Monday, November 13, 2017

Jacket வேற blouse வேறயா.?

More

சுயநலவாதிக்கும் சாமர்த்தியவாதிக்கும் என்ன வித்தியாசம்?
OPS Vs கலைஞர்


============


2 மோடி − கலைஞர் சந்திப்பு −6/11/17

2G தீர்ப்பு 7/11/17
அறம்"ரிலீஸ் 10/11/17
காப்பாற்றப்படுமா?


==============


3 அறம் நயன் கெட்டப்பை அசால்டா தூக்கி சாப்டுடுச்சு பாகமதி அனுஷ்கா கெட்டப்.அடிபொலி FL


=============

சட்டப்படி ரயிலில் பயணிப்பவர் 35 கிலோ வரை ,பஸ்ஸில் 15 கிலோ வரை சார்ஜ் இல்லாமல் லக்கேஜ் கொண்டு செல்லலாம்


=============


5 35+ வயசு ஆகியும் கல்யாணம் ஆகாதவங்க ஆறுதலுக்காக

அனுஷ்கா
ராகுல்காந்தி
விஷால்

த்ரிஷா

நயன் தாரா
இவங்களுக்கும் இன்னும் ஆகலை

==============


6 கமல் தனிக்கட்சி ஆரம்பித்துப்போட்டி இட்டால் விஜய்காந்த் பெற்ற 12% வாக்குகள் பெறவே திணற வேண்டி இருக்கும் என கணிக்கிறேன்


===============


7 கமல் தனிக்கட்சி ஆரம்பித்தால் ,கூட இருப்பவர்கள் உசுப்பேற்றி ரஜினியையும் கட்சி ஆரம்பிக்க வைத்து விடுவார்கள் என யூகிக்கிறேன்


=============

8 கமல்,ரஜினி கட்சி ஆரம்பித்தால் அதிமுக வின் வாக்கு வங்கிதான் பாதிக்கும்.திமுக வின் வெற்றிக்கு அது உதவியாகவும் இருக்கும்


===========


9 என் ஜோக்ஸ் (!) புரியலைனு அங்கலாய்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.இனி ட்விட்டர் 280 என்பதால் 140 ஜோக் + 140 விளக்கம் என தரப்படும்


==============


10 கேரளாவில் ரயில்வே கேண்ட்டீன் டாப் 3

1 எர்ணாக்குளம் (கொச்சின்)
2 திருவனந்தபுரம்
சைவம்.அளவு சாப்பாடு (ஜனதா) ரூ 35
3 கோட்டயம்



==============


11 கேரளா கோட்டயம் ஆர்யபவன் ல மட்டும்தான் ஒயிட் ரைஸ் (பொன்னி) அன்லிமிட்டட் மீல்ஸ் 60 ரூ.மற்ற ஊர்களில் 70 ,90,110,125 ( சைவம்)


==============


12 வாணலியில் சுடுமணலில் வறுக்கப்பட்ட நிலக்கடலையை உள்ளங்கையில் கொட்டி நுணுக்கி சிவப்புத்தோலை அகற்றி சாப்பிடுதல் நலம்


============


13 கேரளா − கோட்டயம் Dt எட்டுமானூர் டூ வைக்கம் சாலையில் தலையோளப்பரம்பு −ஹோட்டல் சங்கம் ல கோதுமை தோசை செம பேமஸ்.ரூ 10 தான். 4 சாப்பிட்டா போதும்

============

14 நிலக்கடலையை வேகவைத்து சாப்பிடாமல் வறுத்து சாப்பிடும்போது பித்தம் தவிர்க்க நாட்டுச்சர்க்கரை /கொப்பத்து வெல்லம் சேர்த்து சாப்பிடனும்


=============


15 தமிழ்நாட்டிலேயே வடலூர் ல தான் தள்ளுவண்டில வேக வைத்த நிலக்கடலை செம டேஸ்ட்.10 ரூ ஒரு பாக்கெட். அடுத்தது சிதம்பரம்


============


16 இந்தியன் ஹீரோ கமல்ஹாசனையே H ராஜா Anti-Indianனு தான் சொல்வாரு

=============


17 இந்த வார ரிலீஸ் தரவரிசை என் கணிப்பு


2 (thriller)
3 (social issue .H2O problem)



==============


18 Jacket வேற blouse வேறயா.?


2ம் 1 தான்.ஆனா ஜாக்கெட் லைப் ஜாக்கெட்டை யும் குறிக்கும்.



==============



19 இப்படை (தோற்கின் எப்படை) வெல்லும்

=========


20 என் ட்வீட்சை யாரும் படிக்கறதில்லையோ?னு ஒரு டவுட்.அதனால இனி ஒவ்வொரு ட்வீட்டையும் 1,75,321 பாலோயர்சுக்கும் தனித்தனியா மென்சன் போடப்போறேன்


=============

நயனார் Vs நயினார்

அரசியலைப் பொறுத்தவரை பாலபாடம் படித்து வருகிறார் கமல் - பொன்.ராதா # பல அரசியல்வாதிங்க அது கூடப்படிக்கலையே?


===========




2 மழைபெய்யும்போதுதான் நீர் தேங்குகிறது, மழைநின்றால்நீர் வடிந்துவிடும் −ஜெயகுமார் # பகலில் தான் வெய்யில் அடிக்கிறது.இரவு வந்தால் நிலா வந்துடும்




==============




3 தமிழக அரசு குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேக அரசு - அமைச்சர் ஜெயக்குமார். # பொய்க்கால் குதிரை எப்டிங்க வேகமா போகும்?




=================



4 என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார். # கட்டடத்துக்குனு படிச்ட்டேன்




============



5 என்னை அடுத்த கட்டத்திற்கு நயன்தாரா அழைத்து செல்வார்: இயக்குனர் கோபி நயினார். # நயனார் Vs நயினார் பேர் பொருத்தம் பிரமாதம்.அறம் சிறக்கட்டும்



=============




6 உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க நிதிகேட்ட ஒரே தலைவர் கமல்தான்: அமைச்சர்ஜெயக்குமார் # அப்போ கமலை தலைவரா ஏத்துக்கிட்டிங்க?




============




7 பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பண நோய் குணப்படுத்தப்பட்டது – அருண்ஜேட்லி # ஆபரேஷன் சக்சஸ் ,பேஷண்ட் அவுட் மொமெண்ட்




==============




8 யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்ஆனால் மக்கள் அதிமுக பக்கம் தான்! - ஜெயக்குமார் வேணா அறிக்கை விடலாம்,ஆனா ஓட்டு போடறது மக்கள்தான்




=============



9 சினிமாவைத் தவிர்த்து கமல்ஹாசனுக்கு அரசியல் ஞானம் கிடையாது;Hராஜா# நாம மட்டும் அரசியல்ல பி ஹெச் டி யா முடிச்சிருக்கோம்?எல்லாம் கத்துக்கறதுதான்




=============




10 மக்களுக்கு புரியும்படி கமல் பேசினால் நன்றாக இருக்கும்!−EVKS # காங் மாதிரி ஊழலில் திளைத்த கட்சிகளை கை கழுவுவோம்கறாரு,புரிஞ்சுதுங்களா?




==============




11 ஒழிக்கப்பட்ட கறுப்புப் பணத்தை குஜராத் தேர்தலில் பார்க்கலாம்: ப.சிதம்பரம் # போலீசால் தேடப்படும் உங்க மகனை எங்கே ,எப்போ பார்க்கலாம்?




==============




12 நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் காஷ்மீரில் கல்வீச்சு குறைந்தது- அருண் ஜெட்லி. # குறையாதது நம்ம கட்சியோட சொல் வீச்சுதான்.அறிக்கைகளா குவியுது




=============




13 தீவிரவாத அமைப்புகளுக்கு செல்லும் நிதி கணிசமாக குறைந்தது . # பேங்க் ட்ரான்சக்சன்ல தான் எல்லாம் நடக்குதுனு நீங்களா நினைச்சா எப்டி?




============



14 அதிமுகவை அழித்துவிட்டால் தமிழகத்தில் வளர்ந்துவிடலாம் என்று பாஜக கனவு −தினகரன் கட்சியை அவங்களுக்கே அளித்து விட்டார்களே




===============



15 நான் 30 வயதில் சிறைக்கு சென்றவன் - தினகரன்



# ரெகுலர் கஸ்டமருக்கு சலுகைகள் எதிர்பார்க்கறார் போல



=============


16 அனைத்து வக்கீல்களின் பள்ளி சான்றுகளை ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு. # அப்படியே இந்த டாக்டருங்க சர்ட்டிஃபிகேட்சையும் செக் பண்ணுங்க, பலர் மாட்டலாம்



==============


17 ஓ.பி.எஸ்-ம் நானும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம்: EPS # அப்போ ஆளுக்கு தலா 100 கோடி கன்பர்ம்?


==================


18 பாரதரத்னா MGR என்பதற்கு பதிலாக பாரதப்பிரதமர் என சொன்ன திண்டுக்கல்சீனிவாசன் பிராயசித்தமா"மோடியை பாரத ரத்னா னு சொல்லிட்டா சரியாகிடும்


===============

19 2023ல் ஆசிய கண்டத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கும் வகையில் முன்னேறி வருகிறது!−செல்லூர்ராஜூ ?ரெய்டுலயா?மழை வெள்ளத்தால் பாதிப்பிலா?


============


20 ஜவுளி மற்றும் ஜவுளி பொருட்களின் மீதான வரி 18% லிருந்து 5 % ஆக குறைப்பு # குஜராத் தேர்தல் வருது பராக் பராக்

================

ஆளவந்தானுக்கு செய்வினை

போருக்கு தயாராகுமாறு சீன ராணுவத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங்கின் உத்தரவு- செய்தி# ரஜினி அங்க்கிள் ,நீங்க எங்கே இருக்கிங்க?

==============


2 தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார் கமல்! - கமிஷனரிடம் புகார் # ஆளவந்தானுக்கு செய்வினை வைக்கப்பார்க்கறாங்க போல


==================


3 இந்து தீவிரவாதம்' என்போர் தேச விரோதிகள்... மன்னிப்பே கிடையாது! - உபி முதல்வர் # மன்னிக்கும் மனப்பான்மை இல்லாதவர் மிதவாதியா?தீவிரவாதியா?

==============


4 அதிமுக, திமுக மக்களை ஏமாற்றிவிட்டது.//விஜயகாந்த்;

ஆமாம,மதிமுக கூடத்தான்் தேமுதிக வை ஏமாற்றி விட்டது.!


================


5 இந்தியாவை புதிய யுகத்துக்கு மோடி கொண்டுசெல்வார்' - முதல்வர் பழனிசாமி # கொண்டு சென்றா சந்தோஷம்.கொன்று சென்றா தோஷம்


==============


6 ஓடும் காரில் கதவை திறந்த படியே நின்று கொண்டு மோடி Bjpதொண்டர்களை பார்த்து கையசைத்தார் மிராக்கிள்.தமிழகத்தில் பாஜக க்கு தொண்டர்களா?


==============


7 2018 பிப்ரவரி வரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சாத்தியமில்லை - தமிழக அரசு
# இரட்டை இலை சின்னம் ஜனவரிலதான் கிடைக்கும் போல


===============


8 மோடியை வரவேற்க
வெளிநாடுசென்ற
ஸ்டாலின் திடீர் வருகை
# 2ஜி தீர்ப்பு நாளை வருது,பராக் பராக்


==============


9 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 924 ஏரிகளில் 212 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின ,கேரளா னு யார் தயவையும் இனி எதிர்பார்க்கத்தேவை இல்லை


==============


10 மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை: மு.க.ஸ்டாலின் # வெளிநாட்டிலிருந்து அறிக்கை விடுவது உங்கள் அபிமான தளபதி


=============


11 "ஆமா, நான் தான் வரைஞ்சேன். இனிமேலும் அப்படித்தான் வரைவேன்"- கார்ட்டூனிஸ்ட் பாலா # பாலாபிஷேகம் இனிமேதான் போல


===============


12 அரசியலுக்காக நற்பணிகள் இல்லை, நற்பணிகளுக்காகத்தான் அரசியல்− கமல்# அதான் அப்பவே ரசிகர் மன்றமா தொடங்காம நற்பணி இயக்கமா தொடங்குனார் போல


===============


13 எனக்கு பின்னால் வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன்−கமல் # இப்டிதான் MGR சொன்னார்.ஆனா ஜெ வந்தார்


=============


14 கட்சி தொடங்குவதற்கு மக்களிடம் நிதி கேட்பதா: கமலுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் # நீதி வழங்கத்தான் அந்த நிதி


================


15 காலணிகளை உதவியாளரை தூக்கி வர வைத்த மத்திய அமைச்சர் ஜூயல் ஓரம்: செய்தி -# இவரை எல்லாம் அரசியலை விட்டு ஓரம் கட்டனும்


==============


16 மோடி வருகையால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லை: செய்தி -# மழை,புயல்,அரசியல்வாதி வருகை போன்ற ஆபத்துகளிலிருந்து ஒதுங்கி இருப்பான் தமிழன்


===================


17 ஜி.எஸ்.டி.யை எதிர்க்கட்சிகள் எதிர்க்கக்கூடாது: நிதிஷ்குமார்- # எதை எல்லாம் எதிர்க்கலாம்?னும் ஒரு லிஸ்ட் தரவும்


===============

18 2020க்குள் சாலை விபத்துகள் பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது−விஜயபாஸ்கர்#முதல் கட்டமா சாலைகளை பாதியா குறைச்சிடுவாங்களோ?


===============



19 வெங்காய விலையை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் -செல்லூர் ராஜூ # சின்ன வெங்காயம் சின்னவிலை,பெ.வெ பெ.வி?


=============


20 கைது நடவடிக்கைகள் என்னை ஒரு போதும் தடுத்து நிறுத்தாது: கார்ட்டூனிஸ்ட் பாலா # இன்னும் பெருசா எதிர்பார்ப்பார் போல.சிறப்பா செஞ்சிடுவாங்க

===============

Saturday, November 11, 2017

அறம் - சினிமா விமர்சனம் #aramm

Image result for aram tamil movie

நாட்ல நடக்கற பரபரப்பான உண்மைச்சம்பவத்தை வெற்றிகரமான திரைப்படமா தருவதில் விற்பன்னர்கள்  ஆர் கே செல்வமணி ., ஏ ஆர் முருகதாஸ் , கார் வண்ணன் , ஆபாவாணன் , அவர்கள் லிஸ்ட்ல இப்போ கோபி நாயினாரும் சேர்ந்துட்டார் , பிரமாதமான கமர்ஷியல் , சோசியல் அவார்னெஸ் டேலண்ட்டட் டைரக்டர்.  எ வார்ம் வெல்கம் சார்


 இந்தப்படத்தோட ட்ரெய்லர் பார்த்தப்ப இது ஒரு கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையைப்பற்றிய படம் , கே பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் மாதிரி இருக்கும், கமர்ஷியலா போகாது என நினைத்தேன், ஆனா கதை வேற , மேக்கிங் ஸ்டைல் அபாரம். ஆல் சென்ட்டர் ஹிட் ஆகும்


ஹீரோயின் ஒரு கலெக்டர் . அவர் மீது ஒரு என்கொயரி . அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததா.   ஃபிளாஸ்பேக்கில் என்ன பிரச்சனை , அவர் எப்படி அதை டீல் பண்றார் என்பதே பரபரப்பான திரைக்கதை


 ஹீரோயினா லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா . எப்படி ரஜினியை கமர்ஷியலுக்காக பல டைரக்டர்கள் யூஸ் பண்ணிக்கிட்டாங்களோ அப்டி நயனை கிளாமரா  பில்லா , வில்லு டைப் படங்கள்ல வேஸ்ட் பண்ணிட்டாங்க். இதுல அவர் காட்டும் கலெக்டர் கெத்து அபாரம்


 அரசியல்வாதி கிட்டே வாக்குவாதம் செய்யும் போது , அதிகாரிகளுக்கு ஆணை இடும்போது , மக்களிடம் கன்வின்ஸ் செய்யும்போது அவர் பாடி லேங்குவேஜ் ஓபிஎஸ், பச்சோந்தி போல் டக் டக் என மாறுவது பிரமாதம் 


பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் நடிப்பு பிரமாதம் . கிராமத்து ஆட்கள் உணர்வை கண் முன் நிறுத்துது.


ஆழ்குழாயில் குழந்தை விழுந்த பின் ஆக்சுவலா திரைக்கதை விழுந்திடும்னு யூகிச்சா அதுக்குப்பின் தான் திரைக்கதை பிரமாதபடுத்துது .

 மீட்புப்பணிகளை , அதில் ஏற்படும் பிரச்சனைகளை  அருமையா எடுத்திருக்காங்க . இந்த மீடியாக்கள் பண்ற அலம்பல்களை அப்பட்டமா காட்டி இருக்காங்க 



Image result for aram tamil movie
நச் டயலாக்ஸ்

உத்யோகம்கறது ஜனங்களுக்கு நல்லது பண்ற கருவியா இருக்கனும்னு நினைக்கறேன் ( நயன் கலெக்டர் கெத்து கெட்டப்)



2 டாக்டர்,தண்ணீர் தாகமே எடுக்காத அளவு சொட்டு மருந்து எதுனா இருந்தா குழந்தைக்கு போட்டு விடுங்க



அதிகாரிங்க எந்த லட்சணத்துல வேலை செய்யறாங்கனு களத்துல இறங்கி உயர் அதிகாரிங்க பாத்தாதான் தெரியும்


தரைல விழுந்த மீன் துள்ளிக்குதிப்பதைப்பார்க்கும் நீர் நிலை மீன் அது உயிரோட இருக்கறதா,இருக்கப்போறதா நினைச்சுக்கும்


மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கனும்.ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக்கூடாது

உயிர்களோட மதிப்பு தெரியாத உயர் அதிகாரிங்க வாழ்ற இந்த நாடு நாசமாத்தான் போகப்போகுது

இந்தியாவில் அலட்சியத்துக்கான விலையை நாம குடுத்துத்தான் ஆகனும்

கிராம மக்கள் உயிருக்கு ஒரு மாதிரி,நகர மக்கள் உயிருக்கு ஒரு மாதிரி னு நீதியும் ,சட்டமும் இருக்கலாமா?

அசாதாரணமான சூழ்நிலைல நீங்க சிக்கினா உங்க வில் பவர் உங்களை காப்பாற்றும்

10 ஆழ்துளைக்கிணற்றில் ஒரு குழந்தை விழுந்துட்டா அதைக்காப்பாத்த எந்த உபகரணமும் நம்ம கிட்ட இல்லை என்பது கசப்பான உண்மை

11 ஆளுங்கட்சி ஆளை அரெஸ்ட் பண்ணினா அரசாங்கத்துக்குத்தான் அவமானம்

12 நிலவுக்கு போய்ட்டு வந்தவரை விட ஆழ்துளைக்கிணறில் சிக்கியவரைக்காப்பாற்ற போகிறவர் முக்கியமானவர்

13 என் வேலை அரசியல்வாதிகளை கன்வின்ஸ் பண்றதில்லை.மக்களுக்கு சர்வீஸ் பண்றது




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


படம் போட்ட 20 நிமிஷத்துலயே இது ஒரு ஹிட் மூவி னு தெரிஞ்சிடுச்சு


கத்தி பட கதை என்னுடையது என உரிமை கொண்டாடினாரே அவர்தான் இப்பட டைரக்டர்.சீன் பை சீன் படம் தெறிக்குது

நயன்தாரா வின் கெத்து நடிப்பு ,பரபரப்பான இசை ,ஒண்டர்புல் ஒளிப்பதிவு,,சமூக அக்கறையுடன் கூடிய நச் வசனங்கள் அடிபொலி


ஆக்சிசன் சிலிண்டர் இருப்பு இல்லை மேட்டர் முன்னிலைப்படுத்தப்படுவதால் பாஜக பிரச்னை பண்ண வாய்ப்பு

பாலம் இயக்கிய கார்வண்ணன் திரைக்கதை உத்தி ,Rk செல்வமணி ,ஏ ஆர் முருகதாசின் வியாபார டெக்னிக்,கே பாலச்சந்தரின் சமூக அக்கறை = கோபிநாயனார்

ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச்சம்பவம்தான் இக்கதை. இடைவேளை.பக்கா


போலீசே கலவரம் ஏற்படுத்தும் சீன்.தில்லு.சென்சார்ல எப்டி விட்டாங்க?

நயன் தாரா கலெக்டர் போஸ்ட்டை ரிசைன் பண்ணிட்டு அரசியல்ல குதிக்க முடிவெடுக்கற மாதிரி க்ளைமாக்ஸ்.கமல் கவனிக்க.2 வகைல யூஸ் பண்ணிக்கலாம்

நல்ல வேளை.அறம் கதையை இயக்குனர் கோபி முருகதாஸ் கிட்டே சொல்லலை.அதையும் ஆட்டையைப்போட்டிருப்பாரு





Image result for director gopi nainar


சபாஷ் டைரக்டர்


1 இந்தப்படத்தின் கதை ,  திரைக்கதை , வசனங்கள் அபாரம். பிஜிஎம் கூட மிரட்டி இருக்கு , ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன் எல்லாம் அடிபொலி


2  நாயகியாக நயன் தாராவை தேர்ந்தெடுத்தது , பிரமாதமான  நடிப்பை திரையில் கொண்டு வந்தது அருமை 


3  பாஜக வை சீண்டிப்பார்க்கும் வசனங்கள் கலக்கல், தமிழிசை அக்கா, ஹெச் ராஜா வுக்கு பிபி எகிறும் , மகிழ்ச்சி

4  டூயட் சீனோ , லூஸ்தனமான காதல் காட்சிகளோ படத்தில் இல்லாதது ஆறுதல்



லாஜிக் மிஸ்டேக்ஸ்   திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ஒரு கலெக்டர் மிலிட்ரி ஆஃபீசர்களுக்கு எல்லாம் ஆர்டர் போட முடியுமா?

2  மீட்புப்பணியில் அந்தக்குழந்தை கயிற்றைப்பிடித்து மேலே வருகையில் கை வலிக்குது என பிடி நழுவ விடுது. கொஞ்ச நேரம் வலது கை , பின் இடது கை என மாற்றி பிடிக்க முடியாதா?

3      94 அடி பள்ளத்தில் விழும் சிறுமிக்கு7 காலில் ஃபிராக்சர் ஆகாதா?


4  சிறுவனை தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் விடுவது எப்படி? நேராகம் இ றக்குவதுதானே சேஃப்டி



சி.பி கமெண்ட் -அறம் − முதல்வன் படத்துக்குப்பின் பரபரப்பான திரைக்கதை.நயன் நடிப்பு கெத்து.விகடன் 46 ,ரேட்டிங் 3.25 / 5.மீடியாக்கள் கொண்டாடப்போகும் படம்


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 46


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 4/5



ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன், ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அட்டகாசம் 

Tuesday, November 07, 2017

பஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இடம் பிடிப்போர்

ஷார்ஜாவுக்கு வேற ஆளை அனுப்பிவிட்டு ஸ்டாலின் இங்கே இருந்திருக்கலாமே-அமைச்சர் வேலுமணி#அப்போ ஆளுங்கட்சி வேலை செய்ய எதிர்க்கட்சி கண்காணிக்கனும்?

==============


2 கமலை சுட்டு கொல்ல வேண்டும் இந்து மகாசபா தலைவர் பேச்சு… கமல் படத்தை சுடறாங்க,அரசியல்ல கமலையே சுடப்பார்க்கறாங்க


==============


3 கமலை இயக்குனர் ஷங்கரால் தான் தமிழக முதல்வராக்க முடியும் -- செல்லூர் ராஜூ

# ஏன்?மத்த டைரக்டர்கள் சிஎம் சப்ஜெக்ட் படமே பண்ண மாட்டாங்களா?


=============


4 2018 ஜனவரி முதல் தங்க நகைகளில் 'ஹால்மார்க்' முத்திரை இடம் பெறுவது கட்டாயம்"# அக்மார்க் சட்டம்


=============


5 மழையால் மது விற்பனை குறையவில்லை: செய்தி #தண்ணில நீந்திட்டே போய் தண்ணி அடிச்சிருப்பாங்களோ?


==============


6 உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியா பயணம்: செய்தி # மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவது எப்படி>?னு ஒரு செமினார் க்ளாஸாம்


=============


7 கந்து வட்டி தீக்குளிப்பு தொடர்பாக கார்ட்டூன்.. கார்ட்டூனிஸ்ட் பாலா கைது #இணைய மக்கள் 5% பேருக்கு மட்டுமே தெரிஞ்ச கார்ட்டூன் இனி உலகம் பூரா 


=============


8 கோவை-  பேப்பர் ப்ளேட் ஆக விற்பனையாகும் பாஜக மெம்பர்ஷிப் ஃபார்ம்!... # மக்களுக்கு ஏதோ ஒரு வடிவில் உதவிட்டே இருப்பாங்க போல


===============


9 காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட யாருடைய பினாமி சொத்தையும் விட்டுவைக்க மாட்டோம்-மோடி # அட்லீஸ்ட் ஏழை மக்களின் ரேஷன் கார்டையாவது விட்டு வைக்கவும்

==============


10 தாழ்வான பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கியிருக்கிறது:EPS # மேடான பகுதிகளில்  தண்ணீர் தேங்காதது இந்த ஆட்சியின் சாதனைனு சொல்றாரா?


===============


11 மோடியின் சென்னை வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்-  தமிழிசை # தமிழக பாஜக தலைவர் மாறப்போறாராம்


--------------=====



12 ’ராகுல் காந்திக்கு எதுவுமே தெரியவில்லை’: தாக்கும் அருண் ஜெட்லி  # ஆனா நீங்க பண்ற தப்பெல்லாம் சரியா தெரியுதே?கரெக்டா தாக்கறாரே?


===============


13 அன்று கர்மவீரர் செய்ததை, நாளை நம் தர்மவீரர் செய்வார்’ -  பிரேமலதா # நம்ம செயல் தலைவர்தான் எதுவுமே செய்ய முடியலைன்னு ஃபாரீன் போய்ட்டார்


================


14 அரசியலுக்கு வருவேனா என்ற சந்தேகம் இன்னமும் இருக்கிறதா வந்துவிட்டோம்.
 பிள்ளை பிறக்க10 மாதம் ஆகும்-கமல்.# நார்மல் டெலிவரியா?அப்நார்மலா?தெரியல


================


15 இதுவரை ஒதுங்கி இருந்த நான் இனி ஒதுங்கப்போவதில்லை - கமல் # மாவீரன்ல ”ஒதுங்கு ஒதுங்கு” பாட்டு பாடினது ரஜினி , அதை இப்போ யூஸ் பண்றது கமல்


===============

16  அரசியலுக்கு வரும் கமல் முடிவை வரவேற்கிற்கிறேன் -திரு மாவளவன் # இப்படிக்கு பஸ்ஸ்டேண்டில் எந்த பஸ் வந்தாலும் துண்டைப்போட்டு இடம் பிடிப்போர் 


================


17 சென்னையில் மழை என்றால் சேலத்தில் குடைபிடிப்பார் முதல்வர் EPS:ஸ்டாலின் #அவர்தேவலை. தமிழ் நாட்டுலதான் இருக்காரு,நாம ஃபாரீன்ல போட் ஓட்றமே?

================


18 2015 வெள்ளத்தின்போது  ஆட்சியாளர்கள்ஸ்டிக்கர் ஒட்டினர்,இது பிச்சையைவிட கேவலமானது - கமல் # அதை அப்பவே ஏன் தில்லா சொல்லலை?


=========================


19 காங்கிரசும் ஊழலும் பிரிக்க முடியாதவை... பிரதமர் மோடி # பாஜக வும் , சர்ச்சை பேச்சுகளும் போலவா?



==============


20 செய்தி: குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு 'மின்சார அதிர்ச்சி' காத்திருக்கிறது- ராகுல்.
கரண்ட் பாலிடிக்ஸ் நிலவரம் தெரியாம இருக்காங்க பாஜக காரங்க


============