Tuesday, December 10, 2024

LA VIRGEN ROJA (2024) -THE RED VIRGIN - ஸ்பானிஷ் /ஆங்கிலம் - சினிமா விமர்சனம் ( மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்

           

           சிறந்த  நடிகை , சிறந்த துணை  நடிகை  , சிறந்த  திரைக்கதை , சிறந்த இயக்குனர் ,சிறந்த  ட்ரெய்லர்  என  திரைப்பட விழாக்களில் 5 விருதுகளை வென்ற படம் .22/9/2024  அன்று  திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட இப்படம்  27/9/2024  அன்று  திரை அரங்குகளில்  வெளியானது . இப்போது அமேசான்  பிரைம்   ஓ  டி டி  யில்  காணக்கிடைக்கிறது  


16  வயதில்  எழுத்தாளர் ஆகி  2 வருடங்களில்  15 கட்டுரைப்புத்தகங்கள்   எழுதி  18 வயதில்  அகால  மரணம் அடைந்த  பெண் எழுத்தாளர் -ன்     சுய சரிதை  தான்  இந்தப்படம் . . கதை  நடக்கும் கால கட்டம் 1931 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகியின்  அம்மா  டீன் ஏஜ்  வயதில் கர்ப்பம் ஆகி ஒரு பெண் குழந்தை பெறுகிறார் . அவருக்கு ஆண்கள் மீது  வெறுப்பு உண்டு . காரணம்  அவர்  வாழ்வில்  நடந்த சில  சோகமான  சம்பவங்கள் . அதனால்  தன்  மகளை  ஆண்  வாசமே  படாமல்  வளர்க்க வேண்டும் என நினைக்கிறார் 


 மகளுக்கு   இப்போது  16 வயது .அவரை  ஒரு ரைட்டர்  ஆக்க பயிற்சி  தருகிறார் .எல்லா நுணுக்கங்களையும்  கற்றுத்தருகிறார் . கூடவே  ஆண்கள் பற்றிய  எச்சரிக்கைகளையும் ..


நாயகி எழுதிய  முதல் புத்தகம்  வெளியாகி  நல்ல  வரவேற்பைப்பெறுகிறது . ஒரு அரசியல்  மீட்டிங்கில்  நாயகி பேச  அழைக்கப்படுகிறார் . கார்டியன் ஆக எப்போதும்  நாயகியின் அம்மா  நாயகியின் கூடவே வருவார்  

நாயகிக்கு  ஒருவர் மீது  காதல் பிறக்கிறது . இது  நாயகியின் அம்மாவுக்குத்தெரிய வர  144 போடுகிறாள் .கிட்டததட்ட  அம்மாவின்   மேற்பார்வையில்  ஹவுஸ்  அரெஸ்ட்டில்  இருக்கும்  நாயகி  எப்படி  டிமிக்கி கொடுத்து  தன காதலனை சந்திக்கிறாள் , அதன் விளைவாக  நாயகியின் அம்மா எடுக்கும் முடிவு என்ன என்பது மீதி திரைக்கதை 

நாயகியின் அம்மாவாக  நஜ்வா  நிம்ரி  கிட்டததட்ட  வில்லி  ரோலில்  கலக்கி இருக்கிறார் .இவரது  பார்வை , உடல் மொழி  எல்லாம் பிரமாதம் . நாயகி  ஆக டி வி  நடிகையான  அல்பா பிளானஸ்  அப்பாவித்தனமான  முகத்துடன்  சிக்ஸர்  அடிக்கிறார் . நாயகியின்  காதலன் ஆக பேட்ரிக்  கச்சிதமான தோற்றம் . நடிப்பு . 

ஜான்மா  , கூலி என இருவர் இசை அமைத்திருக்கிறார்கள் . பின்னணி  இசை  குட் . எடிட்டிங்  பாபிலோ . 124  நிமிடங்கள்  ஓடுகிறது . ஒளிப்பதிவு மார்க்கஸ் . துல்லியமான  படமாக்கம் .

எட்வார்டு , கிளாரா , ஆகிய  இருவரும் திரைக்கதை  எழுத  இயக்கி இருப்பவர் பாலா  ஆர்ட்டிஸ் 

சபாஷ்  டைரக்டர்


 1   ஒரே  ஒரு பங்களா , நாயகி , நாயகியின் அம்மா, பணிப்பெண் , காதலன்  என  நான்கே  முக்கியக் கேரக்ட்டர்களை வைத்து சுவராஸ்யமான திரைக்கதை அமைத்த விதம் 


2   1980 களில்  அம்பிகா , ராதா  போன்ற நடிகைகளை , அம்மா எப்படி எல்லாம் ஆட்டிப்படைத்திருப்பார்  என்ற  ரெப்ரண்ஸ்  படம் முழுக்க  உண்டு 


3 மனதை கலங்கடிக்கும்  க்ளைமாக்ஸ் 


4  அம்மா, மகள்   இருவரது அட்டகாசமான  நடிப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  அம்மா , என் அப்பா எங்கே? 


 உனக்கு அப்பாவே  கிடையாது , அதனாலதான் நாம சுதந்திரமா இருக்கோம் 


2  நல்ல  படிப்புள்ள   பெண்  ஒரு பேயை விட பலமானவள் 


3  எல்லாரும்  போட்டிருக்கற மாதிரி டிரஸ் நாம என் போடலை ? 


ஒரு பொண்ணு  தனக்குப்பிடிச்ச மாதிரி  தான் நடந்துக்கணும்,  அடுத்தவங்க  கமெண்ட்டைக்கண்டுக்கக்கூடாது 


4  ஆபர்  என்பது    இரு தரப்புக்கும்  நன்மை பயக்கனும் .ஆனா  அவன் நம்மை யூஸ் பண்ணிக்கப்பார்க்கிறான் 


5  காதல் , புரட்சி  இரண்டுமே  முழுப்பூர்த்தி அடையாதவை 


6  அதிகமான மக்களைப்போய் அடையனும், அதுதான் புத்தகத்தின் இலக்கு 


7  ஒருவரின் பலவீனம் ஒரு பிராஜெக்ட்டை பாதிக்க நான் விட மாட்டேன் 


8  ஆண்கள்  எல்லாருமே  ஏமாற்றுப்பேர்வழிகள் தான் 


9   ஒரு வாய்ப்பு  கரைல இருக்கு , இன்னொரு வாய்ப்பு கடலில் இருக்கு , நாம எதை தேர்ந்தெடுக்கணும் ? 


10  பணம்  இல்லாம நீ சுதந்திரமா இருக்க முடியாது 


11  தியாகம்  இல்லாம எந்த பிராஜெக்ட்டும் வெற்றி பெறாது 


12  நீ அம்மாவாக இருந்தாலும் என்னை சொந்தம் கொண்டாட முடியாது 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  காதலில்  மகள் விழுந்து விட்டாள் , தனிமையில்  விட்டால்  ஆபத்து  என்பது தெரிந்தும்  நாயகியின் அம்மா  மாலை நேரத்தில் மகளையும் , பணிப்பெண்ணையும்  விட்டு விட்டு  வெளியே போகும்போது  வெளிப்பக்கம் பூட்டாமல் செல்வது எதனால் ? 


2  அம்மா  கண்காணிக்கிறாள்  என்பது  தெரிந்தும்  காதல் கடிதங்களை  அவ்வளவு  சுலபமாகக்கண்டு பிடிப்பது மாதிரியா வைப்பார்கள் ?  

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 

எச்சரிக்கை  - க்ளைமாக்சில்  ஒரு அதிர்ச்சி சம்பவம்  உண்டு .மனோபலம்  மிக்கவர்கள் மட்டும்  அந்தக்காட்சியைப்பார்க்கலாம் .மென்மையான மனம் கொண்டவர்கள்  கடைசி  6 நிமிடங்களை ஸ்கிப் செய்யலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பரபரப்பான  திரைக்கதை  இல்லை ,   வேகமான காட்சிகள்  இல்லை ., ஆனாலும் இது நல்ல படம் .ஏ செண்டர்  ஆடியன்ஸுக்கானது . ரேட்டிங்க்  3 / 5 



The Red Virgin
Theatrical release poster
SpanishLa virgen roja
Directed byPaula Ortiz
Screenplay by
Produced by
Starring
CinematographyPedro J. Márquez
Edited byPablo Gómez-Pan
Music byJuanma Latorre
Guille Galván
Production
companies
Distributed byElastica (es)
Release dates
  • 22 September 2024 (Zinemaldia)
  • 27 September 2024 (Spain)
Countries
  • United States
  • Spain
LanguageSpanish

Monday, December 09, 2024

APPUDO IPPUDO EPPUDO (2024) தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ஆக்சன் டிராமா ) @ அமேசான் பிரைம்

       

                 8/11/2024 அன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம் இப்போது  அமேசான் பிரைம்   ஓ  டி டி இல்   தமிழ்  டப்பிங்கில்  காணக்கிடைக்கிறது . ஜாலியான  டைம் பாஸ்  படம்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்

 நாயகன் நாயகியைப்பார்த்தவுடனேயே  காதலிக்கிறான் . ஆனால்  இதயம் முரளி மாதிரி  வெளில சொல்லலை . நண்பனிடம்  சொல்றான் . நாயகி தன்  தோழியுடன்  வரும்போது  நாயகன்  தனது  நண்பனிடம்  இவள் தான் என் ஆள் என்கிறான் . நாயகனின் நண்பன்  நாயகியின் தோழியைத்தான்  நாயகனின் ஆள் என  தவறாகப் புரிந்து கொண்டு  தோழியின்  போன்  நெம்பரைத்தருகிறான் . நாயகன்  நாயகிக்கு ஐ லவ் யூ அனுப்பவதாக நினைத்து நாயகியின்தோழிக்கு  மெசேஜ் அனுப்பி விடுகிறான் . இதனால் உருவாகும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம்  ரசிக்கும்படி  இருக்கிறது 


ஒரு இடைவெளிக்குப்பின்  நாயகன்  நாயகியை  வெளிநாட்டில்  பார்க்கிறான் . அப்போது  நாயகி  வேறு ஒரு நபரின்  குழந்தையுடன் இருக்கிறாள் . வழி அனுப்ப வந்தவள் . ஆனால் நாயகிக்கு திருமணம் ஆகி விட்டது  என தவறாக  நாயகன் நினைக்கிறான் . இந்தக்குழப்பங்களும்  ரசிக்கும்படி  இருக்கின்றன 


வில்லி  ஒரு டுபாக்கூர்  பார்ட்டி . வசதியான ஆள் சிக்கினால்  அவனை  மொட்டை  அடிப்பவள் . நாயகனை  வசதியானவர் என  தவறாக நினைத்து  காதலிப்பதாக நடிக்கிறாள் . நாயகன்  வில்லியைக்காதலிக்கிறான் . இருவரும்  திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது  வில்லி க்கு  நாயகன்  பணக்காரன் இல்லை என்ற உண்மை தெரிந்து  கழட்டி விடுகிறாள் 

வில்லனிடம்  500 கோடி  ரூபாய்  பெறுமானம் உள்ள  ஒரு டிவைஸ்  இருக்கிறது . அதை ஆட்டையைப்போட   வில்லி  வில்லனிடம் பழகி அதை சுடுகிறாள் . அந்த  டிவைஸை த்தேடி  வில்லன்  கிளம்புகிறான் .


 பல ஆள்மாறாட்டக்குழப்பங்களுக்கு இடையே அந்த  500 கோடி  டிவைஸ்   யாருக்குக் கிடைத்தது ? என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக நிகில்  சாக்லேட்  பாய் ரோலுக்கு ஓகே , ஆனால் அவர் கேப்டன்   மாதிரி பைட் போடுவது எல்லாம் ஓவர் . நாயகி  ஆக  ருக்குமணி   வசந்த் குடும்பப்பாங்கான கண்ணிய கிளாமர்  நாயகி , சிரிப்பும் , காதலும் நன்கு  வருகிறது .வில்லி ஆக திவ்யான்ஸா கவுசிக் . பரவாயில்லை  ரகம் .நாயகனின் நண்பன் ஆக சத்யா  காமெடி நடிப்பு குட் . வில்லன் ஆக   ஜான் விஜய் கலகலப்பு ஊட்டுகிறார் . வில்லனின்  நண்பனாக அஜய் நல்ல நடிப்பு 


ரிச்சர்ட்  பிரசாத்தின்  ஒளிப்பதிவு  குட் . நாயகி , வில்லி  இருவரையும் அழகாய்க்காட்டி  உள்ளார் . பாரீன் லொக்கேஷன்களில்  கேமரா  களை  கட்டுகிறது .கார்த்திக்கின்  இசையில் ஒரே  ஒரு பாட்டு . பின்னணி  இசை  எம் ஆர் சன்னி , பரவாயில்லை ரகம் . நவீன் நூலின் எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது .கதை , திரைக்கதை , இயக்கம்  சுதீர் வர்மா 

சபாஷ்  டைரக்டர்


1   2002 ல்  ரிலீஸ் ஆன கமலின் பஞ்ச தந்திரம்  படமே 1998 ல் ரிலீஸ் ஆன  " வெரி பேடு திங்க்ஸ் " படத்தின்  அபிசியல்  ரீமேக்  தான் .ஆனால் அன் அபிஷியலாக  அந்தக்கதைக்கருவை  சுட்டு   புதிய  திரைக்கதையில்  தந்த சாமர்த்தியம் 


  2   காமெடியன்   வில்லனைக்கலாய்க்கும் காட்சி  கலக்கல்  ரகம் . சொந்தமா  யோசித்து  அந்த காமெடி டிராக்கை  அமைத்திருக்கிறார்கள் 


3 தயாரிப்பாளர்  செலவில் லண்டன் சுத்திப்பார்த்தது 




  ரசித்த  வசனங்கள் 

1   ஒரு திருடனை  இன்னொரு திருடன் நம்பலைன்னா வேற யாரு நம்புவாங்க? 


2  இந்தாடா  அவ போன்  நெம்பர் 


 அதை ஏண்டா  கஞ்சா பொட்டலம் தர்ற மாதிரி ஒளிச்சுத்தர்றே ? 


3  காதலிக்கப்பொண்ணு பின்னாடி போனாப்போதும் , ஆனா புரப்போஸ் பண்ண  பொண்ணு முன்னாடி போய் நிக்கணும் 


4  அவளுக்கு பெரிய மெஸேஜா அனுப்பு 


ஏண்டா? 


 படிக்க  டைம் இல்லாம ஓகே  என ரிப்ளை அனுப்பிடுவா 


5  ஹவ் ஈஸ்  லைப் ?


 'குட் 


எனி கேர்ள்  பிரண்ட் ?


நோ , கேர்ள்  பிரண்ட் இல்லாததால்தான் லைப் ஈஸ்   'குட் 

6  நான் போய் பாடிட்டு  வர்றேன்  


 அப்படின்னா ?


 நெம்பர்  ஒன்  பாத்ரூம் 


அப்போ  நானும்  வர்றேன் 


 கோரசாப்பாட இது என்ன டூயட்டா? 


7 ஏண்டா ?இவளை விட  வேற  யாரும்  கிடைக்கலையா? 


 என் ரேஞ்ச்சுக்கு  இவளே அதிகம் 


8  பொண்ணுங்களை  பெட்ரூமோட  விட்டுட்டு  வந்துடனும் பிஸினெஸ்ல  சேர்த்த வேணாம் 


நான்  பெட் ரூம்லயே பிஸ்னஸ்  செய்வேன் 


9  உலகில் 90% ஆண்கள் குடிக்கக்காரணம்  பெண்கள்  தான் 


10  பெண்கள்  தங்கள் மனசில் இருப்பதை நம்ம கிட் டே  சொல்லிடுவாங்க  , ஆனா நம்மைப்பேச விட மாட் டாங்க 

11  லண்டன்  ல லுங்கி கட்டி  இருக்கான் . மேஸ்த்திரியா இருப்பானோ? 


12 ஒரே  பையன்  கிட் டே ரெண்டு  தடவை  லவ் பெயிலியர்  ஆகிடுச்சு , எனக்கு மட்டும் எதனால இப்படி ஆகுது ? 


13  ஏண்டா , ஐசியூ  வுக்கும்  , மார்ச்சுவரிக்கும்  இடையே  உன் வாழ்க்கை ஓடிட்டு இருக்கு , உனக்கு எதுக்கு இவ்ளோ பணம் ? 


14  ஏண்டி , நீ  சும்மாவே  இருக்க மாட்டியா?  சைக்கிள் கேப் ல   இன்னொருத்தனைப்பிடிச்சுட்டியா? 


15  வாட்ச்  இட்  பேஷண்ட்லி  (  அமைதியாக அதைக்கவனி ) 


ஆல்ரெடி  ஐ ஆம் பேஷண்ட் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1    500 கோடி மதிப்பில்  இருக்கும்  டிவைஸ்  பற்றி  வில்லனுக்கும் , அவனது நண்பனுக்கும் மட்டும்  தான்  தெரியும் . வில்லி க்கு எப்படித்தெரிந்தது ? பாஸ்வோர்டு  எப்படிக்கண்டுபிடித்தார்? 


2  வில்லி  நாயகனின்  வீட்டுக்குள் நுழைந்து  கதவைத்தாழ்  போட்டு விடுகிறாள் . வில்லனின் ஆட்கள்  வரும்போது  எப்படிக்கதவை திறக்கிறார்கள்  ? 


3  வாரமலர்  மாதிரி சின்ன புக்கை சுருட்டி  நாயகன்  வில்லனின் ஆட்களை  அடிப்பது, அவர்கள்  சுருண்டு  விழுவது    எல்லாம் காமெடி 


4 வில்லனின்  நண்பன்  வில்லியைப்பார்க்க  வரும்போது  10 பேருடன்  வருகிறான் . நாயகன்  தனி ஆள் .வில்லனின்  நண்பன் எதற்குப்பயந்து  ஒளிகிறான்  ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பஞ்ச  தந்திரம் பார்த்தவர்கள் , பார்க்காதவர்கள்  எல்லோரும் பார்க்கலாம் .  ஜாலியா  இருக்கு . ரேட்டிங்  2.5 / 5 

Sunday, December 08, 2024

SSHHH (2024)-தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( ஆந்தாலஜி டிராமா ) @ ஆஹா தமிழ் 18+

             

           லஸ்ட் ஸ்டோரீஸ்  என்னும் டைட்டிலில் ஹிந்தியில்  நெட் பிளிக்ஸ்  ரிலீஸ் ஆக 2018ம் ஆண்டு  4 குறும்படங்களின் தொகுப்பாக  வந்து ஹிட் ஆனது .அதன்  2 ம் பாகம்  2022 ல் வந்து  மொக்கை ஆனது .அதே மாதிரி  பாதிப்பில் 4 குறும்படங்களின் தொகுப்பாக இது வந்திருக்கிறது .படத்தில் அடல்ட் கண்ட்டென்ட்  எல்லாம்  பெரிதாக இல்லை , ஆனால் 18+ படம் தான் 

4 கதைகளும்  தலா 30 நிமிடங்கள் , ஆக மொத்தம்  2 மணி  நேரம் தான் . மினி  வெப் சிரிஸ்  என  சொல்லலாம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 1 காமத்துப்பால்  - நாயகி  ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியை .அறிவியல் டீச்சர்  ஆன அவரை   பள்ளியில்  பாலியல்  கல்வி  கற்பிக்க  அனுப்பப்படுகிறார் .ஆனால் அவருக்கு ஒரு தயக்கம் .ஒரு பெண் ஆன நாம் எப்படி பசங்களுக்கு  சொல்லிக்கொடுப்பது ?  என தயங்குகிறார் .


அதே பள்ளியில் ஒரு மாணவன்  ஒரு  மாணவிக்கு  கன்னத்தில்   முத்தம் கொடுத்து விடுகிறான் .முத்தம் கொடுத்தாலே  குழந்தை பிறந்து விடும் என்ற அளவில் தான் அவர்கள் அறிவு இருக்கிறது . டீச்சர் , மாணவன், மாணவி பிரச்சனை எப்படித்தீர்ந்தது என்பது மீதி திரைக்கதை 


இதில்  டீச்சராக வரும்  நாயகி  ஐஸ்வர்யா தத்தா  ஓவர் ஆக்டிங் . மாணவர்கள்  இருவரும் கச்சிதம் , அந்த மாணவியும் ஓவர் ஆக்டிங்  தான் .மனோ பாலா  அனுபவம் மிக்க நடிப்பு 


ரீ லோடு - நாயகன் , நாயகி  இருவரும்  முன்னாள் காதலர்கள் . நீண்ட  இடைவெளிக்குப்பின்  சந்திக்கிறார்கள் . இருவருக்கும்  வேறு  வேறு  நபருடன் திருமணம் ஆகி விட்டது . இருவருக்குமே  திருமண  வாழ்க்கையில் திருப்தி  இல்லை . இருவரும் பரஸ்பரம் அதைப்பற்றிப்பேசும்போது  இருவரும் இரண்டறக்  கலக்கிறார்கள் . ஆனால் க்ளைமாக்ஸ்சில்  ஒரு டிவிஸ்ட்  இருக்கு . அந்த  டிவிஸ்ட் ஆல்ரெடி  2018ல் வந்த பல குறும்படங்களின்  பாதிப்பாக  இருப்பது மைனஸ் 


ஏப்ரல்  மாதத்தில் , ரோஜாக்கூட்டம்  மாதிரி தரமான  காதல் படங்களின் நாயகன் ஸ்ரீகாந்த் தான் நாயகன் இதில் . நடிப்பு குட்


3 வான்மதி - நாயகி  ஒரு மிலிட்ரி  வீரரின் மனைவி . திருமணம் ஆகி 3 மாதங்களில்  கணவர்  காணாமல் போகிறார் .மிலிடரி கேம்ப்பில்  கேடடால்  சரியான பதில் இல்லை . பல  வருடங்களாக கணவன் பற்றிய  தகவல் இல்லாததால்  நாயகிக்கு  என்ன செய்வது என தெரியவில்லை .உடல்  வேட்கைக்கு பதில் சொல்லணும் . நீண்ட  இடைவெளிக்குப்பின்  பள்ளித்தோழனை சந்திக்கிறாள் . பள்ளி  காலத்தில் அவன் அவளை ஒருதலையாகக்காதலித்தவன் . அவனுடன் இவளாக  உறவில்  ஈடுபடுகிறாள் . 

உறவு  முடிந்து  வீட்டுக்கு வந்தால் திருப்பம், காணாமல் போன கணவன்  வந்து விட்டான் .விஜய்காந்த் , சுதா சந்திரன் , ரகுமான் நடித்த  ஒரு வசந்த ராகம் கதை  


 நாயகி ஆக  சோனியா அகர்வால் .நடிப்பு  ஓகே  ரகம் 

4   இனி எல்லாம் - நாயகன்  ஐ ஏ  எஸ்  எக்ஸாம்க்குப்படித்துக்கொண்டு இருப்பவன் மிகப்பெரும்  படிப்பாளி . அவனுக்கு சமையல் செய்ய ஒரு பெண் வருகிறாள் . அவள் திருமணம்  ஆனவள் . இளம் வயதில் படிக்க ஆசைப்பட்டு அது நிறைவேறாமல்  போனதால்  இப்போது  படிக்கும் ஆர்வம் உள்ள நாயகன் மீது ஆசை .அவனுக்கும் அவள் மீது காதல் . க்ளைமாக்சில் என்னநடக்கும் என்று ஊருக்கே  தெரியும்   SAPIOSEXUAL என்ற  வார்த்தைக்கு இப்பதான் அர்த்தம் கண்டு பிடித்தேன் . தன்னை விட  இண்ட்டலிஜெண்ட்  ஆன  நபருடன்  காதல் வசப்படுவது 

நாயகன் , நாயகி இருவர் நடிப்பும் கச்சிதம் , நாயகிக்குக்கண்கள் அழகு . ஆனால் கேமரா எப்போதும் அவரது இடையை க்ளோ சப்பில்  மொய்க்கிறது 

சபாஷ்  டைரக்டர்


1  விஜய் சேதுபதி + த்ரிஷா நடித்த 96 க்ளைமாக்ஸ் , 7 ஜி ரெயின்போ காலணி க்ளைமாக்ஸ் இந்த  ரெண்டையும் மிக்ஸ் பண்ணி   மூன்று கதைகள் ரெடி பண்ணிய சாமார்த்தியம் 


2  மூன்று  கதைகளும் ஒரு மார்க்கமே இருக்கே  என விமர்சனம்  வந்து விடாமல் இருக்க நல்ல பிள்ளை போல முதல் படத்தைப்பிரச்சாரபடமாக எடுத்தது ( சின்னப்பையனா  நாமிருந்தப்ப அம்மா,அப்பா ஊருக்குப்போயிடடா நண்பர்களை  அழைத்து வந்து  கொட்டம் அடிச்சுட்டு   ஊரில்  இருந்து  திரும்பி  வரும்போது  நல்ல  பிள்ளை போல பாடப்புத்தகம்    படிப்பது போல ) 


  ரசித்த  வசனங்கள் 


1 இந்த ஆம்பளைங்களுக்கு  ஒரு புத்தி  இருக்கு , ஒரு பெண்ணை  அவனுக்குப்பிடிச்சுட்டுதுன்னா தனது  பார்வையாலேயே அவளுக்கு  

 அதைப்புரிய வெச்சிடுவான் 


2  குந்தி தேவி சூரியனைப்பார்த்த உடனேயே குழந்தை பிறந்ததாமே? 


3  பொண்ணுங்க  செக்ஸ்  சம்பந்தமா பேசக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? 


4   வாய்  உனக்கு திருவையாறு வரை போகுது 


5  உன்னைச்சுற்றி இருக்கறவங்களுக்காக வாழ்வதை முதல்ல நிறுத்து 


============================


6    உன் சிரிப்பு முன்னே மாதிரி அப்படியே  இருக்கு 


  நீ கூடத்தான் அப்படியே  இருக்க, ஆனா தொப்பை  இருக்கு 


7  நீ  ரொம்ப அழகாயிருக்க 


 நிஜமாவா? தாங்க்ஸ் 


 சும்மா, விளையாட்டுக்கு சொன்னேன், சீரியஸா எடுத்துக்காத 


8  பிறரிடம்  பகிர்ந்து கொள்ளமுடியாத  ஒரு துயரம் இருக்கு 


9  சம்பாத்தியம்  மட்டும் புருஷ லட்ஷணம் இல்லை 


10  உறவில் சிக்கல் எனில் பிரச்சனை ரெண்டு சைடுலயும் இருக்கலாம் 


11   சாரி , நான் ஏன்  அப்படிப்பண்ணுனேன்னு   எனக்கே  தெரியல 


 பரவால்ல  விடு , நீ பண்ணலைன்னா  நான்  பண்ணி இருப்பேன் 

=============================


====================\\


12  காலம் போனாக்கிடைக்காது 


13  வாழ்க்கை என்பது எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தில் வாழ்வது 


14  நம் உள்ளுணர்வு  என்ன சொல்லுதோ  அதைப்புரிஞ்ச்சு  நடக்கணும் 


15 நிழலைத்துரத்தினாலும் நிகழ்காலத்தைத்துரத்தமுடியாது 


16  பொண்ணுங்க  சொன்னா  மழை  வரும்னு   சொல்வாங்க 


17 லவ்  ,செக்ஸ்  ரண்டும்  பூ  மாதிரி மலரனும் 


==================

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

  1,    என்னதான்  ஹாலில் ஒரு பிரச்சனை  நடந்தாலும்  பாத்ரூமில்  குளித்துக்கொண்டிருக்கும் ஒரு டீச்சர்  அப்படியே  துண்டு  மட்டும் கட்டிக்கொண்டு ஹாலுக்கு வருவாரா? 


2  மாணவன்  பலான   சி டி  யை தன ரெக்கார்டு நோட்டில்  வைக்கிறான் . ஆனால் திரும்ப எடுக்கும்போது  டேபிளில்  இருப்பதை எடுக்கிறான் . சி டி மாறுவதுதான்  இங்கே டிவிஸ்ட் , ஆனால் அது நம்பும்படி சொல்லப்பட வில்லை 


3  மாறின  சி டி யை  முதலில் போட்டுப்பார்த்து  செக் பண்ணிய பிறகுதான்  அனைவர் முன்னும்  ஓட்டிப்பார்ப்பார்கள் .பலான சி டி யை அனைவர் முன்னும் ஓட்டிப்பார்க்கும்  காடசியும்  நம்பும்படி சொல்லப்பட வில்லை 


=========================================


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நான்கு  கதைகளும்  போர் அடிக்கவில்லை . ஆனால் பல இடங்களில்  பார்த்துப்பழகிய கதைகள் தான் . ஆண்களுக்கான  காலைக்காட்சிப்படம் . ரேட்டிங்  1.75 / 5 

HER STORY (2024) -மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஆந்தாலஜி டிராமா ) @ மனோரமா மேக்ஸ்

             


            பெண்களை மையப்படுத்தி  5 வெவ்வேறு சிறுகதைகள் .ஒன்றுக்கொன்று  தொடர்பில்லாதவை .பொதுவாக  குறும்படங்களின்  தொகுப்பு என்றாலே  ஐந்தில்  3 சூப்பர் , 1 சுமார் , 1 ஓக்கே  ரகம் என்ற  விகிதத்தில் தான்  இருக்கும் . இது கொஞ்சம்  வித்தியாசமாக  ஐந்துமே  சுமாரு  தான் குமாரு என்ற தரத்தில் இருக்கிறது .

சிறுகதைகளுக்கு / குறும்படங்களுக்கு டைட்டில் கூட டைரக் டர்  வைக்கலை . பொதுவாக கண்ட்டென்ட்  சரி இல்லைன்னா பே ரூ வெச்சியே  சோறு  வெச்சியா? என கலாய்ப்பாங்க . இதுல  இயக்குனர்  பேரும் வைக்கலை , சோறும்  வைக்கலை 


1  ஸ்பாய்லர்  அலெர்ட்


1 ஐஸ்வர்யா ராஜேஷ் - இயற்கை அழைப்பு 


நாயகி  வீடடை விட்டு  வெளியே போகிறார் . ஆட்டோ வில் போகும்போது  அவருக்கு  நெம்பர் ஒன்  பாத்ரூம் அவசரமாக  வருகிறது . பப்ளிக் டாய்லெட் , பொதுஜனம்  இருக்கும் வீடு  என அவரும் பல முயற்சிகள்  எடுக்கிறார் .அவர் படும் வேதனைகள்  தான் மெயின் கதை ..ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிப்பு கனகச்சிதம் .2019ல்  வெளியான மிக மிக அவசரம்  எனும்  படத்தில் இக்கதைக்கரு  ஆல்ரெடி அலசி ஆராயப்பட்டு விட்டதால் புதுசா எதுவும் இல்லை .பெட்ரோல்   பங்க்குகளில்  லேடீஸ் டாய்லெட்  இருக்கும் ,அதை நாயகி ட்ரை பண்ணவே இல்லை 


2 ரம்யா நம்பீசன் - சோஷியல் மீடியா சோனியா 


சமூக வலைத்தளங்களில்  சமூக சேவகிகளாக  வலம் வரும் பில்டப்  பகவதிகளின் முகத்திரையைக்கிழிக்கிறது இந்தப்படம் . நாயகி ; யாருக்கும் எந்த  உதவியும் செய்யாதவர் .அடுத்தவர் கஷ்டங்களைப்புரிந்து கொள்ளாதவர் . ஆனால்   சமூக வலைத்தளங்களில்  சமூக சேவகி ஆக தன்னைக்காட்டிக்கொள்ள  பொய்யான பிம்பத்தைக்கட்டமைக்கிறார் .


இது எல்லாம் 1990 கால கட்டத்திலேயே கவுண்டமணி  பல படங்களில்  நக்கல் அடித்து  விட்டார் 


3 ஊர்வசி =  அலெக்ஸ்சா 


உள்ளொழுக்கு  என்ற மலையாளப்படத்தின்  மெகா ஹிட்டுக்குப்பின்ஊர்வசி +பார்வதி திருவோத்து காம்ப்போவில்  ஒரு படம் . இதில் ஊர்வசி ,பிரதாப்  போத்தன்  இருவரும் மிடில் ஏஜ்டு   கப்பிள் . அமைதியான இவர்கள் வாழ்க்கையில் அலெக்ஸ்சா 

   என்ற  ரோபோ  அல்லது   கம்யூட்டர்  டிவைசால்  அன்னியோன்யம் குறைகிறது .இதை நாயகி எப்படி சமாளிக்கிறார்  என்பது  உப்பு சப்பு இல்லாத க்ளைமாக்ஸ் 


ஊர்வசி ,பிரதாப்  போத்தன்  இருவர்  நடிப்பும்  கச்சிதம் .ஆன்ட்ராயிடு குஞ்சப்பன்  5.25 (2019) மலையாளம் +அதன் ரீமேக்கான  கூகுள் குட் டப்பன் (2022) தமிழ்  ஆகிய படங்களில்  பார்த்த காட் சிகள் ரிப்பீட் ஆவது மைனஸ் 


4  லிஜோ மோல் ஜோஸ்  -திருப்தி 


 நாயகி  ஒருவரைக்காதலிக்கிறார் . அம்மா,அப்பாவுக்கும் தெரியும் . திடீர்  என அவர் காதலனைத்தவிர்க்கிறார் . விட்டத்தையே  வெறித்து  வெறித்து பார்க்கிறார் . ஏகப்பட்ட  பில்டப்களுக்குப்பின்  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  வெளிப்படுகிறது . திருமணத்துக்கு முன்பே  இருவரும்  உறவு கொள்கிறார்கள் அதில் காதலனால்  நாயகியைத்திருப்திப்படுத்த முடியவில்லை . இவன் இதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் என நாயகி முடிவு எடுக்கிறார் .மடத்தனமான  கான்செப்ட் . பாலியல் கவுன்சிலிங்  அல்லது  மருத்துவரிடம்  அழைத்துசென்றிருந்தால்  மேட்டர்  ஓவர் .புரட்சிகரமாகபடம்  எடுக்கிறேன் என எதையாவது  போட்டு  உருட்ட வேண்டியது  


5  பார்வதி திருவோத்து - மறதி 


நாயகி ஐ டி கம்பெனியில்  பெரிய பதவியில்  இருப்பவர். வீட்டில்  சமைக்கும்போது  அடுப்பில்  குண்டாவை சூடாக்கிக்கொண்டு இருக்கிறார் . ஞாபக  மறதியாக  அடுப்பை அணைக்காமல்  கம்பெனிக்கு வந்து விடுகிறார் . மீட்டிங்கில்  பேசும்போது  .கான்செண்ட்ரேஷன் , டெடிகேஷன் பற்றி  எல்லாம்  பிரமாதமாப்பேசுகிறார் . திடீர்  என  அடுப்பு  நினைவு  வந்து ஓடுகிறார் .ஊருக்கு உபதேசம் , வீட்டில்  ஒண்ணுமில்ல  என்ற  கான்செப்ட் தான் 


சபாஷ்  டைரக்டர்

1  மலையாளப்படங்களுக்கு என ஒரு மார்க்கெட்  இருக்கு , என்ன கதை சொன்னாலும் எல்லாரும் ஹிட் ஆக்கிடுவாங்க என்ற தைரியம் 


2  பத்துப்பைசாவுக்கு  பிரயோஜனம்  இல்லாத  5 கதைகளில்  பிரபலமான  நாயகிகள் ஐவருக்கு கதை என எதையோ  சொல்லி புக் செய்த சாமார்த்தியம் 


  ரசித்த  வசனங்கள் 

 இருப்பது  ஒரு வாழ்க்கை , அதை நம் இஷ்டப்படி  வாழனும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  திரைக்கதை  என ஒண்ணு ரெடி பண்ணுனாத்தானே  அதில் குறைகள் கண்டுபிடிக்க முடியும் ? 


2  டப்பாப்படமான  இந்தியன் 2 , குப்பைப்படமான  கங்குவா  போன்றவற்றில்  கூட   ரசித்த  வசனங்கள்  10 தேறியது . இதில்  ரெண்டு கூடத்தேறலை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U

 ( அடல்ட்  கண்ட்டெண்ட்டும் இல்லை , கண்ட்டெண்ட்டும்  இல்லை ) 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  அழகான , பிரபலமான  நாயகிகள்  முகம் பார்த்து  யாரும் ஏமாற வேண்டாம் . வேஸ்ட் . ரேட்டிங் - 1/ 5 

Friday, December 06, 2024

AGNI (2024) -ஹிந்தி - சினிமா விமர்சனம் ( மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

         

     6/12/2024 ஆகிய  இன்று  திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆன இந்தப்படம்  அமேசான் பிரைம்  ஓ  டி டியிலும்  இன்றே  காணக்கிடைக்கிறது .போலீஸ் , மிலிட்டரி  சப்ஜெக்ட்டுகள்  தமிழில்  பல படங்கள்  வந்திருக்கின்றன .ஆனால் பயர்  சர்வீஸ் ஆட்களின்  தியாகம் , வீரம் பற்றி  டீட்டெயில்  ஆன ஒரு முழுப்படம்  வந்ததில்லை ( மைக்கேல்  மதன காமராஜன்  ல  கமல்  தீ அணைப்புப்படை வீரராக வந்தாலும்  அது காமெடிப்படம் தான் )


JWALA MEI  JO JETHA HAI VO AMAR HO JAATHA HAI           -ஜ்வாலா  மே  ஜோ ஜீத்தா  ஹை வோ  அமர் ஹோ ஜாத்தா ஹை = தீப்பிழம்பின்  உக்கிரத்தைத்தாண்டி  யார்  உயிர்  வாழ்கிறார்களோ அவர்கள் அழியாப்புகழ்  அடைகிறார்கள் என்ற  அறிமுகத்துடன்  படம்  துவங்குகிறது .


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தீ அணைப்புத்துறையில்  ஹையர் ஆபீசர் . மனைவி , மகன் என்று குடும்பத்துடன்  இனிய  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறான் நாயகனின்  மச்சினன்   ஒரு போலீஸ் ஆபீசர் . இருவருக்கும் ஈகோ கிளாஸ்  உண்டு . நாயகனின் மகன்  நாயகனை மதிப்பதில்லை .நாயகனின் மகன்  நாயகனின் மச்சினன் அதாவது  தாய்மாமா மேல்  மதிப்பும், மரியாதையும்  வைத்திருக்கிறான் .


 இது நாயகனுக்கு ஒரு மனக்குறையாக இருந்து வருகிறது . மக்கள்  போலீசை  மதிப்பது போல பையர் சர்வீஸ்மேனை   மதிப்பது இல்லை  என்பது  ஒரு குறையாக  இருக்கிறது 


நகரில்  அடிக்கடி  கட்டிடங்கள்  தீ விபத்தை சந்திக்கின்றன .இவை எதேச்சையானவை இல்லை , திட்டமிட் ட  சதி  என்பது தெரியவருகிறது . நாயகன்  அந்தக்கேஸை  ஆராய்ந்து கொண்டிருக்கும்போது 


போலீஸ் ஆபீசர்  ஆன  நாயகனின் மச்சினன்  அந்தக்கேஸை  அவசர கதியில்  விசாரித்து   தவறான  ஆளை  குற்றவாளி   என  கோர்ட்டில்  நிறுத்துகிறான் .


 அதாவது  கட்டிடங்களுக்கு    தீ  விபத்தை ஏற்படுத்தி  பிறகு லேண்ட்  வேல்யூ குறைந்ததும்  அதை  மலிவான விலையில்  ஒருவன் வாங்கி வருகிறான் .அவன் தான்  குற்றவாளி  என தவறாக  முடிவு எடுக்கிறான் . உண்மையான  குற்றவாளியை  நாயகன்  எப்படிக்கண்டுபிடிக்கிறான் என்பது மீதி திரைக்கதை 


நாயகன் ஆகப்பிரதீக் காந்தி அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார் .நாயகனின்  மச்சினன்  ஆக திவ்வியண்டு சர்மா  வில்லத்தனமான  ரோலில்  அசத்தி  இருக்கிறார் இவர்கள்  இருவரின் மனைவிகள் ஆக ஷய மி கேர் , சாய் தமாங்கர்  ஆகியோர்  குடும்பப்பாங்கான நடிப்பை வழங்கி உள்ளனர் 

விஜய மயூரியா  உடன் இணைந்து  திரைக்கதை எழுதி  இயக்கி இருக்கிறார் ராகுல் டோலக்கியா . ஒளிப்பதிவு .இசை , எடிட்டிங்க்  போன்ற  டெக்கினிக்கல் அம்சங்கள்  குட் . 2மணி நேரம்  டியூரேஷன் 


சபாஷ்  டைரக்டர்


1  பையர் சர்வீஸ் மேன்களின்  தியாகம்  எப்படிப்பட்ட்து ?என்பதை டாக்குமெண்டரி  டிராமா  போல  சுவராஸ்யமாக  சொன்ன விதம் , இருவருக்கு இடையில்  ஆன  ஈகோ கிளாஸ் ஸை  பேமிலி  டிராமாவாக சொன்ன விதம், குற்றவாளியைக்கண்டுபிடிக்கும்  திரில்லிங்க்  என  3  விதமாக  திரைக்கதையை அமைத்த விதம் 


2  தீ விபத்து  நடந்த  இடங்களில்  வீரர்கள்  செயல்படும்  விதத்தை  போர் அடிக்காமல் ஆக்சன் சீக்வன்ஸ்  போல்  காட்டிய விதம்


3  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட்  


  ரசித்த  வசனங்கள் 


1  இன்னைக்கு பிரமாதமா ஒர்க் பண்ணிப் பலரை காப்பாத்தீட்டீங்க  சார்  


அப்போ  மத்த நாட்கள் எல்லாம் காப்பாத்தலையா? எல்லா நாளும் ஒரே மாதிரி தான் வேலை செய்யறோம் 


2  ஊரெல்லாம்  என்னைப்புகழறாங்க ,பாராட்டு மழை ல நனைக்கிறாங்க , ஆனா என் பையனைப்பாரு , கண்டுக்கவே மாட்டே ங்கறான் , இவன் என் பையன் தானா?னு சந்தேகமா இருக்கு 


அப்படி எல்லாம் பேசாதீங்க , என்னைக்காவது ஒரு சாக்லேட் வாங்கிக்கொடுத்திருப்பீங்களா? . எப்படி  உங்களோட மிங்கில் ஆவான் ? 


3 என் அண்ணன்  சொந்தமா  புது வீடு  வாங்கிட்டான் . ஆனா நீங்க ? 


உன் அண்ணனுக்கு இன்ஸ்பெக்டர்  பிஸ்னஸ்  நல்லா  செட் ஆகிடுச்சு போல 


என்னது ? பிஸ்னெசா? 


4     நீ ஓடிப்போய் திருடனைப்பிடிச்சயா? உன் தொப்பையைப்பார்த்தா   அபப்டித்தெரியலையே?


5  ஸ்டேமினோ  நல்லாருந்தா  உன் பேமிலிக்கும்  நல்லது , உனக்கும் நல்லது 


6   ப்ளூ பிலிம்  பார்த்தீங்களா? 


யோவ் ,அது  ப்ளூ பிலிம்  இல்லை ,  ப்ளூ பிலேம் ( BLUE FLAME)


7   ஒரு பயர் சர்வீஸ் மேனோட   பேவரைட்  டயலாக்  எது தெரியுமா? பாகல் - பாணி (தண்ணீர் ) , கேஸ் , லைட்  


8 உன் லங்க்ஸ்  ரொம்ப  வீக்காயிருக்கு  உன்னை நீ  கவனிக்கலைன்னா  உனக்கான மெடலை உன் சம்சாரம்தான் வாங்குவா, நீ வாங்க மாடட. வாங்க, உயிரோடிருக்கமாடட


9  நம் நாட்டோட  பிரச்சனை  என்ன  தெரியுமா? யாருக்கும்  வாழ்க்கையின் மதிப்பு தெரியறதில்லை . தெரிய வரும்போது அவங்க வாழ்க்கையே முடிஞ்சிருக்கும் 


10   என்     நெற்றில  இளிச்சவாயன்னு  எழுதி  இருக்கா? 


 இல்லை , அந்தவிஷயம்தான்  எங்க எல்லாருக்கும் தெரியுமே? எதுக்காக எழுதி  வைக்கணும் ? 


11   நெருப்புக்கு  இரை ஆகக்கூடிய அபாயம் உள்ள கட்டிடங்களின்   எண்ணிக்கை   வருடா  வருடம்  அதிகரித்துக்கொண்டே  இருக்கு . யாரும் ரூல்ஸை  பாலோ பண்றதில்லை 


12   விபத்தில் இறந்த குடும்பத்துக்கு  காம்ப்பெட்டிஸன்  அறிவிக்கப்போறேன் 


 இவரெல்லாம்  ஒரு சி எம் . சார் .அது காம்ப்பன்சேசன் 


13  மெடலுக்காக  வேலை செய்யாதே , அது உன் மெடிக்கல் பில்லைக்கட்  டாது 


14  என் அப்பாவும் , என் அண்ணனும்  20 உயிர்களைக்காப்பாற்றி இருக்காங்க . ஆனா  டியூட்டில  அவங்கஉயிரை விட்டப்போ அந்த 20 பேர் கூட வந்து பார்க்கலை .அவரால் காப்பாற்றப்பட்ட  20 பேரும் கை   தட்டி அவரோட தியாகத்துக்கு  மரியாதை செலுத்துவாங்கனு நினைச்சேன்  

15  பொதுமக்கள் யாருக்காவது ஒரு பையர் சர்வீஸ்மேன்  பேராவது தெரியுமா? 


 16  தெருக்களுக்கு , அரசியல்வாதிகள் பெயரை வைக்கறாங்க , ஒரு பையர் சர்வீஸ்மேன்  பேராவது   வெச்சிருக்காங்களா?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   வில்லன்  மேல்  பரிதாபம்  வருவது  போலக்காட்சிகள் வைக்கக்கூடாது 


2  போலீஸ் ,மிலிட் டரி  உட்பட  பல துறைகளில்  மெடிக்கல்  பிட்னஸ்  அவ்வப்போது செக் செய்வார்கள் .அதை நாயகன் குறை சொல்வது ,மனம் நோவது எடுபடவில்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - clean u 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - -குடும்பத்துடன்   பார்க்கத்தக்க  கண்ணியமான திரில்லர்  படம் . ரேட்டிங்  3 / 5 


Agni
Official release poster
Directed byRahul Dholakia
Written byRahul Dholakia
Vijay Maurya
Produced byRitesh Sidhwani
Farhan Akhtar
Starring

Jitendra Joshi

Kabir Shah
Production
companies
Distributed byAmazon Prime Video
Release date
  • 6 December 2024
CountryIndia
LanguageHindi

Thursday, December 05, 2024

PUSHPA 2:THE RULE புஷ்பா 2 த ரூல் - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ நெட்பிளிக்ஸ்

                         

500 கோடி ரூபாய்   பட்ஜெட்டில்  எடுக்கப்பட்ட  இந்தப்படம் ரிலீஸ் ஆகும்  முன்பே  1085 கோடி பிஸ்னஸ் ஆகி விட்டதாக  சொல்லப்படுகிறது . முதல் நாள்  டிக்கெட்  புக்கிங்க் மட்டும் 285 கோடி ரூபாய்   நெட்பிளிக்ஸ்  க்கு  உரிமம்  விற்ற தொகை  275 கோடி ரூபாய்

புஷ்பா  படத்தின் முதல் பாகம் ஓடியதே   ஊ  சொல்றியா  மாமா ஓ  சொல்றியா மாமா  பாட்டு ஹிட்  ஆன  ஒரே  காரணத்துக்காகத்தான் என்று சொல்வோர் உண்டு , காரணம் படத்தின் கதைக்கரு  1994ல் முரளி நடித்து  வெளியான  அதர்மம்   படத்தின்  கதை தான் .ஆனால் முதல் பாகம் அதிரி  புதிரி  ஹிட் ஆனாலும் , வசூலில்  கலக்கி  இருந்தாலும்  தரத்தில்  சுமார்  ரகமே 


செம்மரக்கடத்தலில் ஈடுபடும்  நாயகன்  அதில் எப்படிப்பெரிய ஆள்  ஆகிறான்  என்பதும்   போலீஸ் ஆபீஸருக்கும், நாயகனுக்கும் இடையில்  நடக்கும்  ஆடு புலி ஆட் டமும் தான் முதல் பாகத்தின் கதை 

ஸ்பாய்லர்  அலெர்ட்


செம்மரக்கடத்தல்  நாயகன் ஆன படத்தின் நாயகன்  அரசியல் செல்வாக்கு மிக்கவன் . முதல்வரை சந்திக்கப்போகும்போது  அவன்  மனைவி  முதல்வருடன்  நாயகன்  சேர்ந்தாற்போல  ஒரு போட்டோ  எடுக்க ஆசைபப்டுகிறாள்  . ஆனால் முதல்வரோ   எல்லார்  முன்னும் நாயகனை அவமானப்படுத்தி விடுகிறார் . நீ ஒரு கடத்தல்காரன் .. உன்னுடன் இணைந்து நிற்பது போல மீடியாக்களில் போட்டா  வந்தால் என்  இமேஜ்  டேமேஜ் ஆகி விடும் என்கிறார்  

இதனால் செம காண்ட்  ஆன  நாயகன்  தன அடியாள்  ஒருவரை  முதல் அமைச்சர் ஆக்குவதாக சவால் விடுகிறான். அவனது  சவால் /சபதம் நிறைவேறியதா என்பது  மீதி திரைக்கதை  


நாயகன் ஆக அல்லு அர்ஜுன்  கலக்கி இருக்கிறார் . ஆனால் ஹீரோயிசம்  ஓவரோ ஓவர் . மாற்றுத்திறனாளி  மாதிரி  உடலை  சாய்த்தபடி  அவர் நடப்பதை அவரது ரசிகர்கள்  விசில் அடித்துக் கொண்டாடுகிறார்கள் . ஆனால்  பார்க்கவே  பரிதாபமாக  இருக்கிறது . இவர் அணிந்து  வரும் கலர்  கலர்  பூக்கள்  போட் ட  டிசைன் சர்ட் எல்லாம்  நம்ம ஊரு பூவாத்தா , தங்கமான ராசா வில்  ராமராஜன் அணிந்தவைதான் . பிச்சைக்காரன் மாதிரி  தாடி , வாயில் பாண் பராக்  , துப்பாமல் எச்சிலோடு பேசுவது  குமட்டுகிறது


நாயகி ஆக ,  மனைவி ஆக ராஷ்மிகா   மந்தனா  ஓவர் கிளாமர் . என்னதான்  மனைவி என்றாலும்  கொஞ்சமாவது  குடும்பப்பாங்காக  இருக்க முயற்சிக்கக்கூடாதா? தியேட்டரில்  அப்ளாஸ்  வாங்க  இதெல்லாம் ஒரு பொழப்பா?  என  முகம் சுளிக்க  வைக்கிறார் 

 போலீஸ் ஆபீசர் ஆக பகத் பாசில்  மொட்டை  தலையுடன்  வருகிறார் .இவர் கொஞ்சம்  பரவாயில்லை 

இசை  தேவி ஸ்ரீ பிரசாத் . முதல் பாகம் அளவு  பாடல்கள்   ஹிட் ஆகாவிடடாலும்  பரவாயில்லை ரகம் .ஒளிப்பதிவு  மிரோஸ்லா  செமயான உழைப்பு .பிரமாண்டமான  காடசிகளை  அருமையாகப்படம் பிடித்து இருக்கிறார் . எடிட்டிங்க்  நவீன் நூலி . 195  நிமிடங்கள்  ஓடுகின்றன . பெரிய  டிரா பேக்  படத்தின் நீளம் 


ஜெகபதி பாபு,சுனில் , ஆடுகளம்  நரேன் ,மைம் கோபி  உட்பட  பலரும்  வீணடிக்கப்பட்ட  நல்ல  கலைஞர்கள் 

ஸ்ரீகாந்த்    விசா  உடன்  இணைந்து திரைக்கதை  எழுதி இயக்கி இருக்கிறார்  இயக்குனர்  சுகுமார் . கமர்ஷியல்  அய்ட்டங்களை  ஓவர் டோஸாக திணித்து  வைத்திருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்

1  போலீஸ்  ஸ்டேஷனில்  எல்லா போலீஸ்களுக்கும்  ஆயுள்  கால சம்பளம் ,கிம்பளம்  எல்லாம் சேர்த்து செட்டில் செய்யும் காட் சி  மடத்தனமானது என்றாலும் மாஸ்  சீன் 


2  கண்டபடி பிரமோஷன்  செய்து  வியாபாரம் செய்த சாமார்த்தியம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1   வந்துச்சே  பீலிங்கு 


2    எடுடா  எடுடா  போட்டோ  எடுடா  


  ரசித்த  வசனங்கள் 


1   செருப்பு காலுக்கு சுகமா  இருக்குதுன்னு கைக்கு எடுத்து மாட்டிக்க முடியுமா? 


2 பொண்டாட்டி பேச்சைக்கேட்டு  முன்னேறுன  மனுஷன்  யாரும்  இல்லை 


3  புஷ்பா பேரு  சின்னது , ஆனா   சவுண்ட்  பெருசு .ஓ ஓ 


4   சி எம் ஆக  எவ்ளோ  செலவு ஆகும் ?


 100 கோடி 


 நான்  1000 கோடி தர்றேன் 


5 புஷ்பா-ன்னா  நேஷனல்  என நினைத்தாயா?   இண்ட்டர் நேஷனல்-டா   

6 அங்கெல்லாம்   தொடக்கூடாது , சார்ஜ் ஏறிடும் 


ஏறுனா  நல்லதுதானே? 


7  டேய் ...  உன்  அக்காவுக்கு நான் போட்டிருக்கும் சொக்கா பிடிக்கலையாம், மாத்திட்டு வந்துடறேன் 


புரியுதுண்ணா ,    அரை  மணி  நேரம் ஆகும் ? வெயிட்  பண்றேன் 

8  தமாஷ்     பண்ணாதிங்கண்ணா 


புஷ்பா-ன்னா  மாஸ்  டா , தமாஷ் இல்லை 


9   அவனை பயமுறுத்துனா , அவனுக்கு மட்டும்  தான் பயம்  வரும் , ஆனா  அவனைக்கொன்னுட் டா , மொத்த சிண்டிகேட்டுக்கும் பயம்  வரும் 


10  இவன்  டி சீனி , அவன்  பி  சீனி . ஆள்  மாறாட்டம்  பண்ண முடியாது 


டி க்குக்கீழே  இன்னொரு டி போட்டா  அது பி ஆகிடாது ? 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   ஹீரோ ஓப்பனிங்  சீனில் தலைகீழாய்க்காலில்  கயிறு கட்டி  தலை கீழ்  விருக்சாசனம்  செய்து  சீன்  காட்டுவது 1983ல்  மலையூர்  மம்பட்டியான்ல   நாம பார்த்தாச்சு 


2   இண்ட்டெர்வெல்  பிளாக்  சீன்  மகா மட்டம் . போலீஸ் ஆபீசரிடம்  வேறு வழி இல்லாமல் சாரி  கேட்கும்  நாயகன்  அதற்குப்பழி வாங்க  ரிட்டர்ன்  வந்து போலீஸ் ஆபீசரை   ஸ்விம்மிங்க் பூலில்  தள்ளி விட்டு  அவரை அவமானப்படுத்த  யூரின் போகும்  காட் சி  கேவலம் .கற்பனை வறட்சி 


3   போலீஸ் ஆபீசர் ,நாயகன்  இருவரும்  விசில் அடித்துக்கொண்டே  பேசும்  காட்சியில்  கேவலமான  டபுள்  மீனிங்  டயலாக் . கோமாளித்தனத்தின் உச்சம் 


4    போலீசை ஏமாற்றி  நாயகன் செம்மரக்கடடைகளைக்கடத்தும் ஐடியாக்கள் எல்லாம்  படு  திராபை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஆந்திராவில்  இந்தப்படம்  ஹிட் ஆகலாம் .ஆனால்  தமிழர்கள்  தரமான  ரசனை கொண்டவர்கள் . இந்த மாதிரி குப்பையை  ரசிக்க மாட்டார்கள்  என நம்பிக்கை இருக்கிறது .


புஷ்பா 2 (தெலுங்கு /தமிழ் ) - இந்தியன் 2 , தங்கலான் , கங்குவா வரிசையில் இதுவும் ஒரு குப்பைப்படம் தான் . 800 ரூபாய் டிக்கெட் ரேட் ஓவரோ ஓவர் .திரைக்கதை எழுத டைம் இல்லை போல .கே ஜி எப் 2 + காந்தாரா அட்லி ஒர்க் .குடும்பத்துடன் பார்க்கத்தகுதி அற்ற படம் , மட்டமான ரசனை . ரேட்டிங் 1.5 / 5


Pushpa 2: The Rule
Theatrical release poster
Directed bySukumar
Written bySukumar
Srikanth Vissa (dialogues)
Produced by
  • Naveen Yerneni
  • Yalamanchili Ravi Shankar
Starring
CinematographyMiroslaw Kuba Brozek
Edited byNaveen Nooli
Music byDevi Sri Prasad
Production
companies
Distributed bysee below
Release date
  • 5 December 2024
Running time
200 minutes[1][2]
CountryIndia
LanguageTelugu
Budget400–500 crore[3][4]

SIKANDAR KA MUQADDAR (2024) -ஹிந்தி /தமிழ் - சினிமா விமர்சனம் (ஹெய்ஸ்ட் த்ரில்லர்)@நெட் பிளி க்ஸ்

   

                     

சிக்கந்தர் கா முக்கதர்   என்ற ஹிந்தி  வார்த்தைக்கு சிக்கந்தரின் தலையெழுத்து   என்று அர்த்தம் . இந்தப்படம் திரை அரங்குகளில்  ரிலீஸ் ஆகாமல் நேரடியாக நெட் பிளிக்சில்  29/11/2024  அன்று  வெளியான படம்  நீரஜ் பாண்டே இயக்கத்தில் விறுவிறுப்பான  திரைக்கதை படத்தின்  பலம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஒரு ஆளுங்கட்சி அமைச்சரோட பினாமி சொத்தான இடத்தில் அவருக்கு சொந்தமான நகை,வைரக்கண்காட்சி நடக்குது.அப்போ 4 கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகைகளைக்கொள்ளை அடிக்க பிளான் போடறாஙக.



ஆனா இந்தத்தகவல் எப்படியோ போலீஸ் ஆபீசருக்குத்தெரிந்து உஷார் ஆகி 4 பேரையும் போட்டுத்தள்ளிடறாங்க.ஆனா இந்த களேபரத்தைப்பயன்படுத்தி யாரோ வேற ஆள் சில வைரங்களைக்கொள்ளை அடிச்சிடறாஙக.


போலீஸ் ஆபீசர் 3 பேர் மேல சந்தேகப்படறாரு.நாயகன். நாயகி ,இன்னொரு டம்மி பீஸ்

3 பேரையும் கைது பண்ணி விசாரிக்கறாரு.ஆனா 3 பேரும் நிரபராதினு சாதிக்கறாங்க.3 பேரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவங்க.ஆனா போலீஸ் ஆபீசர் இவஙக 3 பேருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கனும்னு நினைக்கறார்.


ஆனா வைரமும் கிடைக்கலை.3 பேருக்கும் எதிரான சாட்சிகளோ தடயங்களோ அகப்படலை.

கோர்ட் அவஙக 3 பேரையும் ரிலீஸ் பண்ணிடுது

அப்போ நாயகன் போலீஸ் ஆபீசர் கிட்டே சவால் விடறான்.என்னைக்காவது ஒரு நாள் உங்க கணிப்பு ,யூகம் தப்பு என உணர்வீங்க.அப்போ என் கிட்டே மன்னிப்புக்கேட்பீஙக என்கிறான்

15 வருடங்கள் கழித்து போலீஸ் ஆபீசர் நாயகனை சந்தித்து மன்னிப்புக்கேட்கிறார்.ஒரு திடுக்கிடும் தகவலையும் சொல்கிறார்.

அந்தத்தகவல் என்ன? அதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் என்ன? என்பது மீதி திரைக்கதை


நாயகன் ஆக.அவினாஷ் திவாரி நடித்திருக்கிறார்.பிரமாதமான ,உணர்ச்சிகரமான நடிப்பு.போலீசால் சித்திரவதைக்கு ஆளாவது,நாயகி உடனான காதல் ,வேறு இரு பெண்களுடனான நட்பு என படம் முழுக்க அவரது ராஜாங்கம் தான்

நாயகி ஆக தமனா.அதிக வாய்ப்பில்லை.வந்த வரை குட்

நாயகனின் இரு தோழிகளாக திவ்யா தத்தா , ஜோயா அப்ரோஜ்  நடித்திருக்கிறார்கள்.அழகிய முகம்.இளமை பொங்கும் உடல்

போலீஸ் ஆபீசராக. ஜிம்மி சேர்கில்  நடித்திருக்கிறார்.தன் உள்ளுணர்வு பொய் சொல்லாது என அவர் காட்டும் ஈகோ அருமை
 ரிதிமா பண்டிட்டும் குட்  ஆக்டிங்க் 

பாயல்  தேவ் தான் இசை . பாடல்கள்  சுமார்  ரகம் , பின்னணி  இசை பட்டாசு .  பிரவின் கதிக்குலத்தின்  எடிட்டிங்கில்  படம்  143  நிமிடங்கள்  ஓடுகின்றது . அவரது நான்  லீனியர்  கட் நல்ல உத்தி .அர்விந்த் சிங்கின் ஒளிப்பதிவு அருமை .ரிபுள் கே ராவளின் உதவியுடன் திரைக்கதை  அமைத்த  நீரஜ் பாண்டே  தனது  கதையை தானே இயக்கி இருக்கிறார் 


சபாஷ்  டைரக்டர்

1. படம் ஆரம்பித்து முதல்27   நிமிடங்கள் காட்சிகள் பறக்கின்றன.செம ஸ்பீடு

2. நான் லீனியர் கட்டில். திரைக்கதை சுவராஸ்யமாக நகர்கிறது.15 வருடங்களுக்கு முன் ,பின் என மாறி மாறி காட்சிகள் வருவது அருமை

3. க்ளைமாக்சில் இரண்டு ட்விஸ்ட்கள் உண்டு.குட்.

ரசித்த  வசனங்கள் 

1 மும்தாஜ் உயிரோட இருந்தப்பவே ஷாஜகான் தாஜ்மகாலைக்கட்டி இருந்தா அவ அதிக சந்தோஷப்படிருப்பா இல்ல?



2 நமக்குப்பிடிச்சவங்க நம்ம கூட இருந்தா நம்மை சுத்தி இருக்கற. எல்லாமே அழகாத்தெரியுது இல்ல?


3. எப்போ எனக்கு ஒரு கெடுதல் நடந்தாலும் நீங்க என் பக்கத்துலயே இருக்கற மாதிரி தோணுது


4.  கேவலமான மனுசங்களோட கேவலமான புத்தி


5.  என் மேல எனக்கே மரியாதை வர்ற மாதிரி சில வேலைகள் எல்லாம். செய்ய ஆரம்பிச்சேன்


6.  என்னோட பிடிவாதம் ஒரு நோய். ஆக மாறிடுச்சு


7. நாம எல்லாருமே நம்ம கனவுக்கும்,பிடிவாதத்துக்கும் இடையே தான் ஓடிக்கிட்டு இருக்கோம்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரத்தை  1 1/2 லட்ச ரூபாய்க்கு விற்பது நம்பும்படி இல்லை

2. ஹாலில் உள்ள அனைவரையும் செக் செய்தும் ஒரு ஆள் தன் நீளமான நகத்துக்குள் வைரத்தை மறைத்துக்கடத்துவது நம்ப முடியவில்லை

3. இன்னொரு ஆள் வைரத்தை அபேஸ் செய்வது நம்பும்படி இருந்தாலும். விஷூவலாக இன்னும் டீட்டெய்லாகக்காட்டி இருக்கலாம்

4. போலீஸ் ஆபீசருக்கும் அவரது மனைவிக்கும் டைவர்ஸ் வர இந்தக்கேஸ் தான் காரணம் என ஒரு வசனம் வருது.ஆனா விபரம் இல்லை

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்கொஞ்சம் லாஜிக் மீறல்கள் இருந்தாலும். வன்முறை இல்லாமல் 18+காட்சிகள் இல்லாமல் கண்ணியமான திரில்லர் படம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங். 3/5


Sikandar Ka Muqaddar
Official release poster
Directed byNeeraj Pandey
Screenplay by
Story byNeeraj Pandey
Produced byShital Bhatia
Starring
CinematographyArvind Singh
Edited byPraveen Kathikuloth
Music byPayal Dev
Production
company
Distributed byNetflix
Release date
  • 29 November 2024
Running time
143 minutes[1]
CountryIndia
LanguageHindi