Wednesday, October 01, 2025

அந்த ஏழு நாட்கள் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா )

               

        திரைக்கதை  மன்னன்  கே  பாக்யராஜ் இயக்கிய அந்த   ஏழு  நாட்கள்(1981) படத்துக்கும்  இதற்கும்  சம்பந்தம் இல்லை .இரண்டும்  வேறு வேறு கதை .படத்தின்  இயக்குனர் எம் சுந்தர் கே  பாக்யராஜ் இடம் அஸிஸ்டெண்ட் ஆகப்பணி புரிந்தவர் .மற்றும்  கே  பாக்யராஜ் இதில்  ஒரு கெஸ்ட்  ரோலில் நடித்து இருக்கிறார் .அவ்வளவுதான் 

  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  ஒரு வானிலை ஆராய்ச்சி மாணவன்  டெலஸ்க்கோப்  வைத்து  வானத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதே  அவனது முழு நேர வேலை . அவனது  அப்பா வருங்கால எம் எல் ஏ . இந்நாள்  அரசியல்வாதி .கட்சித்தலைவர்  தானாக   முன் வந்து   தன மகளுக்கு நாயகன் தான்   மாப்பிள்ளை  என நாயகனின் அப்பாவிடம் சம்பந்தம் பேசுகிறார் 


நாயகி  ஒரு ஜுனியர்  வக்கீல் .சீனியர்  வக்கீலிடம்  உதவியாளர் ஆகப்பணி புரிகிறார் .அப்பா  ஒரு போலீஸ்  ஆபீசர் 



 நாயகன்  ஒரு வேலையாக  வக்கீல் ஆபீஸ்    வர  நாயகியுடன் அறிமுகம் ஏற்பட்டு அது காதல் ஆகிறது .இவர்கள்  இருவருக்கும் நிகழும் காதல்  களியாடடங்கள்  முதல் 30 நிமிடங்கள் ஜாலியாகப்போகிறது 



300  ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வமான சூரிய கிரகணம் பற்றி ஆராயும் போது நாயகனுக்கு ஒரு சூப்பர் பவர் கிடைக்கிறது . நாயகன்  ஒருவருடைய கண்களைப்பார்த்தால்  எ திராளி இறக்கும்   நாள்   தெரியும் .அந்த   சக்தி கிடைத்ததும்   நாயகன்   பலரிடம் அதை செக் செய்து உறுதிப்படுத்துகிறான் .


 கடைசியில்  நாயகியின் கண்களைப்பார்க்க   அவர் இன்னமும் 7 நாட்களில்  இறப்பார் எனத்தெரிகிறது 


நாயகியைக்காப்பாற்ற நாயகன் எடுக்கும் நடவடிக்கைகளும் , அதற்குப்பின்   நிகழும் சம்பவங்களும் தான் மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக   அஜித்  தேஜ்  நடித்து இருக்கிறார் .  அளவான  நடிப்பு .முதல் பாதியை    விட  பின் பாதியில் அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பு  


நாயகி  ஆக  ஸ்ரீ  ஸ்வேதா  பிரமாதமாக நடித்து இருக்கிறார் . முதல் பாதியில்  அப்பாவி   காதலி ஆக குறும்புத்தனம் கொப்புளி க்கும் இளமைத்துள்ளல்  நடிப்பு . பின்  பாதியில்  பிரமாதமான  உணர்ச்சிகரமான நடிப்பு . கலக்கி விட் டார் 

நாயகனின்   அப்பாவாக  நாடோ டிகள் புகழ்   நமோ நாராயணன் , சம்பந்தியாக கே  பாக்யராஜ்  நடித்து இருக்கிறார்கள் 


 சச்சின்  சுந்தரின்  இசையில்   பாடல்கள்  பரவாயில்லை ரகம் , பின்னணி இசை   சுமார் ரகம் ஒளிப்பதிவு  கோபிநாத் ,கடைசி  40 நிமிடங்களில்   கேமராவில்  விளையாடி இருக்கிறார் .எடிட்டிங்க்  கச்சிதம் . 122 நிமிடங்கள்  டைம் டியூரேசன் 


சபாஷ்  டைரக்டர்

1  நாயகியின் அழகும்  , இளமைத்ததுள்ளலுடன் கூடிய நடிப்பும் 


2   வெறி நாய்க்கடி  விவகாரத்தை   டைமிங்காக யூஸ் செய்த விதம் 


3  முதல் 30 நிமிட ரொமாண்டிக் போர்சனும் , க்ளைமாக்ஸுக்கு முந்தைய  30 நிமிட பரபரப்பான ஸீன்களும் 


  ரசித்த  வசனங்கள் 


1  உன் கண்களைப்பறித்துக்கொள்ளப்பார்த்தாயே? வெளிச்சத்தில் சாதிக்காததை இருட்டில் என்னத்த சாதிக்கப்போறே? 


2  மாப்பிளை  நாளை  சயின்ட்டிஸ்ட்  ஆகி   என்னென்ன  கண்டு பிடிக்கப்போறாரோ ?


 நீங்க மாப்பிள்ளையைக்கண்டு பிடிக்கறதே பெரிய விஷயம் ,ஆள் எஸ்கேப் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனின்  சூப்பர் பவர்  ஆல்ரெடி  கிஸ் (2025) , அழகிய தமிழ் மகன் , நூறாவது   நாள்  ஆகிய படங்களில்  பார்த்த விஷயங்கள் தான் 


2 ஒரு சாதா  போலீஸ்  ஆபீசர்  வருங்கால எம் எல் ஏ  வை  மதிக்காதது , எதிர்ப்பது   நம்ப முடியவில்லை 


3  ஒரு மிகப்பெரிய   அரசியல்  கட்சித்தலைவர்   சாதா ஆளை  மாப்பிள்ளையாக்க முன் வருவதற்குக்காரணம் நம்பும்படி இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 16 + 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - 

டி வி ல  போடும்போது  நாயகிக்காகப்பார்க்கலாம் . தியேட் டரில்  டிக்கெட்  எடுத்துப்பார்க்கும் அளவு ஒர்த் இல்லை . விகடன்   மார்க்   யூகம் 38 , ரேட்டிங்க்  2.25 / 5