இயக்குனர் ராம் படைத்த முதல் படமான கற்றது தமிழ் (2007) வெளியான போது ஒரு பெரிய தாக்கத்தை அது ஏற்படுத்தியது . ஈரானிய பட பாணியில் திரைக்கதை , ஒளிப்பதிவு இருந்தது .6 வருடங்கள் கழித்து அவரது இரண்டாவது படம் தங்க மீன்கள் (2013) சிறந்த தமிழ்ப்படத்துக்கான தேசிய விருதைப்பெற்றது . 3வது படமான தரமணி (2017) சிறந்த வசனத்துக்கான ஆனந்த விகடன் விருதைப்பெற்றது .4வது படமான பேரன்பு (2019) சிறந்த படத்துக்கான ஆனந்த விகடன் விருதைப்பெற்றது .5வது படமான 7 கடல் 7 மலை சர்வதேச திரைபபட விழாவில் திரை இடப்பட்டது .சில பொருளாதார சிக்கல்களால் அது திரை அரங்குகளில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை
.இவர் இயக்கிய அனைத்துப்படங்களும் சீரியஸான கதைக்களங்கள் .. ஆனால் அவரது பாணியில் இருந்து விலகி ஒரு காமெடி டிராமாவைப்படைத்திருக்கிறார் . குழந்தைகளுடன் பெற்றவர்கள் அனைவரும் ரசித்துப்பார்க்கும் இந்தப்படம் 4/7/2025 அன்று ரிலீஸ் ஆகி செம ஹிட் ஆகி இருக்கிறது . இவர் இயக்கிய படங்களில் வசூல் ரீதியாக பிரம்மாண்ட வெற்றியைப்பெற்ற முதல் படம் இதுதான்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் இந்து , நாயகி கிறிஸ்ட்டியன் , இருவரும் மதம் மாறித்திருமணம் செய்து கொண்டதால் நாயகி வீட்டில் செம எதிர்ப்பு . . 8 வயதில் ஒரு மகன் . பொருளாதாரத்தேவைகளுக்காக நாயகி ஒரு இடத்தில் பணி , நாயகன் வேறு ஒரு இடத்தில் பணி . வாரம் ஒரு நாள் தான் அனைவரும் சேர்ந்து இருப்பார்கள் . இவர்களது மகன் வீட்டில் தனிமையில் தான் இருப்பான் . இது அவனுக்குப்பிடிக்கவில்லை
அவன் தன அப்பாவிடம் ஒரு ரோடு ட்ரிப் போகலாம் என அடம் பிடிக்கிறான் . அப்படிப்போகும்போது நாயகனின் ஸ்கூல் மேட் கம் முன்னாள் க்ரஷ் சை எதிர்பாராத விதமாக சந்திக்கிறான் . அவர்கள் குடும்பத்தில் எல்லோரும் நன்றாகப் பழகுகிறார்கள் . அடுத்து மகனின் ஸ்கூல் மேட் கம் இன்னாள் க்ரஷ் சை திட் டம் இட்டு சந்திக்கிறார்கள் .அவர்கள் வீட்டில் ஒரு நாள் தங்குகிறார்கள் . இந்த இரண்டு நாட்களும் மகனும், அப்பாவும் அடிக்கும் லூட்டிகள் தான் கதை
நாயகன் ஆக மிர்ச்சி சிவா மாறுபட் ட வேடம் .பொறுப்பான அப்பா வழக்கமான காமெடி ஒன் லைனர்கள் என நன்கு நடித்திருக்கிறார்
நாயகி ஆக கேரளத்துப்பைங்கிளி கிரேஸ் ஆன்ட்டணி . செமயான ஹேர்ஸ்டைல் , கண்ணியமான ஆடை வடிவமைப்பு . அற்புதமான குணச்சித்திர நடிப்பு என கலக்குகிறார் .இவர் மலையாளத்தில் ஒரு காமெடி நடிகை
நாயகனின் ஸ்கூல் மேட் ஆக அங்காடித்தெரு அஞ்சலி செம க்யூட் . அஞ்சலியின் கணவன் ஆக அஜு வர்கீஸ் கச்சிதம் , நாயகனின் மகனாக மிதுள் ரியான் சுட்டித்தனமான நடிப்பு
நாயகனின் அப்பாவாக பாலாஜி சக்திவேல் கலகலப்பான நடிப்பு , நாயகனின் அம்மாவாக ஸ்ரீஜா ரவி ஓக்கே ரகம்
டெக்ஸ் டைல் எக்ஸ்போ வில் நாயகியிடம் பணி யாளாக வேலை பார்க்கும் அந்தப்பெண் நடிப்பு அருமை
சந்தோஷ் தயாநிதியின் இசையில் 3 முழுப்பாடல்கலள் ம் அவை போக குட்டி குட் டி பாடல்கள் ஏகப்பட் டவை . கொஞ்ச்ம ட்ரிம் பண்ணி இருக்கலாம்., ஓவர் டோஸ் . ஒளிப்பதிவு ஏகாம்பரம் .கனகச்சிதம் . திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ராம் . வி எஸ் மதியின் எடிட்டிங்கில் படம் 140 நிமிடங்கள் ஓடுகின்றது
சபாஷ் டைரக்டர்
1 மாறுபட் ட கதைக்களம் , சுவராஸ்யமான ரசிக்க வைக்கும் திரைக்கதை , நடித்தவர்கள் அனைவரின் நடிப்பும்
2 ஸ்கூல் கிரஷ் அஞ்சசலியின் போர்சன் அருமை . வீடியோ காலில் நாயகியும் , அஞ்சலியும் பேசிக்கொள்வது . 5வது படிக்கும்போது , அஞ்சலி கேட்டிருந்த சூரியகாந்திப்பூவை நாயகன் இப்போது தருவது , அதை அஞ்சலியின் கணவன் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்வது எல்லாம் கவிதையான காட்சிகள்
3 நாயகி கடையில் வைத்திருந்த கல்லாப்பெட்டி காணாமல் போவது , பணிப் பெண் மேல் சந்தேகப்படுவது , அதைத்தொடர்ந்து வரும் வசனங்கள், காட் சிகள் அருமை
4 படத்தில் வரும் அனைத்துக்கேரக்டர்களையும் பாஸிட்டிவ் மோடில் இயக்குனர் விக்ரமன் பாணியில் அமைத்தது அருமை ( இது நடைமுறையில் சாத்தியம் இல்லை எனினும் ரசிக்க வைக்கிறது )
5 நாயகனின் மகனின் க்ரஷ் வீட்டில் சிறுமியின் அப்பாவுடன் போட்டி நடனம் ஆடுவதும் மகனிடம் மொக்கை வாங்குவதும் நல்ல சீன்
6 நாயகனின் மகன் மலையில் , மரத்தில் சுலபமாக ஏறி விடுபவன் எனக்கு இறங்கத்தெரியாதுப்பா என்பது கலக்கல் காமெடி
ரசித்த வசனங்கள்
1 எதுக்குடா என் முகத்துல தண்ணீர் அடிச்சு எழுப்புனே ?
நைட் அப்பா என்னை அடிச்சீங்க , காலையில் மகன் உங்களை அடிக்கிறேன் , இது தான் சன் ரைஸ்
2 சார் , உங்க பையன் டீச்சர் எடுக்கும் கிளாஸ் போர்னு என் கிட்டேயே சொல்றான்
அப்படியா சொன்னான் ?
என்ன ? கிண்டலா?
3 டேய் . வாடா வந்து பல் தேய்
நான் உன்னை மாதிரி இல்லைப்பா, எழுந்ததுமே தேய்ச்சுட்டேன்
4 என் வாழ்க்கைல நான் இது மாதிரி பார்த்தது இல்லை
அப்படியா? உன் வயசு என்ன?
8
5 சின்ன வயசுல இருந்து இதுதான் உன் பிரச்சனை .நான் எது சொன்னாலும் உனக்குப்புரிய மாட் டேங்குது
சின்ன வயசுல இருந்து இதுதான் உங்க பிரச்சனை, எனக்குப்புரியற மாதிரி சொல்லமாடடேன்கிறீ ங்க
6 சார் , உங்க பேர் என்ன ?
எம்ப்பரர்
அம்ப்பயர்?
7 நான்கு சுவர் நடுவே படுத்திருப்பதை விட வெட்ட வெளியில் படுத்திருப்பது பாதுகாப்புதான்
8 என் வாழ்க்கைல நான் பார்க்கும் முதல் சன் ரைஸ் இதுதான்
எனக்கும் தான்
உங்கப்பா உன்னை வெளில கூட்டிப்போனதில்லையா?
இல்லை , நான் எங்கப்பாவை வெளில கூட்டிப்போனதில்லை
9 எங்கே போறே?
வெளில போகும்போது எங்கே போறே? எனக்கேக்கக்கூடாது
ஓக்கே வேர் ஆர் யு கோயிங்க் ?
சாமி கும்பிட
10 அப்பா , நீ மட்டும் உன் க்ரஷ்க்கு சூரியகாந்திப்பூ தரும்போது நான் என் க்ரஷ்க்கு சூரியகாந்திப்பூ தரக்கூடாதா?
11 என்னது ?ஸ்கேரி கேட்டா? அப்படின்னா?
பயஙதாங்கோ ளி
12 யுவர் க்ரஸ் வெரி ஷாக் ?
வெரி க்யூட்
13 கோகுல் , கீழே இறங்கி வாடா
புருஷனை பேர் சொல்லிக்கூப்பிடலாமா/
டேய் ,கோகுல் , கீழே இறங்கி வாடா
14 இந்த ரோடு எங்கே [போகுது ?
வீட்டுக்கு
யார் வீட்டுக்கு ?
யாரோட வீடோ அவங்க வீட்டுக்கு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய படம் தான் , ஆ னால் அடம் பிடித்துக்காரியம் சாதிக்கும் பையனின் கதை . இதைப்பார்த்தால் அவர்களும் அ டம் பிடிக்க மாட் டார்களா?
2 மகன் மரத்தில் ஏறுவது , மலையில் ஏறுவது சில ரிப்பீட்கள் தவிர்த்து இருக்கலாம்
3 பாடல்கள் ஓவரோ ஓவர் , குறைத்து இருக்கலாம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -கிளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குழந்தைகளுடன் காண வேண்டிய குதூகலமான பீல் குட் மூவி .காமெடிக்குக்காமெடி . விகடன் மார்க் யுயுகம் 46 . ரேட்டிங்க் 3/5