Showing posts with label SHORT STORY. Show all posts
Showing posts with label SHORT STORY. Show all posts

Wednesday, August 08, 2012

வேதாந்தம் - சுஜாதா - சிறுகதை

பாரில் நின் பாதமல்லால் பற்றிலேன் பரம மூர்த்தி


- தொண்டரடிப்பொடி


ஒரு காலகட்டத்தில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் (சாஸ்திரி, பக்தவத்சலம்) இருக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது தமிழகத்தில். துப்பாக்கிச் சூடு, கடையடைப்பு, ராணுவம் வந்து ரகளை எல்லாம் இருந்தது. ஸ்ரீரங்கத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் எதிரொலிகள் இருந்தன. கீழ உத்தர வீதியில் இருந்த நரசிம்மாச்சாரி என்னும் இந்தி வாத்தியாருக்கு வேலை போய்விட்டது. ரங்கு அவருக்கு ‘‘ஓய் இனிமே ‘லட்கா, லட்கி, யஹ் கலம் ஹை, தவாத் ஹை’ன்னு எதாவது குதிரை ஒட்டினீர்… கையை ஒடிச்சுருவா. பேசாம கொஞ்ச நாளைக்கு தொன்னை தச்சுண்டு, வாழைப்பட்டை உரிச்சுண்டு இரும். கலகமெல்லாம் அடங்கறவரைக்கும் லீவு எடுத்துண்டு ஆத்திலயே இரும்!’’ என்று அவருக்கு அறிவுரை வழங்கினான்.




‘‘என்னடா ரங்கு! ஜீவனத்துக்கு எங்கே போவேன்?’’ என்று அழாக் குறையாகக் கேட்டார். நரசிம்மாச்சாரிக்கு இந்தி தவிர வேறு எதுவும் சொல்லித்தரத் தெரியாது. இவருக்கு முன் இருந்த பாச்சா இந்தி எதிர்ப்பை எதிர்பார்த்துச் சட்டென்று மேத்தமட்டிக்ஸ§க்கு மாற்றிக் கொண்டார். சாரியை வாத்தியாராக வைத்துக்கொள்வதே சலுகைதான் என்று ஹெட்மாஸ்டர் சொன்னாராம். ரொம்ப ரொம்பக் கிட்டப்பார்வை. பகலில் பசுமாடு தெரியாது. பூதக்கண்ணாடி போன்ற சோடாபுட்டிக் கண்ணாடி போட்டும் புத்தகங்களை முகத்துடன் தொட்டுக் கொண்டுதான் படிக்க முடியும். பையன்கள் விஷமம் செய்தால் பொதுவாக அந்த திக்கைப் பார்த்து அதட்டுவார். யார் என்று அவருக்குத் தெரியவே தெரியாது. ‘‘அங்க என்னடா சத்தம்?’’ என்று மட்டும் கேட்பார். விஷமம் செய்யும் மாணவர் களைக் கிட்டத்தில் வந்தால்தான் அடிக்க முடியும். அவர்கள் சற்று துரத்தில் நின்றுகொண்டே சமாளிப்பார்கள். வீட்டில் கஷ்ட ஜீவனம்.





நான் அப்போது சிவில் ஏவியேஷனில் ஏ.டி.சி. ஆபீஸராக சென்னை மீனம்பாக்கத்தில் சேர்ந்திருந்தேன். தற்காலிகமாகத் திருச்சியில் போஸ்டிங். ஸ்ரீரங்கத்திலிருந்து செம்பட்டுக்கு தினம் ஜீப்பில் செல்வேன்.



இந்தி எதிர்ப்பால் பள்ளிகளுக்கு காலவரையறையின்றி லீவு விட்டிருந்தார்கள். இந்தி வாத்தியாரை வேலை நீக்கம் செய்தாகி விட்டது என்று நோட்டீஸ் போர்டில் போட வேண்டியிருந்தது. ‘இல்லையேல், பள்ளி கொளுத்தப்படும். எச்சரிக்கை!’ என்று போராட்டக்குழு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டக்குழுவில் ஸ்ரீரங்கத்து மூஞ்சிகள் யாரும் இல்லை. அது எதோ அந்நியப் படையெடுப்பு போல. எப்ப வருவார்கள், எப்பப் போவார்கள் என்று சொல்ல முடியவில்லை!



‘‘பாவம்டா நரசிம்மாச்சாரி. எதாவது பண்ண முடியுமா பாரு… ஏதாவது உங்க ஆபீஸ்ல கிடைக்குமா பாரு.’’




‘‘இந்தி வாத்தியாருக்கா? ஏரோட்ரோம்லயா… என்ன விளையாடறியா?’’

ரங்கு என்னிடம், ‘‘நீ வேணா வேதாந்தம் கிட்ட சொல்லிப் பாரேன். உனக்கு ஃப்ரெண்டுதா&ன? ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பாரு. வீட்டில குந்துமணி அரிசிகூட இல்லைங்கறார். எங்க பார்த்தாலும் கடன். எனக்கே நூத்தம்பது பாக்கி!’’




வேதாந்தம், ஸ்ரீரங்கத்தின் ஆர்.எஸ்.எஸ். சாகையின் தலைவன். அந்தக் கால ஆர்.எஸ்.எஸ். பற்றி கொஞ்சம் சொல்கிறேன். ஒரு காலத்தில் என்னை ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ப்பதற்குத் தீவிர முயற்சிகள் நடந்தன. காலேஜில் கெமிஸ்ட்ரி வாத்தியார் ஆர்.எஸ்.எஸ்-ஸில் சேர்ந்தால் நிறைய மார்க் போடுகிறார் என்று கேள்விப்பட்டேன். நான் கெமிஸ்ட்ரியில் வீக். அதனால் ஒருநாள் போய்த்தான் பார்க்கலாமே என்று காலை முனிசிபல் லைப்ரரி பக்கத்தில் – இப்போது அதை நேத்தாஜி சாலை என்று சொல்கிறார்கள் – போனால் மைதானத்தில் எல்லாம் சம்ஸ்கிருதத்தில் கட்டளைகளாக இருந்தன. பையன்கள் காக்கி டிராயர் அணிந்துகொண்டு ஒல்லிக்கால் தெரிய தய்னா பாய்னா பண்ணிக் கொண்டிருந்தார்கள் ‘நமஸ்தே சதா வத்ஸலே மாத்ருபூமி’ பாடினார்கள். சிலர் கம்பு வைத்திருந்தார்கள். ஒரு சில தலைவர்களுக்கு விசில் இருந்தது.



மாமா மாமாவாக உள்ளவர் களெல்லாம் பனியனும் தொப்பை மேல் அரை டிராயரும் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சிரித்துவிட்டேன். அதனால் நான் வரிசையிலிருந்து நீக்கப்பட்டேன். மேலும் அதிகாலையில் எழுந்து போவது சிரமமாக இருந்தது. ஏனோ பாட்டியும் நான் சங்கத்தில் சேருவதை அங்கீகரிக்கவில்லை!



வேதாந்தம் இப்போது பார்த்தாலும் ‘‘ஆர்.எஸ்.எஸ்-ல சேராம டபாச்சுட்ட பாரு…’’ என்று விசாரிப்பான். அவன் வந்தால் ஒளிந்துகொள்வேன்.



இப்போது நரசிம்மாச்சாரிக்காக வேதாந்தத்தை பார்க்கப் போக வேண்டியிருந்தது.



‘‘இந்தி வாத்தியாரை பள்ளிக் கூடத்தை விட்டு டெம்பரரியா நீக்கிட்டா வேது. பாவம் ரொம்பக் கஷ்டப்படறேர். அவரைக் காப்பாத்த வேற வழியிருக்கா?’’ என்று கேட்டேன்.



அவன் யோசித்து, ‘‘நரசிம்மாச்சாரிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?’’



‘‘சும்மா… மனிதாபிமானம்தான்!’’



‘‘மனிதாபிமானமா… இல்லை அவாத்தில் மூணு பெண்ணு இருக்கே, அதில ஏதாவது…’’



‘‘சேச்சே நான் அவாத்துப் பக்கம் போனதே இல்லை. அவள்ளாம் கறுப்பா சேப்பான்னுகூட தெரியாது!’’ என்றேன்.



‘‘எல்லாம் சேப்பு. பாக்க நன்னாவே இருக்கும்பா. ஒண்ணு பண்றேன்… தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஒரு வியக்தி என்னைப் பார்க்க வருவார். அவர்கிட்ட சொல்லி பிரைவேட்டா ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமான்னு பார்க்கறேன். எதுக்கும் சாரியை இந்தில எதும் உளறாம இருக்கச் சொல்லு. ஊரே கொல்லுன்னு போச்சு. அவனவன் கர்ச்சீப்பை தலைல கட்டிண்டு அரியலூர் வரைக்கும் போய் ரயில்வே ஸ்டேஷன்லாம் இந்தி எழுத்துக்களை தார் போட்டு அழிச்சுட்டு வரான். ஒரு ஸ்டேஷன் அழிச்சா நாற்பது ரூபாயும் பொட்டலமும் தராங்க. நான்கூட பிக்ஷாண்டார் கோயிலுக்கு தார் டின்னோட போ&னன். அதுக்குள்ள யாரோ அழிச்சுட்டான்!’’




இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முக்கிய அங்கம் அது. மைய அரசின் அலுவலகங்களில் இந்தியில் எழுதியிருப்பதை தார் பூசி அழிப்பது. அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் ரயில்நிலையங்களிலும் கிடைத்த அத்தனை போர்டுகளையும் அழித்து ரோடு போட தார் இல்லாமல் பண்ணிவிட்டார்கள். இனிமேல் அழிக்கவேண்டுமானால் புதுசாக போர்டு எழுதினால்தான் உண்டு என்று பண்ணிவிட்டார்கள். ‘இந்தி ஒழிக… தமிழ் வாழ்க’ என்று மதில் எல்லாம் எழுதி ரங்கராஜா டாக்கீஸ் ‘அன்னையின் ஆணை’ பட போஸ்டர் ஒட்ட முடியாமல் – இடமே இல்லாமல் போய்விட்டது.




ஸ்ரீரங்கத்தில் பெண்கள்தான் அதிகம் இந்தி படித்தார்கள். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துவிட்டு திருச்சிக்கு காலேஜ் அனுப்பப்படாத பெண்கள் கல்யாணத்துக்குக் காத்திருக்கும்போது தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ், டைப் கிளாஸ் இவற்றுடன் இந்தி கிளாஸ§ம் போய் வந்தனர். அதற்கான சான்றிதழ்களை இந்தி பிரசார சபா கொடுத்துவந்தது. ப்ராத்மிக், மத்யமா, ராஷ்டிரபாஷா என்று எம்.ஏ. லெவல் வரைக்கும் படிக்கலாம். இந்த பரீட்சைகள் எல்லாம் ஒத்திப் போடப்பட்டிருந்தன. திருச்சி கெயிட்டி, ஜூபிடர் போன்ற தியேட்டர்களில் இந்திப்படம் காண்பிப்பதை நிறுத்தி ‘நீச்சலடி சுந்தரி’ என்று டப்பிங் படம் போட் டார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பு வேளை. எங்களுக்கெல்லாம் ஓ.பி. நய்யாரின் இசை ரொம்பப் பிடிக்கும். ‘மிஸ்டர் அண்டு மிஸஸ் 55’, ‘ஆர்பார்’ போன்ற படங்களில் ‘ஆயியே மெஹரபான், ஹ¨ன் அபிமே ஜவான்’ போன்ற பாடல்களை அர்த்தம் புரியாமல் பாடிக் கொண்டிருப்போம். இப்போது அவற்றை கிராமபோனில் கேட்டதை கொஞ்ச நாளைக்கு ஒத்திப்போட்டோம்.



தக்ஷிண் பாரத் இந்தி பிரசார் சபாவிலிருந்து ஷர்மா வந்திருந்தார். அவரிடம் நரசிம்மாச்சாரியின் வேதனையை வேதாந்தம் சொல்லி அழைத்துச் சென்றான்.



அவர், ‘‘நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. சபாவிலிருந்து உங்களுக்கு அரைச் சம்பளமாவது தரச்சொல் கிறேன். தனிப்பட்ட முறையில் பாடங் கள் நடத்த, படிக்கக் குடிமக்களுக்கு உரிமை இருக்கிறது. இங்கிலீஷ் கற்பதில்லையா? பிரெஞ்ச் கற்பதில் லையா… அதுபோல் ஒரு மொழியைக் கற்பதற்கு யாரும் ஆட்சேபணை தெரிவிக்க முடியாது!’’ என்று தைரியம் சொல்லிவிட்டு நரசிம்மாசாரி சாப்பாட்டுக்குக் கஷ்டப் படுதாகச் சொன்னபோது, ‘‘தா&ன தா&ன மே நாம் லிக்கா ஹை (ஒவ்வொரு தானியத்திலும் பெயர் எழுதியிருக்கிறது)’’ என்று பழமொழி சொன்னார்.



‘‘அதெல்லாம் சரி. இவர் கஷ்டம் தீர என்ன செய்ய?’’ என்றபோது நரசிம்மாச்சாரிக்கு ஐம்பது ரூபாயும் வேதாந்தத்துக்கு பத்து ரூபாயும் கொடுத்துவிட்டுப் போனார். ஒப்பந்தம் என்னவென்றால், ‘எங்கள் வீட்டு மாடியில் பிரைவேட்டாக இந்தி கிளாஸ் ஆரம்பிப்பது. யாராவது வந்து கேட்டால் அதை தையல் கிளாஸ் என்றோ பிரெஞ்ச் கிளாஸ் என்றோ சொல்லிவிட வேண்டியது. விளம்பரம் எதும் கூடாது. ஒரு அம்பது பேராவது சேர்ந்தால் தொடர்ந்து சபா பணம் அனுப்பும். அதற்குள் கலகங்கள் அடங்கிவிடும்!’ என்றார்.



எங்கள்வீட்டு மாடியில் வாசல் திண்ணை அருகில் மர ஏணி வைத்து மேலே ஹால் போன்ற இடம் இருந்தது. கம்பி கேட்டை பூட்டிவிட்டால் யாரும் மாடி ஏறி வர முடியாது. பத்திரமான இடம்தான்.

இருந்தும் முதல் கிளாஸ் ஆரம்பித்த போது சற்று டென்ஷனாகத்தான் இருந்தது. நரசிம்மாச்சாரி முகத்தில் சவுக்கம் போட்டு மறைத்துக்கொண்டு சாயங்காலம் வெயில் தாழ இங்குமங்கும் பார்த்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தார். ‘‘கீழ வாசல்ல டி.கே-காரங்க வேஷ்டியை உருவறாங்க ரங்கு.’’

‘‘அந்த வழியா ஏன் வந்தீர்… நான் என்ன சொன்&னன்?’’




‘‘எனக்கென்னவோ பதஷ்டமா இருக்கு வேது!’’



‘‘பயப்படாதேயும்.’’



கிளாசில் சேர விரும்புபவர்களுக்கு தற்போது ‘பாஸ்வேர்டு’ என்கிறார்களே, அந்த மாதிரி ஒரு ரகசிய சமிக்ஞை வார்த்தை கொடுக்கப்பட்டிருந்தது. அதை உச்சரித்தால்தான் உள்ளே அனுமதி. நாற்பது பேர் சேருவதாகச் சொல்லியிருந்ததாக ரங்கு சொன்னான்.

ராத்ரி ஏழு மணிக்கு கிளாஸ் என்று பெயர். ஏழரை ஆச்சு… எட்டாச்சு… ஒருவரும் வரவில்லை. நான், வேதாந்தம், நரசிம்மாச்சாரி ஒரு கரும்பலகையில் சாக்கட்டியில் எழுதப்பட்ட ஸ்வாகத் அவ்வளவு தான்.

‘‘என்னடா ஆச்சு?’’



வேதாந்தம், ‘‘எல்லாரும் பயந்தாரிப் பசங்க ஓய்!’’



‘‘என்னடா வேது… வேதனையா இருக்கு. ஒரு பாஷை கத்துக்கறதுக்குக்கூட இந்த நாட்டில உரிமை கிடையாதா? என்ன சுதந்திரம் வந்து என்ன பிரயோசனம்?’’



வேதாந்தம், ‘‘நம்ம தாய்மொழியைப் புறக்கணிச்சுட்டு இந்தி கத்துக்கோன்னு சொன்னதுதான் தப்பு!’’



‘‘வேது, நீ யார் கட்சி?’’



‘‘என்னை சொந்த அபிப்ராயம் கேட்டா, எனக்கு இந்தி பிடிக்காது. சம்ஸ்க்ருதம்தான் எல்லாம். ஆனா, உம்ம சங்கடம் வேற. கவலைப்படாதேயும். இவங்களையெல்லாம் பாடித்தான் கறக்கணும்’’ என்றான் வேதாந்தம். காத்திருந்து பார்த்து எட்டரை மணிக்கு நரசிம்மாச்சாரியை வீட்டில் கொண்டு விட்டபோது அவர் முகத்தில் கவலை ரேகை படிந்திருந்தது.



‘‘என்ன பண்ணப்போறேனோ… பேசாம தமிழ் வாத்தியாரா இருந்திருக்கலாம். எங்கப்பா ஆனமட்டும் சொன்னார்…’’



‘‘நீர் போய்ப் படும். இந்த வயசில தமிழ் வாத்தியாரா மாறமுடியாது!’’



‘‘பாச்சாதாண்டா கெட்டிக்காரன்! சட்டுனு கணக்கு வாத்யாராய்ட்டான் பாரு… இத்தனைக்கும் எல்.டி. கூட இல்லை.’’



அப்போது தீர்த்தம் கொணடு வந்து வைத்த மூத்த மகள் கல்யாணியைப் பார்த்தேன்.



‘‘வேது, எனக்கு ஒரு ஐடியா…’’



‘‘எனக்கும் அதேதான் ஐடியா! எம்மா உனக்கு இந்தி தெரியுமா?’’

‘‘தெரியுமே மாமா!’’

‘‘எங்கே ஏதாவது இந்தில சொல்லு?’’

‘‘பாரத் ஹமாரா தேஷ் ஹை. பஹ¨த் படா ஹை. இஸ் மே கங்கா பெஹ்தி ஹை.’’



‘‘உன் போட்டோ இருக்கா?’’ என்றான் வேதாந்தம்.



‘‘இல்லையே… எதுக்கு?’’



தெற்கு வாசலிலிருந்து கஸ்தூரியை அழைத்துவந்து அவளை ‘சுள் சுள்’ என்று நாலைந்து போட்டோக்கள் எடுக்க வைத்தான்.



‘‘எதுக்கு மாமா?’’



‘‘எல்லாம் உங்கப்பாவுக்கு ஒத்தாசை பண்ணத்தான். அப்பாகிட்ட சொல்லாதே?’’ என்றான்.



வேது திருச்சிக்குப் போய் அதை ப்ளாக் எடுத்து ஒரு நோட்டீஸ் அச்சடித்தான்



‘இண்டர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரின் லாங்வேஜஸ்.





லேர்ன் ஆல் வேர்ல்டு லாங்வேஜஸ்.

காண்டாக்ட் வேதாந்தம் பிரின்ஸிபல்’



‘ஒன்ஆஃப் அவர் டீச்சிங் ஸ்டாஃப்’ என்று கல்யாணியின் போட்டோவை போட்டிருந்தான். புசுபுசு ரவிக்கையுடன் பக்கத்தில் ஒரு பூச்செண்டை தொட்டுக் கொண்டு எடுத்த போட்டோ அட்டகாச மாக இருந்தது. அதும் இத்தனை இளம்வயதில் மூக்கு குத்தியிருந்தது கிறக்கமாக இருந்தது.





வேது தம்பியின் கிரிக்கெட் சிநேகிதர்களைக் கூப்பிட்டு வீடு வீடாகப் போட்டுவிட்டு வரச் சொன்னான்.



‘‘வேது, ப்ராப்ளம் ஏதாவது வருமா?’’



‘‘இதில எங்கயாவது ‘இந்தி’ங்கிற வார்த்தை இருக்கா பாரு…’’ என்றான்.



இல்லைதான். அந்தச் சுற்றறிக்கைத் துண்டுப்பிரசுரம் ஆச்சரியமான விளைவைத் தந்தது. வெள்ளிக்கிழமை மாலையிலேயே ஜனங்கள், ‘‘மாமா இங்க எங்கயோ…. ஏதோ கத்துத் தாராளாமே… எங்க பட்டாபி கத்துக்கணும்னான்!’’ என்று விசாரித்துக்கொண்டு வர ஆரம்பித்தார்கள். ‘‘லைஃப்ல ஒண்ணு ரெண்டு லாங்வேஜ் கத்துக்கறது இம்பார்ட்டெண்ட் பாருங்கோ…’’



முதல் கிளாஸ் ஹவுஸ் ஃபுல். கேட்டு கதவைப் பூட்ட வேண்டியிருந்தது.



வேதாந்தம்தான் கல்யாணியை அழைத்து வருமுன் ‘நமஸ்தே சதாவத்சலே மாத்ருபூமி’ பாடிவிட்டு ‘‘பிரின்ஸிபல் ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’’ என்றான்.



நரசிம்மாச்சாரியும் தன் அடர்ந்த தலைமயிரையும் தாடியையும் தள்ளி வாரிமுடிந்து புதுசாக மொரமொரவென்று தோச்ச கோட்டு போட்டுக்கொண்டு ஏறக்குறைய அழகாக இருந்தார்.



‘‘நம் பாஷைகள் எல்லாமே ப்ராசீனமானவை. சம்ஸ்க்ருதத்தில் பிறந்தவை. அது தேவபாஷை. தேவநாகரி லிபி என்பதுதான் எல்லாவற்றுக்கும் ஆதாரம்’’ என்று பாணினி, ஐந்திரம் என்று ஏதேதோ பேசினார். லேசான சலசலப்பு ஏற்பட்டது. ‘‘அந்த டீச்சரை வரச்சொல்லு வேது!’’ என்று குரல்கள் கிளம்பின.



‘‘நாந்தாம்பா டீச்சர்..’’



‘‘அப்ப நோட்டீஸ் போட்டது?’’



வேதாந்தம், ‘‘வருவாடா… ஆலா பறக்காதீங்க. முதல்ல இண்ட்ரொடக்டரி கிளாஸ். அப்புறம்தான் மத்ததெல்லாம்.’’

‘‘வேது… என்னடா இது?’’ என்றார் நரசிம்மாச்சாரி புரிந்தும் புரியாமலும். ‘‘ஒண்ணுமில்லை ஓய்… நீர் பாடத்தை நடத்தும்.’’ அப்போது கல்யாணி வந்தாள். ‘‘கூப்டிங்களா மாமா?’’ வகுப்பு மௌனமாகியது.

‘‘கல்! வா! அப்பாவுக்கு ஒத்தாசையா அ ஆ இ ஈ சொல்லிக் கொடு. கல்யாணி போர்டில் எழுதியதை மாணவர்களை நோட்டுப் புத்தகங்களில் எழுதச் சொன்னான். அவர்கள் ஆர்வமாக எழுதி அவளிடம் திருத்தி வாங்க விரும்பினார்கள். நானோ வேதாந் தமோ திருத்தவேண்டாம் என்றார்கள். அருகில் சென்று சந்தேகம் கேட்டார்கள். மாணவர்களில் எல்லா வயதினரும் இருந்தனர். கீமான்தாங்கியான சீமாச்சுவிலிருந்து மாங்கொட்டை நாணு, தனகோபால், ரகு, நந்து எல்லோரையும் பார்த்தேன்.

கல்யாணி வளப்பமான பெண். அதனால் அவள் சிரத்தையாகக் கற்றுத் தந்தாலும் மாணவர்கள் கவனம் பிசகியது.

சாரியிடம

் யாரும் சந்தேகம் கேட்க வரவில்லை.

கஸ்தூரியை வரவழைத்து வகுப்பை போட்டோவும் எடுக்க வைத்தோம்.



சாரியைப் பார்த்து அவர்கள், ‘‘உமக்கேன் சிரமம்? டாட்டரே பாடம் நடத்தட்டும்!’’ என்றார்கள்.



நரசிம்மாச்சாரி கோபமாக இருந்தார்.



அவர்கள் போனதும், ‘‘வேதாந்தம் நீ பண்றது உனக்கே நன்னா இருக்கா? அது சின்னக்குழந்தைடா. அதுக்கு எதும் தெரியாது. அத்தனை பேர் பார்வையும் அலையறதுரா… அதுக்குத் தெரியவே இல்லை!’’

‘‘பாரும்… ஆள் சேர்ற வரைக்கும் ஒரு வாரம் இவ வந்துட்டுப் போகட்டும். சபாவில இன்ஸ்பெக்ஷன் வர வரைக்கும்தா&ன? பாரும்… ஒரு ப்ராடக்டை விக்கணும்னா அதை அலங்காரமா கண்ணாடி, காயிதம் எல்லாம் போட்டு விக்கறதில்லையா… அந்த மாதிரிதான்!’’

‘‘எனக்கு இதில சம்மதமே இல்லை வேதாந்தம்!’’

‘‘ஒரு வாரம் சமாளிச்சு அம்பது பேர் சேந்துட்டா, ஆயிரம் ரூபா தர்றதா சொல்லியிருக்கா சபாவில.’’

மறுநாள் அட்மிஷனுக்கு இன்னும் சில பேர் விண்ணப்பம் செய்தார்கள். காலையே வந்து சிலர் விசாரித்து விட்டுப் போனார்கள். ஜாக்கிரதை யாகத்தான் பதில் சொன்னோம். எங்கும் இந்தி என்கிற வார்த்தையே பயன்படுத்தவில்லை. மாடி ஹாலில் முப்பது பேருக்கு மேல் உட்கார இடமில்லாததால் இரண்டு கிளாஸ் ஷிஃப்ட் போடுவதாக முடிவெடுத் தோம். யார் யாரோ மேல அடையவளைஞ்சான், நொச்சியம் போன்ற இடங்களில் எல்லாம் வந்து சேர விருப்பம் தெரிவித்தார்கள்.



விஷயம் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழுவுக்குத் தெரிந்து போய்விட்டது. இவர்கள் மாற்றுப் பெயரில் இந்தி கற்றுத் தருகிறார்கள் என்பதை அறிந்த இளைஞர்கள், ‘புறப்படு தமிழா… ஆரிய மாயையை அடக்கக் கொதித்து எழு!’ என்று ஒரு கோஷ்டி நரசிம்மாச்சாரியின் வீட்டைச் சூழ்ந்துகொண்டு ‘‘ஆரியப் பதரே வெளியே வா!’’ என்று சத்தம் போட்டார்கள். சாரி புறக்கடையை விட்டு வெளிவரவில்லை. கல்யாணி தான் வெளியே வந்து, ‘‘அப்பா கோட்டைக்குப் போயிருக்கார்!’’ என்று பொய் சொன்னது. விஷயம் தீவிர மாகிவிட்டது. அவசர அவசரமாக ரங்கு கடைக்கு வந்து சாரியின் பக்கத்து வீட்டுப்பையன்!’’ ‘‘மாமா உங்களை இந்தி வாத்தியார் அழைச்சுண்டு வரச்சொன்னா”ர். ஒரே கலாட்டா… நெருப்பு வெக்கப் போறாளாம்.’’




நாங்கள் ஓடிச் சென்று பார்த்த போது ஊர்ப்பையன்கள் யாரையும் காணோம். பொன்மலையிலிருந்து வந்த ரௌடி கும்பல். அவனவன் கையில் கழி – கம்பு, அரிவாள் வைத்திருந்தார்கள்.

வேதாந்தம் நிலைமையை எடை போட்டான்.



‘‘பாருப்பா… யாரோ உங்களுக்குத் தப்பா சொல்லியிருக்கா. இந்தியாவது தொந்தியாவது… என்ன எங்களுக்குப் பைத்தியமா? தையல் கிளாஸ், பாட்டு கிளாஸ் நடத்தறா இந்தப் பொண்ணு.’’



‘‘இவளா, பாட்டா! ஏய் எங்க பாடு… பார்க்கலாம்’’ என்றான்.



கல்யாணி உட&ன கணீர் என்ற குரலில், ‘பாரத தேசம் என்ற பெயர் சொல்லுவார் துயர் வெல்லுவார்!’ என்று பாடி ‘நீராரும் கடலுடுத்த’வும் பாடினாள். எல்லாரையும் திகைக்க வைத்தாள். கூடவே அதன் தங்கையும் பாடியது. வேதுவும் சேர்ந்துகொண் டான்.



‘‘சார் கோட்டைக்குப் போயிருக் கார். வந்ததும் சொல்றேன். கலாட்டா பண்ணணும்னா நிச்சயம் பண்ணுங்கோ. இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்குச் சொல்லி அனுப்பிச்சிருக்கேன்.’’ ராஜகோபால் முரடர். சேர்த்தி உற்சவத்தின்போது மாந்தோலாலேயே மட்டையடி அடித்துக் கூட்டத்தைக் கட்டுப் படுத்துவார்





இவர்கள் இந்தி கிளாஸ் எதுவும் நடத்தவில்லை என்ற உறுதிமொழியில் வேதாந்தத்தின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டுதான் கலைந்தார்கள்.

வேதாந்தமும் நானும் உள்ளே சென்றோம். புறக்கடையில் தோக்கிற கல்லில் சாரி உட்கார்ந்திருந்தார். ‘‘சாரி உமக்கு ஹெல்ப் பண்ண நினைச்சு, உயிருக்கே ஆபத்தாயிடுத்து. கொஞ்ச நாளைக்கு இந்தி கிளாஸே வேண்டாம்!’’ என்றான்.

‘‘நான் போய் காவேரில குதிக் கிறேன்’’ என்றார்.



‘‘அப்படி சொல்லாதீங்கப்பா..!’’



‘‘ஓய் காவேரில முழங்கால் அளவு கூட ஜலம் இல்லை. குதிச்சா முட்டிதான் பேரும். கொஞ்சம் பொறுமையா இரும்… நான் உமக்கு வழி சொல்றேன்’’ என்றான்.



‘‘நீ வரதுக்கு முன்னாடி வீதில நின்னுண்டு என்னவெல்லாம் கத்தினான் தெரியுமா? பொண்ணை அனுப்பு. இந்தி கிளாஸ் வேண்டாம் வேற கிளாஸ் நடத்தலாம்னான்!’’



கல்யாணி, ‘‘என்ன கிளாஸ்ப்பா..’’




‘‘சும்மார்றி அறிவுகெட்ட முண்டம்!’’



சாரிக்கு வேறு மார்க்கம் பார்க்க முடியாத நிலையில் எனக்கு டெம்பரரி டிரான்ஸ்ஃபர் முடிந்து லீவில் போன ஏ.ஏ.ஓ. வந்துவிட்டதால் மீண்டும் மீனம்பாக்கத்துக்கு டியூட்டிக்கு திரும்ப வரும்படி ஆர்டர் வந்துவிட்டது. எனக்குச் சாரியை நினைத்து வருத்தமாகத்தான் இருந்தது.



ஊருக்குக் கிளம்புமுன் ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் ஜங்ஷன் போவதற்கு லால்குடி பாசஞ்சர் பிடிக்கக் காத்திருந்தேன். வாசலில் இந்தி எதிர்ப்பு உண்ணாநோன்பு என்று பெரிசாக போர்டு எழுதி பந்தல் போட்டுச் சிலர் ஜமக்காளத்தில் உட்கார்ந்திருந்தார்கள். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர் பேராசிரியர் மறையிறுதி என்று என் கையில் திணிக்கப்பட்ட நோட்டீஸிலிருந்து தெரிந்தது. அவர் தலைமையில் சாகும் வரை உண்ணாநோன்பு எனத் தெரிந்தது.




‘மைய அரசே ராணுவத்தை வாபஸ் வாங்கு!’ என அதட்டலாக எழுதியிருந்தது. நான் அந்தக் கூட்டத்தைக் கடக்கும்போது உண்ணாவிரதம் இருப்பவர் முன்னால் துண்டுவிரித்து ‘போராட்ட நிதிக்கு பொற்குவை தாரீர்!’ என்று எழுதி கண்ணாடிப் பெட்டியில் ரூபாய் நோட்டுகள் அடைந்திருந்தன. ‘‘தமிழ் வாழ்க… இந்தி ஒழிக…’’ என்று அவ்வப்போது கோஷம் லேசாக எழுந்தது. நிறைய நோட்டுகளும் நாணயங்களும் சிதறியிருக்க… அவ்வப்போது கண்ணாடிப் பெட்டியைத் திறந்து பெரிய பையில் திணித்துக் கொண்டிருந்தார்கள். பேராசிரியர் மறையிறுதியை கவனித்தேன். மூன்று நாள் தாடி… முழங்கையில் முறுக்கிவிட்ட ஜிப்பாவினால் அடையாளம் கண்டுகொள்ளச் சற்று நேரமாயிற்று.




‘‘வேதாந்தம் நீயா?’’

‘‘வா… வா… பக்கத்தில உக்காரு. தோழர்களே இவர் என் நண்பர் அரங்கத்தரசு. தாய்மொழிக்காக எதுவும் செய்வார். ஆரம்ப எழுத்தாளன். மைய அரசுப் பணியை நிராகரித்துவிட்டு நம் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்… வா கொஞ்ச நேரமாவது உக்காரு. ரயில் எங்களை மீறிப் போகாது!’’



‘‘அரங்கத்தரசு வாழ்க!’’ என்று கோஷம் எழுந்தது. சங்கடமாக இருந்தது. நான் அவன் அருகில் அசௌகரியமாக உட்கார்ந்து காதருகில்,

‘‘இதெல்லாம் என்னடா வேதாந்தம்?’’



‘‘தாய்மொழியைக் காப்பாத்தப் போராட்டம். ஒரே நாளில் ஐயாயிரம் ரூபாய் சேர்ந்திருக்கு.’’



‘‘இந்த நிதியை என்ன பண்ணப் போறே…’’

மெள்ளக் குரலைத் தாழ்த்தி ‘‘நரசிம்மாச்சாரிக்கு கொடுக்கப் போறேன்’’ என்று கண் சிமிட்டினான் வேதாந்தம்.



நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

பெண் ஜென்மம்! - 2ம் பரிசு ரூ 7500 பெற்ற கல்கி போட்டிக்கதை -

பெண் ஜென்மம்!



எஸ்.முத்துச்செல்வன்




வாளியில் தண்ணீர் நிரம்பி வழிய ஆரம்பித்தபோது சுயநினைவு தட்ட, பைப்பைத் திருகி நிறுத்தினாள். நிரம்பத் தடவியிருந்த எண்ணெய்ப் பிசுக்கு அழுக்கோடு சிதறியோட சீயக்காய் அரப்பை, தண்ணீர் சேந்திக் கரைத்துத் தலையில் அழுத்தி, தேய்க்க ஆரம்பித்தாள். குளியலறைக் கதவை ஊடுருவி, கம்பெனிக்குள் நுழையும் பணியாளர்களை அழைத்து வரும் பேருந்துகளின் ஹாரன் சத்தம் அவள் காதைத் துளைத்தது. அவசரமாகத் தண்ணீரைக் குவளையில் எடுத்து, தலைக்கு ஊற்றினாள். மீண்டும் மீண்டும் தலையைத் தேய்த்து நீரை மொண்டு ஊற்றிக் கொண்ட வளுக்கு நினைவில் அம்மாவின் முகம் தட்டுப்பட்டது.



தண்ணீயைப் பாத்துப் பாத்துச் சேந்துடி."


கோபத்தில் முகம் சிவக்க, திரும்பி அம்மாவை முறைத்தாள்.


என்னடி முறைக்கிறே அடிபைப்ல தண்ணீரை அடிச்சு எடுத்து வர்றவளுக்குத் தானே தெரியும்"


யாரோ குளியலறைக் கதவைத் தட்டி, ஏய்... எவடி இவ்வளவு நேரம் குளிக்கிறது..."


சுதாரித்தவள் அவசரமாக குளித்துவிட்டு நினைவுகளையும் துவட்டிய துண்டையும் உதறி விட்டு வெளியேறினாள். வெளியே நின்றிருந்தவள் முணு முணுத்ததைக் கண்டுகொள்ளாது படியிறங்கினாள்.


சௌம்யா, தங்கியிருக்கும் கம்பெனியின் விடுதியிலிருந்து பார்த்தால் சற்றுத் தொலைவில் கார்மெண்ட்ஸ் எக்ஸ்போர்ட் கம்பெனியின் நுழைவாயில் தெரியும். ஜன்னல் வழியே பார்த்தவள் பரபரத்தாள். கம்பெனிக்குள் அனைத்து பஸ்களும் நுழைந்துவிட்டிருக்க பணியாட்கள் ஷிப்டுக்கு வேகவேகமாகச் செல்வது தெரிந்தது. வேகமாக கம்பெனிக்கு நடக்க ஆரம்பித்தாள்.



வேலைக்குச் சேர்ந்து இன்று இருபத்தைந்து நாட்கள். முதல் நாளிலிருந்தே வீட்டு நினைவு அலைக்கழிக்கிறது. கண்களில் நீர் தளும்ப மனத்தை அடக்க பழகிக் கொண்டாள்.



அப்பாதான் இப்படியொரு கம்பெனி பற்றி விசாரித்து இருநூறு கிலோமீட்டர் தள்ளி வந்து சேர்த்துவிட்டார். வீட்டில் இவள் இரண்டாவது. இவளுக்குப் பிறகு நான்கு பேர். அம்மா தான் புலம்புவாள்.



எப்படித்தான் கரை சேர்க்கப் போறேனோ?"



பையன் பிறப்பான் என்று அம்மாவும் அப்பாவும் நினைக்க ஆறு பேரும் பெண்ணாகப் பிறந்தது பற்றி யாரிடம் குறைசொல்வது? இவள் ருதுவான போது ‘அய்யோ இவளுமா?’ என்றுதான் அம்மா எரிச்சலோடு கத்தினாள். அக்கா கார்த்திகா ருதுவாகி ஆறேழு மாதம் ஆகியிருந்தது. அடிவயிற்றின் வலியை விட அம்மாவின் எரிச்சல் மனத்தைச் சுக்குநூறாக்கியது.


வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் எல்லாமே பிரமிப்பு. நேற்றைக்கு கரட்டாம்பட்டியில் ஓடியாடித் திரிந்த வாழ்க்கை திடீரென்று தடம் புரண்டது போல் இருந்தது.



கார்த்திகா ஏழாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு சித்தாள் வேலைக்குச் செல்கிறாள். பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்திருந்ததால் படிக்க வைப்பார்கள் என்று எதிர்பார்த்தாள்.



படிச்சா... படிச்ச மாப்பிள்ளையாகப் பார்க்க வேண்டும். ஏதாவது ஜவுளிக்கடை, ஜெராக்ஸ் கடைன்னு வேலைக்குச் சேர்த்து விடுங்க. மிச்ச சொச்சத்தைச் சேர்த்து வைச்சு கரைசேர்க்கவாவது ஆவும்." அம்மாவின் தின புலம்பல் அப்பாவைப் பாடுபடுத்திக் கொண்டிருந்தது. இவளும் படிப்பை நிறுத்திவிட்டதால் சும்மா பொழுதை வீட்டில் கழிக்கவில்லை. அவரைத் தோட்டத்தில் அவரை பறிக்க, கடலைக்காய் பிடுங்க என்று கூலி வேலைக்குச் செல்வாள். கம்பந்தட்டை அறுக்கவும் சென்றிருக்கிறாள்.



சௌம்யா யாருடி? நீயா... போ. கட்டிங் மாஸ்டர் குவாலிடி ஆபிஸர் எல்லாம் கூப்பிடறாங்க உன்னை."



கட்டிங் செய்து கொண்டிருந்த துணியை வைத்துவிட்டு டேபிளைச் சுத்தப்படுத்தி விட்டுச் சென்றாள்.



வந்து எத்தனை நாளாவுது? இப்படியா துணியை வெட்டறது?"



கட்டிங் மாஸ்டர் சத்தமிட்டபோது அவள் மனம் நடுநடுங்கியது. சரியாகத்தானே வெட்டினோம். காஸ்ட்லியான துணிவேறு.



துணியோட ரேட்டு என்ன தெரியுமா? வேலை செய்யத்தான் வந்தியா? பொழுது போக்க வந்தியா? இன்னையோட போகட்டும். அடுத்த முறை தப்பு பண்ணினே சம்பளத்துல பிடிச்சுக்குவோம். போ... லைன் சூபர்வைசர் யாரு? அந்தத் தறுதலையக் கூப்பிடு" என்றபடி அவர் நகர்ந்தார்.



டேபிளுக்கு வந்தாள். டயா பதினாலு என் பதில் நான்கை ஒன்பது போல் எழுதியிருப்பது போன்று தெரிய எல்லாமே தவறாகப் போய்விட்டது. விளக்கம் சொல்லாது அழுகையை மென்று முழுங்கி சரியான டயாவினை செட் செய்து துணியை கட் செய்தாள்.



இந்த மாதத்தோடு சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலையை விட்டு வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். போனதும் தங்கைகளோடு கூத்தடிக்க வேண்டும். எல்லா விளையாட்டுகளையும் அலுப்பு தீர விளையாடியது நெஞ்சுக்குள் அலையடிக்கிறது. தோற்று விட்டால், தோற்றவர்களை ‘தோத்தான் தும்பான் சோறு சட்டி திம்பான்’ என்று கேலி பண்ணினால் அழுவார்கள்.



இங்கே எல்லாவற்றையும் டி.வி. பெட்டி முழுங்கிக் கொண்டு அதுவே கதியெனக் கிடக்க வேண்டியிருக்கிறது. வீட்டில் இலவச டி.வி.கூட இல்லை.



ஏய் வெறும் சாப்பாட்டைக் கிளறிக்கிட்டு இருக்கே, போய் ரசம் வாங்குடி" - பக்கத்தில் அக்கா சத்தமிட நினைவைத் தட்டி விட்டு தட்டை எடுத்துக் கொண்டு உணவு பரிமாறும் இடத்துக்குச் சென்றாள்.



சாப்பிட்டு மாடிப்படி ஏற ஏற புளிக்குழம்பு சாப்பாடும் கேரட் பொரியல் வாசமும் ஏப்பத்தோடு வரும்போல் இருந்தது. துணிகளைத் துவைத்துக் காயப்போட வந்தபோது கீழிருந்து வார்டன் மைக்கில் ஒவ்வொரு மாடியிலும் இருக்கும் சில பெண்களை மட்டும் பெயர் குறிப்பிட்டுக் கீழே வரும்படி அழைத்தார்.



கீதா, கீர்த்தனா, ஸ்ரீதேவி, கனகா, லட்சுமி, அமுதா, ஆயிஷா, கௌசல்யா, சித்திரைச் செல்வி, சசிகலா, பவித்ரா, பவுலின் மேரி, மகாலட்சுமி, இலக்கியா, பிருந்தா, நதியா, குஷ்பு, பிரியதர்ஷினி, சௌம்யா..."



அரக்கப் பரக்கக் கிளம்பினாள்.



ஐந்து ஃப்ளோரில் தங்கியிருக்கும் நானூறு பேர் சொச்சத்தில் முப்பது நாப்பது பேராவது டைனிங் ஹாலில் இரைச்சலோடு குழுமியிருந்தனர்.

உஷ் சத்தம் போடாதீங்கடி."



பதினைந்து நிமிடங்கள் கழித்து பணியாளர் துறையின் மேலதிகாரி, வாய்பொத்தி அழுதபடி ஒரு அம்மாள், சோகமாக வெளிறிப்போன முகத்தோடு ஒல்லியாக ஒரு அண்ணன், சிவப்பாக தாட்டியாக சட்டையை இன் செய்து அலட்சிய முகபாவத்தோடு மற்றொரு அண்ணன் என நான்கு பேர் வந்தனர்

.

நம்ம ஹாஸ்டலில் ரூம் நெம்பர் அது18 ல் தங்கியிருந்த மாலாவோட அம்மா, அண்ணன், அந்தப் பொண்ணுக்கு நிச்சயம் பண்ணின மாப்பிள்ளை உங்க முன்னாடி நிக்கிறாங்க. மூன்று தினத்துக்கு முன்னாடி அவுட் பாஸ் வாங்கி ஊருக்குப் போறேன்னு கிளம்பிப் போன மாலாவைக் காணவில்லை."



நிறைய பேர் ‘அய்யோ’ என்று பயம் கலந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். மாலாவின் ஊருக்கு அருகாமையில் இருக்கும் அனைத்து ஊர்ப் பெண்களையும் அழைத்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. மாலா குறித்தும் அவள் முக அடையாளம் குறித்தும் எதுவும் நினைவில் தட்டுப்படவில்லை. ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் யார் யாரை நினைவில் வைப்பது? நிச்சயம் பண்ணின பிறகு காணாமல் போய்விட்டாள். மாலாவைக் கட்டிக்க இருந்த மாப்பிள்ளை வெறுப்பான பார்வையை எங்கள் மீது வீசினார்.



அன்றைக்கு முழுதும் காணாமல் போனவளைப் பற்றித்தான் பேச்சு. எனக்கு என்னவோ வீட்டு நினைப்பு மறந்து விட்டது போலிருந்தது. ஆனால் காலையில் எழுந்ததும் இந்த மாதம் எப்போது முடியும்... சம்பளம் வாங்கியவுடன் வீட்டுக்குக் கிளம்பிட வேண்டும் என்று மனம் தவியாய்த் தவிக்க ஆரம்பித்தது.



கீதாக்கா... இந்த மாதம் சம்பளம் வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போகணுங்க்கா."



வார்டன் கிட்டே கேளு."



வார்டன் மேடம் பொரிய ஆரம்பித்தாள். வீட்டுக்கெல்லாம் போக முடியாது. சம்பளத்தை வந்து வாங்கிட்டுப் போகச்சொல்லு. வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு எவனையாவது கூட்டிட்டு சுத்தறது. அந்த மாலா சனியன் பண்ணின கூத்துல ரூல்ஸ்லாம் ஸ்ட்ரிக்ட்டா போட்டிருக்காங்க."



உள்ளுக்குள் மனம் அதிர்ந்தது. அழுகை வந்தது.



அங்கிருந்து நைட்டியில் இருந்த ஒரு அக்கா, அவளை வார்டனிடமிருந்து நைச்சியமாக அழைத்து மொட்டை மாடிக்குச் சென்றாள். இவளைக் குறித்து எல்லாம் விசாரித்தாள். பின் சம்பந்தமே இல்லாமல், எவனையாவது லவ் பண்றியாடி" என்றாள்.



சௌம்யா வெடுக்கென்று அவளை விட்டு விறுவிறுவென்று படியிறங்கி ரூமுக்கு வந்து சுருண்டு படுத்தாள். முணுக்கென்று கண்களில் நீர் கட்டியது. எப்போது கண் அசந்தாள் என்று தெரியவில்லை. லேசாக நினைவு தட்டியபோது பேச்சுக்குரல் காதுகளில் இரைந்தது.



இவ யாரடி... இப்படிப் படுத்துக்கிடக்கிறா."





புதுசுடி... விடு... அவ போக்கல விட்டுட்டோம்."

அந்தச் சமயத்துல வயித்தைப் பயங்கரமாய் வலிக்குதடி."



யேய்... வாழைப்பழம் சாப்பிட்டால் வலி குறைஞ்ச மாதிரி ஃபீலிங் வருமாம்டி."



சரிங்க பாட்டி."



புதுசா ஒரு லைன் சூபர்வைசர் வந்திருக்கான் பார்த்தியா."



என்னடி உன் ரசனை. அவன் ஒரு ஆளு..."



ஆமாப்பா நேத்து சிரிச்சேன். உம்முன்னு முறைச்சான்."



ஏய் நிஜமா அவ ஓடிப் போயிட்ட மாதிரி பேசுற."



அவ பேச்சை விடுங்கடி. சித்ரா கல்யாணத்துக்கு எவ எவ வரப்போறது."



நிறையபேர் அறையில் கூடிவிட்டது போல் தெரிந்தது. எழுந்திரிக்கலாமா. எழுந்து தான் ஆகவேண்டும்.

பசி வயிற்றைக் கிள்ளுகிறது. யாரோ அவளை எழுப்பினார்கள். அவள் தூக்கத்தில் விழிப்பது போல் விழித்து எழுந்தாள்.

வாடி சாப்பிட."

ஒவ்வொரு படிக்கட்டாக இறங்கும் போது ஒரே கலகலப்பான பேச்சாக இருந்தது.



ஏய், நீயும் கல்யாணத்துக்கு வரத்தானே?"



இல்லக்கா... வந்து... நான்..."



அவ பாருடி... சம்பளம் கொடுக்கிற தேதியில் இருந்து இரண்டு நாள் தள்ளி கல்யாணத்தை வச்சிருக்கிறா?"



நிறைய மொய்ப் பணம் வசூல் பண்ண பிளான் பண்ணியிருப்பாடீ..."



சௌம்யாவுக்குப் பின்னால் அடித்தது போன்று யோசனை. இவர்கள் கல்யாணத்துக்குக் கிளம்பும்போது அப்படியே கிளம்பிட வேண்டியதுதான்.



சம்பளப் பணத்தை பேக்கின் இடையில் வைத்து, சுடிதார்களை மடித்து வைத்து மறைத்தாள். முதல் நாள் இரவு கல்யாணப் பெண் வீட்டில் தங்குவதால் ஆளுக்கு ஒரு பேக் வைத்திருந்தனர். சௌம்யா வரும்போது பெரிதாக ஒன்றும் கொண்டு வரவில்லை. ஒரே ஒரு மாற்று சுடிதார், கிழிந்ததைத் தைத்து வைத்திருந்த ஒரு நைட்டி அவ்வளவுதான்.



தினேஷ் சார்தான் கிடுக்குப்பிடி போட்டார். இவள் புதுசு என்பதால் கேள்விகளைத் துருவித் துருவிக் கேட்டார். உண்மையைச் சொல்லி விடலாம் என்று ஒருகணம் யோசித்தாள். யோசனையை அழித்தாள். ‘கீர்த்தனக்காதான் இவளுக்குப் பொறுப்பு’ என்று சொல்ல அரைகுறையாக தலையசைத்தார்.



கல்யாண மண்டபத்தில் கீர்த்தனக்கா நல்ல மூடில் இருந்த சமயம், அக்கா எங்க ஊரு இங்க பக்கத்துலதான். வீட்டுக்குப் போயிட்டு தங்கச்சி பாப்பாவையெல்லாம் பார்த்துட்டு சம்பளப் பணத்தைக் கொடுத்துட்டு வந்துடறேன்க்கா" என்று கெஞ்சிக் கேட்டாள்.



சரி, உடனே திரும்பிடுவியா? தலையைத் தலையை ஆட்டாதே. ஒருநாள் இருந்துட்டு உடனே வந்து சேரு. இந்தா ஃபோன் நெம்பரு. ரிஸ்க் எடுத்துருக்கேன்டி... என்னைக் கவுத்துறாதே."



மென்று விழுங்கினாள். உண்மையைச் சொல்லிவிடலாமா? வேண்டாம். விட மாட்டார்கள். தான் காணாமல் போய்விட்டால் தானே பிரச்னை. ஃபோன் எண் இருக்கிறதே. ஃபோன் செய்து வீட்ல போக வேண்டாம்னுட்டாங்க என்று சொல்லி விடலாம். வீட்டுக்குப் போகிறோம் என்கிற சந்தோஷமே அலை அலையாக உற்சாகத்தை எழுப்பியது.



சாயங்காலம் வெயில் தாழ்ந்திருந்தது.



எங்கிருந்து ஓடி வந்தாளோ தெரியவில்லை கடைக்குட்டி கனகா, ‘ஹய்யா... அக்கா...’ என்று தாவி கழுத்தைக் கட்டிக் கொண்டாள். குனிந்தவளின் முகமெங்கும் முத்தமிட்டாள்.



இவளுக்குத் தொண்டையை அடைத்தது. வாசல் பகுதியில் இருக்கும் அப்பாவின் சைக்கிளைக் காணவில்லை. பால் கேனில் ஊற்றும்போது சிதறிய பால் சிதறல்கள் மண்ணில் ஈரமாக மினுங்கின. அவர் வருவதற்கு இரவு ஏழெட்டு மணியாகும்.



விறகுக் கட்டைகளை அம்மா கீழே போட்டாள். தலை சும்மாட்டை உதறி முகத்தை ஒற்றி எடுத்தவள் இவளைக் கண்டாள்.



என்னடி இப்ப வந்துருக்கே."





வந்ததே பிடிக்கலையோ என்று சௌம்யாவுக்குப் பட்டது. எதுவும் பேசாமல் கிடந்தாள். ஆனால் அம்மா விடவில்லை.

\

இல்லைம்மா ரெண்டு நாள் லீவு விட்டுட்டாங்க."



அப்பாவிடம் மட்டும்தான் சொல்ல வேண்டும். இவள் தொணதொணப்பு ஜாஸ்தியாகிவிடும். பால் கேன்கள் உரசும் சப்தங்களோடு சைக்கிளை நிறுத்தும் ஓசை கேட்டது

.

தனியாவா வந்தே லீவா" என்றார். பொதுவாக தலையசைத்தாள்.



அம்மா இல்லாத நேரம் பார்த்து சம்பளத்தைத் தந்தவள், எனக்கு அங்கே இருக்கவே பிடிக்கலைப்பா. இங்கனேயே ஜவுளிக் கடை, ஜெராக்ஸ் கடைனு வேலைக்குச் சேர்த்து விடுப்பா. பாப்பாவையெல்லாம் விட்டுட்டு இருக்க முடியலை."




அங்கேயெல்லாம் இந்தச் சம்பளம் எல்லாம் சம்பாதிக்க முடியாதும்மா. உங்களை நான் எப்படி கரை சேர்க்கறதுன்னு முழிக்கிறேம்மா. பால் வருமானம் முன்னே மாதிரியில்லே."




அவர் பேசப் பேச இவளுக்கு அடி மனசிலே பயம் எழுந்தது.



காலை பரப்பியபடி அசந்து கார்த்திகா தூங்கிக் கொண்டிருந்தாள். கால் பாதங்கள் வெடித்து சிமெண்ட்பால் தீற்றல்களோடு கிடந்தது. மற்ற நால்வரும் ஒருத்தரையொருத்தர் அணைத்தபடி கால்கள் மேல் கால்கள் போட்டுத் தூக்கத்திலிருந்தனர்.



அடுத்த நாள் -



எக்கா இன்னைக்குதான் சூப்பர் சாப்பாடு" என்றாள் ஒரு தங்கை.



வக்கணையா திங்கணும்னா எல்லாரும் உக்காந்திருந்தா ஆகாது" - அம்மா வெறுப்பாகப் பேசினாள்.



ஏதேனும் பேசினால் வம்பாகும். வெளியே காலை வெயில் சுள்ளென்று வீதியில் உறைந்திருந்தது. ஊரே ‘வெறிச்’ என்று தான் இருக்கிறது.



தீபாவளி சமயத்துலதான் ஜவுளிக் கடைகளுக்குப் போய் வேலை கேட்க முடியும்" என்று பக்கத்து வீட்டு நர்ஸ் அக்கா சொல்லி விட்டாள். அவள் பணிபுரியும் ஆஸ்பத்திரியில் கூட்டுற வேலையையாவது வாங்கிக் கொடுக்கா என்றவளை முறைத்துக் கொண்டு அம்மாவிடம், ‘போட்டு விட்டு’ போய் விட்டாள்.



இந்த நாறக் கழுதை வேலையத் தலை முழுகிட்டுத்தான் இங்கே வந்திருக்கா போலிருக்கே."



அப்பா எதுவும் பேசவில்லை. அன்றைக்கு காய்கறி எதுவுமில்லாமல் வழக்கம் போல் ரசம், வாதநாராயண் இலை துவையல் என்று சமைத்துப் போட்டாள் அம்மா.



என்ன செய்வது, பாப்பாக்கள் நிறம் மங்கின. ஒட்டுக் கிழிசல்களோடுதான் வாழ்கின்றனர். சிமெண்ட்பால் ஊறின கால்களோடு அக்கா. தாம் சம்பாதிப்பது திருமண நல்வாழ்வுக்கு எனில் அது சப்பைக்கட்டுதான். சம்பாதிப்பது ‘எவன்ட்டேயோ பிடித்துக் கொடுக்க’ என்பது பேச்சுக்குத்தான். வயதுக்கு வந்து விட்டாளே அடுத்து கல்யாணம், பிள்ளை குட்டி... குடிக்கிற புருஷனோ... குடிக்காத புருஷனோ, பிடிச்ச புருஷனோ... பிடிக்காத புருஷனோ...



காலை பால் சப்ளைக்குச் சென்றுவிட்டு அப்பா வரும்போது மணி பனிரெண்டரை இருக்கும். வீட்டில் யாருமில்லை. பாப்பாக்கள் பள்ளியில். அக்கா கட்டட வேலையில். அம்மா காட்டு வேலைக்கு.



யப்பா இன்னிக்கு ரெண்டு நாப்பது வண்டில கிளம்பறேம்பா" என்றாள்.



பேக்கைத் துடைத்து ரெடி செய்தாள். ஒரு நைந்த போர்வையை மட்டும் எடுத்து வைத்திருந்தாள்.



வீட்ல அம்மாட்ட பாப்பாகிட்டேயெல்லாம் சொல்லிட்டியாம்மா?"



நீங்க சொல்லிடுங்கப்பா."



சைக்கிளிலிருந்து பால் கேன்களைக் கழட்டினார். வீட்டு படலைச் சாத்தினார். சைக்கிளை மிதித்தார். முன் ஹாண்ட் பாரில் பேக்கும் பின் கேரியரில் அவளும். பல நாட்கள் படிந்திருந்த பால் வீச்சம் மூக்கைத் துளைத்து இறங்கிக் கொண்டிருந்தது.



ஒற்றையடிப் பாதையைக் கடந்து வண்டிப் பாதையைக் கடந்து சிறு சாலையில் மினி பஸ்ஸுக்குக் காத்திருந்தனர்.



மினி பஸ்ஸின் பின் சீட்டில் உட்கார்ந்தாள். பஸ்ஸின் பின் கண்ணாடி வழியே சைக்கிளை மிதித்து மேடேறிச் செல்லும் தந்தை இறங்கி சைக்கிளை இறுகப் பிடித்துக்கொண்டு பின்னால் சென்று கொண்டிருக்கும் பஸ்ஸைத் திரும்பிப் பார்ப்பதைப் பார்த்தாள்.



சௌம்யா சட்டென்று திரும்பிக் குனிந்து கொண்டாள். கண்களில் நீர் கட்டியது. பஸ் குலுங்களோடு திருப்பத்தில் திரும்பி வேக மெடுத்தது.


டிஸ்கி -

ரூ 10,000 முதல் பரிசு பெற்ற கல்கி போட்டிக்கதை -போன்சாய் நிழல்கள்! -செம்பை முருகானந்தம்- http://www.adrasaka.com/2012/

07/10000.html


நன்றி - கல்கி, புலவர் தருமி

Tuesday, August 07, 2012

ஓலைப்பட்டாசு- சுஜாதா - சிறுகதை

அந்த தீபாவளி, என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அதைப் பற்றி சொல்வதற்குள் தேவைப்பட்ட அளவுக்கு மட்டும் சுயபுராணம். என் பெயர் எதற்கு? நான். அவ்வளவுதான். மற்றவர் பெயர்கள் முக்கியம். அது சந்தானம் ஐயங்கார், பெருந்தேவி, சின்னா இவர்களின் பெயர்கள் இந்த கதைக்கு என்னிலிருந்து அவர்களை அந்நியப்படுத்துவதற்கு முக்கியம்.



பார்த்தீர்களா… ஆரம்பித்த விஷயத்தை விட்டு அலைகிறேனே. காரணம் – என் வயசு இன்றைக்கு எழுபது. பார்த்த மரணங்கள் ஆறு. இரண்டு மனைவிகள். ஒரு தேசிய விருது. ஒரு நாள் ஜெயில். ஒரு ப்ராஸ்டேட் ஆபரேஷன். கராஜில் நெருக்கமாக மூன்று கார்கள். உறவினரின் துரோகங்கள். தென் ஆப்பிரிக்கா டர்பனில் இரண்டு வருஷம் இவ்வாறு அதிகம் சேதப்படாமல் எழுபதை அடைந்து விட்ட ஒருவன் இறந்துபோனால் ஹிந்துவில் எட்டாம் பக்கத்தில் நான்கு வரிகளில் எழுபது வருஷமும் அடங்கி போகும்.




சொல்ல வந்தது, அந்த ஒரு தீபாவளி பற்றி. சீரங்கத்தில் என் பன்னிரண்டாவது வயதில் என் பாட்டியின் கண்காணிப்பில் வாழ்ந்தேன். அதனால் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு. அந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்க மொத்தம் ஐந்து ரூபாய்தான் தந்தாள். இப்போது என் வீட்டில ஐந்து ரூபாய் தாளை, தரையில் விழுந்தால் வேலைக்காரர்கள் கூட பொறுக்கமாட்டார்கள். அப்போது குறைவான பொருளாதாரத்தில் ஐந்து ரூபாயில் அதிகப்படியாக சந்தோஷம் கிடைக்க… கொள்ளிடக் கரையருகில் ஓலைப்பட்டாசு சல்லிசாக விற்பார்கள்.


பனையோலையில் சின்னதாக வெடிமருந்தை வைத்து முடிச்சுப் போட்டு மிகச் சின்னதாக திரியுடன், பனையோலை வாலுடன் பிரமாதமாக வெடிக்கும். ஆனால், ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். பற்ற வைப்பதற்குள்ளே வெடித்து கையை உதறவேண்டி வரும். மேலும் ஒரு வாரம் வெயிலில் காயப்போட்டே ஆகவேண்டும். பாட்டி கொடுக்கும் காசில் ஓலைப்பட்டாசு பாதப் பணத்துக்கு வாங்கிக்கொண்டு, மிச்சத்தில் கொல்லன் பட்டறைக்கு போய் ஒரு வேட்டுக் குழாயும் கந்தகப் பொடியும் வாங்கிக் கொண்டேன்.


 இது ஒரு மாதிரி மினி வேட்டுக்குழாய். நீண்ட கம்பியின் இறுதியில் ஒரு குழலும் போல்ட்டும் இருக்கும். குழலில் மஞ்சளான கந்கத்தை கெட்டித்து அதனுள் போல்ட்டை செருகி சுவரில் மடேர் என்று ஒரு அறை அறைந்தால் கேட்கும் வெடிச் சத்தம், நம் காதில் விண்ண்ண்ண் என்று அலறும். வெடியை விட திண்ணையில் சுதேசமித்திரன் படித்து கொண்டிருக்கும் தாத்தாக்களின் பின்பக்கம் மெள்ள நழுவி, ஒரு டமால் அடித்துவிட்டு, கோரதமுட்டியை நோக்கி ஓடுவதில் உள்ள உற்சாகம்தான் மிக சுத்தமானது.



அந்த தீபாவளி ஓலைப் பட்டாசு காயப் போட மாடிக்கு சென்ற போது, பக்கத்து வீட்டு “எடுத்துக்கட்டி”யின் மேல் செருப்பு வைத்திருந்தது. அதில் ஏறினேன். பின்னால் யாரோ கஷ்டப்பட்டு முனகுவது போல் சத்தம் கேட்டது. உதவி தேவையோ என்று நான் சுவர் எகிறி குதித்து அந்தப் பக்கம் போய் பார்த்தபோது சந்தானமையங்கார் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு, சின்னவை பல இடங்களில் தடவிக் கொடுத்து சிகிச்சை மாதிரி என்னவோ செய்து கொண்டிருந்தார். சந்தானமையங்கார் அடுத்த வீட்டுக்காரர்.


எங்களையெல்லாம் ஓட ஓட விரட்டுபவர். கிரிக்கெட் பால் உள்ளே போனால் திருப்பி தரமாட்டார். கண்டபடி திட்டுவார். அவர் வீட்டு சுந்தர் எங்களுடன் விளையாட வரமாட்டான். அவர்கள் எந்த விதத்திலோ பணக்காரர்களாம். கொலுவுக்கு சில்க் ஜமக்காளங்கள் போட்டு, பெட்ரோமாக்ஸ் வைப்பார்கள். சின்னா அவர் வீட்டு சமையல்காரி. ரவிக்கை முந்தானையில் அவள் சேகரித்து இருந்த கொய்யாக் காய்கள் சிதறிக் கிடந்தன. தரை எல்லாம் வியர்வையால் ஈரமாக இருந்தது.


 சந்தானயைங்காரின் செருப்புதான் ‘எடுத்துக்கட்டி’யில் மேல் வைத்திருந்தது. “என்ன மாமா பண்றீங்க “என்று கேட்டபோது அவர் திடுக்கிட்டு “இவளுக்கு உடம்பு சரியா இல்லை. மூச்சு வாங்கறதுன்னா… அதனால, தசமூலாரிஷ்டம் கொடுத்து சரி பண்றேன். போடா போடா… நீ எங்க இங்க வந்து தொலைச்சே… ஓடிப் போ” என்றார்.



“பட்டாசு காயப் போட வந்தேன். மாமியை கூப்பிடட்டுமா” என்றேன்.



“மாமி பெட்டவாத்தலை போயிருக்கா. சுவரேறி குதிச்செல்லாம் வரக்கூடாது. போலீஸ்காரன் புடிச்சுப்பான்” என்றார்.



இதையெல்லாம் கேட்காதது போல், சின்னா ஒரு மாதிரி மயக்கத்தில் கண் மூடிக்கொண்டு சற்றே நெற்றியை சுருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.



நான் வீரராகவனிடம் சொன்னேன். வீரராகவன் எங்கள் கிரிக்கெட் காப்டன். “பாவம்டா அவ. மேல்மூச்சு வாங்கிண்டிருந்தது. சந்தான மாமா தடவிக் கொடுத்தார். இல்லைன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பா” என்றேன்.



அவன் அதைக் கேட்டு கைகொட்டி கண்ணீர் வரச் சிரித்தான். “நீ கொக்கோகப் படம் எதும் பார்த்ததே இல்லையா? மார்கழி மாதம் உற்சவத்தில் விக்குமே?”



“இல்லை…”



அவன் “வா” என்று உள்ளே சென்று பரண் மேல் கத்யத்ரயம் திவ்யபிரபந்தசாரம் போன்ற புத்தகங்களின் நடுவே செருகியிருந்த பழுப்பான புத்தகத்தை எடுத்து பிரித்துக் காட்டினான்.



“ஆமாண்டா, இப்படித்தாண்டா சந்தான மாமாவும் சின்னாவும் இருந்தா…”



அவன் ஒரு வக்கீல் போல பல கேள்விகள் கேட்டு “இது தெரிந்ததா?”, “அது புரிந்ததா?” என்றெல்லாம் கேட்டு, அவவப்போது குபீர் குபீரென்று சிரித்து, “அடிச்சடா லக்கி ப்ரைஸ்” என்று சொன்னது எனக்கு விளங்கவில்லை. அவ்வப்போது என் நண்பர்கள் என்னை மரியாதையுடன் பார்த்தார்கள். மீண்டும் மீண்டும் அந்த காட்சியை விவரிக்க சொல்லியே வதைத்தார்கள்.



“எனக்கு எல்லாம் புரியறது. ஆனா எதுக்குடா தலைல முண்டாசு?” என்றான் பாச்சு.



“அதாண்டா ட்ரிக்கு. அதை கட்டிண்டா அடையாளம் தெரியாதாம். வேற யாரோனு நினைச்சுண்டுருவோமாம்” என்று வீரு விளக்கியது புரிந்தும் புரியாமலும் இருந்ததை அவன் என்னை ஒரு மாதிரி பார்த்து, “நீ ஒண்ணு பண்ணு. அவர்கிட்ட போய் ‘மாமா மொட்டை மாடில ஓலைப்பட்டாசு காயப்போட போயிருந்த போது உங்களையும் சின்னாவையும் பார்த்துட்டேனே. மாமி பெட்டவாத்தலைலேர்ந்து வந்தாச்சா’ன்னு… அவாள்லாம் சீட்டாடிண்டிருப்பா… அங்க போய்க் கேட்டு பாரு…”



“ஐயோ… போடா… தோலை உரிச்சுருவார்…”



“அதான் இல்லை. பாரேன் நடக்கிறதை. எதுக்கும் ஓடத் தயாராவே இரு. ஓரமா நின்னு கேட்டுட்டு வந்துரு. நடக்கிறதைப் பாரேன்.”



அவர்கள் மிகவும் கட்டாயப்படுத்த நான் மெள்ள தைரியம் பெற்று பக்கத்து வீட்டு திண்ணைக்கு நழுவி ஓரத்தில் உட்கார்ந்தேன். வெள்ளி செம்பில் காபியும், பத்தமடை பாயுமாக “ஆஸ்” ஆடிக் கொண்டிருந்தார்கள். புகையிலையை துப்பிவிட்டு வாய் கொப்பளிக்க வரும்போது என்னை பார்த்து சந்தானமையங்கர் திடுக்கிட்டு “என்னடா?” என்றார்.



“மாமா, மாடில ஓலைப் பட்டாசு பெருந்தேவி மாமி வந்தாச்சா பெட்டவாத்தலைலருந்து?” இவ்வாறு ஆரம்பித்தவுடன் “வாடா” என்று என்னை அப்படியே அலாக்காகத் தூக்கி உள்ளே செலுத்தி, என் வாயில் கல்கண்டு, அரிசி பப்ரமுட்டு, லேக்கா உருண்டை என்று இனிப்பான வஸ்துக்களை திணித்துவிட்டு “என்ன பார்த்தே, சொல்லு…”



“நீங்க சின்னாவுக்கு சிகிச்சை எதும் பண்ணலை” என்றேன்.



“பின்ன என்னவாம் அது?”



“வீரு சொல்றான் கொக்கோகமாம் அது…”



“மாமிகிட்ட சொல்லாதே, சொல்லாம இருந்தா உனக்கு என்ன வேணும் சொல்லு? சொல்லுடா கண்ணு…”



நான் யோசித்து “எனக்கு சிங்க மார்க் பட்டாசு ஒரு சரம், ஒத்தை வெடி ஒரு டஜன், ரெட்டை வெடி ஒரு டஜன், கேப்பு துப்பாக்கி, குதிரைவால், தரைச்சக்கரம், ஊசிப்பட்டாசு, ராக்கெட், ஏரோப்ளேன், விஷ்ணு சக்கரம், லட்சுமி வெடி அப்புறம் பத்த வெக்க மட்டிப்பால் வத்தி” என்று என் சக்திக்கேற்ப ஒரு பட்டியல் சொல்லிப் பார்த்தேன்.



அவர் எழுந்து அலமாரிக்குச் சென்று ஒரு காகிதத்தில் எழுதி “இதைக் கொண்டு போய் டி.பி.ஜி. கடையில கொடு. உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோ. ஆனால மாடில என்ன பார்த்தே?”



“ஓலைப் பட்டாசு காயப் போடறப்ப உங்களையும் சின்னாவையும்.”



“ஏய்… யாரும் கேட்டா அங்க ஏதும் பார்க்கலைன்னு சொல்லணும்… அப்பத்தான் பட்டாசு.”



“சரி மாமா” என்றேன்.



“சரி மாமா” என்று என் தலையில் நெத்தினார்.



அந்த தீபாவளிக்கு நானும் வீரராகவனும் ஆசை தீர பட்டாசு வெடித்ததும் அல்லாமல், கார்த்திகைக்கும் நிறைய பாக்கி வைத்தோம். பாட்டி “ஏதுரா இத்தனை பட்டாசு?” என்றதற்கு “நாங்கள்லாம் சேர்ந்து சந்தா கட்டி வாங்கினோம் பாட்டி” என்று புளுகினேன்.




அடுத்த தினங்களில் நான எப்போது சந்தானமையங்காரை பார்த்தாலும் “இங்க வாடா” என்று உள்ளே பரிவுடன் அழைத்து “சர்க்கரைப் பொங்கல் சாப்பிடறியா? வறுத்த பாதாம் பருப்பு வேணுமா? அரவணை வேணுமா?” என்று தின்னக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.




சில நாட்களில் தைரியம் பெற்று, “மாமா தெற்கு வாசல்ல புதுசா ஒரு பம்பரம் வந்திருக்கு. கோல் எடுத்தா கைல அப்படியே பூனைக்குட்டி மாதிரி தூங்கறது மாமா” என்றால்



“உடனே போய் ரெண்டு பம்பரமா வாங்கிக்கோ. தலையாரில குத்து பட்டா மாத்து பம்பரம் வேணுமோ இல்லையோ?” என்பார். அப்புறம் மேலும் தைரியம் பெற்று நிஜ கிரிக்கெட் பந்து, ஸ்டம்ப் எல்லாம் கேட்டுக் கூடக் கொடுத்துவிட்டார்.



பெருந்தேவி மாமி “என்ன இப்படி இந்தப் பிள்ளைக்குச் செல்லம் கொடுக்கறீங்க?” என்று கேட்டதற்கு “பையன் நன்னா படிக்கறான். அதுக்கு ஒத்தாசை பண்ணலாம்னு” என்றார் என்னைப் பார்த்து கண் சிமிட்டி.



இவ்வாறு இனிதாகக் கழிந்து கொண்டிருந்த தினங்கள் அதிகம் நீடிக்கவில்லை. வீரு “ஒரு பார்க்கர் பேனா கேட்டுப் பார்” என்று சொல்ல சந்தானமையங்கார் வீட்டுக்குள் சுதந்திரமாக நான் நுழைய மரவேலைப்பாடுகள் நிறைந்த கறுப்பு மேசை கண்ணாடியில் தெரிய விறுவிறுப்பாக தன்னை விசிறிக்கொண்டு சந்தானமையங்கார் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருக்க, பக்கத்தில் அவர் மனைவி பெருந்தேவி கோபத்துடன் அழுதுகொண்டிருக்க, அருகே ஓரத்தில் சின்னா வாயை முந்தானையால் பொத்தி அவளும் அழுது கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் மாமி “வாடா… இந்த பிராமணன் செய்த அநியாயத்தை பார்த்தாயோ… மொட்டை மாடில சின்னாவை கூட்டி வெச்சுண்டு…”




“ஏய் நீ போடா…”



“ஏண்டி அந்த பிராமணன்தான் துப்புக்கெட்டு போய் உன் கையை புடிச்சான்னா உன் புத்தி எங்கடி போச்சு? இடுப்பொடிஞ்ச சக்களத்தி, நீ நல்ல பாம்புக்குட்டி, சக்கை திங்க வந்தவளே” அதன் பின் “உனக்கு குளிர் காய்ச்சல் வர… உனக்கு பாடை கட்ட” என்று பலமாக திட்டியதில் சின்னா, “கிணற்றில் விழப் போகிறேன்” என்று புறப்பட எனக்கு அழுகை வந்து விட… “பாருங்கோ…. இந்த பிள்ளை கூட வருத்தப்படறது. உங்களுக்கு வெக்கமா இல்லை… ஓசிச் சிறுக்கி.”




நான் அழுதது அதற்காக இல்லை. சந்தானமையங்காரிடம் என் ப்ளாக்மெயில் இப்படி திடீரென்று மதிப்பிழந்து போய் விட்டதே என்றுதான்!



அடுத்த தீபாவளிக்கு பழையபடி ஐந்து ரூபாய்க்கு ஓலைப்பட்டாசு, வேட்டுக் குழாய்தான்.




அந்த தீபாவளியை மறக்க முடியாது தான். அந்த வயசிலேயே எனக்கு கொஞ்சம் அவசரப்பட்டுக் கிடைத்த சில சில ஞானங்களால் அறியாச் சிறுவன் அறிந்த சிறுவனாகிவிட்டேன். அது என் பிற்கால வாழ்க்கையை எவ்வளவு தூரம் மாற்றிவிட்டது! என் பிழைப்பே இந்த மாதிரி மற்றவர் பற்றி தகவல் அவதூறு சேகரித்து விலை பேசுவதாகி, அதைப் பயன்படுத்திக் கொண்டு பணம் சேர்ப்பதாகி விட்டது.


 எத்தனையோ பேரை என் நளின மூர்க்கங்களில் பயமுறுத்தி நிறையவே காசு சேர்த்து விட்டேன். இப்போது தீபாவளிக்கு என் இரண்டு மனைவியருக்கும் எட்டாயிரம் ரூபாயில் புடவை எடுக்கிறேன். என் பிள்ளைகள் தொடர்ந்து அறுபது நிமிஷம் வெடிக்கும் ஆயிரம் ரூபாய் சரமெல்லாம் வெடிக்கிறார்கள்.




நான் பண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு, என் நாய்களுடன் பேசுகிறேன். “சீஸர், ரீட்டா… அந்த தீபாவளியன்று சந்தானமையங்காரை மாடியில் பார்த்திராவிட்டால், நான் எங்காவது பி.காம். படித்து விட்டு ரயில்வே கிளார்க்காக நிம்மதியாக இருந்திருப்பேனே!



ஆம்! என் முதல் பொய், முதல் பெண் தரிசனம், முதல் பணம் பிடுங்கும் வழி எல்லாமே அந்த தீபாவளியில்தான் துவங்கி திருத்த முடியாமல் விகாரப்படுத்தப்பட்டேன்.



காரணம் – ஓலைப் பட்டாசு!




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Monday, August 06, 2012

குதிரை -சுஜாதா - சிறுகதை ( நகைச்சுவை)

சிலருக்கு லாட்டரியில் பரிசு விழுகிறது. சிலரை பிரபல டைரக்டர் பஸ்ஸடாண்டில் பார்த்து “அடுத்த அமாவாசைக்கு ஷ¨ட்டிங்குக்கு வா” என்கிறார்.இப்படித் திடீர் என்று தனிமனிதர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.ஏதோ ஒரு வகையில் பிரசித்தி பெறுகிறார்கள்.அம்மாதிரி நானும் பிரசித்தமானேன். என்னை ஒரு குதிரை கடித்ததால்!





“குதிரையா?” என்று வியப்புடன் கேட்கிறீர்கள் அல்லவா? உங்களுக்குச் சொல்கிறேன். முதலில் என்னைப் பற்றி. அப்புறம் குதிரையைப் பற்றி. என்பேர் கிஷ்ண சாமி அதை கிச்சாமி என்று சுருக்கி மனதில் ஒரு பிம்பம் ஏற்படுததிப் பாருங்கள். அதேதான் நான். தொழில், தோற்றம் என்று எந்த வகையிலும் எனக்குப் பிரத்தியேகம் கிடையாது. தினப்படி காப்பி குடித்து, பேப்பர் படிதது, துணி மடித்து, பஸ் பிடித்து அங்குலம் அங்குலமாக மாயும் மனித எறும்பு.




மனைவி, குழநதை ,மாமனார், வாடகை வீடு, பாத்ரூமில் பாட்டு, மண் தொட்டியில் ஒன்றிரண்டு மலர்ச்செடிகள், தவணை முறையில் ரேடியோ என்று பிரகாசமற்ற பிரஜைதான் நான்.



குதிரை கடிக்கும் வரை! குதிரையும் அவ்வளவு பிரசித்தமில்லாத ஜட்கா வண்டிக் குதிரைதான்.எங்கள் வீட்டிலிருந்து அஹமத் ஸ்டோர்ஸ்க்கு போகும் வழியில் ஆஸ்பத்திரி இருக்கிறது.அதன் வாசலில் வழக்கம்போல் இளநீர் காலி பாட்டில்கள் எல்லாம் விற்கும் இடத்துக்கு எதிரே ஒரு குதிரைலாயம் இருக்கிறது. பொதுவாக எல்லா ஆஸ்பத்திரிகளுக்கும் எதிரில் இந்த லாயம் இருப்பதை நீங்கள் கவனித் திருக்கலாம்.


இந்த லாயங்களில் மற்றொன்றையும் கவனித்திருக்கலாம், திருச்சி தென்னுர் போனலும் பிட்ரகுண்டா போனலும். ஒரே அமைப்பு. உயரமான கருங்கல் கம்பங்கள் மேல் ஜாக்கிரதையாக ஓடு வேய்ந்திருக்கும். நடுவே 1938 ல் ஏதோ ஒரு உள்ளூர் நாயுடுவின் உபயத்தில் கட்டடப் பட்டது என்று அறிவித்து ஒரு தண்ணீர்த் தொட்டி இருக்கும்.நகரச் சந்தடியில் ஒரு சோம்பேறித் தீவாக கொஞ்சம் சேணம்,கொஞ்சம் லத்தி ஈரப்புல் கலந்து நாற்றமடிக்கும்.



வண்டிக் காரர்க்ள் சுகமாக எங்கேயோ கவனித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். ஒன்றிரண்டு குட்டிக் குதிரைகள் தெனபடும்.அவை அழகாக இருக்கும். திடீர் என்று குதிரைக் குட்டி உற்சாகம் பெற்று வெறி பிடித்தாற்போல போக்கு வரத்தின் ஊடே ஓடும். இந்த மாதிரித் தான் நான் சொல்லும் இடமும். அதைக் கடந்து செல்லும்போது லேசாக மழை பெய்ததால் சற்று ஒதுங்கி குதிரைகளின் கிட்டே நடந்து போனேன்.



சில குதிரைகள் என்னை சட்டை செய்யாமல் அவ்வப்போது உடம்பில் எதிர்பாராத இடங்களைச் சிலிர்த்துக்கொண்டு தெய்வமே என்று வண்டிக்காரன் கொடுத்ததை மென்று கொண்டிருந்தன. எல்லாமே கிழட்டுக் குதிரைகள். முதுகெலும்புகள் தெரிய தோள்பட்டையில் தழும்போடு கால்கள் ஜபேட் அடித்து குதிரையா கழுதையா என்று தீர்மானமாக சொல்ல முடியாத அளவுக்கு இருந்தன. அவற்றில் ஒன்று என் முழங்கையைக் கடித்துவிட்டது.



நான் நடந்து கெசாண்டே இருக்கும் போது முழங்கைப் பகுதியில் சுரீர் என்கிறதே என்று பார்த்தால் குதிரை கடித்து முடித்துவிட்டு என்னைப் பார்த்தது. தொள தொள என்ற உதடுகளுடன் சிரித்தது. நான் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று முழங்கையைப் பார்ததுக்கொணடு குதிரைக் காரனைத் தேடினால் காணவில்லை. ஒரே ஒரு பையன் எங்கோ பார்ததுக் கொண்டு நின்றான். மறுபடி கடித்துவிடப் போகிறதே என்று விலகி வந்து காலை வெளிச்சத்தில் காயத்தை ஆராய்ந்தேன். லேசாகப் பல்லுப் பட்டிருந்தது.



அது ஒன்றும் நிகழவில்லைபோல் என் மேல் சுவாரசியம் விலகிப் போய் எதையோ மென்று கொண்டிருந்தது.என்னை யாரும் பார்க்கவில்லை.’ச்சே’ என்று பொதுப்படையாகத் திட்டிவிட்டு அடிக்கடி காயத்தைப் பார்த்துக் கொண்டே’ டெட்டால்’ போட்டு
அலம்பிக் களிம்பு தடவ வேண்டும் என்று எண்ணிய படி வீட்டுக்கு விரைந்தேன். என் மனைவி வாசலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.கடைக்குப் போன கணவன் குதிரை கடித்து இத்தனை சீக்கிரம் திரும்பி வருவான் என்று எதிர் பார்க்கவில்லை.



“என்ன வந்துட்டிங்க? அகமத் ஸ்டோர் மூடியிருக்கா?”



 “இல்லை வரவழியில..”


 “ என்ன ஆச்சு? என்ன கையில”


“உள்ள வாயேன் சொல்றேன்”



 “என்ன ஆச்சு விழுந்திட்டிங்களா?”



“இல்லை ஆஸபத்திரிக்கு எதிர்ல கதிரை லாயம் இருக்கு பாரு அது வழியா நடக்கறபோது குதிரை கடிச்சுடுத்து”




“என்னது,குதிரையா?”



“ஆமாம்”


 “கடிச்சுதா?”



மாமனார் உள்ளே வர


“அப்பா குதிரை எங்கயாவது கடிக்குமா?”



என்று அவரிடம் கேள்வி.


“எதை” “


மனுஷாளைப்பா”



 “சேச்சே”


“இதோ உங்க மாப்பிள்ளையைக் கடிச்சிருக்கு” “



அப்படியா, ஆச்சரியமா இருக்கே! என்ன மாப்பிளளை எதாவது அதைப்போய் சீண்டனம் பண்ணேளா?”




“இல்லே ஸார் அந்தப் பக்கமா நடந்து போயிண்டிருந்தபோது லபக்குன்னு கவ்விடுத்து” “



குதிரை லாயத்துக் கெல்லாம் எங்க போறேன். கல்யாணி நீ எதாவது வண்டி கொண்டுவரச் சொன்னாயா?




” “இல்லைப்பா ஸ்டவ்வுத் திரி வாங்கிண்டு வர அகமத் ஸ்டோர்ஸ்க்கு அனுப்பிச்சேன். எதுக்கு நீங்க குதிரை கிட்டல்லாம் போறேள்? அய்யோ நன்னாப்பல்லுப் பட்டிடிருக்கே. விஷப் பல்லா இருந்துடப் போறது. அப்பா அதைப் பாருங்க”



மாமனார் கிட்ட வந்து பார்த்து


“கன்னித்தான் போயிருக்கு. மாப்பிள்ளை நீங்க எதுக்கும் ராயர் கிட்டக் கொண்டு காட்டிடுங்கோ. கல்யாணி, அழைச்சுண்டு போயிடு. ஜட்கா வண்டிக் குதிரையா” “



ஆமாம்”


சற்று யோசித்து“



ஜட்கா வண்டிக் குதிரை கடிக்காதே” என்றார் ஜ.வ.குதிரைகளில் டாக்டர் பட்டம் வாங்கினவர் போல். “



இந்தக் குதிரை கடிச்சுது ஸார் என்ன பண்ண?” என்றேன்



. “இவருக்கு மட்டும எல்லாம் ஆகும்பா, கணக்கால் அளவுக்கு தண்ணீர் போதும் இவருக்கு முழுகிப்போய்டுவார்.இப்படித்தான் திருச்சினாப்பள்ளியில உய்யக் கொண்டான் வாய்க்கால்ல.


.” “சரிதான் நீ ஆரம்பிக்காதே”

என்று அதட்டினேன். “எதுக்கும் டாக்டர் ராவ் கிட்ட கொண்டு காட்டிடறது நல்லது” என்றாள். எனக்கும் காயத்தைப் பார்த்ததில் அபபடித்தான் பட்டது.ஆனால் இதை டாக்டரிடம் எப்படிச் சொல்லப் போகிறேன் என்று கவலையாக இருந்தது.’’




நரஹரி ராவ் எங்கள் குடும்பத்து டாக்டர் . அறுபது வயசானாலும் நல்ல ப்ராக்டிஸ், நாங்கள் போனது காலை வேளையாக இருந்தாலும் நல்ல கூட்டம்.குழந்தைகளும் தாய்மார்களும் க்ளார்க்ககுகளும் மப்ளர்காரர்களுமாக அடைத்துக் கொண்டு காத்திருந்தார்கள்.சின்ன இடம் அதில் பாதி தடுத்து நரஹரிராவ் உள்ளே உட்கார்ந்துகொண்டு யாரையோ ‘ஆ’ சொல்லிக் கொண்டிருப்பது பனிக் கண்ணாடியில் குழப்பமாகத் தெரிந்தது. ’எங்களுக்கு உட்கார இடம் இல்லை. அடுத்த முறை பையன் வெளியே வந்தபோது கல்யாணி



 “இந்தாப்பா டாக்டர் கிட்ட சொல்லு அவசரமா பார்க்கணும்னு” என்றாள்.

“எல்லாருக்குந்தாம்மா அவசரம்”



“இல்லைப்பா இவரை குதிரை கடிச்சுடுத்துப்பா. ரத்தமா கொட்டறது பாரு



”என்றாள்



 “கல்யாணி! என்ன சொன்னே? சரியாக் காதுல விழலை குதிரையா?”



“ஆமாம் மாமி. போயும் போயும் குதிரை கிட்ட கடி பட்டுண்டு வந்திருக்கார். என்னத்தைச் சொல்லி மாள?”



 “குதிரை வளக்கறிங்களா?” “அதுங்கிட்ட எதுக்குப் போனார்?




” எல்லோரும் என்னையே பார்த்தார்கள்.


 “உள்ளே வாங்க கிச்சாமி”


என்றார் டாக்டர்.



“என்ன குதிரை கிட்டல்லாம் போய் விளையாடிண்டு இந்த வயசில




” “டாக்டர் அது வந்து ஆஸ்பத்திரிக்கு எதிர்த்தாப்பல நடந்து போயிண்டிருநதேனா.


.” என் கதையைத் தணிந்த குரலில் சொன்னேன்.“


 டாக்டர் அதுக்கு எதாவது விஷப் பல்லு இருக்குமா” என்றாள் கல்யாணி இடையே. “தெரியலைம்மா. இருக்காதுதான். ஆனா கல்யாணி நானும் இதே மில்கார்னர்ல முப்பது வருஷமா ப்ராக்டிஸ் பண்ணிண்டிருக்கேன்.குதிரை கடிச்ச கேஸை இப்பதான் முதல்ல பார்க்கறேன்”


என்றார். “என்ன பண்றது டாக்டர்? ஆக்ஸிடெண்ட்டுக்குன்னே பொறந்தவர் இவர்.ஸ்கூட்டர் ஓட்டக் கத்துக்கறேன்னு ஸ்கூட்டரை ஸ்டாண்டில இருந்து எடுக்கறதுக்கு முன்னாடியே ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டார்.தொப்புன்னு போட்டுண்டு கீழே விழுந்தார். கால்ல பாருங்ஙகோ தழும்பு” டாக்டர காயத்தை கவனித்தார்.




 “வலிக்கிறதா? இருங்க காட்டரைஸ் பண்ணிடறேன்” என்று குட்டியாக இருந்த ஸ்பிரிட் அடுப்பைப் பற்ற வைத்து விட்டு அலமாரியிலிருந்து தடிமனான ஒரு புத்தகத்தைப் பிரித்து அதன் பின் அட்டவணையில் குதிரை, குதிரைக் கடி என்று தேடினார். “ம் ஹ§ம் டெக்ஸ்ட் புக்லயே இல்லை. எதுக்கம் கவலை படாதங்கோ சீட்டு எழுதிக் கொடுக்கறேன். நேரா ஆஸபத்திரிக்குப் போய் இன்ஜெக்ஷன் ஒரு கோர்ஸ் ஆரம்பிச்சுடுஙகோ இப்பவே”என்றார்.




 “அந்த இன்ஜெக்ஷனை இஙகேயே போட்டுண்டடுடலாமே டாக்டர்” “எங்க கிட்ட ஸீரலம் கிடையாது, ஆதுவும் இல்லாம டாக்டர் கோபி எல்லாம் தேர்ந்தவர். அவர் பார்த்து தேவைப் பட்டுதுன்னாத்தான் ஊசி போட்டுக்கணும். இப்ப காட்டரைஸ் பண்ணி அனுப்பிச்சுர்றேன்” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு “குதிரை” என்று தனக்குள் சொல்லிக்கொண்டு“



டாக்டர் கோபிக்கு லெட்டர் கொடுக்கறேன் உடனே போம்” என்றார். ஆஸபத்திரியை நோக்கி நடக்கும்போது ஒரு மாடு கிழிசல் பனியனை மென்று கொண்டிருந்தது



. “பாத்து வாங்கோ .இது வேற கடிச்சு வெக்கப்போறது” என்றாள் கல்யாணி. “என்ன கல்யாணி சொல்றே? வேணும்னுட்டா கடிச்சுப்பா?” “வேணுமோ வேணாமோ நம்மாத்தில மட்டும்தான் இந்தமாதிரியெல்லாம் நடக்கறது. டாக்டர் சொன்னார் பாருங்கோ” “எல்லாம் எனக்கும் கேட்டுது. அதபாரு குதிரை கடிக்காதுதான் என்னைக் கடிச்சுடுத்து என்ன பண்ணச் சொல்றே ? ஏன் கடிச்சேன்னு வேணா விசாரிச்சுன்டு வரட்டுமா?”



 “வேண்டாம். மறுபடியும் கடிச்சு வெக்கப் போறது. கடிக்கறதுன்னா அந்தப் பக்கம் ஏன் போகணும்?” “



குதிரை கடிக்கும்னு யாருக்குடி தெரியும் மூதேவி!”

நடுரோடில் எங்களை வேடிக்கை பார்கக கூட்டம் கூடிவிடவே நாங்கள் கலைந்து நடந்தோம்.ஆஸபத்திரியில் டாக்டர் கோபிநாத்தைத் தேடிக்கொண்டு சென்றேன்.நீண்ட பெஞ்சு போட்டு பலபேர் உட்கார்ந்திருந்தார்கள். கல்யாணி இங்கே வந்து “குதிரை கடித்துவிட்டது” என்று இரைந்து கூறி சலுகை கேட்கப் போகிறாளே என்று பயமாக இருந்தது.ஆககால் கல்யாணி பேசாமல்தான் உட்கார்ந்தாள்.அங்கே உட்கார்ந்திருந்தவர்களை விசாரித்ததில் பெரும்பாலோர் நாய்க்கடிக் காரர்கள் என்று தெரிந்தது. அங்கங்கே ஒன்றிரண்டு எலி தேள் இருந்தன. எல்லாருடைய சீட்டுகளிலும் நாய் நாய் என்றுதான் எழுதியிருந்தது.அங்கே அருந்த சிப்பந்தி அவற்றை அடுக்கி வைக்கம் போது என் சீட்டு வந்தபோது மட்டும மயங்கினான்.

“குதிரை! இங்க யாருப்பா கிருஷ்ணசாமி”




“கிருஷ்ணசாமி நான்தான் ”என்றேன்.


 “உங்க டிக்கெட்டில் தப்பா போட்டிருக்கு குதிரை ன்னு. கொஞ்சம் திருத்திக் கொடுக்கறிங்களா”


 “இல்லை ஸார் என்னை குதிரைதான் கடிச்சிருக்கு



” இப்போது அத்தனை பேரும் திக்கித்துப் போய் என்னைப் பார்க்க, சிப்பந்தி உடனே உள்ளே போய் கோபிநாத்திடம் சொல்ல “கூப்பிடு உள்ளே அவரை முதல்ல” என்றார். “வாங்க உக்காருங்க. ராயர் போன் பண்ணிச் சொன்னார். நீங்கதானா அது? குதிரை எங்கே கடிச்சுது உங்களை?”என்று விசாரித்தார்.



 “ஆஸ்பத்திரிக்கு எதித்தாப்பல ஸ்டாண்டு இல்லை? அங்கே” “



அதைக் கேக்கலை.உடம்பில எந்த பாகத்தில?”


 நான் என் கைச்சட்டையை வழித்துக் காட்டினேன்.



“காட்டரைஸ் பண்ணாரா?”என்று அலமாரியிலிருந்து தடியான புத்தகம் ஒன்றை எடுத்தார். “அந்தப் புஸ்தகத்தில் ‘குதிரைக்கடி’ கிடையாது டாக்டர்”என்றாள் கல்யாணி.



“எப்படிச் சொல்றிங்க?” “டாக்டர் ராவ் பார்த்துட்டார்” “மிஸடர் கிருஷ்ணசாமி ஒண்ணு பண்ணலாம் நான் குதிரை கடிச்ச கேஸை இதுவரை ட்ரீட் பண்ணதில்லை எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்.


ஒரு ஷார்ட் கோர்ஸ் ஆரம்பபிச்சுர்றேன் ஸ்ப்க்யுட்டேனியஸ்ஸா..” “டாக்டர் உயிருக்கு ஆபத்து எதும்ம இல்லையே?” “சேச்சே பயப்படாதிங்கம்மா.மிஸ்டர் கிருஷ்ணசாமி எதுக்கும் ரெண்டு மூணுநாள் அந்தக் குதிரையை வாட்ச் பண்ணிக்கிட்டு இருங்க.செத்து கித்து வெக்குதான்னு. எந்தக் குதிரை கடிச்சுது ஞாபகம் இருக்குமோல்லியோ?”



“ம்” என்றேன் சந்தேகமாக


மூணு நானைக்கு எதுக்குப் பார்க்கணும்” என்றாள் கல்யாணி.



அதுக்கு வெறி கிறி எதாவது பிடிச்சிருந்தா செத்துப்போய்டும் . அது உயிரோட இருந்தா கவலைஇல்லை.எதுக்கும் பயப்படடிதிங்க ரிஸ்க் எடுத்துக்காம கோர்ஸை ஆரம்பிச்சுர்றக்ஷன்



. தினம் காலை இந்த வேளைக்கு வந்துடுங்க என்ன ?


” “பகவானே என்ன க்ஷசொதனை பாத்திங்களா?”


 என்று புலம்பிக்கொண்டே வெளியே வந்தாள் கல்யாணி.



வந்ததும் அங்கே உட்கார்ந்திருந்தவர்களிடம சட்டென்று பேச்சு நின்று போய் ஒரு சிலர் உள்ளங்கையால் வாயை மறைத்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவரிடம் என்னைக் காட்டிப் பேசுவதை கவனித்தேன். முதுகில் கூட அவர்களது பார்வை பட்டது. திடீரென்று திரும்பி’குதிரை கடிச்சா என்னய்யா?“ என்று சத்தமாகக் கேட்க நினைத்தேன். ஆஸ்பத்திரியை விட்டு வெளியே போகும் போதே குதிரையை ஒரு நடை விசாரித்து விட வேண்டும் என்று கல்யாணி சொன்னாள். எனக்கு அது தேவையாகப் படவில்லை. இருந்தும் அங்கே போனோம். ”குதிரையை ஞாபகம் இருக்கோல்லியோ?“ என்றாள்


. ”இருக்கும்னு நெனைக்கிறேன்.நெத்தில டைமண்ட் ஷேப்பில வெள்ளையா ஒரு திட்டு இருந்ததா ஞாபகம்.“

லாயத்துக்குப் போனபோது ஏறக்குறையக் காலியாக இருந்தது. சிறுவன் மட்டும் காலை ஆட்டிக்கொண்டு பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான்.


 ”ஏம்பா எல்லாக் குதிரையும எங்கே?“


 ”எல்லாம் சவாரி போயிருக்குதுங்க. கொச்ம் இருங்க வந்துடும்.


பாடி கொடுத்துட்டாங்களா


“ ”பாடியா?“


”இவன் என்ன சொல்றான்“


என்றாள் கல்யாணி.


 ”ஏம்பா இந்த அடத்தில எத்தனை குதிரை இருக்கு?“


”ஏங்க எதாவது எலக்சனா?


குதிரைச் சின்னத்தில் நின்னறிங்களா?



 ஊர்கோலம் போகணுமா?


எத்தனை குதிரை வேணும்?“



ஒரே ஒரு குதிரைதாம்பா. நெத்தில டைமண் மாதிரி இருக்கும்“



 ”கரீம்பாய் குதிரையை சொல்றிங்க. இதோ இப்ப சவந்துடுங்க. கபர்ஸ்தான் போயிருக்குது“



”அது உயிரோட இருக்கில்லே?“ ”


இல்லாம,பின்ன?“


 ”நல்லது“


 என்று புறப்பட்டு வந்துவிட்டோம். ”



தினம் ஆஸ்பத்திரிக்கு வர வழியில ஒரு விசை குதிரையை விசாரிச்சுண்டு வந்துருங்கோ“


 என்றாள் கல்யாணி. மறுதினம் ஆஸபத்திரிக்குப் போகிற வழியில் என்னைக் கடித்த குதிரையை மறுபடி சந்தித்தேன் அந்தப் பையன்தான்



 ” கரீம்பாய் கல் பூச்சானா? ஓ ஆத்மி ஆயா “


 என்றான். கரீம்பாய்க்கு காலையிலேயே கண்கள் கலங்கியிருந்தன. என்னைப் பார்தது,



 ”என்ன சாமி நம்ம சுல்தானைப் பத்தி விசாரிச்சிங்களாமே?“


என்றான்.நான் கிட்டப்போய்ப் பார்த்ததில் என்னைக் கடித்த குதிரை அதுதான் என்று தெரிந்துபோய்விட்டது



. ”பாய்! இந்தக் குதிரை நல்லாத்தானே இருக்குது? உயிரோடதானே இருக்குது?“



சேணம் எல்லாம் கழற்றிப் போட்டு எண்ணெய் தேய்த்துக் கொள்வதற்கு முன்பிருக்கும் நங்கை போல் இருந்தது.


 ”ஏன் சாமி“



 ”நேத்திக்கு இது என்னை கடிச்சிடுச்சுப்பா. குதிரை உயிரோடதான் இருக்கான்னு தினம் பார்க்கச் சொல்லியிருக்கார்


டாக்டர்“


 ”கடிச்சுதா? அதெல்லாம் செய்ய மாட்டானே நம்ம சுல்தான், க்யூன் சுல்தான் ஸாப்கோ காட்டா?“



 குதிரை ”பிஹிர்ர்ர்“ என்றது.



”என்னா குதிரைங்க இது?“



என்று அதன் கழுத்தருகில் சொரிந்து கொண்டே சொன்னான்.



”ரேக்ளா ரேஸ்ல எல்லர்ம ப்ரைஸ் வாங்கிருக்கு. க்யுன் சுல்தான்?“




 ”பிஹிர்ர்ர்“ ”ஏதோ சௌக்கியமா இருந்தா சரி. அதோ பார் முழங்கையைக் கடிச்சுடுச்சு. தினப்படி ஊசி போட்டுக்க வேண்டியிருக்கு. குதிரையைக் கட்டுப் படுத்தி வெச்சுக்கக் கூடாதாப்பா?“




 ”ஊசி போட்டுக்கறியலா?“ என்று சுல்தான் போலவே சிரித்தான். ”எதுக்கு? குதிரை கடிச்சதுக்கா? இத பாரு.“




என்று தன் கையைக் காண்பித்தான். ”எத்தனை தடவை புல் குடடுக்கறப்ப கொள் கொடுக்கறப்ப சுல்தான் என்னைக் கடிச்சிருக்கான் தெரியுமா? ஊசியா போட்டுக் கிட்டேன்? க்யூன் சுல்தான்?“ எதற்கும் நான் ரிஸ்க் எடுத்துக் கொள்ளவில்லை.ஆஸ்பத்திரிக்குப் போகும் போதெல்லாம் சிப்பந்திகள் குதிரைக்காரர் வந்துட்டாரு”


 என்று பேசிக்கொண்டாலும், எதிர் வார்டிலிருந்து நண்பர்களையெல்லாம் கூட்டி வந்து என்னைக் காட்டினாலும், வீட்டில் கல்யாணியின் பல உறவினர்கள் பேருக்குப் பேர்“குதிரை கடிச்சுடுத்தாமே ” என்று விசாரித்தாலும் மதிக்காமல் பிடிவாதமாக சிகிச்சைக்குச் சென்றேன்.சில நாட்களில் காயம் ஆறிவிட்டது. ஆனால் அந்த சம்பவத்துக்குப் பின் என் பெயர் மாறிவிட்டது ‘குதிரைக் கிச்சாமி’ என்று.



ஊருக்கு ஊர் கிச்சாமி இருக்கிறார்கள், ஆனால் நாட்டில் ஒரே ஒரு ‘குதிரைக் கிச்சாமி’ நான்தான் என்பதில் ஒரு அற்ப சந்தோஷம்.




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

Sunday, August 05, 2012

என் முதல் ஆங்கிலக் கடிதம் -சாரு நிவேதிதா.- சிறுகதை ,(காதல்)

பார்பராவைச் சந்தித்தது ரொம்பவுமே எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஒரு வேளை எல்லாச் சந்திப்புகளுமே எதேச்சையானது தானோ என்னவோ ! ஒரு வருடத்திற்கு முன்னால் மதுரையில் ஒரு நாடக விழா நடந்த போது அதில் என் நண்பன் மாணிக்கம் எழுதிய நாடகம் பங்கு பெறுகிறது என்றும், அதன் இயக்கத்தில் என் உதவி தேவைப்படுகிறது என்றும் அவன் என்னை அழைத்திருந்ததால் நானும் அதில் பங்கு பெற நேர்ந்தது. அந்த நாடக விழாவில்தான் நான் பார்பராவைச் சந்தித்தேன்.




பார்பரா தமிழ் பேசத் தெரிந்த ஒரு அமெரிக்கப் பெண். வயது இருபதிலிருந்து இருபத்தைந்து இருக்கலாம். தமிழ் நாட்டுக்கு, அதுவும் இதுபோன்ற கலை விழாக்களுக்கு வரும் அமெரிக்கர்கள் என்றாலே எனக்கு ஒரு எரிச்சல் உண்டு. காரணம் – இவர்கள் ஒரு குறிப்பிட்ட குழுவுடனேயே தங்களை இணைத்துக் கொண்டு விடுவதுதான். இலக்கியம் என்றால் கூட அது சங்க இலக்கியம் – அல்லது அதிகம் போனால் பக்தி இலக்கியம் வரை வருவார்கள். அதற்கும் மேல் நவீன இலக்கியம் என்றால் – மூச்! பேசக்கூடாது.




ஆக, பார்பராவும் இப்படிப்பட்ட ஒரு அமெரிக்கப் பெண் தான் என்று நினைத்து அதிகம் பேசாமல் இருந்து விட்டேன். அதனாலேயே நாடக விழாவின் கடைசி நாளன்று நடக்க இருந்த எங்கள் நாடகத்தை பற்றிக்கூட அவளிடம் பிரத்யேகமாக எதுவும் சொல்லாமல் இருந்து விட்டேன்.




விழாவின் பங்குபெற்ற நாடகங்கள் எல்லாமே ஒரே ‘ கடி ’ யாக இருந்ததால் ( எல்லாம் நவீன நாடகங்கள் ) பார்பரா கடைசி நாளன்று வராமல் இருந்து விட்டாள். நாங்கள் பாலியல் விவகாரங்களையும் எங்கள் நாடகத்தில் சேர்த்திருந்ததால் ஆபாச நாடகம் என்று சொல்லி ஒரே கலாட்டாகவும், அடிதடியாகவும் போய் விட்டது. அது போதாதென்று நாடகத்தின் ஒரு பாத்திரத்தின் பெயர் மதுரையின் ஒரு முக்கியமான அரசியல் புள்ளியின் பெயராகவும் போய் விடவே அந்த புள்ளியின் ரசிக மணிகளும் அடிதடியில் இறங்கினர். அடிதடி முடிந்த பிறகு ‘ இதையெல்லாம் முன் கூட்டியே யோசித்திருக்க வேண்டாமா மடையா? ’ என்று மாணிக்கமும் நானும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டது வேறு விஷயம்.




இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாணிக்கத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. மேலும் ஒரு நாடகம் எழுதியிருக்கிறானோ என்று பயந்து கொண்டே கடிதத்தைப் பிரித்தால் அதில் அவன் பார்பராவைப் பற்றி எழுதியிருந்தான். அவள் தன்னை வந்து சந்தித்ததாகவும், நடந்த அடிதடிகளைப் பற்றி மிகுந்த அக்கறையோடு விசாரித்ததாகவும் எழுதியிருந்தான். அப்போதும் பார்பராவிடம் எனக்கு அதிக ஈடுபாடு ஒன்றும் ஏற்படவில்லை. பிறகு சில மாதங்கள் கழித்து வந்த கடிதத்தில் பார்பராவை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தான்.




இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்த மாணிக்கம் ‘பார்பராவைப் பார்க்கப் போகலாம் வா ’ என்று அழைத்தான். அவனுடன் வந்திருந்த நண்பர்களையும் சேர்த்து – என் மகள் ரேஷ்மா உட்பட மொத்தம் ஒன்பது பேர் பார்பராவின் வீட்டுக்கு சென்றோம்.



பார்பரா சிகாகோ பல்கலைக் கழகத்திலிருந்து தமிழ் நாட்டின் ‘செக்ஸ் தொழிலாளிகளைப் ’ பற்றி ஆய்வு செய்ய இங்கு வந்ததாகவும் இரண்டு வருடம் மதுரையிலும் இப்போது ஒரு வருடம் சென்னையிலும் ஆய்வு முடித்துவிட்டதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் யு. எஸ் திரும்ப இருப்பதாகவும் ( ‘ யு.எஸ் ’ என்பதை ‘ யுவெஸ் ’ என்று சொன்னாள் பார்பரா) தெரிந்தது.



தமிழ் நன்றாகவே பேசினாள் பார்பரா. ஆனாலும், அந்தச் சந்திப்பில் அவளுடன் அதிகம் பேச முடியவில்லை. எனென்றால் மொத்தம் பத்து பேருக்கான சமையலில் ஈடுபட்டிருந்தாள் பார்பரா. சாம்பாரும், தொட்டுக் கொள்ள கோவைக்காய் கறியும். நாங்கள் வரும் போதே கோவைக்காய் வாங்கி வந்திருந்தோம்.



இரவு பார்பராவின் வீட்டிலேயே தங்கிவிட்டு மறு நாள் காலை கிளம்ப ஆயத்தமானோம்.



” இருங்கள். சாப்பிட்டு விட்டு போங்கள். நேற்று இரவுகூட நீங்கள் யாரும் சரியாக சாப்பிடவில்லை ” என்று சொன்னாள் பார்பரா. சொல்லிவிட்டு மூன்று பெரிய தூக்குகளை எடுத்துக் கொண்டு மாணிக்கத்துடன் ஸ்கூட்டரில் கிளம்பினாள்.



திரும்பி வந்தபோது கிட்டத்தட்ட நாற்பது பேர் திருப்தியாக சாப்பிடும் அளவுக்கு இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி என்று வந்திறங்கியது.



எக்கச்சக்கமாக மீதியாகிப் போகவே எல்லாவற்றையும் மறுபடியும் ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினாள் பார்பரா. ” எங்கே ? ” என்று கேட்டேன். ” ஏதாவது ஒரு அனாதை இல்லத்துக்குப் போய் கொடுக்கப் போகிறேன் ” என்றாள். கிளம்பும் போது ” மீண்டும் வாருங்கள் , சாவகாசமாகப் பேசலாம் ” என்றாள்.




ஒரு வாரம் கழித்து போன் செய்தேன். வெகு நாள் பழகிய தொனியில் பேசினாள். அன்றைக்கு மறுபடியும் சந்தித்தேன். கூடவே ரேஷ்மாவையும் அழைத்துப் போயிருந்தேன். அன்று இரவு முழுக்கவும் பேசிக் கொண்டிருந்தோம். “எப்போதோ நாம் சந்தித்திருக்கலாம் ” என்றாள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக சென்னையில் தான் இருப்பதாகவும் மாதம் இரண்டு முறை மதுரை போய் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னாள்.




பிறகு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சந்தித்தோம். நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்டாள் பார்பரா. இங்கு உங்கள் நாட்டில் ஓரல் செக்ஸ் என்பதெல்லாம் ரொம்பவும் அசாதரணமான விஷயமா என்ன ? நான் சந்தித்த ‘செக்ஸ் தொழிலாளி ’ களெல்லாம் அவர்களிடம் வரும் பெரும்பாலானவர்கள் ஓரல் வச்சுக்கத்தான் வருவதாகச் சொல்கிறார்களே ?





இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள். விவாதங்கள். ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்க நெருங்க சிநேகிதமும் தீவிரமானது.



நான் என்னுடைய நாவலையும், என் நண்பன் ரமேஷின் நாவலையும் அவளிடம் காண்பித்தேன். அதன் அட்டைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே குதிக்க ஆரம்பித்து விட்டாள் பார்பரா.



“உங்கள் நாவலைப் படிக்கச் சொல்லி ஒரு நண்பர் அடிக்கடி என்னிடம் குறிப்பிடுவார் ” என்றார்.



“யார் மாணிக்கமா ?“ என்று கேட்டேன்.



“இல்லை. குமார் என்று வேறு ஒரு நண்பர் ”



“குமாரும் எனக்குச் தெரிந்தவன் தான். ஆக என் நாவலைப் பற்றிக்கூட, உனக்கு (இதற்குள் நாங்கள் ஒருமையில் பேசும் அளவுக்கு நெருங்கியிருந்தோம்) மாணிக்கம் சொல்லவில்லையா? நான் மட்டும் உன்னை ஒரு வருடத்திற்கு முன்னால் சந்தித்திருந்தால் உன் கால், கைகளைக் கட்டி பாண்டிச்சேரிக்குத் தூக்கி கொண்டு போயிருப்பேன் ”




“இரண்டு விஷயங்கள் புரியவில்லை. ஒன்று – எதற்கு கால், கைகளைக் கட்ட வேண்டும் ? இரண்டாவது – பாண்டிச்சேரியில் என்ன விஷேசம்? ”




“பாண்டிச்சேரியில்தான் என் நெருங்கிய நண்பன் ரமேஷ் இருக்கிறான். அங்கே கூப்பிட்டால் நீ அப்புறம் பார்க்கலாம் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்வாய். அதனால் தான்…. ”




” நீ என்னைப் புரிந்து கொண்ட்து அவ்வளவுதானா ? நான் அமெரிக்காவில் இருந்தாலும் நானும் உன்னைப் போல் ஒரு அனாதைதான். அங்கே ஜனாதிபதியிலிருந்து அடிமட்டக் குடிமகன் வரை எதிர் கலாச்சாரம் பேசுவதால் என்னைப் போன்ற ஆட்கள் மிகவும் தனிமைப்பட்டுக் கிடக்கிறோம் ”



“இங்கே எங்கள் நாட்டிலும் கூட எதிர் கலாச்சாரம் என்பது அந்த நிலையில் தான் இருக்கிறது. சமீபத்தில் என் நண்பர்கள் நடத்திய ஒரு ஜாதி ஒழிப்புக் கருத்தரங்கில் மாட்டுக்கறி சாப்பிட்டு அதை தங்களின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக அறிவிப்பு செய்தார்கள் ”



இதைச் சொன்னதும் பார்பரா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள். பிறகு சற்று நேரம் கழித்து, சற்று சீரியசான குரலில் “மாட்டுக்கறிக்கும் எதிர் கலாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஏன், நாய்கறியோ பூனைக் கறியோ சாப்பிட வேண்டியது தானே? உங்கள் நாட்டில் ஒரு நாடோடி இனத்தைச் சார்ந்தவர்கள் பூனையையும், காகத்தையும் சாப்பிடுவதாக படித்திருக்கிறேன். யார் அவர்கள் ? பெயர் மறந்து விட்டது ” என்று கேட்டு நிறுத்தினாள்.




“குறவர்கள் ”



“யெஸ் குறவா. நாய்க்கறி என்றதும் எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. நீங்கள் அரிசி சாப்பிடுவதைப் போல் நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுகிறோம். நாங்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதைப் போல் வியட்நாமியர்கள் நாய்க்கறி சாப்பிடுகிறார்கள். ஒரு முறை நான் வியட்நாம் சென்றிருந்தபோது அங்கே என் வியட்நாம் தோழி ஒருத்தி என்னை அவள் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தாள். போனதும் ‘ உனக்கு இன்று ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று தயார் பண்ணப் போகிறேன் ’ என்றாள். ‘


என்ன அது? ’ என்று ஆர்வத்துடன் கேட்ட என்னை கிச்சனுக்குள் அழைத்துச் சென்று ப்ரிஜ்ஜை திறந்து காட்டினாள். அவ்வளவுதான். பேயைக் கண்டதுபோல் அலறிவிட்டேன். ஆமாம். பேயேதான். ப்ரிஜ்ஜுக்குள் பேயின் தலை. தோலெல்லாம் உரிக்கப்பட்டு பயங்கரமாக கண்களை விழித்துக் கொண்டு ஒரு நாயின் தலை ! அவர்கள் நாட்டில் நாய்த்தலைதான் ஸ்பெஷலாம் ! நீ என்னவென்றால் மாட்டுக்கறி சாப்பிடுவதை எதிர் கலாச்சாரம் என்கிறாய் ! “




எனக்கும் அவள் சொன்னது நியாமாகவே தோன்றியது. ஏனென்றால் எந்த கருத்தரங்கில் நானும், ரமேஷும் சாப்பாட்டில் கடைசிப் பந்தியாகிவிட்டோம். சாப்பிடுவதற்கு முன்னால் கொஞ்சம் பீர் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று நினைத்ததால் வந்த வினை. கடைசிப் பந்தி என்பதாக் குழம்பில் ஒரு துண்டு கூட கிடைக்கவில்லை. ஆனால், சாப்பிட்டு முடித்து இலையை எடுத்துக் கொண்டு குப்பைத் தொட்டிப் பக்கம் போனபோது தான் நண்பர்கள் எவ்வளவு தீவிரமான எதிர் கலாச்சாரவாதிகள் என்பது தெரிந்தது.



ஏனென்றால் குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் ஒரே கறி. ஆறு கிலோ கறி எடுத்து அதில் நான்கு கிலோவை குப்பைத் தொட்டியில் வீசி எறிந்திருக்கிறார்கள். ‘ என்ன அநியாயம் இது? ’ என்றேன் ரமேஷிடம். “இதெல்லாம் பழக்கமில்லாமல் ஒரே நாளில் வந்துவிடும ? போகப் போகத்தானே பழகும் ” என்றான் ரமேஷ். “அடபோடா, இவர்கள் பழகுவதற்குள் நம் நாட்டிலுள்ள அத்தனை மாடுகளும் காலியாகிவிடும் போலிருக்கிறதே! ” என்றேன்.




இதைப் பார்பராவிடமும் சொன்னேன். சிறிது நேரம் யோசித்து விட்டு “உங்கள் நாட்டில் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட, வெஜிடேரியனாக இருப்பது தான் எதிர் கலாச்சாரமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் சமீபத்தில் ரியோவில் நடந்த மாநாட்டில் இந்தியாவில் மாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், மாட்டுச் சாணம் தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுவதற்கு முக்கிய காரணம் என்றும் பணக்கார நாடுகள் சொல்லியிருக்கின்றன.


முக்கியமாக யு.எஸ். அவர்கள் இப்படிச் சொல்வதற்கு காரணம் அவர்களுக்கு தோல் வேண்டும் என்பதுதான். ஒரு மாட்டின் மொத்த கறிக்குமான விலையை விட பல நூறு மடங்கு அதிகமான விலையில் அவர்கள் அந்த தோலை ஏற்றுமதி செய்கிறார்கள். தோலை எடுத்துக் கொண்டு ஒன்றுக்கும் உதவாத கறியை உங்களிடம் தருகிறார்கள் அவர்கள். நீங்கள் என்னவென்றால் அவர்கள் தூக்கிப் போடும் கறியைத் தின்று விட்டு இது எதிர் கலாச்சாரம் என்கிறீர்களே. வேடிக்கைதான் ” என்றாள்.




பார்பரா சொல்வது சரிதான். மாட்டுக்கறி நடுத்தர வர்க்கத்து உணவில் சேர்ந்துவிட்டது. மைலாப்பூர், அண்ணா நகர், திருவல்லிக்கேணி என்று எல்லா இடங்களிலும் தெருவுக்கு தெரு தள்ளுவண்டிகளில் இரவு எட்டு மணியிலிருந்து நைட்ஷோ விடுகிற வரை சூடான இட்லியுடன் மாட்டுக்கறி வறுவலும் சேந்து, ஐந்து வருடம் ஆகிறது.






நான் வேலூரில் வேலை பார்த்தபோது அங்கே தள்ளுவண்டியில் ’ பீப் பிரியாணி ’ என்ற போர்டை பார்த்து பல நாட்கள் அர்த்தமே புரியாமல் மிரண்டிருக்கிறேன். யாரிடமும் கேட்கவும் துணிவில்லாமல் தலைமுடியை பிய்த்துக் கொண்டு குழம்பியிருக்கிறேன். பிறகு சென்னைக்கு வந்து இங்குள்ள தள்ளுவண்டிகளில் ‘பீஃப் பிரியாணி ’ என்று போட்டிருப்பதை பார்த்த பிறகுதான் விஷயம் விளங்கியது.


 ஆயுத கலாச்சாரத்தை பார்த்து பயந்தோ என்னமோ வேலூரில் ஆயுதத்தை எடுத்துவிட்டார்கள் போலும்! இப்படி தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் ஆயுதத்தோடும், ஆயுதமில்லாமலும் மாட்டுக்கறி உணவு கொடி கட்டிப் பறக்கிறது. பாண்டிச்சேரி கடற்கரையில் காந்தி சிலையை ஒட்டியுள்ள மூன்று தள்ளுவண்டிகளில் ஒவ்வொரு வண்டியிலும் தினந்தோறும் ரூ 3000/-க்கு குறையாமல் வியாபாரம் நடக்கிறது. ஒரு பிளேட் மாட்டுக்கறி வறுவல் ரூ.7. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் இருக்கும். ஒரு ஆள் நிச்சயமாக நான்கு பிளேட்டுகள் சாப்பிடலாம்.




எல்லாவற்றையும் பார்பராவிடம் விளக்கமாகச் சொன்னேன். “மாடு என்பது உங்களுக்கு ஒரு அசூயை தரக்கூடிய பிராணியாக இல்லாமல் இருப்பதால் தான் அதை சுலபத்தில் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அதே சமயத்தில் உங்களால் எந்தக் காலத்திலும் பன்றிக் கறியை ஏற்றுக் கொள்ள முடியாது ” என்று சொன்னாள்.




“ஆமாம். நீ சொல்வது சரியாக இருக்கலாம். ஒரு அராபியருக்கு பெட்ரோல் கிணறு எப்படியோ அப்படித்தான் எங்களுக்கும் ஒரு காலத்தில் பசுவும், முருங்கையும் இருந்தது. முருங்கை அழிந்துபோன நிலையில் ஒரு சினிமா நடிகர் வந்துதான் அதை காப்பாற்றினார். இப்போது மாட்டை எப்படி யார் காப்பாற்ற போகிறார்கள் “ என்று தெரியவில்லை.



” ஓ.கே. நாம் டீ சாப்பிடலாம் “ என்று சொல்லிவிட்டு இரண்டு பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தாள்.




ஒரு கனத்த அமைதிக்குப் பிறகு ” நாம் எப்போதோ சந்தித்திருக்க வேண்டும். இந்த ஒரு வருடமும் நான் பேசுவதற்குக் கூட ஆள் இல்லாமல் தவித்துக் கிடந்தேன் “ என்றாள்.




“ஏன் உனக்கு இங்கே நண்பர்கள் யாரும் கிடையாதா ? ”



“நான் யாரிடம் பேசுவது ? இது ஒரு செக்ஸ் வறட்சி பிடித்த சமூகமாக இருக்கிறது. என் கைகளைக் கூட வெளியே காட்ட முடியவில்லை. நீ கோபித்துக் கொள்ளாதே சாரு. இங்கே இருக்கும் ஒரு ஆணுக்குக் கூட, என் கண்களைப் பார்த்து பேசத் தெரியவில்லை. எல்லாருமே என் மார்பை பார்த்துத்தான் பேசுகிறார்கள். சீக்கிரமாக இங்கிருந்து போய் விட வேண்டும் ’ என்ற வேகத்தில் இருந்தபோதுதான், உன்னைச் சந்திக்க நேர்ந்தது. இப்போது ஏன் போகிறோம் என்று இருக்கிறது. ஆனால், எல்லாமே முடிந்து விட்டது. இனிமேல் தள்ளிப் போட முடியாது.




இறுக்கமாக என் கைகளைப் பற்றியிருந்த அவளுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. ஒரு வருடமாக அவளைப் பற்றி ‘பிலிம் ’ காண்பித்துக் கொண்டிருந்த மாணிக்கத்தை மனதாரத் திட்டினேன்.




“இருந்துவிடு பார்பெல்…. எல்லாவற்றையும் கேன்சல் செய்து விட்டு இருந்துவிடு “ என்றேன்.



“என்னை இதுவரை யாருமே பார்பெல் என்று கூப்பிட்டதில்லை ” என்று புன்முறுவலுடன் சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள். “முடியாது சாரு… இந்த ‘ பி.எச்.டி ’ யை முடித்தால் தான் ஓரளவுக்கு பிழைக்க முடியும். காலம் கடந்து விட்டது. உன்னை ஒரு வருடத்திற்கு முன்பு சந்தித்திருந்தால் சரியாக திட்டமிட்டிருக்க முடியும். சரி, ஒன்று சொல்கிறேன் கேட்பாயா … ? ஏதோ பெரிதாக சிநேகிதி, சிநேகிதி என்று காதில் பூ சுற்றுகிறாயே ” என்று சொல்லிக் கொண்டிருந்தவளை இடைமறித்து ” காதில் பூ சுற்றுவதெல்லாம் கூட உனக்குத் தெரியுமா ? “ என்று கேட்டேன்.




அதற்கெல்லாம் நான் என் புரொபசருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றாள்.



(புரொபசர் என்று அவள் சொன்னது சமீபத்தில் காலமான ஏ.கே.ராமானுஜத்தை தான். பார்பரா, ஏ.கே.ராமானுஜத்திடம் தமிழ் படித்தவள் )



“சரி, நான் சொல்ல வந்ததைச் சொல்லி விடுகிறேன். ரேஷ்மாவை நான் என்னுடன் அழைத்துப் போய்விடுகிறேன். என்ன சொல்கிறாய் ? ”



ரேஷ்மா, பார்பராவுடன் போனால் பிரமாதமாக இருப்பாள்தான். ஆனால், ரேஷ்மாவை இந்த நான்கு வயதில் முழுக்க முழுக்க பிரிவது என்பதை என்னால் கற்பனை செய்தே பார்க்க முடியவில்லை.



“ நோ பார்பெல்… சாத்தியமேயில்லை ” என்றேன். பிறகு நீண்ட நேரம் மெளனம். புல் தரையில் கைகளை தலைக்கு வைத்தபடி மெளனமாக படுத்திருக்க பார்பரா திடீரென்று என்னைப் பார்த்து சிரித்தாள்.



“ஏன் சிரிக்கிறாய் ? ”



“எனக்குத் தெரியும். நீ இப்படித்தான் சொல்வாய் என்று ”



“என்ன பார்பெல் இது ? உன்னைப் பிரிவதே எனக்கு தாங்க முடியாத வலியாகவும், சித்ரவதையாகவும் இருக்கிறது. ரேஷ்மாவும் போய் விட்டால்… நான் அனாதையாகிவிடுவேன் பார்பெல் ”



“ஓக்ஹாய்… பர்கெட் இட்”



அவளுடைய ஓக்ஹாயை ரசித்தேன். அமெரிக்க ஓகே. பிறகு மீண்டும் அவள் ஆரம்பித்த இடத்திற்கே வந்தேன். இங்கு நம்முடைய காதல் தேவதையாக இருக்கும் ஒரு சினிமா நடிகையை பற்றிச் சொல்லி “அவளைப் போலவே நீயும் இருப்பதால்தான் உன்னை அப்படிப் பார்க்கிறார்கள் இங்கே. மற்றபடி இது செக்ஸ் வறட்சி கொண்ட ஒரு நாடு என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்.


ஆனால், இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. அமெரிக்காவில் செக்ஸைப் பொருத்தவரை ஓரளவுக்கு எந்தத் தடையும் கிடையாது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு வெளிப்படையான சமூகத்திலும் கூட ‘போர்னோ ’ என்பது மிகப்பெரிய வியாபாரமாகத்தானே இருந்து வருகிறது? ” என்றேன்.




” இதற்கு என்னால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை. யோசித்து எழுதுகிறேன் “ என்றாள்.



எனக்கு அப்போது ஒரு பயம் பிடித்துக் கொண்டது. நான் பார்பராவுக்கு கடிதம் எழுத வேண்டுமானால் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும். அவளுக்குப் பேச்சுத் தமிழ் நன்றாகவே தெரிந்திருந்தாலும், எழுதவும், படிக்கவும் சரளமாக வராது. எனக்கோ அலுவலகத்தில் ‘ காஷூவல் லீவ் ’ விண்ணப்பத்தைத் தவிர வேறு எதுவுமே ஆங்கிலத்தில் எழுதிப் பழக்கமில்லை. அவளிடம் இதையும் சொன்னேன்.




“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ எழுதுகிறாய்“ என்றாள்



தொடர்ந்து “ஒவ்வொரு நாளும் ஊருக்கு கிளம்புவேனா என்றே சந்தேகமாகிக் கொண்டு வருகிறது “ என்று சொல்லி சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் “ நோ… போய்த்தான் ஆகவேண்டும் ” என்றாள்.




சொல்லிவிட்டு அப்படியே திரும்பி தலையை கவிழ்த்துகொண்டு படுத்தாள். எதுவும் பேச முடியவில்லை. குலுங்கி அழுவது தெரிந்தது. “ நோ பார்பெல்… நோ… ” என்று சொல்லியபடி அவளுடைய முதுகில் சாய்ந்தேன்.




நீண்ட நேரம் கழித்து சன்னமான குரலில் “ஒரு கால் நூற்றாண்டு காலம் மிகத் தீவிரமாக பழகி பிறகு எவ்வித தொடர்பும் இல்லாமல் ஒரு பத்தாண்டுகளுக்கு பிறகு அந்த நபரை ஒரு ரயில்வே பிளாட்பார்மில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ரயிலிருந்து பார்த்து கைகளை அசைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது சாரு. இது ஒரு சித்ரவதை சாரு. இதை என்னால் தாங்க முடியவில்லை… ” என்றாள்.



பார்பரா ஊருக்குக் கிளம்ப இன்னும் ஒரு வாரம் தான் இருந்தது. அன்று ஒரு விடுமுறை தினம். காலை பத்து மணி அளவில் போன் செய்தேன். “ வருகிறாயா ? உடனே வா. உடனே உன்னைப் பார்க்க வேண்டும். எப்போது வருகிறாய் ? நான் இரண்டு மணிக்கு கிளம்பவேண்டும் “ என்றாள்.



“வருகிறேன். பனிரண்டு மணி அளவில் சந்திக்கிறேன் “ என்றேன்.



“பிரேக்ஃபாஸ்ட் முடித்தாயிற்றா? “ என்று கேட்டாள். நான் காலையில் அருகம்புல் சாறு மட்டுமே குடித்திருந்தேன். ‘கபகப ’ வென்ற பசி. இருந்தாலும் ‘ஆயிற்று ’ என்றேன்.



“சாப்பிட்டாயா? ’ என்று என்னை, என் ரமேஷைத் தவிர வேறு யாரும் கேட்டு எவ்வளவு ஆண்டுகளாயிற்று என்று நினைத்துக் கொண்டேன். நினைக்க நினைக்க நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. இது என்ன நாற்பது வயதில் – அதிலும் ஒரு வாரத்தில் ஒரு யு.எஸ். போய் விடப்போகிற ஒரு பெண்ணிடம் இத்தனை ஈடுபாடு என்று தோன்றியது.



அண்ணா நகரிலிருந்து பார்பரா இருக்கும் பெசண்ட் நகருக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பயணம். அடையாறு டெப்போவில் இறங்கி எதிரே இருந்த ஐயங்கார் பேக்கரியில் பை நிறைய நொறுக்குத்தீனி வாங்கிக் கொண்டு, ஆட்டோ பிடித்து, பார்பராவின் வீட்டை அடைந்த போது மணி 12.45.



நான் அண்ணா நகரிலிருந்து, பெசண்ட் நகர் வரும் பயணத்தை பற்றி விளக்கினேன். அப்படியே தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.



“மை காட்! என் சாருவை ஒவ்வொரு முறையும் இவ்வளவு தூரம் சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறேனா? ” என்று திரும்பத் திரும்பச் சொன்னாள்.



“இரண்டு மணிக்கு நான் அந்த ‘செக்ஸ் தொழிலாளர்களை ’ சந்திக்க வேண்டும். நாம் இப்போது இரண்டு மணி நேரம்தான் பேச முடியும். இரண்டு மணி நேரம் பேச நான்கு மணி நேரப் பயணமா! ” என்று வருத்தத்துடன் சொன்னாள்.




“சரி, அப்படியானால் நாளை மாலை வருகிறேன். இரவு முழுவதும் பேசலாம். ரேஷ்மாவையும் அழைத்து வருகிறேன் ” என்றேன்.



அப்படியே சந்திப்பது என்று முடிவாயிற்று.



மறு நாள் மாலை வந்த போது வீட்டுக்கு வெளியிலிருந்த புல் தரையில் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தபடி அமர்ந்திருந்தாள் பார்பரா. நானும் பக்கத்தில் அமர்ந்தேன். ரேஷ்மாவிடம் கொஞ்சிவிட்டு என்னைப் பார்த்து ” இன்னும் ஐந்து நாட்கள் ” என்றாள்.




“வேறு ஏதாவது பேசேன் பார்பெல் ”




திடீரென்று அவளும், ரேஷ்மாவைப் போல் ஒரு குழந்தையாகத் தோன்றினாள்.




நானே போய் மூன்று பேருக்கும் டீ போட்டுக் கொண்டு வந்தேன். டீயை குடித்துவிட்டு ரேஷ்மா ‘டிவி ’ பார்க்க உள்ளே போய் விட்டாள்.




திடீரென்று மணியைப் பார்த்தேன். எட்டு ஆகியிருந்தது. “ஓ.கே பார்பெல்… ரேஷ்மாவுக்குப் பசிக்கும். மூன்று பேரும் எங்காவது ரெஸ்டாரண்டுக்குப் போய் வருவோம் ” என்றேன். பார்பரா பேசவில்லை. நானும் அவள் பேசட்டும் என்று எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். திடீரென்று வெறிபிடித்தாற்போல் என் தோள்களை உலுக்கி “ஓய் டிட்யூ மீட் மீ? ப்ளீஸ் கோ அவே. ப்ளீஸ்… இன்று இரவு இங்கே தங்காதே ” என்று சொல்லிவிட்டு நான் சற்றும் எதிர்பாராதவிதமாக என் கண்களில் முத்தமிட்டு விட்டு முழந்தாளிட்டு தலைகவிழப் படுத்துக் கொண்டாள்.




நான் அவள் பக்கத்தில் போய் “இதோ பார் பார்பெல். இன்றிரவு நான் தங்குவதுதான் பிரச்னை என்றால் நீயும் ரேஷ்மாவும் மாடிக்குப் போய் தூங்குங்கள். நாம் பேச வேண்டாம். கீழே நான் படுத்துக் கொள்கிறேன். மற்றதை காலையில் பார்த்துக் கொள்ளலாம் ” என்றேன்.





ஆனால், அவள் மறுபடியும் “புரிந்து கொள்ள முயற்சி செய் சாரு . தயவு செய்து இன்று இரவு இங்கே தங்காதே…ப்ளீஸ் ” என்றாள். அவள் உடம்பு முழுவதும் குலுங்கிக் கொண்டிருந்தது.




நான் ஒன்றுமே சொல்லாமல் அவள் தோளைத் தொட முயன்ற போது பின் பக்கம் திரும்பாமலேயே “ டோன்ட் சாரு. ப்ளீஸ் டோன்ட் . ஐ பெக் யூ…. ” என்றாள்




சட்டென்று எழுந்து உள்ளே போய் ரேஷ்மாவை கூப்பிட்டேன். கிளம்புகிறோம் என்று அறிந்ததும் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள் ரேஷ்மா. ஷூவையும் போடமாட்டேன் என்று அடம்பிடித்தாள். ஷூவை எடுத்து பையில் போட்டுவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு கிளம்பினேன்.



அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் பார்பராவை பார்க்கவில்லை. போனிலும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால், மூன்றாம் நாளும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. மண்டையே வெடித்து விடுகிறாற்போல் ஒரு உணர்வு. உள் ஜூரம். அவள் ஊருக்கு கிளம்ப இன்னும் இரண்டே நாட்கள்தான் இருந்தன.




போனில் தொடர்பு கொண்டேன். நான் தான் என்று தெரிந்ததுமே “இன்று மட்டும் நீ போன் செய்யாமல் இருந்திருந்தால் நானே நேராக கிளம்பி வந்து உன்னைக் குத்தி கொலை செய்திருப்பேன். உடனே கிளம்பி வா “ என்றாள்.




போனேன். மிகவும் சோர்வாக படுக்கையில் சாய்ந்திருந்தாள். பதற்றத்துடன் “என்ன ஆயிற்று? ” என்று கேட்டு கையை அவள் நெற்றியருகே கொண்டு போனவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாய் கையை இழுத்துக் கொண்டேன்.



“டோன்ட் பி சில்லி மேன்… ” என்று சொல்லி என் கையை பிடித்து தன் நெற்றியிலும், கழுத்திலும் வைத்தாள். “இரண்டு நாளாய் கடுமையான ஜூரம். அது இருக்கட்டும். நீ ஆபிசில் தான் வேலை செய்கிறாயா? அல்லது ஏதாவது அன்டர்கிரவுன்ட் வேலையில் ஈடுபட்டிருக்கிறாயா? ஜூரத்தில் படுக்கையை விட்டுக்கூட எழுந்து கொள்ள முடியாமல் உனக்கு போன் செய்து செய்து கையே முறிந்து விட்டது. மீனாட்சி மட்டும் இருந்திருக்காவிட்டால் என்ன ஆகியிருப்பேன் என்றே தெரியவில்லை ” என்றாள்.

“அமெரிக்கப் பெண்ணான உனக்கு இங்குள்ள அரசாங்க அலுவலகம் பற்றிச் சொன்னால் புரியாது. அதைப் புரிய வைக்கவும் இப்போது நேரமில்லை. உன் உடல் நிலை இப்போது எப்படி இருக்கிறது? முதலில் அதைச் சொல் ”



” இப்போது சரியாகிவிட்டது. அது சரி.. அன்றைக்கு எப்படி போனாய்? நீ போன பிறகுதான் உனக்கு அந்த நேரத்தில் பஸ் கிடைத்ததோ, இல்லையோ என்ற ஞாபகமே வந்தது. ஐயாம் ரியலி சாரி சாரு. நீ என்னை மன்னிக்கத்தான் வேண்டும். அன்றைக்கு நான் என் வசத்திலேயே இல்லை. உன்மத்தம் பிடித்த நிலையில்தான் இருந்தேன். நீ மட்டும் அதற்குமேல் ஒரு நிமிடம் தாமதித்திருந்தாலும் நான் யு.வெஸ் போவது நடக்காமல் போயிருக்கும். அதற்காக நான் உனக்கு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும். ஆனாலும், நீ ஒரு கல்நெஞ்சுக்காரந்தான். ஊருக்குப் போக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கிற இந்த நிலையில் இரண்டு நாட்களாக போன் செய்யாமல் இருந்து விட்டாயே? “ என்றாள்.




பின் குறிப்பு : இப்போது பார்பரா ஒரு கனவு. அவளுடன் பழகிய அந்த ஒரு மாத காலம் ஒரு கனவு. அந்த பெசன்ட் நகர் வீட்டின் புல்தரை ஒரு கனவு. ‘சாப்பிட்டாயா? ’ என்று என்னை அவள் ஆதுரத்துடன் கேட்டது ஒரு கனவு. என் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தபோது அவள் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தது ஒரு கனவு. ‘ என்னைத் தொடாதே, போய் விடு ’ என்று சொல்லிச் சொல்லி குலுங்கி அழுதது ஒரு கனவு. கனவையெல்லாம் நினைவாக்கி இப்போது பார்பராவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிக்கிறேன்.



என் முதல் ஆங்கிலக் கடிதம்.

நிதர்சனம் - சுஜாதா - சிறுகதை ( க்ரைம் த்ரில்லர்)

திரும்பி வந்துகொண்டு இருந்தபோது, ஆபீஸர்ஸ் கிளப்பை அடுத்து இருந்த ஹாஸ்டல் வாசலில் கூட்டமாக இருந்தது. கம்பெனி லாரி நின்றிருந்தது. செக்யூரிட்டி ஆசாமிகள் சிகரெட் புகைத்தபடி அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். பேசாமல் வீட்டுக்குப் போயிருக்கலாம்.



ஏதாவது திருட்டாக இருக்கலாம் என்று அருகே சென்று விசாரித்தேன்.



”மேலே போய்ப் பாருங்க! மாடில வலது பக்கம் கடைசி ரூம்.”



தயக்கத்துடன் மாடி ஏறினேன். எதிர்பார்த்ததை மனசு விரும்பவில்லை. உடம்பு பூரா ஒரு தரிசனத்துக்குத் தயாராகிக்கொண்டு இருக்க, படிப்படியாக இஷ்டமின்றி ஒருவிதமான குரூர ஆர்வத்துடன் மேலே சென்றேன். காரிடாரில் மௌனமாகச் சிலர் நின்றிருந்தார்கள். ஓரிரண்டு பரிச்சய முகங்கள். எதையோ யாரோ செய்வதற்கு எல்லாரும் காத்திருந்தார்கள் போலத் தோன்றினார்கள்.




கடைசி அறை வாசலில் அவனை இறக்கிப் படுக்க வைத்திருந்தார்கள். முகம் கறுப்பாக இருந்தது. கழுத்தில் படுக்கைக் கயிறு இறுக்கியிருந்த இடத்தில் நீலம் பாரித்திருந்தது. கன்னங்கள் சற்று உப்பியிருந்தன. கண்கள் சொருகிப்போய் வெண்ணிற விழிகள் மட்டும் தெரிந்தன. கட்டம் போட்ட சட்டையும் டெரிகாட் பேன்ட்டும் அணிந்திருந்தான். கரிய தலைமயிர். கையில் கட்டியிருந்த டிஜிட்டல் கடிகாரம் இன்னும் உயிரோடு இருந்தது.



”எப்பப்பா?” என்றேன் அதிர்ந்து.



”ரெண்டு நாளாயிருக்கும்போலத் தோணுது. இன்னிக்குத்தான் கதவை உடைச்சுத் திறந்து பார்த்திருக்காங்க!”



நான் தயக்கத்துடன் கால்மாட்டுக்குச் சென்று அவன் முகத்தை நேராகப் பார்த்தேன். ”மை காட்! நான் இவனைச் சந்தித்திருக்கிறேன். இவனிடம் பேசியிருக்கிறேன்.”




மத்தியானம் இரண்டு மணிக்கு (சென்ற வாரம் என்று ஞாபகம்) அவன் என் அறைக்குள் கதவைத் தட்டாமல் நுழைந்தான். அன்றைக்குக் கொடுத்தாக வேண்டிய அவசர ரிப்போர்ட் டில் இருந்தேன்.




”வாட் டு யூ வான்ட்?” என்றேன் கோபத்துடன்.



”உங்ககிட்ட பேசணும் சார்” என்றான் சன்னமான குரலில்.



”வெய்ட் அவுட்ஸைட், ஐ’ல் கால் யூ.”



”அஞ்சு நிமிஷம் சார்.”



”ஐ ஸெட் வெய்ட்!”



அவனை நான் உடனே கவனித்திருக்க வேண்டுமோ? காத்திரு என்று சொன்னது தப்போ?



அரை மணிக்கு அப்புறம் அவனை மறந்தே போய்விட்டேன். மறுபடி எட்டிப்பார்த்து ”


கேன் ஐ ஸி யூ நௌ?”



”ஆல்ரைட், அஞ்சு நிமிஷம்தான்” என்றேன்.


 உள்ளே வந்து என்னைச் சற்று நேரம் பார்த்தான்.


”சார், என் பெயர் தர்மராஜன். எனக்கு உங்கள் டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றல் வேண்டும்.”




”இப்ப எந்த டிபார்ட்மென்ட்டில் இருக்கிறாய்?”



”டி.பியில்.”



”அங்கே என்ன செய்கிறாய்?”



”ப்ரொகிராமிங்.”



”எதற்காக மாற்றல் வேண்டும் என்று கேட்கிறாய்?”



”அங்கே எனக்குப் பிடிக்கவில்லை.”



”என்ன பிடிக்கவில்லை?”



”வேலை.”



”ஏன்?”



”அந்த வேலை என் திறமைக்குச் சவாலாக இல்லை.”




அந்த நிமிஷமே அவன் வேறு பட்டவன் என்று உணர்ந்திருக்க வேண்டுமோ?



”நீ என்ன படித்திருக்கிறாய்?”



”படிப்பு முக்கியமானால், நான் பி டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ்.”



”கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறாய். ப்ரொகிராமிங் செய்கிறாய். சரியான வேலையில்தானே இருக்கிறாய்?”



”அது எனக்குச் சரியான வேலையில்லை. மாடசாமிக்கும் முனுசாமிக்கும் சம்பளம், பிடிப்பு எல்லாவற்றையும் கணக்கிட கோபால் ப்ரொகிராம் எழுதுவது என் திறமைக்குத் தாழ்மையான செயலாக, என் திறமையை அவமானப்படுத்துவதாகப்படுகிறது. எனக்கு உரிய வேலை உங்கள் டிபார்ட்மென்ட்டில்இருக் கும் என்று தோன்றுகிறது.”




அவன் என் மேஜை மேல் பொருள்களை ஆராய்ந்தான். நகத்தைக் கடித்தான். ”கேன் ஐ ஸ்மோக்?” என்றான்.



 நான் உயர் அதிகாரி. என் ஆபீஸ் வம்சாவளியில் எனக்கு அதி ஜூனியர், ஜூனியர்கள் சாதாரணமாக என் முன் சிகரெட் பிடிப்பதில்லை.



அவன், என் அனுமதிக்குக் காத்திராமல் பற்றவைக்கத் துவங்கியது, எனக்கு அவன் மேல் வெறுப்பை ஏற்படுத்தியது. நான்கு தீக்குச்சிகள் செலவு செய்து, பற்ற வைப்பதை மிகச் சிக்கலான காரியமாக்கி, மிக ஆழமாகப் புகையை இழுத்து வெளிவிட்டான். பிடிவாதக்காரனை நிமிர்ந்து பார்த்தேன். சிறிய உடலமைப்பு. பிரதானமான மூக்கு. சற்றுத் தூக்கலான பற்கள். உயர்ந்த ரகத் துணியில் சட்டை அணிந்திருந்தான். கண்கள் என்னைச் சந்திக்க மறுத்து குத்துமதிப்பாக என் சட்டையின் இரண்டாவது பட்டனில் பதிந்திருந்தன.




”சார், ஒரு கம்ப்யூட்டரை டிஸைன் பண்ற அளவுக்கு என்னிடம் திறமை இருக்கிறது” என்றான்.



”என் டிபார்ட்மென்ட்டுக்கு அந்தத் திறமை தேவையில்லை. கம்ப்யூட்டரை உபயோகப்படுத் தும் திறமை போதும்.”



”ட்டிரிங் மெஷின் பற்றிய என் கட்டுரையை நீங்கள் வாசிக்க வேண்டும்.”



”அதெல்லாம் கம்ப்யூட்டர் வேதாந்தம். எனக்குத் தேவை நடைமுறை அனுபவம்.”



”உங்கள் டிபார்ட்மென்ட் டுக்கே பெருமை தரக்கூடியதாகச் சில விஷயங்களைச் செய்துகாட்டு வேன். எனக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.”



”என் டிபார்ட்மென்ட்டில் இப்போது வேகன்ஸி இல்லை.”



”சமீபத்தில் சந்திரகுமார்னு ஒருத்தனை எடுத்துக்கொண்டீர்களே?”



எனக்கு உறுத்தியது. ”சந்திரகுமார் கேஸ் வேற.”



”எப்படி?”



”எப்படி என்று விஸ்தாரமாகச் சொல்ல எனக்குச் சமயமில்லை.”



அவன் சற்று நேரம் மௌனமாக இருந்தான்.



”நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்தேன்.”



”வேகன்ஸி இல்லை.”




”வேகன்ஸி எப்போது வரும்?”



”ஆறு மாசம் ஆகும்.”



”நான் என் வேகன்ஸியுடன் டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு வந்தால் எடுத்துக்கொள்வீர்களா?”



”லுக் ஹியர், யங் மேன்! எல்லோருக்கும் அவர்கள் மன உசிதப்படி வேலை அமைவது இல்லை. இந்தத் தொழிற்சாலை ஒரு மிகப் பெரிய மெஷின். இதில் நானும் நீயும் சின்னப் பல் சக்கரங்கள். விதித்த நியதிப்படி நாமிருவரும் சுழன்றாக வேண்டும். நீ இப்போது இருக்கும் வேலையிலேயே தொழிற்சாலைக்கு உபயோகமாக எவ்வளவோ செய்யலாம். அதை யோசித்துப்பார்த் தாயா?”




அவன் யோசிக்கவில்லை.”ஒரே தொழிற்சாலை; ஒரு டிபார்ட் மென்ட்டிலிருந்து இன்னொரு டிபார்ட்மென்ட்டுக்கு மாற்றிக் கேட்கிறேன். எனக்குக் கிடைப்பது உபதேசம்!” என்றான்.




”ஆல்ரைட்! யூ மே கோ நௌ!”



”உங்கள் மூக்கின் மேல் கறுப்பாக ஏதோ ஒட்டிக்கொண்டுஇருக் கிறது” என்றான்.



நான் தன்னுணர்வுடன் மூக்கைத் தடவிக்கொண்டேன்.



”பத்து ரூபாய்க்குச் சில்லறை இருக்குமா?” என்றான்.



”வாட் டு யூ மீன்?”




”நாம் எல்லோரும் இந்த உலகத்தை ஆள வேண்டிய நேரம் வரப்போகிறது” என்றான்.




அதே சமயம், டெலிபோன் மணி அடித்து எம்.டி. என்னைக் கூப்பிட்டதால் அவனுடைய அந்த கடைசி மூன்று வாக்கியங்களின் சமகால அபத்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் அப்போதே அவனை மறந்து போனேன்.





மறுதினம் டி.பி. டிபார்ட்மென்ட் கோவர்த்தனை கான்டீனில் சந்தித்தேன். ஏதோ பேச்சை ஆரம்பிப்பதற்காக ”தர்மராஜன்னு ஒரு பையன்…”



”எ க்ராக். அவன் உங்ககிட்டயும் வந்துட்டானா?”



”ம். நேற்று வந்து டிரான்ஸ்ஃபர் கேட்டான்.”




”சரிதான். என் டிபார்ட்மென்ட்டுக்கு வந்து ஒரு மாசம்கூட ஆகலை. இதுவரைக்கும் மூணு டிபார்ட்மென்ட் மாறி இருக்கிறான். முதல்ல ஆர் அண்ட் டியில் இருந்தான். அப்புறம் ஹெட் ஆபீஸ் போனான், மேனேஜ்மென்ட் சர்வீசுக்கு. அப்புறம் டெக்னாலஜி டெவலப்மென்ட். பூனைக் குட்டியை மாத்தற மாதிரி…”




”பையன் ஒரு மாதிரி நெர்வஸா இருந்தான்.”



”இல்லை, திமிர். கொட




ுத்த வேலையை நல்லாவே செய்துடறான். அப்புறம் மேஜை மேல் காலை நீட்டிண்டு ஃபிரெஞ்சு புஸ்தகம் படிப்பான். எதிர்த்தாப்பல ஒரு பெண் உட்கார்ந்திருந்தா. அவளையே வெச்ச கண் வாங்காம ஒரு மணி நேரம் பார்த்துண்டு இருந்தானாம். அப்புறம் ”போய் காலை அலம்பிண்டு வா” என்றானாம். அந்தப் பெண் உடனே வேற இடம் கேட்டு மாத்திண்டு போயிடுத்து. வேலையில் கெட்டிக்காரன்தான். ஆனா, ரெஸ்ட்லஸ். நீ வேணா எடுத்துக்கறியா, தாராளமா போஸ்ட்டோட டிரான்ஸ்ஃபர் பண்ணி அனுப்பறேன்.”




”சேச்சே, எனக்கு வேண்டாம்பா.




அடுத்த முறை அவனை ஆபீஸர்ஸ் கிளப் மெஸ்ஸில் பார்த்தேன். ஒரு ஓரத்தில் காபிக் கோப்பை, சிகரெட் சகிதமாக ‘டைம்’ படித்துக்கொண்டு இருந்தான்.




என்னைக் கண்டவுடன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அடுத்த அறைக்குச் சென்றான்.



அவ்வளவுதான் அவனுக்கும் எனக்கும் ஏற்பட்ட சம்பந்தங்கள். இப்போது அவனைத் தரையில் கிடத்திப் பார்க்கிறேன்.



செக்யூரிட்டி ஆபீஸர் என்னை அடையாளம் கண்டுகொண்டு அருகில் வந்தார். ”ரூம் உள்ளே பூட்டியிருந்தது, சார். கதவைத் திறந்தோம். நீங்க அவன் ரூமைப் பார்க்க வேண்டும்.”




”ஏதாவது கடிதம் எழுதி வெச்சிருந்தானா?”




”இல்லை.”



”காதல் கீதல் என்று…”



”ம்ஹ¨ம்! அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.”



”ஆஸ்பிடலில் அவன் ரிக்கார்டைப் பார்த்தீர்களா? தீராத வயிற்றுவலி என்று ஏதாவது?”



”இல்லை.”



தயக்கத்துடன் அவனைத் தாண்டி அறைக்குள் நுழைந்தேன்.



அறையில் மேல்நாட்டுச் சாதனங்கள் அத்தனையும் இருந்தன. ரேடியோ, கேசட் ரிக்கார்ட் பிளேயர், ஸ்டீரியோ, சுவர்களில் வண்ண வண்ணப் படங்களில் காட்டுக் குதிரைகள் ஓடின. ஏராளமாகப் புத்தகங்கள். திறந்திருந்த மேஜையின் இழுப்பறையில் நூறு ரூபாய் நோட்டுக்கள். பிரகாசமான விளக்குகள். புதிய மின் விசிறி.




”போனவாரம்தான் வாங்கியிருக்கான் சார். பில் கிடக்குது.”



அவன் தொங்கின விட்டத்து வளையத்தைப் பார்த்தேன்.




”கட்டில்ல இருந்து இரண்டு இன்ச் தள்ளி அவன் கால் மட்டம் இருந்தது. எந்த நேரமும் அவன் தற்கொலையை ரத்து பண்ணி கட்டில்ல ஏறி நின்றிருக்க முடியும்.”

அறை முழுவதும் பார்த்தேன். ஏதாவது ஒரு பெண், ஏதாவது ஒரு காதல் கடிதம், ஏதாவது ஒரு வியாதி… ஏதாவது ஒரு சம்பிரதாயமான காரணம்?




ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பக்கத்து கிராமங்களில் செய்தி பரவி, அவசரஅவசரமாகப் பார்த்துவிட்டுப் போக வந்துகொண்டு இருந்தார்கள். பெண்கள் தலையில் செவ்வந்திப் பூ வைத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டுஇருந்தார்கள்.




”அவன் தற்கொலைக்கு நானா காரணம்! சே அபத்தம்.”



வீட்டுக்குச் செல்லும்போது என்னை அறியாமல் என் விரல் மூக்கை அழுந்த அழுந்தத் தேய்த்தது.




நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்