Saturday, November 11, 2017

அறம் - சினிமா விமர்சனம் #aramm

Image result for aram tamil movie

நாட்ல நடக்கற பரபரப்பான உண்மைச்சம்பவத்தை வெற்றிகரமான திரைப்படமா தருவதில் விற்பன்னர்கள்  ஆர் கே செல்வமணி ., ஏ ஆர் முருகதாஸ் , கார் வண்ணன் , ஆபாவாணன் , அவர்கள் லிஸ்ட்ல இப்போ கோபி நாயினாரும் சேர்ந்துட்டார் , பிரமாதமான கமர்ஷியல் , சோசியல் அவார்னெஸ் டேலண்ட்டட் டைரக்டர்.  எ வார்ம் வெல்கம் சார்


 இந்தப்படத்தோட ட்ரெய்லர் பார்த்தப்ப இது ஒரு கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையைப்பற்றிய படம் , கே பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் மாதிரி இருக்கும், கமர்ஷியலா போகாது என நினைத்தேன், ஆனா கதை வேற , மேக்கிங் ஸ்டைல் அபாரம். ஆல் சென்ட்டர் ஹிட் ஆகும்


ஹீரோயின் ஒரு கலெக்டர் . அவர் மீது ஒரு என்கொயரி . அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததா.   ஃபிளாஸ்பேக்கில் என்ன பிரச்சனை , அவர் எப்படி அதை டீல் பண்றார் என்பதே பரபரப்பான திரைக்கதை


 ஹீரோயினா லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா . எப்படி ரஜினியை கமர்ஷியலுக்காக பல டைரக்டர்கள் யூஸ் பண்ணிக்கிட்டாங்களோ அப்டி நயனை கிளாமரா  பில்லா , வில்லு டைப் படங்கள்ல வேஸ்ட் பண்ணிட்டாங்க். இதுல அவர் காட்டும் கலெக்டர் கெத்து அபாரம்


 அரசியல்வாதி கிட்டே வாக்குவாதம் செய்யும் போது , அதிகாரிகளுக்கு ஆணை இடும்போது , மக்களிடம் கன்வின்ஸ் செய்யும்போது அவர் பாடி லேங்குவேஜ் ஓபிஎஸ், பச்சோந்தி போல் டக் டக் என மாறுவது பிரமாதம் 


பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் நடிப்பு பிரமாதம் . கிராமத்து ஆட்கள் உணர்வை கண் முன் நிறுத்துது.


ஆழ்குழாயில் குழந்தை விழுந்த பின் ஆக்சுவலா திரைக்கதை விழுந்திடும்னு யூகிச்சா அதுக்குப்பின் தான் திரைக்கதை பிரமாதபடுத்துது .

 மீட்புப்பணிகளை , அதில் ஏற்படும் பிரச்சனைகளை  அருமையா எடுத்திருக்காங்க . இந்த மீடியாக்கள் பண்ற அலம்பல்களை அப்பட்டமா காட்டி இருக்காங்க 



Image result for aram tamil movie
நச் டயலாக்ஸ்

உத்யோகம்கறது ஜனங்களுக்கு நல்லது பண்ற கருவியா இருக்கனும்னு நினைக்கறேன் ( நயன் கலெக்டர் கெத்து கெட்டப்)



2 டாக்டர்,தண்ணீர் தாகமே எடுக்காத அளவு சொட்டு மருந்து எதுனா இருந்தா குழந்தைக்கு போட்டு விடுங்க



அதிகாரிங்க எந்த லட்சணத்துல வேலை செய்யறாங்கனு களத்துல இறங்கி உயர் அதிகாரிங்க பாத்தாதான் தெரியும்


தரைல விழுந்த மீன் துள்ளிக்குதிப்பதைப்பார்க்கும் நீர் நிலை மீன் அது உயிரோட இருக்கறதா,இருக்கப்போறதா நினைச்சுக்கும்


மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கனும்.ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக்கூடாது

உயிர்களோட மதிப்பு தெரியாத உயர் அதிகாரிங்க வாழ்ற இந்த நாடு நாசமாத்தான் போகப்போகுது

இந்தியாவில் அலட்சியத்துக்கான விலையை நாம குடுத்துத்தான் ஆகனும்

கிராம மக்கள் உயிருக்கு ஒரு மாதிரி,நகர மக்கள் உயிருக்கு ஒரு மாதிரி னு நீதியும் ,சட்டமும் இருக்கலாமா?

அசாதாரணமான சூழ்நிலைல நீங்க சிக்கினா உங்க வில் பவர் உங்களை காப்பாற்றும்

10 ஆழ்துளைக்கிணற்றில் ஒரு குழந்தை விழுந்துட்டா அதைக்காப்பாத்த எந்த உபகரணமும் நம்ம கிட்ட இல்லை என்பது கசப்பான உண்மை

11 ஆளுங்கட்சி ஆளை அரெஸ்ட் பண்ணினா அரசாங்கத்துக்குத்தான் அவமானம்

12 நிலவுக்கு போய்ட்டு வந்தவரை விட ஆழ்துளைக்கிணறில் சிக்கியவரைக்காப்பாற்ற போகிறவர் முக்கியமானவர்

13 என் வேலை அரசியல்வாதிகளை கன்வின்ஸ் பண்றதில்லை.மக்களுக்கு சர்வீஸ் பண்றது




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


படம் போட்ட 20 நிமிஷத்துலயே இது ஒரு ஹிட் மூவி னு தெரிஞ்சிடுச்சு


கத்தி பட கதை என்னுடையது என உரிமை கொண்டாடினாரே அவர்தான் இப்பட டைரக்டர்.சீன் பை சீன் படம் தெறிக்குது

நயன்தாரா வின் கெத்து நடிப்பு ,பரபரப்பான இசை ,ஒண்டர்புல் ஒளிப்பதிவு,,சமூக அக்கறையுடன் கூடிய நச் வசனங்கள் அடிபொலி


ஆக்சிசன் சிலிண்டர் இருப்பு இல்லை மேட்டர் முன்னிலைப்படுத்தப்படுவதால் பாஜக பிரச்னை பண்ண வாய்ப்பு

பாலம் இயக்கிய கார்வண்ணன் திரைக்கதை உத்தி ,Rk செல்வமணி ,ஏ ஆர் முருகதாசின் வியாபார டெக்னிக்,கே பாலச்சந்தரின் சமூக அக்கறை = கோபிநாயனார்

ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச்சம்பவம்தான் இக்கதை. இடைவேளை.பக்கா


போலீசே கலவரம் ஏற்படுத்தும் சீன்.தில்லு.சென்சார்ல எப்டி விட்டாங்க?

நயன் தாரா கலெக்டர் போஸ்ட்டை ரிசைன் பண்ணிட்டு அரசியல்ல குதிக்க முடிவெடுக்கற மாதிரி க்ளைமாக்ஸ்.கமல் கவனிக்க.2 வகைல யூஸ் பண்ணிக்கலாம்

நல்ல வேளை.அறம் கதையை இயக்குனர் கோபி முருகதாஸ் கிட்டே சொல்லலை.அதையும் ஆட்டையைப்போட்டிருப்பாரு





Image result for director gopi nainar


சபாஷ் டைரக்டர்


1 இந்தப்படத்தின் கதை ,  திரைக்கதை , வசனங்கள் அபாரம். பிஜிஎம் கூட மிரட்டி இருக்கு , ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன் எல்லாம் அடிபொலி


2  நாயகியாக நயன் தாராவை தேர்ந்தெடுத்தது , பிரமாதமான  நடிப்பை திரையில் கொண்டு வந்தது அருமை 


3  பாஜக வை சீண்டிப்பார்க்கும் வசனங்கள் கலக்கல், தமிழிசை அக்கா, ஹெச் ராஜா வுக்கு பிபி எகிறும் , மகிழ்ச்சி

4  டூயட் சீனோ , லூஸ்தனமான காதல் காட்சிகளோ படத்தில் இல்லாதது ஆறுதல்



லாஜிக் மிஸ்டேக்ஸ்   திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ஒரு கலெக்டர் மிலிட்ரி ஆஃபீசர்களுக்கு எல்லாம் ஆர்டர் போட முடியுமா?

2  மீட்புப்பணியில் அந்தக்குழந்தை கயிற்றைப்பிடித்து மேலே வருகையில் கை வலிக்குது என பிடி நழுவ விடுது. கொஞ்ச நேரம் வலது கை , பின் இடது கை என மாற்றி பிடிக்க முடியாதா?

3      94 அடி பள்ளத்தில் விழும் சிறுமிக்கு7 காலில் ஃபிராக்சர் ஆகாதா?


4  சிறுவனை தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் விடுவது எப்படி? நேராகம் இ றக்குவதுதானே சேஃப்டி



சி.பி கமெண்ட் -அறம் − முதல்வன் படத்துக்குப்பின் பரபரப்பான திரைக்கதை.நயன் நடிப்பு கெத்து.விகடன் 46 ,ரேட்டிங் 3.25 / 5.மீடியாக்கள் கொண்டாடப்போகும் படம்


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 46


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 4/5



ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன், ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அட்டகாசம் 

Tuesday, November 07, 2017

பஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இடம் பிடிப்போர்

ஷார்ஜாவுக்கு வேற ஆளை அனுப்பிவிட்டு ஸ்டாலின் இங்கே இருந்திருக்கலாமே-அமைச்சர் வேலுமணி#அப்போ ஆளுங்கட்சி வேலை செய்ய எதிர்க்கட்சி கண்காணிக்கனும்?

==============


2 கமலை சுட்டு கொல்ல வேண்டும் இந்து மகாசபா தலைவர் பேச்சு… கமல் படத்தை சுடறாங்க,அரசியல்ல கமலையே சுடப்பார்க்கறாங்க


==============


3 கமலை இயக்குனர் ஷங்கரால் தான் தமிழக முதல்வராக்க முடியும் -- செல்லூர் ராஜூ

# ஏன்?மத்த டைரக்டர்கள் சிஎம் சப்ஜெக்ட் படமே பண்ண மாட்டாங்களா?


=============


4 2018 ஜனவரி முதல் தங்க நகைகளில் 'ஹால்மார்க்' முத்திரை இடம் பெறுவது கட்டாயம்"# அக்மார்க் சட்டம்


=============


5 மழையால் மது விற்பனை குறையவில்லை: செய்தி #தண்ணில நீந்திட்டே போய் தண்ணி அடிச்சிருப்பாங்களோ?


==============


6 உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா பயணம்: செய்தி # மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவது எப்படி>?னு ஒரு செமினார் க்ளாஸாம்


=============


7 கந்து வட்டி தீக்குளிப்பு தொடர்பாக கார்ட்டூன்.. கார்ட்டூனிஸ்ட் பாலா கைது #இணைய மக்கள் 5% பேருக்கு மட்டுமே தெரிஞ்ச கார்ட்டூன் இனி உலகம் பூரா 


=============


8 கோவை-  பேப்பர் ப்ளேட் ஆக விற்பனையாகும் பாஜக மெம்பர்ஷிப் ஃபார்ம்!... # மக்களுக்கு ஏதோ ஒரு வடிவில் உதவிட்டே இருப்பாங்க போல


===============


9 காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட யாருடைய பினாமி சொத்தையும் விட்டுவைக்க மாட்டோம்-மோடி # அட்லீஸ்ட் ஏழை மக்களின் ரேஷன் கார்டையாவது விட்டு வைக்கவும்

==============


10 தாழ்வான பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியிருக்கிறது:EPS # மேடான பகுதிகளில்  தண்ணீர் தேங்காதது இந்த ஆட்சியின் சாதனைனு சொல்றாரா?


===============


11 மோடியின் சென்னை வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்-  தமிழிசை # தமிழக பாஜக தலைவர் மாறப்போறாராம்


--------------=====



12 ’ராகுல் காந்திக்கு எதுவுமே தெரியவில்லை’: தாக்கும் அருண் ஜெட்லி  # ஆனா நீங்க பண்ற தப்பெல்லாம் சரியா தெரியுதே?கரெக்டா தாக்கறாரே?


===============


13 அன்று கர்மவீரர் செய்ததை, நாளை நம் தர்மவீரர் செய்வார்’ -  பிரேமலதா # நம்ம செயல் தலைவர்தான் எதுவுமே செய்ய முடியலைன்னு ஃபாரீன் போய்ட்டார்


================


14 அரசியலுக்கு வருவேனா என்ற சந்தேகம் இன்னமும் இருக்கிறதா வந்துவிட்டோம்.
 பிள்ளை பிறக்க10 மாதம் ஆகும்-கமல்.# நார்மல் டெலிவரியா?அப்நார்மலா?தெரியல


================


15 இதுவரை ஒதுங்கி இருந்த நான் இனி ஒதுங்கப்போவதில்லை - கமல் # மாவீரன்ல ”ஒதுங்கு ஒதுங்கு” பாட்டு பாடினது ரஜினி , அதை இப்போ யூஸ் பண்றது கமல்


===============

16  அரசியலுக்கு வரும் கமல் முடிவை வரவேற்கிற்கிறேன் -திரு மாவளவன் # இப்படிக்கு பஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இடம் பிடிப்போர் 


================


17 சென்னையில் மழை என்றால் சேலத்தில் குடைபிடிப்பார் முதல்வர் EPS:ஸ்டாலின் #அவர்தேவலை. தமிழ் நாட்டுலதான் இருக்காரு,நாம ஃபாரீன்ல போட் ஓட்றமே?

================


18 2015 வெள்ளத்தின்போது  ஆட்சியாளர்கள்ஸ்டிக்கர் ஒட்டினர்,இது பிச்சையைவிட கேவலமானது - கமல் # அதை அப்பவே ஏன் தில்லா சொல்லலை?


=========================


19 காங்கிரசும் ஊழலும் பிரிக்க முடியாதவை... பிரதமர் மோடி # பாஜக வும் , சர்ச்சை பேச்சுகளும் போலவா?



==============


20 செய்தி: குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 'மின்சார அதிர்ச்சி' காத்திருக்கிறது- ராகுல்.
கரண்ட் பாலிடிக்ஸ் நிலவரம் தெரியாம இருக்காங்க பாஜக காரங்க


============

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலா?

நாட்டு மக்கள் பரபரப்பாக எதைப்பற்றி பேசுகிறார்களோ அதைப்பற்றியே நீயும் பேசு.அப்போதுதான் ஜனங்க"உன்னை கவனிப்பார்கள்


===========




2 அடுத்தவங்க ஆதார் அட்டை"விபரத்தை அவங்க"அனுமதி இல்லாம வெளியிடறது சட்டப்படி தப்பாச்சே?இதுக்கு கட்சிக்காரங்க என்ன பதில் சொல்லி சமாளிப்பாங்க?



==========




3 ஒரு உயிர் தன் உயிரைப்போக்கிக்ககொள்வதை"தடுக்க முயற்சிக்காமல் அதை படம்"பிடிப்பது,வீடியோ எடுப்பது ,பகிர்வது சட்டப்படி குற்றம் ஆக்கப்படனும்




=============




4 SAC பேட்டி க்கு விஜய் ரசிகர்களை விட அஜித் ரசிகர்கள்தான் அதிக ஆர்வத்தோட காத்திருக்காங்க போலயே,எப்டியும் எதுனா உளறுவாறு,வெச்சு செய்யலாம்னா?




================




5 விஜய் ரசிகர் − அஜித் ரசிகை


அஜித் ரசிகர் − விஜய் ரசிகை
எப்போ பாரு சண்டை போட்டுட்டே இருக்காங்களே,தமிழ் சினிமால வர்ற மாதிரி அடுத்த ஸ்டெப் எப்போ



=============


6 குயில்கள் தன்னைத்தானே விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை,ஆனால் குயிலிகள் "நிலா அது வானத்து மேலே"னு பில்டப் கொடுக்கிறார்கள்


===============


7 7 தளபதி

இளைய தளபதி
சின்னத்தளபதி
புரட்சித்தளபதி
லிட்டில் இளைய தளபதி
மீடியம் தளபதி
இன்னும் எத்தன?
காந்தியவாதி தளபதி


===========


8 தானா சேர்ந்த கூட்டம் ஸ்டில்ஸ் ,ப்ரமோ எல்லாம் பார்க்கும்போது அஞ்சான் −2 க்கு 5 செமீ பக்கம் மாதிரி தோணுது


============




9 ஓ.அது மேக நாயகியா? இங்க்லீஷ்ல மெகா நாயகி னு படிச்ட்டேன்




=============




10 to whom it may concern --இப்படிப்பட்ட கடிதத்தினை தமிழில் எப்படி ஆரம்பிப்பது?



எவர் கண்ணுக்கு தட்டுப்பட்டாலும் அவருக்கு இது பொருந்தும்


==============


11 பிளாட் வாடகைக்கு விடுறவங்களோட ஒன்லி ஃபார் ஃபேமிலிங்குறது என்ன உளவியல்?


அவங்க பேமில எந்த பேமானியும் என்ட்ரி கொடுக்கக்கூடாதுனுதான்



=============

12 டியர்,ப்ரியத்தை

எப்படி
உரைக்க..
Love u விலா ?
miss u விலா ?
2ம் வேணாம்,இங்க்லீஷ்ல இருந்து U டர்ன் அடிச்சு தமிழ்ல "நேசிக்கிறேன்" போதும்


===============

13 Say No to Plastics.

Say No to politics.
Both r dangero"us "

===============


14 இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண அவர் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொள்தல்

==============


15 கண் மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் டிவி இயங்கிக்கொண்டிருக்கிறது,முரண்



==============




16 பணக்கார வீட்டு பெற்றோர் ஏன் தன் மகளை ஒரு பணக்கார குடிகாரனுக்கு கட்டி வைக்கறாங்கனு தெரில.ஏழை நல்லவனுக்கு வாய்ப்பு தரலாமே?




===============




17 கமல் நடிச்ச பல படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதி இருக்காரு,ஆனா அதே ட்ரூப்ல இருந்த Sv சேகர் ஏன் ஒரு படத்துக்குக்கூட வசனம் எழுதலைனு தெரில



==============




18 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலா?



================


19 விமர்சனம் , நக்கல், நையாண்டி எல்லாம் தரமானதாக , கண்ணியமாக இருந்தால் ரசிக்கலாம், வரம்பு மீறினால் அனர்த்தம் தான் #கார்ட்டூனிஸ்ட் பாலா


==============


20 ரசிகர்களிடம் நன்கொடை பெற்று கட்சி நடத்துவது அசாத்தியம் என்றாலும் அது சாத்தியம் ஆனாலும்நாளை விமர்சனம் எழும்


=====================

Monday, November 06, 2017

ஒரு"படத்துக்கு ஹீரோ இட்லி மாதிரின்னா ஹீரோயின் சட்னி மாதிரியா?

சார்.சென்னைல மழை வெள்ள அபாயம் ,உங்க ரசிகர் மன்றக்கண்மணிகள் மக்களுக்கு எதாவது உதவி?


அடாத மழையிலும் விடாத வசூல் மழைனு வடை சுடுவாங்க



=============

2 டீச்சர்,எமிஜாக்சனுக்கு E வருமா?ஏ வருமா?


முழுசா கவர் பண்ணி இருந்தா emy ',கவர் பண்ணலைன்னா "A"my



=============

3 ஒரு"படத்துக்கு ஹீரோ இட்லி மாதிரின்னா ஹீரோயின் சட்னி மாதிரியாமே?


அது தெரில,ஆனா டைரக்டர் அட்லி மாதிரி இருந்தா படம் சாம்பார் மாதிரிதான்



==================

4 தலைவரே!மக்கள் குறை கேட்கும் சுற்றுப்பயணத்தை ஏன் ரத்து பண்ணீட்டீங்க?


பயங்கர மழை.முதல்ல நம்மை பாதுகாத்துக்குவோம்,தேர்தல் வரை டைம் இருக்கு



================


5 மிஸ்,கஸ்தூரி மஞ்சள் பூசி டெய்லி குளிச்சா உங்க முகம் பொலிவு பெறும்


டாக்டர்,நடிகை கஸ்தூரி மஞ்சள் பூசி குளிச்சா அவங்க முகம்தானே அழகாகும்?



=============


6 அவனுக்கு மட்டுமே புடிச்சவளா " மொத்தமா" மாறிடனும்


அவருக்கு ஒல்லி தான் பிடிக்கும்னு திடீர்னு பல்டி அடிச்ட்டா ரொம்ப சிரமம் ஆச்சே?



==============


7 சாப்பிட்டியானு கேட்கக்கூட எனக்கு

ஆள் இல்லை .
இங்கே மட்டும்? குளிச்ட்டியா?தூங்கீட்டியா?னு கேட்க தனித்தனி ஆளா வெச்சிருக்கோம்?



==============


8 அப்பவே

என் சம்சாரம் சொல்லிச்சி,
நான் தான் கேட்கலை,
தெரீல,அதான் காது கேட்கலைனு சொன்னேனே?
என்ன சொன்னாங்க?




=============


9 நயன்தாராவோட இந்நாள் காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்குப்பிடிச்ச வாசகம் எது?


"அறம்" செய்ய விரும்பு



==============


10 டாக்டர்,இந்திய தேசிய உணவாக சரியான தேர்வு...எது?இட்லியா? பிரியாணியா?


ஆரோக்ய தேர்வு இட்லி
பாரம்பர்ய தேர்வு பழைய சோறு
பெண்களின் தேர்வு உப்புமா



==============


11 இந்த அனிருத் அஜித் தவிர மத்த எல்லா நடிகர்களுக்கும் ரொம்ப நல்லாவே மியூசிக் போடுறாராமே,ஏன்?


ஏன்னா அவங்க எல்லாம் பாட்டை வெச்சு படத்தை ஓட்றவங்க



=============

12 டாக்டர்,மயிலை வீட்டுல வெச்சு வளர்த்தலாமா?


இனி வளர்றக்கு என்ன இருக்கு?போனி கபூர் ஒத்துக்கறதும் சிரமம்



============


13 சார்,உண்மையான தளபதி யாரு?

1 ஸ்டாலின்
2 நேஹ்ரா
மணி"ரத்ன சுருக்கமா" சொல்லனும்னா ரஜினி தான்
3 விஜய்




==============

14 எனக்குனு ஒருத்தி எந்த ஊர்ல பிறந்திருப்பாளோ தெரில


நீங்க எந்த ஊரு?
ஆதம்பாக்கம்
அப்போ ஏவாள்பாக்கம் ஏரியா ல தேடிப்பாருங்க



==============


15 சார்,பெண்கள் மெனக்கெடுவது ஆண்கள் கவனிக்கவா?சக பெண்கள் பொறாமை கொள்ளவா?


மொத்தத்துல மெனக்"கெடறாங்க"



================


16 தலைவரே! மழை வந்தா தேங்கத்தான் செய்யும்னு சமாளிக்கறாங்க,வெய்யில் ஏன் அப்டி தேங்கறதில்லை?


வெய்யில் (உதய)சூரியன் வழி வந்தது,் எப்போ தேங்கும்?



============

17 சார்,உங்க ரசிகர்களால உங்களுக்கு 84 கோடி நட்டமா?எப்டி?


வாயை வெச்சுட்டு சும்மா இருக்காம 300 கோடி வசூல்னு வடை சுட்டாங்க, GST 28% கட்டனுமே



=============
18 தலைவரே!மக்கள் பணி ஆற்ற களத்துல உங்களைக்காணோமே?

பாரீன் டூர் வந்திருக்கேன்.மழை நின்ன பின் ஆறுதல் சொல்ல வருவேன்


==================


19 சார்,நீங்க மழை வந்தா ஆளுங்கட்சிய கேள்விக்கேட்பீங்களா? எதிர்க்கட்சிய கேள்வி கேட்பீங்களா?

குடை எடுத்துட்டு வந்தியா?னு சம்சாரம்ட்ட கேட்பேன்


=================



20 டாக்டர்,தொண்டை கட்டி இருக்கு,என்ன நிவாரணம்?
துளசி / சுக்கு கசாயம்
துளசி சென்னை ,நான் ஈரோடு டாக்டர்,எப்டி ஒர்க் அவுட் ஆகும்?


=============