Monday, February 17, 2020

நான் சிரித்தால் - சினிமா விமர்சனம்

naan siriththaa;க்கான பட முடிவுகள்

படத்தோட டைட்டிலை நான் மட்டும் சிரித்தால் அப்டினு வெச்சிருக்கலாம், ஏன்னா படம்  பூரா ஹீரோ மட்டும் தான் லூஸ் மாதிரி சிரிச்சுட்டு  இருக்காரு , ஆடியன்ஸ் செம  கடுப்புல இருக்காங்க 


 மத்தவங்களுக்கு ஏதாவது சோகம்னா  அல்லது ஒரு சோகமான சிச்சுவேஷன்ல  ஹீரோ இருந்தார்னா அவருக்கு சிரிப்பு வந்துடும் , இது ஒரு புது வியாதி , இந்த வியாதியால ஹீரோக்கு வேலை  போகுது , காதல் போகப்போகுது. இப்படி ஒரு சிச்சுவேஷன்ல  ஒரு ஆள்மாறாட்ட குழப்பத்துல ஹீரோ சிக்கறார். அதை எப்படி சமாளிக்கறார் என்பதே கதை


படத்தோட பெரிய மைனசே கதைக்கும் ஹீரோவுக்கு இருக்கற சிரிக்கற வியாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே  , அடுத்தது  அவர் சிரிக்ம்கற சீன்கள் எல்லாம் ஆடியன்சுக்கு கனெக்ட் ஆகலை என்பதும் மைனஸ்


ஹிப் ஹாப் தமிழா ஆதி ரொம்ப நம்பிக்கையா நடிச்சிருக்காரு. இசை இவர் என்பதற்காக கண்ட கண்ட இடங்கள்ல எல்லாம் பாட்டு வருது

 நாயகியா ஐஸ்வர்யா மேனன் , இன்னொரு தண்டம்

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தான் வில்லன்/ அவர் கிட்ட பயமும் வர்லை , அவர் பண்ற காமெடி மொக்கையாவும் இருக்கு 


 ரவி மரியா ஓரளவு பரவால்ல , முனீஷ் காந்த் சுமார் நடிப்பு 

 படவா கோபி க்கு அப்பா கேரக்டர் . திரைக்கதை பலவீனத்தால் அதுவும் எடுபடல்நச்  வசனங்கள் 


1  ஒருத்தனுக்கு திடீர்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் ஒரே சமயத்துல வந்தா அவனுக்கு வெய்ட்டா,பிரைட்டா ஏதோ நல்லது நடக்கப்போகுதுனு அர்த்தம் #naansiriththaal


நீ தல fanனா?தளபதி fanனா?
நியூட்ரல்ங்க்ணா
நியூட்ரல் எதுல இருக்கும்?
பைக்ல
அப்போ பைக்கை யார் ஓட்டுவாங்க?
தலதான்
அப்ப தல fan தானே நீ? #naansiriththaal


3 போஸ்டர் ல ஏன் என் தலை பின்பக்கமா திரும்பி இருக்கு?
தலைவரே!நீங்கதான் தலை மறைவா இருக்கீங்களே?சிம்பாலிக்கா சொல்றேன் #naansiriththaalஉங்க ஓ.டி.பி. நெம்பர் சொல்லுங்க

என்னது?ஓட்டைப்பிரிச்சு இறங்கனுமா? #Naansiriththaal

5   வெண்டைக்காய் குழம்புல விளக்கெண்ணெய் ஊத்துனமாதிரி வள வளனு பேசிட்டு இருக்கற #naansiriththaal

என்ன வேலைசெய்யறோம்?எங்கே வேலை செய்றோம்கறது முக்கியமே இல்ல.மனசுக்கு பிடிச்ச வேலையா?ங்கறதுதான் முக்கியம் #naansiriththaal

7  நம்மை முதல்ல நல்லாப்பாத்துக்கனும்,அப்பதான் நம்மை சுத்தி இருக்கறவங்களை நல்லா பாத்துக்க முடியும் #naansiriththaal

இவரு பாரின் மாப்ளை,உங்களுக்கு இவரை முதல்லியே தெரியுமா?
இவன் என் நண்பன்.அரியர் பாபு
எது?
ஆருயிர் நண்பன்னு சொல்றான் #naansiriththaal

9ஏண்டி,உனக்கு ஏகப்பட்ட பாய் பிரண்ட்ஸ் இருக்காங்களாமே?

டோண்ட் ஒர்ரி,நீ தான் கடைசி #naansiriththaal

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  அவ கண்ணு இருக்கே கண்ணு அப்டினு ஹீரோ வர்ணிக்கறாரு,ஷாட் கட் பண்ணி ஓப்பன் பண்ணா ஹீரோயின் உதடு க்ளோசப்ல,அப்றம் லோ ஹிப்க்கு க்ளோசப் ஷாட் ,ஹிப் ஹோப் தமிழான்னா இதானா? #naansiriththaal

2  படையப்பா மாதிரி மாஸ் மசாலா தந்த படைப்பாளி கே எஸ் ரவிக்குமார் இயக்க வாய்ப்பு வரவில்லை என்பதற்காக வில்லன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்திருப்பது அவரது படைப்புத்திறனுக்கு பின்னடைவு. #naansiriththaal


பிக் பாஸ் லூஸ் போராளி ஜூலிக்கு பிரமாதமான கேரக்டர்.பல பாய் பிரண்ட்ஸ் இருக்கற பேரழகி ரோல்.ஹிஹி #naansiriththaal

டைரக்டர்ஸ் சொதப்பல்ஸ்


லாஜிக் மிஸ்டேக் 1− ஹீரோ ஒரு முக்கியமான எக்சாம் எழுதறாரு.காலை 10 − மதியம்1. எப்டி எழுதுனே?னு ஹீரோயின் போன் பண்ற டைம் நைட் 8 மணிக்கு.ஏழு மணி நேரமா அந்த ஏழரை என்ன பண்ணிட்டு இருந்தது? #naansiriththaa

 மிட்நைட் 12 மணிக்கு பிறந்த நாள் கொண்டாடும்வில்லன் கூலிங் க்ளாஸ்போட்டிருக்காப்டி. நைட் 8 மணிக்கு ஹீரோயினுக்கு வரவேற்பு தந்து பாட்டு ,டேன்ஸ் ஆடும் ஹீரோ கூலிங் க்ளாஸ் போட்டிருக்காரு.கூலிங்க் க்ளாஸ் வெய்யிலுக்கு போடறது பைக்ல போறப்ப கண் ல தூசி விழாமஇருக்க போடறது #naansiriththaal


3 உளுந்தூர்ப்பேட்டை கே கே ஆர் மஹால் ல கல்யாணம்னு ரிசப்ஷனிஸ்ட் / சேல்ஸ் கேர்ள் சொல்லுது. ஒரு கேன அடியாளு முழு அட்ரஸ் சொல்லுனு கேட்கறான் ,ஏண்டா மாங்கா ,அதை உளுந்தூர்ப்பேட்டை ஆட்டோ ஸ்டேண்ட்ல கேட்கலாம் ,கூகுள் சர்ச்ல பாத்துக்கலாமில்ல? #naansiriththaal


முனிஸ்காந்த் கைல ஒரு ஹேண்ட் பேக்.அதுல 50 லட்சம் ருபா கேஷ் இருக்கு.க்ளோசப்ஷாட்ல காட்றப்பபெருசா இருக்கு.ரவிமரியா கிட்ட வரும்போது லாங்க் ஷாட்ல காட்றப்ப சின்ன பேக்கா இருக்கு..அந்த பேக்ல 50 லட்சம்வைக்கசான்சே இல்ல #naansiriththaal


5  லாஜிக் மிஸ்டேக் − ஹீரோயின் மூச்சுக்கு 300 தடவை "எங்கப்பாவுக்கு 50 லட்ச ருபா கடன் இருக்குனு புலம்பறாரு.அப்பா என்னடான்னா மாசம்"1 லட்சம் ருபா சம்பளம் வாங்கற மாப்ளைக்குதான் பொண்ணு தருவேன்கறாரு.கணக்குப்படி நாலே கால் வருசம் ஆகும் கடனை அடைக்க.அதுக்கு பேசாம ஹோல்சேலா எதுனா"தொழில் அதிபரை"வளைச்சுப்போடலாமே? #naansiriththaal
நான் சிரித்தால் − கெக்கே பிக்கே எனும் குறும்படத்தை டெவலப் பண்ணி 14 ரீல் படமா எடுத்திருக்காங்க,பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.டிவி ல போட்டா பாக்கலாம், விகடன் 39 ,ரேட்டிங்க் 2 / 5 #naansiriththaal

0 comments: