Wednesday, September 29, 2010

எந்திரன் தியேட்டர்களில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள்

1.தினகரன் பத்திரிக்கை இன்னைக்கு மட்டும் செம சேல்ஸாமே?ஏன்?

எந்திரன் பட ரிசல்ட் ஸ்பெஷல் எடிசனாம்.

2.அவரு உலக மகா அப்பாவினு எப்படி சொல்றே?

எந்திரன் ஓடற தியேட்டர்ல டிக்கட் கவுண்ட்டர் திறப்பாங்கன்னு நம்பிக்கையா க்யூவுல நிக்கறாரே?

3.சன் டி.வி.ல வர வர ஓவரா பீலா விட ஆரம்பிச்சுட்டாங்க.


ஏன்?


எந்திரன் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு ஷேர் மார்க்கெட் பிளஸ்ல போகுது,அப்படினு சன் நியூஸ்ல சொல்றாங்களே?


4.ஐஸ் யாருக்கு ஜோடி?சயிண்ட்டிஸ்ட் ரஜினிக்கா?ரோபோவுக்கா?


ரெண்டு பேருக்கும் கிடையாது,அபிஷேக்கோட ஜோடி.

5.அக்ட்டோபர் 1 முதல் 10 தேதி வரை எஸ் எம் எஸ் ல க்ரூப் மெஸேஜ் அனுப்பக்கூடாதுனு சன் டி வி ல சொல்றாங்களே,ஏன்?

எந்திரன் ரிசல்ட்டோ,கதையோ வெளில பரவிடக்கூடாதாம்.




6.தியேட்டர் ஓனர் பால்கனில படம் பாக்காம பென்ச்ல உக்காந்து பாக்கறாரே,ஏன்?

ரசிகர்கள் அப்பப்ப அள்ளி வீசற காசு,பணம் எல்லாம் கலெக்ட் பண்ணி கல்லாவுல கணக்கு காட்டனும்னு சன் பிக்சர்ஸ் ஆர்டராம்.


7.தியேட்டர் ஆப்பரேட்டர் ஏன் கோபமா இருக்கார்?


அவரைக்கூட ரூ 300 வாங்கிட்டுதான் உள்ளே விட்டாங்களாம்.






8.தியேட்டருக்கு செக்யூரிட்டிக்கு வந்த போலீஸால என்ன பிரச்சனை?


வெளில எந்தக்கலவரமும் இல்ல,உள்ள ஒரு ரவுண்ட் பார்க்கறோம்னு நைசா உள்ளே போய்ட்டாங்களாம்.


9.படம் ஓகே,ஆனா வசனம் புரியலை.


யோவ்,நீ பார்த்தது ரோபோட்,ஹிந்திப்பதிப்பு,காம்ப்ளெக்ஸ் மாறி வந்துட்டே.




10.ஆசிரியர் - அக்டோபர் 2 ந்தேதி ஏன் லீவ் விடறாங்க?


மாணவன் - சார்,எந்திரன் படத்துக்கு டிக்கட் வாங்குன களைப்பு போகவா இருக்குமோ?


ஆசிரியர் - அடப்பாவி,காந்தி ஜெயந்தின்னா என்னனு தெரியல.


11.பங்கு மார்க்கெட்,சினிமா மார்க்கெட் என்ன வித்யாசம்?

இப்போ பங்கு மார்க்கெட்ல காளையின் ஆதிக்கம் அதிகம்,சினிமா மார்க்கெட்ல முரட்டுக்காளையின் ஆதிக்கம் அதிகம்.


12.உங்க வகுப்புலயே இவன்தான் ரொம்ப பின் தங்கிய மாணவன்னு எப்படி சொல்றே?


எல்லாரும் எந்திரன் படத்தை விடிகாலை 4 மணி ஷோவே பாத்துட்டாங்க,இவன் மட்டும் மேட்னி ஷோதான் பார்த்தான்.


13.தியேட்டர் ஓனர் எப்படி போண்டி ஆனார்?


படம் திருப்தி இல்லை எனில் பணம் வாபஸ் அப்படின்னு விளம்பரம் பண்ணி மாட்டிக்கிட்டாராம்.


14.டிக்கெட்ல தியேட்டர் பேருக்குப்பதிலா பரிமளா இல்லம்னு போட்டிருக்கே?


வீடுதான்,ஹோம் தியேட்டர் வெச்சிருக்காங்களாம்.


15.எந்திரன் ஆடியன்ஸ் கிட்ட டூரிஸம் டிப்பார்ட்மெண்ட்(சுற்றுலாத்துறை) டாக்ஸ் கேக்குதே,ஏன்?


உலகின் அனைத்து டூரிஸ்ட் ஸ்பாட்லயும் ஷூட்டிங்க் எடுத்திருக்கறதா ஷங்கர் பேட்டில சொன்னாராம்.


16.என்ன சார்,ரூ 300 குடுத்து படம் பார்க்க வந்திருக்கேன்,பெஞ்ச் ல உக்காந்து பாக்கச்சொல்றீங்க?நான் வெளில போய் கலெக்டர்கிட்ட மனு குடுப்பேன்.


உனக்கெதுக்கு கஷ்டம்,அதோ உனக்கு முன்னால கலெக்டரே மண்ணைக்கூட்டி உக்காந்து படம் பாக்கறாரு பாரு,அங்கேயே போய் குடு.




எந்திரன் பற்றி ஷங்கரின் பேட்டியும்,நையாண்டி நாரதரின் நச் கேள்விகளும்

எந்திரன் திரைப்படம் தயாரானது எப்படி என்பதை பெரிய புத்தகமாக எழுதலாம். ரசிகர்களுக்கு மாத்திரமல்ல, திரைப்படத் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் பல பாடங்கள் அதிலே படிக்கக் கிடைக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வித்தியாசமானது. எல்லா அனுபவங்களுக்கும் பொதுவான தன்மை ஒன்றுதான்: சுவாரசியம்.இன்று ‘காதல் அணுக்கள்’ பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஷங்கர்...

‘காதல் அணுக்கள்‘ ரொம்ப மென்மையான பாடல். கனவுப் பாடல். அதனால ஐரோப்பால ஜெர்மனி மாதிரி குளுமையான ஒரு நாட்டுல அந்த பாடலை படமாக்கலாம்னு திட்டம் போட்டிருந்தேன். ஆனா, லொகேஷன் பார்க்க போனா எல்லா இடமும் ஏதோ ஒரு டீவில வர்ற பாடல்ல பார்த்த மாதிரியே இருந்துது. அதே மாதிரி, லொகேஷன் மானேஜரும் ஒவ்வொரு இடத்துக்கு போனதும், ‘போன வாரம்தான் இந்த இடத்துல ஒரு தெலுங்கு ஷூட்டிங் நடந்துச்சு.. இந்தி பாட்டு எடுத்தாங்க..’ அப்படீம்பார்.

யாரும் ஷூட் பண்ணாத இடமா இருக்கணும்னு நான் உறுதியா இருந்தேன்.. அப்பதான் பிரேசில் நாட்ல, ‘கிளிமஞ்சாரோ‘ பாடலுக்கு இடம் தேடினப்ப பாத்து வச்ச லாங்காய்னு ஒரு இடம் ஞாபகம் வந்துது. பெரிய பாலைவனத்துல நடுவுல துண்டு துண்டா நிறைய ஏரிகள் இருந்தா எப்படி இருக்கும்? அதுதான் லாங்காய். அந்த மாதிரி இடம் உலகத்துல வேற எங்கயுமே கிடையாது. ஆனா, கஷ்டப்பட்டு அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது, ‘கிளிமஞ்சாரோ‘ பாடல்ல ஒரு பகுதியதான் அங்க எடுக்க முடியும். முழு பாடலும் எடுக்க முடியாது. அதனால் கிளம்பி வந்துட்டோம். ‘காதல் அணுக்கள்‘ அங்க எடுத்தா என்னானு தோணுச்சு. நிறைய ஸ்டில்ஸ் எடுத்துருந்தோம். அதையெல்லாம் பாத்ததும் ‘மென்மையான பாட்டுக்கு இந்த இடம் பிரமாதமான விஷுவலா இருக்கும்’னு (ஒளிப்பதிவாளர்) ரத்னவேலு அடிச்சு சொன்னார்.


உடனே புறப்பட்டோம். லாங்காய் பெரிய டூரிஸ்ட் ஸ்பாட். ரொம்ப கட்டுப்பாடுகள். சின்ன பேப்பர்கூட கீழே போடக்கூடாது. ஓட்டல்ல இருந்து கார்ல ஒரு பயணம், அப்புறம் படகுல ஒன்றரை மணி நேரம், திரும்ப ரெண்டு மணி நேரம் கார்ல, அதுக்கு பிறகு பாலைவனத்துல போறதுக்கு ஸ்பெஷலா பண்ணின ஜீப்ல பயங்கரமான பயணம். கடைசி அஞ்சு நிமிஷம் தண்ணிக்குள்ள ஜீப் போகும். அதுக்கப்புறம் இறங்கி நடக்கணும். ஏன்னா, அது காடு. ஜீப் போகக்கூடாது. எல்லாத்தையும் தூக்கிட்டு போய் ஷூட் பண்ணுவோம். மத்தியானம் பசிக்கும். அங்க எதுவும் சாப்பிட கூடாது. திரும்ப ஒரு மணிநேரம் டிராவல் பண்ணி சாப்பிட்டுட்டு ஓடி வரணும். சிரமப்படறதுக்குன்னே போய் எடுத்த மாதிரி கஷ்டப்பட்டு எடுத்தோம். ‘சும்மா சொல்லக்கூடாது, ஷங்கர்.. கூட்டிட்டு வந்தீங்களே இடம்.. இந்த மாதிரி நான் பார்த்ததே இல்லை..‘ன்னு ரஜினி சார் சொல்லிட்டே இருப்பார். அந்த பாலைவனத்துல எப்பவும் காத்தடிச்சுட்டே இருக்கும். எல்லார் மேலயும் மணல் விழும். முகத்துல துணி கட்டிகிட்டு கொள்ளை கோஷ்டி மாதிரி வேலை பாத்தோம். பிரமாண்டமான ஏரியா. கண்ணுக்குள்ள அடங்காது. அதனால ஹெலிகாப்டர்ல பறந்து படம் பிடிச்சோம்.

ரஜினி சார்கிட்ட எல்லாருக்கும் பிடிச்ச ஒரு லுக் இருக்கு. அதோட ஒரிஜினலை ரீ கிரியேட் பண்ணணும்னு சொல்லி பழைய ஸ்டில்ஸ் எல்லாத்தையும் பார்த்தேன். அதுல ஒரு லுக் ரொம்ப பிடிச்சிருந்துது. அருமையான லுக் அது. அதுக்கான விக் ரெடி பண்ணி, நினைச்சது வர்ற வரைக்கும் நிறைய மாற்றங்கள் பண்ணி, அதே மாதிரி லுக் கொண்டு வந்திருக்கோம். பானுவோட மேக்கப்பும் ரத்னவேலுவோட லைட்டிங்கும் சேந்து அவரை இன்னும் அழகா காட்டும். ‘ஜானி‘ படத்துல ஒரு பாட்டுல ரஜினி சார் ரொம்ப கேஷுவலா வருவார். அதே மாதிரி ‘தம்பிக்கு எந்த ஊரு‘ படத்துல ரொம்ப யதார்த்தமா பேன்ட் பாக்கெட்ல கைய விட்டு பாடிக்கிட்டே நடப்பார். அத பார்க்கும்போது நல்ல ஃபீல் கிடைக்கும். இன்னைக்கும் மறக்க முடியாது. அது மாதிரி பண்ணணும்னுதான் இந்த பாட்டுக்கு மெனக்கிட்டோம். ரகுமான் அழகா ட்யூன் போட்ருக்கார். ரஜினி சார் கிடார் வச்சுகிட்டு ஃப்ரீயா பண்ணியிருக்கார். படத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்னு கேட்டா இதைத்தான் சொல்லுவேன்.

காதல் வந்த ஒரு விஞ்ஞானி பாடுற பாடல். வழக்கமான காதல் மொழி தெரியாது. அதனால் விஞ்ஞான ரீதியா ரொமான்டிக் பாடல் வேணும்னு கேட்டேன். வைரமுத்து சார் நியூட்ரான், எலக்ட்ரான்னு வச்சு வித்தியாசமா எழுதினார். எல்லாரோட பங்களிப்பும் சேந்து அந்த பாடல் சீனை எப்படி சூப்பரா அமைச்சுருக்குன்னு படத்தை பாத்துட்டு சொல்லுங்க.. 



‘எந்திரன்’ படத்தில் இடம்பெறும் ‘கிளிமஞ்சாரோ’ பாடல் ஷூட்டிங், பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலையில் நடந்தது. அந்த அனுபவம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது: முதன் முதலா ‘எந்திரன்’ பட ஷூட்டிங்... முதல் ஷாட்டுன்னு வச்சுக்கோங்களேன். மச்சுபிச்சு மலையில கிளிமஞ்சாரோ பாடல். மச்சுபிச்சு மலை மேல போனோம். அங்க டான்ஸ் ஷூட். முதல்ல பெரிய மூவ்மென்ட்டுன்னு சொல்லிட்டாரு ராஜு மாஸ்டர். என்ன ஏதுன்னு கேட்டா, பண்ணிடலாம்னு, டைரக்டர்கிட்டயும் சொல்லிட் டாங்க. மொதல்ல கஷ்டமான மூவ்மென்ட்ஸை பண்ணிட்டா, அப்புறம் ஈசியாயிடும்னாங்க. சரி, ஐஸ்வர்யா ராய் வர்றதுக்கு லேட்டாகும்&அவங்க அன்னைக்குதான் இந்தியாவுல இருந்து வர்றாங்க. நாம மேக்கப்போட்டு பிராக்டிஸ் பண்ணிறலாம்னு 30, 40 வாட்டி பிராக்டிஸ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன். அதுக்கப்புறம் ஐஸ்வர்யா ராய் வந்தாங்க. பார்த்ததும் ரொம்ப சந்தோஷம். பெரிய மூவ்மென்ட், ரொம்ப டைம் எடுத்துப்பாங்க... அப்படின்னு நெனைச்சா, மூவ்மென்ட் பார்க்கலாம்னு சொன்னாங்க.


மூவ்மென்ட் பார்த்த உடனேயே டேக்குன்னு சொல்லிட்டாங்க. நான், என்னடா இது? ரிகர்சல்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சா, டேக்குன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்சேன். அப்புறம் டைரக்டர், மாஸ்டர் எல்லாரும் வந்து ரிகர்சல் பார்த்திரலாம்னாங்க. ஐஸ்வர்யா ராய் ரிகர்சல் பண்ணினாங்க... சூப்பர்ப். நான் 40 வாட்டி ரிகர்சல் பண்ணியிருக்கேன். பாடி ஸ்டடியா இருக்கு. மைன்ட் ஆஃப் ஆயிடுச்சு. சவுண்டும் கேட்க மாட்டேங்குது, ஒண்ணும் கேட்க மாட்டேங்குது. என்னடான்னு நினைச்சா, முதல்ல நல்லா வந்திட்டிருந்தது எல்லாமே மறந்து போச்சு எனக்கு. ஐஸ்வர்யா ராய் வந்து, ‘இது கஷ்டமான மூவ்மென்ட், டான்சர்களே கஷ்டப்படுறாங்க. நீங்க இவ்வளவு தூரம் பண்ணியிருக்கீங்களே’னு என்னை எங்கரேஜ் பண்ணினாங்க. முதல் ஷாட் ஒ.கே ஆன உடனேயே  எல்லாரும் கை தட்டினாங்க. எக்ஸலண்ட் பாட்டு. அங்க ஆடுன, பிரேசில்ல இருந்து வந்த ஒவ்வொரு டான்சரும் ஐஸ்வர்யா ராய் மாதிரி இருந்தாங்க. அவங்க உடம்புலயே ரிதம் இருந்தது. அங்க காஸ்ட்யூம் கரெக்ட் பண்றவங்களும் டான்ஸ் ஆடிட்டு இருந்தாங்க அவங்களுக்கு டீ, காபி கொடுத்துட்டு போறவங்களும் டான்ஸ் ஆடிட்டே போனாங்க. நான் இதுலயே ஷாக் ஆயிட்டேன். நல்ல அனுபவம். நீங்க அதை படத்துல பாருங்க.


நையாண்டி நாரதரின் கேள்விகள்.

1.சிவாஜி படத்துல கறுப்பு பணத்துக்கு எதிரான கருத்தை சொன்ன நீங்க எந்திரன் ல அதை ஏன் ஃபாலோ பண்ணலை?

2.ரஜினி தன் மகளோட கல்யாணத்துக்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம்,கூட்ட நெரிசலால் அவதி ஏற்படும்னு சொன்னாரே,எந்திரன் பட ரிலீஸ்க்கும் கூட்ட நெரிசல் அதை விட 4 மடங்கு அதிகமா இருக்கும்.ரசிகர்கள் யாரும் ஒரு வாரத்துக்கு தியேட்டர் பக்கமே வராதீங்கனு சொல்லலையே ,ஏன்?

3.ஈரோட்ல 6 தியேட்டர்ல படம் ரிலீஸ் ஆகுது.விடிகாலை 4-30 மணிக்கு முத ஷோ,மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தறதுனா இப்படித்தானா?

4.டிக்கட் விலை ரூ 250,ரூ 300.நார்மல் டிக்கட்டைப்போல் 23 மடங்கு அதிகம்.இது ரசிகர்களை ஏமாற்றிப்பணம் பறிப்பது ஆகாதா?


5.ஒரு தியேட்டரில் ஒரு ஷோவுக்கு 1200 பேர் பார்ர்க்கிறார்கள்.6 ஷோ ஒரு நாளுக்கு 6 தியேட்டர் 6*6*1200=
43,200 மக்கள் ஒரு நாளில் படம் பார்க்கிறார்கள்.முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட நாலரை லட்சம் பேர் படத்தை பார்த்து விடுவார்கள்.படம் நல்லாருக்கோ,இல்லையோ,டப்பாவோ ரிசல்ட் கேட்காமலேயே இத்தனை பேர் பார்க்கறதால புரொடியூசரான சன் டிவிக்கு ஏகப்பட்ட லாபம்.ரசிகனுக்கு?


6.இந்தப்படத்தைப்பார்க்கலைன்னா அது ஏதோ தெய்வக்குத்தம் மாதிரி ஒரு இமேஜை சன் டி வி கிளப்பிட்டிருக்கு,அது ஏன்?


7.இத்தனை பிரம்மாண்டங்களுக்கு நடுவிலும் வரிவிலக்குக்கு ஆசைப்பட்டு ரோபோ டைட்டிலை தமிழ்ல மாத்தி இருக்கீங்க,ஏன்?(வரி விலக்குஎன்பது சின்ன பட்ஜட் படங்களுக்கு அரசு மக்கள் வரிப்பணத்துல இருந்து தர்றது)






Tuesday, September 28, 2010

அரசியல்வாதிகளின் அலப்பறையும்,சினிமாக்காரர்களின் சிரிப்புரையும்

1.முதல்வர் கருணாநிதி: கள்ளக் கையெழுத்துப் போட்டோர், லஞ்சம் வாங்கியோர், அபராதம் செலுத்தியவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ராஜராஜன் காலத்தில் விதிமுறையாக இருந்தது


 நையாண்டி நாரதர் -தலைவா,ஆனா ஆ.ராசா காலத்துக்குப்பிறகு அது வழக்கொழிஞ்சு போச்சே? ஏனுங்கோ?



2.தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: காங்கிரஸ் கட்சியில் கூட்டணி பற்றி யாரும் பேசக்கூடாது. கூட்டணி பற்றி நானே பேசக்கூடாது. அந்த முடிவு சோனியாவிற்கு மட்டும் தான் உண்டு. எனவே, இனிமேல் கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சியினர் பேசமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

நையாண்டி நாரதர் - அண்ணே,தலைவர் நீங்களே கூட்டணி பற்றி பேசக்கூடாதுன்னா அப்புறம் எதுக்கு அந்த தலைவர் போஸ்ட்டிங்க்?


3.அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேச்சு:
விஜயகாந்த் கட்சி உட்பட பல கட்சிகள் தேர்தலுக்காக உருவாக்கப்பட்டவை. ஆனால், காங்கிரஸ், மக்களின் உரிமைக்காகப் போ ராடி வரும் இயக்கம். வரும் 2016க்குள் நாம் மூன்று பெரிய தேர்தல்களைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்த ஆறு ஆண்டு காலமும் கட்சியை வலுப்படுத்த மேலிடம் முன்வந்தால், 2016ல் ஆட்சி அமைக்க முடியும்.

நையாண்டி நாரதர் - யானை போய் குதிரை வந்தது டும் டும் டும்,குதிரை போய் கழுதை வந்தது டும் டும்,2011 போய் 2016 வந்தது டும் டும் டும்


 

4.சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பேச்சு:
 கருணாநிதி கூறிய வாக்குறுதியை நம்பி தமிழக மக்கள் ஓட்டளித்தனர். இன்று குடும்பத்தினர் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன.

 நையாண்டி நாரதர் - அது வேணா உண்மைதான்,கலைஞர் குடும்பத்துக்கு எல்லா உதவிகளும் கிடைக்குது.





5.   திருமணத்துக்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் - காதலன் பிரபுதேவா

 நையாண்டி நாரதர் -ஆம்,டைவர்ஸுக்குப்பிறகு நடிப்பார்.(இத்தனை நாளா நடிச்சாரா?)




6. இந்த ஆண்டு எனக்கு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. நான் சந்தோஷமா இருக்கேன். என் சந்தோஷத்தை கொடுக்காதீங்க  - நயன்தாரா


 நையாண்டி நாரதர் -ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஃபினிஷிங்க்லதான் பிரச்சனை ஆகிடுது.போன வருஷம் சிம்பு,இந்த வருஷம் பிரபுதேவா,அடுத்த வருஷம் உங்க மனசை அசத்தப்போவது யாரு?



7.பிரபுதேவா பெயரை நான் பச்சை குத்தியிருக்கிறேன். எதற்காக அவர் பெயரை பச்சை குத்தியிருக்கிறார் என்று பலரும் கேட்கிறார்கள். அவர்கள் எல்லாம் என்னதான் நினைக்கிறார்கள் என புரியவில்லை. நமக்காக வாழ்றவங்களுக்காக நாம வாழுறோம். இதுதான் உண்மை. இது எல்லாருக்குமே பொருந்தும். அதைத்தான் நானும் செய்கிறேன். எப்‌போதுமே நான் மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு கவலைப்படுறதில்லை.

-நயன்தாரா




நையாண்டி நாரதர்-நீங்க வேணா பாருங்க கஜினி சூர்யா மாதிரி பல பேரை பச்ச குத்தி கலக்கப்போறீங்க.

Sunday, September 26, 2010

புதிய பதிவர்கள் முன்னேற்ற சங்கம்

கடை விரித்தேன் கொள்வாரில்லை,பதிவிட்டேன் படிப்பார் இல்லை,அப்ப்டியே படித்தாலும் பின்னூட்டம் இடுவார் இல்லை என புலம்புவரா நீங்கள்,அப்போ நீங்க நம்ம ஆளு.பதிவுலகில் நான் ஒரு கத்துக்குட்டி.72 நாட்கள் மட்டுமே ஆகிறது.இதில் நான் கற்றவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கலைஞரின் நமக்கு நாமே திட்டப்படி எப்படி அவரது குடும்பத்துக்குள் பதவிகள்,பணங்கள் பரிமாறிக்கொள்ளப்படுகிறதோ,அதே போல் இந்த சங்கத்து நண்பர்களும் நமக்குள் உதவிக்கொள்ளலாம்.தலைவர், உப தலைவர் என யாரும் கிடையாது.அனைவரும் உறுப்பினர்களே.

1.நமக்கு யார் கமெண்ட் போட்டாலும் உடனே அவர்து ஃபோட்டோவை க்ளிக்கி அவர்து பதிவில் ஒரு கமெண்ட் போடவும்.ஃபாலோயராக சேரவும்.இந்தத்திட்டத்திற்கு மொய்க்கு மொய் என பெயர்.

2.நீங்கள் கமெண்ட் போட்டு விட்டு வேலைக்கு சென்று விடுகிறீர்கள்,பிறகு வந்து பார்க்கும்போது 4 கமெண்ட் வந்திருக்கிறது என்றால் உடனே 4 பேருக்கும் நன்றி என பொத்தாம்பொதுவாக நன்றி கூற வேண்டாம்.தனித்தனியாக நன்றி கூறவும்.


3.அப்படித்தனித்தனியாக நன்றி கூறுவதில் ஒரு டெக்னிக் உள்ளது.8 கமெண்ட் ஆகி விடும்.தமிழ் மணம் சைடு முகப்பில் 6 கமெண்ட் வாங்கிய பதிவு இடம் பெறும்.அதைப்பார்த்து அதிக பார்வையாளர்கள் வருவார்கள்.

4.உங்கள் பக்கத்து வீட்டு ஃபிகர் பெயரில்,முறைப்பெண்,அல்லது முறைக்காத பெண் பெயரில் 2 அல்லது 3 டூப்ளிகேட் மெயில் ஐ டி கிரியேட் செய்து கொள்ளவும்.நீங்கள் பதிவு போட்ட 2 வது நிமிஷமே அவர்கள் மெயில் ஐ டி யில் போய் மீ த ஃபர்ஸ்ட்,முத வடை எனக்குத்தான் என்று ஏதாவது ஒரு கமெண்ட் போட்டு விட்டு மீண்டும் உங்கள் மெயில் ஐ டி யில் போய் நன்றி சொல்லவும்.இப்போ 6 கமெண்ட் ரெடி.

5. பதிவு போடுவதை ஒரு கடமையாக வைத்துக்கொள்ளுங்கள்.வாரம் மினிமம் 3,அதிகம் 6 பதிவு போடவும்.அதே போல் ரெகுலராக ஒரே டைமில் பதிவு போடுங்கள்.உதாரணமாக காலை 7 மணி என்றால் ரெகுலராக அதே டைமில் போடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

6.உங்கள் பதிவு சினிமா,அரசியல்,சமூகவிழிப்புணர்வு என கலவையாக இருக்கட்டும்.அனைத்துப்பார்வையாளர்களையும் வரவைக்க அது உதவும்.

7.ஜெ கொடநாட்டில் போய் ஓய்வெடுப்பது மாதிரி 7 நாட்கள் திடீர் என காணாமல் போய் விடாதீர்கள்.அப்படியே போக வேண்டிய சூழல் வந்தால் ஒரு நெருங்கிய நண்பர் கம் பதிவரிடம் உங்க பாஸ்வோர்டை  குடுத்து பிளாக்கை ஒப்படைத்து கமெண்ட்டுக்கு பதில் கமெண்ட் போட வைய்யுங்கள்.

8.பதிவிட்டால் மட்டும் போதாது,மார்க்கட்டிங்க் வேணும்.சன் டி வி எந்த டப்பா படம் எடுத்தாலும் விடாமல் விளம்பரம் செய்து 5 நாள் படத்தை 30 நாள் படம் ஆக்குவது போல் முக்கிய புது பதிவர்களின் மெயில் ஐ டிக்கு ஒரு லிங்க் அனுப்புங்கள்.100 மெயில் ஐ டிக்கு அனுப்பி (க்ரூப்பாக) விளம்பரம் செய்தால் 25% பேர் வந்தாலும் லாபம்தான்.

9.தமிழ்மணம் முகப்புப்பக்கத்தின் கடைசியில் போய் பாருங்கள்,லேபிள்கள் இருக்கும்.உங்கள் பதிவை வகைப்படுத்துங்கள்.சினிமா,அரசியல்.நகைச்சுவை,நையாண்டி,சமூக விழிப்புணர்வு என.அதில் ஏதாவது ஒரு தலைப்பை இடவும்.

10.தி.மு.க மாதிரி ஓட்டு வாங்க நம்மால் பணம் தர முடியாது.ஆனால் ஓட்டுப்போடலாம்.இண்ட்லி,தமிழ்மணம்,உலவு ஆகியவற்றில் நுழைந்து படப்படவென எல்லாருக்கும் ஓட்டுப்போடவும்.மொய் திரும்ப வருமா என்றெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டாம்.

11.கம்ப்யூட்டர் நிறுவனங்களில் உங்கள் நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் இருந்தால் அவர்களிடம் உங்கள் சைட்டை (பிளாக்கை) அறிமுகபடுத்தி ஃபாலோயர் ஆக்கவைக்கவும்.ஒரே சமயத்தில் 10  ஃபாலோயர்ஸ் கிடைக்கும்.

12.பின்னூட்டம் இடும்போது முடிந்தவரை பாசிட்டிவ்வாக எழுதவும்.அது சரி இல்லை,இது சரி இல்லை என குறை சொல்ல வேண்டாம்.அப்படி கூறுவதாக இருந்தால் தனி மெயிலில் கூறவும்.

13.சினிமா விமர்சனம் எழுத முடிவு எடுத்தால் ஏற்கனவே அந்தத்துறையில் ஃபேமஸ் ஆன கேபிள் சங்கர் சார்,உண்மைத்தமிழன் அண்ணன்,ஜாக்கி சேகர் அண்ணன்,ஹாலிவுட் பாலா அவர்கள்,அஜயன் பாலா அவர்கள் பதிவை படித்து அவர்கள் ஸ்டைலை காப்பி அடிக்காமல் உங்களுக்கு என தனி பாணியை அமைத்து எழுதவும்.

14.காமெடி,நகைச்சுவை எழுத முடிவெடுத்தால் காமெடியில் கலக்கி வரும் சேட்டைக்காரன் அண்ணன்,குசும்பன் சார்,பன்னிக்குட்டி ராமசாமி அண்ணன்,பரிசல்காரன்,வால்பையன் போன்றவர்கள் பிளாக்கை படித்துவிட்டு,பயிற்சி எடுத்து தனி பாணியில் பதிவு போடவும்.

15.தனிப்பட்ட தாக்குதல்களை,அநாகரீக வார்த்தைகளை தவிருங்கள்.நாம் நண்பர்களை உருவாக்கவே வந்தோம்,எதிரிகளை உருவாக்க அல்ல.

16.தனி நபர் அல்லது குறிப்பிட்ட எழுத்தாளர்களை தாகும் பதிவை படிக்க நேர்ந்தால் பின்னூட்டம் இடுவதை தவிர்க்கவும்,அல்லது உள்ளே ஐயா,பிரசண்ட் சார் என ஒரு அட்டண்டன்ஸை போட்டு விட்டு எஸ்கேப் ஆகுங்கள்.

17கவிதை எழுதுவதை குறையுங்கள்.இங்கே ஏற்கனவே ஏராளமான கவிஞர்கள் கோலோச்சி இருக்கிறார்கள்.மீறி எழுதினால் பனித்துளி சங்கர்,கவிதைக்காதலன்,கே ஆர் பி செந்தில் சார் போன்றவர்கள் பாணியிலிருந்து விலகி புதுசாக எழுதுங்கள்.

18.அலாஸ்கா ரேங்கிங்க்கை உங்கள் பிளாக்கில் பொருத்தவும்.மினிமம் தினமும் 250 பேர் வந்தால் போதும்.

19.மிட்நைட் 12  மணிக்கு பதிவு போட்டால் பிரமாதமான ரிசல்ட் கிடைக்கும்,காரணம் இங்கே இரவு எனில் ஃபாரீனில் பகல்.அது போக நமது பதிவு அதிக நேரம் ஆன்லைனில் வைத்திருக்க அது ஒரு குறுக்கு வழி.அந்த நேரத்தில் எழ முடியவில்லை எனில் அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு போடவும்.

20.ட்விட்டர்,ஃபேஸ்புக்,கூகுள் பஸ் என எல்லாவறிலும் உறுப்பினர் ஆகி உங்கள் பதிவை இணையுங்கள்.இது ஒரு நல்ல மார்க்கெட்டிங்க் டெக்னிக்.

21.பெண் பதிவாளர்களை மரியாதைக்குறைவாக பேசுவது,தேவை இல்லாத மற்றும் எல்லை மீறிய பின்னூட்டம் இடுவது,அவர்கள் பர்சனல் விஷயங்களைப்பற்றி எழுதுவது இவற்றை நிச்சயம் தவிருங்கள்.

22.எழுதப்பட்ட பதிவுகளை நல்லவற்றை செலக்ட் செய்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் ஏதாவது துட்டு கிடைக்கும் .(நெட் கனெக்‌ஷனுக்கு பணம் கட்டனுமே?)

23.பி எஸ் என் எல் பிராட்பேண்ட் கனெக்‌ஷன் இருப்பதில் சிறந்தது,அதில் அன்லிமிட்டட் ரூ 750 திட்டத்தில் சேருங்கள்.நான் பணத்தை மிச்சம் பண்றேன் பேர்வழி என ரூ 500 திட்டத்தில் சேர்ந்தேன்.விடிகாலை 2 லிருந்து 8 மணி வரை இலவசம், மற்ற டைமில் காசு என்ற திட்டத்தில்,எனக்கு வந்த பில் ரூ 2400.

24.பழைய மாடல் சிஸ்டம் ஆக இருந்தால் கண் பாதிப்பை தவிர்க்க கண்ணாடி அணியுங்கள் அல்லது அதற்கென விற்கும் கிளாஸ் (ரூ 125) வாங்கி சிஸ்டத்தில் பொறுத்தவும்.

25.எல்லாவற்றையும் விட முக்கியம் பதிவு,நெட் என அதற்கு அடிமை ஆகி விடாமல் குடும்பத்திற்கும்,குழந்தைகளை கொஞ்சுவதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.


பி.கு.  இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கு  பதில் மொய் கமெண்ட்டாகவும்,ஓட்டாகவும் விழும்.மேலும் அவர்கள் ஃபாலோயர் ஆகவும் மாறி விடுவேன்.

Saturday, September 25, 2010

மன்மதன் அம்பு - காமெடி,ஜோக்ஸ்,கும்மி



  1. த்ரிஷா கால்ஷீட் தராம கமலை இழுத்தடிக்கிறாராமே? 
  2.  
    அப்போ படத்தோட டைட்டிலை “மன்மதன் விட்ட அம்பும்,ரதி தந்த சொம்பும்”னு மாத்திடலாமா?
     
    2.மன்மதன் அம்பு படம் ஹிட் ஆகும்னு உன்னால கேரண்டி தர முடியுமா?
    கமல் படம்னா ஹிட்டுக்கு கேரண்டி தர முடியாது,கிஸ்ஸுக்கு வேணா கேரண்டி தரலாம்.
3.மன்மதன் அம்பு படம் ஓடறப்ப ,டூயட் சீன்ல சம்பந்தமே இல்லாம சிம்பு வர்றாராமே?
த்ரிஷா எங்கே போனாலும் பாய் ஃபிரண்டோடதான் போவாராம்.

4.த்ரிஷாவோட அம்மாவை ஒரு கேரக்டர்ல நடிக்க வெச்சிருக்காரே கமல்,எதுக்கு?
அடிக்கடி த்ரிஷா படப்பிடிப்புக்கு வராம கட் அடிச்சிடறாராம்.அவங்களை கண்ட்ரோல் பண்ண கூடவே அவங்கம்மாவும் இருந்தா நல்லாருக்கும்னுதான்

       5.கமல் பட டைட்டில்ல ஒரு பிழை இருக்கு.


      என்னாது அது?


      மன்மதன் சிம்பு தானே,மன்மதன் அம்புனு எப்படி வரும்?


      6.மன்மதன் அம்பு படம் பொங்கலுக்குத்தான் ரிலீஸ் ஆகும்னு எப்படி சொல்றே?


      மன்மதனோட பாணம் கரும்பு,கரும்புக்கான பண்டிகை பொங்கல்தானே?


      7.மேடம்,கமல் படத்துல ஒரு கெஸ்ட் ரோல் இருக்கு,பண்றீங்களா?


      சாரி,லிப் டூ லிப் கிஸ் சீன்ல நான் நடிக்கறதில்லை.


      8.த்ரிஷாவோட அம்மாவுக்கு படத்துல என்ன கேரக்டரா இருக்கும்?


      இதுல என்ன டவுட்?கமலோட மாமாவா வர்ற இன்னொரு கமலுக்கு ஜோடி கேரக்டராத்தான் இருக்கும்.(புன்னகை மன்னன் மாதிரி)


      9.கமல் - டைரக்டர் சார்,போன படத்துல (உ.போ.ஒ)
      படம் பூரா மொட்டை மாடில நின்னு ஃபோன் பேசியே படத்தை ஹிட் ஆக்கிட்டேன்,இந்தப்படத்துலயும் கப்பல் மேல் தளத்துல த்ரிஷா கூட கடலை போட்டே முடிச்சிடவா?


      கே.எஸ்.ரவிக்குமார் - எப்படியோ என்னை முடிச்சுடுவீங்கனு நினைக்கிறேன்.


      10. படத்தை சென்சார் ஆஃபீசருங்க இன்னும் பார்க்கவே இல்லையே?


      தேவை இல்லை,கமல் படம்தானே,ஏ சர்ட்டிஃபிகேட்தான்.