Saturday, January 06, 2018

சார்,நமீதாவை அர்ஜெண்ட்டா பாக்கனும்

Audi car வச்சிருக்கவங்கள தான் நான் லவ் பண்ணுவேன்😐

ஈரோடு மாவட்டத்துல மட்டும் 5 பேரு ஆடி கார் வெச்சிருக்காங்க,எல்லாரையும் லவ்விடுவீங்களா?


============


2 இப்போலாம் சம்பாதிக்கிற பணத்துல பாதி விசேஷ மொய், செய்றதுக்கே சரியாய் போயிருது...

ஓஹோ,சம்பாதனைக்கு என்ன பண்றீங்க?
மொய் எழுதற வேலைதான்


============


3 மாமா,உங்க பொண்ணு அடிக்கடி மக்கர் பண்றா

அன்இன்ஸ்டால் பண்ணி மறுபடி இன்ஸ்டால் பண்ணிடுங்க
புரீல
டைவர்ஸ் பண்ணீடுங்க.பயம் வரும்.ரீ மேரேஜ்


==============


4 மிஸ்,உங்க எழுத்து மேல ஈர்ப்பு எனக்கு,மத்தபடி லவ் எல்லாம் கிடையாது

ஓஹோ,ஆண் எழுத்து மேல ஈர்ப்பு வர்லையே"ஏன்?
ஆம்பளைங்க எழுதறதை படிக்கறதில்ல


=============


5 என்னவனின் கண்ணிற்கு நான் மட்டுமே அழகாக தெரிய வேண்டும் இது தப்பா குருவே!

பேராசை.எல்லார் கண்ணுக்கும் சுமார் பிகராதான் தெரியறிங்க


============


6 குருவே!அருமைக்கும் எருமைக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன?

பொண்ணுங்க என்ன எழுதுனாலும் அருமைனு சொல்வாங்க.ஆம்பளைங்க எதை எழுதுனாலும் எருமைம்பாக


=====================


7 எந்த ஆர்க்கெஸ்ட்ரா போனாலும் "பூப்போட்ட தாவணி" கேட்பேன்

அடடா,சென்னை சில்க்ஸ் ல கேட்டிருந்தா கிடைச்சிருக்கும்



==============


8 அன்பே!தினம் ஒரு வரி இங்கு உன்னைப்பற்றி எழுதுகையில் காகிதம் சிரிக்கிறது.

யோவ்,ஊரே சிரிக்குது, காகிதம் சிரிக்கறத பெரிசா பேச வந்துட்ட


===============



9 தலைவரே!நம்ம கட்சி ஆளுங்க 100 பேரை விஜய் மக்கள் இயக்கம்ல ஏன் சேரச்சொல்றீங்க?
அப்போதான் 4 நாள் கழிச்சு அங்க இருந்து இங்க வந்தாங்கனு சொல்லலாம்


=============



10 யாருக்கும் தொந்தரவு இல்லாத
ஒரு வேலை இருக்குதுனா
அது தூங்குறது தான்
கனவுல நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்ணுவம்
அதனால் தூங்குவோம்.


============


11 ரைட்டர் சார்,
தெளிவா இல்லையே உங்க
எழுத்து நடை
யோவ்.டைப் பண்ணது.இதை விட தெளிவா எப்டி வரும்?



==============



12 பசங்கலாம் சீரியல் பாப்பாங்களா....மாட்டாங்ளா

ஆக்சுவலா யாரும் பாக்க மாட்டாங்க.ஆண்ட்டிகளை கரெக்ட் பண்ற க்ரூப் பாக்கும்.எதுனா டிஸ்கஸ் செய்யனுமே



================


13 சார்,நமீதாவை அர்ஜெண்ட்டா பாக்கனும்

எதுக்கு ?
கல்யாண முகூர்த்தத்துக்குதான் வர முடியல,அட்லீஸ்ட்...
யோவ்
இப்பவாவது ஒருக்கா பாக்கலாம்னு


===========================


14 சார் ,கவிஞன் என்பவன் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?

ஒரு பொண்ணை காதலிச்சு தோல்வி அடைஞ்ச சோகத்துல கவிதை எழுதி 4 , 5 பேரை கரெக்ட் பண்றவன்


==============

15 டாக்டர்.புத்திசாலிங்க ,GK உள்ளவங்களுக்கு உடம்புல முடி அதிகமா வளருமாமே?நிஜமா?

அப்டி பாத்தா சத்யராஜை விட கமலுக்கு தானே ஜாஸ்தியா இருக்கனும்?


===============


16
எடிட்டர் சார்.ஒரு நிமிடக்கதை அனுப்பச்சொன்னீங்க
ஆமா
ஒரு நிமிசத்துல டைப்பிடனுமா?ஏன்னா ஒரு நிமிடம்னு டைப்பவே எனக்கு 2 நிமிசம் ஆகிடும்


=============


17 டியர்,உன்னை எண்ணி பாக்கயில் கவிதை கொட்டுது

நல்லா பாரு
அது தேளு.நண்டு னு நினச்சு ஷேக் ஹேண்ட் தந்தியா?


============


18 தலைவரே!உங்க கட்சில விஜய் ரசிகர்கள் இணைஞ்சதா வர்ற செய்தியை நம்ப மாட்டோம்

ஏன் ?
இன்னைக்கு திங்கள் கிழமை.ஸ்கூல் ஒர்க்கிங்டே


=============


19 மிஸ்டர்,உங்களை
எனக்கு சுத்தமா பிடிக்கல
சரி,நான் வேணா போய்ட்டு 10 நாள் கழிச்சு குளிக்காம வரட்டா?அசுத்தமா இருந்தா பிடிக்குமோ என்னமோ?


=============


20 ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் மாதிரி சொல்வாரு அவரு,

அப்டியா?அவர் திருவாசகத்தை தான் சொன்னாரு மேடம்.முதல்ல அதை படிங்க


============

Friday, January 05, 2018

அதிமுகவின் அடுத்த தலைவலி நான்தான்

1  Rkநகரில் தவறுகள் நடக்கவில்லை, அதிமுக ஜெயிப்பது உறுதி - Jkரித்தீஷ்# முன்னுக்குப்பின் முரணா பேசாதீங்க..ஜெயிச்சாலே ஏதோ தப்புனுதான் அர்த்தம்



==========




2 நீலகிரியில் 25கோடி


சாயம் கலந்த
கலப்பட தேயிலை பறிமுதல்
-செய்தி
"டீ" தொலைத்த சொசைட்"டீ"



==========


3 எங்களுக்கு

இரட்டை இலை சின்னம்
கிடைக்க காரணம்
ஆன்மா தான்-ஒபிஎஸ் # ஆன்மா மேல வெச்சிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போச்சு
எம்.ஜி.ஆர் ஜெ



==========



4 நீலகிரியில் 25கோடி

சாயம் கலந்த
கலப்பட தேயிலை பறிமுதல்
-செய்தி
# தேயிலை,இரட்டை இலை கிடைக்கக்கூடாதவங்க கைல கிடைச்சா ஆபத்துதான்



==========



5 வேட்டியை மடிச்சுக் கட்டினா நானும் ரவுடிதான்−H ராஜா.
# இடைத்தேர்தல் முடியும் வரை தொகுதிப்பக்கம் போய்டாதீங்க.ரவுடிங்களை கைது பண்றாங்களாம்



============



6 ஜெயிலுக்கு சென்றவர், ஜெயிலுக்கு போகவேண்டியவர,் பெயிலில் வந்தவர் மத்தியில் வெய்யிலில் அலைந்துஓட்டுகேட்கிறோம் −தமிழிசை சொல் கேளீர்



============



7 குக்கரை காட்டி ஓட்டு கேட்க அனுமதிக்கக்கூடாது-தேர்தல் கமிஷனில் அதிமுக மனு# குக்கர்,அவர் பக்கம்
பிரசர் இவங்க பக்கம்



==========



8 ஸ்டாலின் வேட்டியில் தேநீர் கொட்டியதில் பதறிப் போய் துடைத்து கறையை போக்கிய வைகோ # கறை நல்லதுனு தளபதி பிற்காலத்துல feel பண்ணுவாரு


============


9 ஆடு, மாடு போல் மக்களை விலைக்கு வாங்க முயற்சி - பொன். ராதா வேளை ,அடிமாட்டு விலை எல்லாம் இல்ல.5000 ரூவாயாம் ஒரு ஓட்டுக்கு



============



10 RK நகரில் BJPவென்றால் MLA, மோடியின் நேரடிக்கண்காணிப்பில் இருப்பார்− தமிழிசை#கண் எதிரே மயக்கம்போட்டு விழுந்தாக்கூட வேடிக்கை பார்த்தமாதிரி?


=============



11 காதலால் மட்டுமே புரட்சியை உண்டாக்க முடியும்_பா.ரஞ்சித்
நிர்க்கதில விடுவது புரட்சி அல்ல.சிந்தனை வறட்சி



============


12 தன்மான்முள்ள தமிழன் DMK.ADMK.TTD க்கு ஓட்டு போடமாட்டான் - சீமான் எவ்ளோ ,யார் தருவாங்க?னு பார்க்கும் சன்மானத்தமிழன்தான் அதிகம்



==========


13 ஆர்.கே.நகரில் ஆண்களுக்கு 2,000 ரூபாய், பெண்களுக்கு 500 ரூபாய் என பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. உரிமை கேட்டு புரட்சிப்பெண்கள் போராடலையா


===========


14 ராயபுரத்தில் குக்கர் கடையில் வருமான வரித்துறை சோதனை- செய்தி# ஆர் கே நகர் ல யார் வீட்ல குக்கர் இருந்தாலும் கைதுனு சட்டம் இயற்றலையா?


===========


15 அ.தி.மு.க. மக்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது -CM EPS # மக்குகள் vs மக்கள்


===========



16 பாரீஸில் தங்கியிருக்கும் இருக்கும் வீட்டிற்கு வாடகை தராததால் மல்லிகா ஷெராவத் வெளியேற்றப்பட்டார் # ரஜினி ரசிகையா இருக்குமோ?



===========



17 கடலூரில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக ஆளுநர் மீது புகார் # BJP ன்னா பயங்கர ஜொள்ளு பார்ட்டீ போல


============


18 அதிமுகவின் அடுத்த தலைவி நான்தான், இதை ஏற்கெனவே ஜெ முடிவுசெய்து வைத்திருந்தார்- சசிகலாபுஷ்பா பளார்னு விட்டாரே அப்பவா?அதுக்கப்புறமா?


===============


19 ரூ.500 லஞ்சம் பெற்ற வழக்கில் அதிரடி தீர்ப்பு..!
லஞ்சம் பெற்ற சார் பதிவாளருக்கு 8 ஆண்டு சிறை. # 50,000 கோடி ஊழல் பண்ணா 10,000 ரூபா அபராதமா?


================


20 படுத்து உருண்டாலும் குட்டிகரணம் போட்டாலும் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது: ஸ்டாலின் தலா ரூ 6000 கிடைக்குதாம்,போதும்


=================

500 கோடி ரூபா கிளப்

சார்,கந்து வட்டி வாங்குனாலும் அவர் நல்லவர்னு தோணுது
எப்டி சொல்றீங்க? பேர்லயே அன்பு இருக்கு.சிகப்பா இருக்கறவன் பொண்ணுங்களை ஏமாத்தமாட்டான்


==============


2 இவரு ட்விட்டர் அடிக்ட்னு எப்டி சொல்றே?
துணி துவைக்க கேத்"ரின்" சோப் கிடைக்குமா?னு கேட்கறாரு

===========


3 டியர்,எங்காவேது என்னைக்கூட்டிட்டுப்போன்னா உன் சமீபம் வேணும்னு அர்த்தம்.
ஓஹோ,வீட்லயே இருந்துட்டா? புருசன் உதைப்பான்


=============


4 சார்,எங்க படம் 250 கோடி வசூல் பண்ணிடுச்சு
அப்டியா?GST கட்ன ரசீதை காட்டுங்க பார்ப்போம்


===========


5 சார்
லயன்ஸ் கிளப் ,ஜேசீஸ் கிளப் தெரியும் .அதென்ன 500 கோடி ரூபா கிளப்? சும்மா ஆரம்பிக்கறதுதான்.கேட்டா 500 கோடி க்ளப் ல சேர்ந்தாச்னு சொல்ல


==============


6 கருப்பா இருக்குற பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறது கஷ்டம்
அதெல்லாம் சும்மா.கறுப்புப்பணம் இருந்தா கரடி,காண்டாமிருகமா இருந்தாலும் Ok


==========



7 நீங்க கல்யாணம் பண்ணிக்க போறவங்களுக்கு என்ன இருக்கனும்ன்னு எதிர்பார்ப்பீங்க?
நாலஞ்சு அழகான தங்கச்சி.ஏன்னா மச்சினி இல்லா வாழ்க்கை சாபம்


===========


8 என் துணிய நானே துவைக்கிறேன், சாப்பிட்ட தட்ட நானே கழுவி வைக்கிறேன்.
மிஸ்!என் கையை யூஸ் பண்ணிதான் சாப்பிடறேன்−இத விட்டுட்டிங்க?


==============


9 சார்,நம்ம பட பட்ஜெட் எவ்ளோ?
135 கோடி வசூல் எவ்ளோ? 250 கோடி ஓஹோ,அப்போ"115 கோடி லாபமா? ஹிஹி இல்லைங்க 20 கோடி நட்டம்ங்க


===============


10 நான் சிரிச்சு 4 நாளாகுது;
ஏன் மிஸ்?எதுனா பிரச்சனையா? ச்சே ச்சே,அதெல்லாமில்ல.5 வது நாள் இதையே ஒரு ஸ்டேட்டசா போடலாமில்ல?


===========


11 குருவே!ஒரு லட்சம் வெற்றிலை மாலை சாத்தி அம்மனுக்கு பூஜை பண்ணா மழை வருமாமே நிஜமா?
சிஷ்யா!மழைக்கு ஆதாரமே மரம் செடி கொடிதான்.அதை பறிச்சா எப்டி?


============


12 சார்.புகார் பெட்டில புகார் மனுவ போடனும்,லூஸ் மாதிரி பணத்தை போடறீங்களே?படிக்கத்தெரியாதா?
யோவ்.லஞ்சம் சமர்ப்பி ,நெஞ்சை நிமிர்த்தி பார்முலா


==============


13 பசங்களா!பாட்டி வடை சுட்ட கதையை யாராவது பிசிறு தட்டாம சொல்லுங்க பார்ப்போம்
டீச்சர்,இந்த வடை சுடறது,கதை விடறது அதுக்குனு ஒரு க்ரூப் இருக்கு


=============


14 டியர்,
நான் ஆன்லைன் வந்தா உங்களை தேடுவேன்,நீங்க? நீ தேடுவே னு தெரியும் ,ஆப்லைன்ல இருக்கற மாதிரி செட் பண்ணீட்டு ஆன் லைன்ல இருப்பேன்


================


15 ARM - ஸ்பைடர் ப்ளாப்.மகேஷ்பாபு ரசிகர்கள் எனக்கு சப்போர்ட் பண்ணல
ஹீரோ−டோண்ட் ஒர்ரி,நம்ம படம் அட்டர்பிளாப் ஆனாலும் முட்டு கொடுக்க ஆள் இருக்கு


================


16 தானா சேர்ந்த கூட்டம் டீசர் மெர்சல் டீசர் ரெக்கார்டை முறியடிக்குமா?
கண்டிப்பா முடியாது ஏன்? ஏன்னா சூர்யா ரசிகர்கள் Fake act ஓப்பன் பண்ணலை



========================



17 FBல லைக்ஸ் ஆப்சன புடுங்கிப் போட்டுரணும்
ஏன் மிஸ்?பொண்ணுங்களை லைக் பண்ணினா அவங்கப்பாக்கு பிடிக்கறதில்ல, லைக்கினா பொண்ணுக்கே பிடிக்கறதில்ல


==============


18 தேவி ஸ்ரீகருமாரி அம்மன் கற பக்திப்படத்துல எட்டு ரேப் சீன்.இருக்காம்
கருமாந்தரம் பிடிச்ச படத்தை கருமாரியம்மன்னு போட்டாங்க போல


==============


19 கராத்தே' என்றால் 'வெறும் கை' என்று பொருள்.
சுருக்கமா காங்கிரஸ்?


===============


20 Audi car வச்சிருக்கவங்கள தான் நான் லவ் பண்ணுவேன்😐
மிஸ்,ஆடி கார் வெச்சிருக்கறவங்க ஆல்ரெடி சில பல சொப்பன சுந்தரிகளையும் வெச்சிருப்பான்.okவா?


===============