Friday, May 13, 2016

கோ-2 - சினிமா விமர்சனம்

தமிழ் நாட்டின் முதல்வரை ஒரு சாதாரண தனி நபர் புத்திசாலித்தனமா கடத்திடறான். அவரை பணயமா வெச்சு  என்னென்னெ கோரிக்கைக்கள் கேட்கப்போறானோன்னு போலீஸ் பரிதவிக்கும்போது அவன் ரொம்ப சில்லித்தனமான கோரிக்கைகள் எல்லாம் வைக்கறான். ஒரே குழப்பமா இருக்கு. 

ஃபிளாஸ் பேக்.உள் துறை அமைச்சர் தேர்தல்ல தில்லுமுல்லு பண்ணி ஜெயிக்கறார். அவர் ஜெயிச்சது செல்லாதுன்னு பொதுந வழக்கு போட்ட சமூக சேவகரை அஈரோயின்மைச்சரே கொலை பண்ணிடறாரு.அந்த கொலைக்கு தண்டனை வாங்கித்தரத்தான் ஹீரோ இந்த டிராமா போடறாரு.

 அந்த சமூக சேவகருக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம் ? இதுல ஹீரோயின் எப்டி வர்றார்? என்பதெல்லாம் திரைக்கதை சுவராஸ்யங்கள்.

படத்தின்  முதல்  ஹீரோ இயக்குநர் தான். பில்லா 2 படத்தில் உதவி இயக்குநரா இருந்தவருக்கு இயக்குநர் பிரமோசன் . முதல் படத்துலயே ஆளுங்கட்சியை கிழி கிழினு கிழிச்சு தோரணம் கட்டி தொங்கப்போட்டிருக்கார், க்ளைமாக்ஸ்ல  முதல்வர் நல்லவர், அமைச்சர்கள் தான் கெட்டவங்கன்னு ஒரு சமாளிப்பு ( படம்  ரிலீஸ் ஆகனும் இல்ல)


படத்தில் 2 வது ஹீரோ  பாபி சிம்ஹா. இவர் ரஜினி பாணியில் நடிப்பதை குறைச்சுக்கிட்டா நலம். இவருக்குன்னு சொந்தமான நடிப்புத்திறமை இருக்க எதுக்கு இப்டி?  வசன உச்சரிப்பு , பாடி லேங்க்வேஜ் எல்லாம் கன கச்சிதம். ஒரு டூயட்  வேற  இருக்கு.

முதல்வரா வரும் பிரகாஷ் ராஜ் கலக்கறார். முதல்வன் பட ரகுவரன் -அர்ஜூன் காம்போ பேட்டி போல் இதிலும் ஒரு காட்சி உண்டு. வாத விவாதங்களில் வசனகர்த்தா பளிச்சிடுகிறார்.


 ஆனால் பல காட்சிகளில் ஆளுங்கட்சியை விமர்சிக்கும் வசனங்களும் முதல்வர் நல்லவர்  ஆனால் நிர்வாகத்திறமை அற்றவர் என்பது போல் குழப்பமான வசனங்கள் வருது. அது சென்சார் பிரச்சனைக்காகவும் , பட ரிலீஸுக்கான மறைமுகமான நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் இருக்கலாம்


மயில் சாமி  ஒரு காமெடி  ரோலில் லைட்டாக  சிரிக்க வைக்கிறார். கருணா ஒரு கேர்கடர் ஆர்ட்டிஸ்ட்டாக கெஸ்ட்  ரோல். நாசர் ஒரு சீன் வந்தாலும் மனதில் நிற்கிறார். 

 நாயகனின் நண்பராக வருபவ்ருக்கு நல்ல  வாய்ப்பு 

  நாயகிக்கு அதிகம் வேலை இல்லை. இது போன்ற சென்சேசனல் திரைக்கதைக்கு இதுவே போதும்

எலக்சன் டைமில் வந்ததால் பரப்ரப்பாக ப்பேசப்படும்

 இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்புகள் எளிதாகக்கிடைக்கும்.  ஹீரோ பாபி சிம்ஹாவுக்கும் இது ஒரு  வெற்றிப்படமே





தியேட்டரிக்கல் ட்விட்டர் அப்டேட்ஸ்

தேர்தல் கால சிறப்புத்திரைப்படம் கோ 2 =128 நிமிசங்கள் @ ஈரோடு மகாராஜா மல்ட்டிபிளக்ஸ்.


2 ஓப்பனிங் சீனே பரபரப்பு.தேசிய கீதம் போல் சிஎம் மை கடத்திட்டாங்க.தானைத்தலைவர் னு உள்குத்து டயலாக் # கோ2


3 கார்வண்ணன் ன் பாலம் பட பாணியில் திரைக்கதை பய்ணம் 2


4 ஹீரோயின் குப்பையை குப்பைத்தொட்டில போடாம நடு ரோட்ல போட்டதை ஹீரோ அன்பா கண்டிக்கறாரு.அடுத்த சீனே லவ் (நாமும் இதே பார்முலா பாலோ )


5 பில்லா 2 உதவி இயக்குநர் தான் இயக்குநர் 2 ராசி 2 போல

6 தளபதி பட ரஜினி மம்முட்டி மீட் சீன் உல்டா சீன் ரசிகர்களிடம் எடுபடவில்லை.பொருந்தா காமெடி .

7 ஜெ வின் ஆட்சியை கிழி கிழி னு கிழிக்கறாங்க.குறிப்பா வெள்ளம் பஞ்சம் பற்றி 2


8 ஆளுங்கட்சியை விமர்சிக்கும் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட்டது புத்திசாலித்தனம்.ஆனால் பாலைவனரோஜாக்கள் போல் கருத்தான வசனங்கள் இல்லை


இளவரசு க்கு ஓபிஎஸ் கெட்டப் .குட்

10  நியூஸ் 7 சேனல் இந்தப்படத்துக்கு பைனான்ஸ் போல.குட் ப்ரமோ 2

11 உள்துறை அமைச்சர் ,ஓபிஎஸ் வில்லன் ,ஜெ நிர்வாகத்திறன் அற்றவர் னு காட்சிகள் வருது .சபாஷ் டைரக்டர்.படம் ரிலீஸ் ஆனதே பெருசு 2


12  
தெலுங்கில் ரிலீஸ் ஆன பிரதிநிதி என்ற படத்தின் அதிகாரப்பூர்வமான ரீமேக் தான் கோ -2

நச் டயலாக்ஸ்

1 வயசு இருந்தப்போ ரொம்ப ஆடாம இருந்திருந்தா இப்போ ஜாகிங் ஓடாம இருந்திருக்கலாம் ( ட்விட்டரில் இருந்து சுட்ட வசனம் )



2 நான் யார் தெரியுமா?மந்திரி பையன்.

யோவ்.மந்திரி பையன்னா தப்பே பண்ணக்கூடாது.பொறுப்புணர்வு இருக்கனும்


நான் ஒரு FREE.BIRD

அப்போ அநாதைனு சொல்லுங்க.


நமக்காக நாம போட்ட விதிகளை நாமே பின்பற்றலைன்னா எப்படி ?# கோ2


5 சிஎம் என்னை கடத்திட்டே.உன் டிமான்ட் என்னனு இப்பவே சொல்லு

நீங்க மட்டும் பதவிப்பிரமாணம் செய்ய நல்ல நேரம் பார்க்கறீங்க?

என்னை நீ உன் பேரன்ட்சுக்கு அறிமுகப்படுத்த எனக்கு ஒரு பதவி அந்தஸ்து இருக்கனும்னு அவசியம் இல்லை 2


7 உங்களுக்கு அர்விந்த்சாமி ஓக்கேவா?

ம்ம் ஆனா அஜித் சார் தான் ரொம்ப பிடிக்கும் 2 # அஜித் ரெப்ரன்ஸ்

8 டெக்னாலஜி நம்ம மூளைக்கு உதவி செய்யனும்.ஆனா டெக்னாலஜியே மூளை ஆகிடக்கூடாது


தரமான கல்வி ,விவசாயம் தருவதா வாக்களித்து வரி வசூலிக்கும் அரசு அதை செய்யுதா ?

10 பால் உற்பத்தி ,கல்வி எல்லாவற்றையும் தனியாருக்கு தாரை வார்த்த அரசு மது உற்பத்தி ,விற்பனையை மட்டும் தானே எடுத்தது எப்ப்டி ? 2


11 நாட்டைப்பத்தி கவலைப்படறவங்க எல்லாம் பேஸ்புக்ல லைக்ஸ் வாங்கத்தானே புரட்சி பண்றீங்க ?

12  என்னைக்குமே ஒரு தலைவன் தான் தப்பான முன் உதாரணமா இருக்கக்கூடாது



சி.பி . கமெண்ட் - கோ-2 ஆளுங்கட்சியை நேரடியாகத்தாக்கும் அரசியல் படம். ஏ, பி செண்ட்டர்களில்  ஓடும்,முன் பாதி ஸ்லோ, பின் பாதி ஸ்பீடு, விகடன் =42 , ரேட்டிங் = 2.75/5