Tuesday, December 03, 2024

சொர்க்க வாசல் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( வயலன்ஸ் ட்ராமா )@ நெட்ஃபிளிக்ஸ்

                         


தமிழ்  சினிமாவில் ஜெயிலுக்குள் கதை நடப்பது மாதிரி  திரைக்கதை  அமைக்கப்பட்ட படங்கள் என ஒரு லிஸ்ட்  எடுத்தால் மகாநதி (1994) , விருமாண்டி(2004) , வடசென்னை(2018) , மிஷன் சாப்டர் 1 (2024)  என எல்லாமே  மாறுபட்ட வெற்றிப்படங்கள் என்பது ஒரு ஆச்சரியம் . அறிமுக இயக்குனர் ஆன  சித்தார்த்  விஸ்வநாத் அதே  போல  ஒரு ஜெயில் கதையைத்தான்  தந்திருக்கிறார் . மாறுபட்ட திரைக்கதைதான்  என்றாலும்  இது அனைத்துத்தரப்பினருக்கான படம் இல்லை . வன்முறைக்காக  ஏ சர்ட்டிஃபிகெட் பெற்ற படம் 


29/11/2024   அன்று திரை அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  விரைவில்  நெட்  ஃபிளிக்ஸில்  வெளி வர இருக்கிறது 



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தள்ளுவண்டிக்கடை யில் டிஃபன் ஐட்டங்கள்  விற்பவர் .அம்மா, மனைவியுடன்  வசித்து வருகிறார். அந்த ஏரியாவில் நடந்த ஒரு கொலை பற்றி விசாரிக்க போலீசால் அழைத்துச்செல்லப்படும்  அவர் அந்தக்குற்றத்தையே செய்ததாக ஜெயிலில் அடைக்கப்படுகிறார் . 


 ஜெயிலில்  தாதா  ஆன  வில்லன் இருக்கிறான் . அவன் ஜெயிலில் இருந்து கொண்டே  வெளியே  எல்லோரையும் ஆட்டிப்படைப்பவன் . புதிதாக  ஜெயிலுக்கு  இன்சார்ஜ் ஆக  வரும் ஆஃபீசர் வில்லனைப்போட்டுத்தள்ள  முடிவெடுக்கிறார் . ஜெயிலில் சமையல் செக்சனில் வேலை பார்க்கும்  நாயகன் இடம்  பேதி மருந்தைக்கொடுத்து  அதை வில்லன் சாப்பிடும் உணவில் கலக்கச்சொல்கிறார் .


 ஆனால்  நாயகன்  அதைக்கலக்கும் முன்னரே  வில்லன்  மர்மமான  முறையில் இறக்கிறான் . வில்லனைக்கொலை செய்தது  நாயகன் தான் என எண்ணும் வில்லனின் நண்பர்கள்  ஜெயிலில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் . இதற்குப்பின்  நடந்தது என்ன?  வில்லனைக்கொன்றது யார்?   என்பதை  மீதி திரைக்கதை  விவரிக்கிறது 


1999 ஆம் ஆண்டு மத்திய சிறையில் நடந்த உண்மையான ஜெயில் கலவரத்தை அடிப்படையாகக்கொண்டு கொஞ்சம் கற்பனை கலந்து எழுதப்பட்ட கதை .


நாயகன் ஆக ஆர் ஜே  பாலாஜி  நன்றாக நடித்திருக்கிறார். வழக்கமாக  லொட லொட என பேசும் கேரக்டர்களில்  நடித்தவர்   இதில்  மாறுபட்ட  கேரக்டரில் அமைதியாக  நடித்திருக்கிறார். தாடி  வைத்திருப்பதாலோ என்னவோ  தனுஷின் நடிப்பு சாயல்  தொற்றிக்கொண்டுள்ளது 


நாயகி ஆக  சானியா  ஐய்யப்பன்  கச்சிதம்,. அதிக வாய்ப்பில்லை என்றாலும் வந்தவரை  ஓக்கே  . 


 வில்லன்  ஆக  இயக்குனர்  செல்வராகவன்  தெனாவெட்டான  நடிப்பு . சிறைக்கண்காணிப்பாளராக    ஷராப் யுதின்  , சிறைத்துணைக்கண்காணிப்பாளராக  கருணாஷ்  மாறுபட்ட  நடிப்பு . நட்டி என்கிற  நடராஜூம்  ஒருமுக்கிய ரோலில் விசாரணை கமிஷன்  ஜட்ஜ் ஆக வருகிறார் 


ஆர்ட் டைரக்சன்  ஜெயச்சந்திரன் . அருமையான ஜெயில் செட்டிங்க் ஒர்க் . ஒளிப்பதிவு  பிரின்ஸ் ஆண்டர்சன் . ஜெயில் கலவரக்காட்சிகள்  உட்பட பல காட்சிகளில் அவரது கேமரா  முக்கியப்பங்கு வகிக்கிறது . இசை கிறிஸ்டோ சேவியர் .3  பாடல்களில் 2  தேறுகின்றன  சண்டக்காட்சிகள்  தினேஷ்  சுப்பராயன் . அருமையான ஒர்க் 

ஆர் கே  செல்வாவின் எடிட்டிங்கில் படம் 126  நிமிடங்கள்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1  படத்தின்  முதல் பிளஸ்  அபாரமான  வசனங்கள் . எழுதியவர்கள் மூவர் .வசனங்கள்  ( தமிழ் பிரபா + அஸ்வின் ரவிச்சந்திரன் + சித்தார்த்  விஸ்வனாத் )


 2   திரைக்கதை  அமைத்திருக்கும் பாணி   விருமாண்டியை நினைவு படுத்தினாலும் குட் 



  ரசித்த  வசனங்கள்  ( தமிழ் பிரபா + அஸ்வின் ரவிச்சந்திரன் + சித்தார்த்  விஸ்வனாத் )



1  புதுக்கடவுள்  கிட்டப்போனா மட்டும் பழைய பாவங்கள் எல்லாம் தொலைஞ்சா போயிடும் ? 


2   அளவு ஜாக்கெட்  இல்லாமயே  கரெக்ட்டா ஜாக்கெட் வாங்கிட்டு வந்திருக்கியே? அது எப்படி ? 


3  வருசமா  உன்  கூடவே  இருக்கேன் . சைஸ்  கூடத்தெரியலைன்னா எப்படி? 


3    தினமும்  ருசியா நல்ல சாப்பாடு ஜெயில்ல போட்டா  என்ன ஆகும்? இது நல்ல இடம்னு பழகிப்போயிடும் , எவனும் நகர மாட்டான் 


4   கதையை யார் முடிக்கறாங்களோ அவன் தான்  அடுத்த கதையை ஆரம்பிக்கனும் , முடிச்சு விட்டுடுங்க 

5  ஒருத்தர் மேல இருக்கற கோபம்  நம்ம கண்களை மறைச்சிடும், நம்மை யோசிக்க விடாம பண்ணிடும் 


6    வன்முறை தான்  உலகின் மிகப்பெரிய கோழைத்தனம் 


7  எதுவுமே  பண்ணாத  என்னை எல்லாமே  பண்ண வெச்சுட்டீங்க 


8 வாழ்க்கைல ரெண்டே  பாதைகள் தான் 

 1  சொர்க்கத்தில் முட்டி போடலாம் 2  நரகத்தில் ராஜாவா  இருக்கலாம் 

இந்த ரெண்டுல எது வேணும்னு நீ தான்  முடிவு  பண்ணனும் 


9  நுனி  நாக்கில் இங்க்லீஷ் பேசற  ஆஃபீசர்களைத்தான் இவங்களுக்குப்பிடிக்குது ,. எங்களை மாதிரி ஆட்கள் சொல்வதை இவங்க கேட்க மாட்டாங்க 


10 கடவுளா  இருப்பது  எளிது , மனிதனா இருப்பதுதான் கஷ்டம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கதை  நகரும்  பாணி  கொஞ்சம்  குழப்புகிறது . முதல்  பாதி  ரொம்ப ஸ்லோ 


2  நாயகனின் மீது பரிதாபமே  வரவில்லை . வந்தால்தான் அந்த கேரக்டருக்குக்கிடைத்த வெற்றி 

3  ஓவர்  வயலன்ஸ் 


4  ஒரே  கத்தல் , இரைச்ச;ல் . வசனமே  புரியலை . சவுண்ட்  டிசைனிங்க்  அமைப்பவர்  கவனித்திருக்க வேண்டும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  18+  கர்ப்பிணிப்பெண்கள் , குடும்பப்பெண்கள் , பயந்த சுபாவம் கொண்ட  பெண்கள் . மன அழுத்தம்  கொண்ட  ஆண்கள் , பெண்கள் , அமைதியான  வாழ்க்கை  வாழ ஆசைப்படும் நபர்கள்  பார்க்க  வேண்டாம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மாறுபட்ட ஒரு ஜெயில் கதை . ஆண்கள்  பார்க்கலாம் . விகடன்  மார்க் 41   குமுதம் ரேங்க்கிங்க் ஓக்கே 

. மை  ரேட்டிங் 2.25 / 5 


சொர்கவாசல்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கியவர்சித்தார்த் விஸ்வநாத்
எழுதியவர்
  • கிருஷ்ணகுமார்
தயாரித்தது
  • சித்தார்த் ராவ்
  • பல்லவி சிங்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஇளவரசர் ஆண்டர்சன்
திருத்தியதுசெல்வா ஆர்.கே
இசைகிறிஸ்டோ சேவியர்
உற்பத்தி
நிறுவனங்கள்
  • வலது ஸ்டுடியோவை ஸ்வைப் செய்யவும்
  • திங்க் ஸ்டுடியோஸ்
மூலம் விநியோகிக்கப்பட்டதுட்ரீம் வாரியர் படங்கள்
வெளியீட்டு தேதி
  • 29 நவம்பர் 2024
நாடுஇந்தியா
மொழிதமிழ்

Monday, December 02, 2024

SOOKSHMA DHARSHINI (2024) மலையாளம் - சினிமா விமர்சனம் ( சஸ்பென்ஸ் த்ரில்லர் )

                      

  
22/11/2024  அன்று  கேரளா திரை அரங்குகளில்  வெளியாகி  இந்த ஆண்டின் சிறந்த சஸ்பென்ஸ்  த்ரில்லர்  படம் என்று  பொதுமக்களின்  பாராட்டுதல்களைப்பெற்று  கமர்ஷியலாக சக்ஸஸ்  ஆன படம் .நஸ்ரியா வுக்கு இது ஒரு கம்பேக் படம் .காமெடி  ரோல்களில் பெயர் வாங்கிய  பஸீல் ஜோசப்   நெகடிவ்  ஷேடில் கலக்கி இருக்கும் படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  எம் ஏ  மைக்ரோபயாலஜி படித்திருக்கும் ஒரு குடும்பப்பெண் , திருமணம் ஆனவர் . கணவர்  , குழந்தையுடன்  வசித்து  வருகிறார் .இவர் துப்பறியும் சாம்பு போல  சூட்சுமமான , கூர்மையான புத்தி கொண்டவர் .இயல்பிலேயே  இவருக்கு  துப்பறியும்  மனப்பான்மை உண்டு 


நாயகியின்  பக்கத்து வீட்டுக்கு  புதிதாக  ஒரு குடும்பம்  குடியேறுகிறது . வில்லன்  தன வயதான அம்மாவுடன்  வசித்து வருகிறான் . அவனது அம்மாவுக்கு  அல்சைமர்  என்ற  நோய்  இருப்பதாக சொல்கிறான் . அது ஒரு விதமான மறதி நோய் 

அம்மா  அடிக்கடி காணாமல் போவதும் பின் மீண்டும் போலீஸ் அவரைக்கண்டுபிடித்து மீட்டு வருவதும் சகஜமாக நடக்கும் செயல் ஆக இருக்கிறது . பக்கத்து வீட்டில் குடி இருக்கும் நாயகி   அவர்களை நோட்டம் இடுகிறார் . வில்லன் எதையோ  மறைக்கிறார்  அல்லது நம்மிடம் போய் சொல்கிறார் என்று அவர்   சந்தேகப்படுகிறார் 


காரணம்  மறதி  வியாதி  இருப்பதாக சொல்லப்படும் வில்லனின் அம்மா குக்கரில்   3 விசில்  வந்ததும்  சரியாக அடுப்பை அணைக்கிறார் . வீட்டுக்குள்  போகும்போது  ஞாபகமாக  செருப்பைக்கழட்டி வைக்கிறார் . காயப்போடட  துணிகளை  மழை  வரும்போது  நினைவாக  எடுத்து உள்ளே  வைக்கிறார் 

  நாயகி இதன் மர்மத்தைக்கண்டறிய  பக்கத்து வீட்டுக்குப்போய்  வில்லனின் அம்மாவோடு  பேச முற்படுகையில்  அவர் சரியாக  நாயகியுடன்  பேச வில்லை 

இப்படி  இருக்கும்போது  வில்லனின் அம்மா    திடீர்  என  மீண்டும் காணாமல் போகிறார் .வில்லன் தான் அவனது  அம்மாவைக்கொலை    செய்து இருக்க வேண்டும்  என நாயகி சந்தேகப்படுகிறார் . இதற்குப்பின்  அவர் செய்த துப்பறியும்  வேலைகள் தான் மீதிக்கதை 


  நாயகியாக நஸ்ரியா நஸீம்    கலக்கி இருக்கிறார் .அவரது கேரக்ட்டர்  டிசைன்  சந்தோஷ்  சுப்ரமணியம்(2008)    ராஜா ராணி (2013) , ஓம் சாந்தி  ஓசானா (2014) ஆகிய படங்களின்  நாயகி  சாயலில்  கலந்த கட்டி  இருக்கிறது .இவர் திருமணத்துக்குப்பின்  சரியாக நடிப்பதில்லை . கடைசியாக  இவர் நடித்த  டிரான்ஸ் (2020)  மலையாளப்படத்தில்  கெஸ்ட்  ரோல் தான் .இதில்  வட்டியும்  , முதலுமாக வெளுத்து வாங்கி இருக்கிறார் 


வில்லன் ஆக  பஸீல் ஜோசப் மாறுபட்ட  நடிப்பை  வழங்கி இருக்கிறார் இதுவரை இவர் நடித்த அனைத்து கேரக்ட்டர்களும்  காமெடி கலந்தவை தான் . வில்லனிச நடிப்பில் இதுதான் முதல் படம் . அருமையாக செய்திருக்கிறார் 


அகிலா பார்கவன் ,, பூஜா மோகன் ராஜ் , தீபக் பரம்போல் ,  சித்தார்த்  பரதன்  என அனைவரது நடிப்பும் கச்சிதம் 


சமன் சாக்கோ வின்  எடிட்டிங்க்கில்  படம் 134  நிமிடங்கள்  ஓடுகின்றன .முதல் பாதியில் என்ன பார்த்தோமோ  அதற்கு  நேர்மாறான  காட்சிகள்  பின்  பாதியில் 


சரண்  வேலாயுதம்  தான் ஒளிப்பதிவு .சிறப்பு .கிறிஸ்டோ  சேவியரின்  பின்னணி இசை கூடுதல் பலம் .


விஷ்ணு கோவிந்தின் சவுண்ட் டிசைனிங்க் ,வினோத்  ரவீந்திரனின்    ஆர்ட்  டைரக்ஸன்  அனைத்தும்  கலக்கல்  ரகம் 


லிபின் , அதுல்  ராமசந்திரன்  ஆகிய  இருவருடன் இணைந்து  திரைக்கதை எழுதி  இயக்கி இருக்கிறார்  எம்  சி ஜித்தின் 

சபாஷ்  டைரக்டர்


1   நாயகி , வில்லன் இருவரது கேரக்ட்டர்  டிசைன்கள் கச்சிதம் , இரு நடிகர்களின்  பாத்திர தேர்வும் அவர்கள் நடிப்பும் அருமை 


2   சீரியஸான  கதையில்  தேவையான  இடங்களில்  பிளாக் ஹியூமரைப்புகுத்தியது 


3  யூகிக்கமுடியாத  க்ளைமாக்ஸ்  டிவிஸ்ட் 


4 ரத்தம் , வன்முறை இல்லாமல்  குடும்பத்துடன்  பார்க்கத்  தகுந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் தந்த விதம் 


ரசித்த  வசனங்கள் 

1  உங்க பேஸ்புக் புரோபைல் செக் பண்ண  உங்க பேஸ்புக் பிரண்டா  இருக்கனுமுனு  அவசியம் இல்லை 


2 சிங்கிள்  மதரா  இருப்பதால் ஸ்ட்ரிக்ட்   ஆக இருக்க வேண்டிய அவசியம் வந்துடுது 


3  DONT ASk sorry for being a STRONG WOMAN 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஆல்பிரட் ஹிட்சாக்    படமான  ரியர் விண்டோ (1954) + கொரியன் மூவியாக சமீப த்தில்  வந்த ஹோம் பார் ரெண்ட் (2023)   ஆகிய  இரு படங்களில்  இருந்தும்  இன்ஸ்பியர் ஆகித்தான்  இதன் திரைக்கதை  அமைக்கப்பட்டிருக்கிறது 


2  உனக்கு  எதுக்கு இந்தவேண்டாத வேலை ?என நாயகியிடம் கணவர் கடிந்து கொள்ளவே இல்லை .அவர் பாட்டுக்கு  இருக்கிறார் 

3  இரவு நேரத்தில்  பக்கத்து வீட்டு  சுவர் ஏறிக்குதிப்பது எல்லாம் ஓவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - - மாறுபட்ட சஸ்பென்ஸ்  த்ரில்லர்  பார்க்க  விரும்புபவர்கள்  அவசியம் குடும்பத்துடன் காணலாம்  ., ரேட்டிங்க்  3 / 5 


THANX - அனிச்சம்  மின்னிதம்  1/12/2024  டிசம்பர் மாதம் இதழ் 

Sunday, December 01, 2024

ZEBRA (2024) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( பைனான்சியல் க்ரைம் த்ரில்லர் )

         

               தீபாவளி  ரிலீஸ் வின்னராக பட்டையைக்கிளப்பிய  லக்கி பாஸ்கர்  போலவே இன்னமும் ஒரு  பைனான்சியல் க்ரைம்  ஆக்சன் த்ரில்லர் ஆக  பிரமாதமான திரைக்கதையுடன்  22/11/2024  அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகி பிரம்மாண்ட  வெற்றி பெற்ற  தரமான  படம் இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் , நாயகி  இருவரும் வெவ்வேறு  தனியார்  வங்கிகளில் வேலை  செய்பவர்கள் , காதலர்கள் . ஒரு நாள்  நாயகி  ஒரு அக்கவுண்ட்டில் ஒருவருக்கு 4 லட்சம்  ரூபாயை டிரான்ஸ்பர் செய்யும்போது   தவறுதலாக  க்ளெரிக்கல்   மிஸ்ட்டேக் ஆக  வேறு  ஒருவர் அக்கவுண்ட்டில் டிரான்ஸ்பர்  செய்து  விடுகிறார் .


 நாயகியைக்காப்பாற்றக்களம் இறங்கும்  நாயகன்  பேங்க்  ரூல்ஸில் உள்ள  லூப்ஹோலைப்பயன்படுத்தி  அந்த  4 லட்சம்  ரூபாயை  சரி செய்து  விடுகிறார் 


 ஆனால் நாயகன்  இப்போது புதிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் . 5 கோடி ரூபாய் பணம்  அதே பாணியில்  காணாமல் போக  நாயகன் மீது பழி  விழுகிறது . இதை நாயகன் எப்படி சரி செய்யறார்  என்பது பரபரப்பான , விறுவிறுப்பான  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக சத்யதேவ்  அசால்ட் ஆக நடித்திருக்கிறார் .மாஸ் ஹீரோக்களுக்கு உரிய கை தட்டல்  அவருக்குக்கிடைக்க முக்கியக்காரணம் அவரது கேரக்ட்டர் டிசைன் , திரைக்கதை யுக்தி , எடிட்டிங்க் கட் 


நாயகி ஆக ப்ரியா பவானிசங்கர் . அழகாக வந்து போகிறார் . நடிப்பும் குட்.ராசி இல்லாத நாயகி என்ற கோடம்பாக்கம் சென்ட்டிமெண்ட்டை இந்தப்படத்தின் பிரமாண்டவெற்றி உடைத்திருக்கிறது 


 பவர்புல்  வில்லன் ரோலில் தனஞ்செயன்  அருமையான நடிப்பு , ஆளுமையான உடல்மொழி . இவர்கள் போக  சத்யராஜ் , சுரேஷ் மேனன், சுனில் போன்ற  பிரபலங்களும்  உண்டு . அவரவர்க்குக்கொடுத்த வேலையைக்கச்சிதமாக் செய்திருக்கிறார்கள் 

அணில் கிருஷின் அபாரமான எடிட்டிங்கில்  படம் விறுவிறுப்பாகப்போகிறது .ஆனாலும் 162  நிமிடங்கள் நீளம் தான் .கொஞ்சம்  ட்ரிம் செய்து இருக்கலாம் .ரவி பாஸ்கர்  இசையில் பாடல்கள்  பரவாயில்லை . பின்னணி  இசை  கலக்கல்  கமர்ஷியல் .சத்யா பொன்மார்  ஒளிப்பதிவில் காடசிகளை பிரமாண்டமாகக் காட்டி உள்ளார் . கதை ,திரைக்கதை , இயக்கம் ஈஸ்வர்  கார்த்திக் .இணை  திரைக்கதை யுவா 


சபாஷ்  டைரக்டர்


1  படம் போட்டு 30 நிமிடங்கள் கழித்துத்தான்  டைட்டில் வருது .அது வரை  திரைக்கதை பறக்குது . செம ஸ்பீடு 


2  பேங்க்  மோசடிகள் சம்பந்தப்பட்ட  காட்சிகளை  சி சென்ட்டர்  ஆடியன்ஸுக்கு ம்  புரியும் வண்ணம் காட்சிப்படுத்திய விதம்  அருமை 


3   நாயகன்  செய்த மோசடியை மேனேஜர் கண்டுபிடிக்க முற்படும்போது  நாயகன் சுதாரித்து  அதை கரெக்ட் செய்யும் காட்சி   அப்ளாஸ்  அள்ளும் காட்சி 

4  சதுரங்க  வேட் டை ,  கேஜிஎப்  படங்களுக்குப்பின்  அதற்கு நிகரான கை  தட்டல்களை அள்ளும் அட்டகாசமான வசனங்கள் 


5 பேங்க்கை கொள்ளை அடிக்கப்போடும் பிளானை  காமெடியனை வைத்து விஷுவலாக  என்ன செய்யப்போகிறார்கள் என்பதை கற்பனையாக்காட்டிய விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  பணம் ஒரே இடத்துல இருக்காது , சுத்திக்கிட்டே  இருக்கும், இதைத்தடுக்க நாம யாரு ?


2 பணம் புழங்கும் இடம்தான் குற்றங்கள் அதிகம் நிகழும் இடம் 


3 கில்லாடிடா நீ.  வீடடையும்,  வீட்டுக்கார அம்மாவையும் ஒன்னாவே காட்டிட்டே 


4 பணத்துக்கு இருக்கும் இன்னொரு நேச்சர்  ஜீரோ பேலன்ஸ் . அது ஒருவரிடம் இருந்து போனாதான் இன்னொருவருக்கு வரும்  

5  பணம் தான் நம்மை ஆட்டி வைக்குதுனு நினைக்கும் நான் அந்தப்பணத்தையே ஆட்டி வைக்கும் ஒருத்தனை சந்தித்தேன் 


6 பயம்  முத்திப்போனா  அது தைரியம் ஆக மாறும்,அந்த தைரியம்  முத்திப்போனா பிரளயமா  மாறும் . அதில்  இருந்து தப்பிக்க யாராலும் முடியாது 


7  எபிஷியன்சியால ஹெட்வெயிட் ஏறக்கூடாது 


8  குதிரையை ஓட விட்டா அது ஜெயிக்கும்னு எல்லாருக்கும் தெரியும், ஆனா ட்ரெய்னிங்க் கொடுக்கணும் 

9 உன்னை  வார்ன் பண்ற பொசிஷன்ல  இருக்கறவன் கிட்டே உன்னோட யோசனைகளை சொல்லாதே 


10 அதை விட சாகலாம்னு ஒரு முடிவு எடுப்பே .ஆனா அதுக்கும் நான் தான் பர்மிஷன் கொடுக்கணும் 


11   ONCE UPON A TIME ,TIME IS MONEY . BUT NOWADAYS   INFORMATION IS  MONEY 

ஒரு காலக்கட்டத்துல காலம் /நேரம்  தான் பணம்  ஆக  செல்வம் ஆக இருந்தது . ஆனா இப்போ  தகவல்கள்  தான் செல்வம்னு ஆகிடுச்சு 


12 சூதாட்டம் கொடுக்கற போதை அவருக்கு வேற எதுவும்  தராது 


13  DEAR  , யாரும்  கெஸ் பண்ண முடியாத படி பாஸ்வோர்டு  வை 


 நீ கூட  கெஸ் பண்ண முடியாத படி வெச்சிருக்கேன் ..........


 ச்சீய் 


வெட்கப்படாதடா 

14  நாமினி  பேரு கொடுக்காம செத்துப்போன அக்கவுண்ட்ஸ் ல இருக்கற பணம் எல்லாம் பேங்க்குக்குத்தான் சொந்தம் 


15 க்ரைம் சின்னதோ , பெருசோ யார் செஞ்சாலும்  வெளியே  உடனே  தெரிஞ்சிடும் , ஆனா பேங்க்ல நடக்கும் க்ரைம்  வெளில தெரிய எப்படியும் நான்கு நாட்கள் ஆகும் 

16  இருக்கறவன் கிட்டே  பணம்  வாங்கறது பெரிய  விஷயம் இல்லை , ஆனா இல்லாதவன் கிட்டே  பணம்  வசூல் பண்ணுவதுதான் கெத்து 


17  வாழ்வதற்கே பயந்த அந்த  யானை  பயம்னா என்ன? என அந்த காட்டுக்கே காட்டுச்சு 


18 வேணும்னு நினைச்ச டீலை என்னைக்கும் விட்டதில்லை .எந்த  டீலும் என்னை வேணாம்னு நினைச்சதில்லை 


19 பேங்க்கை கொள்ளை அடிக்க மூளையும் ,பிசிக்கல்  பிட்னெசும்  வேணும் , என் கிட் டே  அந்த ரெண்டுமே இல்லையே? 


 அதெல்லாம் வெளியாட்களுக்குத்தான் வேணும் . நாம தான் பேங்க்  உள்ளே  வேலை செய்யறவங்க ஆச்சே ? தேவை இல்லை 


20  பாபா  சொன்னபடி  5 கோடி ஏழரைக்கோடியா  ஷேர் மார்க்கெட்ல  மாத்தித்தருவார்னு என்ன கேரண்டி ?


ரிஸ்க் என்றாலே  அதுக்கு கேரண்டி  கிடையாது .அதனால தான் அது ரிஸ்க் 


21  பவரும் , வீரமும்  பர்மெனன்ட்  கிடையாது 


22   நமக்கு வேணும்னு நினைப்பதை  நம் எதிரில் இருப்பவன் மறுக்க முடியாத அளவுக்கு கொடுக்க வைக்கணும் 


23 LUCK FAVERS BRAVENESS   என எதனால சொல்றாங்கன்னா குற்றம்  பண்ணத்துணிந்தவனுக்குத்தான் அதிர்ஷ்டம் துணை நிற்கும் , ஏன்னா அந்த குற்றத்துக்காக அவன் எல்லா ரிஸ்க்கையும்  எடுப்பதால் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  கொள்ளை அடித்த  பணத்தை  வைக்கப்போகும்   பேக்கை பிராண்ட் அயிட்டமாக  வாங்காமல்  அதன்  தாங்கு திறனை செக் பண்ணாமல் மட் ட  ரக பேக்  வாங்கி மாட்டும்  காட்சி  நம்ப முடியலை 


2  பேங்க்கில் அலாரம் அடிக்கும்போது நாயகன் கொள்ளை  அடிக்க உள்ளே போகிறான் . மேனேஜர்  உட்பட  யாருமே  நாயகன் இல்லாததை நோட்  பண்ணவே இல்லையே? 


3   காமெடியன்  , வில்லி  இருவரும்  பேங்க் உள்ளே  தவறிய பைல் காகிதங்களை கலெக்ட் பண்ணும்  காட்சி காமெடிக்கு ஓகே . ஆனா  ரியாலிட்டி இல்லை . அவ்ளோ பெரிய ஆபீசர்  அவராகக்குனிந்து பேபப்ரஸை கலெக்ட் பண்ணிட்டு  இருப்பாரா? 


4  கொள்ளை அடித்த பணத்தை குப்பைக்கூடையில் போட்டு டிஸ்போஸ் செய்யும் காட்சி  நம்பும்படி இல்லை 


5  ஷேர்  மார்க்கட்டில் அவ்ளோ பணம் சத்யராஜைப்போட வைத்து அதன் பின்  லாபத்தை  நாயகன்  வாங்குவது ரிஸ்க் .அதற்குப்பதிலாக எந்த ஷேரில் பணம் போடவேண்டும் ? அல்லது  என்ன ஆப்சன் டிரேடிங்க் சீக்ரெட்  என அவரிடமே  கேட்டு  நாயகனின் டி  மேட்  அக்கவுண்ட்  மூலம்  டீல்  செய்வதே பாதுகாப்பு 


6  ஷேர்  மார்க்கட்டில் பாதுகாப்பு  இல்லை  என்பது உண்மைதான் . ஏற்கனவே முதலீடு செய்து இருந்தால்  திடீர் என மார்க்கெட் கிராஸ் ஆகும்போது  லாஸ் ஆகும் . ஆனால் கிராஸ் ஆகப்போகும் நாள் அன்று கரெக்ட் ஆக இன்வெஸ்ட் பண்ணி  லாஸ்  ஒரே நாளில் ஆவது எப்படி ?  மார்க்கெட்  ஓப்பன் ஆகும்போதே  ரெட்டி ல் தானே காட்டும் ?அதுக்குப்பின்  ஏன் இன்வெஸ்ட்  செய்யணும் ?  

7 திடீர்  ட்விஸ்ட் வேண்டும் என ஷேர்  மார்க்கட் கிராஸ் ஆகும் முன்பே  பணத்தை எடுத்துடடேன் என சத்யராஜ் சொல்வதும்  நம்பும்படி இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - U



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் பாதி பரபரப்பான பைனான்சியல் க்ரைம் த்ரில்லர். பின் பாதி    விறு விறுப்பான பேங்க்  ராபரி  த்ரில்லர் . அனைவரும் பார்க்கலாம் . ரேட்டிங்க்  3.5 / 5 

தெலுங்குப்படத்துக்கு  விகடன் மார்க் தராது . அப்படித்தருவதாக  இருந்தால்  விகடன் மார்க்  50 .குமுதம்  ரேட்டிங்  , நன்று . 


Zebra
Theatrical release poster
Directed byEashvar Karthic
Screenplay byEashvar Karthic
Yuva
Yuva is prolific screenplay writer and predominantly works in the Indian Film Industry
Dialogues byMeeraqh
Story byEashvar Karthic
Produced byS. N. Reddy
S. Padmaja
Bala Sundaram
Dinesh Sundaram
StarringSatyadev
Dhananjaya
Sathyaraj
Priya Bhavani Shankar
Amrutha Iyengar
CinematographySathya Ponmar
Edited byAnil Krish
Music byRavi Basrur
Production
companies
OldTown Production
Padmaja Films Private Limited
Release date
  • 22 November 2024
Running time
162 minutes[1]
CountryIndia
LanguageTelugu
Box officeest. ₹2.60 crore[2]

Tuesday, November 26, 2024

ஜாலியோ ஜிம்கானா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மொக்கைக்காமெடி டிராமா)

       

                 

ஜாலியோ ஜிம்கானா (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( மொக்கைக்காமெடி டிராமா)
இயக்குனர் ஷக்தி சிதம்பரத்தின் முதல் படமான சாம்ராட் (1997)சுமார் ரகமாக இருந்தாலும் , அடுத்த படமான என்னம்மா கண்ணு (2000) சத்யராஜ் தயவில் ஹிட் ஆனது , அடுத்து சார்லி சாப்ளின்(2002) மீடியம் ஹிட் . காதல் கிறுக்கன் (2003) , இனிது இனிது காதல்இனிது (2003) இரண்டும் டப்பா .மகாநடிகன் (2004) மெகா ஹிட் . , இங்க்லீஷ் காரன் (2005) சுமார் , கோவை பிரதர்ஸ் (2006) டப்பா ,வியாபாரி (2007) சுமார் , சண்டை (2008), சுமார் ராஜாதிராஜா ( 2009) குப்பை , குரு சிஷ்யன் ( 2010) சுமார் , சார்லி சாப்ளின் பாகம் 2 (2019) டப்பா , பேய் மாமா (2021) குப்பை
WEEK END AT BERNIE'S (1989) என்ற ஹாலிவுட் படத்தில் இருந்து சில காட்சிகளை அட்லி பாணியில் பட் டி டிங்கரிங்க் செய்து 1994 ஆம் ஆண்டு மகளிர் மட்டும் என்ற படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் தந்தார் . அதில் பிணமாக நாகேஷ் பிரமாதமாக நடித்திருப்பார் .அதில் நாகேஷுக்குக்கிடைத்த வரவேற்பைப்பார்த்து கமல் லேடீஸ் ஒன்லி ஹிந்திப்படத்தில் (மகளிர் மட்டும் ரீமேக் ) அந்த நாகேஷ் கேரக்ட்டரை அவர் செய்தார் .அந்த பிண கான்செப்ட்டை ஒரு முழுப்படமாக தந்தால் எப்படி இருக்கும் ? என கற்பனை செய்து எடுத்திருக்கிறார்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
3 மகள்களைக்கொண்ட நாயகி தன் அப்பா நடத்தி வந்த ஹோட்டல் நினைவாக தானும் ஒரு ஹோட்டல் நடத்துகிறார் . அதில் ஆர்டர் பண்ணி ஒரு எம் எல்ஏ தனது வீட்டு விசேஷத்துக்கு சாப்பாடு பல்க் ஆக வாங்கி செல்கிறார் .ஆனால் பில் பே பண்ணவில்லை .கேட்டால் தகராறு . நாயகியின் தாத்தாவைத் தாக்கி விடுகிறார்கள் எம் எல் ஏ வின் அடியாட்கள்
வக்கீலான நாயகன் இந்தக்கேஸில் வாதாடுகிறான் . நாயகிக்கு 25 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது . அதை வட்டியோடு கட்ட சொல்லி மிரட்டும் பைனான்சியர் பற்றிப்புகார் தர நாயகி தன மகள்களுடன் வக்கீல் வீட்டுக்குப்போக அங்கே நாயகன் ஆன வக்கீல் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் .. கொலைப்பழி தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்பதற்காக டெட் பாடியை வேறு இடத்தில் டிஸ்போஸ் பண்ண முயற்சிக்கிறார்கள் . அந்தக்காமெடி கலா ட்டாக்கள் தான் மீதிக்கதை
நாயகன் ஆக பிரபுதேவா படம் முழுக்க டெட் பாடியாக கலக்கி இருக்கிறார் .நாயகி ஆக அபிராமி , நாயகியின் மகளாக மடோனா செபாஸ்டின் இருவரும் கச்சிதம்
யோகிபாபு , ரெடின் கிங்க்ஸ்லி எல்லாம் பேருக்கு வந்து போகிறார்கள் . ஆனால் பல படங்களில் யோகிபாபு மொக்கை போட்டு கடுப்பேத்துவார் . இதில் அந்தளவு கொடுமை இல்லை
வில்லன்களாக நாஞ்சில் சம்பத் , மதுஸுதனன் ராவ் இருவரும் பரவாயில்லை .அடியாட் களாக வரும் ரோபோ சங்கர் ஓகே ரகம் ஜான் விஜய் , எம் எஸ் பாஸ்கர் வரும் காடசிகள் கொஞ்சம் சிரிக்கவைக்கின்றன
ஒளிப்பதிவு எம் சி கணேஷ் சந்திரா நாயகிகளை க்ளோசப்பில் காட்டி பயப்படுத்துகிறார் . ஆர்ட் டைரக்ஸன் ஜனார்த்தனன் கு ட் ஒர்க் . எடிட்டிங்க் ராமர் & நிரஞ்சன் ஆண்டனி . 120 நிமிடங்கள் படம் ஓடுகிறது
இசை அஸ்வின் விநாயகமூர்த்தி .2 பாடல்கள் சுமார் ரகம் / பிஜிஎம் ஓகே ரகம்
சபாஷ் டைரக்டர்
1 படம் முழுக்க மொக்கைக்காமெடி சரவெடிகளால் வசனத்தை நிரப்பியது
2 பிரபு தேவாவின் நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 என் பேரு பவானி ,என் தங்கை பேரு ஷிவானி ...
அம்மா பேரு ரோகிணி , அப்பா பேரு சப்பாணி ?
2 என் மூலக்கதையை உக்கார்ந்து கேட் டாதான் உங்களுக்குப்புரியும்
எனக்கே மூல வியாதி ,உக்கார்ந்து எல்லாம் கேட்க முடியாது
3 எல்லாருடைய வாழ்க்கைலயும் ஒரு டெட் எண்டு வரும் . வேற வழியே இல்லைனு நாம நினைக்கும்போது கடவுள் யாராவது ஒருவர் ரூபத்துல வந்து நம்மைக்காப்பாத்துவான்
4 யார் உள்ளே ? கதவைத்திறங்க
நாங்க 4 பேரும் உள்ளே இல்லை
5 அவன் கிட் டே போனைக்கொடுங்க ,"செத்த " நேரம் பேசிட்டு தர்றேன்
செத்த நேரத்துல எப்படி பேசுவீங்க?
6 போன் போடு
லைன் டெட் ஆகிடுச்சு
அதுவும் டெட்டா?
7 உடனடியா ரூமை செக் அவுட் செய்யணும்
அவருதான் ஆளே அவுட் ஆகிட்டாரே ?
8 வரு யாரு ?புரோட்டா மாஸ்டரா? மப்புல இருக்காரா?
ஆமா, கடை எல்லாம் மூடிட்டாங்க இல்லை ? அதான் சரக்கு மாஸ்டரா ஆகிட்டாரு
9 டெட் பாடி எதிர்ல வந்தா நல்லதா?
டெட் பாடி எதிர்ல வந்தா நல்லதுதான் , ஆனா கூடவே வந்தாதான் கெட்டது
10 நான் குறிஞ்சிப்பாடி , நீங்க ?
தரங்கம்பாடி
இங்கே எல்லாமே பாடி தான்
11 நான் டிரஸ் மாத்தறதை இந்தாளு பார்க்கற மாதிரி இருக்கு
நீ பாடி மாத்தறதை இந்த டெட் பாடி பார்த்தா என்ன தப்பு ?
12 என்னய்யா? உன் ரெண்டு கைகளையும் ஒரு மாதிரி வெச்சிருக்கே? என் பொண்டாட்டி ஊருல இருந்து வரும்போது பிரா வாங்கிட்டு வரச்சொன்னா , அந்த சைஸ் மறந்துடும் இல்ல? அதுக்குத்தான்
13 என்ன அண்ணே ,ஆளே மாறீட்டீங்க ?
அதான் ஆளே மாறிட்டனே ? எப்படிடா கண்டு பிடிச்சே?
ஷேவிங்க் பண்ணினாலும் சிங்கம் சிங்கம் தானே?
14 அவனை இவரு மறுபடி கொலை பண்ணிட் டாரு
ஒரே ஆளை எத்தனை டைம் கொல்ல முடியும் ?
15 வடை போச்சே எனபுலம்பாம ,வடையோட போச்சே என கடையை மூடிட்டு கிளம்புங்க
16 நீங்க தான் இப்போ பேங்க் மேனேஜர்
நான் தான் படிக்கவே இல்லையே?
இதுக்குத்தேவை படிப்பு இல்லை , நடிப்பு
17 பாபநாசம் கமல் மாதிரி எல்லாரும் ஒரே ,மாதிரி பொய் சொல்லணும்
ஆமா , மாறி மாறி பொய் சொல்லக்கூடாது
மாரி தனுஷ் படம்
18 பூதம் பூதக்கண்ணாடி வெச்சு பார்க்குது
19 சார் , கேளடி கண்மணி ல வர்ற மூச்சு விடாம பாடும் பாட்டு பாடுங்க
அவருதான் மூச்சை விட்டுட்டாரே?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகிகள் மூவருக்கும் லிப்ஸ்டிக் ஓகே , ஆனா அவங்க அப்பா ஒய் ஜி மகேந்திரனுக்கு எதுக்கு பிங்க் கலர் லிப்ஸ்டிக் ? மனசுல ராமராஜன்னு அவருக்கு நினைப்பா?
2 ரோஷி குத்துற ஊசி வேணுமா ? இல்லை ஊசி குத்துற ரோஷி வேணுமா ? கானா பாட்டு வரிகள் அனைத்தும் 1989ல் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் காலேஜ் ஆண்டு விழாவில் பாடப்பட்ட பழைய சரக்கு
3 சி செண்ட் டரில் சுலபமாக ஹிட் அடிக்கக்கூடிய இந்தக்கதையை ரைட்டர் சுபா , பட்டுக்கோட் டை பிரபாகர் மாதிரி அனுபவம் மிக்க வர்களிடம் தந்திருந்தால் நல்ல திரைக்கதை அமைத்து ஆல் செண்டர் ஹிட் ஆக்கி இருப்பார்கள் .மிஸ்டு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கிரேசி மோகன் டைப் வார்த்தை ஜாலக்காமெடி வசனங்களை ரசிப்பவர் களுக்கு படம் பிடிக்கும் விகடன் மார்க் 40 , குமுதம் -சுமார் .ரேட்டிங் 2.25 / 5
--
சென்னிமலை சி.பி. செந்தில்குமார்,

Sunday, November 24, 2024

நிறங்கள் மூன்று ( 2024) - தமிழ் - சினிமா விமர்சனம் (த்ரில்லர் )

           

              ஹைப்பர் லிங்க்டு  ஸ்டோரி  என்ற வடிவத்தை தமிழில் முதன் முறையாக  வெற்றிகரமாக அரங்கேற்றியவர்  க்ரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்  தான் என நினைக்கிறேன் . முதல் மூன்று  அத்தியாயங்களில்  வெவ்வேறு  கதைகள் , கதை மாந்தர்கள் வருவார்கள் .கடைசியில்  அவர்களை  இணைக்கும்  முடிச்சு  ஒன்றை க்ளைமாக்சில்  சாமார்த்தியமாக  அவிழ்ப்பார் .அந்த பாணியில்  திரைக்கதை அமைக்கப்பட்ட படம் இது 


துருவங்கள் 16 (2016)  என்ற  வித்தியாசமான  க்ரைம் திரில்லர் படத்தை  இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக  அருண் விஜய் நடிப்பில்  மாபியா சேப்டர்  1 (2020) என்ற ஆக்சன் திரில்லர் படத்தைக்கொடுத்தார், எடுபடவில்லை . 


நெட் பிளிக்ஸ்  ரிலீஸ் ஆக 2020 ல் வந்த "நவரசா" வெப் சீரிஸில் "பிராஜெக்ட் அக்னி " ஓகே ரகம் .டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில்  நேரடியாக  ரிலீஸ் ஆன தனுஷ் நடித்த மாறன் (2022)  எடுபடவில்லை .இவை போக  நரகாசுரன்  என்ற படம்  முடிந்தும்  சில சிக்கல்களால்  வெளியாகவில்லை 


ஸ்பாய்லர்  அலெர்ட்


சம்பவம் 1 - வில்லன்  ஒரு போலீஸ் ஆபிஸர் . பணம்  வாங்கிக்கொண்டு  எதையும் செய்யும் கெட்டவர் . ஒரு நாள் மந்திரியின் மகன் ஹிட் அண்ட்  ரன் கேசில்  மாட்டிக்கொள்ள அவனை லாக்கப்பில்  அடைக் கிறார் . மந்திரியின் மகன் ஓவராக சவுண்ட்  விட  அவனை லாக்கப்பில் அடி  வெளுக்கிறார்  ஆனால் மந்திரியிடம் பணமும் வாங்கிக்கொள்கிறார் .. இவருக்கும், மந்திரிக்கும்   பகை ஏற்படுகிறது 


சம்பவம் 2 -    நாயகன்  +2 படிக்கும் மாணவன் .சக மாணவியான  நாயகியைக்காதலிக்கிறார் . நாயகியின்  அப்பா  பள்ளி ஆசிரியர் .ஒரு நாள்  நாயகி திடீர்  எனக்காணாமல்  போகிறார் .அவரைத்தேடும் படலத்தில்  நாயகனும் , நாயகியின் அப்பாவும் தனித்தனியே கிளம்புகிறார்கள் 


சம்பவம் 3 - வில்லனின்  மகன்   சினிமாவில்  டைரக்டர்  ஆகவேண்டும்  என்ற  லட்சியத்தில்  இருப்பவர் .அவரது  கதையைத்திருடி  ஒரு பிரபல  இயக்குனர்  படம் எடுக்க  இருக்கிறார் .அதைத்தடுக்க  வில்லனின்  மகன் முயற்சிக்கிறார் 

 மேலே  சொன்ன  3  சம்பவங்களை  இறுதியில்  எப்படி  இணைக்கிறார்கள்  என்பது மீதி திரைக்கதை 

வில்லன் ஆக சரத்குமார்  அனுபவம்  மிக்க நடிப்பை   வெளிப்படுத்தி  இருக்கிறார் .படம்  முழுக்க அத்தனை கேரக்ட்டர்கள் இருந்தும்   இவர்  மட்டும் தான்  ஆடியன்ஸூட ன்    கனெக்ட்  ஆகிறார் 


நாயகன் ஆக  துஷ்யந்த் , நாயகி ஆக அம்மு அபிராமி இருவரும்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் , ஆனால் அதிக ஸ்பேஸ் இல்லை 


வில்லனின் மகனாக  அதர்வா  நடித்திருக்கிறார் . இவரது கேரக்டரை போதைக்கு  அடிமை ஆனவர் போல சித்தரித்தது எதுக்கு ? மெயின் கதைக்கும்  இவருக்கும்  அதிக சம்பந்தம் இல்லை 

 நாயகியின் அப்பாவாக ரகுமான் . பரவாயில்லை  ரகம் 


ஜேம்ஸ் பிஜோய்  தான் இசை .பாடல்கள்  சுமார் . பின்னணி இசை பரவாயில்லை ரகம் .ஒளிப்பதிவு டிஜோ  டோமி . குட்  ஒன் .எடிட்டிங்க் ஸ்ரீஜித் சாரங்க் . 2 மணி நேரம் படம் ஓடுகிறது 

சபாஷ்  டைரக்டர்

1 முழுக்க முழுக்க நல்லவன் , முழுக்க முழுக்க   கெட்டவன் , கொஞ்சம் நல்லவன், கொஞ்சம் கெட்டவன்  என மனிதர்களில்  மூன்று விதமானவர்கள் உண்டு  என்று சொல்ல வந்த விதம்  நன்று 


2  வில்லனின்  கேரக்ட்டர்  டிசைன் , வில்லனின் நடிப்பு  அருமை 


3  க்ளைமாக்ஸ்   டிவிஸ்ட்  நன்று 


  ரசித்த  வசனங்கள் 


1 ஆறு மாசமாப் பழகுன பிரண்ட்ஸை  நம்பறீங்க,ஆனா  பிறந்ததுல  இருந்து  கூடவே  இருக்கும்  அம்மா, அப்பாவை நம்ப மாறீங்க,என்ன  லாஜிக்கோ? 


2   வாழ்க்கைல நாம நினைச்சபடி  எதுவும் நடக்கலைன்னா டென்சன் ஆகக்கூடாது ,  வேற  எதோ  நல்லது  நடக்கப்போகுதுனு நினைக்கணும் 


3  ஹீரோ  வெக்ஸ் ஆகி இருக்கும்போதுதான் அவன் லைஃபே  சேஞ்ச்  ஆகப்போகும் கேரக்ட்டர் இன்ட்ரோ  ஆகும் 


4  நான்   கெட்ட போலீஸ் தான் ஆனா  கெட்ட  அப்பா இல்லை 


5 கதையை  மூளைல இருந்து  எடுக்கக்கூடாது , இதயத்தில் இருந்து எடுக்கணும் 


6  சினிமா ஒன்னும் நீ  நினைக்கறமாதிரி ஈஸி  இல்லை ., அதுக்கு பிராப்பர் பேக் கிரவுண்ட் வேணும் 


7  ஸ் கூல்  பொண்ணு மிஸ்  ஆனா  அது பாய்ஸ்  மேட்டர்  தான் 


8 மனசுல  இருப்பதை சொல்றதெல்லாம் க்ரைம் கிடையாது 


9   போலீஸோட மகன் போலீஸாதான் ஆக்கனுமுனு  சட்டம் இல்லை , அவனை அவன் போக்கில் விடு 


10   நீங்க ஒரு நல்ல டீச்சர்னு நிரூபிச்சுட் டீங்க ,நம்பிக்கை துரோகம் , ஏமாற்றுதல் எல்லாத்தை யும் கத்துக்கொடுத்துட்டீங்க 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  போதைக்கு  அடிமை ஆனவர் போல சித்தரித்த கமலின் சூரசம்ஹாரம் , போதைக்கு  அடிமை ஆனவர்களை  திருத்தும்  ரஜினியின் ராஜா சின்ன ரோஜா  ,சூர்யாவின்  வாரணம் ஆயிரம்  இவை மூன்றும் சரியாகபோகவில்லை . இதை மீறி  எதற்காக அதர்வாவின் கேரக்ட்டர்  டிசைன் அப்படி சித்தரிக்கணும் ? அவர்  வரும் காடசிகள்  செம போர் 


2  ஒரு மினிஸ்ட்ரை  லஞ்சம்  வாங்கும்  சாதா  இன்ஸ்பெக்ட்டர்  எதிர்ப்பது  நம்பும்படி  இல்லை 


.அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -U /A



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - இந்தப்படம்  சில வருடங்களுக்கு முன்பே  எடுக்கப்பட்டு  இப்போ  ரிலீஸ் ஆகுது .அதனால் அப்டேட்  ஆகாத  படம் என கொள்ளலாம் . டி வி ல போட்டா பார்க்கலாம் .விகடன் மார்க்  39 , குமுதம் - சுமார் .  ரேட்டிங்க் - 2.25 / 5 

Saturday, November 23, 2024

எமக்குத்தொழில் ரொமான்ஸ் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

           

          போர்த்தொழில்  படம் ஹிட் ஆனதும் அடுத்த படத்தின் டைட்டிலில் தொழில் என வருவது போல வைத்து விட்டார்களோ என நினைத்தால் அது  தப்பு . இந்தப்படம்  முடிந்து பல  வருடங்கள்  ஆகிடுச்சாம் . இப்போ தான் ரிலீஸ் ஆகி இருக்கு    


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சினிமாவில்  அஸிஸ்டெண்ட்  டைரக்டர் . நாயகி தனியார் ஹாஸ்பிடலில்  நர்ஸ் . இருவரும்  காதலிக்கிறார்கள் . நாயகனின்  தோழிக்கு  ஒரு காதல்  உண்டு . காதலனால் கர்ப்பமான தோழி  அதைக்கலைக்க  நாயகனை தனது  கணவனாக  நடிக்கச்சொல்கிறாள் .இதைத்தவறாகப்  புரிந்து கொள்ளும் நாயகி அதிர்ச்சி ஆகி   பிரேக்கப்  சொல்கிறாள் . நாயகன்  நாயகியை எப்படி சமாளித்து கரம்  பிடிக்கிறான்  என்பது மீதிக்கதை 


நாயகன் ஆக அசோக் செல்வன் கச்சிதமான  நடிப்பு .படத்தில்  ஒரே ஆறுதல் இவர் தான் .காமெடி , ரொமான்ஸ்  இரண்டும் நன்றாக  இவருக்கு வருகிறது


நாயகி ஆக  அவந்திகா மிஸ்ரா .அழகான  முகமும் , வாளிப்பான  உடல் அமைப்பும் இருந்தும் நடிப்பு அவ்வளாவாக வரவில்லை  


நாயகனின் அம்மாவாக ஊர்வசி , அப்பாவாக அழகம் பெருமாள்  இருவருக்கும் அதிக வேலை இல்லை .நாயகனின் நண்பனாக  பகவதி பெருமாள் , இவருக்கும் அதிக வேலை இல்லை 


இசை நிவாஸ் கே பிரசன்னா .பாடல்கள்  சுமார் தான் .பின்னணி இசையும் படு சுமார் தான் .ஒளிப்பதிவு  கணேஷ் சந்திரா ஓகே ரகம் . எடிட்டிங்க் பரவாயில்லை 112 நிமிடங்கள் .திரைக்கதை எழுதி  இயக்கி இருப்பவர்  பாலாஜி  கேசவன் 



சபாஷ்  டைரக்டர்


1  இது சில வருடங்களுக்கு முன்பே ஷூட்டிங்க் முடிந்தபடம் என்பதை  யாருக்கும்  தெரியாமல் இருக்கட்டும் என விக்கிபீடியாவில் கூட அப்டேட்  செய்யாத சாமர்த்தியம் 


2  நல்ல  டைட்டில்  , அழகான நாயகி  


  ரசித்த  வசனங்கள் 

1   காலைல ஒரு கனவு ,நான் ஆஸ்கார் விருது வாங்கற* மாதிரி 


 வாங்கிக்கோடா, வருசா வருஷம் நானே   வாங்கிட்டு இருந்தா  எப்படி ? 


2  கல்யாணம்  எனக்கு , மருதாணி உனக்கா? 


3  பேஷண்ட்டோட   பல்ஸ்   தெரிஞ்சவன்    டாக்டர் 

ஆடியன்சோட  பல்ஸ்   தெரிஞ்சவன்   டைரக்டர் 

4  சிங்கத்துக்கும் , எனக்கும் ஒரே வித்தியாசம்தான் . அது ஷேவிங்  பண்ணாது , நான் ஷேவிங்க் பண்ணுவேன் 


5   நாம  நம்ம  தலைவரோட கட் அவுட்டுக்கு பால் ஊத்துனோம் , ஆனா இந்த  டைரக்டர் நம்ம  தலைவருக்கே பால் ஊத்திட்டான் 



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பேரு  வெச்சியே  சோறு  வெச்சியா? என்பது போல  நல்ல  டைட்டில்  வைத்து திரைக்கதையில் கோட்டை  விட்டது 


2  யோகி  பாபு  தன முகத்தைக்கண்ணாடியில்  பார்க்காமல் படங்களில்  பலரை  உருவ கேலி   செய்வது போல  இயக்குனர்  திரைக்கதையில் கோட்டை  விட்டு  விட்டு  இதில் டைரக்டர்  டி ஆர் அவர்களை  கிண்டல் செய்வது போல  சில காட்சிகள் வேற 




 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -u



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எமக்குத்தொழில் ரொமான்ஸ் (2024) - தமிழ் = 1998 ல்  ரிலீஸ்  ஆன கார்த்திக்கின் படமான அரிச்சந்திரா  படத்தின்  பட்டி  டிங்கரிங்க்  அட்லி  வெர்சன் தான்  இது . திரைக்கதை யில் சுவராஸ்யம் இல்லை .அவந்திகா  நடிப்பும் சுமார் . ஒரே பிளஸ் அசோக் செல்வன் தான் .விகடன் - 38 . குமுதம் - சுமார் .மை  ரேட்டிங்க் - 2 / 5

Tuesday, November 19, 2024

PANI (2024) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )

       

      நடிகர்  ஜோஜூ  ஜார்ஜ்  இயக்குனர்  ஆக அவதாரம்  எடுத்திருக்கும்  முதல் படம் இது . இயக்குனர்  தரணி  இயக்கிய  தூள்  படம்  போல  விறு விறுப்பான  ஆக்சன்  த்ரில்லர்  ஆக  வந்திருக்கிறது ( தூள்  கதைக்கும் , இதற்கும்  சம்பந்தம் இல்லை , டைரக்சன் பாணி மட்டும்  மேட்சிங்க் )  24/10/2024   முதல்   திரை  அரங்குகளில் ரிலீஸ்  ஆன இப்படம்     லோ  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  25  கோடி ரூபாய் பாக்ஸ்  ஆஃபீசில்  வசூலை வாரிக்குவித்த படம்   


 1995ல்  துணை  நடிகராக  அறிமுகம்  ஆன  ஜோஜூ ஜார்ஜ்  2015  வரை        சுமார்  21  வருடங்கள்  நம்ம  ஊர்  சத்யராஜ் போல சின்னச்சின்ன  ரோல்களில்  நடித்து  வந்தார் .   .  2015ல் வெளியான ஒரு செகண்ட்  கிளாஸ்  யாத்ரா   கேரளா  மாநில அரசின்  சிறந்த  துணை  நடிகருக்கான  விருதைப்பெற்றார் . 2018ல்   ரிலீஸ்  ஆன  ஜோசஃப் படத்தில்  ஹீரோவாக அவருக்கு  பிரேக்  கொடுத்தது , 2021  ல் ரிலீஸ் ஆன  சோலா  வில்   மாநில  அரசின்  விருது  கிடைத்தது . நயாட்டு , பொரிஞ்சு மரியம், ஜோஸ்  , ஹலால்  லவ் ஸ்டோரி ,ஜகமே  தந்திரம் (தமிழ் )  , பட ,  மதுரம்  ஆகிய படங்கள்  இவர்  பேர்  சொல்பவை . இவர்  ஒரு  பிண்ணனிப்பாடகரும்  கூட  


பணி  என்பதற்கு  தமிழ் , மலையாளம்  ஆகிய  இரு  மொழிகளிலும் ஒரே  அர்த்தம்  தான் . வேலை . ரவுடித்தனத்தையே  வேலையாகக்கொண்டவனின்  க்ரைம்  ஆக்சன் கதை  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


  சம்பவம் 1 -   கதை  நடக்கும்  இடம்  கேர்ளா  மாநிலம்  , திருச்சூர் . போலீஸ்  கமிசனர்  ஒரு  மீட்டிங்க்  போட்டு  நகரில்  நடக்கும்  பல  கொலை , அடிதடிகளூக்கு   ஒரு  கேங்க்ஸ்டர்  க்ரூப்பே  காரணம், அவர்களைக்கண்காணிக்க  வேண்டும்  என  முடிவு  எடுக்கிறார்கள் 


  சம்பவம்  2  -பல  ரவுடிகளுடன்  தொடர்பில்  உள்ள  நாயகன்  தான்  போலீஸ்  கண்காணிக்கும்  நபர் .  நாயகன்  தன்  மனைவியுடன்   இனிமையான  இல்லற  வாழ்வு  நடத்தி  வருகிறார்


   சம்பவம்  3  . வில்லன்கள்  இருவர் . இவர்கள்  வாடகைக்கொலையாளிகள் . இவர்களிடம் பணம்  கொடுத்து ஆளைக்காட்டி  விட்டால்  ஆளைப்போட்டுத்தள்ளி விடுவார்கள் . படத்தின் ஓப்பனிங்  ஷாட்டிலேயே  பப்ளிக்  நடமாடும்  இடத்தில்  வில்லன்கள்  இருவரும்  அசால்ட்டாக  ஒரு  கொலையை  செய்து  போலீசை  அழைத்து  கொலையைப்பார்த்த  சாட்சிகளே  தாங்கள்  தான்  என்கின்றனர் 


  சம்பவம்  4 - ஒரு  ஷாப்பிங்க்  காம்ப்ளெக்ஸ் போய் இருந்தபோது  வில்லன்கள்  இருவரும்  நாயகனின்  மனைவியை  வேண்டும்  என்றே  உரசி விடுகிரார்கள் . அதைக்கண்ட  நாயகன்  வில்லன்கள்  இருவரையும்  புரட்டி எடுக்கிறார். இதனால்  வன்மம்  கொண்ட  வில்லன்கள்  வெகுண்டெழுந்து  நாயகனின்  வீட்டைக்கண்காணித்து    நாயகன்  இல்லாத  தருணம்  அவர்  மனைவியை  பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள் 


  நாயகன்  அந்த  வில்லன்களை  எப்படிப்பிடிக்கிறார் ? அவர்களை  என்ன  செய்கிறார்  என்பதே  மீதி  ஆக்சன்  அடி பொழி  கதை 


 நாயகன்  ஆக  ஜோஜூ  ஜார்ஜ்  அமைதியான  புயலாக  நடித்திருக்கிறார். படத்தில்  இவருக்கு  வசனம்  மிகக்குறைவு. ரஜினி  பாணீயில்  சொல்லனும்னா  பேச்சு  இல்லை , வீச்சு தான் 


 நாயகியாக  அபிநயா  நடித்திருக்கிறார். உணர்ச்சிப்பிழம்பான  நடிப்பு 


  வில்லன்களாக  சாகர்  சூர்யா ,   வி.பி  ஜூனைஸ்  இருவரும்  பட்டையைக்கிளப்பி இருக்கிறார்கள் . வில்லன்களை  இவ்வளவு  வலிமையாக  சித்தரிக்கும்  படத்தில்  நாயகனாக   படத்தின்  இயக்குனரே  நடித்திருப்பது ஆச்சரியம்  


விஷ்ணு விஜய் , சாம் சி எஸ் , சந்தோஷ்  நாடாயணன்  என   ஒரு பட்டாளமே  இசை  அமைத்திருக்கிறது . பிஜிஎம்மில்  பல  இடங்கள்  அப்ளாஸ்  பெறுகிறது.மனு  ஆன்ட்டனி யின்  எடிட்டிங்கில்  படம்  143  நிமிடங்கள்  ஓடுகிறது . ஒளிப்பதிவு   வேணு  & ஜிண்ட்டோ  ஜார்ஜ் . சிறப்பான  கேமரா  ஒர்க் . குறிப்பாக  சேசிங்க்  காட்சிகளில்  முத்திரை  பதிக்கிறது 

கதை , திரைக்கதை , வசனம்  எழுதி இயக்கி இருப்பவர்  ஜோஜூ  ஜார்ஜ் 

சபாஷ்  டைரக்டர்


  1   தன்  மனைவி  பிரசவ  வலியை  அனுபவிக்கக்கூடாது  என  நாயகன்  குழந்தை  பெறும்  எண்ணத்தையே   விட்டு ஒழிப்பது  புதுமையாகவும்  அன்பை  வெளிப்படுத்துவதாகவும்  அமைகிறது . அந்தக்காட்சியை  நேரடியாக  சொல்லாமல்  பூடகமாக  உணர்த்திய விதம் குட் 


2  பஜாரில்  பலர்  உலவும்  இடத்தில்  சாமார்த்தியமாக  வில்லன்கள்  ஒரு  கொலையை  நிகழ்த்தும்  இடம்  அட்டகாசம் . வன்முறையைக்கூட  நாசூக்காக  நேரடியாகக்கொலையைக்காட்டாமல் பதட்டத்தை  ஏற்படுத்துவது எப்படி என்பதை  க்ளாஸ்  எடுக்கிறது   அந்தக்காட்சி 


3  ஒரு  சீனில்  ஒரு  அறையில்  ஒரு ஆள்  தன்  நண்பர்களுடன்  இருப்பார் . அங்கே  வரும் ஒரு  இளனிக்காரன்  மிகப்பெரிய  திருப்பாச்சி அரிவாள் கொண்டு  ஒவ்வொரு  இளநீராக  வெட்டி  ஒரே ஆளையே  தொடந்து   குடிக்கச்சொல்லி கட்டாயபப்டுத்துவான் . அந்தக்காட்சியில் இளநீர்  வெட்டும்  ஓசை  அட்டகாசம். ஒரு  சாதா  சீனை  மாஸ்  சீன் ஆக்குவது  எப்படி  என்பதை  காட்டி  இருக்கிறார்  இயக்குநர் 


4   நாயகனின்  மனைவியை  வில்லன்கள்  ரேப்  செய்தார்கள்  என்பதற்காக  நாயகனிடம்  வில்லனின்  காதலி  மாட்டும்போது  அவளை  எதுவும் செய்யாமல்  விடுவது  குட் 








  ரசித்த  வசனங்கள் 


1   பெண்கள்  பாலியல்  வன்முறைக்கு  ஆளாகும்போது இது ஒரு  விபத்து என  நினைச்சுக்கனும் . வாழ்நாள்  முழுக்க  இதை  மனசில  வெச்சுக்கிட்டு இருக்கக்கூடாது 


2  போலீசுக்குன்னு சில சட்ட திட்டங்கள்  இருக்கு , நீங்க  விதிகளை  ஃபாலோ பண்ணனும் 


விதிகள்  என்பது  இரு  தரப்புக்கும்  பொருந்தனும் 














 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   வில்லன்களை  பலமுள்ளவர்களாக  சித்தரித்தது  ஓக்கே . ஆனால் கொஞ்சம் ஓவர் டோஸ்  ஆகி  நாயகனை  பலவீனம்  ஆக்கி விட்டது . பலமான  வில்லன்களை  அதை விட  பலமாக  நாயகன்   எதிர்  கொண்டால் தான் செமயாக  இருக்கும் 


2   ஓப்பனிங்  சீனில்  கொடுக்கும் பில்டப்போடு  சரி , போலீசை  காணவில்லை .


3  வில்லன்கள்  இருவரும் இளைஞர்கள் .  எவ்வித  பின்புலமும்  இல்லாதவர்கள் . ஆனால்  பல     அடியாட்களுடன்  உலா  வரும்  நாயகனை  அசால்ட்  ஆக  எதிர்ப்பது  எப்படி ? 


4  ஒரு சீன்  அல்லது  இரு  சீன்  என்றால்  ஓக்கே  ஒவ்வொரு  சீனிலும்  வில்லன்கள்  அசால்ட்  ஆக  தப்பிப்பது எப்படி ? 


5  பாலியல்  வன்கொடுமைக்கு நாயகி  ஆளாகும்  காட்சியை  இன்னும்  சாஃப்ட்  ஆக  டீல் செய்திருக்கலாம்,  வேண்டும் என்றே  வன்முறையோடு  எடுக்கப்பட்டிருப்பது  தெரிகிறது 

6   நாயகன்  கேங்க் , வில்லன்  கேங்க்  இரு செட்டுமே  கெட்டவ்ர்கள்   என்பதால்  யார்  செத்தா  நமக்கென்ன? என்ற  எண்ணம்  தான்  ஏற்படுகிறது . நாயகன்  தரப்பில்  இழப்பு அதிகம் என்பதும்  நாயகனின்  மனைவியும், அம்மாவும்  பாதிக்கப்பட்டார்கள்  என்பதும்  மட்டுமே  பரிதாபத்தை  எற்படுத்துகிறது 


7   வில்லனின்  காதலி  நாயகன்  கையில்  சிக்கியும்  அவளைப்பணயமாக  வைத்து  வில்லனை  வரவைக்க  எந்த  முயற்சியும்  நாயகன்  எடுக்கவில்லை  என்பது  ஆச்சரியம் 


8  ஐ  சா  த  டெவில்  -  கொரியன்  மூவி  (2010)  ,  ஒரு  தெக்கன்  தள்ளு கேஸ்  (2022 )மலையாளம்   மூவி  இரண்டின்  பாதிப்பும்  திரைக்கதையில்  தெரிகிறது 


9 ஒரு  போல்டான , தைரியமான  பெண்ணைக்காட்ட  அவள்  தம்  அடிப்பவளாக சரக்கடிப்பவளாகத்தான்  போர்ட்ரே   பண்ணனுமா? 


10    ப்ரீ க்ளைமாக்ஸ்  கேப்டன்  பிரபாகரன்  க்ளைமாக்ஸ் சீனை  நினைவுபடுத்துது . க்ளைமாக்சில்  திருப்தி இல்லை .நாயகன்  வில்லனைக்கொல்லும்போது  வில்லன் மேல் பரிதாபம்  வரக்கூடாது 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   பரப்ரப்பான  க்ரைம்  ஆக்சன்  த்ரில்லர்  தான்  முதல்  பாதி  செம  ஸ்பீடு பின்  பாதி  கொஞ்சம்  வேகம்  குறைவு . ரேட்டிங்  3 / 5 


Pani
Theatrical release poster
Directed byJoju George
Written byJoju George
Produced by
  • M. Riaz Adam
  • Sijo Vadakkan
Starring
Cinematography
Edited byManu Antony
Music by
Production
companies
  • AD Studios
  • Appu Pathu Pappu
Distributed by
  • Sree Gokulam Movies
  • Dream Big Films
  • Phars Film (Overseas)
Release date
  • 24 October 2024
Running time
143 minutes
CountryIndia
LanguageMalayalam
Box office25 crore[1]