Saturday, July 12, 2025

DHEERAN - தீரன் (2025) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி ஆக்சன் டிராமா )

                          

ஹெச்  வினோத் இயக்கத்தில் , கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று (2017) படத்தின் கதைக்கும் இந்தக்கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . இது ஒரு லோ பட்ஜெட் படம் .பெரிய  நடிகர்கள்  யாரும் இல்லை . 4/7/2025  அன்று  திரை  அரங்குகளில்  வெளியான  இந்தப்படம்  பி , சி  சென்ட்டர்களில்  நன்றாக ஓடுகிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்



வில்லன்  ஒரு பெரிய கேங்க்ஸ்டர் . அவனிடம்  வேலை பார்த்த  சரவணன்  என்பவன்  வில்லனிடம் இருந்து பிரிந்து  தனியாகத்தொழில்  தொடங்கி வேறு ஒரு ஏரியாவில் பெரிய தாதா ஆகி விட்டான் .அவனுக்கு வில்லனின் பலவீனங்கள் , ரகசியங்கள்   எல்லாம் தெரியும் , அதனால் வில்லன் அவனைப்போட்டுத்தள்ள நினைக்கிறான் . 



வில்லன்  தன்னிடம் வேலை பார்க்கும்  நாயகனிடம்  இந்தப்பொறுப்பை ஒப்படைக்கிறான் .நீ  சரவணன்  இருக்கும் ஏரியாவுக்குப்போய் அவனிடம் வேலைக்கு சேர்ந்து  சமயம் கிடைக்கும்போது அவனைப்போட்டுத்தள்ளி விடு என்கிறான் 


 நாயகன் வில்லன்  சொன்னபடி  சரவணன்  இருக்கும் ஏரியாவில் போய் அங்கே  வேலைக்கு சேர்கிறான் .இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை 


மேலே  நான்   சொன்ன   மெயின் கதை  40 நிமிடங்கள்   தான் .மீதி  ஒன்றே  கால் மணி நேரம்  நாயகன் - நாயகி காதல் கதை இடைச்செருகலாய் உண்டு 


நாயகன் ஆக  ராஜேஷ்  மாதவன் .மரணமாஸ்  என்ற  மலையாளக்காமெடிப்படத்தின்   வில்லன் தான்  இவர் . ஆள்  பார்க்க  ஒல்லியாக  சாதாரணமாக இருக்கிறார் , ஆனால்  நடிப்பு , காமெடி , டயலாக் டெலிவரி நன்கு வருகிறது


  வில்லன் ஆக வினீத்    அதிக  வேலை இல்லை . மனோஜ் கே ஜெயன் நடிப்பு அருமை . நாயகி ஆக  அஸ்வதி மனோகரன்  இளமைத்துடிப்புடன் நடித்து இருக்கிறார் 


சும்மா  டைம் பாஸ்க்கு  தான் உன்னைக்காதலிக்கிறேன் .கல்யாணம் எல்லாம்   வேண்டாம் என  இவர் சொல்லும்போது தியேட் டரில் விஸில் பறக்கிறது 


முஜீப்  மஜித்  தான் இசை .இரண்டு  பாடல்கள் பரவாயில்லை  ரகம் . பின்னணி  இசை ஓகே  ரகம் ,ஒளிப்பதிவு  தரம் . நாயகிக்கான லைட்டிங்க் அருமை , எடிட்டிங்க்  நான் லீனியர்   கட்டில்  அமைத்த திரைக்கதையை  ட்ரிம் செய்த விதம் அருமை . 130 நிமிடங்கள் டியூரேசன் . திரைக்கதை  இயக்கம்  தேவதத்  ஷாஜி 

சபாஷ்  டைரக்டர்


1  கதையை  நேரடியாக சொல்லி இருந்தால்  சுமாராகத்தான் இருந் திருக்கும் .நான்  லீனியர்  கட்டில்  மாறி மாறி  சொன்ன விதம் அருமை 


2  நாயகன் - நாயகி  ரொமாண்டிக்  போர்சன்  அழகு  கவிதை .அதில்   நாயகியின் நடிப்பு கலக்கல் ரகம் 


3 கல்யாண வீட்டு சீக்வன்ஸ் , இழவு வீட்டு சீக்வன்ஸ்   கையாண்ட விதம் அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  டிரைவர்  வேலை கேட்டுத்தான் வந்தான் , ஆனா டிரைவிங்க் தெரியாதாம் 


2  இந்த உலகத்தில் எல்லாத்துக்கும்,எல்லாருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு 


3 வெல்டிங்க்  தொழில்  தெரிந்தவர்கள்  உலகில்   எங்கு  வேண்டுமானாலும்  வசிக்கலாம், பிழைத்துக்கொள்ளலாம் 


4 யார்க்கெல்லம்  வயித்தால  போகலையோ  அவங்களுக்கு  இந்த விஷ உணவில் பங்கு இருக்கு 


 இதை எல்லாம் நோட்  பண்றதா போலீஸ் வேலை ? 


5  இந்த ஊரு க்கு   போலீஸ்  ரெண்டே  விஷயத்துக்குத்தான் வரும் 1 பாஸ்போர்ட்  வெரிஃபிகேஷன்  2 சரவணன்  கையால்   சாக 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கார்த்திக் சுப்புராஜ்  இயக்கி பாபிசிம்ஹா  நடித்த  ஜிகிர்தண்டா  படத்தின் சாயல் லைட் டா இருக்கு 


2   பல வருடங்களாக  சரவணனிடம்  வேலை பார்த்த ஆள்  வேலைக்கு சேர்ந்த  ஒரே வாரத்தில் நாயகனுடன் இணைந்து வில்லனைப்போட உதவி செய்யக்காரணமே இல்லை . 


3  இது போல  கேங்க்ஸ் டரை , தாதாவை  தூங்கும்போது  கொலை செய்வதுதான் பாதுகாப்பு .சண்டைக்காட் சி  வைப்பதற்காக  பகலில்  கொலை  செய்ய   முயற்சிப்பது போலக்காட்டுகிறார்கள் 


4  நாயகனை  அனுப்பியது யார்  என நாயகனிடம்  விசாரித்து  விபரம் வாங்காமல் வில்லன் செய்வது நம்ப முடியவில்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - லோ பட்ஜெட்  காமெடி  படம்  பார்க்க விரும்புப வர்கள்  பார்க்கலாம் . ரேட்டிங் 2.5 / 5