Monday, March 02, 2020

TRANCE (MALAYALAM) -சினிமா விமர்சனம்

Image result for trance movie

13.7.2012  ல் ரிலீஸ் ஆன உஸ்தாத் ஹோட்டல் எனும் சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய  அன்வர் ரஷித் 8 வருடங்களுக்குப்பின் இயக்கிய படம் என்பதால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு . பொதுவா ஒரு படம் ஹிட் ஆனாலே அவருக்கு வாய்ப்பு குவியும் , சூப்பர் ஹிட் ஆனா கேட்கவே வேணாம், ஆனாலும் ஏனோ அவர் சில காலம் ஒதுங்கியே இருந்தார்


ஹீரோ ஸ்விக்கி டெலிவரி பாய் . பார்ட் டைம் ஜாப் ஆக மோட்டிவேஷனல் ஸ்பீக்கரா கோச்சிங் கிளாஸ் நடத்தறார், லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலி

 வில்லன்  ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஓனர் . கிறிஸ்துவ மதத்தில்  அதிசயங்கள் நிகழ்த்தும் பாஸ்டர் மாதிரி கேரக்டர்களை உருவாக்கி புகழ் பெறச்செய்து சாமான்ய மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர் 


 சுருக்கமா சொல்லனும்னா நம்ம ஊரு நித்யானந்தா ,  ஈஷா யோகா சத்குரு மாதிரி  ஃபிராடுங்களை உருவாக்கி அவங்க  மூலமா பணம் பறிப்பவர்




ஹீரோவுக்கு வில்லன் தன் அடியாள் மூலம் 6 மாசம் கோச்சிங் குடுக்கறாரு.அதுக்குப்பின் ஜெபக்கூட்டங்களில்  செட்டப் செல்லப்பா மாதிரி ஏற்கனவே செட் பண்ணி  வெச்ச ஆட்கள் மூலம் அதிசயம் நிகழ்த்துவது மாதிரி  ஊரை ஏமாத்தறார். ஜனங்க அதை நம்பி காசை காணிக்கையா அள்ளி இறைக்கறாங்க 


 ஹீரோ செம ஃபேமஸ் ஆகறார். ஆன பின்  வில்லனின் கட்டுப்பாட்டில் இருந்து அவங்களுக்கு ஏன் நாம சம்பாதிச்சுத்தரனும்?நாமே  டைரக்டா சம்பாதிக்கலாம்னு பிளான் போடறாரு.

 அதன் படி தனது புகழ் அதிகரிக்க ஒரு  டி வி சேனலுக்கு  பேட்டி குடுக்கறாரு . அந்த பேட்டி திடீர்னு லைவ் ஷோவாக மாற்றப்பட்டு ஏதாவது அற்புதத்தை இப்போ நடத்திக்காட்டுங்கனு  ஆங்க்கர் சவால் விடறார்/


தன் அனுமதி இல்லாம டி வி ஷோ ல புரோக்ராம் பண்ணி இப்படி மாட்டிக்கிட்டாரே ஹீரோ என கடுப்பாகி வில்லன் ஹீரோவைத்தலையில் தாக்க ஹீரோவுக்கு மனநிலை பாதிக்கப்படுது 


 வில்லன் ஹீரோ மாதிரி இன்னொரு ஆளை ரெடி ;பண்றார். ஓபிஎஸ் நமக்கு ஒத்து வர்லைன்னதும் ஈபிஎஸ் சை சசிகலா ரெடி பண்ணின மாதிரி 


அதுக்குப்பின் ஹீரோ தர்மயுத்தம் பண்ணி  தன் இடத்தை தக்க வெச்சாரா?
 இல்லை டிடிவி தினகரன் மாதிரி தனியா பர்ஃபார்ம் பண்ணாரா?  என்பதை க்ளைமாக்சில் காண்க 


ஹீரோவா கடவுள் தேசத்தின் இயற்கை நடிப்பு இளவல் ஃபகத் ஃபாசில். அசால்ட்டா பின்னி பெடல் எடுக்கும் நடிப்பு . மோட்டிவேசனல் ஸ்பீக்கராக ஆள் பிடிக்கும்போது பேரம் போது அப்<ளாஸ் அள்ளுகிறார்

 அவரே  கோச்சிங் கிளாசில் தடுமாறும்போது அனுதாபத்தை சம்பாதிக்கிறார்

 மேடையில் பாஸ்டராக   அதகளம் பண்ணும் காட்சிகள் அருமை 

 பின் பாதியில் வில்லனுக்கு டேக்கா கொடுப்பது கலக்கல்


 வில்லனாக டைரக்டர் கவுதம் வாசுதெவ் மேனன். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ல போலீஸ் ஆஃபீசரா வந்தவர் இதுல கார்ப்பரெட் கம்பெனி ஓனராக , ஃபிராடாக  நல்லா பண்ணி இருக்கார்

 இனி தொடர்ந்து இவரை வில்லனாக எதிர் பார்க்கலாம் 


நஸ்ரியா நசீம் வில்லி மாதிரி வந்து நாயகி மாதிரி ஆகும் கேரக்டர் ,  எப்ப பாரி தம் சரக்கு அப்டினு இருப்பது எரிச்சல் , அனா அழகிய சருமத்துக்காக அதை எல்லாம் பொறுத்துக்கலாம் ( என்ன கருமத்துக்காக அதை நாங்க பொறுத்துக்கனும் என்பவர்கள் ஸ்கிப் செய்க)

சவுபின் சாஹிர்   வழக்கமா காமெடி ரோல் பண்ணுவார் , இதுல கலக்கலான டி வி ஆங்க்கர்  ரோல், கலக்கிட்டார்

 இவர் சம்பந்தப்பட்ட பேட்டி காட்சி முதல்வன் பட அர்ஜூன் ரகுவரன்  பேட்டிக்கு இணையாக காட்சி அமைக்கப்பட்டிருக்கு 


உயிருக்குப்போராடும் தன் குழந்தையை ஹாஸ்பிடலில் சேர்க்காமல்  இரை நம்பிக்கையில்  முழுகும் கேரக்டரில்  வினாயகன் நல்லா பண்ணி இருக்கார்  ( இதே மாதிரி பிசாசு படத்தில் மிஸ்கின் ஒரு கேரக்டர் அறிமுகம் பண்ணீனார் _


ஹீரோவுக்கு பயிற்சி அளிக்கும் ட்ரெய்னராக திலீஷ் போத்தன்  அமர்க்கள நடிப்பு 

வில்லனின் கூட்டாளியாக   செம்பொன் வினோத் ஜோஷ் கனகச்சிதம்

 பின்னணி இசை குட் , ஒளிப்பதிவு  ஓக்கே  ஓப்பனிங் சீனில் வரும் கன்யாகுமரிக்காட்சிகள் ஹைக்கூ கவிதை




நச் வசனங்கள்

1   வெற்றி இலக்கை அடைய லிஃப்ட் இருக்கா?னு பாத்துட்டு இருக்காதே? படிக்கட்டுகளை நீயே உருவாக்கு 


2    நான் என் பயத்தோட சண்டை போட்டுட்டு இருக்கேன் 


3   சார் , என் பையனுக்கு மோட்டிவேசனல் கிளாஸ்  நீங்க எடுக்கஞும்
எவ்ளோ சார்ஜ் ஆகும்> 


 உள்ளூர்னா  ஒன்றரை லட்சம் வெளியூர்னா 2 லட்சம் 

 அடேங்க;ப்பா. ஓவர் சார்ஜா இருக்கே?

 சரி நீங்க சொல்லுங்க , உங்க எதிர்பார்ப்பு எவ்ளோ

 இல்ல அது சரி வராது [ 

 பரவால்ல சொல்லுங்க 

 3000  ரூபா

 சார்   ரொ,ம்ப  கம்மியா இருக்கு ,   மேல ஏதாவது போட்டுக்குடுங்க 

 ஓக்கே ஒரு டீயும் , பப்சும்

 ஓக்கே டன்


4  சராசரி மனிதனை விட  ஒரு வெற்றியாளன் 5 மடங்கு   வேகமா நடப்பான்


5  மக்களோட எமோஷன் ஒரு சக்தி வாய்ந்த போதை 


6    இவன் 40 வருச்மா இதே ஹோட்டல்ல மேனேஜரா இருக்கான்

 அடேங்க;ப்பா 

 ஆனா என் அப்பா வெய்ட்டரா சர்வரா வேலை ஆரம்பிச்சார் , இப்போ இது மாதிரி  3 ஃபைவ் ஸ்டார்  ஹோட்டலுக்கு ஓனர்



சபாஷ் டைரக்டர்


1   மோட்டிவேஷனல் ஸ்பீக்கராக வரும் ஹீரோ  இருவரிடம் பேரம் பேசும் காட்சி 


2  வில்லன் ஹீரோ இருவரும் முதன் முதலாக சந்திக்கும் காட்சி 


3   அல்லேலுலா ஃபிராடுத்தனங்களை வெளிச்சம் போட்டுக்காட்டும் ஒவ்வொரு சீனும் அப்ளாஸ் தான்


 4  படம் ரொம்ப ட்ரையாக போய்டக்கூடாது என சாமார்த்தியமா நஸ்ரியா கேர்க்டரை நுழைத்த விதம்





 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   படம்  ரொம்ப நீளம்  கிட்டத்தட்ட 3 மணி நேர,ம்  ( 10 நிமிசம் குறைவு )

2   பாஸ்டர் கேர்க்டர்களை உருவாக்கும் வில்லனுக்கு முதலிலேயே அவர் தனக்கு எதிராக திரும்புவார்  என தெரியாதா? 

3  க்ளைமாக்சில்   வில்லன்களை அதுவும் பண பலம்  படை பலம் ஆள் பலம் கொண்ட வில்லன்களை சர்வ சாதாரணமாக ஒரு சாதா ஆள் கொல்வது  ( ஹீரோ அல்ல )

4   கிறிஸ்துவ மத பிரச்சாரங்கள் ஓவர் டோஸ் , இன்னும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்

5  க்ளைமாக்சில்  நஸ்ரியா ஹீரோவை கண்டு  ஓடி வந்து  கட்டிப்பிடிப்பது அபத்தம்



 விகடன் மார்க் ( யூகம்)   43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3,5 ./ 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)




 C.P.S  கமெண்ட்-Trance (மலையாளம்)− கிறிஸ்துவர்களில் சில போலி அல்லேலுயாக்களின்,பாஸ்டர்களின் முகமூடிகளை பிய்த்து எறியும் விழிப்புணர்வு கதையில் முஸ்லீம்களான பகத்பாசில்,நஸ்ரியா நசீம் நடிப்பில் மிளிர்ந்தது இந்துவான எனக்கு மகிழ்ச்சி ,வில்லனாக #GVM n #Chemban நடிப்பு அருமை, ரே − 3/ 5



5 comments:

Unknown said...

அதுசரி நங்கையா பற்றிய தனி பதிவு எதுவும் எழுதும் உத்தேசம் உள்ளதா?

saravanakumar said...

why drubathi not explored ?
mr senthil neengalum mugamudiaaaa?

saravanakumar said...

why drupathi flim wasnot explord?
do you having a same mask?

saravanakumar said...

why drubathi not explored ?
mr senthil neengalum mugamudiaaaa?

tp said...

உயிருக்குப்போராடும் தன் குழந்தையை ஹாஸ்பிடலில் சேர்க்காமல் இரை நம்பிக்கையில்... --> "இரை" அல்ல "இறை"

கிறிஸ்துவர்களில் சில போலி அல்லேலுயாக்களின்,பாஸ்டர்களின் முகமூடிகளை பிய்த்து எறியும் விழிப்புணர்வு கதையில் முஸ்லீம்களான பகத்பாசில்,நஸ்ரியா நசீம் நடிப்பில் மிளிர்ந்தது இந்துவான எனக்கு மகிழ்ச்சி :)

-->பாட்சா படத்தில் ஹீரோ : இந்து ( மாணிக்கம் ), ஹீரோவின் நண்பன்: முஸ்லீம் ( பாட்சா) , வில்லன்: கிறிஸ்டின் (மார்க் அந்தோணி)
-->தமிழ் படங்களில் ஹீரோ ஹிந்து அல்லது முஸ்லிமாக தான் iruppan....
கிறிஸ்டின் ஆகா ஹீரோ வருவது குறைவு. ( நிஜ வாழ்க்கையில் ஹீரோ கிறிஸ்டியனாக இருந்தாலும் கூட,,,, )