எம் சசிகுமார் நடித்த டூரிஸ்ட் பேமிலி என்ற தரமான படத்தை இயக்கிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அறிமுக நாயகனாகக்களம் இறஙகி இருக்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் +2 படிக்கும்போது வகுப்புத்தோழியான சக மாணவியை ஒரு தலையாகக்காதலிக்கிறான்.ஆனால் காதலை வெளிப்படுத்தவில்லை.பள்ளிப்படிப்பு முடிந்த பின் இருவரும் பிரிகிறார்கள்.
நாயகி நாயகன் படித்த அதே ஸ்கூலில் நாயகன் 12வது படிக்கும்போது 10 வது படிக்கிறார்.2 வருசம் நாயகனுக்கு ஜூனியர்.நாயகி லேடி ரவுடி.பள்ளியில் டாண் ஆகத்திகழ்பவர்.நாயகியின் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கும் மாணவனை ஒரு தலையாகக்காதலிக்கிறார்.ஆனால் இவரும் காதலை வெளிப்படுத்தவில்லை.பள்ளிப்படிப்பு முடிந்த பின் இவர்களும் பிரிகிறார்கள்.
சில வருடங்கள் கழித்து
நாயகனின் அக்கா நாயகனுக்கு போன் பண்ணி உனக்கு ஒரு பொண்ணு பார்த்து வெச்சிருக்கோம்.நாளை இந்த இடத்தில் இன்ன டைமில் போய்ப்பார் என்கிறார்.
நாயகனும் வேண்டா வெறுப்பாகப்பெண் பார்க்கப்போகிறார்.இருவரும் சந்தித்துப்பேசும்போது இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது தெரியவந்ததும் இருவரது முதல் காதல் முயற்சி பற்றிப்பேச்சு வருகிறது.
நாயகி ஒரு ஐடியா கொடுக்கிறார்.நாம் இருவரும் அவரவர் முன்னாள் பிரியமானவரை ஒரு முறை ஏன் நேரில் சந்திக்கக்கூடாது?இந்த மாதிரி அப்போ நான் லவ் பண்ணேன்,ஆனா வெளிப்படுத்தலை என இப்போது சொல்லலாம் என முடிவு எடுக்கிறார்கள்.
இதற்குப்பின் நிகழும் சுவராஸ்யமான சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக அபிஷன் ஜீவிந்த் பாஸ் மார்க் வாங்கி விட்டார் என்றே சொல்லலாம்.ஆனால் அவர் ஏன் பிரதீப் ரங்கநாதனைக்காப்பி அடிக்கிறார் என்று புரியவில்லை.அவரே தனுசைப்பார்த்துக்காப்பி அடித்தவர் தானே?( இது எப்படி இருக்குன்னா ஈரோடு மகேஷ மதுரை முத்து வைப்பார்த்துக்காப்பி அடித்தால் மதுரை முத்து ஆல்ரெடி பத்திரிக்கைகளில் வெளிவந்த ஜோக்சைக்காப்பி அடித்துத்தன் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் போல் தொகுத்து வழஙகுவதைப்போல்)
நாயகி ஆக அனஸ்வரா ராஜன் கலக்கி விட்டார்.படத்தின் ஜீவனே இவர் நடிப்புத்தான்.கேரளத்துப்பைஙகிளி ஆன இவர் படம் முழுக்க ராஜாங்கம் அல்ல அல்ல ராணியஙகம் நடத்தி இருக்கிறார்.சின்ன சின்ன சிணுங்கல்கள்,டக் டக் என மாறும் முக பாவனைகள் ,தியேட்டரில் இவர் வரும் ஒவ்வொரு சீனிலும் கை தட்டல் மழை தான்.
நாயகனின் பள்ளிப்பருவக்காதலி ஆக வரும் காவ்யா முதல் பாதியில் சும்மா வந்துவிட்டுச்சென்றாலும் பின் பாதியில் கலக்கி விட்டார்.நாயகனின் கிப்டைப்பார்த்து பிரமிப்பது ,அன்றே லவ்வை சொல்லி இருக்கலாமே என ஏங்குவது என முக பாவனைகளில் வாணவேடிக்கை நிகழ்த்தி இருக்கிறார்.
நாயகனின் அக்காவாக ஆர் ஜே ஆனந்தி ,பள்ளி ஆசிரியர் ஆக வரும் சரவணன் இருவரும் குணச்சித்திர நடிப்பை வழஙகி இருக்கிறார்கள்.
பள்ளி நண்பர்கள் ஆக நாயகனுடன் வரும் சச்சின் நாச்சியப்பன்,ஹரீஷ குமார் ஆகியோர் காமெடி ஒன் லைனர்களுக்கு கேரண்டி.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் மூன்று செம ஹிட் ஆகி இருக்கின்றன..பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார்.குறிப்பாக காதலை சொல்லும் தருணம் ,காதல் சோகம் ,கொண்டாட்டக்காதல் என பல தருணங்களில் பிஜி எம் செம.
எடிட்டிஙக் பக்கா.141 நிமிடஙகள்
கதை திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநர் மதன்
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் தன் பள்ளிக்காதலி அனிசாவை சந்திக்கும் காட்சி கவிதை.அந்த சீனில் அனிசாவாக வரும் காவ்யாவின் முக பாவனைகள் அட்டகாசம்
2 படம் பார்க்கும் எல்லோரையும் தன் முதல் காதலனை/காதலியை ஒரு முறை சந்தித்தால் என்ன?என எண்ண வைப்பது போல திரைக்கதை அமைத்தது.
3 நாயகன் ஸ்கூல் மாஸ்டரை அடிப்பதும் பின் தன் தவறை உணர்ந்து பல வருடங்கள் கழித்து மன்னிப்புக்கேட்கும் சீன் டச்சிஙக்
4 மாஸ்டர் ஸ்கூலில் நல்லது செய்யப்போய் தவறாகபுரிந்துகொள்ளப்பட்டு அவமானப்படும் காட்சி உள்ளத்தைத்தொடும் உயிருள்ள காட்சி
செம ஹிட் சாங்க்ஸ்
1 மறந்து போச்சு
2 எதுக்குத்தான் இந்தக்காதல்
3 ஐயோ காதலே
ரசித்த வசனங்கள்
1 முன்னே பின்னே தெரியாத பெண்ணை எப்படி மீட் பண்றது?
டேட்டிங் ஆப் ல எல்லாம் எப்படி பார்த்துக்கறாங்க?
2 எனக்குத்தான் சுகர் ஆகாது.நீங்க எடுத்துக்குஙக
நோ நோ நான் சும்மா சுகரை ஸ்மெல் பண்ணித்தான் பார்த்தேன்
3 என்னைப்பிடிச்சிருக்கா?
வாட்?
என்ன பிடிச்சிருக்கு?
4 நமக்குத்தெரியாத ஒரு விஷயம் நாலு பேர் சொல்றாங்க என்பதற்காக தப்பா நம்பறது தப்பு
5 ஒரு தப்பைப்பார்த்துக்கோபப்படுவது தப்பில்லை
6 சுத்தி இருக்கறவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிக்காம நமக்கு என்ன தோணுதோ அதை செய்யனும்
7. நாங்க பொண்ணுங்க .யாரு எங்களை எப்படிப்பார்க்கறாஙகன்னு நல்லாத்தெரியும்
8 உனக்கு என்ன பிடிக்கும்?பிடிக்காது?எனக்குத்தெரியாது,ஆனா உனக்கு என்ன பிடிக்கும்னு உன் கிட்டேயே கேட்டு அதை நிறைவெறற முயற்சி செய்யறேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி நாயகனிடம் தன் அப்பா புகைப்பழக்கத்தால் தான் குறைந்த வயதில் லங்க்ஸ் கேன்சரால் இறந்தார். என்கிறார்.ஆனால் நாயகன் தம் அடிக்கும்போது அவரைக்கண்டிக்கவே இல்லை.
2 நாயகி நாயகனை விட 2 வருடங்கள் ஜூனியர்.ஆனால் நாயகனை நாயகி ஒருமையில் அழைக்கிறார்,ஆனால் சீனியர் ஆன நாயகன் நாயகியை மரியாதையாக வாங்க ,போங்க என அழைக்கிறார்.( என்னதான் பெண்கள் பொதுவாக யாரையும் மதிக்க மாட்டார்கக் ,ஆனால் ஆண்கள் அப்படி அல்ல ,பெண்களை மரியாதையுடன் நடத்துவார்கள் என்றாலும் லாஜிக் இடிக்குதே?)
3 நாயகி சரக்கடிக்கும் காட்சி தேவை இல்லாதது.மாடர்ன் பெண் எனக்காட்ட வேண்டும் எனில் தம் அடிப்பவராக,தண்ணி அடிப்பவராக நாயகியைக்காட்ட வேண்டும் என இயக்குநர்களுக்கு யார் கற்றுத்தந்தது?
4 நாயகன் ,நாயகி இருவரும் க்ளைமாக்சில் சேர்வார்களா?மாட்டார்களா?என்ற டெம்ப்போவைக்குறைப்பது நாயகன் ,நாயகி இருவரும் மப்பில் இருக்கும்போது உறவு கொண்டு விட்டனர் என்ற காட்சி.கதைக்குத்தேவை இல்லாத காட்சி அது.
5 நாயகனின் பள்ளிக்காதல் சீசனில் தனுஷ் நடித்த அட்டர் பிளாப் படமான 3 படக்காட்சிகள் பாதிப்பு அப்பட்டமாகத்தெரிகிறது.டான்ஸ் ஸ்டெப் உட்பட..
6 பள்ளிப்பருவத்தோழர்கள் கெட்டப் ஒட்டுத்தாடி அப்பட்டமாய்த்தெரிகிறது.
7 நாயகி தன் முதல் காதல் யாருடனோ அவனே ஏற்கத்தயாராக இருந்தும் நாயகன் மீது தான் காதல் என சொல்வதை நம்ப முடியவில்லை.அப்படி ஒன்றும் ஸ்பெஷலாக அவனிடம் எதுவும் இல்லை.தம் தான் அடிக்கிறான்
8 அவள் வருவாளா ரீமிக்ஸ் சாங்க் படத்துடன் ஒட்டவே இல்லை.படு செடைரக்டர்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காதலர்கள்,காதலித்தவர்கள் எல்லோருக்கும்ப்படம் பிடிக்கும்.விகடன் மார்க் யூகம் 45 குமுதம் ரேங்கிங்க் ஓக்கே.ரேட்டிங். 3.5 /5
| With Love | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Madhan |
| Written by | Madhan |
| Produced by |
|
| Starring | |
| Cinematography | Shreyaas Krishna |
| Edited by | Suresh Kumar |
| Music by | Sean Roldan |
Production companies |
|
Release dates |
|
Running time | 140 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |
0 comments:
Post a Comment