பசங்க பட இயக்குனர் பாண்டிராஜின் சமீபத்திய படங்கள் கடைக்குட்டி சிங்கம் (2018) , நம்ம வீட்டுப்பிள்ளை (2019)ஆகிய இரண்டும் வெற்றிப்படங்களாக அமைந்தாலும் எதற்கும் துணிந்தவன் (2022) சுமார் ரகப் படமே .
விஜய் சேதுபதிக்கு மகாராஜா மெகா ஹிட் கமர்சியல் சக்ஸஸ் என்றாலும் ஏஸ் சுமார் ரகபபடமே . மைனஸ் இன்ட் மைனஸ் = பிளஸ் என்ற பார்முலாப்படி இந்த இருவரின் காம்பினேஷனில் வந்த இந்தப்படம் ஹிட் ஆகி உள்ளது .25/7/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் விரைவில் அமேசான் பிரைம் ஓ டி டி யில் வர இருக்கிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சாலையோரக்கடை ஒன்று நடத்தி வருகிறான் புரோட்டா ஸ்பெஷலிஸ்ட் . விதம் விதமாக புரோட்டா போடுவதில் மன்னன் . இவருக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள் . மாப்பிள்ளை , பெண் இருவருக்கும் பரஸ்பரம் பிடித்து விடுகிறது . நிச்சயதார்த்தம் நடக்கிறது
நாயகியின் அப்பா , அண்ணன் இருவரும் ஒரு காலத்தில் ரவுடியாக , தாதாவாக வாழ்ந்தவர்கள் . நாயகன் ஒரு அடிதடிக்கேசில் மாட்டியவன் என்ற தகவல் கிடைத்ததும் நாயகியின் அண்ணன் திருமணத்தை நிறுத்துகிறான் . ,நாயகனும் , நாயகியும் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார்கள்
இப்போது நாயகி தான் நாயகனின் கடைக்கு கல்லாப் பெட்டி சிங்காரி . இது நாயகனின் அம்மாவுக்குப்பிடிக்கவில்லை . குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிகிறார்கள். ஒரு முறை அல்ல , இரு முறை அல்ல , பல முறை . இவர்கள் மீண்டும் நிரந்தரமாக இணைந்தார்களா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக விஜய் சேதுபதி நன்றாக நடித்திருக்கிறார் .நாயகி ஆக நித்யா மேனன் சிறப்பாக நடித்திருக்கிறார் . இருவருக்கும் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது எனவும் சொல்லி விட முடியாது . ஓகே ரகம் தான்
திருடன் ஆக வரும் யோகிபாபு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் செம்பன் வினோத் ,சரவணன் , அருள் தாஸ் , காளி வெங்கட் நால்வரும் குணச்சித்திர நடிப்பை வழங்கி இருக்கிறார்கள்
சந்தோஷ் நாராயணன் இசையில் 6 பாடல்கள் . 3 நன்றாக இருக்கின்றன . பின்னணி இசை ஓகே ரகம் .எம் சுகுமாரின் ஒளிப்பதிவு குட் பிரதீப் ராகவ் எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகிறது . பின் பாதி இழுவை . கதை , திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் இயக்குனர் பாண்டி ராஜ்
சபாஷ் டைரக்டர்
1 முதல் பாதி முழுக்க காமெடியாகக்கொண்டு போன விதம் . யோகிபாபுவின் காமெடி டிராக் ஒர்க் அவுட் ஆனது
2 குடும்பத்துடன் பார்க்கத்தக்க முதல் பாதி . பெண்களால் மட்டும் பார்க்க முடிகிற பின் பாதி
3 புருசனிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு வரும் நாயகி தனது உடையுடன் , புருஷனுக்கும் சேர்த்தே உடை எடுத்து வருவது
ரசித்த வசனங்கள்
1 சாமி , நான் அதிகம் ஆசைப்படவில்லை, ஒரு பத்துப்பவுனோ , 15 பவுனோ அடிச்சாப்போதும்
2 சம்சாரத்துக்குக்காலைல இருந்து தலைவலி
சம்சாரம் என்றாலே தலைவலி தானே ?
3 சொந்தக்காரன் மாதிரி வீணாப்போனவங்க யாரும் கிடையாது
4 சொந்தக்காரன் நம்மை வாழவும் விட மாட்டான் சாகவும் விட மாட்டான்
5 நாம எதுலயாவது தோற்கணும் ,சொந்தக்காரன் நமக்கு அட்வைஸ் பண்ணனும் . அதுதான் அவன் நோக்கம்
6 உங்களை எப்படிக்கூப்பிட? அத்தான் ? மாமா? வேணாம் , ட்ரெண்டிங்கா டேய் , வாடா , போடா இப்டி கூப்பிடுறேன்
7 எப்பவும் உறவை விட்டுத்தள்ளி தான் இருக்கணும்
8 எந்த வீட்டில் நல்ல காரியம் நடப்பதாக இ ருந்தாலும் அதைத்தள்ளிப்போடக்கூடாது
9 பெரிய இளையாராஜா பேமிலி . அவரு யாரு ? டி இமானா?
10 கடைல உட் காரச்சொன்னா கல்லாப்பெட்டில மட்டும் தான் உட்காரனும்
11 அத்தையை அத்தை என சொல்லாம நத்தைன்னா சொல்ல முடியும் ?
12 பிள்ளையைப்பெத்துக்கொடுக்கச்சொன்னா பிரியத்தைப்பெத்துக்கொடுத்திருக்கே?
13 குடும்பம் பிரிய பெரிய காரணம் எல்லாம் தேவை இல்லை . கன்றாவியான காரணமே போதும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 பின் பாதி திரைக்கதையில் அழுத்தம் இல்லை . இருவரும் பிரிவதற்கோ , மீண்டும் சேர்வதற்கோ காரணம் எதுவும் சொல்லப்படவில்லை
2 தினசரி ரூ 5000 - ரூ 8000 லாபம் வரும் கடையில் பாத்திரங்களை துலக்க 300 - 500 ரூபா சம்பளத்தில் ஆள் மாட் டார்களா?
3 க்ளைமாக்சில் இருவரும் இணைவார்களா? மாட் டார்களா? என்ற பதட் டம் ஆடியன்ஸுக்கு வரவில்லை , சலிப்பு தான் வருகிறது
4 காரணமே இல்லாமல் கத்தி கத்திப்பேசுவது இரிட்டேட்டிங்க்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - தலைவன் தலைவி (2025) - காதலித்துத்திருமணம் செய்து கொண்ட தம்பதி அடிக்கடி சண்டை போட்டுப்பிரிந்து விடுகிறார்கள்.அவர்கள் சேர்ந்தார்களா?இல்லையா? என்பது க்ளைமாக்ஸ்.ஒரு மாமாங்கத்துக்குப்பின் யோகிபாபு காமெடி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. விஜய்சேதுபதி,நித்யாமேனன் நடிப்பு,பாண்டிராஜ் இயக்கம் ,காமெடி மூன்றும் பிளஸ்.அடிக்கடி கத்திக்கத்தி சண்டை போடுவது எரிச்சல். ஒளிப்பதிவு அருமை.டி வி சீரியல் பார்க்கும் பெண்களை மிகவும் கவரும்.விகடன் மார்க் யூகம் 41. ரேட்டிங் 2.75 /5தியேட்டரில் இதற்குக்கூட்டம் மாரீசன் க்கு வந்ததை விட அதிகம்.ஆனால் தரத்தில் அதை விட ஒரு மாற்றுக்கம்மி
