி எழுந்தால் அதற்கு முன் தின நினைவுகள் இருக்காது.


கிட்டத்தட்ட கஜினி (மொமெண்ட்டோ) பட நாயகன் மாதிரி.இந்த நிலைமையை சமாளிக்க தினமும் டைரியில் ,செல் போனில் அன்று நடந்த சம்பவங்களை எழுதி வைத்துக்கொள்கிறாள்.

அடுத்த நாள் காலையில் டைரியில்ன்படித்து சந்தித்த நபர்கள் ,சம்பவங்கள் ஆகியவற்றை நினைவு கூர்வாள்.

நாயகனுக்கு அம்மா இல்லை.இறந்து விட்டார்.அப்பா மட்டும் தான்.நாயகன் சிறுவனாக இருக்கும்போதே இதயத்தில் ஒரு சரி செய்ய முடியாத பிரச்சனை இருக்கிறது.இதயத்தைத்திருடாதே(கீதாஞ்சலி)பட நாயகன் போல இறப்பை எந்நேரமும் எதிர் நோக்கிக்காத்திருப்பவன்.

இந்த விஷயம் நாயகிக்குத்தெரியாது.நாயகியின் நோய் பற்றி நாயகனுக்குத்தெரியாது.

இவர்கள் பழகிக்கொண்டிருக்கும்போது நாயகன் நாயகி விதித்த நிபந்தனைகளில் மூன்றாவது விதியை மீறி விடுகிறான்.

அதற்கு நாயகியின் எதிர் வினை என்ன?அதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் என்ன?என்பது தான் மீதித்திரைக்கதை.


நாயகன் ஆக ச்சூ யங்க் வூ நடித்திருக்கிறார்.நம்ம ஊர் சித்தார்த் போன்ற முகத்தோற்றம்.அப்பாவுடனான பிணைப்பு,நாயகி உடனான நட்பு ,நண்பர்கள் உடனான கலாட்டாக்கள் என எல்லா ஏரியாக்களிலும் ஸ்கோர் செய்கிறார்.

நாயகி ஆக ஷின் ஷியா அழகுப்பதுமையாக வருகிறார்.அழும்போதும் அழகாக இருப்பவர் தான் நல்ல நாயகி என்ற ஜெயகாந்தன் சொல்லுக்கு ஏற்ப சோகக்காட்சிகளிலும் மிளிர்கிறார்.

படத்தில் நடித்த மற்ற அனைவர் நடிப்பும் கச்சிதம்.

இது மாதிரி ரொமாண்டிக் மூவிகளில் ஒளிப்பதிவு ம் இசையும் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும்.படத்தில்  பிரமாதமான ஒளிப்பதிவு ஓவியம் போன்ற காட்சிகளால்

கண்களைக்கவர்கிறது.பின்னணி இசை கவிதை.பாடல்கள் 3 இருக்கிறது.


திரைக்கதை எழுதி. இயக்கி இருப்பவர் கிம் யே யங்க்

படத்தின் டியூரேசன் டைம்  106 நிமிடங்கள்

சபாஷ்  டைரக்டர்

1 சமீபத்தில் வெளியான வித் லவ் , தனுஷ நடித்த 3 ஆகிய படங்களில் வருவது போல முதல் 45 நிமிடங்கள் ஸ்கூல் கலாட்டா என்பதால் இளமைக்குறும்புகள் கொப்பளிக்கும் காட்சிகள் அருமை

2  நாயகனுக்கும்,அப்பாவுக்கும் உண்டான பாண்டிங் வெளிப்பட்ட விதம்

3  நாயகியின் தோழியை வில்லி மாதிரி காட்டி பின் எதனால் அப்படி நடந்து கொண்டார் என்ற ட்விஸ்ட்

4 நாயகியை ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக  வைத்துக்கொள்ள நாயகன் எடுக்கும் முயற்சிகள் கவிதை



  ரசித்த  வசனங்கள் 

1 சிலர் சில நினைவுகளைக்கொஞ்சம் கொஞ்சமா மறக்கிற மாதிரி நான் அவன் நினைவுகளைக்கொஞ்சம் கொஞ்சமா ஞாபகப்படுத்திக்கறேன்.

2 காயஙகள் ,அதனால் ஏற்படும் தழும்புகள் அழிவதில்லை,ஆனால் வலிகள் நிரந்தரம் இல்லை.

3  டேட்டிங்க் ல பொண்ணுங்க சொல்றதை செய்யலைன்னா பிரச்சனை,ஆனா அவஙக சொல்றதை மட்டும் செஞ்சுட்டு இருந்தா அதை விடப்பெரிய பிரச்சனை

4  உலகத்தில் இருக்கற எல்லோரும் நல்லவங்க இல்லை.

5  காலம் போகப்போக நினைவுக்ள் எல்லோருக்கும் மங்கத்தொடங்கும்,ஆனா உன் மனசுல என்ன இருக்கோ அது நிலைத்து நிற்கும்

6 சரியாத்தூஙகலைன்னா நீ நல்லா வளர மாட்டே.

டாடி.இப்பவே நான் உங்களை விட உயரம் தான்

7  ஸ்போர்ட்ஸ் உனக்குப்பிடிக்காதா?ஏன்?


வியர்க்கும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகிக்கு வந்திருக்கும் குறைபாட்டின் படி முதல் நாள் நிகழ்ந்த சம்பவங்கள் மறு நாள் மறக்கும் எனில் அவர் எப்படி பரீட்சை எழுதி பாஸ் ஆவார்? நடத்திய பாடம் மறக்குமே?

2  நாயகி எட்டாம் வகுப்புப்படிக்கும்போது ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தார் எனவும் இப்போது விபத்துக்குப்பின் அதெல்லாம் மறந்து விட்டது எனவும் கூறுகிறார்.ஆனால் சைக்கிள் ஓட்டுவது மட்டும்  மறக்காமல் இருக்கிறார்.

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - Feel good மூவி பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.மிக மெதுவான திரைக்கதை.பொறுமை தேவை.ரேட்டிங்க் 3/5

..

Even If This Love Disappears From the World Tonight
Hangul
^오늘 밤, 세계에서 이 사랑이 사라진다 해도
Literal meaningEven If This Love Disappears Tonight
Directed byKim Hye-young
Based onEven If This Love Disappears From the World Tonight [ko]
by Misaki Ichijo [ja]
Starring
Production
companies
  • Blue Fire Studio
  • Red Ice Entertainment
  • O'FAN House
  • Kadokawa
Distributed byBy4M Studio
Release date
  • December 24, 2025
Running time
106 minutes
CountrySouth Korea
LanguageKorean