Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Saturday, August 11, 2012

35,000 கோடி ஊழல்!!! அடேங்கப்பா சி டி ரெடி

35 ஆயிரம் கோடி மாமூல் வாங்கியோர் சி.டி.! 


இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டை அடையாளப்படுத்தும் முக்கிய அம்சமாக இருப்பது கனிமக் கொள்ளைதான் போலும்! ஆந்திராவில் நடந்தது மாபெரும் கொள்ளை. கர்நாடகாவில் ஆட்சியையும் முதலமைச்சர் களையுமே ஆட்டுவிப்பதும் இதுதான். வடகிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பசுமை வேட்டைக்குத் தூண்டுதலாய் அமைந்ததும் கனிம வளங்கள்தான். அரசாங்கத்தின் சொத்தை தனியார் கொள்ளை அடித்துப் பதுக்கிக்கொள்வது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. தமிழகத்தில் இப்போதுதான் முதன்முதலாக இந்த முதலைகள் சிக்க ஆரம்பித்து உள்ளனர்!



கனிம வளங்கள் குவிந்துகிடக்கும் நிலப் பகுதி மலையாக, காடாக, மூன்று போகம் விளையும் நிலமாக இருந்தாலும் அவை உடனடியாக தேசியச் சொத்தாக மாற்றப்படும். அதன் பின் அவை அடிமாட்டு விலைக்கு தனியார் முதலாளிகளுக்குக் குத்தகை என்ற பெயரில் தாரைவார்க்கப்படும். இப்படித்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கனிம வளங்கள் சுரண்டப்படுகின்றன. இதற்கு ஆப்பு வைப்பதுபோல் ஒரு முடிவு எடுத்து கனிமக் கொள்ளையர்களைக் கதிகலங்க வைத்துள்ளது ஜார்கண்ட் மாநில அரசு.



ஜார்கண்ட் மாநிலத்தின் காத்குரி மற்றும் மேற்கு சிங்பும் பகுதிகள் இரும்புத் தாது நிரம்பிய மாவட்டங்கள். இங்கு இரும்புத் தயாரிப்புத் தொழிற்சாலை அமைக்கப்போகிறோம் என்று கூறி ஆறு தனியார் நிறுவனங்கள் மாநில அரசிடம் அனுமதி பெற்றன. பிறகுதான் அவை அனைத் துமே, இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்கும் நிறுவனங்கள் என்பது தெரியவந்தது. 

உடனே அவர் களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ஜார்கண்ட் அரசு ரத்து செய்தது. ஜார்கண்ட் அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து, தனியார் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோத்தா, ஹெச்.எல்.கோகலே ஆகியோர், 'கனிம வளங்கள் தேசிய சொத்து. தேசிய சொத்தைக் குத்தகைக்கு விடுவது, விடப்பட்ட குத்தகையை ரத்துசெய்வது போன்ற நடவடிக்கைகள் சுரங்கம் மற்றும் கனிம சட்டங்களுக்கு உட்பட்டது.



 இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. கனிம வளங்கள் உள்ள நிலம் தனியாருக்குச் சொந்தமானதாக இருந்தாலும், அவர்கள் அதை குத்தகைக்குப் பெற்றிருந்தாலும் நிலத்தில் கிடைக்கும் கனிமங்கள் அரசுக்குச் சொந்தமானவைதான். கனிம வளங்களை அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசின் கூட்டு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மற்றபடி வேறு யாரும் அதற்கு உரிமை கோர முடியாது’ என்று கூறி தனியார் நிறுவனங்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டனர். ஜார்கண்ட் அரசின் நடவடிக்கையையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்தில்கொண்டால், மதுரை கிரானைட் குவாரிகளுக்கும் இந்தத் தீர்ப்பு அப்படியே பொருந்தும்.



இந்த நிலையில், ''கிரானைட் குவாரி மோசடி வழக்கில் சிலதனியார் முதலாளிகள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதி உள்ளது தமிழ்நாடு கனிம வள நிறுவன ஊழியர் சங்கம். அதன் செயலாளர் விஜயனைச் சந்தித்தோம். 



''அதிகாரிகளின் தில்லுமுல்லுகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், டாமின் நிறுவனம் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தை 1979-ம் ஆண்டு, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இதன் பிரதான நோக்கம், கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதும், மண்ணுக்கு அடியில் வீணாகப் புதைந்துகிடக்கும் கனிமங்களைக் கண்டுபிடித்து, அவற்றை வெட்டி எடுப்பதன் மூலம் நாட்டின் வருவாயை உயர்த்துவதும்தான். டாமின் தொடங்கப்பட்டபோது, அதன் முதலீடு 100 கோடி ரூபாய். கனிம வளங்களைக் கண்டுபிடிப்பதும், அவற்றை வெட்டி எடுத்து விற்பனை செய்வதும் முழுக்க முழுக்க டாமின் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதேபோல், கனிம வளங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தாலும், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருந்தாலும், அவை அரசுக்குத்தான் சொந்தம் என்ற நிலை இருந்தது.



10 ஆண்டுகளுக்கு முன்பு டாமின் நிறுவனத்தின் கொள்கையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, அரசுக்குச் சொந்தமான குவாரிகளில் உள்ள கனிமங்களை வெட்டி எடுக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், தனியார் பட்டா நிலங்களில் உள்ள கனிமங்களை நிலத்தின் சொந்தக்காரர்களே வெட்டி எடுத்து விற்பனையும் செய்யலாம் என்று விதிமுறைகள் மாற்றப்பட்டன. இவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை மட்டும் டாமின் அதிகாரிகள் தங்கள் வசம் வைத்திருந்தனர். இதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருந்ததைப்போல், தனியார் முதலாளிகள் தங்கள் தகிடுதத்தங்களை அரங்கேற்ற ஆரம்பித்தனர்.



டாமின் நிறுவனத்தில் கனிமங்கள் வெட்டி எடுக்கும் தனியார் நிறுவனங்கள், அதற்கு அருகிலேயே ஒரு பட்டா இடத்தை வாங்குவார்கள். அங்கு கிரானைட் கிடைக்கிறதோ இல்லையோ... அங்கும் கற்கள் வெட்டும் பணி நடைபெறும். அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கற்கள் அனைத்தும் தனியார் குவாரிக்குக் கடத்தப்படும். பின், அந்தக் கற்கள் தனியார் குவாரியிலேயே வெட்டி எடுக்கப் பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்படும். இதை கண்காணித்துப் பதிவுசெய்ய வேண்டிய உதவி இயக்குனர் (சுரங்கம்), வருவாய்த் துறை கோட்ட மேலாளர் போன்றவர்களை தனியார் முதலாளிகள்  கவனித்துவிடுவார்கள். இதனால் அரசுக்கு வர வேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் தனியார் முதலாளிகளுக்குப் போய்ச்சேரும். உதாரணமாக மதுரையில் உள்ள அரசு டாமின் குவாரிக்கு 30 அடி தூரத்தில், அரசியல் செல்வாக்குள்ள மனிதரின் மகனுக்குச் சொந்தமான  கிரானைட் குவாரி உள்ளது. அரசு குவாரியில் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்கள் எல்லாம், இந்தக் குவாரியில் வெட்டி எடுக்கப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப் பட்டு உள்ளது

.

இதேபோல், வேலூர் மாவட்டம் மகிமண்டலம் என்ற ஊரில் வெட்டி எடுக்கப்பட்ட 45 கன மீட்டர் அளவுள்ள கற்களை 3 க.மீ அளவுள்ள கற்கள் என்று போலியாகக் கணக்கு காட்டி உள்ளனர். ஒரு க.மீ. கறுப்பு கிரானைட் கல்லின் விலை 70 ஆயிரம் ரூபாய். அப்படியானால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்று கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். அதேபோல், மேலூரில் பி.ஆர்.பி. நிறுவனம் 100 அடி ஆழத்துக்குக் கற்களை வெட்டி எடுத்துள்ளது. இதைப் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.



இந்தத் தொழிலில், தனியார் நிறுவனங்கள் லாபம் மட்டும் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும்போது, தமிழக அரசின் கனிம வள நிறுவனம், கடந்த ஆறு ஆண்டுகளாக 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே லாபம் ஈட்டியுள்ளது. தனியார் முதலாளிகளின் கைக்கூலிகளாக அவர்கள் செயல் பட்ட காரணத்தால்தான், இத்தனை முறைகேடுகளும் நடந்தன. தற்போது, விதிமுறைகளை மீறி கொள்ளை லாபம் சம்பாதித்த சில தனியார் முதலாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அந்த முதலாளிகளின் கூட்டுக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். அதோடு முழுக்க முழுக்க கனிம வளத்தைத் தோண்டி எடுக்கும் பணிகளை முன்பு போல் அரசே செய்ய வேண்டும்'' என்றார் விரிவாக.



''மதுரை கலெக்டராக இருந்த சகாயம் ஒரு கணக்குப் போட்டு சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் மதுரை வட்டாரத்தில் இருக்கும் கனிம வளங்களைக் கணக்கிட்டு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வரைக்கும் முறைகேடு நடந்துள்ளதாக முடிவுக்கு வந்துள்ளோம்'' என்று இப்போது சொல்லும் சில உயர் அதிகாரிகள், ''வருவாய்த் துறை, கனிமவளத் துறை, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு இதுவரை இந்த நிறுவனங்கள் எவ்வளவு செலவு செய்துள்ளன என்பதற்கான பட்டியலை சி.டி.யாக தயாரித்து வைத்துள்ளார்கள்.


டைரியில் எழுதியும் வைத்துள்ளார்கள். அதன் விவரங்கள் எங்களுக்குக் கிடைத்துவிட்டன. கடந்த 15 ஆண்டுகளாக இப்படி மாமூல் வாங்கிய மந்திரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் பட்டியல் பெரியது!'' என்கிறார்கள். இதனைத் தெரிந்துகொண்ட குவாரி அதிபர் ஒருவர், ஆட்சியை மிரட்டும் தொனியில் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து பேசியதாகவும் அவர் அதனை டேப் செய்து கோட்டைப் பிரமுகர் ஒருவருக்குக் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இது அரசு நடவடிக்கையின் வேகத்தை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது.



அதிரடி தொடரட்டும்!



'சத்யராஜ், சரத்குமார் சொன்னதால பணம் போட்டோம்!''



ஈமு ஓட்டம்... பதறும் முதலீட்டாளர்கள்!



எத்தனையோ முறை சொன்னோம். ஆனால், பட்டால்தான் திருந்துவோம் என்ற முடிவோடு ஏமாந்தவர்களை என்னவென்று சொல்வது!



ஈமு கோழியில் முதலீடு செய்பவர்களைத் தொடர்ந்து எச்சரித்து வந்தோம். கடந்த சில வாரங்களுக்கு முன், கோபிசெட்டிபாளையத்தில் கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் என்ற நிறுவனத்தின் மீது புகார் கிளம்பியது. இப்போது, பெருந்துறையைச் சேர்ந்த சுசி ஈமு ஃபார்ம்ஸ் காவல்துறையின் பிடிக்குள் சிக்கி இருக்கிறது. ஏமாற்றப்பட்டு நொந்துபோய் இருக்கும் விவசாயிகள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடவே, இந்த நிறுவனத்தின் விளம்பரப் படங்களில் நடித்த நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் புகார் செய்யவே ஏரியா கலகலக்கிறது.



ஈமு வளர்ப்பு மோசடிக்கு எதிராக பல வருடங்களாகப் போராடி வரும் வழக்கறிஞர் தளபதியைச் சந்தித்தோம். ''சுசி ஈமு நிறுவனத்தின் அதிபர் குரு என்ற குருசாமி. இவர், பெருந்துறை நகர பா.ம.க. செயலாளராக இருந்தவர். இத னால் அவருக்கு ஒரு அறிமுகம் இருந்தது. மேலும், ஈமுவுக்காக விளம்பரம் செய்த நடிகர்கள் சத்யராஜ் மற்றும் சரத்குமார் மீது மக்களுக்கு நிறைய மரியாதை இருக் கிறது. 

 

அதனால்தான், பாமர கிராம விவ சாயிகள் உட்பட 25,000 பேருக்கும் மேல் முதலீடு செய்தனர். மொத்த முதலீடு 600 கோடி ரூபாயைத் தாண்டி இருக்கலாம். இந்த மோசடிக்கு மாவட்ட நிர்வாகம், கால்நடைத் துறையும் உடந்தையாக இருந்துள்ளன. இவர்கள் அனைவரின் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் ஆவேசமாக.



சுசி ஈமு ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் பேசியவர்கள், ''எங்க நிறுவனத்தின் உரிமையாளர் குரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். இங்கே உள்ள ஆதிக்க சமுதாயத்தினரும், காவல்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளும் மாமூல் கேட்டு தொடர்ந்து அவரை மிரட்டி வந்தனர். ஆனால், மாமூல் கொடுக்க குரு மறுத்து விட்டார். அதனால், ஆட்களைத் தயார் செய்து, ஒரே சமயத்தில் எங்கள் நிறுவனத்தை முற்றுகையிட வைத்து பிரச்னை ஆக்கி விட்டனர். முதலீட்டாளர்களுக்கு நாங்கள் பணம் கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம்'' என்றனர்.



விளம்பரத்தில் நடித்த நடிகர் சத்யராஜிடம் பேசினோம். ''ஈமு கோழி விளம்பரம்னு சொன்னாங்க. நடிச்சுக் கொடுத்தேன். மத்தபடி அதுல இருக்கும் நல்லது கெட்டது எல்லாம் எனக்குத் தெரியாதுங்க'' என்று சொன்னார்.




சரத்குமார் தரப்பிலோ, ''சுசி ஈமு நிறுவனத்தினர் ஒரு ரெஸ்டாரன்ட் நடத்தி வருகின்றனர். அதற்கான விளம்பரத்தில், ஈமு கோழியின் கறி உடலுக்கு நல்லது. ஈமு கோழி சாப்பிடுங்க என்பது மட்டும்தான் சரத்குமார் சொல்வதைப் போல வரும். மற்றபடி எந்த இடத்திலும் ஈமு வளர்த்தால் லாபம் சம்பாதிக்கலாம் என்று அவர் சொல்லவில்லை. அதுவும் இல்லாமல் விளம்பரத்தின் நம்பகத் தன்மைக்கு அதில் நடித்தவர்கள் எப்படி பொறுப்பாக முடியும். இதை சட்டரீதியாக சந்திக்க சரத்குமார் தயாராக இருக்கிறார்'' என்றார்கள்.

ஆனால், மாமூல்

ஈமு தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான புகார்கள் வந்துள்ளன. 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. புகார் தருபவர்கள் சத்யராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் சொன்னதனால்தான் முதலீடு செய்தோம் என்கின்றனர். இந்த விஷயத்தில் நடிகர்களும் பொறுப்பு உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். இவை ஒரு பக்கம் இருக்க... அந்தப் பண் ணைகளில் இருக்கும் ஈமுவுக்கு உணவு கொடுக்க யாரும் இல்லை. அதன் பசியைப் போக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்'' என்றார்.



ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்!



நன்றி - ஜூ வி

Wednesday, August 08, 2012

ஈரோடு தனியார் வங்கி அதிகாரி லவ் சீட்டிங்க் - 10 ஆண்டு ஜெயில்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
திருச்சி: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கில் வங்கி அதிகாரிக்கு 10 வருட சிறை தண்டனையும், ரூ.1.15லட்சம் அபராதமும் விதித்து திருச்சி மகளிர் கோர்ட் உத்தரவிட்டது. 


திருச்சி திருவெறும்பூர் வடக்கு காட்டூரை சேர்ந்தவர் அருண் பிரசாத் (30). தில்லைநகரில் உள்ள தனியார் வங்கியின் அதிகாரி. இவருடன் அதே வங்கியில் உறையூரை சேர்ந்த பாத்திமா (29)  பணியாற்றினார். இருவரும் 2006 முதல் காதலித்தனர். இதில் பாத்திமா கர்ப்பமடைந்தார். சில வருடங்கள் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறி, 2007 ஜூலை 2ம் தேதி தில்லை நகரில் உள்ள மருத்துவமனையில் பாத்திமாவுக்கு,  கருகலைப்பு செய்தார். 



இந்நிலையில் சில மாதங்களில் அருண்பிரசாத் ஈரோட்டுக்கும், பாத்திமா தேனிக்கும்  மாற்றப்பட்டனர். இந்நிலையில் அருண்பிரசாத், அங்கு வேலை பார்க்கும் தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த பாத்திமா அருண்பிரசாத்திடம் கேட்டபோது, உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

இதுபற்றிய புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் அருண்பிரசாத் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை மகிளா நீதிமன்ற நீதிபதி ரகுமான் நேற்று கூறினார். தீர்ப்பில், பாத்திமாவை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 10 வருடம் சிறைதண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும், திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதற்கு 1 வருடம் சிறை தண்டனை ரூ.5 ஆயிரம் அபராதம் இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என கூறினார்



. மேலும் அபராத தொகையில் ரூ.1 லட்சத்தை பாத்திமா பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும், ரூ.15 ஆயிரத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து அருண் பிரசாத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 நன்றி - தினகரன்

Tuesday, August 07, 2012

பெருந்துறை சுசி ஈமுப்பண்ணை - கோடிக்கணக்கில் மோசடி - தலைமறைவு


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஈமு கோழிப்பண்ணையின் தாயகம் என சொல்லப்படும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சுசி ஈமுக்கோழிப்பண்ணை இழுத்து மூடப்பட்டது.. நேற்று அங்கே ஒரே பரபரப்பாக இருந்தது, மக்கள், முதலீட்டாளர்கள் கூட்டம் கூடி இருந்தது.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு என்று கோஷம் போட்டார்கள்.


ஆர் பார்த்திபன், கே பாக்யராஜ், பரவை முனியம்மா போன்ற பலர் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாம் தெரிந்தவர்கள் போல கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டை படித்து நடித்து விட்டுப்போகிறார்கள்.. இது சமுதாயத்தை எந்த அளவு பாதிக்கிறது என்பதை அவர்கள் உணர்வதில்லை.. 

 ஒரு சோப் விளம்பரமோ, ஷாம்பு விளம்பரமோ இந்த அளவு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. ஆனால் லட்சக்கணக்கான முதலீடு சம்பந்தப்பட்ட மேட்டர் என்பதால் மக்கள் ஒரு நம்பகத்தன்மையை  சினிமா பிரபலங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். 


மக்கள் இவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.. சினிமா பிரபலங்களும் காசு கிடைக்குதுன்னு கண்ட கண்ட விளம்பரங்களில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்.. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் இமேஜும் தான்..


நேற்று மாலை 5 மணிக்கு  முதலீட்டாளர்கள் வாசலில் கூடி நின்று கோஷம் போட்டிருக்கிறார்கள்.. கொடுத்த பணத்தை திருப்பிக்கொடு, லாபம் ஏதும் வேண்டாம், முதலீட்டுத்தொகை மட்டும் போதும் என  கெஞ்சிக்கேட்டும் பொறுப்பான பதில் இல்லை..


ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களில் மட்டும்  கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.. முழுமையான விபரம் இன்னும் 2 நாட்களில் தெரியும்..  பணத்தை இழந்தவர்கள் பெருந்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வருகிறார்கள்.. பலர் வெளியே சொன்னால் கேவலம் என்று யோசித்து வருகிறார்கள்..


 கலைமகள் சபா, தேக்கு மர மோசடி ஆகியவற்றுக்குப்பின் சமீபத்தில் நடந்த மிகப்பெரும் மோசடி இதுதான்.. கவுண்டர்கள் , முதலியார்கள் சமூகத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது ..


ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் ரூ 6000 தருவதாக வாகு கொடுத்தவர்கள் அபப்டி தர முடியாததால்  வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் கேள்விக்கு பதில் தர முடியாமல் திணறினர்..

 அரசு 80 ப்பைசா வட்டி தருது, மியூச்சுவல் ஃபண்ட்ஸ் தனியார் சீட்டு நிறுவனங்கள் நமக்கு ரூ 2 முதல் ரூ3 வரை வட்டி தருது.. அப்படி இருக்க ரூ 100க்கு ரூ 6 வட்டி என்றதும் மக்கள் அது எப்படி முடியும்? என்றெல்லாம் யோசிக்காமல் முதலீட்டை அள்ளி அள்ளி வழங்கினர்,..


இப்போ உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற பழமொழிக்கெற்ப சோகத்தோடு உலா வருகின்றனர்..


ஈமு கோழிகளுக்கு தீவனம் வழங்கும் நிறுவனத்துக்கு இவர்கள் ரூ 1,34,000 பாக்கி வைத்திருக்கிறார்கள்.. எனவே அவர்கள் சப்ளையை நிறுத்தி விட்டார்கள். விஷயம் வெளீயே கசிந்ததும் மக்கள் பொங்கி விட்டார்கள்..


 மக்களின் புகாருக்குப்பின் போலீஸ் பெருந்துறை சுசி பண்ணை உரிமையாளர்  குருவை தொடர்பு கொண்டபோது அண்ணன் செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணீ விட்டிருந்தார்.. கம்ப்யூட்டர்களை செக் பண்ணியபோது அவர்கள் வங்கிக்கணக்கில் ரூ  18,78,000 மட்டுமே இருந்தது..


இது மேலும் அதிர்ச்சி.,. ஏன்னா குறைஞ்ச பட்சம் 1000 பேர் தலா 1 லட்சம்னு முதலீடு  கணக்கு போட்டலும் 10 கோடி ரூபா இருக்கனும்.. எல்லாம் ஸ்வாகாவா? தெரியலை




 சுசி ஈமு பண்ணை ஒரு வருடம் முன் தமிழ் முரசு பத்திரிக்கைக்கு கொடுத்த இண்ட்டர்வியூவை இப்போ பார்ப்போம்






‘ஈமு கோழி வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘சுசி ஈமு பார்ம்ஸ் இந்தியா’ நடத்திவரும் எம்ஜிஎஸ்.அவர் கூறியதாவது:





நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். கல்லூரி படிப்பை முடித்தவுடன் தனியார் நிறுவனத்தில் மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைபார்த்து வந்தேன். விவசாயம் மற்றும் பண்ணைகள் பற்றிய தகவல்களை ஆர்வமுடன் தெரிந்து கொள்வேன். ஆந்திரா, புதுவை ஆகிய இடங்களில் உள்ள பண்ணைகளுக்கு சென்று ஈமு கோழி வளர்ப்பு குறித்து முழுமையாக அறிந்துகொண்டேன்
.




2004ம் ஆண்டு 5 ஜோடி ஈமு கோழிகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும்  வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த் தேன். ஈமு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் ஈமு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் ஈமுவை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன்.  சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.




சந்தை வாய்ப்பு!



ஈமு இறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.




பயன்கள்: மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது ஈமுவில் கழிவு குறைவு. முட்டை, இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. ஈமு கோழிகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் ஈமு. ஈமு இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது.  40 முதல் 45 கிலோ எடை கொண்ட ஈமுவை இறைச்சிக்காக வெட்டும்போது 10 முதல் 12 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.



கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 முதல் 6 லிட்டர் ஈமு எண் ணெய் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு ஈமுவில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.



இதன் சிறகுகள்  கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களை சுத்தம் செய்யும் பிரஷ்கள் தயாரிக்கவும், அழகான தொப்பிகள், ஆடைகளின் மேல் அழகு வேலை பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாஸ்து பொருளாகவும் ஈமு முட்டைகளை பயன்படுத்துகின்றனர். ஈமு முட்டைகளை வீட்டில் வைத்திருந்தால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.

கட்டமைப்பு


பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி ஈமு குஞ்சுகள்(ரூ.75 ஆயிரம்) வேண்டும். 40 அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், தண்ணீர் தொட்டி (இதற்கு செலவு ரூ.15 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.



எங்கு வாங்கலாம்?



ஈமு குஞ்சுகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள ஈமு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.



குஞ்சுகள் தேர்வு



ஈமு குஞ்சுகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, கால்களை வளைக்காமல் நடக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேற்பட்ட குஞ்சுகளைதான் வாங்க வேண்டும். முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகளுக்கு 3 மாதம் வரை உடல் பகுதியில் வெள்ளை கோடுகள் இருக்கும். 3 மாதத்துக்கு பின் கோடுகள் மறைந்து இயல்பான நிறம் வரும். 3 மாத ஈமு, 4 முதல் 6 கிலோ எடை இருக்கும்.



வளர்ப்பு முறை



3 மாத குஞ்சுகளை வாங்கிவந்து 5 மாதம் வரை கூட்டமாக வளர்க்கலாம். ஆண், பெண் தெரிந்த பின்  தனித்தனியாக பிரித்து வளர்க்க வேண்டும். பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் முட்டையிடும் பருவத்துக்கு வரும். தொண்டையில் இருந்து தும்தும் என ஒலி எழுப்புவதை வைத்து இதை தெரிந்து கொள்ளலாம்.   24வது மாதத்தில் இனச்சேர்க்கைக்கு  விட்டால் அதிக முட்டை கிடைப்பதோடு தரமான குஞ்சுகளையும் பொரிக்க வைக்க முடியும்.



குஞ்சு பொரிப்பு


ஹேச்சர் மெஷினில் ஒரே நேரத்தில் 700 முட்டைகளை அடுக்கி வைத்து, 93 முதல் 96 டிகிரி வரை தொடர்ந்து 52 நாட்களுக்கு  வைத்திருக்க வேண்டும். பொரித்த குஞ்சுகளுக்கு கால்கள் வளையாமல் இருக்க 2 கால்களையும் சேர்த்து டேப் மூலம் ஒட்டி விடவேண்டும். 15 நாட்களுக்கு பின் டேப்பை பிரித்து இன்குபேட்டரில் 20 நாட்களுக்கு வைக்க வேண்டும். பின்னர் குஞ்சுகளுக்காக தனியாக ஷெட் அமைத்து ஒரு மாதம் வளர்க்க வேண்டும். 3 மாதத்துக்கு பின்னர் வளர்ந்த கோழியாக மாறும்.



வருமானம்


3 மாத வயதுள்ள 5 ஜோடி ஈமு வளர்த்தால் 16 மாதத்துக்குள் 30 கிலோ எடையுள்ள ஈமு கோழி கிடைக்கும். 5 ஜோடியும் சராசரியாக 30 கிலோ எடை இருந்தால் 300 கிலோ இறைச்சி கிடைக்கும். ஒரு கிலோ இறைச்சி குறைந்தபட்சம் ரூ.295க்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம் ரூ.88,500 கிடைக்கும். வெட்டப்படும் கோழிகளில் இருந்து 5 லிட்டர் எண்ணெய் வீதம் 5 ஜோடி ஈமுவுக்கு 50 லிட்டர் ஈமு எண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் ரூ.1500க்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.75 ஆயிரம் கிடைக்கும். இறைச்சி, கொழுப்பு மூலம் ஒரு ஆண்டில் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 கிடைக்கும்.


இதற்கான செலவு 5 ஜோடி ஈமு கோழிகள் ரூ.75 ஆயிரம், 15 மாதத்திற்கு அதற்கான தீனி உள்பட மற்ற செலவுகள் ரூ.25 ஆயிரம். ஆண்டு முடிவில் 5 ஜோடிகளுக்கு மட்டும் ரூ.63,500 வருமானம் கிடைக்கும். 15 மாதத்தில் இறைச்சிக்காக ஈமுக்களை


இனவிருத்தி செய்து வளர்த்தால் பெண் ஈமுக்கள் 18வது மாதத்தில் பருவத்துக்கு வந்து ஆண்டுக்கு 20 முட்டைகள் தரும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான 60 குஞ்சுகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம்.



தினமணி செய்தி - ஈரோடு பகுதியில் சுசீ ஈமு ஃபார்ம் - ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தில் கடந்த 3 நாள்களாக கோழித் தீவனம் இன்றி திண்டாடுவதால், ஈமு கோழிகள் தீவனம் இன்றி வாடிப் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 


சுசீ ஈமு ஃபார்ம் கோழிப் பண்ணையில் முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்து, பண்ணையை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் பண்ணையின் செயல்பாடு தடைப்பட்டுள்ளது. கோழிப் பண்ணை நிர்வாக இயக்குனர் மீது முதலீட்டாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர் போலீஸார். இந்நிலையில் இன்று அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. 


அதிகாரிகள் அந்தக் கோழி நிறுவனத்தின் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கிருந்த 75 ஆயிரம் ஈமு கோழிகளுக்குத் தேவையான தீவனம் நிறுவனத்தில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. கடந்த 3 நாள்களாக கோழிகள் தீவனமின்றி இருந்ததும் தெரியவந்தது. அதிகாரிகளும் அவற்றின் தீவனத்துக்கு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். கோழிகளையும் அழிக்க முடியாது என்பதால் சரியான தீர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

 



நன்றி - ஈரோடு சோழமண்டலம்  ஃபைனான்ஸ் கதிர், தமிழ் முரசு, பெருந்துறை நகர பொதுமக்கள், பெருந்துறை போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு, தினமணி

Monday, August 06, 2012

ரூ 16,000 கோடி ஊழல் - கிரானைட் மோசடி -சகாயம் ஐ ஏ எஸ் அறிக்கை

சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, அர”க்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்திய நிறுவனங்களின் மீது, ஆமை வேகத்தில், வேண்டா வெறுப்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை துவங்கி உள்ளது. 


இந்த நடவடிக்கைக்கு ஆதாரமானது, முன்னாள் மதுரை கலெக்டர் சகாயம், கடந்த மே மாதம் கொடுத்த ஆய்வு அறிக்கை. கனிமக் கொள்ளையர்களின் பணப் பலம் கருதி, இது கிடப்பில் போடப் பட்டு இருந்தது. இந்த அறிக்கையில் உள்ள சில தகவல்கள், ஊடகங்களில் வெளிவந்த பின் தான் நடவடிக்கை துவங்கப் பட்டது. இது போன்ற விஷயங்களில், தடபுடலாக துவங்கும் விசாரணை, வீரியம் இழப்பதில் ஆச்சரியம் இல்லை. அதனால், அறிக்கையில் உள்ள முழு தகவல்களையும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.



புகாரும், தேடுதலும்: அறிக்கையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் கூறியிருப்பதாவது: தினபூமி நாளிதழின் ஆசிரியர், தன் புகார் மனுவில், ஆறு மாதங்களில் சுமார், 1,650 கோடி ரூபாய் மதிப்பிலான, 4.50 லட்சம் கன மீட்டர் கிரானைட் கற்கள் அரசுக்கு தெரியாமல் கடத்தப் பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளார். ஆனால், இப்புகார் வருவதற்கு முன்பாக, எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேலூர் பகுதிகளில் இருந்து கிரானைட் கற்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்பதை கண்டறிய, என் தலைமையில், துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டன.



கடந்த ஆண்டு, டிச., 14 மற்றும் 24; இந்த ஆண்டு ஜன., 28 மற்றும் பிப்., 3 ஆகிய தேதிகளில், இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப் பட்டது. அப்போது, முறைகேடாக கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பிடிபடவில்லை. தினபூமி ஆசிரியர் குறிப்பிட்டப்படி, ஆறு மாதங்களில், 1,650 கோடி ரூபாய் மதிப்பு கிரானைட் கடத்தப் பட்டு உள்ளதாகக் கூறப்பட்ட தகவல் சரியானதாக இல்லை.



 ஏனெனில், இந்த கடத்தல் தொழில் பல ஆண்டுகளாக நடந்து வருவது விசாரணையில் தெரிய வருகிறது. இருப்பினும், கனிமவளத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க செய்ததில், கடந்த ஏப்ரல் 13ம் தேதி, மேலூர் தாசில்தாரால் கிரானைட் கல் கடத்தப்பட்ட வாகனம் கைப்பற்றப் பட்டு நடவடிக்கை எடுக்கப் பட்டது.



நாளிதழ் ஆசிரியரின் புகார் மனுவில், கிரானைட் குத்தகைதாரர்களில் ஒருவரான துரைதயாநிதி மற்றும் சு.நாகராஜிற்கு சொந்தமான, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், கீழவளவு கிராமத்தில் வழங்கப் பட்ட குத்தகை உரிமத்தை தவறாக பயன்படுத்தி, அதே கிராமத்தில், தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு குத்தகை உரிமம் வழங்கப் பட்ட இடத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டதாகவும், நீர்நிலை, புறம்போக்குகளான ஊரணி, கண்மாய், பொதுப்பாதை, பாறை வாய்க்கால், கோவில் நிலங்கள் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து, கிரானைட் கற்களை வெட்டி எடுத்து விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.




ஆக்கிரமிப்பும், கொள்ளையும்: புகாரில் கொடுக்கப் பட்ட தொகை சரியாக வராததால், ஆக்கிரமிப்பு என்ற கோணத்தில் விசாரணை திரும்பியது. அப்போது, அது மட்டுமின்றி மேலும் பல கொள்ளைகள் அம்பலப் பட்டன. இது குறித்து, சகாயம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது: 


இந்த இடங்களில் (புகாரில் குறிப்பிடப் பட்டவை), ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து, உடனே அகற்றி, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப் பட்டது. தகவல்களின் அடிப்படையில், கீழவளவு மற்றும் கீழையூரில் அமைந்து உள்ள ஒலிம்பஸ், சிந்து மற்றும் பி.ஆர்.பி., கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்ததில், அனுமதியின்றி கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப் பட்டது கண்டறியப் பட்டு உள்ளது. ஆய்வில், இந்த மூன்று குவாரிகளில் மட்டும், உரிம இழப்பாக, 58.38 லட்சம் ரூபாய், கனிம மதிப்பு இழப்பாக, 13.52 கோடி ரூபாயும், உரிமத்திற்கான அபராதத் தொகை பத்து மடங்காக, 9.97 கோடி ரூபாயும் என, 23.42 கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாக அறியப் படுகிறது.




இந்த மூன்று குவாரிகளில் ஏற்பட்டு உள்ள வருவாய் இழப்பு போல, மீதமுள்ள, 91 குவாரிகளிலும் வெட்டி எடுக்கப் பட்டு உள்ள கிரானைட் கற்களையும் அளந்து கணக்கிட்டால், இது போல், பல நூறு கோடி (ரூபாய்) இழப்பு ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்திற்குச் சொந்தமான கிரானைட் கற்கள் இருப்பு வைக்கும் இடத்தில், டாமின் குவாரிகளில் இருந்து, சுமார், 8,37,500 கன மீட்டர் அளவுள்ள, 3,350 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் நகர்வு செய்யப்பட்டு வைக்கப் பட்டு உள்ளதற்கு ஆதாரமான போட்டோக்கள், வீடியோ படங்களும், இந்த பெரும் நிதியிழப்பை உறுதி செய்து உள்ளன. 



மேலும், ஆய்வு செய்த குவாரிகள் தவிர, புகார் மனுவுடன் வந்த மேலூர், கீழையூர், இ.மலப்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள, அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வண்டி பாதைகள் ஆகியவற்றில் அனுமதி பெறாமல், விதிகளை மீறி, 39,30,431 கன மீட்டர் அளவுக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுத்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், 15,721 கோடி ரூபாய், உரிமத் தொகை இழப்பாக, 617 கோடி ரூபாய் என, மொத்தமாக அரசுக்கு, 16,338 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.




கண்மாய்கள் நாசம்: கிரானைட் தொழிலால், இயற்கை வளங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் அழிக்கப் படுவதாக, பல ஆண்டுகளாக புகார்கள் வந்தும், முடிவு எடுக்க வேண்டிய அனைவரும் நன்கு "கவனிக்கப்பட்டதால்', அவர்கள் கண்டுகொள்ளவில்லை. 



இதுகுறித்து, அறிக்கையில், சகாயம் குறிப்பிட்டு உள்ளதாவது: புகார்கள் வருவதற்கு முன், அதிகாரிகள் ஆய்வு செய்து பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததற்கு முகாந்திரம் உள்ளது கண்டறியப் பட்டது. தொடர்ந்து, மே மாதம் 1ம் தேதி, வருவாய் கோட்டாட்சியர், மதுரை துணை கலெக்டர், கனிமவளத் துறை உதவி புவியியலர் ஆகியோருடன், கீழவளவில் உள்ள ஒலிம்பஸ் குவாரியையும், கீழையூர் கண்மாயையும் நானே தணிக்கை செய்தேன். ஒலிம்பஸ் நிறுவனம் சட்ட விரோதமாக கிரானைட் எடுத்திருந்தது உறுதி செய்யப் பட்டது. 



அதே போல், கீழையூர் கண்மாயில், பி.ஆர்.பி., கிரானைட் நிறுவனத்தால் சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் எடுக்கப்பட்டு, கண்மாய் நிர்மூலமாக்கப் பட்டதை நேரில் பார்த்தறிந்தேன். இதை தடுத்து நிறுத்தாத வருவாய், கனிம வள அலுவலர்களை கடிந்து கொண்டேன். தீவிரமாக கண்காணிக்குமாறும், தடுத்து நிறுத்துமாறும் உத்தரவிட்டேன். 


மேலும், மே மாதம் 17ம் தேதியும் ஆய்வு நடத்தப் பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக கிரானைட் வெட்டப் பட்டு, அப்புறப்படுத்தப் படுவதை உறுதி செய்தனர். ஆய்வு நடத்தியவர்கள் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் இல்லை என்பதால், துல்லியமாக கணக்கிட முடியவில்லை. இருந்தாலும், பல நூறு கோடி ரூபாய் வருவாய் இழப்பிற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பது அறிய முடிந்தது.


 மதுரை மாவட்டத்தில், பெரியாறு பிரதான கால்வாய் மூலம், நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் அதிகளவில் பயிரிடப் படுகின்றன. கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி மற்றும் செம்மினிப்பட்டி போன்ற குறிப்பிடத்தக்க கிராமங்களில், கிரானைட் கற்கள் எடுக்கும் நிலங்களுக்கு அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் இவற்றிலும் கிரானைட் கற்கள் எடுக்கப்படுவதும், எடுக்கப்படும் கற்களை இருப்பில் வைக்கும் இடங்களாக இந்த நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டோ, மூடப்பட்டோ வேளாண்மைக்கு பயன்படாதவாறு ஆக்கப் பட்டு உள்ளன.



 இதன் விளைவாக, இந்த கிராமங்களில் வேளாண்மை நடவடிக்கை பெருமளவில் பாதிக்கப் பட்டு உள்ளது. மக்களும், கொஞ்சம் கொஞ்சமாக விவசாய நடவடிக்கைகளை குறைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் போராடிய விவசாயிகள், கிரானைட் நிறுவனங்களுக்கு முன்னால் போராட முடியாமல் ஒடுங்கி விட்டனர்.



 சில நேரங்களில் புகார் செய்தும் பயனில்லாமல் போனதால், விரக்தியடைந்து விட்டனர். இன்னொரு புறம், பி.ஆர்.பி.,- பி.ஆர்.எஸ்., போன்ற தனியார் கிரானைட் நிறுவனங்கள் பிரமாண்டமாக அசுரத்தனமாக பணப் பலத்திலும், ஆள் பலத்திலும் அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்து உள்ளன. இது குறித்த புகார்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய கனிம வளம் மற்றும் வருவாய்த் துறையினர் பயத்தினாலோ அல்லது நிதி லாபம் பெறும் நோக்கத்திலோ ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மை. 


கனிமச் சுரங்கத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கனிம வளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பி.ஆர்.பி.,போன்ற நிறுவனங்களுக்கு எதிராக தங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணமும், ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சமும் அவர்களிடம் இருந்திருக்கலாம். இருந்தாலும், கடத்தலை கண்டும் காணாமல் இருந்ததற்காக வருவாய்த் துறை, கனிமவளத் துறை அலுவலர்களும் மிகப்பெரும் பலனை அடைந்து உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.




ஆழமான கூட்டு: இந்த கொள்ளையை கண்டும், காணாமல் மட்டும் இல்லாமல், கனிமவளத் துறை அதிகாரிகள், சகாயத்தின் விசாரணைக்கு தடங்கலாகவும் இருந்து உள்ளனர்.


இதுகுறித்து, அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளதாவது: இந்த முறைகேடுகள் குறித்து அறிந்து, நடவடிக்கை எடுக்க எச்சரித்தபோது கனிமவளத் துறை அலுவலரிடம் இருந்து முழுமையான தகவல்கள் பெறமுடியவில்லை. தணிக்கைக்குச் செல்ல முயற்சிக்கும்போது, முன்கூட்டியே கிரானைட் உரிமையாளர்களுக்கு சில அலுவலர்கள் தகவல் தெரிவிக்கும் நிலையும் இருந்தது.


 இருப்பினும், பல்லாயிரக்கணக்கான கிராமத்து மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, ஒரு சில தனியார் நிறுவனங்கள் பிரமிப்பூட்டும் பெரும் பலனை அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. மதுரை, மேலூரில் உள்ள டாமின் மற்றும் தனியார் குவாரிகளை முழுமையாக விஞ்ஞானப் பூர்வமாக நவீன தொழில் நுட்பங்களுடன் ஆய்வு செய்தால், நிதியிழப்பு என்பது இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.



அடுத்தடுத்து நடந்தவை: இந்த அறிக்கை, கடந்த மே மாதம், 19ம் தேதி, தொழில்துறை செயலருக்கு அனுப்பப்பட்ட நிலையில், சகாயம் திடீரென கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக மாற்றப் பட்டார். இந்த நிலையில், கடந்த வாரம் இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள், ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா எட்டு புதிய குழுக்களை அமைத்து, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து ஆய்வை துவக்கி உள்ளார்.



 கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக, மதுரையை சுற்றி உள்ள, 90க்கும்மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. முறைகேடுகள் தொடர்பாக, பி.ஆர்.பி., கிரானைட் உரிமையாளர் பழனிச்சாமி, சிந்து கிரானைட் உரிமையாளர் செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டு உள்ளது. நேற்று, ரங்கசாமி புரத்தில் சட்ட விரோதமாக இயங்கிய கிரானைட் குவாரியின் நடவடிக்கைகள் முடக்கப் பட்டு உள்ளன. ஒலிம்பஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகளும் முடக்கப் பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இதே வேகத்தில் நீதி வழங்கப்படுமா? மதுரையில் கிரானைட் எடுப்பது நிறுத்தப்படுமா? என்பதை, தமிழக மக்கள் கவனிக்க வேண்டும்.



தூங்கி வழியும் "டாமின்': தனது அறிக்கையில், சகாயம், டாமின் பற்றி மேலும் குறிப்பிட்டதாவது: அரசு கனிம வள நிறுவனமான டாமின், சில லட்சங்களே சம்பாதிக்கிறது. இதை சார்ந்து செயல்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள் சம்பாதிக்கக் கூடிய தொகை, பல்லாயிரம் கோடிகளாகும். டாமின் நிறுவன கிரானைட் சுரங்கங்களை, அந்த நிறுவனமே நேரடியாக நடத்தினால், அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் வர வாய்ப்புள்ளது என்பது உண்மை. 


மேலும், டாமின் குவாரியில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக இயந்திரங்கள் உதவியுடன் கிரானைட் கற்களை அப்புறப்படுத்தி, தனியார் நிலங்களில் எடுத்து வைக்கப்படுகிறது. பின், வாகனங்களில் அவற்றை கொண்டு சென்று தனியார் கிடங்குகளில் வைக்கப்படுகிறது. இதன் மூலம், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதியிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டு இருந்தார். 



இது குறித்து, வழக்கமான பதிலையே தொழில் துறை அதிகாரிகள் வழங்கினர்: "டாமின்' நிறுவனத்திற்கு சொந்தமான குவாரிகளில் இருந்தும், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கிரானைட்டை வெட்டி எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கான அளவு குறித்து, தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின் போதே, கிரானைட் அதிகளவில் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த குவாரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 



மற்ற பகுதிகளிலும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். "டாமின்' தொழில் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயந்திரங்கள் மூலம், தங்கள் குவாரிகளில் இருந்து கிரானைட் அகற்றப்படும் போது, அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தனர்? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுமா என்பது, தற்போது கேள்வியாக உள்ளது.


 நன்றி - தினமலர்



மலையை முழுங்கிய மாஃபியாக்கள்!

வளத்தைக் காப்பாற்றுவாரா ஜெ.?
யற்கை வளத்தைக் கொள்ளை அடிப்பது இன்று... நேற்றா நடக்கிறது? கொடுமையிலும் கொடு​மை, அந்தக் கொள்ளை பல்லாயிரம் கோடியைத் தொட்டுவிட்டது. இதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  சொல்லும்போது, 'இவனுக்கு வேற வேலை இல்லை’ என்று அதிகாரிகள் உதாசீனம் செய்வார்கள். ஆனால், ஓர் அதிகாரியே சொன்னால்..? 



கிரானைட் மாஃபியாக்களின் அஸ்திவாரத்துக்கே அணுகுண்டு வைக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருப்​பவர், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ். அவரது கடிதம் இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



மதுரையில் இருந்து சகாயத்தை வேறு இடத்துக்கு நகர்த்தவே அவரது இந்த நடவடிக்கைதான் காரணம் என்பதை அப்போதே கழுகார் சொல்லி இருந்தார். 30.5.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில், ''சகாயத்தின் திடீர் மாறுதலுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்​டாலும் கிரானைட் குவாரிகளை இறுக்கிப் பிடித்தது​தான் முக்கியமான காரணம் என்கிறார்கள். மேலூர் பகுதியில் உள்ள சட்டவிரோதக் குவாரிகள் குறித்து சகாயத்துக்குப் புகார் அனுப்பியவர்கள், கண்மாய் குளங்களையும் கிரானைட் முதலாளிகள் ஆக்கிரமித்துப் போட்டிருப்பதாக ஆதாரங்களைக் காட்டினார்கள். 


அதில், பிரபல மூன்று எழுத்துக் கம்பெனி மீதான புகார்கள்தான் அதிகம். 'சசி அண்ட் கோ-விடம் நல்ல டீலிங் வைத்திருக்கும் அவர்களைத் தொட்டால் சிக்கல் வரும்’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பே அட்வைஸ் செய்தார்கள். ஆனாலும், கிரானைட் குவாரிகளைக் கிண்டிக் கிழங்கெடுக்க ஆரம்பித்தவர், தன்னிடம் புகார் கொடுத்தவர்களிடம், 'என்னை ரொம்ப நாளைக்கு இங்கே இருக்கவிட மாட்டாங்கப்பா...’ என்று சொல்லிவிட்டுத்தான் மளமளவெனக் காரியத்தில் இறங்கினார். அதே வேகத்துடன் அந்த மூன்றெழுத்துக் குவாரி நிர்வாகம் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வரவேண்டிய பணத்தை எப்படி எல்லாம் சுருட்டி இருக்கிறது என்பதை புள்ளிவிவரங்களுடன் அறிக்கை தயாரித்தார். இதுதான் திடீர் மாறுதலுக்குக் காரணம் என்கிறார்கள்'' - என்று நாம் விரிவாகக் குறிப்பிட்டு இருந்தோம்.


தான் தயாரித்த அறிக்கையை தமிழகத் தொழில் துறை முதன்மைச் செயலாளருக்கு கடந்த மே மாதம் 19-ம் தேதி அனுப்பி வைத்தார் சகாயம். அடுத்த ஒரே வாரத்தில் சகாயம் மதுரையில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். ஆனாலும், சகாயம் அனுப்பிய கடிதம்... இன்னமும் உயிரோடு உலா வருகிறது.



அனல் கொதிக்கும் மே மாதம்தான் இந்த விவகாரம் ஆரம்பமானது. மேலூரை அடுத்துள்ள கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி போன்ற கிரானைட் தொழில் கொழிக்கும் பகுதிகளில் மே 1-ம் தேதி புகுந்து அதிரடி சோதனை நடத்தினார் சகாயம். உடனடியாக, சென்னையில் இருந்து அவருக்கு ஒரு போன். 'என்னுடைய அனுமதி இல்லாமல் ஏன் இந்த ரெய்டுக்குச் சென்றீர்கள்? அந்த அதிபருக்கு யாரிடம் செல்வாக்கு இருக்கிறது தெரியுமா?’ என்று கேட்டது அந்தக் குரல். 


'இனிமே உங்க அனுமதி வாங்கிட்டுப் போறேன் சார்’ என்று அமைதியானார் சகாயம். மே 17 அன்று ஆர்.டி.ஒ., டி.ஆர்.ஓ. தலைமையில் ஒரு குழுவை அந்தக் குவாரிகளுக்கு அனுப்பி மீண்டும் சோதனை நடத்தினார். அதில் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு கடிதம் தயாரித்து தொழில் துறைச் செயலாளருக்கு அனுப்பி வைத்தார். 


சகாயம் கணித்ததுபோலவே மே 23-ல் அவருக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது.
''மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் சட்ட​விரோதக் குவாரிகள் மூலம் அரசுக்கு 16,000 கோடி ரூபாய்க்கும் மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இயங்கி வரும் 91 குவாரிகளில் முறைகேடாகக் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால், அரசுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடிகள் தனியார் பாக்கெட்டுகளுக்குப் போகிறது.


 இந்தக் குவாரிகளைத் தனியாருக்குக் கொடுக்காமல் அரசே எடுத்து நடத்தினால், 1,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்ட முடியும். எனவே, சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகளை உடனடியாக மூடிவிட்டு அவர்கள் பதுக்கி வைத்துள்ள கிரானைட் கற்களைப் பொதுஏலத்தில் விட வேண்டும். சட்டவிரோதமாகக் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதையும் கடத்தலையும் கண்டுகொள்ளாமல் இருக்க வருவாய்த் துறை மற்றும் கனிமவளத் துறை அதிகாரிகள் பெருமளவில் நிதி ஆதாரம் அடைந்துள்ளனர்.


சமூகச் சொத்தை தனி நபரும் தனியார் நிறுவனமும் சுரண்டிச் சூறையாடுவதை அனுமதிக்க இயலாது. அதுவும் பல ஆயிரம் ஏழை விவசாயிகளின் வாழ்​வாதாரங்களை அழித்து தனியார் நிறுவனங்கள் பெரும்பலன் அடைவதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. இவற்றைத் தடுத்து நிறுத்த வெளி மாவட்டக் கனிமவளத் துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு குவாரிகளை ஆய்வுசெய்து, முறைகேடாக கிரானைட்டை வெட்டிக் கடத்திய தனியார் நிறுவனங்களிடம் அதற்கான தொகையை வசூலிக்க வேண்டும். 


அது எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த நிதி இழப்புக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளைக் கொண்ட பறக்கும் படைகளை அமைத்து கிரானைட் குவாரிகளைத் தணிக்கை செய்ய வேண்டும்''  - இதுதான் சகாயம் அனுப்பிய அறிக்கையின் சுருக்கம்.


இந்த அறிக்கையை வைத்து சிந்து கிரானைட், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனங்களுக்கு 'உங்களது உரிமங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய கனிமவளத் துறை, இன்னொரு நிறுவனம் குறித்து மூச்சே விடவில்லை. அது, பி.ஆர்.பி. நிறுவனம். நோட்டீஸுக்கு இதுவரை ஒலிம்பஸ் நிறுவனம் பதில் ஏதும் கொடுக்கவில்லை என்றும் சிந்து கிரானைட்ஸ் மட்டும் கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கி இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. பி.ஆர்.பி. நிறுவனத்தின் உரிமையாளர்தான், தி.மு.க. ஆட்சி செய்தாலும் அ.தி.மு.க. ஆட்சி செய்தாலும் மேலூரை எந்த இடைஞ்சலும் இல்லாமல் ஆட்சி செய்யக்கூடிய பி.ஆர். பழனிச்சாமி. ஒலிம்பஸ் நிறுவனத்தின் பொறுப்பாளர்களாக துரை தயாநிதி, க.நாகராஜ் ஆகிய இருவர் பெயர் சொல்லப்படுகிறது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிதான் அவர்.



கிரானைட் ஊழல்களைக் கண்டுபிடிக்க சகாயத்துக்கு தோள் கொடுத்து நின்ற அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''புறம்போக்கில் கிரானைட் கற்களை வெட்டி எடுக்கும் உரிமத்தை 'டாமின்’ நிறுவனத்துக்குத்தான் அரசு வழங்குகிறது. ஆனால், 'டாமின்’ நிறுவனத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுப்பதற்கான நவீனத் தொழில்நுட்பங்கள் எதுவும் இல்லை. அதனால், 'டாமின்’ நிறுவனம் தனது குவாரிகளை 'ரைசிங் செல்லிங்’ சிஸ்டத்தில் தனியாருக்குக் குத்தகைக்கு  விடுகிறது. இங்கு வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்களில் கன மீட்டருக்கு இவ்வளவு என ஒரு குறிப்பிட்ட தொகையை 'டாமின்’ நிறுவனத்துக்கு தனியார் செலுத்த வேண்​டும். 


இதில்தான் புகுந்து விளை​யாடுகிறார்கள். தனியார் பட்டா நிலங்களை கிரானைட் குவாரிக்​காக வாங்கிப் போட்டு இருப்பவர்கள், 'டாமின்’ குவாரிகளில் பெரிய அளவில் கற்களை வெட்டி எடுத்து, அவற்றைப் பட்டா நிலங்களில் வெட்டி எடுத்ததாகக் கணக்கு காட்டுகிறார்கள். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தை.


கீழவளவு ஏரியாவில் 2010-ல் ஒரு குவாரிக்கு அனுமதி வாங்கியது ஒரு நிறுவனம். ஆனால், அங்கே கிரானைட் எடுக்காமல் டாமின் குவாரியில் கள்ளத்தனமாகக் கற்களை வெட்டி எடுத்துக் கடத்துகிறது. ஆனால், தாங்கள் குவாரிக்கு அனுமதி வாங்கிய இடத்தில் 4,000 கன மீட்டர் அளவுக்கு கற்களை வெட்டி எடுத்ததாக அந்த நிறுவனம் கணக்கு வைத்துள்ளது. அங்கே அவ்வளவு கற்கள் வெட்டி எடுத்ததற்கான தடயமே இல்லை. இப்படி எடுக்கப்பட்ட பல நூறு கோடி மதிப்பிலான கற்களை மேலூர் பகுதியில் பதுக்கி வைத்துள்ளனர். 2011-ல் இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு ஒன்று வந்தபோது, 'அது வேஸ்ட் கற்கள்’ என்று கலெக்டரையே அறிக்கை கொடுக்க வைத்தார்கள்'' என்றார்.



மேலூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ''பொதுப்பணித் துறையின் ஒத்துழைப்போடு கிரானைட் கழிவுகளைக் கொட்டி மேலூர் பகுதிகளில் உள்ள 12 கண்மாய்களையும் எட்டு மீன் வளர்ப்புக் குளங்களையும் தூர்த்து விட்டார்கள். பெரியாறு வரத்துக் கால்வாய்களிலும் கழிவுகளைக் கொட்டி தண்ணீர் வரத்தை அடைத்து விட்டதால், சுமார் 2,000 ஏக்கர் நிலம் நீர் இன்றிப் பாழாகிவிட்டது. 


இதில் பெரும் பகுதியை கிரானைட் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு வளைத்துப்போட்டது. கோயில்கள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், குடியிருப்புப் பகுதிகளைவிட்டு 300 மீட்டர் தள்ளித்தான் கிரானைட் குவாரிகள் இருக்க வேண்டும் என்ற விதி எல்லாம் காற்றில் பறந்துவிட்டது. 2011-ல் ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் மதுரையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு 10 ஆயிரம் கன மீட்டர் கிரானைட் கற்கள் கொண்டு செல்லப்பட்டதாக மதுரை கனிம வளத் துறையில் கணக்கு இருக்கிறது. 


ஆனால், அதே காலத்தில் ஒரு லட்சம் கன மீட்டர் கற்கள் தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்ததாக துறைமுகத்தில் கணக்கு இருக்கிறது. இதை வைத்து ஒருவர் வழக்கு தாக்கல் செய்தார். 'முறைகேடு நடந்திருப்பது ஊர்ஜிதம் ஆவதால் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று நீதியரசர் சந்துரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் இதுவரை, எந்த அறிக்கையும் தாக்கல் செய்யப்​படவில்லை.  இங்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷன், தாலுக்கா ஆபீஸ் எல்லாவற்றுக்குமே கிரானைட் கம்பெனிகளில் இருந்து தனி சம்பளமே போகிறது. அதனால், முதல்வர் மனது வைத்தால் மட்டுமே இந்தக் கொள்ளையைத் தடுக்க முடியும்'' என்றார்.


''சகாயம் கண்டுபிடித்தது சமீபத்​திய ஊழல்களை மட்டும்தான். ஆனால், 16 வருடங்களாக குவாரிகள் நடப்பதால், எம்புட்டு சம்பாதிச்​சிருப்பாங்கன்னு பாத்துக்குங்க. சி.பி.ஐ. விசாரிச்சா ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட பெரிய அளவுக்கு பூதம் கிளம்பும். சகாயம் அதைக் கண்டுபிடித்ததும் இப்போது, டாமின் குவாரியில் இருக்கும் கழிவுகளைக் கொண்டு​வந்து கொட்டி, அந்தக் குழியை மூடுறாங்க. இதை மூடக்கூடாதுன்னு சொன்னதுக்கே எனக்கே கொலை மிரட்டல் வருது'' என்கிறார் கீழவளவு பஞ்சாயத்துத் தலைவர் தர்மலிங்கம்.


இதற்கான பதிலை அறிவதற்கான பி.ஆர்.பி. நிறுவனத்தைத் தொடர்புகொண்​டோம். பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன மேனேஜர் சண்முகநாதனிடம் கேட்டதற்கு, ''சகாயத்தின் குற்றச்சாட்டுகள் என்ன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு, நாங்களே உங்களிடம் பேசுகிறோம்'' என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார். இந்த இதழ் அச்சேறும் வரை அவர்களது பதில் கிடைக்கவில்லை. அவர்கள் விளக்கம் கொடுத்தால் முழுமையாக வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்.


சிந்து கிரானைட்ஸ் அதிபர் பி.கே.செல்வராஜ் நம்மிடம், ''கனிமவளத் துறை அதிகாரிகளை நம்பாமல் வேறு அதிகாரிகளை வைத்து எங்களுக்கும் தெரியாமல் சகாயம் தன்னிச்சையாக எங்கள் கம்பெனிக்குள் வந்து சோதனை செய்துள்ளார். எங்களுக்கு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நாங்கள் நேர்மையாக தொழில் செய்து வருகிறோம். ஒன்றரை வருஷம் இங்கே கலெக்டராக இருந்த சகாயம் அப்போதே எங்களைக் கூப்பிட்டு விசாரணை நடத்தி இருக்கலாம். அதைவிட்டுட்டு டிரான்ஸ்ஃபர் ஆகிப்போன பிறகு நோட்டீஸ் விடுகிறார்கள். 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கிற கல்லுக்கு 35 ஆயிரம்னு ரேட் போட்டு எங்களுக்கு 4 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறார். அதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் தடை வாங்கி இருக்கிறோம். தவறு செய்திருந்தால் தண்டிக்கட்டும். ஆனால் நாங்கள் நிரபராதிகள்'' என்றவர் மேலும், ''உண்மையை சொல்லணும்னா, கிரானைட் பிசினஸ் இப்போது 10 சதவிகிதம்தான் சக்சஸாப் போயிக்கிட்டு இருக்கு. மேலூர் பகுதியில இருக்கிற மொத்த கிரானைட் கம்பெனிகளோட ஒரு வருஷ டர்ன்ஓவரே 700 கோடிதான். இதுல லாபம்னு பார்த்தா அதிகபட்சம் 25 சதவிகிதம் நிற்கும். இதுல எப்படி 16,000 கோடிக்கு ஊழல் பண்ண முடியும்?'' என்று நம்மையே திருப்பிக் கேட்டார்!



சகாயத்திடம் இதுபற்றிக் கேட்டோம். ''மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் கிரானைட் குவாரி முறைகேடுகள் குறித்து என்னிடம் வந்த புகார்கள் தொடர்பாக சில நடவடிக்கைகளை எடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பினேன். இப்போது நான் மாறுதலாகி வந்துவிட்ட நிலையில், அதுகுறித்து நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்
மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, ''மதுரை மாவட்டத்தில் மொத்தம் 175 கிரானைட் குவாரிகள் இருக்கின்றன. 




இதில் 149 தனியார் குவாரிகள். 26 குவாரிகள் புறம்போக்கில் உள்ளவை. இவற்றில் எட்டு மட்டுமே டாமினுக்கு சொந்தமானது. மீதி 18-ல் டெண்டர் இல்லாமல் கொடுக்கப்பட்டிருக்கும் 13 குவாரிகளில் பெரும் பகுதியை பி.ஆர்.பி. கிரானைட்ஸ் எடுத்து நடத்துறாங்க. இந்த 13 குவாரிகளையும் க்ளோஸ் பண்றதுக்கு நடவடிக்கை எடுத்தோம். ஆனால் அவங்க, கோர்ட்டுக்குப் போயி எக்ஸ்டென்ஷன் வாங்கி இருக்காங்க.


 எல்லாவற்றையும் சேர்த்தால் இப்போதைக்கு மொத்தமே 50 குவாரிகள்தான் இருக்கு. இங்கு நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்கு 17 குழுக்களை அமைச்சிருக்கோம். கண்மாய்களில் கொட்டி இருக்கும் கிரானைட் கழிவுகளை ஒரு வாரத்துக்குள் அப்புறப்படுத்த பொதுப் பணித் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு உத்தரவு போட்டுள்ளோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது 10 நாட்களுக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்று உறுதி அளித்தார்.சொன்ன மாதிரியே கடந்த வியாழக்கிழமை அன்று கிரானைட் குவாரிகளில் தங்களது அலுவலர் படையை இறக்கி விட்டுள்ளார் மதுரை கலெக்டர். இந்த அதிரடி இறுதிவரை தொடர வேண்டும் என்பதே மதுரை மக்களின் ஆதங்கம்.


தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மதுரையில் ஜெயலலிதா பேசிய பேச்சுதான் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.
'... இந்த அளவுக்கு அடித்த கொள்ளை போதாது என்று கிரானைட் கொள்ளை வேறு! தமிழகத்தில் இருந்து குறிப்பாக மதுரை மாவட்டத்தில் இருந்து டன் கணக்கில் கிரானைட் கற்கள் சட்டவிரோதமாக எடுக்கப்படுகின்றன. இந்த சட்டவிரோத கிரானைட் கொள்ளை மூலம் ஏற்பட்டுள்ள வரி இழப்பு 82 ஆயிரம் கோடி ரூபாய். இதைப்பற்றி செய்தி வெளியிடுகின்ற பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளில் இருந்து, கிரானைட் கொள்ளையில் கிடைக்கும் பணம் எங்கு செல்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்’ என்றார் ஜெயலலிதா.


அப்போது அவர் கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தார். இப்போது நடவடிக்கை எடுக்கும் இடத்தில் இருக்கிறார்.


எடுப்பாரா?


நன்றி - ஜூ வி

Wednesday, May 30, 2012

ஃபேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்டு கற்பை இழந்த சேலம் பெண்கள்-ஜூ வி கட்டுரை


ட்பு வட்டங்களுக்குத் தளமாக இருக்கும் ஃபேஸ்புக், சில நேரங்களில் தப்பு வட்டங்களுக் கான களமாகி விடுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் சேலத்தைச் சேர்ந்த லலிதாவும் கன்னியாகுமரியை சேர்ந்த மேரியும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பேஸ்புக் மூலமாக அறிமுகம் ஆன நண்பர்களிடம் தங்களையே இழந்து நிற்கிறார்கள் இருவரும்! 


கடந்த 24-ம் தேதி வேலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வந்து புகார் கொடுத்தவர்கள் சார்பில் பேசினார் வழக்கறிஞர் மணிகண்டன். ''லலிதா, மேரி இருவரும் தோழிகள், சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். இருவரும் ஃபேஸ்புக்கில் இருக்கின்றனர். ஃபேஸ்புக் மூலமாக லலிதாவுக்கு வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ் பழக்கமானார். சதீஷின் நண்பர் ஆனந்தபாபுவும் லலிதாவிடம் அறிமுகமாக, மேரியும் அவர்களின் நட்பு வட்டத்தில் சேர்ந்துள்ளார்.

 சிவப்புச்சட்டை போட்டு நான் டேஞ்சரான ஆள்னு சொல்லாம சொல்றாரு போல அண்ணன் பார்க்க பாரதிராஜா பையன் மனோஜ் மாதிரி இருக்காரு
அடுத்து செல்போன் பேச்சாக இவர் கள் நட்பு வளர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் மேரியையும் பார்க்க ராணிப்பேட்டை நண்பர்கள் காரில் சென்னைக்கு வந்தனர். இருவரையும் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக அழைத்துப் போனார்கள். 



சி.பி -   ஹா ஹா >>வேலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கக் கோயிலுக்குக் கூட்டிச் செல்வதாக>>> 

 தங்கக்கோயிலா? அங்கே போய் தங்கறதுக்கு கோயிலா?


ஆனால் அவர்கள், ராணிப்பேட்டையில் இருக்கும் ஒரு ஹோட்டலுக்கு அழைத்துப் போயி ருக்கிறார்கள். அங்கே ஆனந்த பாபு - மேரி ஓர் அறையிலும், லலிதா - சதீஷ் ஓர் அறையிலும் தங்கி இருக்கின்றனர். காதலிப்பதாகவும் உருக்கமான வார்த்தைகளால் சொல்லி இருக்கிறார்கள். தங்களை நிச்சயமாகத் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எண்ணி, இருவரும் அவர்களிடம் ஏமாந்து போய் இருக்கின்றனர். பிறகு, 'எப்போது திருமணம்?’ என்று பெண்கள் இருவரும் நச்சரித்திருக்கிறார்கள்.


சி.பி - ஏம்மா, அப்பாவிப்பெண்களே! அந்த நச்சரிப்பை மேட்டர்க்கு முன்னாலயே பண்ணி இருந்தா தக்காளிங்க 2ம் ஓடி இருக்குமே?


 ஆள் எஸ் ஜே சூர்யா மாதிரியே இருக்காரு. அப்பவாவது பொண்ணுங்க ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்
'உங்களிடம் நாங்கள் டைம் பாஸ்க்குத்தான் பழகினோம். உங்களை எங்களால் திருமணம் செய்ய முடியாது. மீறி ஏதாவது பிரச்னை செய்ய நினைத்தால், உங்களின் அந்தரங்கப் புகைப்படங்கள் எங்களிடம் இருக்கிறது, அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டி இருக்கிறார்கள்.



சி.பி - உடனே பொண்ணுங்களும் மிரட்டி இருக்கனும்.. தம்பி.. உன் ஆபாச ஃபோட்டோவும் இருக்கு அதை நாங்க நெட்ல போட எவ்ளவ் நேரம் ஆகும்? எங்க முகத்தை மறைச்சு உன் முகம் தெரியற மாதிரி போட்டுடுவோம்னு மிரட்டி இருக்கலாம் , பய புள்ளங்க பயந்து தெறிச்சிருக்கும்

அவர்களின் நண்பர்களான திலீப், லூயிஸ், ஆனந்த நித்தியானந்தம் ஆகியோரும் இந்தப் பெண் களை மிரட்டவே, தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுத்துள் ளார்கள். இப்போது ஆனந்த், சதீஷ் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்'' என்றார் கொந்தளிப்பாக.




வேலூர் காவல் துறையினரிடம் விசாரித் தோம். ''சதீஷ் மிகவும் டிப்டாப்பாக இருப்பான். பெண்களை ஏமாற்றுவது சதீஷ§க்கும் அவனது நண்பன் ஆனந்த பாபுவுக்கும் கை வந்த கலை. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த  விஜயலட்சுமியை ஃபேஸ்புக் மூலம் தொடர்புகொண்டு, சதீஷ் ஏமாற்றி உள்ளான். 'உன்னுடைய ஆபாசப் படம் என்னிடம் இருக்கிறது. இரண்டு லட்சம் தர வேண்டும்’ என்று மிரட்டி, 50,000 ரூபாய் வாங்கியுள்ளான். மேலும் மிரட்டவே, விழுப்புரம் மாவட்டத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்று நிறையப் பெண்களை ஏமாற்றி இருக்கிறார்கள். எங்களின் கணிப்புப்படி 15-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்திருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் வேலூர் மாவட்டத்தில் யாஸ்காம் இன்டர்நெட் சென்டர் நடத்திவரும் ஆஸாம் இர்பான், ''பெண்கள் ஃபேஸ்புக்கில் எந்தக் காரணம்கொண்டும் யாருக்கும் தொலைபேசி எண்ணைத் தரக்கூடாது. நன்கு அறிமுகமான நபர்களை மட்டுமே தங்களுடைய நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தனது புகைப்படங்களையோ அல்லது குடும்பத்தாரின் புகைப்படங்களையோ ஃபேஸ்புக்கில் வெளியிடக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் சாட் செய்யாதீர்கள்'' என்று ஆலோசனைகள் சொன்னார்.



பெண்களே உஷார்!

Thursday, May 03, 2012

ஈரோடு மக்களை முட்டாள் ஆக்கும் ஈமு கோழி மோசடி

''ஈமு கோழி இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்!, ஒருமுறை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுக்க வருமானம் பெறலாம்!'' - இப்படிப்பட்ட கவர்ச்சியான விளம்பரங்கள் இன்று ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை கலங்கடித்து வருகின்றன.


'பொன்ஸி’ நிதி மோசடித் திட்டம் போல நடந்துவரும் இத்திட்டங்களில் உள்ள  ஆபத்தை உணராமல், அப்பாவி மக்கள் பணத்தை லட்சக்கணக்கில் கொண்டு போய் கொட்டுவதைப் பார்த்து, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம். ( விகடன் டீம்)


நாம் முதலில் சந்தித்தது தமிழக விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பு என்கிற முத்துசாமியை.

''ஒப்பந்த முறையில் ஈமு கோழி வளர்க்க விரும்புபவர்கள், முதலில் 1.5 லட்சம் ரூபாயை டெபாசிட்-ஆக கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து மூன்று மாத வயதுடைய ஆறு ஈமு கோழி குஞ்சுகளை தருவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனமே அந்த ஆறு கோழிகளையும் திருப்பி எடுத்துக் கொள்வதாகச் சொல்லி ஒப்பந்தம். 


இதில் அதிர்ச்சி என்ன வெனில், இரண்டு ஆண்டு வரை கோழிகளை வளர்க்கும் நபருக்கு கோழித் தீவனம் வழங்குவதுடன், வளர்ப்புக் கூலியாக மாதம் 6,000 ரூபாயும், ஆண்டு ஊக்கத் தொகையாக 20,000 ரூபாயும் கொடுப்பதாகவும் ஒப்பந்தத்தில் சொல்கிறார்கள். முதலீடு செய்த பணமும் கிடைக்கிறது; கூடவே மாத வருமானமும் வருகிறது என்று நினைத்து அப்பாவி மக்கள் ஈசல் போல இத்திட்டத்தில் விழுகிறார்கள்'' என்றார் சுப்பு.


இதெல்லாம் எப்படி சாத்தியம்? 


'ஒரு ஈமு கோழி ஆண்டுக்கு 30 முட்டை வரை இடும். ஒரு முட்டையின் விலை 1,500 ரூபாய்.  சேதாரம் போக 22 முட்டைகள் தேறினால், 33 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.


30 கிலோ கறி மூலம் 9,000 ரூபாயும், 3 கிலோ கொழுப்பு எண்ணெய் மூலம் 7,500 ரூபாயும் மற்றும் அலங்கார பொருட்களாகும் இதன் இறகுகள், மருத்துவக் குணம் கொண்ட எலும்புகள், நகம் உள்ளிட்டவைகள் மூலம் 5,000 ரூபாய் என மொத்தம் 54,500 ரூபாய் கிடைக்கும்' என்கின்றன  ஈமு கோழி வளர்க்கும் நிறுவனங்கள். 


இதுபற்றி தடப்பள்ளி அரக்கன்கோட்டை நீர் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் வக்கீல் சுபி.தளபதியிடமும் பேசினோம்.


''ஈரோடு மாவட்டத்தில் மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட ஓப்பந்தமுறை ஈமு கோழி வளர்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தங்க நாணயம் தருகிறோம், போனஸ் தருகிறோம் என்ற ஆசை வார்த்தைகளைக் கூறி விவசாயிகளை ஏமாற்றி வருகின்றன இந்நிறுவனங்கள். 


மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒப்பந்தமுறை ஈமு கோழி வளர்த்துவந்த ஒரு நிறுவனம் 200 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாக கண்டுபிடித்து, அந்நிறுவனத்தை தடை செய்திருக்கிறது மகாராஷ்டிரா அரசாங்கம். அதேபோல ஆசை வார்த்தைகளைச் சொல்லி, இங்கும் மக்களை ஏமாற்றி வருகின்றன சில நிறுவனங்கள்'' என்றார்.   


எனினும், கோவையைச் சுற்றியுள்ள நான்கைந்து மாவட்டங்களில் இருந்து கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் இத்திட்டங்களில் முதலீடாகி இருப்பதாகச்  சொல்கிறார்கள் வேறு சிலர்.


கடந்த பத்து ஆண்டுகளாக ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருபவரும், தமிழ்நாடு ஈமு அசோசியேஷன் தலைவருமான ராஜேந்திரகுமாரிடம் பேசினோம்.


''தமிழகத்திலிருந்து ஈமு கோழியின் மூலம் பெறப்படும் எந்த ஒரு பொருளும் ஏற்றுமதி செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. அதை பதப்படுத்தி வைக்கும் தொழிற்சாலைகளும் இங்கு இல்லை. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக சொல்வதிலும் உண்மை இல்லை'' என்றார்.


இத்திட்டம் பற்றி இதுவரை அரசுத் தரப்பில் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, இத்திட்டம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தென் மாவட்டங்களுக்கு பரவ ஆரம்பித்திருப்பது அபாயகரமான வளர்ச்சிதான்!




மக்கள் கருத்து

1.mahendran.r
 
தமிழ்நாட்டில் ஈமு கறி விற்பனை அப்படி ஒன்றும் சொல்லிக்கொல்வது போல் இல்லை. எங்கும் ஏற்றுமதியும் இல்லை, எப்படி காசு வளரும்? அடுத்தவர் முதலீட்டில் (வைப்புத்தொகை) இருந்துதான் உங்கள் பணம் வரும் போல் தெரிகிறது! 1.5 லட்சம் வைப்புத்தொகை=>6000*12 20000 54500=146500=> என்ன லாபம்? இதுவும் காந்தப்படுக்கை மோசடி போல் ஆகாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
2.ram1
 
நிறைய தொலைக்காட்சிகளில் இத்திட்டத்தை பற்றிய விளம்பரங்கள் பிரபல நடிகர்களின் நடிப்போடு வெளிவருகின்றது.

நம்பும்படியாக இல்லை. இருந்தாலும் முதலில் பணம் செலுத்தியவர்களுக்கு பணம் அவர்கள் சொன்னபடி தந்து விட்டார்கள்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனம் ஆண்டிற்கு 25 சதவீதம் வட்டி தருவதாகவும், ஈமு நிறுவனஙள் பொதுமக்களிடம் வாங்கும் பணத்தை அதில் முதலீடு செய்து கிடைக்கும் வட்டியை பொதுமக்களுக்கே திருப்பி தருவதாகவும். எஞ்சிய தொகை தான் ஈமு நிறுவனங்களின் வருமானம் என்றும் கூறப்படுகிறது.

மற்றபடி கோழி வளர்ப்பெல்லாம் ஒரு கண்துடைப்பென்றே ஒரு சிலர் கூறுகின்றார்கள்.

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஈமு நிறுவனங்களில் மக்கள் டெபாசிட் செய்வது குறைந்தாலோ, அல்லது மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் திவாலானாலோ (ஏமாற்றினாலோ) தான் மக்களுக்கு பணத்தை திருப்பி தரமுடியாத சூழ் நிலை ஏற்படும்.

அதன் பிறகு தெரியும், சுசி, ருசி, பசி எல்லாம்.


நன்றி - நாணயம் விகடன்




டிஸ்கி -உங்கள் இணையதளத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்திட உடனே http://www.hotlinksin.com/

இணையதளத்தில் இணைந்து, உங்கள் பதிவுகளை தொடர்ந்து இணைத்திடுங்கள். 

Friday, March 02, 2012

கோடம்பாக்கத்தின் முகமூடியை கிழிக்கும் சோனியா அகர்வால் - வாக்குமூலம்- வசனங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgokPv0Ixb9CrWOrkkmqvvA7XxtzTcWOkk9bcCiGBAUtxfEawSEpF-ZG3FsaUJAe8ynYNZt-x-4kAHVkZIjuEOEiRNaM8SPadzwl9NxtlrveO1tFB6lF88OGbjh3GuScBxecrBFcAmYbcll/s1600/oru_nadigaiyin_vakkumoolam_posters_095.jpg

1. என்னோட ரிலேசன்ஸ், சுத்தி இருக்கறவங்க எல்லோருமே அவங்கவங்க சுயநலத்துக்காக என்னை யூஸ் பண்ணிக்கிட்டவங்க தான்..

-------------------------------------

2.எல்லாருக்கும் நல்லவனா வாழ யாராலும் முடியாது

-----------------------------------------

3. எல்லோருடைய மனசையும் சந்தோஷப்படுத்த தெரிஞ்ச எனக்கு என் மனசை சந்தோஷப்படுத்த வழி தெரியலையே?

---------------------------------

4. நான் தெரியாமத்தான் கேட்கறேன், ஊர்ல சந்தோஷமா இருக்கற எந்தப்பொண்ணாவது அப்போ அம்மா வீட்டுக்குப்போறாங்களா? ஏதோ புருஷன் போதைல இருக்கறப்ப ஒரு அறைவிட்டுட்டான்னா உடனே அம்மா வீட்டுக்கு ஓடிடறீங்களே? ஏன்?

--------------------------------------

5சினிமால  போராடறது மட்டும்தான் நம்ம பிழைப்பு.. வெள்ளாமையை ஆண்டவன் பார்த்துக்குவான்

---------------------------------------

6. சார்.. எப்படியாவது எனக்கு நடிக்க சான்ஸ் தாங்க சார்..

சாரி மேடம், நாங்க புதுசா யாரையும் யூஸ் பண்றதைல்லை, மீன் அறிமுகப்படுத்தறதில்லை

----------------------------------------------------

7. மேடம்.. ஆல்பம் இருக்கா?
ம்ஹூம்

 அல்பம்

-----------------------------------

8. யோவ் டைரக்டரே,எப்போ படம் ஸ்டார்ட் ஆகுது?

 அது தெரிஞ்சா அவர் சொல்ல மாட்டாரா?

--------------------------------------

9. அவர் 10 படம் ஹிட்ஸ் குடுத்து 2 படம் மட்டும் தான் ஃபிளாப் குடுத்திருக்கார்..

இந்த சினிமா ஃபீல்டு ஒரு படம் ஃபிளாப் குடுத்தாலே ஃபீல்டை விட்டு துரத்தி விட்டுடும்.. 

-------------------------------

10. உன் பேரென்னம்மா?

 அஞ்சலி

அந்த பேர்ல ஆல்ரெடி ஒரு நடிகை இருக்காங்க..

அப்போ நீங்களே வெச்சு விடுங்க

------------------------------------------ 

http://iclienttech.com/news1/1nov42.jpg

11. ஹீரோயின் பேரு ஆர் வர்ற மாதிரி  வெச்சிடலாமா?

நோ நோ அந்த வேலையை பாரதிராஜா குத்தகைக்கு எடுத்துக்கிட்டாரு

------------------------------------------

12. என் கதைக்கு இந்த பொண்ணு சரிப்பட்டு வருமா?

அப்போ உங்க படத்துல கதை இருக்கா?

------------------------------

13. ஏய்யா, ஆரம்பத்துலயே அண்ணா, அப்பான்னு செண்ட்டிமெண்ட்டா போட்டுத்தாக்கறாளுகளே,சரிப்பட்ட்டு வருமா?

ம் ம் ஸ்டார்ட்டிங்க் சரி இல்லை, ஆனா போக போக சரி ஆகிடும்

--------------------------------

14.சார்.. காலைல ஓக்கே சொன்னீங்க, இப்போ நாட் ஓக்கே சொல்றீங்க?

அதுதான்  சினிமா உலகம்..

------------------------------------


15.திர்பார்த்து ஏங்கிப்போறத விட  ஊருக்குப்போய்பொழப்பை பார்க்கலாம்  

 ----------------------------

16. இந்த உலகத்துல ஏதாவது  ஒரு பிளஸை இழந்தாத்தான் நாம நினைச்சதை அடைய முடியும்.. ஆனா சினிமா உலகத்துல மட்டும் நம்மையே இழந்தாத்தான் சான்ஸ்  கிடைக்கும்

------------------------------------------

17.எந்த அம்மாவும் தன் பெண் கிட்டே கேட்கக்கூடாத ஒண்ணை கேட்க வைக்குது இந்த சினிமா உலகம்

------------------------------ 
18. வாழ்க்கைல யாருமே தோல்வியை சந்திக்க தயாரா இல்லை

------------------------------
19. அங்கே பார்த்தியாமொத்த சினிமா உலகமே இங்கே தான் இருக்கு.. ஒருத்திக்கு மார்க்கெட் வந்துடக்கூடாதே, டேரா அடிச்சுடுவாங்களே?

----------------------------------

20. சார்  செக் இருக்கு , ஓக்கேவா?

 பாஸ் ஆகுமா?

------------------------------ 

http://tamildigitalcinema.com/wp-content/uploads/2012/01/Oru-Nadigaiyin-Vakku-Moolam-19.jpg

21. என்னைக்கு புரொடக்‌ஷன்   மேனேஜரையே உக்கார வெச்சுட்டாளோ அவ டாப்ல இருக்கான்னு அர்த்தம்

-------------------------------
22. ஏத்தி விட்டவங்களை இறக்கி விட்டு வேடிக்கை பார்க்கறதுதான்யா சினிமா உலகம்

----------------------------------

23.. வந்தோமா, 10 படத்துல நடிச்சு காசை பார்த்தோமா. ஒரு கோடீஸ்வரனை கல்யாணம் பண்ணுனோமா? ன்னு போய்க்கிட்டே இருக்கனும்

--------------------------------------

24. இன்னைக்கு ட்ரெண்ட்ல 4 வது வாரம் போஸ்டர் ஒட்டுனாலே படம் ஹிட்னு அர்த்தம்.. 50 நாள் ஓடி இருக்கு

--------------------------------

25. என் பொண்ணு பெரிய நடிகை ஆகறளோ இல்லையோ, என் மனைவி வாழ்க்கைல பெரிய நடிகை ஆகிட்டா

-------------------------------

26. சான்ஸுக்காக என்னை இழந்திருந்தாலும்  முத முறையா காதலுக்காக என்னை இழந்தேன்
அவன் கூட பழகுன்னு மட்டும் தானே சொன்னேன்..
கெட்டுப்போன்னா சொன்னேன்?

----------------------------------

27. என் மேலே உயிரையே வெச்சிருக்கேன்னியே..?

அதுனாலதான் உனக்கு ஒரு உயிரையே  கொடுத்திருக்கேன்

--------------------------------------------

28. டியர், என்னை நம்பு 2 வருஷம் கழிச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன்

ஓஹோ2 வருஷம் ஜாமீன் வாங்கிட்டியா?

-------------------------------

29. சினிமால நடிக்க, கிடைச்ச வாய்ப்பை தக்க வெச்சுக்க பல தப்பு செஞ்சிருக்கேன்

========================

30. என் வீட்டுக்க்குள்ளே இருக்கறவங்களுக்கு  என் பணம் தேவைப்பட்டுது, வெளீல இருக்கறவங்களுக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

------------------------------ 

http://1.bp.blogspot.com/-t47XzlEyI_U/TwiI6vAH_UI/AAAAAAAAdFE/PUtDUz2ufIM/s1600/Nicole.jpg

31.  அவளைப்பாரு.. நீயும் பெத்து வெச்சிருக்கியே அரிசி மூட்டை மாதிரி ஒரு பொண்ணு

 யோவ், நீதான்யா அவளை பெத்தே

-------------------------

32. மந்திரிக்கு ரவுடிங்க தேவைப்பட்டாங்க, அந்த ரவுடிக்கு என் உடம்பு தேவைப்பட்டுது

-----------------------------

33.  எங்கம்மாவும் ஒரு பொண்ணுதானே? ஏன் என்னை ஒரு பொண்ணா பார்க்கலை?

---------------------------

34. எங்களை மாதிரி அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்க்கு சான்ஸ் கிடைக்கறதே பெரிசு

-------------------------------

35.  இப்பவே குடிக்க ஆரம்பிச்சுட்டாரே..

நீங்க மிச்சம் வெச்சதைத்தானே?

-------------------------

36. டைரக்ட் பண்ண வர்ற எல்லாருமே ஹீரோவா நடிக்க ஆசைப்படறங்களே, ஏன்?

கதை சொல்ல ஹீரோயின் வீட்டுக்கு வரச்சொல்றானுங்க, அங்கே போனா கதையும் கேட்கறதில்லை, ஹீரோயின் பெட்ரூம்ல இருந்து வெளில வர்றதும் இல்லை

-------------------------------

37. ஏற்கனவே உனக்கு கோனை வாய்.. இதுல கொட்டாவி வேற

--------------------------- 

38. அஞ்சலிக்கு அஞ்சலி செஞ்சுட்டு வருவாரு வெயிட் ப்ளீஸ்

------------------------

39. என் பேரை சொன்னதுக்குப்பிறகுமா முடியாதுன்னான்?

அதுக்குப்பிறகுதாங்க அவன் உங்களை மதிக்கவே இல்லை

-------------------------------

40. முடிவுக்கு வர முடியாத விஷயம்னு இந்த உலகத்துல எதுவுமே இல்லை

-------------------------

41. யோவ்,, ஃபேஸை பார்க்காம எங்கேயோ பார்க்கறே?

-------------------------- 


http://www.koodal.com/cinema/cine_interview/images/2011/punnagai-poo-geetha-649.jpg

42. சேட்டு.. ஏன் அப்படி பார்க்கறே?
சேட்டையா?

-------------------------

43. இந்தப்படம் பார்க்கற ஒவ்வொரு ஆடியஃன்சையும் படம் பாதிக்கும்
 
படம் பூரா உக்காந்து எவன் பார்க்கப்போறான்?

-----------------------

44. என் பொண்ணு = 10 அனுஷ்க்கா = 1தமனா

ம்க்கும் திங்க் ஷி = 12 கோவை சரளா

---------------------

45/ உனக்கு 1 தெரியுமா? ராமாயணத்துல ராவணன் வந்த பிறகுதான் கதை சூடு பிடிக்குது

-------------------------------------

46. ஏண்டி வாமிட் எடுக்கறே? வயிற்றுக்கு சேராததை சாப்பிட்டியா?
சேர்ந்ததாலதாம்மா வாமிட்


------------------------

47. ஆதிகாலத்துல இருந்தே அந்தரங்க வாழ்க்கையை தோண்டி பார்க்கறதுல மனிதர்களுக்கு ஆர்வம் அதிகம்

------------------------------

48.  ஒரு ஃப்லோல சொன்னதுக்காக ஃப்ளோர்ல வந்து நின்னு டார்ச்சர் பண்ணக்கூடாது

-----------------------------

49. அய்யரைப்பார்த்து நாள் குறி.. அவ குறிச்சுக்குடுத்ததை வெச்சு

---------------------------

50. உன் ஆட்டத்தை ஆடி முடிச்சிட்டியா?நான் வெறும் பொம்மை தானே?பொம்மலாட்டம் மாதிரி என்னை ஆட்டுவிக்கப்போறியா?

------------------------------ 

http://aniwebtv.com/wp-content/uploads/2012/02/punnaigai-poo-geetha.jpg

51. வார்த்தையால அவன் கிழிச்சான் கேமராவுக்கு முன்னால, வாழ்க்கையையே கிழிச்சே நீ கேமராவுக்குப்பின்னால 

------------------------

52.  அன்னைக்கு வறுமை மட்டும் தான் எனக்கு பிரச்சனையா இருந்தது, இப்போ எல்லாமே எனக்கு பிரச்ச்னைதான்

---------------------------------

53. நடிகைன்னா  மனசுல கர்வமும் உடம்புல திமிரும்  வரனும்

--------------------------

54. உனக்கு புதையல் குறியா தெரியுது, எனக்கு அது புதை குழியா தெரியுது

-------------------------------

55. நீ எல்லாருக்கும் தேவதையா தெரிஞ்சே, ஆனா உனக்கு வரம் தரும் தேவனே உனக்கு எதிரியா மாறிட்டான்

----------------------------

56. மத்தவங்களூக்குக்கூட என் மேல பரிதாபம் வருது, ஆனா என்னைப்பெத்தவங்களுக்கு என் மேல எதுவும் வர்லையே?

-------------------------------