Showing posts with label SHORT FILM REVIEW. Show all posts
Showing posts with label SHORT FILM REVIEW. Show all posts

Monday, October 10, 2011

நாளைய இயக்குநர் - காதல், காமெடி கதைகள் - விமர்சனம்

கீர்த்தி - சார்.. குறும்படம் எடுக்கறதுல எந்த மாதிரி படங்கள் மேக்கிங்க்ல கஷ்டம்?

கே பாக்யராஜ் - என்னைப்பொறுத்தவரை ஆக்‌ஷன் ஃபிலிம் தான் கஷ்டம்.. ஏன்னா கொஞ்சம் மிஸ் ஆனாக்கூட காமெடி ஆகிடும்.. கரெக்ட் பேக்கேஜ்ல கொண்டு வரனும்.. 

சுந்தர் சி - அன்பே சிவம் மாதிரி படங்கள் எடுக்கறது கஷ்டம்.. ஆக்‌ஷன் எனக்கு ஈசியா அமைஞ்சிடுது ( அண்ணே, உங்களுக்கு ஈஸி தான் ஆடியன்ஸூக்குத்தான் கஷ்டம்) காமெடி பண்றதுதான் சிரமம் என்னை கேட்டா.. 



1. கார்த்திக் - காதல் பீஸ்சா

லவ்வர்ஸ் ஜாலியா பைக் ரைடு போறாங்க.. அப்போ ஃபிகர் சொல்லுது.. நாளை வீட்டுக்கு வா..  என் தங்கை , அப்பா வீட்லதான் இருப்பாங்க.. பேசி சம்மதம் வாங்குன்னு.. 

இவரு போனா அங்கே வருங்கால  மச்சினி மட்டும்  தனியே தன்னந்தனியே.. 

இவருக்கு சிரமம் வைக்காம அதுவே பிட்டை போடுது.. வீட்ல வேற யாரும் இல்லை..  உனக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன் அப்டினு சொல்லிட்டே பெட்ரூம்க்குள்ள போகுது.. இது குறும்படமா? குறும்புப்படமா? அப்டினு நாம யோசிக்கறப்ப.....

ஹீரோ பைக் சாவியை மறந்து பைக்லயே வெச்சுட்டு வந்துடறார்.. அதை எடுத்துட்டு வரலாம்னு போறப்ப ஹீரோயின், மாமா வந்து மச்சினி கிட்டே சிலாகிக்கறாங்க.. மாப்ளை கேரக்டர் அருமை.. ரொம்ப நல்லவர் போல.. ஃபிகர் வாலண்ட்ரியா கூப்பிட்டாலும் ஓடிப்போய்ட்டார்..

சாவியை எடுத்துக்கிட்டு திரும்பி வர்ற ஹீரோ நமுட்டுச்சிரிப்போட நிக்கறார்..

இந்தப்படத்துல பாராட்ட வேண்டிய ஒரே அம்சம் மச்சினியா வர்ற ஃபிகர் தான் நல்ல முக வெட்டு ( எத்தனை வெட்டுன்னு கேட்கப்படாது) குறும்புத்தனமான அக்னி நட்சத்திரம் அமலா (அஞ்சலி) நடிப்பு.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. மாப்ளையோட கேரக்டரை செக் பண்ண சொந்த தங்கையையே மோசமா நடந்துக்கற மாதிரி நடிக்க சொல்வாங்களா? யாராவது? நாளை மேரேஜ் ஆன பின் நிஜமாவே ட்ரை பண்ணலாம்னு மாப்ளைக்கு தோணாதா?

2. இப்போதான் முதல் டைம் பார்க்கறா ஹீரோயினோட தங்கை. பார்த்ததும் காதல் ஓக்கே, பார்த்ததும் காமம்? நாட் ஓக்கே.. 

3. இது ஒரு விளம்பர படத்தோட KNOT . அதுல ஹீரோ காண்டம் எடுத்துட்டு வரப்போவாரு.. இதுல பைக் சாவி.. 

4.  மோசமான நடத்தை உள்ள மாப்ளை ஏன் மச்சினி சோபால  பக்கத்துல உக்காரும்போது விலகி விலகி செல்கிறார்?

5. மாப்ளையை பற்றி விசாரிக்கனும்னா பொதுவா ஆஃபீஸ்ல , அக்கம் பக்கம், அல்லது நண்பர்களிடம்தான் விசாரிப்பாங்க.. யாரும் இப்படி சொந்த மகளை நடிக்க சொல்லி பார்க்க மாட்டாங்க.. 




2. குணாளன் - தொடரும்

ஒரு மாடர்ன் ஆசாமி தன் லவ்வரோட பைக்ல போறான், காதுல வாக்மேன் மாட்டி பாட்டு கேட்டுட்டே... ரொம்ப தூரம் போறான் போறான் போய்ட்டே இருக்கான்.. பார்க்கற ஆடியன்ஸ்  டென்ஷன் ஆகற வரை போய்ட்டே இருக்கான்.. 


வழில ஒரு ஆளை பார்த்து அந்த ஃபிகரு அந்தாள் செமயா இருக்காரு அப்டின்னு சொல்ல அப்போ நானும் நாளைல இருந்து ஜிம் போறேன்னு இவன் சொல்றான்..

அடுத்த நாள் காலைல 6 மணிக்கு இவன் ஜிம்முக்கு போறப்ப பாலத்துல  2 ரோடு பிரியுது.. எந்த ரோடுல போலாம்கற அறிவுப்புப்பலகை மேல் யாரோ ஏதோ போஸ்டர் ஒட்டி இருக்காங்க.. அதனால இவன் தவறுதலா ராங்க் ரூட்ல போறான்.. ஆக்சிடெண்ட்.. ஸ்பாட் அவுட்.. அவன் இறந்த ஃபோட்டோவை போட்டு ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்படுது.. 

இயக்குநருக்கு சில ஆலோசனைகள்

1. அண்ணே, சொல்ல வந்ததை நேரடியாக சொல்லவும்.. ஏன் சுத்தி வளைக்கறீங்க?

2. ஹீரோ படம் பூரா வாக்மேன் கேட்டுட்டே வர்றது எதுக்கு? ஆடியன்ஸை டைவர்ட் பண்ணவா? ம்ஹூம்..

மனம் கவர்ந்த வசனங்கள்

1.  லவ் பண்ற பொண்ணை யாராவது 2 மணி நேரம் காக்க வைப்பாங்களா?

2. நீ மட்டும் இல்ல... அவனை துவம்சம் பண்ணி இருப்பேன்..

சரி விடு.. அவன் உடம்பை பார்த்தியா? அம்சமா இல்ல?



3. குகன் சென்னியப்பன் - உயிர் வாசம் 

கோயில், திருவிழாக்களில் ஆடு , கோழிகளை பலியிடும் வேலையில் இருக்கும் ஒருவர் நேரில் ஒரு விபத்து கம் கொலை யை பார்க்கும்போது நெஞ்சில் ஈரம் பொங்க , மனித நேயத்தை வெளிப்படுத்துகிறார்.. கல்லுக்குள் ஈரம் உண்டு என்ற KNOT..  நீட் 

படத்துல முக்கியமான மேட்டர் டயலாக்ஸே கிடையாது. ஒரே ஒரு சீன்ல செல்ஃபோன்ல குழந்தை வாய்ஸ் மட்டும் கேட்கும்.. ஒருத்தனை நடு ரோட்ல ஒரு கும்பல் வெட்டி போட்டிருக்கும்.. அந்த பாடில இருக்கற ஃபோன் ஒலிக்கறப்ப ஹீரோ எடுத்து அட்டெண்ட் பண்றார்.. அந்த குழந்தை அப்பா சீக்கிரம் வாங்க.. நான் கேட்டதெல்லாம் வாங்கி வந்தீங்கதானே? அப்டினு கேக்கும்

ரோட்ல பேக் சிதறி கிடக்கும், அதுல ஹார்லிக்ஸ், பொம்மை பொன்ற குழந்தைகள் அயிட்டமா இருக்கும்.. எங்கேயும்  எப்போதும் படத்துல இதே மாதிரி சீன் வந்துட்டதால எஃப்க்ட் கம்மி, ஆனாலும் மனதை தொட்டது..

 படத்துக்கு பின்னணி இசை அழகு.. உடுக்கை அடிக்கும் ஒலி.. கோயில் திருவிழாவில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி

1. கேரக்டர்கள் ரவுடிகள், கெட்டவர்கள் என்பதை காட்ட சரக்கு அடிப்பது போல், தம் அடிப்பது போல் அவ்வளவு விலா வாரியாக காட்ட வேண்டுமா?




4. சந்த்ரு - ஆதாயம்

2 ஃபிரண்ட்ஸ்.. 2 பேருமே எழுத்தாளர்கள்... ஒருத்தன் சொல்றான்.. ரவுடி மேட்டர் கேட்டு பத்திரிக்கைல  ஃபோன் வந்திருக்கு.. எப்படி ரெடி பண்ண?
கவலைப்படாத, எனக்கு தெரிஞ்ச ரவுடி இருக்கான். அவனை பிடிப்போம்னு ஃபிரண்ட் சொல்றான்...மனசுக்குள்ள ஃபிரண்டுக்கு பொறாமை, தனக்கு கிடைக்காத பேரும் , புகழும் அவனுக்கு மட்டும் கிடைச்சிருச்சேன்னு.. 

ரவுடியை மீட் பண்ணி தகவல் சேகரிச்சு ஆர்ட்டிகிள் ரெடி பண்ணிடறாங்க.. பப்ளிஷ் ஆகுது.. 

இப்போ ரவுடியோட இடத்துல பார்ட்டி.. சரக்கு அடிக்கறாங்க எல்லோரும்.. திடீர்னு ரவுடி தன்னை பற்றி ஆர்டிகிள் எழுதுன ரைட்டரை கொலை பண்ணிடறான்,,. கொல்றப்ப என்னைப்பற்றியாடா எழுதுனே? அப்டி ஒரு பஞ்ச் டயலாக் வேற.. அப்புறம் பார்த்தா அவனை கொலை பண்ணச்சொன்னதே ரைட்டரோட நண்பன் தான் , பொறாமையின் காரணமா அப்டி பண்ண வெச்சுட்டானாம்.. 

இயக்குநருக்கு சில கேள்விகள்

1. ராஜேஷ்குமார் மாதிரி பிரபலமான ஒரு எழுத்தாளரை கூடவே இருக்கும் நண்பர் கம் ரைட்டர்  பொறாமையின் காரணமாய் கொலை செஞ்சா ஏத்துக்கலாம்... ஊரில் உள்ள 1000க்கணக்கான ஃபிரீ லான்ஸ் ரைட்டரில் இவரும் ஒருவர், இவரைக்கொல்வதால்  அவருக்கு சான்ஸ் கிடைச்சுடுமா? என்ன? இதுக்காக ஒரு கொலையா? அவ்வ்வ்

2. பணம் வாங்கிட்டு கொலை பண்ணும் ரவுடி எதுக்காக கொலை செய்யறப்ப என்னை பற்றியாடா எழுதுனே? அப்டினு டயலாக் பேசறாரு?

பெஸ்ட் ஃபிலிம் உயிர் வாசம்

பெஸ்ட் டெக்னீஷியன் -ஆதாயம் கேமரா மேன்

பெஸ்ட் ஆக்ட்ரஸ் - காதல் பீஸ்சாவில் கில்மா மச்சினியா வந்ததே ஒரு 70 மார்க் ஃபிகரு அதுக்கு

டிஸ்கி - கே பாக்யராஜ் சொன்ன ஒரு மலரும் நினைவு.. வளர்ந்து வரும் எல்லா இயக்குநர்களூம் மனசுல வெச்சுக்கனும்.. வீட்ல விஷேசங்க படத்துல அவரோட மனைவி இறந்ததும் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் குடுக்கப்போறார்..

சார்.. என்னோட முதல் மனைவி இறந்துட்டாங்க....

அந்த சீனை பார்த்துட்டு ஒரு ரசிகர் கேட்டாராம்.. சார்.. நீங்க இப்போ மனைவியை இழந்திருக்கீங்க, முறைப்படி மனைவி இறந்துட்டாங்கன்னுதானே கேஸ் தரனும், முதல் மனைவி இறந்துட்டாங்கன்னா அப்போ 2 வது மனைவிக்கு ஆல்ரெடி பிளானா?ன்னு கேட்டாராம்.. 

டைரக்டர்கள், அசிஸ்டென் டைரக்டர்கள்க்கு தோணாத பல லாஜிக் அத்து மீறல்கள் சாதாரண ரசிகனுக்கு தோணலாம்.. அதனால ஜாக்கிரதை என்றார்..

Monday, August 15, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - காமெடி கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர் நிகழ்ச்சில வாரா வாரம் ஆர்டினரியா கதைகள் வர்றப்போ ஹாய் மதன் எப்படி கமெண்ட் தந்தாரோ அதே பாணில தான் இப்போவும் ஃபாலோ பண்றார்.ஷூட்டிங்க் எடுத்தது ஒரே நாளாக இருந்தாலும் ஃபைனல்ல வர்ற 9 கதைகளும் வாரா வாரம் ம் 3 கதைகள் வீதம்  3 வாரம் ஒளிபரப்பாகி 4 வது வாரம் தான் எது பெஸ்ட்னு செலக்‌ஷன் ஆகும். இவர் அந்தந்த வாரத்துல வந்த 3 கதைகள்ல 2 தேறாதுன்னு ஓப்பனா சொல்லிடறாரு.. இதனால எது ஃபர்ஸ்ட் வரப்போகுதுன்னு கெஸ் பண்ணிட முடியும்.


அதே மாதிரி டிரஸ்ஸிங்க் சென்ஸ் 10% கூட இல்லாத மொக்க ஃபிகர் தொகுப்பாளினி படம் எடுத்த ஒவ்வொரு குறும்பட இயக்குநர்ட்டயும் போர் அடிக்கற மாதிரி ஒரே கேள்வியைத்தான் கேட்கறாரு. அது - உங்க படம் எப்படி வந்திருக்கு? வின் பண்ணிடுவீங்கன்னு நம்பிக்கை இருக்கா? இது எப்படி இருக்குன்னா தியேட்டர்ல , இண்ட்டர்வெல்ல ,வெளில ,கேண்ட்டீன்ல தெரிஞ்சவங்க பார்க்கறப்ப என்ன பேசறதுன்னு தெரியாம அப்புறம் தியேட்டருக்கா?  படத்துக்கா?  என அசடு வழிவது போல் தான் இது. பாப்பாவுக்குத்தான் இதெல்லாம் தெரியலைன்னா இயக்குநர் இதை கரெக்ட் பண்ணக்கூடாதா? ( ஐ மீன்  பாப்பாவோட இந்த ஹேபிட்டை. )



1. தமிழ் சீனு -  7 1/2  ( ஏழரை )

குடுகுடுப்பைக்காரன் எதேச்சையா ஒரு வீட்ல வந்து “ உங்களுக்கு ஏழரை ஸ்டார்ட் ஆகிடுச்சு, இனி கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் எல்லாம் கோவிந்தாதான்,ஓட்டாண்டி ஆகப்போறீங்கன்னு சொல்றான். அதே மாதிரி சம்பவங்கள் நடக்குது.. வீட்டுக்கு டொனேஷன் கேட்டு வந்தவங்களுக்கு 100 ரூபா குடுக்கறதுக்கு பதிலா அப்பா ஃபோன்ல பேசறப்ப நடந்த மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க் கால்குலேஷன் கான்வெர்சேசனால் ( அடேங்கப்பா. எம்புட்டு நீளமான வாக்கியம் !!) லட்ச ரூபாயை தாரை வார்த்த மகன் பயந்து ஊரை விட்டே ஓடிறாரு.


7 1/2 வருசங்கள் கழிச்சு மகன் ரிட்டர்ன் வர்றப்ப வீட்ல அம்மா தான் இருக்காங்க, அப்பா அவுட் ஆஃப் ஸ்டேஷன். அப்போ ஒரு ஃபோன் வருது. அப்பாவை கடத்தி வெச்சிருக்கோம், 20 லட்சம் கொடுத்தா ஆளை மீட்டுக்கலாம்னு. உடனே ரூ 20 லட்சம் கொண்டு போய் ஸ்மெக்ளிங்க் பார்ட்டிக்கிட்டே கொடுத்தா ஆள் மாறாட்டம், கடத்தப்பட்டது இவரோட அப்பாவே இல்லை. பக்கத்து ஊர் பிரசிடெண்ட். 


அப்பா வந்தா அடிப்பார்னு மகன் இப்பவும் ஆள் எஸ்கேப்.. 

பல லாஜிக் மீறல்களோட கதை இருந்தாலும் ஜாலியா போச்சு.. முதல் பரிசு வாங்க வாய்ப்பில்லை. ஆனா படம் ஓக்கே ரகம் தான்

ரசித்த வசனங்கள்

1. ஹூம், நல்லாருந்த குடும்பத்துல குடுகுடுப்பை நாதஸ்வரம் வாசிச்சுட்டு போய்ட்டானா?

2. மணி எவ்ளவ்ம்மா?       7 1/2 


என்னது? எட்டரை  ஆகிடுச்சு?

சாரி, வாட்ச் நின்னுடுச்சு போல.. 

3. ம்க்கும், ஏழரை லட்சம் கடன் பாக்கி , இந்த லட்சணத்துல அவர் கைல துப்பாக்கி.. விளங்கிடும். 

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. 20 லட்சம் பணயப்பணம் கேட்ட அடுத்த நொடியே வீட்டின் பீரோவில் இருந்து அவ்வளவு பணமும் ரெடி பண்ணிடறாங்க. எப்படி? இந்த காலத்துல ஆ ராசா வீட்ல கூட அவ்வளவு பணம் கேஷா இருக்காதே? பேங்க்ல தானே இருக்கும்?

2. பொதுவா பணயப்பணம் கை மாறும்போது கடத்தப்பட்ட ஆள் இருக்காரா அங்கேன்னு செக் பண்ணுவாங்க.. அது பண்ணலை.. ஏன்?

3. அப்பாவை கடத்திட்டாங்கன்னுதுமே   அவர் செல் நெம்பருக்கு ஃபோன் போட்டு கிராஸ் செக் பண்ணவே இல்லையே?


இதுல அப்பா கேரக்டர்ல  ஸ்டண்ட் நடிகர் அழகு நடிச்சிருந்தார்.. இந்தப்படத்துக்கு பிரில்லியண்ட் காமெடின்னு பிரதாப்போத்தன் பாராட்னார்.ஹாய் மதன் படம் ஓக்கே, ஆனா இன்னும் காமெடி நல்லா ட்ரை பண்ணி இருந்திருக்கலாம்னு கமெண்ட் பண்ணாரு.



2. ராகேஷ் - ஹீரோ 

சின்ன வயசுல   இருந்து ஸ்பைடர்மேன், சூப்பர்மேன்னு காமிக்ஸ் கதைகள் படிச்சு வளர்ற ஒரு பையன் ஒரு கட்டத்துல பூமியை  வேற்றுக்கிரக வாசிகள் ஆக்ரமிச்சுட்டாங்க என்றதும் ஒரு உயரமான கட்டிடத்துல இருந்து தொப்னு குதிக்கறாரு. அவர் சூப்பர் மேன் ஆனாரா? சுடுகாட்டுப்பொணம் ஆனாரா? என்பது சஸ்பென்ஸ்.
ஃபேண்டசி வகையறா படம் என்றாலும் காதில் பூ சுற்றும் கதை தான். காமிரா ஆங்கிள்கள், ஹீரோவின் பாடி லேங்குவேஜ் எல்லாம் கந்த சாமி விக்ரம் நினைவுபடுத்தியது.


நினைவில் நின்ற வசனங்கள்


1. மரணம் தான் எல்லா விஷயங்களுக்கும் முடிவு என்றால் அது என் விஷயத்தில் தொடக்கமா? முடிவா?ன்னு தெரியலை. 

2. எப்போதெல்லாம் உலகை இருள் சூழ்கிறதோ அப்போதெல்லாம் ஒரு ஒளிக்கீற்று வந்து பூமியை காப்பாற்றும் அரிய சக்தியை உருவாக்கும்..

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. சூப்பர்மேன் ஆனதா கற்பனை பண்ணிக்கும் ஹீரோ எடுத்ததும் 30 மாடிக்கட்டிடத்துல இருந்து குதிச்சுப்பார்த்து ஏன் ரிஸ்க் எடுக்கனும்? 10 அடி தூரத்துல இருந்து முதல்ல குதிச்சிருக்கலாமே?

2. வேற்றுக்கிரகவாசிகள் பூமியை சூழ்ந்துட்டாங்க என்றதும் மக்களின் பதட்டம் + போலீஸ் ஆக்‌ஷன் சரியா காட்டலையே?


இதுக்கு கமெண்ட் சொன்ன ஹாய் மதன் ஒரே ஷாட் அடிக்கடி ரிப்பீட் ஆகுதுன்னார். நோ கிளாரிட்டி அப்டின்னு பிரதாப் சொன்னார். இந்தப்படமும் முதல்ல வராது. 



3. கல்யாண் - புதியவன் 

இது செம கலக்கலான கதை. ஒருத்தன் பைக்ல போறான், வழில ஒரு ஆள் லிஃப்ட் கேட்கறான். அவனும் இவனை ஏத்திக்கறான், வழி நெடுக லிஃப்ட் கேட்டவன் தொண தொணன்னு பேசிட்டே வர்றான்.. லிஃப்ட் கொடுத்தவனுக்கும் சரி , படம் பார்க்கறவங்களூக்கும் சரி செம கடுப்பா இருக்கு. 

பாதி வழிலயே இறக்கி விடறான்.. அப்புறம் இவன் சாரி கேட்டு இனி எதும் பேசலை அப்டின்னு பிராமிஸ் பண்ணிட்டு  மறுபடியும் பைக்ல தொத்திக்கறான். இப்போ டிராஃபிக் போலீஸ் வண்டியை நிறுத்தி லைசன்ஸ், ஆர் சி புக் கேட்குது. 

பைக் ஓட்டிட்டு வந்தவன் பம்பறான். லிஃப்ட் கேட்டவன்  அப்போதான் பைக்கோட ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸை போலீஸ்ட்ட தர்றான். அப்போதான் தெரியுது.. லிஃப்ட் கொடுத்தவன் தான் பைக்கை திருடுனவன், லிஃப்ட் கேட்டவன் பைக் ஓனர்.. நல்ல ட்விஸ்ட்.. 

திருடனை மன்னிச்சு விட்டுடறான். 

கலக்கலான காமெடி வசனங்கள்

1. எங்கே போறீங்க?

இண்ட்டர்வியூக்கு.

இது உங்களுக்கு எத்தனாவது இண்டர்வியூ?

30 வது இண்ட்டர்வியூ

 கேட்கறேனேன்னு கோவிச்சுக்காதீங்க.. இண்ட்டர்வியூ போறதுதான் உங்க குலத்தொழிலா?

2. மார்க்கெட்டிங்க் தொழில்ல மட்டும் கஸ்டமர் எவ்வளவு கோபப்பட்டாலும் நாம் ரிலாக்ஸா இருக்கனும்.

3. சார். நீங்க இண்ட்டர்வியூவுக்கா வந்திருக்கீங்க? 

இல்லீங்க, பால் வாங்க வந்திருக்கேன்.  கேட்கறான் பாரு கேள்வி.

இந்தப்படத்துல ஹீரோவா நடிச்சவர் செம யதார்த்தம்.. பைக்ல போறப்ப நடக்கற சம்பாஷணகள் ஆரம்பத்துல தேவை அற்றதா தோன்றினாலும் சஸ்பென்ஸை மெயிண்ட்டெயின் பண்ன அந்த எஸ்டாபிளிஸ்மெண்ட் தேவைப்படுது.


இந்த வாரத்தில் வந்த 3 படங்கள்ல மேக்கிங்க் ஸ்டைல், கதை , திரைக்கதை ,வசனம்  உட்பட எல்லாத்துலயும் இதுதான் பெஸ்ட், அதுவும் இல்லாம போனவாரம் வந்த 3 கதைகளை விட இதான் பெஸ்ட். சோ இந்த படத்துக்கு முதல் அல்லது 2 வது பரிசு சான்ஸ் உண்டு..

Wednesday, August 10, 2011

நாளைய இயக்குநர் - மெகா ஃபைனல் - கலக்கல் கதைகள் - விமர்சனம்

நாளைய இயக்குநர்  ஃபைனல்க்கு போறதுகு முன்னால அதனோட 3ஆம் பாக செலக்‌ஷனுக்கான விளம்பரம் பற்றி சின்னதா ஒரு விமர்சனம். கே பாக்யராஜ் ரெடி ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் அப்டினு சொல்லி  சில டயலாக் பேசறார்.. இந்தியாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியரும், பல வெள்ளி விழாப்படங்களின் இயக்குநருமான அவர் இந்த 2 நிமிட விளம்பரப்படத்துல  சோபிக்க முடியலைங்கறதைப்பார்த்தா வருத்தமா இருக்கு, ரொம்ப செயற்கையான முக பாவனைகள்.

ஃபைனல் நிகழ்ச்சிக்கு பல வி ஐ பி கள் எல்லாம் வந்திருந்தாங்க. பாலு மகேந்திரா,பாண்டிராஜ் என பல வி ஐ பி களை பார்க்க முடிந்தது. இவங்க எல்லாம் அந்த நிகழ்ச்சியை பார்க்கறதால படைப்பாளிகளுக்கு இன்னும் படம் எடுக்க ஊக்குவிப்பா அமையும்.

ஹாய் மதன் வந்ததும் சொன்ன ஒரு பஞ்ச் நல்லா இருந்தது. இந்த ஃபைனல்ல யார் வின் பண்ணப்போறாங்கன்னு நிறையப்பேர் கேட்கறாங்க.ஏற்கனவே வின் பண்ணுனவங்க தான் இங்கே வந்திருக்காங்க என்று அவர் சொன்னதும் அனைவரும் ஒரு புத்துணர்ச்சியோடு கிளாப்ஸ்..


1. திருப்பூர் ராம் - சைனா டீ ( காமெடி சப்ஜெக்ட் )

ப்பனிங்க் ஷாட்டே டெர்மினேட்டர் டீக்கடைல ஆரம்பிக்குது. புது வகை டீத்தூள் விற்கும் ஆள் கடைக்கு வர்றான். பணம் எதுவும் வேணாம், ஒரு டீ போட்டு கஸ்டமருக்கு குடுங்கங்கறான்.அது போலவே செஞ்சா டீ குடுத்தவன் ஆள் அவுட். 

பதறிப்போன டீக்கடை ஓனர் டெட்பாடியை வண்டில வெச்சு எடுத்துட்டுப்பொறாரு.. ஒரு மறைவான இடத்துல அவரை டிஸ்போஸ் பண்ணிட்டு அவங்க ரிட்டர்ன் ஆகறப்ப போலீஸ் பார்த்துடுது. டீ குடிச்சு செத்துப்போனதா நம்பப்படும் ஆள் உண்மைல சாகலை. மயக்கம். கடன் தொல்லை தாங்காம விஷம் குடிச்சவர் அந்த டீயை குடிச்சதாலதான் பிழைச்சாரு.. 

இப்போ அந்த டீக்கு ஏக கிராக்கி. 

கேட்க ரொம்ப சாதாரண கதையா தெரியும் ,ஆனா விஷூவலா பார்க்கறப்ப செமயா இருந்தது. 

மனம் கவர்ந்த சில வசனங்கள்

1. நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது

யோவ் , குடுகுடுப்பை,வாத்தியத்துக்கே வக்கில்லாம தானே வாயால வாசிக்கறே.!!?
2. ஊர்ல இருக்கற எல்லாருமே எங்க கடைல தான் டீ குடிப்பாங்க./. 

அடேய், ஊர்ல மொத்தமே 32 பேர்தான். 

3. இந்த பஞ்சாயத்து என்னா சொல்லுதுன்னா போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்..

ஆமாமா.. நானும் அதை ஆமோதிக்கிறேன், போஸ்ட் மார்ட்டம் பண்ணீயே ஆகனும்.. யோவ். ஒரு சந்தேகம். போஸ்ட் மார்ட்டம்னா என்ன?

4. விஷத்தை முறியடிக்கும் டீ இது .. விலை ரூ 50

இந்தாய்யா ரூ 500


இதுல நடிச்ச எல்லாருமே ஒரு கிராமத்து ஆளுங்க, நேட்டிவிட்டி இருந்தது.. பார்வையாளர்களிடையே நல்ல வர்வேற்பு பெற்ற இந்தப்படம் ஏனோ ஜட்ஜூங்களை அவ்வளவா கவரலை.. ஆனா அதை ஓப்பனா கமெண்ட்டி இருக்க தேவஃஇ இல்லை. ஏன்னா ஃபைனல் என்பதால் யார் வின்னர் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை மெயிண்டெயின் பண்ண வேணாமா?



2. . ரவிகுமார் - ஜீரோ கிமீ  ( ஃபேண்ட்டசி)

வேலை வெட்டி இல்லாத ஹீரோ எதேச்சையா திருப்பூர் டூ சென்னை போக ஒரு  மாயாஜால ரூட் கண்டுபிடிக்கறாரு..  அதாவது குறிப்பிட்ட இடத்துல ஆள் உள்ளே போனா அடுத்த செகண்ட் அவர் சென்னைல இருப்பார். உடனே அந்த இடத்தை விலைக்கு வாங்கறார்..

தனது பாரம்பரியம் மிக்க வீட்டை விக்கறார். ஜோசியர் தான் அந்த வீடு ராசி இல்லைன்னு ஐடியா குடுக்கறார். வீட்டை வித்து கிடைச்ச பணத்துல தான் இந்த மேஜிக் இடம் வாங்கறார். வாங்கி ட்ராவல் ஏஜென்சி நடத்தறார்.. செம காசு.. ரூ 500 டிக்கெட்.. திடீர்னு ஹைவெஸ் டிபார்ட்மெண்ட்ல வந்து அந்த இடத்தை அபகரிச்சுக்கறாங்க..

ஹீரோவோட வீட்டை விலைக்கு வாங்குன சேட்டு ராசி இல்லைன்னு ஓ சி ல அதை ரிட்டர்ன் பண்ணிடறாரு. இப்போ தன் வீட்டுக்கு போற ஹீரோ பரண்ல அமெரிக்கா போற மேஜிக் ரூட் கண்டு பிடிக்கறார்..

அப்பாவின் சொத்து விற்கக்கூடாதுங்கற மறைமுகமான நீதியோட ,அட, இப்படி நடந்தா எவ்வலவு நல்லாருக்கும் என பார்வையாளர்களை ஏங்க வைத்த ஒன் லைன் கற்பனை.  வெல்டன் ரவிக்குமார்.

இந்த படம் முதல் பரிசு வாங்கலைன்னாலும் நிச்சயம் 2 வது அல்லது 3 வது பரிசு வாங்குவது நிச்சயம்.. மொத்தம் 9 படம் . இந்த வாரம் 3 படம். இனி 6 படம் வர இருக்குது.




3. தீபக் - ஆசை 

ஒரு தூக்கு தண்டனைக்கைதியின் கடைசி நிமிடங்கள் எப்படி இருக்கும்? என்பதுதான் படத்தோட ஒன்லைன்.. ஆனானப்பட்ட ஆட்டோ சங்கர் ஆகட்டும், வீரப்பன் ஆகட்டும் அவங்களோட கடைசி நிமிடங்களை பார்க்கும்போது நமக்கு இரக்கம் வரத்தான் செய்யுது. அது மனித மன இயல்பு..

சின்ன வயதில் 13 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் பண்ணுன கொடூரமான ஆள் கேஸ் நடந்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகையில் தனது கடைசி ஆசையாக தனது மகளிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்ல சொல்கிறார்.

இதே போல் 8 தூக்கு தண்டனை களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் அசைன்மெண்ட் எடுத்துக்கொண்ட ஒருவர் அதை நிறைவேற்றுகிறார். இதான் கதை..

மனம் கவர்ந்த வசனங்கள்

1. சோத்துல உப்பே இல்லையே? சாகப்போறவனுக்கு சொரணை இருக்கக்கூடாதுன்னு போடாம விட்டுட்டீங்களா?

2. மனுஷனுக்கு தோணும் ஆசை தான் அவன் தப்பு பண்ணக்காரணம்.. ஆசைப்படாத மனுஷனே உலகத்துல கிடையாது..




இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்

1. தூக்குதண்டனைக்கைதிகளின் கடைசி ஆசையை நிறைவேற்றும் கேரக்டர்ல நடிக்கறவர் “ என் பேரு அகிலன்” அப்டின்னு சொல்றப்ப தன் நெஞ்சுல கை வெச்சு சொல்றாரு.. இது 25 வருடங்களுக்கு முன்னால் நாடகங்களில் கையாளப்பட்ட பாணி..  அதுவும் 4 டைம் அதே மாதிரி சொல்றப்ப இயக்குநரின் அனுபவம் இன்மை தெரிகிறது..

2. தூக்கு தண்டனை கைதி தன் மக கிட்டே மன்னிப்பு கேட்கறதா சொன்னது தன்னால் கெடுக்கப்பட்ட பெண் மூலம் பிறந்த வாரிசா? அல்லது இது வேறா? என்பது  தெளிவா சொல்லப்படலை.. ஒரு வேளை தான் கெடுக்கப்பட்டதால் பிறந்த பொண்ணு கிட்டே மன்னிப்பு கேட்பதாக சொல்லி இருந்தால் கதையில் இன்னும் அழுத்தம் கூடி இருக்கும்..

இந்தப்படம் பார்க்க உருக்கமா இருந்தாலும் லாஜிக் மிஸ்டேக்ஸ், கதை கரு ஆகிய விஷயங்களில் சராசரி எனும் நிலை தான்..


Monday, May 23, 2011

நாளைய இயக்குநர் - சைக்கோ த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihWKj9-NVkXiBzK0qlVTypn8jpsN2OtjvAUSPSQtji5z_hLzFH4g6u0EmJp8wgOFhahwhaCn7XluJDwSbA_3YK0mNdrUdTahWQQi7fRmRfOMDCDF-1htB8GV4pNwXQxXzjE0zv5G3dNguY/s1600/cowboy2.jpg 

நாளைய இயக்குநர் நிகழச்சில இன்னைக்கு (22.5.2011)ஹாய் மதன் கோட் சூட்லயும் ,பிரதாப் போத்தன் ஃபார்மல் டிரஸ்லயும் வந்தாங்க.. ஹாய் மதன் ரெகுலரா ஒரு ஓப்பனிங்க் இண்ட்ரோ தொகுப்பாளினி கிட்டே கொடுக்கறாரு.. நல்ல விஷயம் தான். ஆனா அதை அவர் பிரதாப் கிட்டேயே சொல்லலாம். ஏன்னா 1. தொகுப்பாளினி கிட்டே பேசறப்ப அவரோட பாடி லேங்குவேஜ்ல ஒரு செயற்கைத்தன்மையும்,லைட்டான அலட்டலும் வெளிப்படுது 2. அந்தப்பொண்ணு அவர் அளவு நாலெட்ஜ் இல்ல.. ஒர்த் இல்ல.. சும்மா கிளாமருக்காக ஒப்புக்கு சப்பாணி மாதிரி மப்புக்கு ஊறுகாய் மாதிரி.. 

இன்னைக்கு தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் போன வாரம் போட்டிருந்த அளவு கேவலமா இல்லை.. ஓரளவுக்கு கேவலமா இருந்தது.. கிராமங்கள்ல பொண்ணுங்க நைட்டி போட்டுக்கிட்டே காலைல மளிகைக்கடைக்கு வந்துடுவாங்க.. அந்த மாதிரி .. பார்க்கற மத்த ஆண்களுக்கு சந்தோஷம்.. அந்த பொண்ணோட புருஷனுக்கு சங்கடம்.. ஹி ஹி

அப்புறம் அந்த பொண்ணு ஜட்ஜ்ங்களை நீங்க போய் உங்க சீட்ல உக்காருங்கன்னு சாதாரணமாத்தான் சொல்றாங்க.. ஆனா எனக்கு பார்க்க அவங்க ஆர்டர் பண்ணுன மாதிரி இருக்கு.. மேல்சாவனிஷம் என்பது இது தானோ?


1. காஃபி - தீபன்

பொதுவா சைக்கோ திரில்லர் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கறதில்லை.. ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும்( ஒரு வேளை நானும் ஒரு சைக்கோவோ?#டவுட்டு)ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ க்ளோஷப்ல நம்ம கிட்ட கதை சொல்றார். அவர் காஃபிக்கு அடிமை.. காஃபில மட்டும் 43 ஃபிளாவர் இருக்கு.. என்னால காஃபி சாப்பிடாம இருக்கவே முடியாது.. ப்ளா ப்ளா.. இத்யாதி,,

அவரோட மனைவி லேட் நைட்ல வீட்டுக்கு வர்றப்ப ஏன் லேட்?னு கேட்கறார். அதுக்கு மனைவி உன்னை மாதிரி சைக்கோவுக்கு அதை கேட்க உரிமை இல்லை.. அப்டின்னு சொல்றப்பவே பாப்பா எங்கேயோ போய்ட்டு வந்திருக்கு தப்பான்னு தெரிஞ்சிடுது.. தொடரும் உரையாடல்ல அவ தொடர்ந்து அவனை கேவலப்படுத்திட்டே இருக்கா.. 

மனைவி கேவலப்படுத்துனா  கணவன் கண்டுக்கக்கூடாதுங்கற பேசிக் நாலெட்ஜ் இல்லாம ஒரு கட்டத்துல அவளை போட்டுத்தள்ளிட்டு காஃபி குடிக்கற வேலையை தொடர்றான். 

இந்த ஷாக்கை விட க்ளைமாக்ஸ் ஷாக் ஒண்ணு இருக்கு.. 

இது வரை நம்மை பார்த்து கதை சொல்லிட்டு இருந்த  ஹீரோவோட முகம் பார்க்கும் கேமரா அப்படியே திரும்புது.. எதிரே ஒரு டாக்டர்.. 

ஏன் டாக்டர்..? எனக்கு காஃபி பிடிக்கும்னு தெரிஞ்சும் எனக்கு குடுக்காம நீங்க மட்டும் குடிக்கலாமா?

பார்த்தா டாக்டர் வாய்ல சிசர் ஏறி செத்துக்கிடக்கார்.. அந்த லூஸ் அவரையும் போட்டு தள்ளிட்டான் போல..

 கதை ஓக்கே.. நீட் டைரக்‌ஷன்.

ஆனா ஹாய் மதனும், பிரதாப்பும் இந்த கதை எந்தளவு சாத்தியம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. கமல் ஒரு படத்துல பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுன்னு சொல்வாரு.. அந்த மாதிரி சைக்கோ கதைகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு கற்பனை.. அதை ஜாலியா எடுத்துக்கனும்..

இந்தப்படத்துக்கான கே பாலச்சந்தர் கமெண்ட்.. - சிம்ப்பிள் & இண்ட்ரஸ்ட் நேரேஷன் ஆனா நம்பகத்தன்மை குறைவு..


2.  மனு தர்மம் - அருண் வர்மா

ஹீரோவுக்கு ஏதோ பணத்தேவை.. யாருக்கோ ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டிய கட்டாயம்.. அந்த டைம்ல பாத்ரூம்ல அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட்.. யாரோ அவரை காயப்படுத்திட்டாங்க..  அங்கே போனா அவன் கண் முன்னால அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கார். அவன் நினைச்சா காப்பாத்தலாம். ஆனா அவர் இறந்துட்டா இன்சூரன்ஸ் பணம் வரும்னு ஹீரோ நினைச்சு காப்பாத்த முயற்சியே பண்ணலை.. 

அப்புறம் ஹீரோவை குற்ற உணர்ச்சி வாட்டுது.. தன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லி  அம்மாவை நல்லா பாத்துக்கன்னு சொல்லிட்டு குற்ற உணர்ச்சில தற்கொலை பண்ணிக்கறார்.. 

இது கொஞ்சம் விபரீதமான கதை தான். இது பார்க்கறவங்க மனசை பாதிக்கும்.. இதை எல்லாம் சென்சார் பண்ணனும்னு தோணுது.. ஏன்னா பார்க்கறவங்க மனசுல 1000 பேர்ல ஒருத்தருக்காவது அப்டி பண்னலாமோன்னு ஒரு எண்ணம் வந்தாலே டேஞ்சர் தான்.. 

திரைக்கதைல கொஞ்சம் குழப்பம்.. கேமரா சுமார்.. பேசற வசனம் புரில.. ( ஒரு வேளை மணி ரத்னம் மாதிரி ட்ரை பண்றாரோ என்னன்வோ?)


3.  அருண் - 00.00 ( 12 மணி மிட்நைட்)

இந்தக்கதை செம த்ரில்லிங்கா இருந்தது.. 

ஒரு பொண்ணு மிட்நைட்ல ஒரு தனிமையான இடத்துல வெயிட்டிங்க்.. அப்போ 2 ரவுடிங்க அவளை பலவந்தமா கடத்திட்டு போய் பக்கத்துல இருக்கற ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல  அட்டெம்ப்ட் ரேப்பிங்க்.. 
அப்போ ஒருத்தன் அங்கே எண்ட்ரி ஆகறான். அப்பாடா.. ஹீரோன்னு பார்த்தா அவனும் வில்லன்.. அவன் அந்த 2 பேர்ட்ட சனடை போட்டு அவளை அடைய நினைக்கறான்..

சேசிங்க்ல ஒரு கட்டத்துல எல்லாரும் செத்துடறாங்க.. அப்போ அந்த பொண்ணோட ஆன்மா மட்டும் சொல்லுது

” எனக்காக அவன் காத்துட்டு இருப்பானே ? நான் எப்படி போவேன்?”

அந்த கதறல் இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு..

 இந்தப்படத்தை கே பாலச்சந்தர் ரொம்பவே பாராட்னார்.... 

கே பாலச்சந்தர் பாராட்றப்ப அதுல உள்ளார்ந்த சந்தோஷம் தெரியுது.. சக படைப்பாளியை  பாராட்டனும், கவுரவிக்கனும் என்ற பக்குவமும், அனுபவ ஆற்றலும் அவர் கிட்டே வெளிப்படுது.. 
ஹாய் மதன் பாராட்றப்ப அவரோட மேதா விலசத்தை லைட்டா வெளிப்படுத்திடறாரு.. அதாவது அவர் பார்த்த மற்ற ஃபாரீன் படங்களை உதாரணமா காட்டி தனக்கு பல படங்கள் பார்த்த அனுபவம் இருக்குன்னு சொல்லாம சொல்றார்..

பிரதாப் போத்தன் பாராட்றதே இல்லை .. பெரும்பாலும்.. அப்படியே பாராட்னாலும் வேண்டா வெறுப்பா முகத்தை வெச்சுக்கறார்.. பாவம் வீட்ல எப்பவும் சண்டை போல..

Wednesday, May 11, 2011

நாளைய இயக்குநர் - ஆக்‌ஷன் கதைகள் 3 - விமர்சனம்

P8050080.JPG
8.5.2011 எலக்‌ஷன் ரிசல்ட்க்கு முன் வரும் கடைசி நிகழ்ச்சி இது. கே பாலச்சந்தர் சாரின் பேட்டியை கட் பண்ணி கட் பண்ணி 3 கதைகளுக்கும் நடு நடுவே கொஞ்சம் கொஞ்சம் போட்டாங்க.. இது எப்படி இருந்துச்சுன்னா ஸ்கூல் அல்லது காலேஜ் ஃபங்க்‌ஷன்ல பரிசு வழங்கும் நிகழ்ச்சியை ஆங்காங்கே கலை நிகழ்ச்சிக்கு நடுவே போடற மாதிரி.. வேற வழி.. நம்ம ஜனங்க டேஸ்ட் அப்படி.. ம் ம் .பேட்டில மதன் சார் தான் எல்லா கேள்வியையும் கேட்டாரு.. பிரதாப் போத்தன் எந்த கேள்வியும் கேட்கலை. ஆனா அவருக்கு 7 தடவை க்ளோசப் ஷாட்வேற.. அண்ணன் கமல் கெட்டப்ல இருந்தாரு..ஹி ஹி (அண்ணி மட்டும் ரசிச்சிருப்பாங்க ஹா ஹா )


தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் பற்றி சொல்லியே ஆகனும்.சமீபத்துல இவ்வளவு கேவலமான டிரஸ்ஸை நான் பார்க்கவே இல்ல.(அதான் இப்போ பார்த்துட்டியே ? அப்புறம் என்ன?)பொண்ணுங்க மாடர்ன் டிரஸ் போடறது தப்பே இல்லை.. ஆனா அது அட்ராக்ட்டிவ்வா இருக்கனும்.சரி.. விடுங்க.. இதுக்கு மேல ஏதாவது சொன்னா அது எங்க இஷ்டம்..நீ விமர்சனம் பண்ண வந்தது நிகழ்ச்சியையா? டிரஸ்ஸையா? அப்படிம்பாங்க.. ஏற்கனவே நமக்கு ஏழரை நடக்குது.. ( அது ஏன் நடக்குது..? சீக்கிரம் ஓடிட்டா தேவலை)


1. ராகேஷ் - 50 -50 ( ஃபிஃப்டி ஃபிஃப்டி)

பில்லா,ரன் லெவலுக்கு பில்டப் மற்றும் ஃபைட் சீனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட முதல் குறும்படம் என்ற அளவில் இது முக்கியமான படம்.எனக்கு தெரிந்து ஒரு ஷார்ட் ஃபிலிமில் இந்த அளவு பர்ஃபெக்ட் ஃபைட் சீன் வந்ததே இல்லை. அதே போல் ஹீரோ பில்டப்புக்கான ஹம்மிங்க் மியூசிக்,பில்டப் பேக்ட்ராப் எல்லாம் கலக்கல்.ஆனால் கதை தான் துக்ளியூண்டு.

ஒரு கேங்க்ஸ்டர்ஸ் குரூப்பில் பண பரிவர்த்தனையில் ஒரு கோல்மால் நடக்குது. ஹீரோ போய் அந்த பணத்தை வாங்கி வருகிறார். இதான் கதை.ஆனா எடுத்த விதம் பக்கா.. 

சாக்லேட் பேபி மாதிரி முகம் வைத்திருக்கும் ஹீரோவை நீ கொயந்தை பையண்டா என சீண்டி சீண்டியே அவனை தூண்டி விடுகிறார்கள். அவன் தனி ஆளாக கேங்க்ஸ்டர் முகாம் போய் ஃபைட் பண்ணி பணத்தை மீட்டு வருகிறான்.

இதற்கு டைட்டில் ஏன் 50 - 50 வைத்தார்கள் என தெரியவில்லை. நான் சாதா அல்ல ,இப்புடுச்சூடு கண்ணா,நான் பார்க்கத்தான் பப்பா அடிச்சா டாப்பா  மாதிரி டப்பிங்க் வாசனை  அடிக்கும் டைட்டில் வைத்திருக்கலாம்.ஒளிப்பதிவு ,எடிட்டிங்க் போன்ற தொழில் நுட்பங்கள் ரசிக்க வைத்தது. இந்த படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்த  பிரபுக்கு பெஸ்ட் டெக்னீஷியனுக்கான பரிசு கிடைத்தது சந்தோஷம்.


2. அருண்குமார் - கையில் எடுக்க வேண்டுமா?

அண்ணன் மிஸ்கின்னின் தீவிர ரசிகர் போல . பெரும்பாலான ஷாட்ஸை எல்லாம் அவர் மாதிரியே கேமரா கோணங்கள் வைத்து எடுத்தாரு. கால்கள் மூலம் கதை செல்லும் திசை சொல்வது..

ஒரு அப்பார்ட்மெண்ட்ல ஒரு தம்பதி, பக்கத்து வீட்ல ஒரு போலீஸ் ஆஃபீசர் பக்கத்து வீட்டு தம்பதி கல்யாண நாள் அன்று கணவன் வெளில போனதும் மனைவியை போலீஸ் ஆஃபீசர் பலாத்காரம் பண்ண அதை அந்த போலீஸ் ஆஃபீசரின் நடவடிக்கையை செல்ஃபோனில் படம் பிடித்த பெண்ணை அவர் மீண்டும் இன்னொரு சந்தர்ப்பத்தில் போட்டுத்தள்ள முயலும்போது இறந்த மனைவியின் கணவன் பழிக்குப்பழி வாங்குகிறான்.

இந்தப்படம் கிட்டத்தட்ட 30 நிமிஷப்படமா எடுத்தாத்தான் புரியும்.. டைரக்டர் ஏகப்பட்ட காசிகளை ஷூட் பண்ணிட்டு எடிட்டிங்க்ல தடுமாறி இருக்கறது நல்லாவே தெரியுது.இதுக்கு என்ன பண்ணனும்னா 8 நிமிஷப்படத்துக்கு உண்டான மாதிரி சிம்ப்பிளா சின்ன படமா எடுத்துக்கனும்.சும்மா கசாமுசான்னு அரை மணீ நேரப்படமா எடுத்துட்டு அதுக்குப்பிறகு 7 நிமிடப்படமா எடிட்டிங்க் பண்ணுனா எடுத்தப்ப இருந்த எஃப்ஃபக்ட் கிடைக்காது.

இந்தப்படத்துல ஒரு பாராட்டத்தக்க விஷயம் கணவன், மனைவி ஊடல் கொண்ட நிலையில் கணவ்ன் ஆஃபீஸில் செகரட்டரி ரூட் போடறப்ப கணவன் அவளை தவிர்ப்பது மாதிரி காட்னது... ஆண்களெல்லாம் காலரை தூக்கி விட்டுக்க ஒரு சான்ஸ்.கதை இந்த திசைல தான் போகுதுங்கறதை டைவர்ட் பண்ண அந்த சீனை இயக்குநர் வெச்சிருக்கனும். நல்ல உத்தி..

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்காக சட்டத்தை கையில் எடுக்க வேண்டுமா? என்பது தான் கதையின் தீம் என்றாலும் டைட்டில் எஸ் ஏ சந்திர சேகர் காலத்தில் எடுத்த பட தலைப்பு மாதிரி சுரஹ்ட்தே இல்லாமல் இருக்கு. இந்தப்படத்துக்கு பக்கத்து வீட்டு பரிமளா,ஃபிகரு இங்கே.. மர்டர் எங்கே? இப்படி டைட்டில் வெச்சிருக்கலாம்.. ( இதை சம்பந்தப்பட்ட டைரக்டர் படிச்சா இப்படி கேவலமா டைட்டில் வைக்கறதுக்கு தான் வெச்ச டைட்டிலே தேவலாம்னு நினைப்பாரோ/? ஹி ஹி )

இந்தப்படத்துல குறிப்பிட்டு சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் ஹீரோயின் அம்சமா இருந்தாங்க.. ( பார்த்தீங்களா? ஃபிகர் நல்லாருந்தா மரியாதை தானா வருது..# தமிழேண்டா)அதுவும் கல்யாண நாள் அன்னைக்கு அவரது மங்கள கெட்டப் செம..  (சரி சரி கர்ச்சீப் எடு).இந்தப்படத்துக்கு ஃபைட் சீன்ல பேக் டிராப்ல காயத்ரி மந்திரம் போட்டது நல்லாருந்ததுன்னு கே பி சார் கமெண்ட் பண்ணுனார்.

 


3. சரத் ஜோடி - புழுதி ஆட்டம்

டைட்டிலைப்பார்த்ததுமே இது வில்லேஜ் சப்ஜெக்ட்னு நினைச்சது சரி தான். செம நேட்டிவிட்டியோட எடுக்கப்பட்ட இந்தப்படத்துக்கு முதல் பரிசு கிடைச்ச துல ஆச்சரியம் இல்லை.பசங்க பட ஸ்டைலில் எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம்,. கிரிக்கெட் விளையாடற டீம்ல ஒரு சண்டை. கிரிக்கெட் பேட்டை ஒரு குரூப் ல ஒரு பொடியன் எடுத்துட்டு ஓடிடறான்.அவனை துரத்திட்டு போய் 3 பசங்க மீட்கறப்ப அவங்க சைக்கிள் எதிரி குரூப் கிட்டே சிக்கிடுது.. ஆட்டம் தொடரும்னு சப் டைட்டிலோட படம் முடியுது.. 

 இதுல பாராட்ட வேண்டிய முக்கிய அம்சம் படப்பிடிப்பு நடந்த இடம். பக்கா சேரியை செலக்ட் பண்ணி கேமரா வை லாங்க் ஷாட்ல வெச்சு லெங்த்தி
.ஷாட்டா எடுத்து தள்ளின டைரக்டரை பாராட்றதா? ரொம்ப இயல்பா சேரிப்பசங்க மாதிரியே பாடி லேங்குவேஜ்,வசன உச்சரிப்புல கலக்குன சின்னபசங்களைப்பாராட்றதா?செம கலக்கல்.

எல்லா சின்னப்பசங்களையும் மேடை ஏற்றி கவுரவிச்சாங்க.. ஆனா செம கலக்கு கலக்குன அந்த குண்டு பையன் மிஸ்ஸிங்க்..

இந்தப்பட டைரக்டர் மேடைல பலராலும் பாராட்டப்பட்றப்ப அவர் காட்டிய நிதானம் ஆச்சரியப்பட வெச்சுது.. ரொம்ப சிம்பிளா ஸ்மைலிங்கோட அதை எதிர் கொண்டது அண்ணன் ரொம்ப பக்குவப்பட்டிருக்கார்னு தோணூச்சு.. வெல்டன்..

 டிஸ்கி - மேலே உள்ள ஸ்டில்ஸ்களுக்கும், குறும்படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சும்மா ஒரு ரசனைக்காக....

Wednesday, April 20, 2011

நாளைய இயக்குநர் -ஆக்‌ஷன் கதைகள் - விமர்சனம்

இந்த வாரம் ஆக்‌ஷன் ஸ்டோரிஸ்ன்னு சொன்னதும் கொஞ்சம் பயமாத்தான் இருந்தது.தெலுங்கு டப்பிங்க் படத்துல  வர்ற மாதிரி சொதப்பப்போறாங்கன்னு நினைச்சேன்.. ஆனா முத கதையே வெரைட்டியா இருந்தது..அதுவே முதல் பரிசையும் தட்டிட்டு போச்சு...( அப்போ இனி நாம எப்பவாவது படம் எடுத்தா முதல்ல போடச்சொல்லனும்)

ஹாய் மதன்,பிரதாப் போத்தன் 2 பேர்ட்டயும் ஒரு மாற்றம்.. ரெண்டு பேருமே புது முக இயக்குநர்கள் முகம் சுண்டற ,மாதிரி பேசலை.. பூஸ்ட் அப் பண்ற மாதிரி பேசறாங்க.. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு,ஒரு படைப்பாளி கவுரப்படுத்தப்படும்போது ஆட்டோமேட்டிக்கா இன்னொரு படைப்பாளிக்கு சந்தோஷம் வந்துடும்..( ஏன் டாக்ஸி மேட்டிக்கா வராதா?)


1.  பார்த்திபன் - ரமேஷ்


அடியாளா வேலைக்கு வந்த இடத்துல சின்ன வயசுப்பசங்க அடி மாடுகளா விற்பதற்காக  கடத்தப்படறதை எதிர்க்கறான்.. தனி ஆளா சண்டைக்குப்போறான்.. அவனை அந்த கடத்தல் கோஷ்டி போட்டுத்தள்ளிடறாங்க...  சாகறப்பக்கூட அவன் அந்த சிறுவர்களை விடுதலை பண்ணிடறான்.

ஒரு ரவுடியா இருந்தாலும், அடியாளா இருந்தாலும் , கல்லுக்குள் ஈரம் இருக்கும்,முரடன் மனதுக்குள்ளும் அன்பு நேசம் போன்ற மென்மையான உணர்வுகள் இருக்கும்கற பாசிட்டிவ்வான கருத்தோட படம் முடியுது.

 படத்தோட மேக்கிங்க் ஸ்டைல் , பேக் கிரவுண்ட் மியூசிக் எல்லாம் நல்லாதான் இருந்தது.. ஆனா இயல்பா இல்லாம ஒரு சினிமாட்டிக் தன்மை தொக்கி நின்னுது.. ஆல்ரெடி கோலிவுட்ல கோலோச்சுன ஒரு டைரக்டர் எடுத்த குறும்படம் போல் இருந்தது.
இதுல வந்த ஒரு நல்ல வசனம்

அடியாள்ங்கறதுக்காக கசாப்புக்கடை வேலை பார்க்கனும்னு அவசியம் இல்லையே..?


 2. இன்னா செய்தாரை - அழகுராஜ்

இந்த தொகுப்பாளினி ஓரளவுக்கு கிரியேட்டிவ்வா சொந்த டயலாக் பேசுனாங்க.. வாங்க அழகா வந்திருக்கீங்க... அழகுராஜ்.. படத்தோட டைட்டில்
இன்னா செய்தாரை...படத்துல நீங்க என்னா செஞ்சிருக்கீங்க?ன்னு கேட்டு சூழலை இறுக்கமான சூழல்ல இருந்து கொஞ்சம் நார்மல்க்கு கொண்டு வந்தாங்க.. 

ஒரு கல்யாணம் ஆன தம்பதி ( கல்யாணம் ஆனாத்தானே அது தம்பதி ?#சொதப்பாம சொல்லு) ஒரு ஃபாரஸ்ட் ஏரியாவுக்கு ஜாலி டிரிப்பா வர்றாங்க..அவர் ஒரு கஸ்டம் ஆஃபீசர்.. ஏற்கனவே அவரால பாதிக்கப்பட்ட சட்ட விரோத கும்பல் அவரை அங்கே போட்டுத்தள்ளிடுது..அவரோட மனைவி அந்த கும்பலை அங்கேயே பழி வாங்கறா.

அவ பழி வாங்கற விதம் எல்லாம் பழைய எஸ் ஏ சந்திர சேகரன் படங்கள் மாதிரி வெரைட்டியான அப்ரோச்சா இருக்கு.ஒருத்தன் காதுல  வெடி குண்டு கட்டி, ஒருத்தனோட உடம்புல ஒரே சமயத்துல வெவ்வேற பிளட் குரூப் ஏத்தி,ஒருத்தன் மூக்குல  2 கஞ்சா சிகரெட் வெச்சு வாயை அடைச்சு,இன்னொருத்தனுக்கு காலால மர்ம ஸ்தானத்துல ஒரே அடி..
( பார்க்கறப்ப நமக்கு வலி.. ஹி ஹி )

இதுல எல்லாரும் சிலாகிச்ச படி லொக்கேஷன் செலக்‌ஷனும் கேமராவும் பக்கா.ஆந்திரா போய்  அங்கே ஏதோ ஒரு ஃபார்ஸ்ட்டை தேடிப்பிடிச்சு ஷூட் பண்ணி இருக்காங்க..

 ஆனா எல்லாருக்கும் தோணும் டவுட்ஸ்

1.  ஒரு ஃபாரஸ்ட் ஆஃபீசர் அப்படி தனிமைல எந்த செக்யூரிட்டியும் இல்லாம வந்து சிக்கிக்குவாரா?அதுவும் மனைவி கூட வந்து.. 

2, மோதல் நடக்கறப்ப  அவர் ஒரு ஆஃபீசர் என்பதற்கான கம்பீரமே இல்லை..

3. அவருக்கே இல்லாத அந்த  வீரம் அவரோட மனைவிக்கு எப்படி வந்தது?

4. ரொம்ப மென்மையான பெண்ணா காட்டப்படும் அந்த மனைவி வில்லனின் ரத்தத்தை தொட்டு நாக்கில் வைத்து சுவைப்பது நம்ப முடியாத கொடூரம்.
( அட்ராட்ரா நாக்கு முக்க நாக்கு முக்க)

( அவர் என்ன பூலான் தேவியா?)

5. கஜினி பட க்ளைமாக்ஸில் அசினுக்கு ஒரு மரண அடி விழுமே அப்படி நங்க் என அடி விழுந்தும் அவர் தப்பிப்பது எப்படி?


ஆனா அந்த ஆஃபீசர் மனைவியா வந்த ஃபிகரோட நடிப்பு ஓக்கே தான்.. இதுல  குளியல் சீன் வேற.. ( சின்னத்திரை செம டெவலப்பு ஹி ஹி )

3. ரணம் - தமிழ் செல்வன்

 ஹீரோ ரவுடி.. ஹீரோயின் கம் காதலிக்கு லவ்வரோட தொழில் என்னன்னு தெரிஞ்சதும் பிடிக்கலை.. ( எல்லா காதலிகளுக்கும் ரவுடிங்களைப்பிடிக்கறதில்லை. ஆனா பெரும்பாலான ஹீரோயின்கள் ரவுடிகளத்தான் லவ்வறாங்க.. # ஒழிக தமிழ் சினிமா லாஜிக் )

ஒரு கட்டத்துல ஹீரோயினை ஒரு ரவுடி குரூப் கடத்திட்டுப்போகுது.. தன்னோட உயிரைக்குடுத்து ஹீரோ அவரைக்காப்பாத்தறாரு.. இப்போ அந்த பொண்ணு அவரை லவ்வுது.. ( அட போங்கப்பா... இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்.. பக்கத்துலயே இருக்கறப்ப கண்டுக்க மாட்டாங்க.. சொர்க்கத்துக்கு டிக்கட் வாங்கறப்ப பதறிட்டு வருவாங்க )

வில்லன் ப்ளேஸ் ல ஹீரோ வில்லன் கூட சண்டை போட்றது,அவங்களை வீழ்த்தறது எல்லாம் அக்மார்க் சிரஞ்சீவி படம் தோத்துது போங்க..

 ஒரே ஆறுதல் என்னான்னா  ஹீரோயின் ஃபிகர் நல்லாருந்தது. ( அதானே பார்த்தேன் )


முதல் பரிசை வழங்கறதுல, எந்தக்குழப்பமும் இல்ல. ஆனா இது குவாட்டர் ஃபைனல் என்பதால் (குவாட்டர் ஃபைனல்னா குவாட்டர் அடிச்சிட்டு ஃபைனல்ல கலந்துக்கறதா? #டவுட்டு)எலிமினேட் பண்ணனுமாம். 

( இல்லைன்னா உம்மாச்சி கண்ணைக்குத்திடுமா?)

 யாரை எலிமினேட் பண்ணலாம்னு மதன் சார் கேட்க பிரதாப் போத்தன் சிரிச்சுக்கிட்டே  மினி மினி மைனோ போட்டுப்பார்க்கலாமா? என காமெடி பண்ணுனது ஹா ஹா ( அது பிங்கி பிங்கி பாங்கி ஃபாதர் ஈஸ் ஏ டாங்க்கி மாதிரி ) 

 கடைசில எலிமினேஷன் இல்லைன்னு அறிவிச்சுட்டாங்க. 

 சந்தோஷம்.



Tuesday, March 15, 2011

நாளைய இயக்குநர் - மழலை +டிராஜடி கதைகள்

[0.jpg]
ஏற்கனவே பலமுறை சொன்ன மாதிரி கலைஞர் டி வி ல எனக்கு பிடிச்ச புரோகிராம் வாரா வாரம் ஞாயிறு காலை 10. 30 மணிக்கு வர்ற நாளைய இயக்குநர் நிக்ழச்சிதான் என்றாலும் இத்தனை நாளா மனசுக்குள்ள புதைச்சு வெச்ச ஒரு ரகசியத்தை இப்போ ஓப்பன் பண்றேன்..(மனசுக்குள்ள நீரா ராடியான்னு நினப்பு)

தொகுப்பாளினியா வர்ற ஃபிகர் எனக்கு பிடிக்கலை.. ( பொண்ணு பார்க்கப்போன மாப்பிள்ளை மாதிரியே பேசறானே)பொதுவா பொண்ணுங்கன்னா உண்மையான குங்குமம் வெச்சுட்டு வந்தாத்தான் நல்லாருக்கும்.( அப்போ பொய்யான குங்குமம்னா என்ன? # ஸ்டிக்கர் பொட்டு) பாப்பா பிரச்சனை எதுக்குன்னு பெரும்பாலும் பொட்டே வைக்கறதில்லை..அது பெரிய மைனஸ்..அப்புறம் பாப்பா போட்டுட்டு வர்ற டிரஸ் கரகாட்டக்காரி மாதிரி நல்லாவே இல்லை.. இதை எல்லாத்தையும் கூட பொறுத்துக்கலாம்.. ஆனா பாப்பா செயற்கையா சிரிக்குது பாருங்க.. அதை தாங்க முடியல...

இப்போ நீ விமர்சனம் பண்ண போறது பாப்பாவையா? குறும்படத்தையா?ன்னு சலிச்சுக்கறவங்களுக்கு...சென்னை  டி நகர் -ல் உள்ள டி சி மேனர் ஹோட்டலில் ரிசப்ஷனிஸ்ட்டாக பணியாற்றும் ஒரு ஃபிகரை பற்றி குறிபிட விரும்புகிறேன்.. (ஃபிகர் சுட்டி பொருள் விளக்கு..)அந்த ஃபிகர் +2 தான் படிச்சிருக்குன்னாலும் ஏர்ஹோஸ்டல்ல ஒர்க் பண்ற மாதிரி செம நீட்டா இருக்கும்..அந்த ஹோட்டலுக்கே ஒரு கவுரவம் அந்த ஃபிகர்தான்.ஃபிகருக்கு சம்பளம் மாதம் ரூ 27,000.வேலை சும்மா சிரிக்கனும்.. அவ்வளவுதான்...இது பற்றி மேலும் விபரங்களை என்னைக்கவர்ந்த கேரளா ஃபிகர்கள் என்ற புதிய பதிவில் விளக்கமா பார்ப்போம்.. இப்போ....
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/06/Priyamani-new-gallery-8.jpg

1. ஆசை - அருண்குமார்

டைட்டில்லயே சைக்கிளை டிசைன் பண்ணி கலக்கலா லே அவுட் குடுத்ததைப்பார்த்ததும் படம் பின்னி எடுக்கும்னு நினைச்சேன்.. ம்ஹூம்.. சுமார்தான்.சின்ன பொண்ணு ஒண்ணு சைக்கிள் வாங்க ஆசைப்படுது..கொஞ்சம் கொஞ்சமா காசு உண்டியல்ல சேர்த்து எப்படியோ ஒரு குட்டி சைக்கிள் வாங்கிடுது.. ஆனா ஒரு வேன் வந்து அதை இடிச்சு ரிப்பேர் பண்ணிடுது..

டிராஜடியா முடிக்கனும்கறதுக்காக வேணும்னே பண்ணுன மாதிரி இருக்கு.. இதன் மூலமா டைரக்டர் என்ன சொல்ல வர்றார்னே தெரியல..மனதை தொடலை..ஆனா ஒளிப்பதிவு, கேமரா கோணங்கள் எல்லாம் ரொம்ப பிரமாதம்..

இயக்குநர் கவனிக்கத்தவறிய அம்சங்கள்

1. படத்தில் காட்டப்பட்ட அந்த சின்ன உண்டியலில் 200 ரூபா அளவுக்குத்தான் காசு போட முடியும்...இதை எப்படி உறுதியா சொல்றேன்னா மண்பாண்டம் செய்யும் குயவனாக இருக்கும் எங்க ஊர் நண்பன் சரவணன் என் கூட அமர்ந்துதான் பார்த்துட்டு இருந்தார்.. அவர் சொன்ன தகவல் தான் அது..300 ரூபா அதுல சேர்க்க முடியாது.

2. அதே போல் ஒரு ரூபாக்காசு, மற்றும் 2 ரூபாக்காசு மட்டுமே அந்த சிறிய உண்டியல் துவாரத்தில் போட முடியும். 5 ரூபாக்காசு போட சான்ஸே இல்லையாம்..( 2 ரூபாக்காசே ரொம்ப சிரமப்பட்டே போடமுடியுமாம்..).ஆனால் ஒரு சீனில் உண்டியலை உடைத்த பிறகு அதில் இருந்த காசுகளை எடுக்கும்போது 5 ரூபாக்காசு நிறைய இருக்கு.

3. வேகமாக வரும் வேன் அந்த சைக்கிளை இடித்து தள்ளும்போது சப்பழிந்து போகும், அல்லது தூக்கி அடிக்கும்.. படத்தில் காட்டுவது போல் ஒரு சக்கரம் மட்டும் தனியே கழண்டு போக வாய்ப்பே இல்லை..

நான் சொல்ற பாயிண்ட்ஸ் ஏதோ குறை சொல்லனும் என்ற நோக்கில் சொல்லப்படுவதல்ல.. அடுத்த முறை அவர்கள் கவனமாக படம் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்வது..
http://tamildigitalcinema.com/wp-content/gallery/bhuvaneswari-hot/bhuvaneswari-hot-1.jpg
2. தருணம் - மணிவண்ணன்

எதிர்பாராதவிதமா ஒரு ஆக்‌ஷன் கம் டெரரிஸ்ட் ரிலேட்டட் மூவி...கேமரா ஆங்கிள் கலக்கலா இருந்துச்சு.கோயிலுக்கு ஒரு தம்பதி சாமி கும்பிட வர்றாங்க.. ஒரு தீவிரவாதி கும்பல் கணவனை பிடிச்சு அவன் உடம்புக்குள்ள ஒரு வெடியை வெச்சு ஆபரேஷன் பண்ணி பப்ளிக் பிளேஸ்ல அவனை அனுப்பறாங்க.. பிணையக்கைதியா மனைவி...என்ன நடக்குது?ங்கறதை  நல்ல சஸ்பென்ஸா சொல்லி இருக்காங்க..

இது எழுத்தாளர் சுபா அவர்கள் எழுதிய ஒரு நாவலின் வடிவாக்கம் (சூப்பர் நாவல் 1998 நவம்பர் உயிர்பலி) என்றாலும் இயக்குநர் விட்டு விளாசி இருந்தார்..7 நிமிடத்தில் இந்த மாதிரி ஒரு திரில்லர் எடுப்பது ரொம்ப கஷ்டம் தான்..ஹாய் மதன் கூட இதை பாராட்டி THE  Bourne  IDENTITY  படம் போல் திரில்லர் வகையறா படம் எடுக்க வாழ்த்துக்கள் என்றார்.

மனம் கவர்ந்த வசனம்

மனைவி - உங்க பெயரை இனிஷியல் ஆக்க ஒரு சொந்தம் வரப்போகுது..

கணவன் - என் வாழ்க்கைலயே ரொம்ப சந்தோஷமா இருக்கற 2வது தருணம் இதுதான்

மனைவி - அப்போ முத தருணம்..?

கணவன் - நம்ம முதல் கல்யாண நாள்

இந்த மாதிரி ஒரு ஆக்‌ஷன் பேக் டிராப்ல லவ் டயலாக் ஒரு ரிலாக்‌ஷேஷனா இருக்கும். வெல்டன் டைரக்டர்.அதே போல் க்ளைமாக்சில் வெடி குண்டை வெடிக்க வைக்கும் ரிமோட் பட்டனை புறா தட்டி விடுவது செமயான சீன்.(டைரக்டர் மணி அகதா கிறிஸ்டி,சுஜாதா ரசிகர் போல)
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYdmpT0_prjnmrdtEyBSPFra6ns0abOTpVcb4PzFtrgIGHTJ8NVQTMl-Qx8Z0WBjWvx1qws4EKb4Ol6dPeZJ6eeAxNIYm0T3W72RbSaPvi9Eg6tzrjXMrgn3_Th2zFpbEgUZuXL2mDdQxt/s1600/nishanti+in+transparent+saree+%25283%2529.jpg
3.  பசி - ஆர் .ரவிக்குமார்

ஒரு கிராமத்துக்கதை.. சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கற சூழல்ல ஸ்கூல்ல போடற சத்துணவையாவது சாப்பிடலாம்னு ஏங்கற பையன் கதை.. ஸ்கூல்ல பாடம் நடத்தறப்பக்கூட அவனுக்கு சாப்பாட்டு ஞாபகம் தான்.அந்த அளவு அவனை பசி துரத்துது.. கடைசில அவன் சாப்பிடும்போது அந்த சாப்பாட்ல பல்லி விழுந்துட்டதா சொல்லி அதையும் பிடுங்கிடறாங்க..

இந்த கதைல முக்கியமா  அந்த சின்னப்பையனோட நடிப்பு நல்லாருந்தது.. ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னன்னா ஹாய் மதன் அந்த பையனை மேடைக்கு கூப்பிட்டு அவனை வாங்க போங்க என மரியாதை கொடுத்துப்பேசி ஊக்குவிச்சதுதான். வெல்டன் மதன் சார்..

இயக்குநர் ஒரு விஷயத்துல பாராட்டப்படவேண்டிய ஆள் தான். என்னான்னா ஸ்கூல்ல பாடம் நடத்தறப்ப கனிகள் பற்றி பாடம் வருது.. அப்போ எல்லா வகை கனிகளும் அந்த பையனோட நினைவலைகளில் சுற்றுவது மாதிரி ஒரு கிராஃபிக்ஸ் ஷாட் வெச்சது அழகு...அவர் பண்ணுன சின்ன மிஸ்டேக் ஏழை சிறுவனா நடிக்க  உண்மையாகவே ஏழையை தேர்ந்தெடுத்து இருக்கலாம்.. அந்த பையனோட முகத்துல செல்வக்களை தாண்டவமாடுது.. (FACE SHINING)

இதுக்கு ஹாய் மதனோட கமெண்ட் ,  “அரெஸ்ட்டிங்க் ஷாட் வைக்க முடியல.. பசி என்பது நிறைய பேர் எடுத்துக்கிட்ட தீம் என்பதால் உங்களால ஒரு வட்டத்தை விட்டு வெளில வர முடியல...புதுசா சொல்ல முடியாம தவிச்ச மாதிரி இருக்கு. உங்க கைகள் கட்டப்பட்டிருக்கு....”   100% கரெக்ட்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisdFbugtozFImXP2_GstPWidbmCr9M9hvZDxXnA9BR-x1b3DQhx-8QB9EpH3qfasrRBEYXRESdJwhIw1P-OxBS1S6PElMWwqEXfm4wziXp_eZnck3Z9Rt3ndI5-MfSKgznw0yCq0FSH-Eq/s1600/neelam-actress-stills-010.jpg
4. அஞ்சு ரூபா - எஸ் . வி . அருண்குமார்

படத்தோட ஓப்பனிங்க் ஷாட்லயே அசத்த ஆரம்பிச்ச இந்தப்படம் முதல் பரிசு வாங்குனதுல எந்த ஆச்சரியமும் இல்ல. பலரின் ஏகோபித்த ஆதரவு இந்தப்படத்துக்கு கிடைச்சதுக்குக்காரணம் மென்மையான கதை சொல்லல் பாணியும், சிறுவனின் பண் பட்ட நடிப்பும்..

ஒரு சின்ன பையன் பலூன் வாங்க ஆசைப்படறான்.. அஞ்சு ரூபா.. அவனுக்கு கிடைக்கல.. அம்மா கிட்டே கேட்கறப்ப  செலவுக்கு டெயிலி தர்ற அம்பது பைசாவை சேர்த்து வெச்சு வாங்கிக்கோ அப்படிங்கறா...அவனும் சேர்த்து வைக்கிறான்..காசை எங்கேயோ தொலைச்சுடறான்.. அப்புறம் அம்மாவே வேற ஒரு அஞ்சு ரூபாவை குடுத்து இதுதான் தொலைஞ்சு போன காசுங்கறா..அந்த காசை ஒரு அவசரத்துக்கு அம்மா க்ரேட்டப்பக்கூட அவன் கொடுக்காம அழுது அடம் பிடிக்கறான்.. இவ்வளவு கஷ்டப்பட்டு சேர்த்து வெச்ச அஞ்சு ரூபாவை குடுத்து அவன் பலூன் வாங்கப்போனப்ப பலூன் விலை 6 ரூபா ஆகிடுது
கலைஞர் ஆட்சில விலைவாசி கடுமையா ஏறுதுன்னு சிம்பாலிக்கா சொன்ன காட்சி வெச்ச படத்துக்கு அனுமதி அளிச்சதும், அதுக்கு பரிசு குடுத்ததும் கலைஞர் டி வி நிர்வாக இயக்குநர் எந்த அளவு அசிரத்தையா இருக்கார் என்பதற்கான அத்தாட்சி..


சேர்த்து வெச்ச காசை வெச்சு பலூன் வாங்கி வர்றப்ப அது உடைஞ்சிடுது..அவன் அடுத்த அஞ்சு ரூபா சேமிப்புக்கு ரெடி ஆகிடறான்..கேட்பதற்கும், படிப்பதற்கும் வெகு சாதாரணமா தெரியற இந்த கதை படமா நம்ம கண் முன் விரியும்போது செமயா இருக்கு..

இயக்குநரை சபாஷ் போட வைத்த இடங்கள்

1. பள்ளிக்கூடத்துக்கு போகும் மகனை அம்மா, “ ஸ்கூலுக்கு சூதானமா (ஜாக்கிரதையா) போய்ட்டு வ ரனும் என்ன?’ என்ற டயலாக்கை 2 இடங்களில் வைத்து ஏதோ ஆக்சிடெண்ட் நடக்கப்போகிறதோ என டெம்போ ஏற்றி அப்படி எந்த சீனும் வைக்காதது..

2. ஏழை அம்மா விறகு அடுப்பில் ஊதுகுழலால் ஊதும் சத்தத்தை இயற்கையாக ஆன் த ஸ்பாட் ரெக்கார்டிங்க் செய்தது..

3. பலூன்காரனின் வசனங்கள் வெகு இயல்பாக அமைந்தது..

4. அம்மா, பையனின் அற்புதமான நடிப்பு

பெஸ்ட் ஆக்டிங்க் விருதை கடைசி 2 படத்தில் நடித்த 2 சிறுவர்களுக்கும் கொடுத்தது கை தட்டல் பெற வைத்த  முடிவு..

டிஸ்கி -1. குறும்பட ஸ்டில்கள் எதுவும் கிடைக்கலை.. என் மெயிலுக்கு அனுப்பி வைங்கன்னு சொன்னதை யாரும் மதிக்கலை..(வழக்கம் போலவே..)அதனால சில குறும்பு பட ஸ்டில்கள்.. ஹி ஹி

டிஸ்கி 2  - முதல் 2 ஸ்டில்களில் ஃபிகர்கள் 2ம் கலைஞருக்கு பிடித்த மஞ்சள் நிற டிரஸ் அணிந்து நிற்பதும், அடுத்த 2 ஸ்டில்களில் உள்ள ஃபிகர்கள் கலைஞர் டி வி யின் நிர்வாக இயக்குநர்க்கு பிடித்த நிறமான டார்க் ரோஸ், லைட் ரோஸ் நிறங்களில் டிரஸ் அணிந்து நிற்பதும் எதேச்சையானவை.. எந்த  உள்குத்தும் இல்லை.. ஹி ஹி