Monday, October 11, 2010

தலைவா! இதுதான் எங்க தலையெழுத்தா? (ஜோக்ஸ்)




1.எனக்கு நாலு முறை மாமன்கள் இருக்காங்கடி. நாலு பேர்ல யார் பெரிய
பணக்காரரோ அவரை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

ஓஹோ...காமன் வெல்த் மாதிரி  மாமன் வெல்த் போட்டியா?... நடத்து நடத்து...



2.. காமன் வெல்த் போட்டி பற்றி கருத்து கூறுங்க-னு தலைவர்கிட்ட
கேட்டது தப்பா போச்சு.

ஏன்?

காமன் என்பவர் மன்மதன். அவரிடம் பெரிய அளவில் செல்வம் இருப்பது
மாதிரி தெரியலை-னு பேசி சொதப்பிட்டார்.



3.     அவர் போலி ஜோசியர்-னு எப்படி சொல்றே?

   கம்ப்யூட்டர் டிப்பார்ட்மெண்ட்ல ஹார்டு வேர்-ல ஒர்க் பண்ற மாப்ளைன்னா
  ஹார்டா  (HARD)  இருப்பாரு. சாஃப்ட் வேர்-ல ஒர்க் பண்ற ஆள்-னா     சாஃப்டா        (SOFT)   இருப்பாரு-னுசொல்றாரே?




4.   தலைவர் தன்னோட வீட்டை தனுஷ்கோடிக்கு மாத்திடாரா, ஏன்?

      கோடியில் புரள்வர்-னு பேரெடுக்கவாம்.




5 . இந்த லைப்ரரில டெரரிஸ்ட்ஸ் இருக்காங்கனு எப்படி சொல்றே?

சைலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதுன இடத்துல வயலன்ஸ் ப்ளீஸ்-னு எழுதி இருக்கே?




6. . நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை அமைதிப் பூங்கா ஆக்குவோம்-னு
தலைவர் சொறாரே?

ஆமா, ஊருக்கு நூறு லைப்ரரி திறப்பாராம்.







7. . நாட்டுல ஜனநாயகம் செத்துடுச்சு-னு எப்படி தலைவரே சொல்றீங்க?

ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?



8   லைப்ரரில டெட்டனேட்டர் வெச்சுட்டாங்களாமே?

ஆமா. கெட்ட மேட்டர்தான்.



9. ’ரம்’ லத்தை பிரபுதேவா ஏன் கண்டுக்கறதே இல்லை?

’கிக்’ குறைஞ்சிடுச்சாம்.

 


10. ஃபிரண்டு-னு கூட பார்க்காம ஏன் அவனை கொலை செஞ்சே?

பார்க்காம கொலை பண்ணலையே? அவன்தானா?-னு நல்லா பார்த்துத்தான்
கொன்னேன்.



11. . தலைவரே! ஊழலின் ஊற்றுக் கண்-அப்டினு உங்களை எல்லாரும்
சொல்றாங்களே?

பாராட்டுக்கு நன்றி! இந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா ரூ.500
அன்பளிப்பா தரனும்.



12. . கிரிக்கெட் சூதாட்டம் பற்றி என்ன நினைக்கறீங்க தலைவரே!

கிரிக்கெட் ஸ்டேடியத்துல கிரிக்கெட்தான் ஆடனும், சீட்டு ஆடக்கூடாது. தப்பு.


டிஸ்கி 1 - முத ஸ்டில் கங்கனாரனாவத்(இவங்களைப்பாக்கனும்னுதான் கங்கணம் கட்டீட்டு நிறைய பேரு தாம்தூம் படம் பாத்தாங்க.ஒரு விழ்ழாவுல எடுத்த ஸ்டில்லாம் ,தலை சீவ மறந்துட்டாங்களாம்.ஏதோ திறப்[பு விழாவுக்கு வந்ததால மேட்ச்சுக்கு மேட்சா திறந்த மேனியா வந்துட்டாங்க.


டிஸ்கி 2 - ஜோக் 7 இல்  ;’ஒரு பய எனக்கு ஓட்டு போட மாட்டேங்கறானே?
என்ற வரி தற்செயலாக அமைந்தது,அதற்கும் எனக்கு ஓட்டு போடாதவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சினிமாவுக்குப்போகாத சித்தாளு

அட!



1. டைரக்டர் பிளட் பேங்க்ல உட்கார்ந்து ஸ்டோரி டிஸ்கஷன் பண்றாரா? ஏன்?

ரத்த சரித்திரம் படம் ஆச்சே?


2. ஹிஸ்டரின்னாலே தலைவருக்கு அலர்ஜி...

அதுக்காக? ரத்த சரித்திரம் படத்தோட ப்ரீவ்யூ ஷோக்கு கூப்பிட்டா
“அங்கே ஏதாவது சரித்திரம் சம்பந்தப்பட்ட கேள்வி கேப்பாங்களோ?”-னு
பயப்படறதா?



3. தலைவரே! மின்னணு வாக்குப் பதிவில் பல குளறுபடிகள் நடக்கறதால
பழையபடி வாக்குச்சீட்டு முறையை வரப் போவுதாமே?

முட்டாள் பசங்க... அதுல மட்டும் நம்மால குளறுபடி பண்ணமுடியாதா?


4. தலைவர் ஃபாரின் ட்ரிப் அடிச்சுட்டு வந்திருக்காரே, எதுக்கு?

ஓட்டுப்பதிவில் நவீன முறையில் குளறுபடி பண்ணுவது எப்படி?-னு
தெரிஞ்சுட்டு வந்துட்டாராம்.


5. தலைவர் சரியான கபல  புத்திக்காரரா இருக்கார்னு எப்படி சொல்றே?

ஆளுங்கட்சியின் கைப்பாவையா இருக்காதீங்க-னு சொன்னதுக்கு...
பாவையா? எங்கே? எங்கே?-னு ஆலாய் பறக்கறாரே?


6. தலைவர் சட்டசபைக் கூட்டத்தொடர்ல உட்காராம தனியா போய்

நிக்கறாரே?

தனித்து நிற்போம் என்பதே அவர் தாரக மந்திரம்.
  



7. தனிக்குடித்தனமே நல்ல இல்வாழ்க்கையின் தாரக மந்திரம் அப்டி-னு
தலைவர் சொல்றாரே?

தாரக மந்திரமா? தார மந்திரமா?



8. தலைவரோட எல்லா மனைவிகளும் சேலம் மாவட்டத்தில் குடி
இருக்காங்களே, ஏன்?

‘தார மங்களம்’னா தாரங்கள் இருக்கற ஊர்னு தலைவர் நினச்சுட்டாராம்.



9. எதற்கும் நாம தயாரா இருக்க வேண்டும்-னு தலைவர் அறிக்கை
விட்டிருக்காரே?

மின்னணு வாக்குப் பதிவு, வாக்குச்சீட்டு முறை எது அமலுக்கு வந்தாலும்
கள்ள ஓட்டுப் போட ரெடியா இருக்கனுமாம்.



10. தேர்தலில் சக்கர வியூகம் அமைத்துப் பாடுபட வேணும்னு தலைவர்
சொல்றாரே?

நம்ம கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் யாரும் கள்ள ஓட்டு போட்டுடாம
சக்கர வியூகம் அமைக்கனுமாம்.





11. ரஜினி ரசிகர்கள் எந்திரன் படத்துக்காக நேர்த்திக்கடனா மொட்டை
போட்டுட்டாங்களாமே?

அடடா... ரூ.50 மதிப்புள்ள டிக்கெட்டை ரூ.300-க்கு வித்து சன் பிச்சர்ஸ்
அடிச்ச மொட்டை பத்தலையா?



12. மாப்ளை ‘எந்திரனா’ இருக்காரா?

அதாவது மெக்கானிக் மாப்ளை.


டிஸ்கி 1 - தீபிகா படுகோன் படத்தை யாரும்  ரைட் சைடுல தலையை சாய்ச்சுப்பாக்க வேண்டாம்,அவ்வளவுதான் தெரியுது.(தீபிகா படு கோன் க்கு எதிர்சொல் தீபிகா படுக்காதே கோன்?)

டிஸ்கி 2 -சிக்குபுக்கு பட ஸ்ரேயா ஸ்டில்லில் இடமிருந்து வலமாக இருக்கும் பெண் ஸ்ரேயாவை விட வளமாக இருப்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.(வலமாக,வளமாக நானும் கவிஞன் ஆகிடுவேன் போல இருக்கே?)

Sunday, October 10, 2010

ஏடாகூட எஸ் எம் எஸ் ஜோக்ஸ் 18 + ,36+,54+

1


1. ஊர்ல பத்து ,பதினஞ்சு ஃபிகருங்களை கரெக்ட் பண்ணுனவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்.ஒரே ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணிட்டு நான் படற அவஸ்தை இருக்கே,அய்யய்யோ,,.. -சுவாமி நித்யானந்தா (நன்றி -நண்பேண்டா)


2.காதலன் - டியர்,சினிமாக்கு போலாமா?

காதலி - ம்ஹூம்,நீ  தியேட்டர்ல என்னை இருட்ல கிஸ் பண்ணுவே.


காதலன் - ம்ஹூம்,பண்ணமாட்டேன்.

காதலி - என் இடுப்பை கிள்ளுவே.

காதலன் - ம்ஹூம்,அப்ப்டி எல்லாம் பண்ணமாட்டேன்.

காதலி - வரம்பு மீறி நடந்துக்குவேன்.

காதலன் - பிராமிஸ்ஸா அப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.

காதலி - அப்புறம் என்ன இதுக்கோசரம் உன் கூட சினிமாக்கு வரனும்?


3. உங்கள் சன் டிவியில் புத்தம்புதிய சூப்பர் ஹிட்  ஹாலிவுட் படங்கள் தமிழில்

1,ஆத்தா திரும்பி வர்றா (THE MUMMY RETURNS)

2.எட்டு கால் ஏழுமலை ( THE SPIDER MAN)

3.இது வேலைக்கு ஆகாது (THE MISSION IMPOOSSIBLE)

4. கருவாப்பசங்க .(MEN IN BLOCK)

5.ஓட்டையாண்டி (THE HOLLOW MAN)

6.இன்னொரு நாள் செத்துப்போ (DIE ANOTHER DAY)

7. மாமா கதை (THE POLICE STORY).


4 .  பாய்ஸ்னா யாரு?

நரகத்துக்குப்போனாக்கூட “மச்சி,எமனோட ஃபிகரைப்பார்த்தியா?செம கட்டைடா”அப்படிங்கறவங்கதான் .


5.நேத்து நைட் ஒரு பெண்ணை   ரேப்பிலிருந்து   காப்பாத்திட்டேன்.

எப்படிடா?

எல்லாம் ஒரு சுய கட்டுப்பாடுதான் (செல்ஃப் கண்ட்ரோல்)







6.உலகின் மிக மோசமான லீவ் லெட்டர்.

உயர்திரு உயர் அதிகாரி அவர்களே,

என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ,என்னால நாளைக்கு ஆஃபீஸ் வர முடியாது.

இப்படிக்கு ,

தங்கள் கீழ்ப்படிந்துள்ள

அடங்காப்பிடாரி ஆறுமுகம்.


7. நாளைக்கு எனக்கு ரெஜிஸ்டர் மேரேஜ்.எஸ் எம் எஸ் மூலமா கூப்பிடறதுக்கு சாரி,நோ டைம்,திடீர்னு செய்ய வேண்டியதா போச்சு,நாளைக்கு காலைல ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு வந்துடு.ஒரு முக்கியமான விஷயம்,வரும்போது நல்ல ஃபிகரா கூட்டீட்டு வா,அவளைத்தான் மேரேஜ் பண்ணனும்.


8.ஆங்கிலேயனுக்கும் ,இந்தியனுக்கும் ஆர்கியூமெண்ட் நடக்குது.

நாங்க உங்க தாய் நாட்டை 200 வருஷமாநாசம் செஞ்சோம்.

ஹய்யோ,ஹய்யோ,உன்னை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு,நாங்கதான் உன் தாய் மொழியை (ஆங்கிலம்)தினம் தினம் கொன்னுட்டு இருக்கமே?


9.இந்திய ர்கள் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க ஆசைப்பட மாட்டாங்க.

இந்திய ர்கள் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்க்கு போக ஆசைப்பட மாட்டாங்க.




இந்திய ர்கள் கவர்மெண்ட்பஸ்ல போக ஆசைப்படமாட்டாங்க,ஆனா

எல்லா இந்தியர்களும் கவர்மெண்ட் வேலை மட்டும் வேனும்னு ஆசைப்படுவாங்க.

10. பொண்ணுங்க மட்டும் புளூஃபில்மை கடைசி வரை பார்பாங்க,ஏன் தெரியுமா?

கடைசில அந்தாளு அந்தப்பெண்ணை கல்யாணம் பண்ணிக்குவானானு பாக்க.


 டிஸ்கி 1 - ஜோக் நல்லாருந்தா அது என் சொந்த ஜோக் என கொள்க,கண்டனத்துக்குரிய ஜோக் என்றால் அது எஸ் எம் எஸ் சில் எனக்கு வந்தது என பொருள் கொள்க.முதல் ஸ்டில் பாணாகாத்தாடி புகழ் சமந்தா (யாரும் எழுத்துப்பிழையாக சமஞ்சா என படிக்கவேணாம்)


டிஸ்கி 2 -  2 வது ஸ்டில் பாலிவுட்டின் ஏஞ்ஜலினா ஜூலி என வர்ணிக்கப்படும் மல்லிகாஷெராவத்  (    மஞ்ச மாக்கான்னு என்னை யாரும் திட்டக்கூடாது.)

Saturday, October 09, 2010

சீன் பட ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை 18 +


 
அஜால் குஜால் படங்களை அடிக்கடி பார்க்கும் ரசிகர்களே,சீன் படம் பார்க்கும் சிங்கக்குட்டிகளே,அட்டு ஃபிகரா இருந்தாலும் பரவால்ல,ஒரு பிட்டு படமா இருந்தா சரி என தியேட்டருக்கு படை எடுக்கும் பயில்வான்களே!(இந்த இடத்தில் பயில்வான் எனில் குஸ்தி பயில்வான் அல்ல,கற்றுக்கொள்ளும் பயில்வான்)அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை.


இப்போது எந்திரன் படம் சன் டிவியால் ரிலீஸ் செய்யப்பட்டு ஓடிக்கொண்டிருப்பதால்  மறைமுகமாக தியேட்டர்களுக்கும் ,வினியோகஸ்தர்களுக்கும் வாய்மொழி உத்தரவாக 15 நாட்களுக்கு எந்த புதுத்தமிழ்ப்படமும் ரிலீஸ் செய்யக்கூடாது என சர்க்குலர் போயுள்ளதாம்.அதனால் அந்தந்த ஊரில் எந்திரன் போட்டது போக மிச்சம் மீதி உள்ள தியேட்டர்களில் சீன் படம்தான் போடுவதாக தகவல்.



அதில் இப்போது கமலி என்ற படம் ரிலீஸ் ஆகி சென்னையில் ஓடிக்கொண்டிருக்கிறது,அது ஏற்கனவே பல வருடங்களுக்கு முன் ரிலீஸ் ஆன அந்தரங்கம் எனும் பழைய படம்தானாம்.இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவலை எனது சென்னை நண்பர் ஃபோன் போட்டு சொன்னார்.யாம் பெற்ற துன்பம் பெறக்கூடாது இந்த வையகம் என்ற அவரது நல்ல எண்ணத்தைப்பாராட்டி அவரது ஆத்மா(இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்)சாந்தி அல்லதுசார்மிளி அல்லது மோஹனா  யாரையாவது அடையும் வகையில் இந்த இடுகையை வெளியிடுகிறேன்.

அதே போல் டைட்டிலை மாற்றி பழைய படங்கள் தூசு தட்டப்பட்டு வரலாம்,எனவே எச்சரிக்கையோடு இருக்கவும்.இப்போது நகரில் ஓடும் சீன் இல்லாத சீன் படங்கள்

1.துரோகம் நடந்தது என்ன? ((சுத்தமான யு படம்,போஸ்டர் சூப்பரா இருக்கும்)

2.குறுக்கு புத்தி (மகா மட்டம் )

3.பேசுவது கிளியா?  ( சுத்த வேஸ்ட்)

4.பெண்மையின் உண்மை (மெடிக்கல் சயின்ஸ் படம் )




டிஸ்கி 1 -  100 இடுகை போட்டும் உன்னால் சமுதாயத்துக்கு உபயோகமாக ஏதாவது செய்ய முடிந்ததா என யாரும் இனி கேக்க முடியாது.

டிஸ்கி 2 - ஆஃபீஸ்  டைமில் ஃபோன் போட்டு சார் இந்தப்படத்துல சீன் இருக்கா? எத்தனை சீன்?((அடேய்,சுமாரா எத்தனை சீன் இருந்தா நீ போவே?)எனக்கேட்டு இனி யாரும் டார்ச்சர் செய்ய மாட்டார்கள்.

டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில் ரிலீஸ் ஆகாத படமான “தொட்டுப்பார்” பட ஸ்டில்,அதை தொடாமல் பார்க்கவும்.


டிஸ்கி 4 - இடமிருந்து வலமாக (வாரமலர்ல குறுக்கெழுத்துப்போட்டி ஃபில்லப் பண்ணி பண்ணி பழக்கமாயிடுச்சு) 2வதாக இருக்கும் பாப்பா ஹீரோயினை விட அழகாக இருக்கிறார் என நினைக்கிறேன் (ரொம்ப முக்கியம்)

Friday, October 08, 2010

கோட்டைக்கும் கோர்ட்டுக்கும் தகராறா?

தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது : ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
தமிழக டி.ஜி.பி. லத்திகா சரண் நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக, பணி அனுபவம் குறைந்த லத்திகா சரண் நியமிக்கப்பட்டதாகக் கூறி, அவரது பணி நியமனத்தை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தலைவர் ஆர்.நடராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஐ.பி.எஸ். பயிற்சி மைய இயக்குநர் விஜயகுமாரும் விளக்கம் அளித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வாதங்களும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராஹிம் கலிபுல்லா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச், தமிழக டி.ஜி.பி.யாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு முரணானது என தீர்ப்பளித்தனர்.
அத்துடன், தமிழக டி.ஜி.பி. பணிக்குத் தகுதியானவர்களின் பெயர் பட்டிய‌லையும் தயாரித்து அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்தில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு தரச்சொல்லி உத்தரவிட்டும் செய்யாத மத்திய அரசை கோர்ட் கண்டித்தது,இப்போது இந்த மேட்டர்,அரசுக்கும் ,கோர்ட்டுக்கும் பனிப்போர் நிலவி வருவது வருந்தத்தக்கது.இந்தத்தகவல் ஆனந்த விகடன் நண்பர் மூலம் கிடைத்தது.