Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Tuesday, November 02, 2010

கவுத்துட்டாரே கவுத்துட்டாரே




இராஜாஜி அவர்கள், அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக்,
1937ஆம் ஆண்டில் இருந்தார். அப்போது அவர் தமது பணியாளர் ஒருவரிடம் ஓர்உறையைக் கொடுத்து, அதில் தபால் தலை ஒட்டிக்கொண்டு வருமாறு கூறினார்.
பணியாளர் அந்த உறையில் தபால் தலையை கவனக் குறைவாகத் தலைகீழாகஒட்டிவிட்டார்.

            அதைக் கவனித்த இராஜாஜி, சிரித்துக்கொண்டே,“சரியான வேலை
செய்தாய் அப்பா! நாங்கள் எல்லாம் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்ப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. நீ ஒரே நிமிஷத்தில் பிரிட்டிஷ் சக்கரவர்த்தியைக் கவிழ்த்து விட்டாயே” என்றார்.

Monday, November 01, 2010

ச்சே,நீ எல்லாம் ஒரு பதிவரா?

பதிவுலகில் யாராவது யார் கூடவாவது சண்டை போட்டால் தான் சுவராஸ்யம் என சிலர் சொல்கிறார்கள்.எனக்கென்னவோ அது சரியாகப்படவில்லை.எல்லோரும் ஒரே குடும்பம் போல் பழக வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.

முதலில் எனக்கு ஒரு மெயில் வந்தது,உங்கள் பேட்டி வேணும் என.நான் சொன்னேன் நல்லா விசாரிச்சுக்குங்க,நான் பிரபல பதிவர்தானா?என நல்லா தெரியுமா? என தயங்கி தயங்கி தான் பேட்டி குடுத்தேன்,

பதிவுலகில் பிரபலமான / பிரபலமாகிவரும் பதிவர்களை பேட்டி கண்டா ( எடக்கு மடக்கா கேள்வி கேட்டா ) அவங்க என்ன செய்வாங்கன்னு பாக்கறதுதான் இந்த "பதிவர்கள் பேட்டி " பகுதி. இதில் முதலில் நாம் பார்க்கப் போவது சி.பி.செந்தில்குமார்....."அட்ரா சக்க" என்ற வலைப்பூவில் சக்கை போடு போடுபவர் தான் சி.பி.செந்தில்குமார்... சி.பியின் ஸ்பெஷாலிடி... ஜனரஞ்சக ஸ்டைல்... டீக்கைடை பெஞ்சு தலைப்புகள்.... பிட்டு படம் முதல் அட்டு ஃபிகர் வரை புட்டு புட்டு வைக்கிறார்...இப்போது சி.பி யின் பேட்டியைப் பார்ப்போம்.

.1. ஹைக்கூலேர்ந்து ஹாலிவுட் வரை எல்லாம் தெரிஞ்ச மாதிரியே எழுதறீங்களே , அது எப்படி பாஸ் ?

எல்லாம் வாசிப்பு அனுபவம்தான்,சிறந்த படிப்பாளியே சிறந்த படைப்பாளி ஆக முடியும் என்ற சுஜாதாவின் அட்வைஸ் ஃபாலோ பண்றேன்.இந்த கேள்வி சீரியஸா இருந்தாலும் ,கலாய்க்கறதா இருந்தாலும் இதே பதில்தான்.


2. ப்ரொஃபைல்ல பத்திரிக்கை துறைன்னு போட்டிருக்கே என்ன பத்திரிக்கை?

ஹி ஹி எல்லா பத்திரிக்கைக்கும் எழுதறேன்,நான் ஒரு ஃபிரீலேன்ஸ் எழுத்தாளன் (ஆனா காசு குடுத்தா வாங்கிக்குவேன்).என் படைப்புகள் அதிகமா வந்தது பாக்யா,ஆனந்த விகடன் (இது நாங்க கேட்டமா?னு கேக்கக்கூடாது ஒரு ஃபுளோவுல வந்துடுச்சு.


3. தேவ லீலை பட விமர்சனம் உங்க ப்ளாக்லயே படிச்சுட்டோம்.. படம் பார்த்த அனுபத்த எங்ககிட்ட சொல்லுங்க...

ஹி ஹி பப்ளிக் பப்ளிக்,ஆஃப் த ரெக்கார்டா சொல்றேன்,வெளியிட்டு மானத்தை வாங்கிடாதீங்க.ஈரோடு ஸ்டார் தியேட்டர்ல அந்த படம் பார்த்தேன்.பொதுவா இந்த மாதிரி படம் நைட் ஷோ தான் போறது,எல்லாம் யாரும் பார்த்துடக்கூடாதுனு ஒரு பயம்தான்.முதல்லியே போயிட்டாலும் படம் போட்டு 5 நிமிஷம் கழிச்சுதான் உள்ளே ;போகனும்,இது சீன் படம் பாக்கறதுக்கான எழுதப்படாத ரூல்.ஓப்பனிங்க்ல சீன் இருந்தா முதல்லியே போயிடனும்,டிக்கெட் கிழிக்கறவர் கிட்டே கேட்டா விபரம் சொல்லிடுவார்.மத்த படம் செகண்ட் கிளாஸ் அல்லது ஃபர்ஸ்ட் கிளாஸ் தான் போவோம் ஆனா இந்த மாதிரி படத்துக்கு அது ஆபத்து,பின்னால இருந்து யார் நம்மை பாக்கறாஙகனு தெரியாம போயிடும்.சோ பால்கனில கடைசி ரோ.பெரிசா சீன் இல்லைன்னாலும் இந்த மாதிரி படத்துக்கு சுவராஸ்யமே படத்துல சீன் இருக்கா ?இல்லையா?இருந்தாலும் கட் பண்ணாம போடுவாங்களா?பிட் ஏதாவது சேத்துவாங்களா?இப்படி பல எதிர்பார்ப்புகளோட போவோம்.பி பி எகிறிடும்.இடைவேளை விட்டதும் லைட் போடறப்ப ஒரு புக்கை வெச்சு முகத்தை மூடிக்கனும் (படிக்கற மாதிரி).படம் விடறதுக்கு 10 நிமிஷம் முன்னால கிளம்பிடனும்.பைக் எடுக்கனுமே?பெரும்பாலும் இந்த மாதிரி படத்துல கிளைமாக்ஸ்ல சீன் இருக்காது. (விதி விலக்கு ஏ மேன் அன்ட் டூ விமன்).

4. அந்த ஏடாகூடா ஜோக்குங்களையெல்லாம் எங்க பிடிக்கிறீங்க நண்பா ?

பெரும்பாலும் சொந்த சரக்கு தான்,சரக்கு இல்லைன்னா இங்கிலீஷ்,ஹிந்தி புக் படிப்பேன்.எம் ஏ ஹிந்தி படிச்சது இதுக்குதான் உதவுது.ரக்பி ஜோக்ஸ்,குஷ்வந்த்சிங்க் ஜோக் புக்னு வீட்ல ஒரு மினி லைப்ரரியே இருக்கு.ஆபாசமா இருந்தா கொஞ்சம் அதை டீசண்ட்டா மாத்தி (கவுரவ்மா உல்டானு சொல்லிட்டு போயிருக்கலாம்) போடுவேன்


5. விஜய் பட்டங்களிலேயே உங்களுக்கு பிடிச்சது டாக்டர் பட்டமா ? இளையதளபதி பட்டமா?

ஹி ஹி விஜய்யை கலாய்க்கறேனே தவிர நான் விஜய் ரசிகன்,எல்லா சினிமா நடிகர்களையும் ரசிப்பேன். 2பட்டமும் வேஸ்ட்.


6. கலாய்ப்பதற்கு ரொம்ப வாட்டமா இருக்கற ஹீரோ யாரு ? தலயா தளபதியா?

சந்தேகமே வேணாம்,தளபதிதான்


7. ஒரு படம் விடாம எல்லா படமும் பார்த்து அதுக்கு விமர்சனம் வேற எழுதறீங்களே... எப்டி இதெல்லாம் முடியுது?

ஆஃபீ ஸ் டைம் ல ஓ பி அடிப்பேன்.ஃபுல் படம் பாக்க மாட்டேன்,கடைசி 45 நிமிஷம் கிளம்பிடுவேன். கிளைமாக்ஸ் ஃபைட் சீன் அலர்ஜி


8. ப்ரொஃபைல்ல பி.எஸ்.ஸீ மேத்சுன்னு போட்டுட்டு ஆனா கணக்கெல்லாம் 18 + ஆகவே இருக்கே... அதப்பத்தி..

பிளஸ் டூ படிக்கறப்ப சயின்ஸ் டீச்சர் செந்தாமரை செல்வி,தேவி டீச்சர் இவங்களை மேத்தமேட்டிக்ஸ் பண்ண நினைச்சேன்,நடக்கலை,நாம் கணக்குல இவ்வளவு வீக்கான்னு கோபத்துல அந்த சப்ஜெக்ட் எடுத்தேன்.


9. தொடங்கி சில மாதங்கள்ளயே உங்க வலைப்பூவோட அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்குது ? புது பதிவர்களுக்கு அட்வைஸ்...

நான் பதிவுலகிற்கு வந்து இன்றோடு 105 நாட்கள் ஆகுது.ஜனரஞ்சகமா பதிவு போட்டா ஒர்க் அவுட் ஆகும்.

அப்புறம் நான் ஒண்னு கவனிச்சேன்,பெரும்பாலும் எல்லாரும் நேரம் கிடைக்கறப்ப பதிவு போடறாங்க.ரெகுலரா ஒரு டைம் வெச்சுக்கனும்.தினமும் காலை 7 டூ 8 நான் பதிவு போட்டுடுவேன்.ஆஃபீஸ் ல இருந்து வந்து பார்ப்பேன் விசிட்டர்ஸ் டு டே 500 தாண்டிடுச்சுன்னா விட்டுடுவேன்.குறைஞ்சிருந்தா பதிவு ஊத்திக்குச்சுனு அர்த்தம்,மாலை அல்லது இரவு இன்னொரு பதிவு போட்டுடுவேன்

10. உங்க பதிவுகள்ள உங்களுக்கு பிடிச்ச மூணு லிங்க் கொடுங்க...

கோடம்பாக்கத்தில் காமெடிக்குப்பஞ்சமா?
கேனை டிவி வழங்கும் கெக்கெக்கே பிக்கெக்கே விருதுகள்
கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை

இது போக கடும் எதிர்ப்பை சந்தித்த பதிவு
அரசியலில் குதிக்க முடிவெடுத்த நடிகை ‘கற்பு” காஞ்சனாவுடன் ஒரு பேட்டி.



மூன்றாம் கோணத்திற்கு பேட்டியளித்த சி.பி.க்கு நன்றி. இந்த ஈரோட்டுப் பதிவர் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !

டிஸ்கி - டைட்டிலுக்கு விளக்கம் என்னன்னா நான் கண்ணாடியைப்பார்த்து என்னை நானே கேட்டுக்கொண்டேன்.பதிவுலகில் இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது நான் போக வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என.

Friday, October 29, 2010

நோஸ்கட் குடுப்பது எப்படி?



ஒரு முறை ஈரான் மன்னரான் ஷா அமெரிக்கா நாட்டுக்குச் சென்றார். ஒரு
விழாவில் கலந்துகொண்ட ஷாவை நோக்கி, “உங்கள் நாட்டுப் பெண்களுக்கும், எங்கள் நாட்டுப் பெண்களுக்கும் இடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?” என்று சிலர் கேட்டார்கள்.

            ஈரான் மன்னர் ஷா, கீழ்காணுமாறு பதிலளித்தார்:

            “எங்கள் நாட்டுப் பெண்களைப் பெரும்பாலும் வீட்டுக்குள்தான் பார்க்க
முடியும், தெருக்களில் பார்க்க முடியாது. உங்கள் நாட்டுப் பெண்களையோ தெருக்களில் மட்டுமே பார்க்க முடிகிறது, வீட்டுக்குள் எவரையும் பார்க்க முடிவதில்லை. இதுதான் வித்தியாசம்.”


டிஸ்கி 1 - மேலே உள்ள படத்தில் தோன்றுவது ஹிந்தி நடிகை பிபாஷா பாஸூ,அவர் சேலையில் உள்ள ஒரே ஸ்டில் இதுதான்.இவர் பற்றி அறிமுகம் தேவை இல்லை,ரொம்ப கண்ணியமான நடிகை.சச்சின் படத்தில் நம்ம இளைய தளபதியுடன்  குத்தாட்டம் போட்டவர்.

டிஸ்கி 2 - பெண்களை உயர்வாக சித்தரிக்கும் பதிவு ஒண்னாவது நீ போட்டிருக்கியா என ஆளாளுக்கு அர்ச்சனை,அதற்குத்தான் இந்தப்பதிவு.


டிஸ்கி 3 - மேலே உள்ள ஸ்டில்லில்  18 என்ற எண் வந்து குழப்புகிறதா?அது தவறான தகவல்.அநேகமாக 36 என நினைக்கிறேன்.

Wednesday, October 20, 2010

சினிமா -உல்டா சீன் போட்டி (கண்டுபிடிச்சா பரிசு)





அறிஞர் வாழ்வில் நிகழ்ந்த அற்புத சம்பவம்

            தேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக
வழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார்.  அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது.  வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.

                        சி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.  அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.

            அந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை
அறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட
வேண்டுமென்று திட்டமிட்டாள்.  அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று
அமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி சரசமாட ஆரம்பித்தாள்.

                        ”நான் உங்களைக் காதலிக்கிறேன்.  நாம் இருவரும் திருமணம்
செய்துகொள்வோம்” என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.
அது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.

            தன் சரசம் பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.
“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

            அந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,
ஒரு பெண் என்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள்.  அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ்.  அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.

            பிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா! நான் ஒரு
முழுச்செவிடு. நீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை.  நீ
சொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”
என்று கூறினார்.

                        அந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்
பேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா! நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.
அந்த இளம்பெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.

            அந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்
சிரித்துக்கொண்டு எழுந்தார்,”அம்மா! அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம்.  அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.

டிஸ்கி 1 - மேலே சொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை சுட்டு 4 தமிழ் படங்களில் இதே மாதிரியான சம்பவத்தை படம் பிடித்திருக்கிறார்கள்.எது என சொல்ல முடியுமா?அட்லீஸ்ட் ஒரு படப்பெயரை சொன்னா போதும்,பரிசு 10 டி வி டிக்கள் .ஒவ்வொரு டி வி டியிலும் 5 படங்கள் (ஆங்கிலம்).மொத்தம் 50 படங்கள்


டிஸ்கி 2 - பரிசு 4 பேருக்கு.அதிக பேர் சரியான விடை அளித்தால் முந்தியவருக்கு முன்னுரிமை அல்லது நமீதா முறையில் பரிசு (குலுக்கல் முறை)


Monday, October 18, 2010

சம்சாரம் என்பது வீணை (வீணே?!)

 

1. மனைவி ஒரு கம்பளிப் போர்வை போன்றவள். அதை நீ போர்த்திக்
கொண்டால் சில வேளைகளில் தொந்தரவாக இருக்கும். அதைத்
தூக்கி எறிந்துவிட்டாலோ குளிர் தாங்கவே முடியாது.

2. மனைவி தரும் சுகம் அமிர்தம். கள்ளக்காதலால் பெறும் சுகம்
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பைப் போன்றதாகும்.

3. காதலி முடிவடையாத புத்தகம்; மனைவி முழு புத்தகம்;
கள்ளக்காதலி கறையான்.

4. காதல் என்ற படகினைத் திருமணம் என்ற கடலினில் கணவன்
என்னும் படகோட்டி எவ்வளவு சாமர்த்தியமாக ஓட்டினாலும்
 மனைவி என்ற சூறாவளி அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும்.

5. உங்களுக்கு வரும் மனைவி எப்படிக் கற்புள்ளவளாகவும்,
கபடமற்றவளாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ
அவ்வாறே நீங்கள் இருக்க வேண்டும் என்று அவள் விரும்புவாள்
என்பதை மறவாதீர்கள்.

6. மனைவி கணவனுக்கு அவனுடைய சின்னஞ்சிறு வயதில் எஜமானி,
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தாதி.

7. இந்த உலகில் மட்டமான பெண் ஒரே ஒருத்திதான் உண்டு. அவளும்
தன் மனைவிதான் என்று ஒவ்வொரு  கணவனும் நினைக்கிறான்.

8. மனைவியின் மனதை புரிந்துக்கொள்வதற்குள் பாதி ஆயுள்முடிந்துவிடும்.

9. கணவன் மறப்பதைக் குறித்து மனைவி வருந்துகிறாள். மனைவி
மறக்காமல் இருப்பதைக் குறித்து கணவன் வருந்துகிறான்.

10. குதிரையை ஒரு மாதம் கழித்துப் புகழ வேண்டும். மனைவியை
ஒரு வருடம் கழித்துப் புகழ வேண்டும்.

11. திருமண வாழ்க்கையில் ஒரு வினோதம் என்னவென்றால்
கெட்டவர்களுக்கு மிக நல்ல மனைவிகள் வாய்த்து விடுகிறார்கள்.
மனைவியின் பொறுமையைச் சோதிப்பதற்கு இதைவிட வேறு
வில்லங்கமான வாழ்க்கை என்ன இருக்கிறது?

12. புருஷன் பேச்சில் மனைவிக்குக் கவனம் எப்போதும் இருக்கும்
தெரியுமா? அந்தப் பேச்சு இன்னொரு பெண்ணை பற்றி
இருக்கும்போதுதான்.

13. கணவன் மனைவிக்குத் துரோகம் செய்தால், அது வீட்டுக்குள்ளிருந்து
வீதியில் காறி உமிழ்வது போன்றது. மனைவி, கணவனுக்குத் துரோகம்
செய்தால் அது வீதியிலிருந்து வீட்டுக்குள் காறி உமிழ்வது போன்றது.

14. இந்தக் காலத்தில் பிரம்மச்சாரிகள் கல்யாணம் செய்து
கொண்டவரிகளைப் போன்று வாழ்ந்து வருகிறார்கள். கல்யாணம்
செய்து கொண்டவர்கள் பிரம்மச்சாரிகளைப் போன்று வாழ்ந்து
வருகிறார்கள்.


டிஸ்கி 1 - இந்த கருத்துக்கள் யாவும் என் சொந்தக் கருத்துக்கள் அல்ல,அறிஞர்களின் கருத்துக்கள்,நூலகத்தில் இருந்து சுட்டுட்டு வந்த புக்கிலிருந்து சுட்டது.இந்த மாதிரி ஏற்கனவே 4 வருஷத்துக்கு முன் நான் பதிவிட்டு விட்டேன் என்று யாராவது புலம்பினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.ஆங்கில நூலிலிருந்து மொழி பெயர்ப்பு.


டிஸ்கி 2 - நயன்தாரா ஃபோட்டோ சும்மா கிளாமருக்கு,அவருக்கோ அவரது தற்போதைய காதலருக்கோ அட்வைஸ் செய்யும் நோக்கம் எதுவும் இல்லை


டிஸ்கி 3. - லைப்ரரில இருந்து புக் சுடுவது எப்படி? புக் எக்ஸிபிஷனிலிருந்து புக் சுடுவது எப்படி? எனது அடுத்தடுத்த பதிவுகளாக வர இருக்கிறது,கபர்தார்

Thursday, October 14, 2010

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா .....

   

      இந்தியா முழுவதும் விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம்.அப்போது அலகாபாத்தில் முக்கியமான் காங்கிரஸ் மாநாடு ஒன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு முக்கிய்மான் பொறுப்பாளர், வல்லபாய் பட்டேல் ஆவார். மாநாடு தொடங்கும் நேரமாகியும் வல்லபாய் பட்டேல் வந்து சேரவில்லை.மேடையிலிருந்த காந்தியடிகள், “ வல்லபாய் பட்டேல் என்ன ஆனார்? ஏன் இன்னும்
வரவில்லை?” என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார்.

            மாநாடு தொடங்கி அரை மணி நேரம் ஆன பிறகு வல்லபாய் பட்டேல்பரபரப்புடன் வேகமாக ஓடி வந்தார். அவரைக் கண்ட காந்திஜி, “நமது நாட்டிற்குச்சுதந்திரம் வருவதற்கு அரை மணி நேரம் தாமதமானால் அதற்கு வல்லபாய் பட்டேல்தான்
காரணம்” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.  பட்டேல் காந்தியடிகளுக்கு வணக்கம் தெரிவித்து, “மாநாடுகளுக்கு
நான் வரும் நேரத்தைப் பொறுத்துதான் நமது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்குமென்றால் அடுத்த மாநாட்டின்போது பல மணி நேரம் முன்னதாகவே வந்துவிடுகிறேன்” என்று கூறினார். அதைக் கேட்டு மேடையிலிருந்த காந்திஜி உட்பட அனைவரும் மகிழ்ச்சியோடு
சிரித்துக் கொண்டார்கள்.