Thursday, February 09, 2012

அட்ரா சக்க - சி.பி. எஸ் ( ஐ .பி எஸ் ) ஆகனும்னு நினைச்சேன் ,முடியல) - கேள்வி பதில்கள் பாகம் 2


11.  நாங்க படத்துக்கு போய் படம் பிடிக்கலேன்னா, கடுப்பாகி வெளில     போயிடுவோம் ? நீங்க எப்புடி ? கடைசி வரைக்கும்  உக்கார்ந்து பார்த்துட்டு தான் வருவிங்களா ? நினைச்ச எங்களுக்கே கஷ்டமா இருக்கு , மறைக்காம சொல்லுங்க உங்க அனுபவத்தை ?.     



நான் எந்தப்படத்தையும் முழுசா பார்க்க மாட்டேன், செம போர்.. முக்காவாசிப்படம் தான் பார்ப்பேன் ஹி ஹி .. ஏன்னா பெரும்பாலான படங்கள் இடைவேளை வரை தான் நல்லாருக்கும்.. அதுவும் இல்லாம கட் அடிச்சுட்டு படம் பார்க்கறதால எந்தப்படத்தையும் முழுசா பார்க்க முடியாது, ஆஃபீஸ்ல இருந்து கால் வந்தா கிளம்பிடுவேன்.. 





12.           மொக்கை படத்துக்கு போய் பல்ப் வாங்குன அனுபவம் எதாவது ?   

  

 ஒன்றா? இரண்டா? மொக்கைகள்.. என்னிடம் வந்து சேர்ந்தவை.. பல இருக்கு.. 





13. பதிவுகள் வெளியிட்டுருக்கிறீர்கள் தெரியும் ? எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள் ?-@sundaratamilan2    


 ஒரு புக் கூட எழுதலை.. யாராவது பதிப்பகத்தார் ரெடியா இருந்தா மீ ஆல்சோ

ரெடி;; ஜோக்ஸ் புக், சினிமா விமர்சனம் புக், என்னை கேவலப்படுத்திய 

ஃபிகர்கள் பாகம் 1 டூ 10 , கவிதை புக் , தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர்

படங்கள் , 2011-ன் டாப் டென் படங்கள், என ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு, 

நல்ல மனசும் புரிதலும் உள்ள பதிப்பகத்தார் கிடைச்சா நான் ரெடி.. 



14.         லேட்டாக பதிவுலகத்துக்கு வந்தாலும், பெரும்தலைகளோடு முட்டி மோதி உங்களுக்கும் ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியும்னு ஒரு நம்பிக்கை இருந்துதா?       by @NattAnu       

            



 இல்ல, அதைப்பற்றி நான் சிந்திக்கலை..  நான் உள்ளே வந்தப்ப என் பிளாக்

அலெக்ஸா ரேங்க் 18 லட்சம்.. அது 2 லட்சம் ஆக வர்ற வரைக்கும் அப்படி ஒரு

நினைப்பு இல்ல. அதுக்குப்பிறகுதான் கடினமா உழைக்க ஆரம்பிச்சேன்.. இப்போ

சவுக்கு தான் எனக்கு முன்னால இருக்கார்.. கேபிள்சங்கர், ஜாக்கி சேகர்

எல்லாரையும் தாண்டிட்டேன்.. ( இதை அடக்கத்துடன் சொல்லிக்கறேன்)

தமிழ்மணம்ல 58 வாரங்கள் முதல் இடம் பிடிச்சேன், இண்ட்லில்  அதிக

ஹிட்ஸ் பதிவுகள் போட்ட பதிவர்கள் லிஸ்ட்ல முதல் இடம், ஒவ்வொரு

திரட்டிகளிலும் ஒரு தனி இடம் பிடிச்சிருக்கேன்.



.


15.     20. நீங்க பொண்ணுங்க போடுற மென்ஷனுக்கு மட்டுந்தான் ரிப்ளை 

பண்ணுவீங்களா தல.?     

                                            

 ஹா ஹா டெயிலி நான் ரிப்ளை போடற அய்யனார், அறிவுக்கரசு, ஷேக், 


உட்பட பலரும் ஆண்கள் தான்.. நான் 1700 ஆண்களை ஃபாலோ பன்றேன் , அது 


யார் கண்ணுக்கும் தெரியாது.. 130 பெண்களை ஃபாலோ பண்ணுனா அதுதான்


முதல்ல தெரியும்.. அது மனித மன இயற்கை       


                     

16. .சமீபத்துல பரபரப்பா பேசப்படுற பதிவுலக கோஷ்டிபிளவை பற்றி உங்கள்


கருத்து என்ன.? பதிவர்கள் இரண்டு குருப்பா பிரிஞ்சு இருக்கறது உண்மையா.?  






    

அய்யய்யோ, மறுபடியும் முதல்ல இருந்தா? இது பற்றி ஒரு போஸ்ட்


போட்டுத்தான் 786 பேர் என்னை தெளீய வெச்சு வெச்சு அடிச்சாங்க.. மறுபடியும்


வம்பா? அதனால நான் என்ன சொல்றேன்னா  கோஷ்டியா? அப்டின்னா என்ன?




எல்லாரும் நெம்ப நெம்ப ஒற்றுமைங்கோவ்!!




17.                        புதிய, வளரும் பதிவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன.?  




         

எல்லாரும் நல்ல பதிவா போடுங்க.. என்னை மாதிரி லூஸ் தனமா , மொக்கை




போஸ்ட் போடாதீங்க ஹி ஹி ... மற்ற பதிவர்கள் எந்த மாதிரி பதிவு


போடறாங்கன்னு படிச்சுப்பாருங்க.. ஹாட் டாபிக் பற்றி போஸ்ட் போடுங்க..


அரசியல், சினிமா , நகைச்சுவை கலந்து இருக்கட்டும்




                                                                        

18. சந்துல யாரு..எவ்ளோ கலாய்ச்சாலும் டென்ஷனே ஆக மாட்றீங்களே..


எப்படி இந்த மனோநிலை.?     


         



அது பிளாக்ல எல்லாரும் என்னை தாக்கி, கலாய்ச்சு போஸ்ட் போட்டு எனக்கு


பழக்க மாகிடுச்சு..  அதுவும் இல்லாம உப்பு கம்மியாதான் சாப்பாட்ல


சேர்த்துக்குவேன் அதான்..  ( எனக்கு இயல்பாவே ரோஷம் கம்மி ஹி ஹி )








19.      24.எல்லா படத்தையும் பாத்துட்டு விமர்சனம் பண்றீங்களே.உங்க 


வீட்டம்மா திட்ட மாட்டாங்களா.. தோராயமா சினிமாவுக்கு மட்டும் உங்க மாச 


பட்ஜெட் எவ்ளோ. ?    by @g4gunaa     


   






 என் சம்சாரம் ரொம்ப நல்ல பொண்ணு, திட்ட மாட்டாங்க, வாரம் ஒரு தடவை


உதைப்பாங்க ஹி ஹி








 வாரம் சராசரியா 3 படம் = 200 ரூபா மாசம் 12 படம்= 800 டூ 1000 ரூபா








20 .பசங்க மென்ஷன் போட்டா மட்டும் ரிப்ளே பண்ண ரொம்ப 


நேரமெடுக்குறீங்களே!அவ்ளோ கஷ்டமான கேள்வியா கேக்குறோம்? by


@rAguC            









அடங்கொய்யால, மென்ஷன் பார்க்கவே இப்போதான்யா கத்துக்கிட்டேன், இனி




பாருங்க பின்னிடறேன்..நீங்க ரகுவா? ராகுவா?









21. எப்பவும் கூலான ட்விட்ஸ் போடுறீங்களே அதுக்கு நீங்க போட்ருக்க கூலிங்


க்லாஸ்தான் காரணமா? ;  


               by @sesenthilkumar       


  

ஆமா, அதுவும் இல்லாம நான் கம்மங்கூழ், ராகிக்கூழ், சாப்பிட்டு உடம்பையும்


மனசையும் கூலா வெச்சிருப்பேன் அதுவும்தான் ( வெளீல தனியா வாடி


, உன்னை கவனிச்சுக்கறேன் கலாய்க்கறியா ங்க்கொய்யால )










22.   1000 பதிவுகளில் எதற்க்கேணும் -ve பின்னூட்டம் வந்துள்ளதா? ஆமெனில், 

அதை எவ்வாறு எடுத்துக்கொண்டீர்கள்? by @Thanda_soru         




 எதுக்கு வர்லைன்னு கேளூங்க, நாம எந்த பதிவு போட்டாலும் அதுக்கு 

ஆப்போசிட்டா பேச ஒரு குரூப் ரெடியா இருக்கும், ஆனா விஜய்யை கலாய்ச்சு

போஸ்ட் போட்டா மட்டும் ரெகுலரா 15 பேர் வந்து திட்டிட்டு போவாங்க,

அவங்க இப்போ ரெகுலர் திட்டிங்க் கச்டமர்ஸ் ஆகிட்டாங்க ஹி ஹி அதை

எல்லாம் லைட்டா எடுத்துக்கனும்.. ஜாலி கலாய்ப்பை ரசிக்கற மனோ



பக்குவம் அவங்களூக்கு கம்மின்னு நினைச்சுக்குவேன் 






 23. நீங்க படுச்சது கணக்கா இல்ல கணக்கு பண்றதா ? by @Butter_cutter        

  




அண்ணே, உங்க அளவுக்கு நான் கணக்கு பண்ண முடியாதண்ணே..


அன்னைக்கு ஈரோடு புத்தக திருவிழாவுக்கு வந்தப்போ ஒரு ஃபிகரை கூட்டிட்டு


வந்தீங்க, என்னை பார்த்ததும் நைஸா அவங்களை ஆக்ஸ்ஃபோர்டு ஹோட்டல்


பக்கம் நிக்க வெச்சுட்டு என்னை நைஸா கழட்டி விட்டுட்டு மறுபடி பார்ட்டியை


பிக்கப் பண்ணிட்டு போனீங்களே, அதை நான் பார்த்துட்டேன்.. ஹி ஹி










24. சினிமா வசனங்களை எப்படி ஒன்று விடாமல் எழுதுகிறீர்கள் ? ரெக்கார்டும் 


பண்ணலை ?  அப்புறம் எப்புடின்னு சொல்லுங்க சார் ?   by @gundubulb        


 




 எல்லாம் பழக்க தோஷம் தான்... செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, ஆரம்பத்துல 10 ஜோக்ஸ் அல்லது வசனம் நினைவு வரும், போகப்போக டெவலப் ஆகிடும்.. 








25. நீங்க வெற்றி பெற முக்கியமான மூன்று நல்ல குணம் எவை?     









1. எதையும் லைட்டா எடுத்துக்கற சுபாவம்




2. ஈகோ பார்க்காமல் எல்லோரிடமும் பழகுவது




3. கடுமையான உழைப்பு, எந்நேரமும் படைப்பு, ட்வீட்ஸ், போஸ்ட் என சிந்திப்பது.. 








-  தொடரும் 





டிஸ்கி -1 கேள்வி கேட்கறவங்க பின்னூட்டத்துலயும் கேட்கலாம்,ஆனாநான் பதிலை பின்னூட்டத்துல சொல்ல மாட்டேன் ( அப்புறம் எப்படிபதிவு தேத்த?)
[email protected]  இந்த மெயில்லயுமகேட்கலாம்..


டிஸ்கி 2 - மெயில் அனுப்ப முடியாதவங்க செல் ஃபோன்ல எஸ் எம் எஸ் அனுப்பியோ, கால் பண்ணியோ கேட்கலாம்..( நைட் 8 டூ 9)  அதுக்காக மிஸ்டு கால் விடக்கூடாது ஹி ஹி - 9842713441 ( வெள்ளிக்கிழமை மட்டும் கால் பண்ணாதிங்க  கோயில்லயோ, தியேட்டர்லயோ இருப்பேன் :) 


டிஸ்கி 3  -  இதன் முதல் பாகம் படிக்காதவங்களுக்காக- http://adrasaka.blogspot.com/2012/01/1_31.html